Tuesday, June 29, 2010

திருட்டுப் போன தெக்கி பதிவு: Plagiarism at Loose

இரண்டு வாரங்களுக்கு முன்பு பரவலாக வாசிக்கப்பெற்ற எனது பதிவான ”அமெரிக்கா எண்ணெய்க் கசிவும் உலகளாவிய உயிர்ப் பேரழிவும்...” என்ற கட்டுரை ஏனைய சில தள நிர்வாகிகளின் பார்வையிலும் பட்டு அவரவர் தளங்களிலும் மறு பிரசுரிப்பு செய்து கொண்டார்கள். எனக்கு அது பரவலாக விசயத்தை கொண்டு சேர்த்தது என்ற முறையில் மிக்க மகிழ்ச்சிதான். இருப்பினும் அந்தக் கட்டுரையின் மூலம் பற்றி எந்தத் தகவலும் காணப்படவில்லை.

இத்தனைக்கும் சில தளங்கள் டாட் கொம்கள். கீழே அத்தளங்களின் ப்ரிண்ட் ஷாட்ஸ் இணைத்துள்ளேன்.

Site -1


Site - 2



Site - 3



Site - 4



பார்த்த உடனேயே அந்தத் தளத்தின் நிர்வாகிகளுக்கு முறையான மின்னஞ்சல் மூலமாக கீழ்கண்டவாறு சிறு ஆலோசனை மாதிரியான கடிதமொன்று அனுப்பி இருந்தேன். வாரம் இரண்டாகிவிட்டது யாரிடமிருந்தும் எந்த விதமான தொடர்பும் இது நாள் வரவில்லை.

...என்னுடைய கட்டுரை ஒன்று உங்கள் தளத்தில் வெளியிட்டு இருப்பது அறிந்தேன் மகிழ்ச்சி http://www.z9world.com/view.php?2bbddnBBddc23QQAA334aaee0EEdd0eeXXO44ccd33mmldR22eeMs866cce00mm
M0044b44ZZBBp00. இருப்பினும் வருத்தப் படும் வாக்கில் அந்த கட்டுரையின் மூலம் எங்கிருந்து வந்தது என்பதனைப் பற்றிய குறிப்போ அல்லது எழுதியவரின் பெயரோ குறிப்பிடப் படமால் போட்டுக் கொண்டால், எனது தளத்தில் படிப்பவர்கள் நான் இங்கிருந்து ’எடுத்து’ பெயர் போடாமல் எனது தளத்தில் போட்டுக் கொண்டதாக எண்ணும் அபாயம் இருக்கிறது.

அந்த அவப்பெயர் எனக்கு வேண்டாம். உங்கள் தளத்தில் உள்ள மற்ற கட்டுரைகளையும் கண்டேன் எங்கும் அது போன்று ஆசிரியர் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. இதனை உணராமல் செய்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். எனவே, கண்டிப்பாக எழுதியவருக்கு க்ரீடிட் கொடுங்க, தவறில்லை. எனது கட்டுரைகளை மேலும் பயன் படுத்திக் கொள்வதிலும் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. நன்றி...

இதில என்ன எனக்குப் புரியல அப்படின்னா, மற்றவரின் சிந்தனை சார்ந்த உழைப்பை அவர்களின் தளங்களில் போட்டுக் கொள்கிறார்கள் என்பதனைப் பற்றி எனக்கு எந்தவிதமான சங்கடமுமில்லை, ஆனால், கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை கொடுப்பதில் அப்படி என்ன அவர்களுக்கு பிரச்சனையாக இருந்துவிடும். இத்தனைக்கும் நான் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து முறைப்படியான தொடர்புமில்லை. இதுகள என்ன செய்றது, மக்களே நீங்களே சொல்லுங்கப்பா........

Tuesday, June 15, 2010

மலையாளம் to தமிழ் மொழி பெயர்ப்புத் தேவை...

