Sunday, May 07, 2006

"இடியட்=TV" பெட்டிக்குள் தமிழனின் கலாச்சாரம்..!

தமிழகத்தின் நிலைமையை பார்தீங்களா? எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது. காரணம், நாம எவ்வளவுதான் நல்லவென இருந்தாலும் அந்த சூழ்நிலை நாம மாத்திடும் (ஆனா, காமராஜர் போன்றவர்களைத் தவிர).

ஆனா, இப்ப இந்த அக்கிரமத்த பார்த்துகிட்டு என்னால பேசாம இருக்க முடியலங்க. அதுவும் இந்த இரண்டு நையா பைசா தேர்தல் அறிக்கைங்கள பார்த்துக் கிட்டு.

நாம நாட்டுல இவ்ளோ அந்நிய முதலீட்டுப் பணத்தை கையில வைச்சுகிட்டு அதப் எப்படி முறையோட பயன் படுத்துறதுன்னு தெரியாம. அடப் போங்கப்பா!

ஏங்க, தெரியாமத்தான் கேக்குறேன், இந்த இலவச ட்டி.வி திட்டம் என்னங்க திட்டமிது. ஒரு மூணு மாசத்திலோ இல்லென்னா ஆறு மாசத்திலோ 'டெபுக்குன்னு' செட் உட்காந்திருச்சுன்னு வைச்சுக்குவோம், இனிமே செட்டே கதைக்கு உதவாது அப்படின்னா என்னங்க பண்ணுவாங்க? புத்சா கொடுப்பாங்களா?

அதெல்லாம் விட முக்கியமான ஒரு கேள்வி எனக்கிட்ட இருக்குங்க...ஏற்கெனவே வேலை வெட்டி இல்லாமல் மழை பேஞ்ச தான் விவசாயம் அப்படின்னு இருக்கிற விவசாயிங்களையும் அவங்களோட படிச்ச பட்டாதாரி புள்ளைங்களையும் வீட்ட விட்டு வெளியே தலையே காட்டமா கையில ட்டி.வி யோட ரிமோட்ட கொடுத்து மோட்டு வலையத்த பார்துகிட்டு மாத்தி மாத்தி சீரியலும் படமும் பாருங்கப்பா, நாடு விடுஞ்சுரும் அப்படின்னு சொல்ல வராங்களா? இல்லை நீங்க பிஸியா இருங்க "செல்வி" சீரியலோட, நாங்க நெருக்கி சுருட்டிகிட்டு இருக்கோம் அப்படிங்கிறாங்களா.

ட்டி.வி என்னங்கா அப்படி கத்துக் கொடுக்குது, நமக்கு?

ஸ்கூல் போற பசங்கதாங்க ரொம்ப கெட்டு போவுதுங்க. ஆனா, ஒண்ணு, சின்ன பசங்கள 'கிரேஸி' யாக்கி வியாபாரத்த பெருக்கலாம். ஓ, அப்படிக் கூட ஏதாவது இதில இருக்குமோ!

கடைசியா, நல்லா கிராம புறத்திலயாவது சின்ன பசங்க கொஞ்சம் ஒடிப் பிடிச்சி விளையாடி ஒடம்ப ஹெல்த்தியா வச்சிருப்பானுங்க அதுக்கும் இந்த அறிவு ஜீவி திட்டம் ஊதப் போகுது சங்கு.

ஏங்க தெரியாமத்தான் கேக்கிறேன், இந்த பணத்தையெல்லாம் கிராமப்புறத்தில வேலை வாய்ப்பை ஏதாவது ஏற்படுத்துற மாதிரியோ, இல்ல பள்ளிக் கூடங்கள்ள இன்னொரு மொழி ஏதாவது கத்துக் கொடுக்க ஆசிரியர்களை போடறதிற்கோ பயன்படுத்தலாம் இல்லையா?

ஒண்ணுமே பிரியலங்கா? நாம மக்களுக்கு மண்டைகுள்ள என்னாதான் இருக்குன்னு. நீங்களாவது எனக்கு சொல்லுங்க. இல்ல எனக்குத் தான் ஏதாவது மிஸ்ஸிங்கா?

12 comments:

Anonymous said...

