சொல்லுவது, நினைப்பது அனைத்தையுமே புற உலகிலும் சரி, உள் உலகிலும் சரி நடைமுறைப் படுத்துவது என்பது அத்துனை சுலபமா என்ன? என்னவோ எனக்குச் சுலபமாகத்தான் தோன்றியது. போன வாரம் ஒரு முடி திருத்தும் இடத்திற்கு சென்று இருக்கும் ஐநூறு முடிகளை திருத்தக் கொடுத்த நாள் வரையிலும்.
இப்பொழுதெல்லாம் இங்கு அது போன்று திருத்தகங்களில் யாருமே அதிகமாக சீப்பும், கத்தரிக்கோலும் கொண்டு திருத்துவதாகத் தெரியவில்லை. எல்லாமே அவசரமாகவிட்டது. இந்த நிலையில் எனக்கு கிடைத்த அந்த நபரிடம், ”எப்படிச் சீவியிருக்கேனோ அப்படியே வைத்து எவ்வளவு சிறிதாக திருத்த முடியுமோ, செய்து விடுங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்தேன். அவர் நியூ சயிண்டிஸ்ட் தன் கடைக்கு வாங்கி படிக்கும் ஆசாமி போல, பக்கத்து டேபிளில் கிடந்தது. பார்த்தேன். பலத்த சிந்தனைகளுக்கிடையே தன் பார்க்கும் வேலையில் இருப்பவராகத் தெரிந்தார்.
எப்பொழுதுமே அது போன்ற கடைகளில் உலக அரசியலும், மதங்கள் தொட்டும், இனம் தொடர்பாகவும் காரசாரமாக பேசிக் கொள்வார்கள். அது போன்றே அன்றும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. நிறைய விசய ஞானங்களை தெளித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே என்னைப் போன்றவர்களுக்கு வாய் திறக்க வேலையே இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பேச்சு ஓடும். சொல்லிவிட்டு அமர்ந்தேன். அடுத்த நொடி என் முன் பக்க மண்டையிலிருந்த 100 முடிக் கற்றைகளை காணவில்லை. மிசின் போட்டு அதுவும் இருப்பதிலேயே சிறிய அளவினாலான ஒன்றைக் கொண்டு தூக்கி விட்டார்.
அது தவறி என் மடியில் விழுந்ததும், ஆ! இவ்வளவு நீளமாக வளரும் வரை விட்டு காட்டுத்தனமாகவா திரிந்திருக்கிறோம்னு நினைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தால், அது போன்ற ஓர் ஆளை நான் பார்த்ததே கிடையாது இதற்கு முன்னால் என்பதனைப் போல கண்ணடியில் முன் மண்டை காலியாக ஒருவன் ஆச்சர்யத்தில் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தான். தலையை ஆட்டிக் கொண்டே திருத்துபவரை பார்த்தேன், அவரும் குழம்பிப் போய் என்னாயிற்று என்பது போல என் கண்களை நேர் கொண்டார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அப்படியே சில நொடிகள் அமர்ந்து விட்டு சரி keep it going என்று கூறிவிட்டு, சிந்தனை சின்னச்சாமியாக யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
இயல்பாகவே என்னிடம் மாட்டும் நண்ப/பிகளிடத்தில் வாயில் வந்ததெல்லாம் தத்துவ நோக்கில் பேசுவதாக எடுத்துக் கொண்டு பிதற்றுவேன். ஈகோ இருக்கக் கூடாது, தனக்கென்று ஒரு இமேஜ் வைத்துக் கொள்வதில்தான் எத்தனை ஆபத்து, வெங்காயம், கருவேப்பிலை, பச்சடி என்று எவ்வளவு நேரம் எதிராளி தாங்குவார்களோ அவ்வளவு நேரம் பேசுவேன். அதாவது ஒரு நாள் கோவனம் கட்டிக் கொண்டு தெருக்களில் இறங்கி நடந்து திரிவதில் எனக்கொன்றும் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை என்ற ரேஞ்சிற்கு... :)
ஆனால், அது செயலில் காட்டுவதில்தான் மனதிற்கு எத்தனை தயக்கம். வாய் பாட்டிற்கு பேசி விடுகிறது எனக்கென்ன என்று. நடைமுறையில் பேசியவற்றை எடுத்துச் செலுத்வதில் தான் மனதிற்கு எத்தனை பயம். முடி திருத்தி முடித்தவுடன், அவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு, தனியாக அமர்ந்து வாகனத்தை செலுத்தியவாறே மீண்டும் எண்ணக் குமிழ்களுக்குள் என்னை அடைத்துக் கொண்டே வெடித்து, மீண்டும் மற்றொன்றிற்குள் என்று விழுந்து வெடித்து வெளி வந்து கொண்டிருந்தேன்.
