Wednesday, September 13, 2006

ஏன் தமிழ் வெட்கித் தலைகுனிகிறது *மங்கைக்கு* ஓர் பதில்?

ஒரு பின்னூட்டம் எழுதுனேங்க திருமதி. மங்கை அவர்களுக்கு இங்க (முதல்ல அதப் படிச்சிருங்க), அதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே, பெரிசாப்பூடுத்து அத வுடைச்சு இங்கன இன்னும் கொஞ்சம் சேர்த்து தனிப்பதிவா போட்டுட்டேன்.

இந்த மொழி மற்றும் நமது (தமிழக) மக்களின் எண்ணவோட்டம் அதிலும் வெளி மாநிலங்களிலும், நாடுகளிலும் வாழும் தமிழர்களின் விசயமாக ரொம்ப நாளாக ஒரு பதிவு போடணுமின்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப அதுக்கு சரியான நேரம் அப்படின்னு நினைச்சதாலே போட்டுட்டேன்.

இப்ப பின்னூட்ட கருத்து:

மங்கை மீண்டும் மறந்திருந்திராதீங்க நான் சொன்ன ignorant factorயையும் :-)

இங்கு யாரும் அலுவலகத்தில் முதலாளி கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நம் மொழி வளர பாடுபடுங்கள் என்று பேசிக் கொண்ட மாதிரி எனக்குத் தெரியவில்லையே, இந்த *மோகன் தாஸ்* அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது அந்த கான்செப்ட்.

இப்பொழுது, இது நமது மக்களின் ignorant factorஎ என்பதற்கு ஒரு சொந்த அனுபவம் கொண்டு பார்ப்போம். இதனையும் யாரவது ஒரு மன நலம் படித்தவர் இருந்தால் அலசி, காயப்போட்டு உனக்கு அந்த மொழி தெரியவில்லையென்றால் ஏன் அந்த மாநிலங்களுக்கு செல்கிறாய் என்று கேட்கட்டும்.

இப்ப மேட்டர், சில காலங்களுக்கு முன்பு நாங்கள் ஒரு நான்கு பேர் வட இந்திய சுற்றுலா போயிருந்தோம், ஐந்து மாநிலங்களுக்கு அதில் டில்லியும் அடக்கம்.

எங்களுக்கு கிடைத்த அனுபவம் மதராஸிக்கு ஹிந்தி தெரியாது என்பதே ஒரு ஏளன போக்குக்கு வழிவகுத்து விடுகிறது வடக்கே என்பதே. அது அப்படியாக இருக்க, தத்துபித்து ஆங்கிலத்தைக் கொண்டு பேருந்துகள் பிடிப்பதற்கும், தங்கும் இடங்கள், சுற்றிப் பார்க்க இப்படி அடிப்படை விசய ஞானத்திற்கு படித்தவர்கள் போல் காட்சி தரும் மக்களிடம் அணுகி ஆங்கிலத்தில் கேள்விகள் எழுப்பினாலும் விடை கிடைப்பது என்னவோ ஹிந்தியில்தான்.

நான் கூறுவது அங்கு வாழும் டில்லிவாலாக்களிடமிருந்தும், அல்லது அந்தந்த மாநில பிராந்திய மொழியிலேயே பதில் கிடைத்தது. அப்படியெனில் அவர்களுக்கெல்லாம் தன் மொழியின் மீது மரியாதையும், பிடிப்பும் இருக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும்.

அது அப்படியாக இருக்கையில் ஏன் நமது அறிவிலிகள் மட்டும் இப்படித் தன்னை வேறு யாராகவோ அடையாளப்படுத்திக் கொள்ள எத்தனிக்க வேண்டும்?

ஆனால், அந்த வட இந்தியர்கள் தமிழகம் வரும் பொழுது நம்மில் எத்துனை பேர் நமது மெழித்திறமை அவர்களிடம் சம்பாஷித்து உறுதி செய்துகொள்கிறோம்.

ஒரு சைனீஸ் ஒரு சக சைனருடன் பேசும் பொழுது அங்கீலத்தில் பீத்தியதுவுண்டா, அது போல் ஒரு கொரியர், ஜப்பானீஸ்...

சரி அந்த மனசீக மொழி, நடை, உடை, பாவனைகளை நாம் மிஸ் பண்ணுவதால் தானே மாதம் ஒரு முறையேனும் 'நம் மக்கள் வாழும்' பகுதிகளை நோக்கி சென்று வறுகிறோம்... உ.ம்; வெளி நாட்டாவர்களுக்கு 'லிட்டில் இந்தியா' அதிலும் பிறகு பிராந்தியம்தோரும்... இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

அடிப்படையில் நமக்கு ஏதோ கோளாறு இருக்கிறது. அதுதான் என்ன?
இது போன்று நான் எழுதி கொண்டே போகலாம். இது போலவே, எனக்கு கிடைத்த அனுபவம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் எப்படி New Comersகளிடம் நடந்து கொள்கிறார்கள் அல்லது தன்னை விச்சியாசப் படுத்திக் கொள்ளவேணும் என்று என்னவெலாம் செய்கிறார்கள் என்பதையும் கவனித்ததுண்டு. சரி விடுங்க தனிப் பதிவ போட்டு விடுவோம்.

