Thursday, April 27, 2006

என்ன வெயிலு சுட்டெரிக்கிறதா...!

நேற்றைய வெப்பம் சராசரியாக தமிழகம் முழுதும் 104 டிகிரியாம். அப்படி அனல் தெரிக்கும் வெயிலில் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்வது என்பது கொடுமைதான் என்னை பொருத்தமட்டில். போதக்குறைக்கு இப்பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் முதலீட்டில் ஆரம்பிக்கப் படும் கம்பெனிகளின் கட்டடங்கள் (ஏன் புதிதாக கட்டப்படும் எல்லா பெரிய நிறுவனங்களின் கட்டங்களும்) அறுதி பெரும்பான்மையானது கண்ணாடி மாளிகைகளாக விசுவரூபம் மெடுத்து எழுந்து நிற்கின்றன.

அது போன்ற கட்டடங்களுக்கும் இந்த வெப்ப புழுங்கல் உள்ள சென்னைக்கும் ஏதாதவது தொடர்பு இருக்குமோ. இருக்கலாம்! கொஞ்சம் இனைத்துப் பாருங்களேன் கண்ணாடி - சூரிய ஒளி - வெப்பம் - கார்பன் புகை. அட அந்த குறிப்பிட்ட வட்டரத்திற்காகவது அதனுடைய பாதிப்பு தெரிகிறாதா இல்லையா?

பார்க்க அழகாத்தான் இருக்கிறது, ஆனால் எந்த விளையில். கொஞ்ச நாட்களவே எனக்கு அந்த எண்ணம் வந்து போனது, அது இங்கெ அப்படியே...

சரி, இந்த உலகலவிய வெப்ப ருத்ர தாண்டவம் எதனால் என்பதை தெரிந்து கொள்ள பிரியப்பட்டால் கீழே உள்ள சுட்டியை சுடுக்கி...நாங்கள் விவாதித்த இந்த "குளோபல் வார்மிங்" படித்து பாருங்கள்...நன்கு புரிந்து கொள்ளலாம். தாங்கள் சிறுவ சிறுமிகளிடம் பகிர்ந்து கொள்ள ரொம்ப உதவும்.

http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_114584455467439948.html

இரண்டாவது சுட்டி முதல் சுட்டியின் தொடர்ச்சி...நீங்கள் அந்த சுட்டியை இந்த முதல் சுட்டியின் பின்னூட்டத்திற்க்கு கீழே லிங்கில் கணலாம்...இல்லையெனில் இதோ இங்கு...

http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_25.html

Tuesday, April 25, 2006

*ஐஸ்வர்யா ராய்-சுஷ்மிதா சென்-உலகமயமாக்கலின் தந்திரம்!*

இந்த பதிவு முழுக்க முழுக்க தர்க்கத்திற்காக பதிவிக்கப் படுகிறது நண்பர்களே, அதனால் படித்து விட்டு நீங்கள் எல்லோரும் என் சிந்தனையுடன் எப்படி முரண்படுகிறீர்கள் அல்லது ஒத்துப் போகிறீர்கள் என்பதனை காண எனக்கு ஆவல்.

நான் சொல்லப் போகும் விசயம் என்னவென்றால் நமது நாடு என்று தாரளமயமாக்கப்பட்டு அன்னிய நாடுகளின் முதலீடும் அவர்களின் கடைவிரிப்பும் ஜோராக அமலுக்கு வந்ததோ அன்றைக்கே இந்த "வியபார காந்தங்கள்" இந்தியாவின் மக்கட் தொகையையும், பொருளதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு (இது வெள்ளாக் கார துரைகளுக்கு கைவந்த கலை, இல்லையா) ஒரு மார்க்கெட்டிங் உத்தியாக நம்மளை கையக படுத்த தொடர்ந்து இரண்டு முறை உலக அழகிகள் பட்டம் நம் நாட்டு பக்கம் திருப்பி விடப்பட்டது என்று நான் கருதுகிறேன்.

அதனால் நான் ஐசும், சென்னும் நல்ல அறிவு சார்ந்த அழகிகள் அல்ல என்று மறுக்கவில்லை, இவர்களுக்கு முன்னரும் நம் நாட்டிலிருந்து நல்ல மேற்கூறிய தகுதிகளுடன் பெண்கள் சென்றிருக்க வேண்டுமல்லவா! அப்படியெனில் அப்பொழுது இல்லாத கிரக்கம் இந்தியர்களின்மேல் ஏன் இப் பொழுது? ஏதோ இந்த படத்தில் கொஞ்சம் கோளாறு உள்ளதாக இல்லை! நன்கு சிந்தியுங்கள். அவ்வாறு உலக அழகி தேர்ந்து எடுக்கும் நபர்கள் வேற்று கிரகங்களிலிருந்து இரங்கி வந்து தேர்ந்து எடுப்பது கிடையாது, இல்லையா, எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான்.