இப்படி யாரவது யோசிக்கிறாங்களான்னு கேக்றீங்க அப்படித்தானே? யோசிக்கிறாங்க அவங்க வீட்டுக்காக மட்டும!!!.

பாலாஜி.

சிவா said...

தெக்கி! ஏற்கனவே 75% ஊர் இந்த கேபிள் டி.வினால அழிஞ்சி போச்சி. இன்னும் ஒரு 25% (ஆவது நல்லா இருக்குன்னு ஒரு நம்பிக்கை) உருப்படியா இருக்குறதையும் ஓசி டிவி கொடுத்து மொத்தமா 100% ஆக்கிட்டோம்னா நாடு சுபிட்சமா ஆகிடும். அவன் அவன் ஒரு பண்டிகை, விழா என்றால் ரிமோட்டும் கையுமா விடிஞ்சதில் இருந்து கட்டைய சாய்கற வரைக்கும் உக்காந்து இருப்பானுங்கல்லா..அந்த நல்ல எண்ணம் தான். அப்படியே சன் டி.வி லாபமும் எகிறும் அல்லவா..

இவனுங்க எல்லாம் நாட்டோட தலைவனுங்க.. (எல்லாருமே ஒரே குட்டைல ஊறிய மட்டைங்க தான்). யாரை குற்றம் சொல்ல...நமக்கே அறிவு வரணும்..

அன்புடன்,
சிவா

ஜெயக்குமார் said...

என்னுடைய பதிவில் நான் வெளியிட்ட கருத்தையே என்னுடைய பிண்ணூட்டமாக இங்கு வெளியிடுகிறேன்.

நகரத்தில் இருக்கும் குடும்பபெண்களை காலை 11 மணியில் இருந்து இரவு பதினோரு மணிவரை தொடர்களை ஒளிபரப்பி சோம்பேறியாக்கி வைத்தது போதாதென்று இப்போது உழைக்கும் வர்க்கத்தினரையும் அதேபோல மாற்ற முயலும் இந்த இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை இந்த பொருளாதார மேதைகள் ஆதரிக்கிறார்களா?

இதற்கு பதிலாக ஒவ்வொரு கிராமத்திலும் , அந்த கிராமத்தில் அவர்கள் பெருவாரியாக செய்யும் தொழில்களுக்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுக்கலாமே!?.
உதாரணமாக விவசாயம் அதிமாக உள்ள கிராமங்களில் கதிரருக்கும் இயந்திரங்கள், களங்கள், 10 கிராமங்களுக்கு ஒரு நவீன அரிசி ஆலை என பல வசதிகளை செய்துகொடுக்கலாம். இதனைக்கூட இலவசமாக கொடுக்காமல் குறைந்தபட்ச வாடகையுடன் கொடுக்கலாம். ஏனென்றால் இலவசமாக் கொடுத்தால் இதற்கு முன்னர் அரசு கட்டிக்கொடுத்த இலவச கழிப்பறை போன்று இதையும் யாருக்கும் பயனில்லாமல் ஆக்கிவிடுவார்கள். இதுபோன்ற நலத்திட்டங்கள்தான் நம் கிராமங்களையும் அதன் மூலம் நம் நாட்டையும் மேம்படுத்தும்.