**********************

அதோட அவங்களுக்கு சொன்னது முடிஞ்சுது. இப்ப இந்த சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில என்ன நடந்தது எனக்குன்னு சொல்லிடறேன். நான் ஒரு 4-5 தடவை அந்த பக்கமா போயி ஒத்த ஆளா சுத்தி திருஞ்சுருக்கேன். இதில சிங்கப்பூர்லதான் ரொம்ப கவனிக்கும் படியா
நம்மூர்(சிங்கப்பூர் வாழ்) மக்கள் புதிசா(இந்தியாவிலிருந்து) அங்க வேலைக்கு வாரவங்கள ட்ரீட் பண்ண முறை ரொம்ப ஆச்சர்யப் படுத்தியது.

அதிலும் பேருந்துகள், ரயில் பயணங்களின் போது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் தனக்கும் இந்த ஈன ஜாதி மக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஆண்கள் தலைகேசத்திற்கு சாயமும், காதில் கடுக்கணுமாக, பெண்கள் ஏதோ ஒரு "ஸ்டான்ட் அவுட்" இத்தியாதிகளுடனும் தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டு அங்கு வாழும் இதர சைனீஸ், மலேய மக்களுடன் பிரயாணிக்கிறார்கள்.

ஆனால் நம்மூர் பாவபட்டதுகள் மனத்தினுள் ஓடும் அத்தனை ரயில்களையும் ஒருங்கே காதில் ரீங்காரித்த வண்ணம் அமர இருக்கை இருந்தும் மற்ற மக்களின் அருகே சென்று அமர அஞ்சி நிற்பதைப் போல எனக்குப் பட்டது. இதற்கும் மங்கையின் பதிவில் "ஹரிஹரன்" கூறியதைப் போன்று...

....நான் இந்தப்பேட்டையின் பிஸ்தா ஒருவேளை புதியவனான நீ எனக்கு மாற்றாக வந்துவிடுவாயோ எனும் ஆழ்மன சர்வைவல் இன்ஸ்ட்ங்டும் ஒரு காரணி...

ஒரு மனம் சார்ந்த பிறழ்சியாக இருக்க அனேகமாக வாய்ப்புண்டு என நினைக்கிறேன்.

எது எப்படியோ வெளியூர் சென்று பிழைக்கும்(சரி வாழும்) இடத்தில் இருக்கும் மக்கள் ஒரு இனக்கத்தையும், நெருக்கத்தையும் கொடுக்கும் பாலமாக விளங்கும் இந்த மொழியினைக் கொண்டு ஆன்ம திருப்தி அந்த ஒரிரு நிமிடங்களில் கிடைப்பதை ஏன் மிஸ் பண்ண வேண்டும்? இந்த வெளி பகட்டிற்காக?

ஏற்கெனவே தேவைப்படும் மொழி கொண்டு எங்கு இருக்கிறோமோ அங்கு வாழ கற்றுக் கொண்ட பிறகும் எதனை நிறுபிப்பதற்கு நமது சொந்த மொழியை சக மொழி பேசுபவருடன் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அது போலவே இரட்டை மொழி கற்றுக் கொடுப்பதிலும் தயக்கமிருக்கிறது. வெளியில் பள்ளி செல்லும் குழந்தை அரிதிப் பெரும்பாண்மையினர்(மெஜாரிடி) என்ன மொழி பேசுகிறார்களோ அதனை பின் தொடர்வதில் ஒன்றும் சுணக்கம் இருக்க வாய்ப்பில்லை.

அது போன்ற சூழலில் ஏன் பெற்றோர்கள் தனது தாய் மொழியினை வீட்டீனுள் அமல் படுத்தக் கூடாது? குழந்தைகள் அம் மொழியினை(மைனாரிடி) இன்று பயன்படுத்த முன்வராவிடினும், அடிப்படை புரிதல்கள் இருப்பதால் நாளை அதன் அவசியம் புரிந்து முழுமை அடைய எத்தனித்தால் தாங்களும் அதற்கு ஒரு வழிகோணியதாகத்தானே பொருள்.

எனது நண்பர் ஒரு மலையாளி அவருடைய பெண் குழந்தை 5 மொழிகள் பேசுகிறது. அவர் தனது பெண்ணுடன் மலையாளம் மட்டுமே பேசுகிறார், அவரது மனைவி சொந்த ஊர் மகாரஸ்டிரம் என்பதால் ஹிந்தியும், மராத்தியும் பேசுவதுண்டு. கோவையில் பெண் படித்ததால் தமிழ் ஈசியாக நண்பர்களிடமிருந்து கிடைத்தது. பிறகு பள்ளியில் ஆங்கிலம். சரி, இது எதற்கு இங்கு என்றால், நமது மூளையில் Cognitive abilityக்கு ஒன்றும் பஞ்சமில்லை, குழந்தைப் பருவத்தில் மொழி கற்று கொடுக்கும் பட்சத்தில், அதுகள் ரொம்ப ஈசியாக பெற்றுக்கொள்கிறது என அறிக.

அதனால் பெற்றோர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், முடிந்த அளவிற்கு வீட்டீனுள் குழந்தையுடன் தாய் மொழி பேசுங்கள், நீங்கள் வெளி நாட்டிலோ, மாநிலத்திலோ வசிப்பவராயின். மொழியை விட ஒரு சிறந்த பரிசை நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல முடியாது.

இல்லையெனில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் குறிப்பிட்டது போல தமிழ் ஒரு Ancient dead language என்ற விளக்கம் உண்மையாகிவிடும்.

50 comments:

Sivabalan said...

தெகா

நல்லா விவரமாக எழுதியுள்ளீர்கள்..