எனது நண்பர் கார்த்திக் புகைப்பட துறையில் பரவலாக அறியப்பட்டுக் கொண்டிருக்கும் இளம் கலைஞர். அண்மையில் கூட தி ஹிந்து பத்திரிகையிலும், திருவனந்தபுரம் நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையிலும் அவரைப் பற்றியான செய்திகள் வெளியிட்ட நிலையில் இப்பொழுது திருவனந்தபுரம் லோகல் செய்தித் தாள்களிலும் பரவலாக பேசி அவரையே திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரின் ஃப்ளிக்கர் அவசியம் விசிட் பண்ணப்பட வேண்டிய ஒரு தளம் இங்கே போயிப் பாருங்க...

நண்பர்களே! ஒரு சிறு விண்ணப்பம் நம் வலைப்பதிவர்களில் யாருக்கேனும் மலையாளம் படிக்கத் தெரிந்தால், இந்த செய்தித் தாளில் அந்த நண்பரைப் பற்றியான ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள் அதில் என்ன செய்தி சொல்லப் பட்டிருக்கிறது என்று மொழி பெயர்த்து இங்கே பின்னூட்டமாக தெரிய படுத்ததினால் மிக்க உதவியாக இருக்கும். நன்றி, பல கோடிகள்...

Oringinal Message please visit -




செய்தி இதுதான்...

ആര്‍.റിന്‍സ്
ഈ ഫോട്ടൊഗ്രാഫുകളില്‍ നിറങ്ങളുടെ ആഘോഷങ്ങളില്ല. മിക്ക ചിത്രങ്ങളും കറുപ്പിലും വെളുപ്പിലും. അതിനപ്പുറം, ഈ ചിത്രങ്ങളിലെ കഥാപാത്രങ്ങളുടെ ജീവിതങ്ങള്‍ക്കും നിറങ്ങളില്ല. എല്ലാ ഫ്രെയ്മിലും മുഖങ്ങള്‍ മാത്രം, നിസഹായതയുടെ മുഖങ്ങള്‍. ചില മുഖങ്ങളില്‍ പടര്‍ന്ന ചിരിയില്‍പ്പോലുമുണ്ട് ദയനീയത. ഈ മുഖങ്ങള്‍ കാര്‍ത്തിക് രാമലിംഗത്തിന്‍റെ ക്യാമറയില്‍ പതിഞ്ഞവയാണ്.

ഈ മുഖങ്ങളിലേക്കു കാര്‍ത്തിക്കിന്‍റെ ക്യാമറ തിരിഞ്ഞത് ഏഴു വര്‍ഷങ്ങള്‍ക്കു മുന്‍പ്. എന്നാല്‍ അതിനും എത്രയോ മുന്‍പേ കാര്‍ത്തിക്കിന്‍റെ മനസിന്‍റെ ഫോക്കസ് ഈ വിഷയങ്ങളിലേക്കു തിരിഞ്ഞിരുന്നു. നിസഹായരായ കുറേ വൃദ്ധജീവിതങ്ങളുടെ മുഖങ്ങളിലേക്ക് ക്യാമറ ഫോക്കസ് ചെയ്ത് ലോകത്തിന്‍റെ സൗന്ദര്യം എവിടെയാണെന്നു ചോദിക്കുന്നു കാര്‍ത്തിക്. ഓരോ മുഖവും ഓരോ കഥകളാണ് പറയുന്നത്. മുഖത്തെ ചുളിവുകള്‍, പൊട്ടിച്ചിരി, പുഞ്ചിരി, വിസ്മയം, സംഭാഷണഭാവം, വിശ്വാസം, ആവേശം, അഭിമാനം, നിസംഗത, ഭയം, വേദന, വിശ്വാസതീവ്രത....