இந்த சிறு விசயம், புறத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் அடைத்துக் கொண்டு வளர்ந்து நிற்கும் ஒரு விசயம். இதற்கு எத்தனை விதமான எண்ணச் சங்கிலிகள்! அதன் இயல்பான முறையிலிருந்து, சற்றே மாற்றி திருத்தியமைத்துக் கொண்டதிற்கே. விசயம் அப்படியாக இருக்கையில், எதன் பொருட்டும் கேள்விகளே எழுப்பிப் பழகாத மனத்தின் அடியாழத்தில் சென்று தன் பார்த்தே பழகி, நொதித்து வாழ்ந்து அதன் இயல்போடு ஓடி அனிச்சையாக இயங்கும் வாழ்வியல் சார்ந்த விசயங்களில் தன்னைத் திருத்தி அமைத்துக் கொள்வது எத்தனை தூரம் சாத்தியம் என்று நினைக்கும் பொழுது சற்றே மிரட்சியாக இருந்தது.
அந்த விழிப்பு நிலைக்கே தன்னை இட்டுச் சென்று நிறுத்திக் கொள்ள எது போன்ற இன்றைய ‘முடி இழப்பு’ சம்பவம் போல் ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்வு நிகழ்ந்து கண்ணைத் திறக்க வைக்கும் இந்த வாழ்வெனும் இயக்கம்? அப்படியே நிகழ்ந்தாலும் உள்ளே சென்று விழிப்பு நிலையை எட்ட தன்னை தயார் நிலையில் வைத்திருப்போமா; பழகிப்போன விசயங்களிலிருந்து விட்டு விலகி மாற்று சிந்தனைகளை பழகிக் கொள்ள. என்று என்னன்னவோ மனத்தினுள் இந்த முடி இழப்பு, எண்ணங்களாக படையெடுக்க ஆரம்பித்து விட்டது.
வீட்டிற்குள் வந்து நுழைந்ததும் எல்லாருக்கும் என்னைப் பார்த்ததும் முதலில் வந்தது சிரிப்பு மட்டுமே! எனக்கு... ??
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Friday, June 04, 2010
பேச்சு, நிதர்சனம், தெளிவு - வெகு தூரம்...
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
இரண்டு வாரத்திற்கு முன்னாடி முகத்திலறைந்த ஒரு நிகழ்வு இது, இப்போதான் இங்க இறக்கி வைக்க முடிந்தது
/////எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அப்படியே சில நொடிகள் அமர்ந்து விட்டு சரி keep it going என்று கூறிவிட்டு, சிந்தனை சின்னச்சாமியாக யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
///////
நீங்க மட்டும் இல்லை இப்ப நானும் அப்படித்தான் நண்பரே . பகிர்வுக்கு நன்றி
\\எவ்வளவு நேரம் எதிராளி தாங்குவார்ளோ அவ்வளவு நேரம் பேசுவேன். //
ahaha ohoho .. ;)
Prabha,
விடுங்க பாஸ்! இவங்க எப்பவும் இப்படித்தான்.. நமக்க எல்லாம் எப்ப முடி இருத்திருக்கிறது..
ஆனா, ஒரு வார்த்தையாவது அவனிடம் கேள்வி கேட்டிருக்கலாம்.. எனக்கும் அதே பிரச்சனைதான் அங்கே இருக்கும் வரை.. எனக்கென்னமோ அவனுக்க இன்டியன்ஸ்னாலேயே இப்படி பண்றானுகலோ...
அப்பாடி எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது..ம்ம்
நானும் இறக்கி வெச்சுட்டேன்..ம்
அன்பின் பிரபா
நானும் இப்படித்தான் - தலையில் அவர் பிஸியாக இருக்கும் பொழுது என் சிந்தனையோ எங்கோ புல் மேய்ந்து கொண்டிருக்கும் - ஏதாவது கேட்பார் - ஏதாவது சொல்வேன் - இறுதியில் - வேறு வழி இல்லாமல் சமாளித்து வருவேன் - இது தான் நம் தலை எழுத்து - இல்லையா பிரபா
நல்வாழ்த்துக்ள் பிரபா
நட்புடன் சீனா
முடி முளைச்சாலும் இவ்வளவு நாள் நாம கூடவே இருந்து இருக்கு . அதான் போகும் போது கொஞ்சம் சங்கடமா இருக்கு . அதுவும் முடி வெட்டிட்டோ தாடியை வளிச்சதுக்கு அப்புறம் நமக்கு பீளிங்க்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ் . எல்லாம் கூட இருந்த பாசம்
மனதை தொட்ட சிறந்த பதிவாக இடம் பிடிக்கிறது @
http://www.sinhacity.com/
இங்கே எனக்கு ஒரு சிறு கதை சொல்லும் ஆவல். நான் 13-14 மாதங்கள் முடி வளர்த்து, (13 அடி) Locks of Love அப்படிங்கிற விக் (wig for cancer kids) செய்யுற இடத்துக்கு அனுப்புவேன். சில சலூன்கள் இதெற்கெனவே (முடி வெட்டுபவர்கள்) இருக்கின்றன. அங்கு போய் முடி வெட்டினால், அவர்களே அழகா பேக் பண்ணி இந்த கம்பெனிக்கு அனுப்பி விடுவார்கள். நாம் ஒன்றும் செய்ய தேவையில்லை. நமக்கு Locks of Love-ல இருந்து நன்றி மடல் வரும் போது, நாம் கொடுத்தது சேர்ந்து விட்டது என்ற திருப்தி வரும். இது அமெரிக்காவில் ஆண், பெண் இரு பாலாரும் பரவலாக செய்கிறார்கள். நம்மூர்ல...