நல்ல பதிவு

நன்றி

சிறில் அலெக்ஸ் said...

தெகா,
நீங்க சொல்றதுபோல வட இந்தியர்கள் ஹிந்தியில் பதிலளிப்பதற்கு மொழிப்பற்று காரணமா எனத் தெரியவில்லை. சாதாரண வட இந்தியர் அடுத்தவர் என்ன சொல்வார் நினைப்பார் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. கொஞ்சம் Rudeஆகவே நடந்துகொள்கிறார்கள். பேசும்போது மட்டுமல்ல பொது இடங்களில்கூட இதை பார்த்திருக்கிறேன். They disregard.

நமக்கு அடுத்தவங்க என்ன நினைப்பாங்கண்ற எண்ணம் கொஞ்சம் அதிகம். இது கூட ஒரு காரணி.

நாம ஹிந்திய எதிர்த்தவங்கண்ற மேலோட்டமான எண்ணம் அவர்க்ள் மனத்துல இருக்கலாமில்லையா?

Machi said...

// முடிந்த அளவிற்கு வீட்டீனுள் குழந்தையுடன் தாய் மொழி பேசுங்கள், நீங்கள் வெளி நாட்டிலோ, மாநிலத்திலோ வசிப்பவராயின். மொழியை விட ஒரு சிறந்த பரிசை நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல முடியாது.
//

இது புரிய மாட்டிக்குதே நம்ம மக்களுக்கு.

நானும் இதைப்பற்றி எழுதனும் என்று ரொம்ப நாளா நினைப்பதுண்டு.

VSK said...

முழுதுமாக உடன்படுகிறேன் உங்கள் கருத்துகளுடன்.

பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒன்று உங்களிடம் சொல்லியாகவேண்டும்

இன்றைய நியூயார்க் டைம்ஸ் 9/13 கிடைத்தால் வாங்கிப் பாருங்கள்!

Liocichla Bugunorum என்ற பலவண்ணப் புதிய பறவை இனம் ஒன்றை இந்தியாவில் கண்டுபிடித்திருக்கார்களாம்!

படத்துடன் போட்டிருக்கிறார்கள்.

வேண்டுமெனின், மேல்விவரம் தருவேன்!

நன்றி.

Thekkikattan|தெகா said...

//இன்றைய நியூயார்க் டைம்ஸ் 9/13 கிடைத்தால் வாங்கிப் பாருங்கள்!

Liocichla Bugunorum என்ற பலவண்ணப் புதிய பறவை இனம் ஒன்றை இந்தியாவில் கண்டுபிடித்திருக்கார்களாம்! //

எஸ்.கே ஐயா, அந்த செய்தியை படித்தவுடன் இந்த நேசியின் நினைவு உங்கள் மனத்தில் ஊசலடியதை நினைத்தவுடன் எனக்கு மகிழ்வு பொங்கியது. உண்மையாகவே.

இங்கும் ஒருவர் அதனை பொருட்டு ஒரு பதிவு இட்டிருந்தார். படித்தேன்.

தாங்களின் "நியூயார்க் டைம்ஸ்" சுட்டியமைக்கு நன்றி தேடிப்பார்க்கிறேன். நானும் அந்த பறவையை மீண்டும் யார் கண்டெடுத்திருப்பர் என்பதனை அறிந்து கொள்ள முற்பட்டிருக்கிறேன். ஏனெனில் நமது நிறைய நண்பர்கள் அந்த பகுதிகளில் இன்னமும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் யாரவது ஒருவராகத்தான் இருக்கவேண்டும் மென்று கருதுகிறேன்.

ஒரு கொசுருச் செய்தி நாங்கள் ஒரு முறை டாப்சிலிப் ஏரியாவில் ஒரு துணை-வகை Flycatcher பறவையை Re-discover செய்தோம்மென்பதே அது :-))

மங்கை said...

தனி பதிவெல்லாம் போட்tu கலக்கிடீங்க

எம்பேரெல்லாம் இப்பிடி வருமுன்னு நான் கணவுல கூட நினைக்கவில்லை

" இந்த பதிவ எழுத என்னை தொடர்ந்து உக்குவித்த என் நன்பருக்கு கோடி கோடி நன்றிகள்"

///ஏற்கெனவே தேவைப்படும் மொழி கொண்டு எங்கு இருக்கிறோமோ அங்கு வாழ கற்றுக் கொண்ட பிறகும் எதனை நிறுபிப்பதற்கு நமது சொந்த மொழியை சக மொழி பேசுபவருடன் தவிர்க்க வேண்டும்//

இது தாங்க நானும் கேக்குறேன்.. அப்பிடி என்னங்க தமிழ் மேல இவங்களுக்கு கோவம்..

இதுல இன்னொறு கொடுமை..நம்ம பேசற தமிழ வேற இவங்க கின்டல் பன்றாங்க..
'Aunty your டேமில் is bit different"..னு.. ஆமான்டியம்மா நாங்க different தான்னு நினச்சுக்குவேன்

வடக்கு வாசல் னு ஒரு பத்திரிகை,, தில்லி தமிழர்கள் நடத்துறாங்க.. அதுல ஒருத்தர் அவருடைய 30 கால தில்லி வாழ்க்கைய பத்தி எழுதீட்டு வரார்.. கையில ஆனந்த விகடன் , குமுதம் வச்சுட்டு.. ஹிந்தில பதில் சொல்ற ஜந்துக்கள் தான் நிறைய பேர் இருக்காங்கனு அவர் சொல்வார்..

