Saturday, November 17, 2012

முழிச்சிக்கோங்க : சினிமா டுப்பாக்கி...

இந்தப் படத்தை இயக்குனவர் நிறைய கூகுள்ல ஆராய்ச்சி செய்றவர் போல. எப்படியோ இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் தீவிர தீவிரவாத கண்காணிப்பிற்கு விதையைத் தூவி ஏதோ அவரால் ஆன நாட்டுச் சேவையை ஆத்தி இருக்கார்.

உண்மையான மரணம் வாழும் பொழுதே பயந்து சக மனிதனைக் கண்டு அஞ்சி வாழ்வதுதான். இந்தியாவின் மக்கள் கலப்பு என்பது ரொம்ப சிக்கலானது. அது பல நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாற்றை உள்ளடக்கியது.

அதனால் இன்றைய நவீன அமெரிக்கப் பார்வையில் நம் தெருவிற்குள் இந்த உலகளாவிய அரசியலை தெரிந்தோ தெரியாமயோ பரப்புரை செய்வது நன்மை விளைவிப்பதைக் காட்டிலும் அதீத தீமையையே விதைத்துச் செல்லும்.

கீழே இணைத்திருக்கிற புகைப்படம் நான் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அதிகம் பேச வேண்டியதில்லை... நீங்களே பார்த்துக்கோங்க.

...ஏன் விஜயகாந்த், அர்ஜூன் வகையறா சினிமா தீவிரவாத ஒழிப்புகளைக் காட்டிலும் முருகதாஸ் வகையறா சினிமா  டுப்பாக்கி சமூக உளவியலுக்கு நச்சு என்பதற்கு கீழ்கண்ட இந்த புகைப்பட ஒருங்கிணைப்பு உதவக் கூடும்.

ரசினி சார் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தாராமா! தீவிரவாத விழிப்புணர்வு கொடுத்துக்கிட்டார் போல...

இன்னும் கரம்பக்குடிக்கு வரலங்கிற அளவில எங்கூர்ல தீவிர தீவிரவாத விழிப்புணர்வு பரவலன்னு நம்புறேன்...


தொடர்புடைய மற்றுமொரு பதிவு - 


ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

http://thekkikattan.blogspot.com/2010/10/blog-post.html

Tuesday, November 06, 2012

Bloggers' Voice : I-T ACT SECTION 66 A

ஏதோ ஒரு காரணத்திற்காக 2006 ஆம் ஆண்டு வாக்கில் இப்படியாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு இட்டு வைத்திருக்கின்றேன். அதன் தேவையைக் கருதி அந்தப் பதிவின் சுட்டி இங்கே Indian Bloggers, Its a High Time... http://orani-sittingby.blogspot.com/2006/07/indian-bloggers-its-high-time.html

அண்மையக் காலத்தில் வாயைத் திறந்தால் கூண்டுக் கிளி ஆகும் ஹைடியன், மூன்றாம் தர சர்வதிகார போக்கை நோக்கி நகரும் உலகில் கீழே முன் வைத்திருக்கும் சில கோரிக்கைகளை ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் இயங்கி வரும் வலைஞர்கள் தங்களுடைய எதிர்கால சுதந்திர கருத்து முன்னெடுப்பினை கருதி இதனை விழிப்பு நிலைக்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

இது தருமியின் தளத்திலிருந்து அனைத்து விதமான சமூக வலை மக்களுக்கும் கொண்டு செல்லும் போக்கில் தொடரப்பட்டு, இறுதியாக உரிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கென இந்த முயற்சி. எல்லாரும் கலந்துங்க! இப்பொழுது விடயம்...


I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும். I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


பி.கு: ஏனைய வலைஞர்களின் தொடர் பதிவுகளையும் காண அழுத்துங்க இங்கே... http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

Related Posts with Thumbnails