உங்களுக்கு தெரியுமா அமெரிக்காவில் உள்ள மெக்டொனல்ஸ் என்கிற விரைவு உணவகம், ஒரு ஊரில் ஒரு கிளை திறக்கும் முன்னர் சாட்டிலைட் படம் எடுக்கச் சொல்லி அந்த ஏரியாவின் மக்கட் தொகை, எது மாதிரியான மக்கள் அங்கு வசிக்கிறார்கள் அவர்களின் வருமானம் இத்தியாதிகளை ஆய்ந்து ஆராய்ந்து அந்த இடத்தில் ஒரு கடை போடுவார்களாம். அது அப்படி இருக்கும் பொழுது அவன விட பெரியா ஆள் சீப்பு, சோப்பு, ஷாம்பு, இப்பதான் மூஞ்சிலா மட்டும் மேக்கப் போட ஒரு 50 விசயங்கள் இருக்கே, அப்படி இருக்கும் போது நமள கொஞ்சம் அழகுங்கிர விசயத்த வைச்சு சுருட்டிப் புட்டாய்ங்காங்யா, சுருட்டிப் புட்டாய்ங்காங்யா, ஊத்துக்குளியில ஆரம்பிச்சு, கூவங்கரை முடிய ஒரே ஆழகிங்க போட்டிதான் போங்க அதோட by product என்னன்னு கேளுங்க மக்களே ஆள் பாதி மேக்கப் பாதி...மத்ததை நீங்க நிரப்பிக்கங்க மக்களே இப்ப நான் வர்டா....

*அருணகிரி - குளோபல் வார்மிங் - தெகாவின் பதில்*

அருணகிரி இங்கே *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா? எனக்கு ஒரு பின்னூட்டமிட்டுள்ளார் அதனை படித்தால் கொஞ்சம் விளங்கும் நாங்கள் எதனைப் பற்றி விவாதித்து கொண்டுள்ளோம் என்பது...நன்றி அங்கு சென்று படித்து வருகமைக்கு...அதற்கு பதில்தான் கீழே...

அன்பு அருணகிரி, தாங்கள் நிறையப் படிப்பீர்கள் என்று கருதுகிறேன் அப்படியெனில் நல்லது. சரி விசயத்திற்கு வருவோம். அறிவியல் ஆராய்ச்சில் இரண்டு விதமான முறையில் ஆராய்ச்சி செய்து உங்களது கேள்விகளுக்கு பதிலை நாடலாம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா? முதல் வகை அனுகுமுறையில் Quantative Data Collection இதன்படி வரும் முடிவிற்கு ஒரு முறைப்படி பல நிலைகளில் எதுவாக ஆராய்ச்சிப் பொருளாக இருக்கிறதோ அதனைப் பொருட்டு டேட்டா சேகரித்து இதற்கு புள்ளியியல் கணக்கீட குறைந்த பட்சம் ஒரு சில ஆண்டுகளேனும் தேவைப்படலாம் (அல்லது குளோபல் வார்மிங் போன்ற சூழ்நிலையில் சில பத்தாண்டு சேகரிப்போ தேவைப்படலாம்) அவ்வாறு சேகரிக்கப்பட்ட டேட்டா விசயங்களை நம் மூளைக்கு எட்டிய வகையில் அப்படி இப்படியென்று வளைத்து தமக்கு வேண்டிய(ஹி...ஹி..ஹி) கேள்விகளுக்கு பதில் சொல்ல வைக்கலாம்! இது ஒரு மாதிரியான அணுகுமுறை.

மற்றொரு அணுகுமுறை, Qualitative Data Collection சில நேரங்களில் அவ்வாறு அணுகமுடியாத பட்சத்தில் முழுமையாக பல வேறு இடங்களில் தொடர் கண்காணிப்பின் மூலமோ அல்லது தன்னை சுற்றி ஏற்படும் மாற்றங்களை ஒன்றுக்கொன்றுடன் தொடர்புப் படுத்தி, உணர்ந்து இதற்கும் வருடங்கள் தேவைதான், இருப்பினும் இது போன்ற செய்திக் கோர்வைகள் ஒரு தலைமுறையிலிந்து மற்றொரு தலை முறைக்கு கீழிறக்கம் செய்யப் படலாம். உ.த: எனது தாத்தா ஒரு பெரும் ஏரியை குறுக்காக நடந்ந்ந்ந்து (இன்று) கடக்கும் பொழுது, எப்படி இந்த ஏரி அவரது இளமை பருவத்தில் வருடம் தோறும் தண்ணீர் நிலையுடன் இருந்தது போன்ற செய்திகள், அதனை சுற்றி எது போன்ற பட்சிகளை அவர் கண்டார் போன்ற infos.