// இல்லையெனில் ஆக்ஸ்ஃபோர்டு ஆகாரதியில் குறிப்பிட்டது போல தமிழ் ஒரு Ancient dead language என்ற விளக்கம் உண்மையாகிவிடும்//

இதற்கு இவர்கள் கவலை படமாட்டார்கள் தெகி..

அருமை நன்றியுடன் வாழ்த்துக்கள்

மங்கை

VSK said...

It was first sighted in May in the remote Eaglenest Wildlife Sanctuaary in Arunachal Pradesh,by Ramana Athreya, an astronomer as well as ameteur ornithologist. He named it after the Bugun Tribe, which lives in the area. The bird has a blck cap, a bright yellow patch around the eyes and yellow crimson black and white patches on the wings.
Though it was discovered in May, it was kept a secret until the bird was confirmed as a new species.
Mr. Athreya said he first spotted the bird in 1995 but only this year he had a sufficiently good look that we could move into the matter.
He caught two birds but released them after making detailed notes, and taking photographs and keeping feathers that had worked loose in his net and recorded the songs too.

--per NY Times 9/13/06

மா.கலை அரசன் said...

நண்பரே, மிக மிக அருமையான, அவசியமான பதிவு.
நம்மவரிகள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

Thekkikattan|தெகா said...

சிவா,

வாங்க, வாங்க ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவின் மூலமாக சந்திக்கிறோம். ரொம்ப மகிழ்சி. என் சொந்த வாழ்கைக்கும் நான் சொல்லியிருக்கிற விசயத்துக்கும் கொஞ்சம் முரண்படுற்று இருப்பது போலத் தோன்றினாலும்.

காலப்போக்கில் எல்லாம் சரி செய்து விடுவோம். புரியுமின்னு நினைக்கிறேன் ;-)))

துளசி கோபால் said...

நல்ல பதிவு தெ.கா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தெகா!
நீங்கள் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்! அவர்களோ! "நித்திரை போல் நடிப்பவர்கள்" எழுப்பமுடியுமா???
யோகன் பாரிஸ்

Thekkikattan|தெகா said...

நன்றி, சதயம்!!!

கோவி.கண்ணன் [GK] said...

தெக...!

மிக நல்ல கட்டுரை...!

நம்மவர் வெளிநடுகளுக்கு சென்று வாழும் போது, சோறு போடும் மண்ணுக்கு விசுவாசம் செய்கிறோம் என்ற பெயரில் கொச்சை படுத்த துனிவது தாய் மொழியைத் தான்.

Thekkikattan|தெகா said...

சிறில்,

//சாதாரண வட இந்தியர் அடுத்தவர் என்ன சொல்வார் நினைப்பார் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. கொஞ்சம் Rudeஆகவே நடந்துகொள்கிறார்கள். பேசும்போது மட்டுமல்ல பொது இடங்களில்கூட இதை பார்த்திருக்கிறேன். They disregard.//

நீங்கள் கூறுவதிலும் உண்மை உள்ளது. நான் கூட லோன்லி ப்ளானட் புத்தகத்தில் அதனைப்பற்றி படித்த ஞாபகம் இருக்கிறது, தென்னிந்தியவிற்கும், வட இந்தியாவிற்கும் உள்ள மக்களின் அணுகு முறையைப் பற்றி கூறும் பொழுது பெண்களுக்கு வட இந்தியாவைப் பற்றி வார்னிங் கொடுத்திருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் என்னுடன் வந்த ஒருவரையே கையைபிடித்து இழுத்து வம்பு செய்தார்கள் அவர் வெள்ளைப் பெண் என்பதால் :-(

ரவி said...

அருமையான பதிவு தெ.கா.

Thekkikattan|தெகா said...

குறும்பன்,

//இது புரிய மாட்டிக்குதே நம்ம மக்களுக்கு.

நானும் இதைப்பற்றி எழுதனும் என்று ரொம்ப நாளா நினைப்பதுண்டு.//

புரியாம எங்க போகுது. நிறைய பேருக்கு புரியாமயே காலம் கடந்து போகுது. நிறைய பேருக்கு புரிஞ்சுருக்கு ஆனா கால, நேரம் ஒத்துழைப்பு கொடுக்கிறது கிடையாது (என்னைப் போல ;-)) மெஜாரிடி மக்களுக்கு எது நாகரீகம், எது வெத்து பந்தா அப்படிங்கிற கான்செப்ட் பிடி படுறதுக்கு முன்னாடியே பொழுது பொக்குன்னு விடிஞ்சு மண்டையையும் போட்டு வைச்சுட்டுப் போயிடுறோம்.

சரி விடுங்க, நீங்களும் எழுதுங்க உங்க பாணியிலே, செய்தி போய்ச் சேரணும், சேரும்.

நன்றி, தாங்களின் முதல் வருகைக்கு!

ஞானவெட்டியான் said...

"உப்புக்கல்லை வைரமென்று சொன்னால்
நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை தோழா; ரொம்ப நாளா"

-பாட்டுக்கோட்டையார்

Unknown said...

//மொழியை விட ஒரு சிறந்த பரிசை நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல முடியாது.//

நூற்றுக்கு நூறு உண்மை!!!!!!

Thekkikattan|தெகா said...

மங்கை,

//தனி பதிவெல்லாம் போட்tu கலக்கிடீங்க//

இல்லை. எனக்கு ரொம்ப நாட்களகவே இப்படி ஒரு எண்ணம் இருந்தது உண்மை. அதிலும் அந்த வட இந்தியா சுற்றுலா சென்று வந்ததிற்கு பிறகு.

