Friday, September 29, 2006

டில்லியில் இந்தியா ஒளிரும் சில காட்சிகள்...!!!

Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us

Image Hosted by ImageShack.us
இந்தியாவில் 2.1 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதுக்கும் குறைந்த வயதில், ஆண்டுதோறும் சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால் மாண்டுவருவதாக, ஐ.நா சபை சுட்டறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதில் 700 மில்லியன் இந்தியர்கள் சுத்தமான குடிநீரே கிடைக்காமல் அவதியுருவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.


மற்ற காட்சிகளுக்கும், கட்டுரைக்கும், புள்ளி விபரங்களுக்கும் இங்கே சென்று பார்க்கவும்...


***சிறு முயற்சி முத்துவும் இங்கே நீர் பாதுகாப்பின் அவசியம் பொருட்டு பேச்சு வார்த்தை நிகழ்த்தினது காண சொடுக்கிப் பாருங்க... நன்றியுடையவர்களாய் இருப்போம்..

Wednesday, September 13, 2006

ஏன் தமிழ் வெட்கித் தலைகுனிகிறது *மங்கைக்கு* ஓர் பதில்?

ஒரு பின்னூட்டம் எழுதுனேங்க திருமதி. மங்கை அவர்களுக்கு இங்க (முதல்ல அதப் படிச்சிருங்க), அதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே, பெரிசாப்பூடுத்து அத வுடைச்சு இங்கன இன்னும் கொஞ்சம் சேர்த்து தனிப்பதிவா போட்டுட்டேன்.

இந்த மொழி மற்றும் நமது (தமிழக) மக்களின் எண்ணவோட்டம் அதிலும் வெளி மாநிலங்களிலும், நாடுகளிலும் வாழும் தமிழர்களின் விசயமாக ரொம்ப நாளாக ஒரு பதிவு போடணுமின்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப அதுக்கு சரியான நேரம் அப்படின்னு நினைச்சதாலே போட்டுட்டேன்.

இப்ப பின்னூட்ட கருத்து:

மங்கை மீண்டும் மறந்திருந்திராதீங்க நான் சொன்ன ignorant factorயையும் :-)

இங்கு யாரும் அலுவலகத்தில் முதலாளி கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நம் மொழி வளர பாடுபடுங்கள் என்று பேசிக் கொண்ட மாதிரி எனக்குத் தெரியவில்லையே, இந்த *மோகன் தாஸ்* அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது அந்த கான்செப்ட்.

இப்பொழுது, இது நமது மக்களின் ignorant factorஎ என்பதற்கு ஒரு சொந்த அனுபவம் கொண்டு பார்ப்போம். இதனையும் யாரவது ஒரு மன நலம் படித்தவர் இருந்தால் அலசி, காயப்போட்டு உனக்கு அந்த மொழி தெரியவில்லையென்றால் ஏன் அந்த மாநிலங்களுக்கு செல்கிறாய் என்று கேட்கட்டும்.

இப்ப மேட்டர், சில காலங்களுக்கு முன்பு நாங்கள் ஒரு நான்கு பேர் வட இந்திய சுற்றுலா போயிருந்தோம், ஐந்து மாநிலங்களுக்கு அதில் டில்லியும் அடக்கம்.

எங்களுக்கு கிடைத்த அனுபவம் மதராஸிக்கு ஹிந்தி தெரியாது என்பதே ஒரு ஏளன போக்குக்கு வழிவகுத்து விடுகிறது வடக்கே என்பதே. அது அப்படியாக இருக்க, தத்துபித்து ஆங்கிலத்தைக் கொண்டு பேருந்துகள் பிடிப்பதற்கும், தங்கும் இடங்கள், சுற்றிப் பார்க்க இப்படி அடிப்படை விசய ஞானத்திற்கு படித்தவர்கள் போல் காட்சி தரும் மக்களிடம் அணுகி ஆங்கிலத்தில் கேள்விகள் எழுப்பினாலும் விடை கிடைப்பது என்னவோ ஹிந்தியில்தான்.