സോഫ്റ്റ് വെയര്‍ പ്രൊഫഷണലായ കാര്‍ത്തിക് രാമലിംഗം തമിഴ്നാട്ടിലെ തഞ്ചാവൂര്‍ സ്വദേശിയാണ്. പോര്‍ട്രെയ്റ്റ് ഫോട്ടൊഗ്രാഫിയിലാണ് സ്പെഷ്യലൈസ് ചെയ്തിരിക്കുന്നത്. സ്ട്രീറ്റ് ഫോട്ടൊഗ്രഫിയില്‍ പുതിയ പരീക്ഷണങ്ങള്‍ നടത്തുകയാണ് കാര്‍ത്തിക് ഇപ്പോള്‍. കുട്ടിക്കാലത്തു തന്നെ സ്ട്രീറ്റ് ഫോട്ടൊഗ്രാഫിയില്‍ അഭിനിവേശം. സ്കൂളിലേക്കുള്ള വഴിയിലെ കാഴ്ചകള്‍ മനസിന്‍റെ ഫ്രെയ്മില്‍ പകര്‍ത്തി. മനസിനെ സ്വാധീനിച്ച ആ ജീവിതക്കാഴ്ചകളാണ് പിന്നീട് ഫോട്ടൊഗ്രാഫിയിലേക്കു കാര്‍ത്തിക്കിനെ വഴിതിരിച്ചുവിട്ടത്.

പിന്നീടൊരു യാത്രയായിരുന്നു. തെരുവോരങ്ങളില്‍ കാണുന്ന മനുഷ്യജീവിതത്തിന്‍റെ വികാരവിചാരങ്ങളിലേക്ക് കാര്‍ത്തിക്കിന്‍റെ ക്യാമറ നിരന്തരം സഞ്ചരിച്ചു. പ്രായമേറിയവരുടെ മുഖങ്ങള്‍ ഒപ്പിയെടുത്തു. 2003 മുതല്‍ പോര്‍ട്രെയ്റ്റുകള്‍ക്കു പുറകെ. മനുഷ്യന്‍റെ വിവിധ ഭാവങ്ങളെ നിരീക്ഷിക്കലായി പിന്നീട്. ഫോട്ടൊഗ്രാഫിയില്‍ ഇതൊരു വേറിട്ട സഞ്ചാരം. ഇത്തരമൊരു ആവിഷ്കാരം അപൂര്‍വം. തിരുവനന്തപുരത്തെ അലൈന്‍സ് ഫ്രാഞ്ചെയ്സില്‍ തുടരുന്ന കാര്‍ത്തിക് രാമലിംഗത്തിന്‍റെ ഫോട്ടൊ എക്സിബിഷന്‍ “ഫെയ്സസ് ദാറ്റ് ആര്‍ ലൈന്‍ഡ് വിത്ത് സ്റ്റോറിസ് . വേറിട്ടൊരു അനുഭവമാണു സമ്മാനിക്കുന്നത്. “ ലീവ് മി ‘ എന്നു പേരിട്ടിരിക്കുന്ന ഒരു മുഖചിത്രം. ഏറെപ്പേരെ ആകര്‍ഷിക്കുന്നു. പൊതുസമൂഹത്തെ നിഷേധിക്കുന്ന ഒരു വൃദ്ധന്‍റെ മുഖഭാവമാണ് ലീവ് മി. ഇത്തരത്തിലുള്ള ഇരുപത്തിരണ്ടു ചിത്രങ്ങളാണ് പ്രദര്‍ശനത്തിലുള്‍പ്പെടുത്തിയിരിക്കുന്നത്.

