பூமியின் மேலோட்டின் மீது
என்றைக்கும் போலவே அன்றும் கனமறியா
ஒரு விந்தை மாலை...
அந்த மதக் குழுவை சாய்க்கும்
நாளைய திட்டத்தை பேசித்தீர்த்தபடியே
பானை துளாவி
கள்ளமிட்ட சில்லறைக்காசுகளை
மதுவாக்கி உள்ளிறக்கி வீடடைகையில்
பால்கேட்டு அழுதபடியே
தூங்கிப் போன குழந்தையை
தூரப் பார்வை பார்த்துக்கொண்டே
வானம் பார்க்க கவிழ்கிறேன்...
பூமியின் கீழோட்டில் கண்டறியா
இரு தட்டுக்கள்
கை குலுக்கப்போய்
கூரையின் கீழிருந்த என்
நடு முதுகினில் செங்குத்தாக ஏதோ இறங்க
மறுநொடி உலகமே
சுழன்று கண்கள் மேலும் இருட்டைத் தழுவ
குழந்தையின் பீறிட்ட அழுகை
பால்புட்டிக்கான சில்லறைக் காசுகளாக
கண்முன் ஊசலாடிக் காட்ட
நான் பறந்து கொண்டிருக்கிறேன்
இடிபாடுகளுக்கிடையே...
7 comments:
ஏதோ புரியர மாதிரி எழுதிட்டீங்க... ஒரு வெலை படம் போட்டதுனால எனக்கு புரியுதோ...
நம்ம கன்ட்ரோல்ல இல்லாத இரண்டு நிகழ்வுகளுக்கு நடுவுல இருக்கிற இந்த இடைப்பட்ட காலகட்டத்துல எத்தனை ஆட்டம்...ம்ம்ம்
நிலைத்து இருக்கும் நிலையாமை - அழகா சொல்லியிருக்கீங்க தெக்கி - லேசா பயமா இருக்கு :(
அன்பின் தெகா
நல்ல கவிதை - நல்ல நடை - தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் - நடக்க்ப்போவது தெரியாமல் ஆடுகிறோமே - என்ன செய்வது - ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் தெகா
நட்புடன் சீனா
மங்கை :))
வானம் பாக்க கவிழ்வதுலயே மனுசனுக்கு உள்ள தெளிவு தெரியுதே.. :)
மனிதனாக மனிதம் போற்று...
இயற்கைக்கு முறன்..
இயற்கையின் முதல் அடி..
உனக்கு தான்...
ஒரு விந்தை மாலை பொழுதில் பூமியச்சிலிர்ப்பு !
கவிதையில் உள்ள வரிகள் எதுவும் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கும் என்பதை குறிக்கிறது.
மனிதன் உணர வேண்டும்.
கவிதை அருமை.
மங்கை - புரியற மாதிரி எழுதிட்டேனா இந்த முறை :)...
**********************
குட்டி’பையா - அதே! எதுக்கு பயம்...
***************
வாங்க சீனா,
..... நடக்க்ப்போவது தெரியாமல் ஆடுகிறோமே - என்ன செய்வது..... அதான் பிரச்சினையின் மூலமே.
*******************
முத்து - அது மாதிரி கவிழ்ந்தடிச்சு விழுவதில ஒரு சுகமிருக்கிங்க :)
*****************
தம்பி - முதல் முறை வரும் போதே பயங்கரமான ‘அடி’யோட வந்திருக்கீஙக் அடிக்கடி இது மாதிரி அடிங்க இங்க :)
**************
கோமதிம்மா - வணக்கம்.
அனைவருக்கும் நன்றி!
Post a Comment