Saturday, October 15, 2005

ஆன்மீகம் சினிமா சந்தையில்...!

ஒரு காலக் கட்டத்தில் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பவர்கள் அதற்கான சரியான தருனம் கிடைக்கும் வரை காத்திருந்து அந்த அவாவிற்கு எந்த கலங்கமும் ஏற்படாத வண்ணம் காத்து தக்க நேரத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காலம் போய் இன்று அது சினிமாக் காரர்களுக்கு அதுவும் ஒரு பாகம்-2 என்றாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

எங்கோ எப்பொழுதோ படித்த ஒரு விடயம் இப்பொழுது இங்கு ஞாபகத்தில் வருகிறது "சன்யாசம் என்பது ஒரு மனிதனுக்கு திடீரென நிகழ்வது (கட்டியிருக்கும் வேட்டியை டர்ரென நான்காக கிழித்து ஒரு துண்டை கட்டிக்கொண்டு மீதத்தை உதறித் தள்ளிவிட்டு-மீதமிருப்பது சுமையென்று கருதி சன்யாசம் ஏற்பதுபோல) அது திட்டமிட்டு நிகழ்வது கிடையாது."

நன்றாக ஊன்றிப் பார்த்தால் குஞ்சு முதல் குளுப்பான் வரை இன்று பிரத்தியோக சினிமா மற்றும் பொது விழாக்களில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அனைத்தும் முற்றும் திறந்த முனியாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்களே அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்றே தெரியவில்லை.

இல்லை அது போன்ற பணிவும் தாழ்வும் வளர்ச்சிக்கு உதவும் என்ற வியாபார நோக்கில் காட்டிக் கொள்ளப்படுகிறதா? கையை கட்டிக் கொண்டு நெற்றியில் திருநீரு ததும்ப பேட்டியளிக்கும் ஒருவர் camera-விற்கு பின்னால் கோடியில் விலைபோகிறார். இது போன்ற பாசாங்குத்தனம் வேறு எந்த மாநிலத்திலும் நாட்டிலும் நடப்பதுபோல எனக்குத் தெரியவில்லை.

இங்கு எனக்கு ஒரு கேள்வி நடிக்கும் படமனைத்தும் superhit என்றால் ஏன் ஒரு படத்தை கண், காது அல்லது அனாதை ஆசிரமங்களின் தயாரிப்பில் தன் செலவிலேயே படத்தையும் எடுத்து உரிமத்தையும் அவைகளுக்கு வழங்கக் கூடாது? ஏன் தானே முன் உதாரணமாக தன் வீட்டிலேயே இரண்டு மூன்று அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துக் காட்டியிருக்கக் கூடாது அன்பர் பார்த்திபன் போல? புரியலப்பா.

7 comments:

குமரன் (Kumaran) said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

யாரை சொல்ல வர்ரீங்க. புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு...

gulf-tamilan said...

""hai its rajini right!!!!!!!!!

gulf-tamilan said...

""hai its rajini right!!!!!!!!!

கௌசி said...

என் பதிவு அச்சேறிய பிறகு பார்த்தேன் அவரை ஐய்யப்பனாய் சித்தரித்த் போஸ்டர்.சிவாஜிக்கு பின் எல்லாம் மொட்டை போடப் போகுதுகள். காலக்கொடுமை சாமி நாம் புலம்பி என்ன செய்ய?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவு எழுதி காலம் ஆகிப்போயிட்டதால் ஒரு விசயம் கவனிக்கனும்.. பார்த்திபன்.. இப்ப ரோல் மாடலா இருக்க தகுதியானவரா ..என்ன? குழப்பமா இருக்க்கு.. அவரு இதையும் வித்தியாசமா எதாச்சும் செய்யனும்ங்கற நோக்கத்துல செய்திருப்பாரோன்னு தோணுது ...குடும்பத்தில் குழப்பம் உண்டுபண்ணுவதை வழக்கமாக்கிக்கொண்டுவரும் விகடன் , அவர் தன் அம்மாவை கவனிப்பதில்லைன்னு வேற சொல்லிக்கிட்டாங்க.. போய் ரோல் மாடல்க்ளை ஏங்க அங்க தேடனும்..பேசாம அந்த பாயிண்ட போடாம இருந்துருக்கலாம்..

கவிதா | Kavitha said...

தெகாஜி, சினிமா என்பது அவர்களின் தொழில். ஒருவர் அதிக மேக்கப்போடு பேட்டி கொடுத்தால் அவரையும் எளிதாக நாம் கமெண்ட் அடிப்போம்.. அடக்கமாக பதில் அளித்தாலும் அதற்கும் கமெண்ட் அடிப்போம்.

ஏன்னா அவர்கள் வெளிச்சத்தில் இருக்கிறார்கள் என்ன செய்தாலும் அவர்களை நாம் கவனிக்கும்படி ஆகிறது. ஏன் சினிமா பார்க்கனும் அதை பற்றி படிக்கணும், அதைப்பற்றி தெரிஞ்சிகனும் இப்படி பதிவெழுதனும்னு நான் உங்களை கேட்கலாமா?

Related Posts with Thumbnails