சீனர்கள் தங்களிடம் உள்ள மனித சக்தியை எப்படியெல்லாம் பயன்படுத்தி மேலைநாடுகளுக்கு நிகராக வளர்ந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் தொகையிலும் , இயற்கை வளங்களிலும் நாம் சீனர்களுக்கு கொஞ்சம் கூட குறைந்தவர்கள் இல்லை. நம் மக்கள் அவர்களை விட புத்திசாலிகளே!. ஆனால் நம்மால் மட்டும் ஏன் அவ்வாறு முன்னேற முடியவில்லை. நம்மவர்கள் சீனர்களை விட உழைப்பாளிகலே, ஆனால் ஒருகூட்டம் நம்மை இது போன்ற இலவசங்களை கொடுத்து , நம் கவனத்தை திசைதிருப்பி நம்மை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தி, நாம் துயிலும் போது நம் சொத்துகளை நாம் அறியாமலேயே சுரண்டிகொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் பொருளாதாரம் படித்த இந்த இருமேதைகளில் ஒருவர் பொம்மையாகிவிட்டார், மற்றொருவர் தன் பொருளாதாரத்தை உயர்த்த முயன்று கொண்டிருக்கிறார். ராஜீவின் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட கிராஃபைட் தொழிற்சாலையை இன்னும் ப.சி யால் சிவகெங்கையில் கொண்டுவரமுடியவில்லை. இந்திய பொருளாதாரமே இவர் கையில், ஆனால் தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியமாவட்டம் இவருடைய மாவட்டம் தான். கிராஃபைட கனிம வளம் நிறைந்த இப்பகுதியை நெய்வேலி போல ஒரு தொழில் நகராக்க முடியும், ஆனால் இந்த பொருளாதார மேதையால் இந்த ஊரை குறைந்தபட்ச வசதிகள் கொண்ட ஒரு நகரமாக கூட ஆக்க முடியவில்லை என்பது இங்கு சென்றுவந்தவர்களுக்கு தெரியும். ஏற்கனவே மானாமதுரை சிப்காட்-டில் இயங்கிய ஒரு கிராஃபைட் தொழிற்சாலை இந்த புண்ணியவான் தயவால் பூட்டப்பட்டு கிடக்கிறது.

Thekkikattan|தெகா said...

பாலாஜி, பரவாயில்லை படிச்சுட்டு நீங்க பின்னூட்டமிட்டு உங்க நிலைமையயும் என்னோட பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி!

//யோசிக்கிறாங்க அவங்க வீட்டுக்காக மட்டும!!!.//

ஏங்க இப்படி எத்தனை காலத்துக்குத்தான் தன் குடும்பத்திற்காக சொத்து சேர்க்கிறாதிலேயே கவனமா இருப்பாங்க!? ஆனா, ஒண்ணு மட்டும் உருதியா நம்புறேன், எதிர்காலத்தில எல்லோரும் நல்லா படிச்சு, நிறைய ஊர் சுத்திப் பார்த்து, தனது தேவைகளை தாங்களே தன் முயற்சியில செய்து ஊர் சொத்துக்கு ஆசை படாதவங்க நிறைய பேர் அரசியலுக்கு வருவாங்கன்னு நம்புறேன்.

அன்புடன்,

தெகா.

Sivabalan said...

தெகா!
நீங்க சொன்னதில எனக்கு அந்த 2 செண்ட்ஸ் நிலம் அதுல உடன்பாடு இல்லெ! தரிசு நிலம்தாம்னே!! அனா அது ஏப்படி செய்வாங்காங்கரதுல சந்தெகந்தான்.

நல்ல பதிவு!!

Today only, I have learned "how to write in Tamil using suratha.com.

If anything is wrong, please ignore it.

Another good blog!!

Thekkikattan|தெகா said...

சிவா, நல்லா சொன்னீங்க போங்க நீங்கதான் கரெக்ட்-ஆ அடிப்பீங்க நெத்தியடியா!

//அவன் அவன் ஒரு பண்டிகை, விழா என்றால் ரிமோட்டும் கையுமா விடிஞ்சதில் இருந்து கட்டைய சாய்கற வரைக்கும் உக்காந்து இருப்பானுங்கல்லா...//

ஒண்ணும் சொல்றமாதிரி இல்ல, சிவா, நீங்க சொன்னது ரொம்ப உண்மை உருப்பிடா கோயில்ல உருண்டை சோரு வாங்கி திங்கறது எல்லாம் ஒரு நல்ல நாலும் அதுவுமா உக்காந்துகிட்டு வெசனாம பேட்டிக் கொடுத்துக்கிட்டு இருக்கும் அத பார்த்துகிட்டு நாம :-O

//அப்படியே சன் டி.வி லாபமும் எகிறும் அல்லவா...//

ஓ, அப்படி ஒண்ணு இருக்கில்லா...ஹி...ஹி...ஹி

பின்னூட்டம் போட்டு நாட்டு நெலமையை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சிவா!

அன்புடன்,

தெகா.

வெளிகண்ட நாதர் said...

இந்த மாதிரி ஏமாத்து சித்து வேலை எத்தனை நாள் நம்ம அரசியல்வாதிங்க செஞ்சுகிட்டே இருக்க போறாங்கன்னு தெரியலை. நம்ம முன்னேறும் காலம் வர பல யுகங்கள் பிடிக்கும்!!