In fact Aruna, in the West we have two kinds of people, one who is willing to be honest and tell the truth and the other one just the opposite keeping in their mind of tomorrow, providing food on the table for their family, denying the fact. You can get all kind of reading literatures, at some point of time, you have to feel the changes within your range and see how rapidly we are losing mother natures provisions. Rather than until you wait for some quantitative data to arrive and infer the change is real and imminent.

Do you know in our South India, we used to get three seasonal rainfalls on time until 1800s, that happened, it was reall?!!! until the Westerners reached out there and placed their hand on to the Western Ghats (Even in the foothils of Himalayas in the northeastern India) and started shaving off the rainforest for cash crops such as Cardamom, Coffee, Tea etc., And that was when ,we started seeing immediate changes in our vicinity in the following decades and much worse in today's standard.

இப்படி எத்தனை எத்தனையோ கண்மூடித்தனமான காட்டுத்தனமான செயல்கள் in the name of exploration and its consequent exploitations இன்னமும் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னையும் உங்களையும் போன்றவர்கள் அவர்கள் நடத்தும் அரசியலில் நம்மை தொலைத்து விட்டு எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்று தெரியாமல் குழம்பிப் போய், என் கிரமத்தில் சம்பந்தமே இல்லாமல் தொடர்ந்து ஐந்து ஆரு வருடங்களாக மழையில்லாமல் மக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் கூட வழியில்லாமல் தவிப்பது என்னவென்று விளங்காமல் எந்த ஊரு Senator வந்து புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு ஊருணி வற்றி போனதற்கு அந்த சொட்டைதலையன் ஓட்டும் SUV, HUM VEE-யும் காரணமாக இருக்கலாம் என்று ஒத்துக் கொள்வதற்கு. ஆமா, அமெரிக்கா செனடேடர் தான், இந்தியாவையும் ஆட்சி செய்கிறாறோ?

எது எப்படியோ, நான் எண்ணுவது இதுதான் Collective_ஆக முழு உலகமே ஒரு விசயத்தை இது போன்று உணரும் பொருட்டு அது பொய்பதற்கு வாய்ப்பில்லை. சரி வுடுங்க இன்னும் நிறைய கார்கள் விற்பனைக்கு இருக்கு இப்படி பயந்து செத்த எப்படி அததெல்லாம் வித்து சொத்து சேர்த்து இன்னும் கொஞ்சம் கடைகள் பரப்புறது அப்படின்னு பெரிய சொட்டையெல்லாம் சேர்ந்து சட்டை போடத மக்களை மிதிக்கமா மிதிக்குறகுள்ள நானும் அடிச்சு புடிச்சு computer programe எழுத கத்துகிட்டு நாலு காச சம்பாரிச்சு ஒரு காரை வாங்கிப்புட்ட நானும் மனுசந்தான் அப்படின்னு சொல்லனுமில்லை. வரட்டா!

நம்மலையெல்லாம் எல்லாம் வல்ல ஒஷொன் காப்பாற்றுமாக!

அன்புடன்,

தெகா (ஊருணி வற்றி போன கவலையுடன்...).

Monday, April 24, 2006

*ஆளவந்தான், கமல்----பரிணாமம்*

இதுவும் ஒரு மீள்பதிவே, காரணம் என்னுடைய நீண்ட தலைப்புகள் கொஞ்ச நாட்களாக, ப்ளாக்கர் டேட்டபேஸ்லிருந்து காணமல் போயிக்கொண்டிருந்தது. இப்பொழுது டார்வினிய கொள்கையை நம்ம நாதர் விளக்கி கூறியதற்கு பிறகு "தகுதி உள்ளது மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்ற" கூற்றின் படி தப்பிப் பிழைக்க எத்தனிக்கும் ஒரு முயற்சியில்...இக் கட்டுரையை தூசி தட்டி அலமாரியிலிருந்து எடுத்து உங்களுக்காக...

சரி, ஆளவந்தான், கமல்---பரிணாமம் அப்படின்னு ஒரு குத்து மதிப்பா ஒரு தலைப்ப வச்சியிருக்கியே கமலுக்கும் பரிணாமத்திற்கும் என்ன சம்பந்தம் தெகா, அப்படின்னு கேக்கிறீங்க இல்லையா. நாம ஊரு படங்கள் இன்னமும் நாலு சுவத்துகுள்ள நடக்கிற கூத்த விட்டு வெளியே வருவேனா அப்படின்னு அடம் பிடிச்சிக் கிட்டு இருக்கிற சூழ்நிலையிலெ கமல் நம்ம மல்லுக் கட்டி அடுத்தக் கட்டத்துக்கு இழுக்கப் பார்க்கிறார், இல்லையா?