இப்படி ஒரு நாள் முடிய கொடுத்துட்டு, அண்ணாச்சி முடிய கொஞ்சம் அழகா வெட்டி உடுங்க. இந்த முறை 4 மாதத்திற்கு வளர்க்க போவதில்லை. கொஞ்சம் ஸ்டைலூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ பண்ண போறேன் அப்படின்னதும், சரி என்று அடித்தான் பாருங்க ஒரு போலீசு கட்டு.... என்னை பார்த்து எனக்கே அடையாளம் தெரியல. கண்ணாடியில நான் எங்கேன்னு கொஞ்சம் நேரம் தேடித் திணறி தான் போயிட்டேன். இதுல வேற ஒரு காமெண்ட்... நாளைக்கு உன் ஆஃபீஸ்ல இருந்து என்னை தேடி ஆளுங்க வருவாங்கன்னு. :-) ஆமா சாமின்னு வந்தேன். வீட்டுக்கு வந்தா .... தெக்கி அண்ணாச்சி சொல்லி இருக்குற மாதிரி சிரிச்சா சரியா போயிருக்கும். உள்ள யாரும் என்னை விடல. :-) கலக்கத்திலே இருக்குமோ.
என்ன சொல்லுறதுன்னா... ஆண் மகவுக்கு மட்டுமில்லை இந்த நிகழ்வு. முடி வெட்டும் போது தூங்கிப் போகும் அல்லது டூயட் பாட(கனவில் தான்) ஓடும் யாவருக்கும் பொதுவென சொல்லுறேன்.
இதை படிச்சிட்டு நீங்களும் முடிய வெட்டி அனுப்ப, இந்தாங்க உரல்
http://www.locksoflove.org/
Annaa New Photo Please...! :))))
Name that Sidhhar..
SALOON BAABA! :)
//இந்த சிறு விசயம், புறத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் அடைத்துக் கொண்டு வளர்ந்து நிற்கும் ஒரு விசயம். இதற்கு எத்தனை விதமான எண்ணச் சங்கிலிகள்! அதன் இயல்பான முறையிலிருந்து, சற்றே மாற்றி திருத்தியமைத்துக் கொண்டதிற்கே. விசயம் அப்படியாக இருக்கையில், எதன் பொருட்டும் கேள்விகளே எழுப்பிப் பழகாத மனத்தின் அடியாழத்தில் சென்று தன் பார்த்தே பழகி, நொதித்து வாழ்ந்து அதன் இயல்போடு ஓடி அனிச்சையாக இயங்கும் வாழ்வியல் சார்ந்த விசயங்களில் தன்னைத் திருத்தி அமைத்துக் கொள்வது எத்தனை தூரம் சாத்தியம் என்று நினைக்கும் பொழுது சற்றே மிரட்சியாக இருந்தது.//
நெத்தியடி!!!
வாங்க பனித்துளி,
//நீங்க மட்டும் இல்லை இப்ப நானும் அப்படித்தான் நண்பரே//
ஓ! அப்படியா, எல்லாருக்கும் அப்பப்போ இது போன்ற சிறிய ஷாக்ஸ் கிடைக்கத்தான் செய்தில்ல... நன்றி - பனித்துளி.
****************
முத்து,
//ahaha ohoho .. ;)//
அட அட என்னவொரு சிரிப்பு... ஏங்க அப்படிச் சிரிச்சீங்க - ரொம்பவே பட்டிருப்பீங்களோ :))
******************
சிவா,
வாங்க சிவா, எம்பூட்டு நாளாச்சு உங்களப் பார்த்து, என்ன ஒரு வருஷத்திற்கும் மேலாவே இருக்கும் போலவே...