അലൈന്‍സ് ഫ്രാഞ്ചെയ്സിന്‍റെ ട്രാവലിങ് എക്സിബിഷന്‍റെ ഭാഗമായാണ് തിരുവനന്തപുരത്തും പ്രദര്‍ശനം ഒരുക്കിയിരിക്കുന്നത്. ഹൈദ്രാബാദിലും ബംഗളുരുവിലും ചെന്നൈയിലും പ്രദര്‍ശിപ്പിച്ച ശേഷമാണ് കാര്‍ത്തിക്കിന്‍റെ മുഖചിത്രങ്ങള്‍ തിരുവനന്തപുരത്തെത്തിയത്.
സ്വന്തം മുത്തച്ഛനോടും മുത്തശിയോടുമുളള ബന്ധമാണ് പ്രായമേറിയവരിലേക്കു ക്യാമറ ഫോക്കസ് ചെയ്യാന്‍ തന്നെ പ്രേരിപ്പിച്ചതെന്നു പറയുന്നു കാര്‍ത്തിക്. ഫോട്ടൊഗ്രാഫര്‍ ആകണമെന്നത് എന്‍റെ തീരുമാനമായിരുന്നില്ല. മറിച്ച് എന്‍റെ ജീവിതത്തിനു ചുറ്റുമുള്ള സംഭവങ്ങള്‍ ഫോട്ടൊഗ്രാഫിയെ ജീവിതത്തിന്‍റെ ഭാഗമാക്കുകയായിരുന്നു. സ്കൂള്‍ കാലഘട്ടത്തില്‍ ജ്യേഷ്ഠന്‍റെ 35എംഎം ഫിലിം ക്യാമറ ഉപയോഗിച്ചായിരുന്നു പരീക്ഷണങ്ങള്‍. ആളുകളെ നിരീക്ഷിച്ച് അവരുടെ ചിത്രങ്ങള്‍ എടുക്കാനായിരുന്നു താത്പ ര്യം. മനുഷ്യന്‍റെ ഇമോഷന്‍സാണ് എന്നെ ആകര്‍ഷിക്കുന്നത്. അവ ഫോക്കസ് ചെയ്യാനാണ് താല്‍പര്യവും. ഫോട്ടൊഗ്രാഫിയാണോ ഐറ്റി പ്രൊഫഷണല്‍ എന്ന പദവിയാണോ ഏറെയിഷ്ടമെന്നു ചോദിച്ചാല്‍, ഐടിയിലൂടെ ലഭിച്ച അറിവ് ഫോട്ടൊ ഗ്രാഫിയില്‍ പ്രയോജനപ്പെടുത്താന്‍ ഇഷ്ടം എന്നാണ് എന്‍റെ മറുപടി.

ഫോട്ടൊഗ്രാഫിയോടു പാഷനാണെങ്കില്‍ പ്രകൃതിയോടു പ്രണയമാണു കാര്‍ത്തിക്കിന്. ചെന്നൈ ട്രെക്കിങ് ക്ലബിന്‍റെ ഫോട്ടോഗ്രാഫര്‍ കൂടിയാണ് കാര്‍ത്തിക്.


Monday, June 14, 2010

அமெரிக்கா எண்ணெய்க் கசிவும் உலகளாவிய உயிர்ப் பேரழிவும்...

கவலைப் படுவதற்கென ஒரு விசயமா ரெண்டு விசயமா இந்த உலகத்துல இருக்குது. திரும்பின பக்கமெல்லாம் ஏதாவது பார்த்து தொலைஞ்சு எந்த சுவத்தில மண்டையை முட்டிக்கிறதுங்கிற அளவிலான நாச வேலைகள் நடந்துக்கிட்டே இருக்குதே!

ஒரளவிற்கு எல்லாரும் இன்றைய நாள்ல கேள்விப் பட்டிருப்போம். வளைகுடா மெக்சிகோ
கடலில் கச்சா எண்ணெய்க் கிணறு வெடித்து ஒரு நாளைக்கு சராசரியாய் 60,000 பீப்பாய்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்து வருகிறதென. நம்மூர்ச் செய்தித் தாள்கள் பெரிய அளவில் இதனைப் பற்றி எழுதியாக எங்கும் தெரியவில்லை. அவர்களுக்கு ஜோடனையில் திரித்து செய்திகள் கொடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் பொழுது, உண்மையான விசயங்கள் குறித்து ஆராய்ந்து மக்களுக்கு செய்தி கொடுப்பதற்கு ஏது நேரம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடைசியாக பெரிய அளவில் இது போன்ற கடல் நீர் மாசுபாடு 1989ல் எக்‌ஷான் வால்டெஷ் என்ற கப்பல் சுமாருக்கு 11 மில்லியன் அளவிலான கச்சா எண்ணெய்யை கடலில் கொட்ட நேர்ந்ததாம், அதுவும் சூழலியல் முக்கியத்துவமுற்ற பகுதியில். அதற்கு பிறகான மிகப் பெரிய சுற்றுச் சூழல் சீரழிவு என்றால் அது கடந்த இரண்டு மாதங்களாக நடந்தேறும் இந்த BP (British Petroleum) கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு விபத்துதான்.

