Monday, March 29, 2010

கோடியக்கரை பறவைகள் சரணாலயம்: Photography

கோடியக்கரை விலங்குகள் சரணாலயத்தில இருந்து விழுந்தடித்து வனச்சரகர்கிட்ட பேசி முடிச்சிட்டு பறக்கப் பறக்க சூரியன் ஓடி ஒளிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி அந்தாளைப் பிடிச்சி நிறுத்தி கொஞ்சம் என் கேமரா பெட்டிக்குள்ளர அடைச்சிக்கணுமின்னு ஓடினோம்னு இங்கே சொல்லியிருந்தேன், இல்லையா?

அதே மாதிரியே மிகச் சரியா சூரியனாரும் ஒப்பனை எல்லாம் போட்டுக்கிட்டு சும்மா புது மாப்பிளைக் கணக்கா இருந்தாரா, கீழே பாருங்க நீங்க கூட அழையா விருந்தாளியா விருந்துக்குப் போயி கை நனைச்சிட்டு வந்திருவீங்க, அந்த அளவிற்கு அந்தாளு அம்பூட்டு சேட்டை பண்ணிக் காமிச்சிருக்கார்.

கோடியக்கரை பறவைகள் சரணாலயம் கொஞ்சம் சொல்ல முடியாத அளவிற்கு சில மாற்றங்களை சந்தித்து வருகிறது, நம் கண்ணுக்கு முன்னாடியே திரும்பப் பெற முடியாத பாதையில் நடக்க வைச்சு கூட்டிட்டு போயிட்டு இருக்கோம். :-(

அங்கே இரண்டரை லட்சம் பூ நாரைகள் தரையிறங்கும் காலம் போயி இப்போ வெறும் ஐம்பதனாயிரம் கூட வருவதில்லையாம். தனிப் பதிவா எழுதி பேச வேண்டிய விசயங்கள், அவ்ளோ இருக்கு. சரி, வாங்க நாம சூரிய மாப்பிள்ளை உலாவில் கலந்துக்குவோம் இப்போ...





நிலாவை கொஞ்சம் அப்படியே ஓரங்கட்டி வைச்சிட்டு முகம் சிவக்க ஆரம்பிச்சிருக்கும் பெண்ணான கீழ்வானம்...





கொஞ்சம் பக்கமா போயி பார்ப்போமேன்னு நெருங்கினா - என்னத்தா நான் சொல்லுறது...





முழு சரணாலயத்தின் சிம்னியாக தூரமா நின்னு சிவக்க வைக்கிறாரு பாருங்க...





இன்னும் கொஞ்சமே இழுத்து பிடிச்சிப் பார்த்தா அவரே சிவந்து காமிக்கிறார்...




அதுக்கு கீழே தனிமையில் உப்பு ஏறிப்போன தண்ணீரில் உணவைத் தேடியலையும் வண்ணநிற நாரை (Painted Stork)...



போஸ்ட்கார்டுக்கு உகந்த மாதிரி அழகு காட்டி நிற்கும் மாப்பிள்ளை...






அப்படியே வலப்பக்கமா திரும்பும் போது பார்த்தா, தன் கழுத்துப் பகுதியையே கேள்விக் குறியா மாத்தி சோகத்தோட தன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப் பட்டு நிற்கும் ஃபளமிங்கோ...





இந்தப் பறவைகளின் வருகைக்கு குறுக்காக நின்று அந்தப் பகுதிகளில் விரைந்து உப்பேற்றம் செய்வதின் பொருட்டு நீரின், நிலத்தின் அமிலத் தன்மையை மாற்றி உணவுப் பெருக்கம் தடுக்கப்படுவதில் ஒரு வேதியற் தொழிற்சாலையின் பங்கு அதிகமென தெரிகிறது, அதன் ஒற்றைக் கை கீழே...





பி.கு: மேலே உள்ள படங்களில் சிலவற்றை சென்னை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் பார்த்திருந்தால் அதற்கு நான் என்ன செய்றது ;-) ...

31 comments:

cheena (சீனா) said...

அன்பின் பிரபா

அருமையான படங்கள் - அழகான உரை

செக்கச் சிவந்த மாப்பிள்ளை - அலகு நனைக்க வந்த வண்ண நிற நாரை - எதிர்காலத்தின் கேள்விக்குறியாய் ப்ளெமிங்கோ

ஒற்றைக்கை

அடடா - படங்களினை எடுத்த விதமும் விவரித்த விதமும் அருமை அருமை

நல்வாழ்த்துகள் நண்பா

பழமைபேசி said...

எழில் கொஞ்சும் படங்கள்; நன்று!

DREAMER said...

அருமையான படங்கள்!

-
DREAMER

பதி said...

வழக்கம் போல அருமையான படங்கள் !!!

மீன்துள்ளியான் said...

அண்ணே படங்கள் எல்லாம் அருமை .....கலக்குறீங்க போங்க

முகுந்த்; Amma said...

கண்ணை கவரும் இயற்கை அழகு, அற்புதமான வர்ணனை. ஆகா என்ன ஒரு அனுபவம். மிகவும் ரசித்தேன்.