இத வந்து ஒரு 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் மட்டும் ஒரு தனி மனித இனமாக வாழ்ந்த வந்த "நியண்டர்தால்" களிடமிருந்து நாம் "ஹோமோ சாபியன்ஸ்" சற்று உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு அவர்களை காணமலோ அல்லது நம்முடன் கலக்க வைத்தோ நம் இருத்தலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டோமல்லவா. அது போலவேத்தான் கமல் நமது சமுதாயத்தில் நடத்தும் போரட்டமும் என்பது என் கருத்து...

கமல் போன்றவர்கள் தப்பிப் பிழைத்து அடுத்தக் கட்டத்திற்கு சென்று விடுவார் அவர் அன்று இல்லா விடினும். ஏன் என்றால், மீடியாவின் மூலமாக அறிவியல் அருமையான கலவை அல்லவா?

இதோ இங்கு அந்தப் பதிவு...

நானும் நேற்று "அன்பே சிவம்" இரண்டாவது முறையாக அனுபவித்து பார்த்தேன். கமல் போன்றவர்கள் நம்மிடையே மிக்க திறமைகள்லிருந்தும் சரிவர புரிந்துகொள்ளப்படாமல் சிரிதே அங்கீகரிக்ப்பட்டுள்ளார். காரணம் வெளிவேசம் போடத்தெரிந்தும் எதார்த்த வாழ்வோடு இருப்பதால்தானோ என எனக்குப் படுகிறது.

"ஆளவந்தான்" நம்மில் பல பெயருக்குப் புரியாமல் போனதற்கு காரணம், அவர் அக்கதையில் வரும் சிறு வயது கமல் "physical and emotional-abuse"-க்கு ஆட்பட்டு போனதால் அதுவே ஒரு மன நோயாக பின்பு வளர்ந்து (Dissociated Identity Disorder-DID_போன்று) அவர் காணும் காட்சிகள்யாவும் மனத்திரையில் snap shots மற்றும் flash back, hallucinations_களாகவும் Animation உயிர்பெற்று விரிவடைவதாகவும் காட்டும்பொழுது புரிந்து கொள்வதில் சற்று சுனக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

அது போன்ற விடயங்களை நாம் படித்தோ அல்லது கேள்விபட்டிருக்கவோ வாய்பில்லமால் போனதாக இருக்கலாம் (its a sheer lack of awareness in our side_I believe Kamal is always a bit advanced for our standard). அது கமலின் குறை கிடையாது, நம்மின் பின்தங்கிய அறிவு சார்பே! அது போன்ற விடயங்களை காட்சிகளாக திரையில் எளிமைபடுத்தி எல்லோருக்கும் புரியும் வண்ணம் வழங்கியிருக்கிறார். என்னைப் பொருத்தவரையில் கமல் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சமூதய அக்கறையுடன் எடுக்கப் படுவதாக தோன்றுகிறது. அவைகள் இன்று புரிந்துகொள்ளபடாமலிருந்தாலும் ஒரு நாள் எல்லோராலும் கவனிக்கப்படும்.

ஆளவந்தான் படத்தை இது போன்ற ஒரு DID உள்ள ஒருவருடன் பார்க்க நேர்ந்தது படம் பார்த்துவிட்டு வெளிவரும் பொழுது அவர் கேட்ட முதல் கேள்வி இதெல்லாம் எப்படி கமலுக்கு தெரியும். பிறகு "கடவுள் பாதி" பாடலை அவர் கேட்க விரும்புவதில்லை ஏனெனில் அவருக்கு அது flooding flashbacks-களை கொணவர்தால். புரிகிறதா, என்ன சொல்லவருகிறென்னென்று இதெல்லாம் educational awareness என்று.

Sunday, April 23, 2006

*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?

கோடைகாலம் இதோ வந்துவிட்டது மிக அருகமையில், நம்மில் எல்லோருமே உயிரை கையில் பிடித்துக் கொண்டு எப்படியாவது இந்த கோடையை "Heat Stroke" எதுவுமில்லாமல் கடத்தி விட வேண்டும் என்று கவலைப்படலாம். சரி, ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு நாம் இப்படித்தான் இந்த வெப்ப தகிப்பில் சிக்கி மூச்சு முட்டுமளவிற்கு வாழ்ந்தோமா என்றால், யோசிக்க வைக்கிறது. இல்லையா?

