Friday, April 28, 2006

என்ன வெயிலு சுட்டெரிக்கிறதா...!

நேற்றைய வெப்பம் சராசரியாக தமிழகம் முழுதும் 104 டிகிரியாம். அப்படி அனல் தெரிக்கும் வெயிலில் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்வது என்பது கொடுமைதான் என்னை பொருத்தமட்டில். போதக்குறைக்கு இப்பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் முதலீட்டில் ஆரம்பிக்கப் படும் கம்பெனிகளின் கட்டடங்கள் (ஏன் புதிதாக கட்டப்படும் எல்லா பெரிய நிறுவனங்களின் கட்டங்களும்) அறுதி பெரும்பான்மையானது கண்ணாடி மாளிகைகளாக விசுவரூபம் மெடுத்து எழுந்து நிற்கின்றன.

அது போன்ற கட்டடங்களுக்கும் இந்த வெப்ப புழுங்கல் உள்ள சென்னைக்கும் ஏதாதவது தொடர்பு இருக்குமோ. இருக்கலாம்! கொஞ்சம் இனைத்துப் பாருங்களேன் கண்ணாடி - சூரிய ஒளி - வெப்பம் - கார்பன் புகை. அட அந்த குறிப்பிட்ட வட்டரத்திற்காகவது அதனுடைய பாதிப்பு தெரிகிறாதா இல்லையா?

பார்க்க அழகாத்தான் இருக்கிறது, ஆனால் எந்த விளையில். கொஞ்ச நாட்களவே எனக்கு அந்த எண்ணம் வந்து போனது, அது இங்கெ அப்படியே...

சரி, இந்த உலகலவிய வெப்ப ருத்ர தாண்டவம் எதனால் என்பதை தெரிந்து கொள்ள பிரியப்பட்டால் கீழே உள்ள சுட்டியை சுடுக்கி...நாங்கள் விவாதித்த இந்த "குளோபல் வார்மிங்" படித்து பாருங்கள்...நன்கு புரிந்து கொள்ளலாம். தாங்கள் சிறுவ சிறுமிகளிடம் பகிர்ந்து கொள்ள ரொம்ப உதவும்.

http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_114584455467439948.html

இரண்டாவது சுட்டி முதல் சுட்டியின் தொடர்ச்சி...நீங்கள் அந்த சுட்டியை இந்த முதல் சுட்டியின் பின்னூட்டத்திற்க்கு கீழே லிங்கில் கணலாம்...இல்லையெனில் இதோ இங்கு...

http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_25.html

2 comments:

கவிதா|Kavitha said...

சென்னையில 2 நாட்களாக மிகவும் அதிக வெயில், தாங்க முடியல..வேர்வயில் கோவம் தலைக்கு ஏறுகிறது..யாராவது பக்கதுல வந்தா புடங்களாம் போல இருக்கு.. காரணம் அந்தமான் ல காற்றழத்தம் அதிகமாயிட்டது அதனால இங்க இருக்கிற காற்றெல்லாம் அங்க போயிட்டனதால மாலையில் வர கொஞ்சம் கடல் காற்றும் வரதில்லைன்னு பேசிக்கறாங்க..

Thekkikattan said...

தோழி கவிதா, கோவமும் வருவது பகுதி மனச்சோர்வுதான் நமது உடல் வெளிப்புற சூழலுக்கு ஈடுகொடுத்து போக முடியாத பச்சத்தில் அப்படி நமது உடம்பு மனத்தை கட்டுப்படுத்துகிறது.

என்னால் நீங்கள் சொல்லும் சூழ்நிலையை கிரகித்துக் கொள்ள முடிகிறது. மதிய வேளைகளில் எங்குமே நகரமுடியாத அளவிற்க்கு செடடேஷன் கொடுத்தமாதிரியாக, மூச்சு விடுவது கூட கடினமான சூழலில் அந்த நினைவுகள் நினைத்தாலே Psycho-somatic என்று கூறுவார்கள் அவ்வாறு இருக்கும் நிலையை உணர்வது. மண்டையில் பச்சக்கென்று ஒட்டிவிட்டது போல அதுதான்.

அடிக்கடி வந்து போங்கள்,

அன்பு,

தெதா.

Related Posts with Thumbnails