நான் கூறுவது அங்கு வாழும் டில்லிவாலாக்களிடமிருந்தும், அல்லது அந்தந்த மாநில பிராந்திய மொழியிலேயே பதில் கிடைத்தது. அப்படியெனில் அவர்களுக்கெல்லாம் தன் மொழியின் மீது மரியாதையும், பிடிப்பும் இருக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும்.

அது அப்படியாக இருக்கையில் ஏன் நமது அறிவிலிகள் மட்டும் இப்படித் தன்னை வேறு யாராகவோ அடையாளப்படுத்திக் கொள்ள எத்தனிக்க வேண்டும்?

ஆனால், அந்த வட இந்தியர்கள் தமிழகம் வரும் பொழுது நம்மில் எத்துனை பேர் நமது மெழித்திறமை அவர்களிடம் சம்பாஷித்து உறுதி செய்துகொள்கிறோம்.

ஒரு சைனீஸ் ஒரு சக சைனருடன் பேசும் பொழுது அங்கீலத்தில் பீத்தியதுவுண்டா, அது போல் ஒரு கொரியர், ஜப்பானீஸ்...

சரி அந்த மனசீக மொழி, நடை, உடை, பாவனைகளை நாம் மிஸ் பண்ணுவதால் தானே மாதம் ஒரு முறையேனும் 'நம் மக்கள் வாழும்' பகுதிகளை நோக்கி சென்று வறுகிறோம்... உ.ம்; வெளி நாட்டாவர்களுக்கு 'லிட்டில் இந்தியா' அதிலும் பிறகு பிராந்தியம்தோரும்... இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

அடிப்படையில் நமக்கு ஏதோ கோளாறு இருக்கிறது. அதுதான் என்ன?
இது போன்று நான் எழுதி கொண்டே போகலாம். இது போலவே, எனக்கு கிடைத்த அனுபவம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் எப்படி New Comersகளிடம் நடந்து கொள்கிறார்கள் அல்லது தன்னை விச்சியாசப் படுத்திக் கொள்ளவேணும் என்று என்னவெலாம் செய்கிறார்கள் என்பதையும் கவனித்ததுண்டு. சரி விடுங்க தனிப் பதிவ போட்டு விடுவோம்.

**********************

அதோட அவங்களுக்கு சொன்னது முடிஞ்சுது. இப்ப இந்த சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில என்ன நடந்தது எனக்குன்னு சொல்லிடறேன். நான் ஒரு 4-5 தடவை அந்த பக்கமா போயி ஒத்த ஆளா சுத்தி திருஞ்சுருக்கேன். இதில சிங்கப்பூர்லதான் ரொம்ப கவனிக்கும் படியா
நம்மூர்(சிங்கப்பூர் வாழ்) மக்கள் புதிசா(இந்தியாவிலிருந்து) அங்க வேலைக்கு வாரவங்கள ட்ரீட் பண்ண முறை ரொம்ப ஆச்சர்யப் படுத்தியது.

அதிலும் பேருந்துகள், ரயில் பயணங்களின் போது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் தனக்கும் இந்த ஈன ஜாதி மக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஆண்கள் தலைகேசத்திற்கு சாயமும், காதில் கடுக்கணுமாக, பெண்கள் ஏதோ ஒரு "ஸ்டான்ட் அவுட்" இத்தியாதிகளுடனும் தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டு அங்கு வாழும் இதர சைனீஸ், மலேய மக்களுடன் பிரயாணிக்கிறார்கள்.

ஆனால் நம்மூர் பாவபட்டதுகள் மனத்தினுள் ஓடும் அத்தனை ரயில்களையும் ஒருங்கே காதில் ரீங்காரித்த வண்ணம் அமர இருக்கை இருந்தும் மற்ற மக்களின் அருகே சென்று அமர அஞ்சி நிற்பதைப் போல எனக்குப் பட்டது. இதற்கும் மங்கையின் பதிவில் "ஹரிஹரன்" கூறியதைப் போன்று...

....நான் இந்தப்பேட்டையின் பிஸ்தா ஒருவேளை புதியவனான நீ எனக்கு மாற்றாக வந்துவிடுவாயோ எனும் ஆழ்மன சர்வைவல் இன்ஸ்ட்ங்டும் ஒரு காரணி...