நாம் கொஞ்சம் சீரியசாக விசயத்துக்குள் செல்லுமுன்னர் எனது கீழ் கண்ட சுட்டியில் சென்று உலகமயமாக்கல், மக்களின் எண்ண மாற்றம், அதனை தொடர்ந்து இயற்கை விடும் பெரும் மூச்சு இவைகளை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இங்கே இருக்கிறது... "இயற்கைச் சீற்றம்..."

கடந்த வருடம் ஃபிரான்சில் நூற்றுக்கணக்கனோர் கடும் சூட்டு அலைகளால் பீடிக்கப்பட்டு இறந்து போனதை அறிந்திருக்கக் கூடும். அதில் பெரும்பான்மையினர் சீனியர்கள்தான். இத்தனைக்கும் ஃபிரான்சு டெம்பரேட் நாடுகளில் ஒன்று. கோடையிலும் கூட 80 லிருந்து 90 டிகிரி தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்பொழுது நிலைமையோ தலை கீழாக இருக்கிறது. கோடை காலங்களில் இப்பொழுதெல்லாம் 100 டிகிரியை பாதரச முட்கள் அதிகமாக தொட்டு வருகிறதாம். பூமி பந்து முழுதுமே!

சரி இந்த வெப்பம் ஏற்றம் எங்கிருந்து வருகிறது? திடீரென்று நமது சூரியன் தனது வெப்பமேற்று திருகானைத் திருகி கொஞ்சம் வெப்பத்தை அதீத படித்துக் கொண்டதோ? இல்லை பூமி தனது சுற்றுப் பாதையிலிருந்து நகர்ந்து தன்னை சூரியனுக்கு அருகமையில் அமர்த்திக் கொண்டதா? அதுவுமில்லை, இதுவுமில்லை. அப்படியெனில் என்ன நடக்கிறது. நீங்களும் நானும் நம் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்கள்தான் இந்த "வெப்ப சூடேட்ற்றதிற்கு" முழுக் காரணமும். எப்படி?

இதில் உலகமயமாக்கல் என்ற மாபெரும் அசுரனின் பங்கு பல மடங்குகள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லோரும் எல்லா வசதிகளுடன் டாம் பீம்மென்று எப்படி மற்றவர்களை போல சிந்தனையற்று சுயநலத்துடன் வாழ்வு முறையை அமைத்துக் கொள்கிறார்களோ, அதே போன்று தாங்களும் வாழ வேண்டுமென தனது சீதோஷண நிலைக்கு ஒவ்வாத விசயங்களையும் பின் தொடரும் முனைப்பு, இது போன்ற எத்தனையோ சுய சிந்தனையற்ற செயல்கள்.

எத்தனை நாட்கள் நாம் கண்மூடித்தனமாக நம் பார்வைக்கு அப்பால் தானே ஏதோ நடக்கிறது என்று விடும் அத்தனை நச்சு புகைகளையும் இந்தப் பூமிப் பந்து தாங்கி நம்மை எடுத்துச் செல்லப் போகிறது? இன்று சீனா மற்றும் இந்தியா போன்ற அதி வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பெட்ரோலியத்தை நம்பி ஓடும் வாகனங்களை பெருக்குவதில் ஒரு அசைக்க முடியா வாழ்வின் முற்றாக அந் நாட்டு குடும்பங்களிடையே பல்கி பெருகி வருகிறது.

நாம் அங்கே எட்டும் முன்பே இந்த வளர்ந்த நாடுகள் அடித்த அட்டுழீயத்தால் "green house gases" நமது வாயு மண்டலத்திற்கு மேலே தொங்கியபடி சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தினை வடி கட்டி அனுப்பாமல் (ஒஷொன் அழிவால்) அப்படியே அனுப்பி விடுகிறது. அவ்வாரு வரும் வெப்பம் இங்கு உள்ள நீர் நிலைகளும், திறந்த வெளி புல் மைதானங்களும், காடுகளும் கிரகித்து கொண்டது போக மீதம்முள்ள வெப்பம் திரும்பவும் வாயு மண்டலத்திற்கே அனுப்பபட்டு நமது மண்டலத்திலிருக்கு வெளியே சென்று கொண்டிருந்தது.

ஆனால், இன்றைய சூழலில் திறந்த வெளி புல் மைதானங்கள் அனைத்தும் வியாபார மையங்களாகவும், வாகன நிறுத்துமிடமாகவும், கான்கீரிட் காடுகளாகவும் ஆக்கப் படும் நிலையில் பூமியை தாக்கும் முழு வெப்பமும் கிரகிக்க முடியா சூழலில் அவ்வெப்பம் ஒரு கண்ணாடி பிம்பத்தில் அடிக்கப்பட்ட ஒளி கற்றை மறு பிரதிபலிக்கப்படுவது போல் திரும்பவும் தனது முழு வீச்சில் அவ்வெப்பம் நமது atmosphere_க்கே திரும்பச் செல்கிறது. அவ்வாறு செல்லும் வெப்பம் மீண்டும் அந்த green house gas-களால் தடுக்கப் பட்டு நமது outer atmosphere-க்கு போக விடாமல் தடுத்து மீண்டும் நமக்கே, திருநெல்வேலி அல்வாவாக கொடுக்கப் பட்டுவிடுகிறது, ப்ளஸ் புதிதாக நுழையும் வெப்பமும் சேர்த்து சாகுட மனுசாதான்.