இது ஒரு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்கும், மற்றுமொரு மனிதப் பேராசைத் திட்டம். இந்த விபத்தினையொட்டி இன்னமும் வெடித்த குழாய் அடைக்க முடியாமல் போக, இன்றைய அமெரிக்கப் அதிபர் பல் வேறுபட்ட அரசியல், அறிவியல் விற்பன்னர்களாலும் விமர்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், எனக்கு என்ன புரியவில்லையென்றால் இந்தக் கிணறு யாருடைய ஆட்சிக் காலத்தின் போது ‘ஒகே’வென’ கையெழுத்தானது, அந்த சமயத்தில எது போன்ற திட்ட விவரணைகள் இது போன்றதொரு விபத்து நிகழ்ந்தால், அதனை சமாளிக்கும் விதமாக திட்டம் இருப்பதாக விளக்கியிருப்பார்கள் போன்ற கேள்விகள் எல்லாம் எழும்பாமல், என்னமோ இன்றைய அதிபர் அந்த குழாய் வெடிப்பை அவரே மூச்சடைச்சு, ஆழ்கடல் சென்று அடைத்து விட வேண்டுமென்ற பிம்பத்தை வழங்கி தினமும் தொலைகாட்சிகளில் பேசிவருவது செமையா எரிச்சலூட்டுகிறது.

எது எப்படி இருப்பினும், இந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்து வரும் வேகம் உண்மையிலேயே மிகவும் கவலை அளிக்கக் கூடியது. இது உலகம் தழுவிய முறையில் அதன் பலன்களை அனுபவிக்கக் கூடிய ஒரு மாபெரும் சீரழிவை பெருக்கித் தரும் நிகழ்வு. இந்தக் கழிவு பல்வேறு வகையில் கடல் வாழ் மற்றும் அதனையொட்டிய கரையோர சுற்றுச் சூழலில் பெரிய மாற்றங்களை சங்கிலித் தொடர் போல ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.

மேலும், இந்தக் கழிவு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு காற்றின் திசையினைக் கொண்டு கடல் நீர் பயணிக்க இருப்பதால் உலகின் மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் ஆபாயமிருக்கிறது. சரி, இந்த விபத்தினால் எது போன்ற மாற்றங்களை, பேரழிவுகளை உயிரினங்களும் நாமும் இன்று அனுபவித்திக் கொண்டிருக்கிறோம்; சிலவைகளை மட்டும் பார்ப்போமா...



- எண்ணெய், நீருடன் கலக்கும் பொழுது அது வேதிய மாற்றத்திற்கு உட்பட்டு "mousse" என்ற பிசு பிசுப்பான நிலையைடைந்து விடுகிறதாம். அந்த நிலையில் எது போன்ற ஜீவராசிகள் அதன் அருகாமைக்கு தள்ளப்பட்டாலும் யோசிச்சுப் பார்த்துக்கோங்க... கதை இப்படித்தான் ஆயிப் போகும்.

- பறவைகளில் ஹைபோதெர்மியா வந்து சிறகுகளின் வெப்பச் சுழலேற்றத்தை தடுப்பதின் மூலம் அவைகள் நீரில் மூழ்கும் வாய்ப்பும், பறக்கும் திறனை இழந்து விடுகிறது; சிறகுகளில் எண்ணெய் ஏறி ஹெவியாகி விடுவதால்.

-மற்ற கடல் வாழ் பாலூட்டிகளின் (seal) குட்டிகளுக்கு கூட ஹைபோதெர்மியாவைக் கொண்டுவருகிறதாம்.