ஒரு மனம் சார்ந்த பிறழ்சியாக இருக்க அனேகமாக வாய்ப்புண்டு என நினைக்கிறேன்.

எது எப்படியோ வெளியூர் சென்று பிழைக்கும்(சரி வாழும்) இடத்தில் இருக்கும் மக்கள் ஒரு இனக்கத்தையும், நெருக்கத்தையும் கொடுக்கும் பாலமாக விளங்கும் இந்த மொழியினைக் கொண்டு ஆன்ம திருப்தி அந்த ஒரிரு நிமிடங்களில் கிடைப்பதை ஏன் மிஸ் பண்ண வேண்டும்? இந்த வெளி பகட்டிற்காக?

ஏற்கெனவே தேவைப்படும் மொழி கொண்டு எங்கு இருக்கிறோமோ அங்கு வாழ கற்றுக் கொண்ட பிறகும் எதனை நிறுபிப்பதற்கு நமது சொந்த மொழியை சக மொழி பேசுபவருடன் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அது போலவே இரட்டை மொழி கற்றுக் கொடுப்பதிலும் தயக்கமிருக்கிறது. வெளியில் பள்ளி செல்லும் குழந்தை அரிதிப் பெரும்பாண்மையினர்(மெஜாரிடி) என்ன மொழி பேசுகிறார்களோ அதனை பின் தொடர்வதில் ஒன்றும் சுணக்கம் இருக்க வாய்ப்பில்லை.

அது போன்ற சூழலில் ஏன் பெற்றோர்கள் தனது தாய் மொழியினை வீட்டீனுள் அமல் படுத்தக் கூடாது? குழந்தைகள் அம் மொழியினை(மைனாரிடி) இன்று பயன்படுத்த முன்வராவிடினும், அடிப்படை புரிதல்கள் இருப்பதால் நாளை அதன் அவசியம் புரிந்து முழுமை அடைய எத்தனித்தால் தாங்களும் அதற்கு ஒரு வழிகோணியதாகத்தானே பொருள்.

எனது நண்பர் ஒரு மலையாளி அவருடைய பெண் குழந்தை 5 மொழிகள் பேசுகிறது. அவர் தனது பெண்ணுடன் மலையாளம் மட்டுமே பேசுகிறார், அவரது மனைவி சொந்த ஊர் மகாரஸ்டிரம் என்பதால் ஹிந்தியும், மராத்தியும் பேசுவதுண்டு. கோவையில் பெண் படித்ததால் தமிழ் ஈசியாக நண்பர்களிடமிருந்து கிடைத்தது. பிறகு பள்ளியில் ஆங்கிலம். சரி, இது எதற்கு இங்கு என்றால், நமது மூளையில் Cognitive abilityக்கு ஒன்றும் பஞ்சமில்லை, குழந்தைப் பருவத்தில் மொழி கற்று கொடுக்கும் பட்சத்தில், அதுகள் ரொம்ப ஈசியாக பெற்றுக்கொள்கிறது என அறிக.

அதனால் பெற்றோர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், முடிந்த அளவிற்கு வீட்டீனுள் குழந்தையுடன் தாய் மொழி பேசுங்கள், நீங்கள் வெளி நாட்டிலோ, மாநிலத்திலோ வசிப்பவராயின். மொழியை விட ஒரு சிறந்த பரிசை நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல முடியாது.

இல்லையெனில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் குறிப்பிட்டது போல தமிழ் ஒரு Ancient dead language என்ற விளக்கம் உண்மையாகிவிடும்.

Sunday, September 03, 2006

வேட்டை - விளை(யாட்டு):Hollywood Effect...!!!

Image Hosted by ImageShack.us

இந்த படத்தைப் பற்றி நிறைய பேர் இங்க எழுதிட்டாங்க. இருந்தாலும் நேத்துதான் நான் இந்தப் படத்தை இங்க அட்லாண்டாவில பார்த்தேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு, உள்ளே விட்டாங்க.

இரவு பத்து மணி காட்சி, பதினொரு மணிக்கு ஆரம்பிச்சு இரண்டு மணிக்கு முடிஞ்சுச்சு. நான் வீடு வந்து சேரும் பொழுது மூனு மணி, ஒத்த ஆளா ஒரு மணி நேர டிரைவ் வேற.