இப்படி நாமே நம் பூமிப் பந்தை ஒரு அடுப்பாங்கரையில் வைத்து சூடு படுத்திக் கொள்வது போல சூடேற்றம் பண்ணிவருகிறோம். இதன் விளைவு, நான் முன்பு கொடுத்த சுட்டியில் எழுதியிருந்ததின் பொருட்டே கணக்கிலடங்கா இயற்கை பேரழிவுகள் தான் விளைவு.

தொடர் வறட்சி, தொடர் வெள்ளம், சூறாவளிகள், கடல் மட்ட உயர்வு அதன் பொருட்டு காணாமல் போகும் தீவு கூட்டங்கள் மற்றும் கரைகள் தோரும் கடல் நீர் ஆக்ரமிப்பு, குடி நீர் வற்றி போதல், புதுப் புது நோய்களை உருவாக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியக்கள் பல்கி பெருகும் வாய்ப்பு. இப்படி சங்கிலி தொடர் போன்ற விளைவுகள்.

ஆனால் நம் கண்ணுக்கு முன்னால் நிற்கும் அத்தனை அதி நவீன பொருட்களுமே சுற்றுப் புறச் சூழலை பாதிக்கும் நச்சை கக்கிகொண்டிருக்கிறது. அப்படின்னா என்னதான்ட தெகா பண்ணச் சொல்ற அப்படீன்னு என்ன பாத்து கத்துறது என் காதுகளில் சீரிப் பாயும் கார்களின் ஒலிகளுக்கிடையே கேட்கத்தான் செய்கிறது. என்ன செய்வது, பெட்ரோல் அரிதாகிக் கொண்டுவரும் இக் காலக் கட்டத்தில் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் ஏன் எதற்காக நாம் இக் காரியத்தையும் செய்கிறோம் இதற்கு மாற்றாக இயற்கை நட்போடு அக் காரியத்தை செய்து முடிக்க முடியுமா என்று எண்ணலாம்.

அமெரிக்கன் அப்படி வாழ்கிறானே நான் வாழ்ந்தால் என்ன என்று சிந்திக்கும் நாமும் அவர்களை போன்று நம் மூளையை அடகு வைத்து விட்டு "கார்பரெட்" நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அதனையே கண்களை கட்டிக் கொண்டு பின் தொடர வேண்டுமென அவசிய மில்லை. நாம் இருப்பதோ "tropical zone"-னில் என்பதனை மறந்து விடக் கூடாது. வெப்பம் ஒரு 2-4 டிகிரி ஏறிவிட்டால் கூட நாம் வெளியெ தலை காட்ட முடியாதப்பூ.

இரண்டாவது பதிவு இங்கே ... *அருணகிரி - குளோபல் வார்மிங் - தெகாவின் பதில்*

Saturday, April 22, 2006

*டேனா ரீவ்ஸ்*-என் சிந்தனையில்...

இது ஒரு மீள் பதிவு பல முறை முயன்றும் தோர்வுற்று போன ஒரு பதிவு. இதோ இங்கு மீண்டும் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக...

*சூப்பர் மேன்* படங்களில் நடித்து வந்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தது எல்லோரும் அறிந்திருக்கக் கூடும், அப்பொழுது மக்களிடையே அப்படி ஒரு cinema legend, எல்லோரும் அனுதாபப் படும்மளவிற்கு ஒரு குதிரைச் சவாரியின் போது ஏற்பட்ட விபத்தால் கழுத்திற்கு கீழே செயலிழந்து நடை வண்டியிலிருந்தபடியே அவரின் துணைவியாரின் (டேனா) உதவியுடன் வாழ்ந்து இறந்தாறென்று.

இன்று உண்மையின் ஆழ்நிலை இருத்தலை முழு அமெரிக்காவுமே டேனாவின் மறைவின் பொழுது உணர்ந்ததாக டேனாவின் தன்னலமற்ற செயலின் மூலமாக உணர்தப்பட்டதாக எங்குமே பேசப் படுகிறது எனக்கும் அப்படித்தான் படுகிறது.