Raghu said...

எல்லா ஃபோட்டோஸுமே சூப்ப‌ர்!

மங்கை said...

அசத்தலா இருக்கு...

தமிழ் அமுதன் said...

படங்கள் எல்லாம் அருமை
இப்போவெல்லாம் என் டெஸ்க்டாப்ல உங்க படங்கள்தான் ..!

நன்றி ...!

ஆடுமாடு said...

நல்லாருக்கு தெகா.

இங்க எங்கயோ ராமரு பாதம் இருக்குன்னு சொல்வாங்களே...
அங்க போவலையா?

குட்டிப்பையா|Kutipaiya said...

*

குட்டிப்பையா|Kutipaiya said...

thekki photography - 'en ippadi'ku apram inoru pudhu companiieee :)

Kalukunga thekki!!

Thekkikattan|தெகா said...

சீனா,

வணக்கம்! முதல் வருகையாக வந்தாலும், எல்லா விசயங்களையும் தொகுத்து நீங்கள் கொடுக்கும் பாங்கை நான் ரசிக்கிறேன். பதிவின் நீளம் கருதி படிக்காமல் தாண்டி வருபவர்களுக்கு உங்களின் பின்னூட்டம் ஒரு "snap shot"ஆக அமையலாம். அதற்கு நன்றி!!
***********************************

//பழமைபேசி said...
எழில் கொஞ்சும் படங்கள்; நன்று!//

அய்யா வணக்கம்! கொஞ்சம் கொஞ்சமா வெளியே விடுகிறேன் அவ்வப்பொழுது வந்து ரசித்துப் போங்க...
************************************

//DREAMER said...
அருமையான படங்கள்!//

நன்றி! பெயர் கலக்கலா இருக்கு. தமிழ்ல உங்க பெயரை எப்படிச் சொல்லுறது...??

Thekkikattan|தெகா said...

பதி - நன்றி!

********************
//மீன்துள்ளியான் said...
அண்ணே படங்கள் எல்லாம் அருமை .....கலக்குறீங்க போங்க//

எல்லாம் உங்க மாதிரி ஆட்களின் குதுகலமேற்றம் தாம்வோய் காரணம், இல்லன்னா எங்கே இதெல்லாம் வெளிய வரப்போகுது ;-) ...
********************************

//முகுந்த் அம்மா said...
கண்ணை கவரும் இயற்கை அழகு, அற்புதமான வர்ணனை. ஆகா என்ன ஒரு அனுபவம். மிகவும் ரசித்தேன்.//

ரசிப்பினை அப்படியே வார்த்தையாக்கி இங்கு வைத்தமைக்கும் ஒரு சிறப்பு நன்றி! 'அந்த அனுபவத்தை' அப்படியே இன்னும் நீண்ட கட்டுரையா வைச்சிருப்பேன் கொடுத்த லிங்கில படிச்சீங்களா...

ராஜ நடராஜன் said...

தெகா!படங்கள் கண்களை கொள்ளை கொள்கின்றன.பொதுவாகவே மாலை நேரத்து வெயில்,தற்போதைய காமிராக்களின் நுட்பம்,லென்ஸ் போன்றவை ஒரு படத்தை அழகு செய்யும் சாதனங்கள்.ஆனால் நாரையை ஒழுங்கா நில்லுன்னு சொல்லி அழகா படம் எடுப்பதெல்லாம் தெகாவின் பார்வையிலும்,படமெடுக்கும் ஆர்வத்தில் மட்டுமே உள்ளது.

படக்கலை உங்களுக்கு இலகுவாக வரும் போல் தெரிகிறது.மேலும் மெருகு படுத்துங்கள்.

ராஜ நடராஜன் said...

எந்தக் கடைக்குப் போனாலும் ஒரே வரியை கை வசமா வச்சுகிட்டு பழமை நிற்கிறார்.அக்கம் பக்கத்துல,விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடம் இருக்கிற இடைவேளைல விமான தளத்துல துண்டு போட்டு உட்கார்ந்திட்டிருந்தா கொஞ்சம் காதுல போடுங்க:)

(இந்த டெக்னிக் நமக்கு வரமாட்டேங்குதே)

Thekkikattan|தெகா said...

//ர‌கு said...
எல்லா ஃபோட்டோஸுமே சூப்ப‌ர்!//

வாங்க ரகு, முதல் வருகை. அடிக்கடி சந்திப்போம். நன்றி!
**********************************

//மங்கை said...
அசத்தலா இருக்கு...//

இது! இதைத்தான் எதிர்பார்க்கிறேன். நன்றி - மங்கை.
***********************************

//ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
படங்கள் எல்லாம் அருமை
இப்போவெல்லாம் என் டெஸ்க்டாப்ல உங்க படங்கள்தான் .//

டெஸ்க்டாப்பிற்கு நானும் சில படங்களைப் பயன்படுத்திப் பார்க்கிறேன், நல்லாத்தேய்ன் இருக்கு, எஞ்சாய் ;-). வேணுங்கிற அளவிற்கு எடுத்துக்கோங்க, ஜீவா. எனக்கு சந்தோஷமா இருக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக மிக அருமையா அழகா வந்திருக்கு .. நிச்சயம் பத்திரிக்கை மற்றும் டெஸ்க்டாப்பில் எல்லாரையும் கவர்வதற்குக்குரியதே..