- எண்ணெய், உணவுடன் உட்கொள்ளப் படும் பொழுது நேரடியாக நச்சு உணவாகிப் போய்விடுகிறதாம்; அப்படியே இல்லை என்றாலும் நோய் வாய் பட்டு இறக்க நேரிடுகிறது. மேலும் உணவுச் சங்கிலியில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு சென்று விடுவதாகவும் அறிகிறோம். பவளப் பாறைகளும், shelfishகளும் நேரடியாக தப்பிப் பிழைப்பதற்கு வேறு வழியின்றி பேரழிவை சந்தித்து விடுகிறது.

- பறவைகள் மற்றும் விலங்குகளின் சுவாச மண்டலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதித்து விடுகிறது.

- இனப்பெருக்கம் செய்வதில் தடை ஏற்படுத்துவதுடன், இனப் பெருக்கம் செய்யும் சுற்றுச் சூழல் பகுதிகளையும் கெடுத்து விடுகிறது நீண்ட நெடிய காலத்திற்கு.

- பறவைகள் மற்றும் கடல் ஆமைகளின் முட்டை ஓடுகள் மெலிவடைய வைத்து விடுகிறது. மீன்களின் லார்வாக்களில் குறைபாடுகளையும் உருவாக்கக் காரணமாகிவிடுகிறது.


- கடற் புற்கள், மற்ற உணவளிக்கும்/பாதுகாப்பு பகுதியாக விளங்கும் கடற் தாவரங்களின் மீதாகவும் இதன் விளைவுகளை விட்டுச் செல்வதுடன், பூஞ்சைக் காளான்களின் மீதும் கை வைத்து விடுவதால், நீரின் மொத்த (பிராணவாயு இழப்பின் மூலமாக) சூழலியத்தையே மாற்றியமைத்ததாகி விடுகிறது.

இத்தனைக்கிடையிலும், என்னைச் சுற்றிலும் இன்னும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தே வருகிறது, இது ஒன்றும் புதிதல்ல என்று; பெரிதாக கவலைப் படுவதற்கில்லை என்று வாதிடுகிறார்கள். அது போன்று ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மேலே சொன்னவாறு தன்னுடைய ஜால்ஜாபினை முன் வைத்தார் ஒருவர். அவரிடத்தில் நான் சொன்ன ஒரு விசயம், ஆய்வுக் கூடங்களில் நாம் ஒரு வேதியப் பொருளை மற்றொரு வேதியப் பொருளுடன் குறிப்பிட்டளவு கலக்கும் பொழுது அதன் மூலமாக நாம் விரும்பிய மாற்றத்தை அடைய வைக்கிறோம் அல்லது தானாகாவே அது வேறு ஒரு விளைவாக நிறமூட்டிக் காமித்துக் கொள்கிறது - அது போன்றே நாம் இழைக்கும் அத்துனை அநீதிகளுக்கும் இந்த பூமி என்ற பெரிய ஆய்வுக் குடுவை ‘போதும்’ என்ற நிலையை அடைய எந்தக் கடைசி குத்து மல்யுத்த வீரனைச் சாய்ப்பதற்கு இணையாக சாய்க்க வல்லதாக இருக்கப் போகிறதோ அன்று உணர்ந்து கொள்வோம், நம்முடைய தத்துப்பித்து காரணங்களுக்கான உண்மையான விளைவை.

அம்மாம் பெரிய டைனோசாரே ஒன்றுமில்லை என்று போய் விட்டது, இவ்வளவிற்கும் அவைகள் தன்னுடைய அகோர பசிக்கு சதா கண்டதை தின்று வைத்த ஒரு விதயத்திற்கே, அன்னிக்கு இந்தப் பூமியே பார்த்து இவிங்கள வைச்சு மேய்க்க முடியாதுன்னு ஊத்தி மூடி வைச்ச மாதிரி,இன்னிக்கு நம்ம அலும்பு ரொம்பவே ஓவரா இருக்கு, என்னக்கி உள் வாங்கிக்கப் போவுதோ!!



Photo Courtesy: The Atlanta Journal-Constitution.

