Thursday, October 27, 2005

புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-2

இன்னும் முதல் பதிவு படிக்கலன்னா இங்கே சொடுக்குங்க...

கடந்த கட்டுரையில் குழப்பச் சூழலிருந்து விடுபட்டு தட்டுத் தடுமாறி கரை சேர்ந்தவர்களை பற்றி கூறியிருந்தேன். இப்பகுதியில் அதற்கு மாறாக அச் சூழலில் சிக்கிப் போகும் நபர்களின் நிலைதான் என்ன என்பதை பற்றி ஒரு சிறு கண்ணோட்டம். தனக்கு நல்ல ஒரு மாற்று பெற்றோர் அமைந்து போய் நன்கு படித்து விடவும் சந்தர்பம் கிடைத்த சில lucky ones தனக்குக் கிடைக்கும் பொது உலகறிவை வைத்துக் கொண்டு தப்பி பிழைத்து மனச் சாந்தி ஒரு காலக் கட்டத்தில் அடைந்து விடுகின்றனர் தன் விடாப் பிடியான ஆர்வத்தின் பொருட்டு.

அதற்கு மாறாக சில சமயங்களில் அது போன்ற உந்துதல்கள் அற்ற நிலையில் மனச் சோர்வுற்று சூம்பிப் போனவர்கள் தவறான சேர்க்கைகளின் மூலமாக தவறான பாதையில் சென்று மதுவுக்கும், போதைப் பொருளுக்கும், ஒரினச் சேர்க்கைக்கும் தள்ளப்பட்டு தனது வாழ்வையே தொலைத்துக் கொண்டவர்கள் எத்தனை பேரோ, யாருக்குத் தெரியும்.

இருப்பினும் எனக்கு அப்படி போனவர்களில் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் நமது டில்லியில் நான் ஒரு விடுமுறையின் பொருட்டு அங்கு சென்றிருந்த பொழுது ஒரு மாலை நேர பொழுதில் கையெந்தி பவன் அருகில் வாயில் புகையுடன். அவளுக்கு ஒரு 20 பதிலிருந்து 25 வயதுக்குள் தான் இருந்திருக்க வேண்டும், நல்ல நிறம், உயரம் மற்றும் அத்தியதிகளுடன் தனியாக ஒரு குமரி கையில் சிகரெட் மற்றும் கலைந்த தலையுடன் கேட்கவா வேண்டும் அவளை குறி வைத்து வரும் வண்டுகளைப் பற்றிச் சொல்ல. நான் தங்கியிருந்த விடுதியிலேயே அவளும் தங்க நேர்த்ததால் (அதெல்லாம் ஒரு காலம், நானும் ஒரு ஹிப்பியாக நினைத்துக் கொண்டு back pack செய்ததுண்டு) அவளுடன் பின் ஒரு சமயம் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. அப் பொழுது அவளிடமிருந்து நான் அறிந்து கொண்ட விடயங்கள் மனதை இடறியதில் இன்று இதனை எழுதும் வரையில் நெஞ்சில் தைத்துப் போனது என்றால் அது மிகையாகது.

அவளின் பெயர் கிளாரவாம், தனக்கு 9 வயதிருக்கும் பொழுது இந்தியாவிலிருந்து ஒரு அமெரிக்கா தம்பதியினாரால் தத்தெடுக்கப் பட்டு புலம் பெயரவைக்கப்பட்டாளாம், பிறகு அவளுக்கு நேர்ந்த தெல்லாம் ஒரு புத்தகமாக இடும் அளவிற்கு சோதனைகளை தவிர வேறுன்ருமில்லை அவள் வாழ்க்கையில் சந்தித்தாக அவள் நினைவு கூர்ந்தாள். அவளது தத்தெடுத்த பெற்றொர்கள் விவகாரத்து பெற்று யார் இக் குழந்தையை வளர்ப்பது என்பதில் தொடங்கி அவள் அதில் சிக்கி இங்கும் அங்கும் பந்தாடப் பட்டு பிறகு அவளது தாய் மறுமணம் புரிந்து அவளின் கணவன் நம்ம கிளாராவை சூரையாடிதில் முடித்து தான் இப் பொழுது எங்கு செல்கிறேன் எனது பயணத்தின் நோக்கம் தான் என்ன என்று விளங்கவில்லை என்று கேட்டு முடித்தால்.

தான் இந்தியாவில் இருக்கும் தருணத்தில் மனதில் ஒரு அமைதி ஏற்படுவதாகவும் தான் இங்கேயே (புலம் பெயராமல்) இருந்திருந்தால் இன்று வேறு மாதிரியாக இருந்திருப்பேனோ என்று வினாவும் அவளின் கண்கள் குளமாய், அதனை கேட்டுக் கொண்டிருக்கும் எனது கைகளில் ஒஷோவின் "வெற்றுப் படகு."