மாதேவி said...

ரொம்ப அருமை.

Thekkikattan|தெகா said...

வாங்க ஆடுமாடு,

//இங்க எங்கயோ ராமரு பாதம் இருக்குன்னு சொல்வாங்களே...
அங்க போவலையா?//

ஓ! அதுவா, அது கொஞ்ச நா கழிச்சு போட்டுருவோம் என்ன சொல்லுதிய ;-), அங்கிட்டுப் போனப்ப ஒரு கெடா குரங்கு என்னயப் பார்க்கப் போயி ரெண்டு பேத்துக்கும் சண்ட வந்திருச்சு, அதையும் வெவரிச்சு தனியா ராமரு பாதம் படத்தையும் போடுதேன் வந்து போங்க...

***********************************

//kutipaiya said...

*
// இது புதுசு இங்கிட்டு,

ஆமாங்க புதுக் கம்பெனி தொடங்கி இருக்கேன் பார்த்து ஆதரவு கொடுங்க, உங்களை எல்லாம் நம்பித்தேய்ன் ஆரம்பிச்சிருக்கோம் :-) . நன்றி, குட்டிப்'பையா!

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

//ஆனால் நாரையை ஒழுங்கா நில்லுன்னு சொல்லி அழகா படம் எடுப்பதெல்லாம் தெகாவின் பார்வையிலும்,படமெடுக்கும் ஆர்வத்தில் மட்டுமே உள்ளது.//

அன்றைய நாள் அப்படிங்க :-)). நன்றி! சொகமா இருக்கே!! இதே கேமரா பெட்டியும், நுட்பமும் ஒரு ஏழு வருடங்களுக்கு முன்ன கிடைச்சிருந்தா, அடடா எப்படியெல்லாம் படங்கள் கிடைச்சிருக்கும்.

//படக்கலை உங்களுக்கு இலகுவாக வரும் போல் தெரிகிறது.மேலும் மெருகு படுத்துங்கள்.//

ஆமாங்க, ராஜ நட செய்யணும்தேய்ன்... கல்லக் கண்ட ... கதைதான் இன்றைய காலக்கட்டம், sooner is better :-) .

//விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடம் இருக்கிற இடைவேளைல விமான தளத்துல துண்டு போட்டு உட்கார்ந்திட்டிருந்தா கொஞ்சம் காதுல போடுங்க:) //

அதையாவது பொறுப்பா செய்யுறரே பாராட்டுவோம்... பழம நீங்க கலக்குங்க தலீவா ;-) !

Unknown said...

Mams...salla pics....u hav talent mams

Thekkikattan|தெகா said...

முத்து - நன்றி :)

*************************

மாதேவி - முதல் முறையா வந்திருக்கீங்க, என்ன சமையல் இன்னக்கி, இல்ல கையில கரண்டியோட வந்திருக்கீங்க அதான் :)...

********************

மாப்பூ... வாம்மா வா... இந்த வார்த்தை 'salla pics' பயன்பாடு நல்லாருக்கே ... ;-)

suneel krishnan said...

அந்த கொக்கு ஒற்றை காலில் நிற்கும் அந்த படம் பிரமாதம் :)

ஜோதிஜி said...

நக்கலுக்கு அளவேயில்லையா? படிக்காமல் பின்னோட்டத்தில் வந்து நிற்பவர்களுக்கு நீங்களே காட்டி கொடுப்பீங்க போலிருக்கு.

என்னுடைய பார்வையில் ( மற்ற உங்கள் படங்களை பார்த்த காரணத்தால்) பரவாயில்லை ரகம் தான்.

ஆனால் வர்ணனையை பார்க்கும் போது பக்கத்துல எப்போதும் நாலு பேர கோர்த்துக்கிட்டு போற மாதிரியில்ல தெரியுது.

இயல்பான ஒளியில் எடுத்தமைக்கு என் தனிப்பட்ட பாராட்டு. உங்கள் மற்ற படங்களையும் பதிவேற்றுங்கள் பங்கு........

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

Thekkikattan|தெகா said...

செந்தழல் ரவி said...
தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.//

Ravi, thanks for letting me know! :)

ஜோதிஜி said...

இன்றைய தினத்தில் நீங்கள் படிக்கும் மின் அஞ்சலில் பார்க்கும் செய்தியில் ஒரு சர்க்கரை உண்டு. தாங்கள் பெற்ற தமிழ்மணம் விருதில் என் மனம் மகிழ்ச்சியடைகின்றது.

ஆமினா said...

தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அற்புதமான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறீர்கள். தமிழ்மணம் விருதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்த்துக்களுக்கும் என் அன்பான நன்றிகள்:)!

cheena (சீனா) said...

அன்பின் பிரபா

தமிழ் மண விருது பெற்றமைக்கு நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Related Posts with Thumbnails