Friday, June 11, 2010

தொலைத்த வெளி...



நானாகிய என்னைச் சுற்றி
அந்தி மயங்கிய வானம்
தன் பொறுமையிழந்து
எங்கெங்கும்
விசிறியடிக்கும் கருமை...

அதன் முழுமைக்கும்
அழகு சேர்த்தவாறே
சில பறவைகள் தத்தம் ஒவ்வொரு
சிறகசைத்தலுக்கும் எவ்வி
மேலெழும்புகிறது...

தூரத்து மரக்கிளையொன்று
எதற்கோ வெடித்து சிரிக்கும்
இடைவெளியில் சில கருங்குருவிகள்
மரக்குடுமியின் இடமமர்ந்து
பூமி பார்க்கிறது...


வலைக்குள் எனை தொலைத்து
செங்கலென சிவந்த கண்கள்
நிமிர்ந்து வெளிநோக்குகையில்
எனைக் கண்டு
சுதந்திரம் பல்லிளித்தது!

Friday, June 04, 2010

பேச்சு, நிதர்சனம், தெளிவு - வெகு தூரம்...

சொல்லுவது, நினைப்பது அனைத்தையுமே புற உலகிலும் சரி, உள் உலகிலும் சரி நடைமுறைப் படுத்துவது என்பது அத்துனை சுலபமா என்ன? என்னவோ எனக்குச் சுலபமாகத்தான் தோன்றியது. போன வாரம் ஒரு முடி திருத்தும் இடத்திற்கு சென்று இருக்கும் ஐநூறு முடிகளை திருத்தக் கொடுத்த நாள் வரையிலும்.

இப்பொழுதெல்லாம் இங்கு அது போன்று திருத்தகங்களில் யாருமே அதிகமாக சீப்பும், கத்தரிக்கோலும் கொண்டு திருத்துவதாகத் தெரியவில்லை. எல்லாமே அவசரமாகவிட்டது. இந்த நிலையில் எனக்கு கிடைத்த அந்த நபரிடம், ”எப்படிச் சீவியிருக்கேனோ அப்படியே வைத்து எவ்வளவு சிறிதாக திருத்த முடியுமோ, செய்து விடுங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்தேன். அவர் நியூ சயிண்டிஸ்ட் தன் கடைக்கு வாங்கி படிக்கும் ஆசாமி போல, பக்கத்து டேபிளில் கிடந்தது. பார்த்தேன். பலத்த சிந்தனைகளுக்கிடையே தன் பார்க்கும் வேலையில் இருப்பவராகத் தெரிந்தார்.

எப்பொழுதுமே அது போன்ற கடைகளில் உலக அரசியலும், மதங்கள் தொட்டும், இனம் தொடர்பாகவும் காரசாரமாக பேசிக் கொள்வார்கள். அது போன்றே அன்றும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. நிறைய விசய ஞானங்களை தெளித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே என்னைப் போன்றவர்களுக்கு வாய் திறக்க வேலையே இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பேச்சு ஓடும். சொல்லிவிட்டு அமர்ந்தேன். அடுத்த நொடி என் முன் பக்க மண்டையிலிருந்த 100 முடிக் கற்றைகளை காணவில்லை. மிசின் போட்டு அதுவும் இருப்பதிலேயே சிறிய அளவினாலான ஒன்றைக் கொண்டு தூக்கி விட்டார்.

அது தவறி என் மடியில் விழுந்ததும், ஆ! இவ்வளவு நீளமாக வளரும் வரை விட்டு காட்டுத்தனமாகவா திரிந்திருக்கிறோம்னு நினைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தால், அது போன்ற ஓர் ஆளை நான் பார்த்ததே கிடையாது இதற்கு முன்னால் என்பதனைப் போல கண்ணடியில் முன் மண்டை காலியாக ஒருவன் ஆச்சர்யத்தில் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தான். தலையை ஆட்டிக் கொண்டே திருத்துபவரை பார்த்தேன், அவரும் குழம்பிப் போய் என்னாயிற்று என்பது போல என் கண்களை நேர் கொண்டார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அப்படியே சில நொடிகள் அமர்ந்து விட்டு சரி keep it going என்று கூறிவிட்டு, சிந்தனை சின்னச்சாமியாக யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