சர்வைவல் எனும் பொருட்டு, அதாவது யாரவது நாம் தமிழில் பேசுகிறொம் அவங்க ஊரில் இருந்துகொண்டு என்று கண்டுபிடித்து தினமும் பிரட்சினை பண்ணுகிறார்கள் என்றால், அதற்கென பார்த்து நடந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை.

உயிரைவிட மொழி பெரிதென்று சொல்ல நாம் என்ன சினிமா ஆட்களா ;-)

நிறைய பேருக்கு இங்கு புரிதல் சார்ந்த இடைவெளி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. மற்றபடி இதனைப் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை.

வஜ்ரா said...

//
சாதாரண வட இந்தியர் அடுத்தவர் என்ன சொல்வார் நினைப்பார் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. கொஞ்சம் Rudeஆகவே நடந்துகொள்கிறார்கள். பேசும்போது மட்டுமல்ல பொது இடங்களில்கூட இதை பார்த்திருக்கிறேன். They disregard.
//

very generalized statement...! எத்தனை வட இந்தியர் உங்களிடம் அப்படி நடந்துகொண்டுள்ளார்கள்? எண்ணிவிடலாமா?

//
நாம ஹிந்திய எதிர்த்தவங்கண்ற மேலோட்டமான எண்ணம் அவர்க்ள் மனத்துல இருக்கலாமில்லையா?
//

ஆம்..அது ஒரு முக்கியமான காரணம்...மேலும் பள்ளிகளிலும், பாடங்களிலும் reinforce செய்யப்படும் north south divide...!!

geography யில் கங்கா, யமுனா, நர்மதா, தப்தி நதிகளை mark செய்தால் மேப் டிராயிங்கில் 10 க்கு 6 வாங்கிவிடலாம்...!

history யில் முகலாய மன்னர்களை கவர் செய்யும்அளவிற்குக் கூட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள்...!

மங்கை said...

//சர்வைவல் எனும் பொருட்டு, அதாவது யாரவது நாம் தமிழில் பேசுகிறொம் அவங்க ஊரில் இருந்துகொண்டு என்று கண்டுபிடித்து தினமும் பிரட்சினை பண்ணுகிறார்கள் என்றால், அதற்கென பார்த்து நடந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை//

தெகா.. ஒரு இடத்துல சந்திக்கிறோம் நமக்கு ஹிந்தி அப்ப கூடதெரியாதுன்னு தெரிஞ்சிறுந்தும் அவசியம் இல்லாம ஹிந்தி பேசினா வருத்தமா இருக்காதா.. மத்தபடி அலுவலக நேரத்திலயோ, ஒரு வட இந்தியர் இருக்கப்பவோ தமிழ் பேசனும்னு நான் சொல்லலை...

தெகா..என் பதிவுல ஏதாவது தப்பா மாதிரி எழுதி இருக்கனா...

செல்வநாயகி said...

நல்ல பதிவு தெக்கிக்காட்டான்.

ஞானவெட்டியான் ஐயா,

பட்டுக்கோட்டையாரின் அந்தப் பாடலை இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி.

Thekkikattan|தெகா said...

எஸ்.கே ஐயா,

மீண்டும் New York Times Articleலை இங்கு எனக்காக கொணர்ந்தமைக்கு நன்றி.

Thekkikattan|தெகா said...

கலை அரசன்,

//நண்பரே, மிக மிக அருமையான, அவசியமான பதிவு.
நம்மவரிகள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.//

புரிந்து கொள்வார்கள். நண்பர் யோகன்-பாரிஸ், ஞான வெட்டியான் அய்யா கூறியவற்றை ஒரு முறை படித்துப் பாருங்கள். என்ன நடக்கிறது என்பது புரியும்.

ஆனால், இந்த பதிவும், மங்கை எழுதிய பதிவும் ஹைஜாக் பண்ணப் பட்டது போல எனக்குப் படுகிறது.

இங்கு யாரும் பிற மொழிகள் பயின்று வாழ்வில் வெற்றி வாகை சூட வேண்டாமென்று கூறவில்லை.

பலத்த அடிப்படை புரிதல் பிளவு ஏற்பட்டிருக்கிறது. சொல்ல வந்த விசயத்தை சில மக்கள் தனது சொந்த சூழ்நிலையுடன் ஒப்பிட்டு மன் உபத்திரத்திற்கு ஆட்பட்டதாக பார்க்கிறேன்.

என்ன செய்வது, வாழ்வும் நமக்கு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுத்துவிடுவது கிடையாதே. தவனை முறையில்தான் கிடைக்க வேண்டியது கிடைக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

சும்மா சும்மா தமிழ்மணத்தில் இந்த பதிவை வர வெச்சி என் வாயைக் கிளறாதீயும். சொல்லிட்டேன்.

;-)

Thekkikattan|தெகா said...

துள்சிங்க, சொல்ல வந்த விசயத்தை கப்புன்னு பிடிச்சிருப்பீங்கன்னு நம்புறேன் :-)

Thekkikattan|தெகா said...

//நீங்கள் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்! அவர்களோ! "நித்திரை போல் நடிப்பவர்கள்" எழுப்பமுடியுமா???//

அதே யோகன். அப்படித்தான் தெரிகிறது. நாம் சொல்ல வருவது ஒன்று எடுத்துக் கொள்ளப்பட்டது ஒன்று.

நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

//நாம ஹிந்திய எதிர்த்தவங்கண்ற மேலோட்டமான எண்ணம் அவர்க்ள் மனத்துல இருக்கலாமில்லையா?
//

இது பெரும்பாலான வட இந்தியர்களிடம் இருக்கும் மனப்பாங்கு என்றே நினைக்கிறேன்.
இங்கேகூட தென்னிந்தியர் ஒருவரை (கவனிக்க தமிழரை மட்டுமன்று)ப் பற்றி இன்னொருவரிடம் சொல்லும் வட இந்திய மாணவன் "அவர்கள் தேசிய மொழி வெறுப்பாளர்கள்" என்ற நிலையில் அறிமுகப்படுத்துவார். இந்தி தெரிந்திருந்தும் வீம்புக்காக தங்களுடன் ஆங்கிலத்தில் மட்டும் உரையாடுவதாக வேறு ஆட்களிடம் புலம்புவார்கள்.
ஆனால் நான் பார்த்தளவில் தென்னிந்தியர்கள் பலர் இந்தியிலேயே அவர்களோடு கதைக்கிறார்கள்.

இதுமட்டில் ஈழத்தவர்களோடும் அவர்களுக்குப் பிரச்சினைதான்.
ஏன் நீங்கள் சிங்களவரோடு சிங்களத்தில் கதைப்பதில்லையென்று தொந்தரவு. நான் விளக்க முற்படுவதில்லை. இருதரப்புக்கும் மற்றவரின் மொழி தெரியாது என்பதை மட்டும் ஒவ்வொரு முறையும் சொல்லிவிடுவேன்.
இலங்கையில் சிங்களம் தேசிய மொழி என்று யாரோ அவர்களுக்குப் பதியவைத்துவிட்டார்கள் போலுள்ளது.

Thekkikattan|தெகா said...

//நம்மவர் வெளிநடுகளுக்கு சென்று வாழும் போது, சோறு போடும் மண்ணுக்கு விசுவாசம் செய்கிறோம் என்ற பெயரில் கொச்சை படுத்த துனிவது தாய் மொழியைத் தான்.//

நன்றி கோவியாரே!

தாங்கள் சிங்கையில்தானே இருக்கிறீர்கள். சிங்கையைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே :-)

Thekkikattan|தெகா said...

ரவி, மிக்க நன்றி ஊக்கத்திற்கு!

Thekkikattan|தெகா said...

//"உப்புக்கல்லை வைரமென்று சொன்னால்
நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை தோழா; ரொம்ப நாளா"//

அய்யா, அந்த பட்டுக்கோட்டையாரின் பாடலை இங்கு போட்டு இந்த கட்டுரைக்கு மேலும் மெருகூட்டியதற்கு ரொம்ப நன்றி.

அன்புடன்,

தெகா.

Hariharan # 03985177737685368452 said...

அன்பின் தெகா,

நான் பார்த்த அளவில் கோலாலம்பூரில் ஐசி என்ற நிரந்தரக்குடியுரிமை பெற்ற தமிழர்களின் அணுகுமுறையும் தமிழகத்துக்குத் திரும்பிவிடக்கூடிய வேலைசார் குடியுரிமை மட்டும் பெற்ற தமிழர்களிடம் பேசி வழி கேட்டறியும் போதே இந்த சர்வைவல் பாக்டர் வெளிவந்து தென்படுகிறது.

மேலும் பல டாக்ஸி ஓட்டுனர்களாக இருக்கும் மலேஷிய நிரந்தரத் தமிழர்கள் 40/50வயது ஆட்கள் கூட தமிழகம் ஒருமுறை கூட வந்ததில்லை என்றனர். டாக்ஸிக்காரர்களாவது தமிழ் பேசுகின்றனர்.

மோனோரெயிலில் திருநீறணிந்து அலுவலகம் செல்லும் தமிழர் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் பேசினார்.

முன்பொருமுறை London heathrew விமான நிலையத்தில் காத்திருந்தபோது சென்னை செல்லும் BA விமான கேட்டில் கூட சென்னைக்காரர் ஆங்கிலத்தில்தான் பேசினார்.

தமிழில் பேச சில பல தமிழருக்கு ஏன் வெட்கம்? புரியவில்லை?!!
An attitudu thatis nothing but Remnants of Colonial mentality என்பதைத் தவிர!

அன்புடன்,

ஹரிஹரன்

ஆவி அம்மணி said...

நல்ல பதிவு!

aaradhana said...

தெகா...
ஒரு அருமையான அழகான பதிப்பு... அழகான உண்மை...
மொழியை விட ஒரு சிறந்த பரிசை நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல முடியாது/////எவ்வளவு அழகாக சொல்லியுள்ளீர்கள்//
நன்றி.

Thekkikattan|தெகா said...

//மொழியை விட ஒரு சிறந்த பரிசை நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல முடியாது.//
நூற்றுக்கு நூறு உண்மை!!!!!!//

இது வந்துங்க அருட்பொருங்கோ, நமக்குன்னு ஒரு குடும்பம் வந்து, பிறகு நமக்குன்னு ஒரு பிள்ளையும் பொறந்து அதனை வைச்சிக்கிட்டு வெளி நாடு/மாநிலமின்னு வசிக்கும் பொழுது இந்த புரட்சியெல்லாம் வயற்றில் எது போன்ற உணர்வுகளை தருமின்னு கொஞ்சம் "சூடு" வாங்கிட்டதிலருந்து கிடைச்சத பட்டும் படாமலும் சொல்ல வந்து அந்த இரண்டு வரிகளா வந்ததுதான்.