இங்கு ஒரு கேள்வி ஏன் நமது ஊர் அனாதை காப்பகங்களும் அரசாங்கமும் குழந்தை தத்தெடுப்பை ஒரு வியபாரமாக கருதாமல் நமது ஊரிலேயே குழந்தை தத்தெடுப்பை மேலும் தீவிரமாக ஊக்குவித்து மக்களாகிய நாமும் தானகவே முன் வந்து இக் குழந்தைகளை நம்மில் ஒருவராக ஆக்கிக் கொள்ளக்கூடாது? ஆன்மீகம் பேசும் இந்தியா ஏன் பல குழந்தைகளை நாடு கடத்தும் கட்டாயத்திலிருக்கிறது? நம்மில ஏன் பல பேருக்கு இம் மன (தத்தெடுப்பதற்கான) நிலையை இவ் ஆன்மீக இந்தியா வழங்கவில்லை? ஐயொ! யாரவது எனக்கு இதுக்கு இது சம்பந்தமாக எடுத்து வியம்புங்களேன். இந்தா வந்துருச்சு இன்னொரு சூறாவளி BETA...

5 comments:

சிவா said...

//**மக்களாகிய நாமும் தானகவே முன் வந்து இக் குழந்தைகளை நம்மில் ஒருவராக ஆக்கிக் கொள்ளக்கூடாது? **// இதற்க்கு எல்லோர் மனதிலும் உங்களை நோக்கி உடனே ஒரு கேள்வி வரும். அதை தானே சூறாவளி என்று சொல்றீங்க. அதற்க்கு பதில் இல்லாமல் இதை போட்டிருக்க மாட்டீங்க். அது என்ன பதில். சொல்லிருங்க :-)

Thekkikattan|தெகா said...

ஒ, நீங்க அந்த கோணத்திலிருந்து கேள்விகள் வரும்மென்று எதிர் பார்த்தேன் என்று நினைக்கிறீர்களா, சிவா? இருக்கட்டும், இருந்தாலும் சொல்லிவிடுகிறேன் உங்களிடத்தே! ஆமாம், சிவா நான் திருமணம் செய்து கொண்ட பெண் புலம் பெயரவைக்கப் பட்ட ஒரு (துர்)பாக்கியசாலிகளில் ஒருவர் தான், இருந்தாலும் அவர் முதல் வகையை சார்ந்தவர், தப்பிப் பிழைத்தவர் என்று கூறவந்தேன்.

சிவா said...

தெக்கிக்காட்டன், நான் உங்களை நோகடிக்கும் எண்ணத்தில் கேட்கவில்லை. உங்கள் திருமண வாழ்வு சிறக்க என் வாழ்த்துக்கள். அவர்கள் பாக்கியசாலி தான், துர்பாக்கியசாலி அல்ல, இது போல தெளிவான சிந்தனையுள்ள ஒருவரை அடைய.

Thekkikattan|தெகா said...

நன்றி சாரா இந்த பக்கம் தென்றல் போல் வந்து போனதற்கு.
//தன்னை முழுமையாக இனங்காணாத (இனங்காண முயலாத) எவர்க்கும் இந்த மனோ நிலை சாத்தியமாவது எளிதல்ல.//
உண்மைதான் நீங்கள் கூறியது நூறு விழுக்காடுகள். நம்மில் எல்லோருமே நன்கு சமூக, ஆன்மீக மற்றும் மனிதம் அக்கறை உள்ளவர்களாக (நான் நினைத்து வெம்புவது) மட்டுமே அதுவும் எழுத்திலும் முகமூடி போட்டுக் கொண்டு அப்படி சிந்திப்பது கூட யாருக்கவாது தெரிந்தால் அசிங்கம்மென்று எழுதி வருகிறோம். எனக்கு விளங்காத ஒரு விடயம் இது "சில அறிவு ஜீவிகள் கூறுகிறார்கள் இதற்கெல்லாம் higher calling (not nature) இருக்கணுமாம்." எப்பொழுது அந்த higher calling வரப்போகிறது இவர்களுக்கு வாழும் பொழுது இன்று. புரியவில்லை இந்த உலகத்தை பொறுத்து. பேசுவதற்க்கும் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதற்க்கும் மட்டும் தானா, நமது புத்திக் கூர்மை?

சிவா, உங்களை நான் தப்ப நினைக்கவில்லை. படிப்பவர்கள் கண்டிப்பாக நினைத்திருப்பார்கள். இவன் பேசுவதோடு மட்டும்தானா இல்லை....அதற்க்காக அந்த பதில் உங்களுக்கு அல்ல. அது பொதுவானதொரு பதிலாக இருக்கட்டும்.

Anonymous said...

// ஆன்மீகம் பேசும் இந்தியா ஏன் பல குழந்தைகளை நாடு கடத்தும் கட்டாயத்திலிருக்கிறது? //

பதிவின் ஹைலட்டான இந்தக்கேள்விக்கு என் ஒரே பதில் இந்தியா ஆன்மிகம் கடந்து(?) மதத்தில் ஊறிவிட்டது என்பதுதான்.

கிளாராக்களைப் போல் எத்தனை இளம்பூக்கள் கசங்கி விட்டன.. :(

Related Posts with Thumbnails