இயல்பாகவே என்னிடம் மாட்டும் நண்ப/பிகளிடத்தில் வாயில் வந்ததெல்லாம் தத்துவ நோக்கில் பேசுவதாக எடுத்துக் கொண்டு பிதற்றுவேன். ஈகோ இருக்கக் கூடாது, தனக்கென்று ஒரு இமேஜ் வைத்துக் கொள்வதில்தான் எத்தனை ஆபத்து, வெங்காயம், கருவேப்பிலை, பச்சடி என்று எவ்வளவு நேரம் எதிராளி தாங்குவார்களோ அவ்வளவு நேரம் பேசுவேன். அதாவது ஒரு நாள் கோவனம் கட்டிக் கொண்டு தெருக்களில் இறங்கி நடந்து திரிவதில் எனக்கொன்றும் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை என்ற ரேஞ்சிற்கு... :)

ஆனால், அது செயலில் காட்டுவதில்தான் மனதிற்கு எத்தனை தயக்கம். வாய் பாட்டிற்கு பேசி விடுகிறது எனக்கென்ன என்று. நடைமுறையில் பேசியவற்றை எடுத்துச் செலுத்வதில் தான் மனதிற்கு எத்தனை பயம். முடி திருத்தி முடித்தவுடன், அவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு, தனியாக அமர்ந்து வாகனத்தை செலுத்தியவாறே மீண்டும் எண்ணக் குமிழ்களுக்குள் என்னை அடைத்துக் கொண்டே வெடித்து, மீண்டும் மற்றொன்றிற்குள் என்று விழுந்து வெடித்து வெளி வந்து கொண்டிருந்தேன்.

இந்த சிறு விசயம், புறத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் அடைத்துக் கொண்டு வளர்ந்து நிற்கும் ஒரு விசயம். இதற்கு எத்தனை விதமான எண்ணச் சங்கிலிகள்! அதன் இயல்பான முறையிலிருந்து, சற்றே மாற்றி திருத்தியமைத்துக் கொண்டதிற்கே. விசயம் அப்படியாக இருக்கையில், எதன் பொருட்டும் கேள்விகளே எழுப்பிப் பழகாத மனத்தின் அடியாழத்தில் சென்று தன் பார்த்தே பழகி, நொதித்து வாழ்ந்து அதன் இயல்போடு ஓடி அனிச்சையாக இயங்கும் வாழ்வியல் சார்ந்த விசயங்களில் தன்னைத் திருத்தி அமைத்துக் கொள்வது எத்தனை தூரம் சாத்தியம் என்று நினைக்கும் பொழுது சற்றே மிரட்சியாக இருந்தது.

அந்த விழிப்பு நிலைக்கே தன்னை இட்டுச் சென்று நிறுத்திக் கொள்ள எது போன்ற இன்றைய ‘முடி இழப்பு’ சம்பவம் போல் ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்வு நிகழ்ந்து கண்ணைத் திறக்க வைக்கும் இந்த வாழ்வெனும் இயக்கம்? அப்படியே நிகழ்ந்தாலும் உள்ளே சென்று விழிப்பு நிலையை எட்ட தன்னை தயார் நிலையில் வைத்திருப்போமா; பழகிப்போன விசயங்களிலிருந்து விட்டு விலகி மாற்று சிந்தனைகளை பழகிக் கொள்ள. என்று என்னன்னவோ மனத்தினுள் இந்த முடி இழப்பு, எண்ணங்களாக படையெடுக்க ஆரம்பித்து விட்டது.

வீட்டிற்குள் வந்து நுழைந்ததும் எல்லாருக்கும் என்னைப் பார்த்ததும் முதலில் வந்தது சிரிப்பு மட்டுமே! எனக்கு... ??

Related Posts with Thumbnails