எதார்த்த வாழ்வில் இன்று டேனாதான் *சூப்பர் மனிதர்" ஆனார்! எப்படி? இன்னும் உண்மை அன்பு, இறக்கம் ஆன்மா சேர்வின் (soul union) தாக்கம் இவைகளுக்கு ஒரு உருவம் கொடுத்ததுபோல் டேனா மனத்தளர்ச்சியின்றி ரீவ்ஸ் அருகமையிலிருந்து தனது ஆன்மா வளர்ச்சியினை காட்டியதின் விளைவு, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் materiterialistic கலாச்சார சூழலில் வாழும் பொரும்பாண்மையோருக்கு வாழ்வின் எதார்த்த சூழ்நிலையுடன் தன்னிலை உணர்ந்து இயைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து நலிந்து வரும் இக் காலச் சூழலில், அது தவறு என்று சுட்டி காட்டி தனது இருத்தலின் ஆழத்தை உணர்தியுள்ளார்.

துணைகளுல் யாரவது ஒருவர் இரவில் குறட்டை விட்டால் மற்றொரருவர் தனது தூக்கத்தை காலி செய்து மன உளைச்சாலுக்கு ஆளாக்குகிறார் என்று கூறி விவாகரத்து கோரும் வேகத்திலிருக்கும் கலாச்சார சூழலில் டேனா போன்ற பெண்மணிகள் அமெரிக்காவின் "நம்பிக்கை நட்சத்திரமாக" மின்னுவதில் ஒன்றும் வியப்பில்லை.

பெண்ணியப் புரட்சி என்ற பெயரில் அன்பு சொலுத்துவது, கருணை காட்டுவது, குழந்தை பெற்று தனது பெண்மையின் மான்பினை காட்டுவதை பலவீனமாக சிலர் கருதும் இவ் வேளையில் எல்லோருக்கும் சேர்த்து டேனா போன்ற பெண்மணி பெண்மையின் மான்பினை நான்றாக வாழ்ந்து உணர்த்தி விட்டதாகப் படுகிறது. அவரின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சாலி செலுத்தி ஆன்மா சாந்தியடைய வணங்கும், தெகா.

Friday, April 21, 2006

*பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா...

சுவனப்ரியன் தனது *பரிணாமப்" பார்வையை இங்கே குறித்து வைத்துள்ளார், இன்னும் நாம் எங்கே இருக்கிறொம் என்பதனை அறிய அன்பர்கள் கீழ் கண்ட சுட்டியில் சென்று அறியவும்...

http://suvanappiriyan.blogspot.com/2006/03/blog-post.html

அவருடைய பதிவை படித்துவிட்டு நான் கீழ் கண்ட முறையில் அவருக்கு பின்னூட்டமிட்டதை உங்களுக்காக இங்கே...

என்ன ஒரு கால விரயம், சுவனப்ரியன் தனது ஐயங்களை இங்கு தீர்த்துக் கொள்கிறாரா அல்லது பொழுது போகாமல் ஏதாவது...

மனிதன் மனிதனாக (இன்றைய நிலையை எட்ட) இப்படி நம்மை போல அரிதான மூளை வளர்ச்சியுடன் எட்ட கிட்டத்தட்ட பல மில்லியன் ஆண்டுகளாக குமிந்த நிலையில் பல கோடி வருடங்கள் (species, sub-species.. sub-species, then the survivor spp will carry on, the acquired characters and physiologically adaptive organs and formative information through DNA and RNA, giving rise to more powerful species onto the next species level. Actually, the changes will happen in micro level where you can not see it onto the next offspring of the previous species though it is passed; so the term is called EVOLUTION, you agree right, your KID is lot more smarter than you are...there our future evolution lies look at closely!).

பிறகு கொஞ்சம் தூரம் நிமிர்ந்து நின்று நடந்து சொல்லுமளவிற்கு திறமையுற்று அந்த திறமையும் பல கோடி வருடங்களின் பிராயச்சித்ததின் மூலம் எட்டி இப்படி இது நீண்டு கொண்டே போகிறது... இதற்கிடையில் மூளையின் வளர்ச்சியும் complexity_களை மேன்மெலும் அதீத படித்தபடியே வளர்ந்து வளர்ந்து...

இப்ப பார்க்கிற சிம்பன்சி, கொரில்லா, ஒரங்குட்டன் எல்லாம் நம்முடைய ஒரு மரத்தின் கிளைகள் போல அவர் அவர்களின் மூதாதையர்களின் வளர்ச்சிக்கும் தேவைகளுக்கும் (Niche) ஏற்ப தனது வளர்ச்சியுனூடே பக்க பிரிவாக மரபணு வேறுபாடுகளுடன் பிரிந்து...இருப்பினும் மிக்க வித்தியாசமில்லை 98% நம்முடைய மரபணுக்களுடன் ஒத்து போகிறது.