பெரிய க்யூ வேற, பத்து டாலர்கள் டிக்கெட். இது மாதிரி க்யூவில நின்னு படம் பார்த்தே ரொம்ப வருசங்கள் ஆயிடுச்சு. எனக்கு அதுவே ரொம்ப எதிர்பார்ப்ப கொடுத்துடுச்சு, தியோட்டர்குள்ள போறதுக்கு முன்னாடியே. தனியா வேற போயிருந்தேன். எனவே, குரூப்பா வந்தவங்களுக்கு என்ன பார்த்திருந்த ரொம்ப சீரியஸ் ஆசாமியா தெரிஞ்சுருப்பேன்.

இருந்தாலும் தனியா போறதில ஒரு பயனுண்டு நல்ல ரசிச்சுப் பார்க்கலாம், கவனம் சிதறாம.

படம் எனக்கு எந்த உறுத்தலையும் தரலைங்க உண்மைய சொல்லப் போன. ஆனா, கொஞ்சம் தேவையில்லாத ம்யூசிக் ஆங்காங்கே. அப்புறம் அந்த பாடல்கள் (இல்ல எனக்குத்தான் வயசாகிப்போச்சோ :-). இருந்தாலும் எனக்கு ஃபார்மிலா புரிஞ்சுச்சு. அது கூட பண்ணலேன்னா யாரு படம் பார்க்கிறது, தயாரிப்பாளரும், கமலுமா? அதினாலே அத ரெண்டத்தையும் பிடிக்காதவங்க தள்ளி வைச்சுட்டா, தமிழ் சினிமாவுக்கு இது ஒரு ட்ரென்ட் செட்டர்னு வைச்சுக்கலாம். கண்டிப்பாக.

நிறைய ஆங்கில த்ரில்லர் நாவல்களோ (படிச்சி) அல்லது படங்களோ பார்த்திருந்தவங்களுக்கு படம் நகர்ந்து செல்வதில் எந்த சுணக்கம் இருப்பதையும் உறுத்தலாக நினைந்திருக்க வாய்ப்பில்லையின்னு நினைக்கிறேன்.

எனக்கு அதுவும் அந்த கீரனூர் சீன்கள், திருச்சி டூ புதுகை சாலையில் ஒரு பிணம் தோண்டி எடுக்குமிடமாக இருக்கட்டும், நூ யொர்க் சீன்களாக இருக்கட்டும் எனக்குப் பழக்கமான இடங்கள் என்பதால் அப்படியே நேரடியாக கதையுடன் லகித்து ஒன்றி பார்க்க முடிந்தது.

இருந்தாலும் ஆங்கிலப் படம் பார்ப்பதைப் போன்ற ஒரு ஃபீலிங். இது போன்ற "தொடர் கொலைக்" கதையம்சங்கள் நமது தமிழ் சினிமாக்களிலும், உண்மைச் சம்பவங்களாகவும் கேள்விப் பட்டிருக்க அதிகமாக வாய்ப்பில்லை. இந்த கதை பின்புலம் மேலும் இது போன்ற கதையமைப்புடன் தமிழ் படங்கள் வெளிவர ஒரு முன்னோடியாக அமையலாம். ரெகுலர் ஃபார்மிலாவிலிருந்து உடைத்துக் கொண்டு வெளிவர.

ரெகுலரான பார்த்துச் சலித்த காதல் கண்ணாமூச்சி விளையாட்டுக்களிலிருந்து ஒரு மாறுதலுக்கென கொடுக்கப் பட்ட படம்தான்... கமலின் "வேட்டையாடு விளையாடு." நல்ல பொழுதுபோக்குக்கு ஒரு படம்.

பி.கு: கமலுக்கிருந்த மற்றொரு ஆசையும் இந்த படத்தின் மூலமாக நிறைவேற்றிக்கொண்டாரோ... வெள்ளைக்கார அலுவலகத்தில் அவர்களுடன் சேர்ந்து துப்புத்துலக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து அதிலும் வெற்றி பெற்றதாக எனக்குப் படுகிறது. :-)

Related Posts with Thumbnails