எல்லாம் காலத்தின் கோலங்கலன்றி வேறன்னவே!!!

மங்கை said...

//இது வந்துங்க அருட்பொருங்கோ, நமக்குன்னு ஒரு குடும்பம் வந்து, பிறகு நமக்குன்னு ஒரு பிள்ளையும் பொறந்து அதனை வைச்சிக்கிட்டு வெளி நாடு/மாநிலமின்னு வசிக்கும் பொழுது இந்த புரட்சியெல்லாம் வயற்றில் எது போன்ற உணர்வுகளை தருமின்னு கொஞ்சம் "சூடு" வாங்கிட்டதிலருந்து கிடைச்சத பட்டும் படாமலும் சொல்ல வந்து அந்த இரண்டு வரிகளா வந்ததுதான்//

தெகா நான் சொல்ல நினச்சத நீங்க அழகா சொல்லியிருகீங்க...

நீங்க சொன்னீங்க 'ignorant' factor மறந்தராதீங்கன்னு...அதனால தான்,,
பேசாம இருக்கேன்.. ஹ்ம்ம்ம்

(இருந்தாலும் அறியாமை இந்த அளவுக்கு இருக்காகூடாது தெகா.. நாம சொன்ன வந்ததென்ன இவங்க புரிஞ்சுட்டதென்ன, நான் எத சொல்றேன்னு புரிஞ்சிறுக்கும்னு நினைக்கிறேன்)

மங்கை

Thekkikattan|தெகா said...

//நண்பரே, மிக மிக அருமையான, அவசியமான பதிவு.
நம்மவரிகள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.//

கலை அரசன், முதல் முறையாக என் பக்கம் வந்து போனதிற்கும், தாங்களின் பின்னூக்கிக்கும் நன்றி.

தருமி said...

இந்த பதிவும், மங்கை எழுதிய பதிவும் ஹைஜாக் பண்ணப் பட்டது போல எனக்குப் படுகிறது.//
உண்மைதான். நம் ஆங்கில மோகத்திற்குக் காரணம் என்ன என்பதுவும், ஏன் தமிழோடு நம்மை நாமே பொருத்திக்கொள்ள - நாம் வாழ்வது எங்கேயாயினும் - தயங்குகிறோம் என்பதுவே நமக்குத் தெரிய வேண்டிய பதில்கள் என நினைக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

இ.கொ,

//சும்மா சும்மா தமிழ்மணத்தில் இந்த பதிவை வர வெச்சி என் வாயைக் கிளறாதீயும். சொல்லிட்டேன். //

எனக்கு ஒரு வும்மை தெரியாம இந்த இடத்தவிட்டு போகமட்டேன் சாமீமீமீ :-))) ஏன், ஏன், ஏன், ஏன்....

Thekkikattan|தெகா said...

வஜ்ரா,

//ஆம்..அது ஒரு முக்கியமான காரணம்...மேலும் பள்ளிகளிலும், பாடங்களிலும் reinforce செய்யப்படும் north south divide...!!//

அப்படியா, எந்த பள்ளிகளில் அப்படி சொல்லித்தாரங்க, வஜ்ரா? வட இந்தியாவில அல்லது தென்னிந்தியாவிலா??

//history யில் முகலாய மன்னர்களை கவர் செய்யும்அளவிற்குக் கூட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள்...!//

நான் படிச்ச அரசுப் பள்ளியில கலர் அடிச்ச ஞாபகம் இருக்கே... நீங்க எந்த பள்ளியில் படிச்சீங்க...??

Thekkikattan|தெகா said...

மங்கை,

//தெகா.. ஒரு இடத்துல சந்திக்கிறோம் நமக்கு ஹிந்தி அப்ப கூடதெரியாதுன்னு தெரிஞ்சிறுந்தும் அவசியம் இல்லாம ஹிந்தி பேசினா வருத்தமா இருக்காதா.. மத்தபடி அலுவலக நேரத்திலயோ, ஒரு வட இந்தியர் இருக்கப்பவோ தமிழ் பேசனும்னு நான் சொல்லலை...//

டீச்சர்களில் இரு விதம், முதல் வகை எதிரில் இருக்கும் மாணவனுக்கு எது போன்று சொல்லிக் கொடுத்தால் அவனுக்கு எளிமையாக சொல்ல வந்த விசயம் சென்றடையும், போக வேண்டிய இலக்கிற்கு போய்ச் சேருவான் என்று அறிந்து தெரிந்து சொல்லிக்கொடுக்கும் வகை. அதற்கு நிறைய உழைப்புத் தேவை. படிக்கணும், மனுச மனச ஆராயணும், பிறகு பாடம் எடுக்க வேண்டி வரும்.

இரண்டாவது வகை, தான் பெற்ற இன்பம் பெருக இவ் வையாகமென்று தனக்கு கிடைச்ச செற்ப அனுபவத்தக் கொண்டு, தன்னைப் போலவே பிறரும் இருக்கிறார்கள் என்று தான் தோன்றித் தனமாக நினைத்துக் கொண்டு அதே அளவு எதிர்பார்ப்புடன் ஏனையோரை அணுகுவது.