//நமக்க எல்லாம் எப்ப முடி இருத்திருக்கிறது..//
ஹிஹிஹி இந்த ரகசியத்தை எல்லாம் வெளிய சொல்லிக்கிட்டு ;)
//எனக்கென்னமோ அவனுக்க இன்டியன்ஸ்னாலேயே இப்படி பண்றானுகலோ...//
நமக்கு மாட்டின ஆளுங்களை பொருத்தது அது...
//அப்பாடி எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது..//
பின்னே இல்லாத ஒன்னை வேலையா செய்யக் கொடுத்தா இப்படித்தான் வந்து பொலம்பி வைக்கணும்.
சிவா - சீக்கிரம் நீங்களும் வந்து எழுதுங்கப்பா... போர் அடிக்கிதில்ல வலையுலகம் :D
சீனா,
//எங்கோ புல் மேய்ந்து கொண்டிருக்கும்//
அவரு உங்க தலையை மேய ஆரம்பிச்சவுடன் நீங்க புல்லை மேய ஆரம்பிச்சிடுவீங்களா, ஹாஹாஹா...
உங்களுக்கு இது மாதிரி வித்தியாசமான சீனாவை பார்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காதின்னு நினைக்கிறேன் ;) - மொட்டைத் தலைக்கு கொஞ்சம் பக்கத்தில வைச்சு வேலைய முடிச்சிவிட்ட மாதிரிக்கா ... நன்றி, சீனா!
********************
மீனு,
//அதான் போகும் போது கொஞ்சம் சங்கடமா இருக்கு.//
உனக்கு முடி இழப்பிற்கு பின்னே அப்படி தோணியிருக்கா, இதையே நான் வேறு ஒரு சூழலில் நினைச்சுப் பார்த்திருக்கேன் எப்படின்னா, பேருந்து, இரயில் பயணங்களின் போது உதிரும் நம் முடி, நகம் வெட்டி ஜன்னலுக்கு வெளியே போடும் பொழுது பளிச்சின்னு ஒரு மின்னல் மண்டைக்குள்ளர இந்த உடம்பு எப்படி ஒன்று மற்ற இந்த பரந்த வெளியிலிருந்து வந்ததோ அது போலவே சிறுகச் சிறுக அந்த பரந்த வெளியிலேயே கரைத்து விடுகிறோமேன்னு .... ஹிஹிஹி மாட்டீனான்யா இன்னிக்கு மீனு.... :))
**********************
//Anonymous said...
மனதை தொட்ட சிறந்த பதிவாக இடம் பிடிக்கிறது @
http://www.sinhacity.com/
//
சென்று பார்த்தேன், நன்றே இருந்தது - நன்றி!
//Raji said...
:)//
ஆ! ராஜீ படிச்சாச்சா :)) - நன்று!
***************
காட்டாறு,
இந்த locks of love பத்தி எப்பயோ நான் எழுதி இருக்கணும். சரி, எப்பயா இருந்தாலும் நான் செஞ்சிடுவேன். ஆமா, அது எப்படிங்க மொத்தமா தன் 'இருத்தலையே' இப்படியே அடுத்தவங்களுக்காக அர்பணித்து யோசிச்சு நகர முடியும். ரொம்ப பெருமைக்குறிய விசயம்.
இனிமே முடி யாராவது அநியாத்திற்கு ஒட்ட வைச்சு கத்தரிச்சிருந்தா தேவையில்லாம கமெண்டாக் கூடாதுப்பான்னு வருது உங்க மறுமொழி... விரிவா எழுதணும் இதன் பொருட்டு.
தகவலுனூடான மறுமொழிக்கு நன்றி!
சுரேகா,
சலூன் பாபா :))... புதிய புகைப்படம் வந்திட்டே இருக்கு.
*******************
குட்டிப்’பையா,
//நெத்தியடி// அப்படிங்கிற ஒற்றை வார்த்தையில் சுருக்கியாச்சா - நன்றி!
இரண்டு வாரத்திற்கு முன்னாடி நடந்த நிகழ்வால் எங்களுக்கு ‘சிந்தனை சின்னசாமி’ கிடைத்தார்.
போயே போச்சு போயிந்தே.
நல்ல பகிர்வு சார்.
//கோமதி அரசு said...
இரண்டு வாரத்திற்கு முன்னாடி நடந்த நிகழ்வால் எங்களுக்கு ‘சிந்தனை சின்னசாமி’ கிடைத்தார்.//
வணக்கம்மா. உங்களுக்குமா :)) ?! ஒரு பதிவா போட்டுருங்க படிச்சி தெரிஞ்சிக்குவோம்.
***********************
//அக்பர் said...
போயே போச்சு போயிந்தே//
:) வாங்க அக்பர், நலமா? நன்றி...
Post a Comment