மேலே கூறியதற்கு சான்றாக மனிதன் மனிதனாவதற்கு முன்பு மனிதனை ஒத்த மூதாதை மனிதர்கள், பல வேறுபட்ட கண்டங்களில் மனிதனை ஒத்த மண்டை ஒடுகள், மற்றும் இதர எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்டு நாமும் அவர்களின் பங்காளிகளில் ஒருவர் தான் என உறுதிபடுத்தப் பட்டுள்ளது...

பரிணாமத்திற்கும் (அது என்ன ஒரு கெட்ட வார்த்தையா) ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது...? கடவுள்தான் எல்லாவற்றையும் ஆட்டி வைக்கிறான் என்று வைத்துக் கொண்டாலும், இதுவும் அவன் விளையாட்டுக்களில் ஒன்று என்று நிருபிக்கப்பட்ட மனித பார்வைக்கு எட்டிய விசயத்தை தலுவிப்போவதில் ஆன்மீகத்திற்கு எந்த தீங்கும் வரப் போவதாக எனக்குப் படவில்லை.

தன்னை உணர்ந்து தன்னில் இறைவன் இருப்பதை உணர்வதுதானே ஆன்மீகம்...

நான் விலங்கியியல் பட்ட படிப்பும் ஏன் டாக்டர் பட்டமும் வாங்கும் அளவிற்கு வளர்ந்தும் கூட ஒரு போதும் ஆன்மீகத்தையும், அறிவியலையும் போட்டு குழப்பிக் கொண்டதில்லை. அதன் மூலம் கால விரையம்தான் ஆவதாக கருதுகிறேன்.

ஆன்மீகம்மன்றி எல்ல மதத்திற்கும்தான் பிரட்சினை இருக்குமோ....ஒஹோ!

நிறைய படிக்கணும்... நமது மனச விழிப்புணர்வுக்கு எடுத்துட்டு வரணும்... விசயங்களை கிரகித்து பின்பு கடவுளை (அல்லாவை, ஜீசஸ், சிவா) காண எல்லத்தையும் மறந்து அவனே எல்லாவற்றிலுமாக காணவேண்டும் என்று உங்களை பார்த்து கை கூப்பும் சிரிக்க சிந்திக்க தெரிந்த கடவுளின் சித்தத்தால் உருவான ஒரு சக Homo sapiens. ரத்தமாவது மிச்சமாகட்டும்.

அன்பே கடவுள்.


ப்ரியன் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்...

//எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.//

அதற்காக நான் கொடுக்கப்போகும் உதாரணம் சிறு பிள்ளைத்தனமாக இருக்கும் இருந்தாலும் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பதற்கு எளிது என்பதால் கொடுக்கிறேன்.

சுவனப்ரியனும் நானும் பிறக்கும் பொழுது சிறு கை குழந்தைகளாகத்தான் பிறந்தோம் ஆனால் எங்களுக்கு 80 வயது ஆகும் பொழுது அந்த கை குழந்ததையான நாங்கள் என்னவானோம்? வளர வளர, நானும் என்னுள் உள்ள உருப்புகளும், மூளையும் என்னவாகிறது...?

அதெ போல என் மகன் என்னை விட புத்திசாலியாக இருக்கிறான் அதனால் நான் படித்தவைகளையும், அனுபவ பட்டவைகளையும் மட்டுமே வைத்து அவன் கருவவதற்கு முன்பே அவனுடைய மூளைக்குள் வைத்து தைத்து விட்டதாக அர்த்தமா, எது...?

100 வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளை காட்டிலும் இன்றைய குழந்தைகள் நல்ல புத்திசாலியாக இருப்பதாக நாம் ஒத்துக்கொள்கிறோம், ஏன் அப்படி? நம் மூளை பலமடைந்து வருகிறதோ... இருக்கும் சூழ்நிலையை பொருத்து... நிறைய சிந்திக்கணும், அதற்கு நாம் மனதை திறக்கணும் அதுதான் சாவி மார்க்கத்திற்கு.

அன்பே அல்லா (இயேசு, சிவன்).

என்னுடைய பதிவுகள் என்னவாகின்றன...

என்னுடைய சில அண்மைய பதிவுகளில் பின்னூட்டமிட முடிவதில்லை...பப்ளிஸ் செய்தவுடன் பிளாக்கர் லிஸ்ட்டிலும் அந்த அண்மை பதிவு காணப்படுவதில்லை. என்ன நடக்கிறது? யாரெனும் உதவ முன்வரின் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்க, நன்றி!

karthikprab@gmail.com

Related Posts with Thumbnails