அதாவது கடினமான முறையில் பாடம் எடுத்தல், தத்திபித்தியாவது கற்றுக் கொள்பவர் கற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும் என்ற கண்மூடித்தனமான அணுகுமுறை. இதற்கு அதிக உழைப்புத் தேவையில்லை,

ஏனெனில் தனக்கு என்ன தெரியுமோ அதனைத்தானே அடுத்தவர்களின் மேல் நாம் புகுத்துகிறோம். எனவே இது போன்ற வாத்தியார்களிடம் மாட்டாமல் வாழ்கையில் வாழ்ந்து வந்து விட்டாலே...We can consider ourselves, we have been gracefully aging :-)))

//தெகா..என் பதிவுல ஏதாவது தப்பா மாதிரி எழுதி இருக்கனா...//

மங்கை, விடுங்க நாம புரிஞ்சுகிட்டதா இங்க முன் வைக்கிறோம், நம்மை போலவே சில பேர் சிந்திக்கலாம், சில பேர் வேறமாதிரி அதே விசயத்தைப் பார்க்கலாம். நாம பாட்டுக்கு நம்ம வழியிலே போயிகிட்டே இருப்போம்.

Like minded people will always be around, so why worry... :-)

மங்கை said...

/// //தெகா..என் பதிவுல ஏதாவது தப்பா மாதிரி எழுதி இருக்கனா...//

மங்கை, விடுங்க நாம புரிஞ்சுகிட்டதா இங்க முன் வைக்கிறோம், நம்மை போலவே சில பேர் சிந்திக்கலாம், சில பேர் வேறமாதிரி அதே விசயத்தைப் பார்க்கலாம். நாம பாட்டுக்கு நம்ம வழியிலே போயிகிட்டே இருப்போம்.

Like minded people will always be around, so why worry... //

ரொம்ப நன்றி தெகா...

மங்கை

Thekkikattan|தெகா said...

வசந்தன்,

//இருதரப்புக்கும் மற்றவரின் மொழி தெரியாது என்பதை மட்டும் ஒவ்வொரு முறையும் சொல்லிவிடுவேன்.//

:-)

தாங்களின் வருகைக்கும், அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி.

ஒரு நாள் நாம் எல்லோரும் உலகம் பெரிசு அதில் மொழி "(பாயோ-மாதிரி) மொழி டைவர்சிடி" (மன்னிக்கவும் -திரு. இராம.கி அவர்களே :-) என்பதுவும் இயற்கையின் ஒரு அங்கம் என்பதனை உணர்வோம். அதுவரையிலும் போரட்டம் தொடரத்தான் செய்யும்.

Thekkikattan|தெகா said...

ஹரி,

நான் மலேசியாவில் இருந்தபொழுது கே.எல் ஒன்றும் பிரட்சினையில்லை. மாலை நேரங்களில் ஒரு பெட்டிக்கடையில் நின்று அந்த கடை ஆளுடன் கடலை போடுவதுண்டு.

ஆனால் அதனை தாண்டி மலேக்கா பேன்ற இடங்களுக்கு செல்லும் பொழுதுதான், வித்தியாசம் உணர முடிந்தது. நீங்கள் கூறியபடியே டாக்ஸி ஒட்டுநர்கள் மட்டுமே தமிழில் உரையாட கேட்க முடிந்தது.

இருப்பினும் பரவாயில்லை. நல்ல அனுபவம்.

மீண்டும் நன்றி, தாங்கள் அனுபவங்களை தவறாமல் வந்து பகிர்ந்து கொண்டமைக்கு.

//An attitudu thatis nothing but Remnants of Colonial mentality //

:-)) that includes tough vocabularies too even in spoken english... have you noticed that?? யாரவது அப்படி ஆரம்பித்தால் முதலில் எனது சிந்தனையில் வருவது... எஸ்கேப் ;-)))

Thekkikattan|தெகா said...

பெரிய ஆவி,

ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கிற ஆவியா இருக்கியலே... எல்லா வீட்டுக்கும் போயி மொய் போட்டு, உங்க வீட்டுப் பக்கம் பார்வையை திருப்ப வைச்சு... புத்திசாலிப் பேயீ...

சரி, சரி, கொல்லிவாய் பிசாசப் பத்தி ஒரு 'அழகான பிசாசே' கதை சொல்லுங்க :-)))

Thekkikattan|தெகா said...

நாயகி,

என் சார்பாக ஞானவெட்டியான் அய்யா அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, :-)

ரிஷி (கடைசி பக்கம்) said...

ஹாய்!

நானும் சிங்கையில்தான் இருக்கிறேன்!

நீங்கள் சொல்வது மிகச்சரியே!

Anonymous said...

வட இந்தியாவில் ஹிந்தியில் பேசாவிட்டால் சொல்வதையேதான் அமெரிக்காவிலும் வட இந்தியர்கள் சொல்கிரார்கள். இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியாதா என்று கேட்கிறார்கள்.

Anonymous said...

வட இந்தியாவில் ஹிந்தியில் பேசாவிட்டால் சொல்வதையேதான் அமெரிக்காவிலும் வட இந்தியர்கள் சொல்கிரார்கள். இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியாதா என்று கேட்கிறார்கள்.

SP.VR. SUBBIAH said...

// இல்லையெனில் ஆக்ஸ்ஃபோர்டு ஆகாரதியில் குறிப்பிட்டது போல தமிழ் ஒரு Ancient dead language என்ற விளக்கம் உண்மையாகிவிடும்.//

உண்மைதான்
நிலைமை அப்படித்தான் இருக்கிறது

Related Posts with Thumbnails