Thekkikattan|தெகா said...

ஜெயக்குமார், நல்ல சிந்தனையூட்டும் கட்டுரை ஒன்றை படைத்துள்ளீர்கள் நான் தவறவுட்டுள்ளேன். இருப்பினும், நாம் இருவரும் ஒரே மாதிரியான் எண்ணவோட்டத்தில் லயித்துள்ளோம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இருப்பினும் இத்திட்டம் மிகவும் வருத்தத்துக்கு உரியதே! தன் சுய நலத்திற்காக பொதுநலம் முச்சந்தியில். ஒன்று மட்டும் தெரிகிறது, மனிதனின் வாழ்வை உற்று நோக்கும் பொழுது வயதிற்கும் தான் செய்யும், சிந்திக்கும் விசயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்பதுதான்.

எத்தனை ஆராய்ச்சிகள் இன்றைய நாளில் தொலைக்காட்சிகள் எவ்வாறு குழந்தைகளின் மனங்களில் தீவிரவாத, வன்மை, கொடூர மற்றும் பாலியியல் சம்பந்தபட்ட விசயங்களை தூவிச் சென்று அவர்களின் பருவத்தை திருடிச் செல்கிறது என்பதனை பொருத்து.

எப்படியோ ஜெய நன்றி இந்த பக்கமாக வந்து தாங்களின் சிந்தனையை என்னுடன் பகிர்ந்து கொண்டதிற்கு.

தெகா.

கவிதா | Kavitha said...

கொடுக்கப்பட்ட வாக்குறிதிகள் நிறைவேற்ற படுமா என்பது ஒருபக்கம்..டிவி பெட்டியால் நிச்சயம் எனக்கு பிரச்சனைத்தான்..என் மகன் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுவதில்லை, சோம்பேறிதனம் அதிகம் வந்துவிட்டது, உடம்பு பெருத்து போகிறது, எல்லாவற்றையும் விட வயதுக்கு மீறிய தகவல்களை காட்டும் நிகழ்ச்சிகளை பார்க்கிறானே என்ற கவலை.. நாம் விளையாடிய எந்த விளையாட்டும் அவனுக்கு தெரியவில்லை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. டிவி யினால் வீட்டுல தினமும் போராட்டமா இருக்குங்க..

Thekkikattan|தெகா said...

சிவா.B, நான் சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சுகிட்டீங்க, அது வந்து என்னோட 2 செண்ட்ஸ் தேர்தல் வாக்குறுதிகள் அப்படின்னு எடுட்துக்கணும். சரி வுடுங்க அதைக் பிக்ஸ் பண்ணிடுவோம்.

அந்த நிலம் சம்பந்தப்பட்ட வாக்குறுதி வந்து, ஓ.கே. ஆனா, நடந்தா சரி.

வாழ்த்துக்கள் தமிழ் தட்டச்சு பண்றதப் பத்தி. எல்லாம், போகப் போக சரியா வந்துடும்.

அன்புடன்,

தெகா.

Thekkikattan|தெகா said...

நாதரே, என் பக்கமும் உங்க காத்து வீசியிருக்கிறதப் பார்த்த தெகா கூட கொஞ்சம் பொருள் உள்ள மாதிரி எழுதுறானோ அப்படின்னு யோசிக்க வைக்கிது.

//நம்ம முன்னேறும் காலம் வர பல யுகங்கள் பிடிக்கும்!!//

அட நம்பிக்கையை வுடவேண்டாம் நாதரே! நடக்கும், எல்லாம்.

நன்றி, உங்க பின்னூட்டத்திற்கு.

தெகா.

Thekkikattan|தெகா said...

தோழி கவிதா, நல்லா சத்தம இன்னொரு முறை சொல்லுங்க என்ன உங்க வீட்டுலும் என் வீட்டிலும் நடந்துகிட்டு இருக்குன்னு. நல்லா இருப்பீங்க.

மிக அருமைய எல்லா இடத்திலும் நடக்கிறத (it is universal now) புட்டு புட்டு வைச்சிருக்கீங்க...

நன்றி பகிர்ந்துகிட்டமைக்கு...

அன்புடன்,

தெகா.

Related Posts with Thumbnails