Monday, May 08, 2006

என்னை புதைக்கிறதா இல்லெ எரிக்கிறதா...?

இந்தப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்க காரணம், இந்த மாதம் நிறைய மத நல்லிணக்க செயல்கள் நிகழ்வதாக உள்ளது... மற்ற மதத்தவர்கள் தன் மதம் சாராத விசயங்களையும் கேள்விகளாக வைத்து தெளிவுரை பெறும் இப்பட்சத்தில், இந்த சமூகம் சார்ந்த பதிவினையும் எல்லா மதத்தினரும் பாரபட்சமின்றி படித்து தாங்களது எண்ணவோட்டத்தை இங்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளவே இப் பதிவு மீண்டும் உயிர் ஊட்டப்பட்டு இங்கு கொணரப்பட்டது.

மத நல்லிணக்க வாதிகளே...! வாருங்கள், வந்து தாங்களின் கருத்துக்களையும் படையுங்கள், தெரிந்து தெளிந்து கொள்வோம்...!


இதோ செய்தி:

இன்னைக்கு இன்னொரு முக்கியமான கேள்வி இது ரொம்ப நாளா எனக்குள்ள அரிச்சிக்கிட்டு இருக்கிற கேள்விதான். இங்க இன்னிக்கு கேட்டு வைக்கிறேன். ஆனா, எல்லாருகிட்டயும் இப்பவே அழுத்தம் திருத்தமா ஒண்ணெ சொல்லிடறேன், இது எந்த மத சம்பந்தப் பட்ட விசயமும் இல்லவே இல்லை...

ஒரு சுற்றுச் சூழல் மற்றும் எதிர் கால மக்கட் தொகை பெருக்கம் இவைகளை கருத்தில் கொண்டே இந்தக் காட்டான், இதனை உங்க முன் வைக்கிறேன்.

இப்போ என்ன விசயமுன்னா, நாம எல்லோரும் என்னைக்காவது ஒரு நாள் பொசுக்குன்னு மண்டையை போட்டுடுறோம். அப்போ, மத ரீதியா பொதுவா நாமலோட விருப்பு வெறுப்பின்றி அதப் பின்பற்றி புதைக்கவோ இல்ல எரிக்கப்பட்டோ விடுறோம். இல்லையா?

இதில என்னடா இருக்குகிறீங்கா, இருங்க சொல்றேன், எனக்கு என் உடம்பை எரிக்கிறது தான் நல்ல சுகாதாரமான, பிற்காலத்தில் இடச் சிக்கல் இல்லாம பார்த்துகிறதுக்கும் அம் முறை உதவுதுன்னு கொஞ்சம் நடைமுறைப் படி சிந்திச்சு பார்த்தா தோணுது.

அடடா, எப்படிடா உனக்கும் மட்டும் இந்த மாதிரி சிந்தனை ஓட்டமெல்லாம் வருதுங்கிறீங்களா, சீரியஸ்லி, இது மாதிரி நான் யோசிச்சதிற்கு ஒருத்தரு காரணங்க. அவரு என்னொட எக்ஸ்.மாமனார் (அதென்னடா, எக்ஸ் வொய்ஃப் கேள்வி பட்டிருக்கோம், இது எக்ஸ்.மாம்ஸ், அதானே இது என் எக்ஸ் வோட அப்பா, அப்போ அவரு எனக்கு...:), அவரு சாவுறத்துக்கு முன்னாடி தன்னோட ஆசையா இந்த கோரிக்கையை எங்க முன்னாடி வைச்சுட்டு அதற்கு என்னக் காரணம் அப்படிங்கிறதையும் சொல்லிட்டு செத்துப் போனாரு.

இது நடந்தது அமெரிக்காவில, அவரு ஒரு வெள்ளைக்காரர். பொதுவா இங்கே எல்லோரும் தன்னை புதைக்கறதத்தான் விரும்புவாங்க, இல்லையா. கொஞ்சம் படிச்சவங்க, விபரம் தெரிஞ்சவங்க இப்படித்தான் தன் வாயலேயே தன்னோட உடம்பை எரிக்கிறதா இல்ல புதைக்கிறதா அப்படின்னு சொல்லி வைச்சுடறங்க.

ஐ லைக் தட் ஸ்டைல்! அவரு சொன்ன காரணத்தையே இங்க உங்ககிட்ட சொல்றேனே, மாம்ஸ் சொன்னாரு நம்மை புதைக்கிறதுக்கு ஒரு இடத்த பணம் கொடுத்து ஆசையா வாங்றோம், அங்க வைச்சாச்சுன்னா அப்புறம் எத்தனை செஞ்சுரி ஆனாலும் என் பேரக் குழந்தைங்க அங்கேயிருந்து என் கல்வெர்ட்-அ நகர்த்த விடமாட்டங்க எதிர்காலத்தில என்ன வச்ச ஊர் எவ்ளோ வளர்ச்சி அடைஞ்சாலும். அப்போ, நான் செத்துப் போயும் மத்தவங்களுக்கு இடைஞ்சலாத்தனே இருக்கேன் அப்படின்னு, ஒரு நியாயமான கேள்விய கேட்டு வைச்சாரு. எனக்கும் நியாயமா பட்டுது.

இப்ப ஒரு சின்ன தீவு மாதிரி இடங்களா எடுத்துக்குவோம், சரி, நியு Zலாந்த எடுத்துக்களாம், அப்பதான் நாம்மோட நண்பர் துள்சிங்க வந்து சொல்வாரு அங்கே என்ன பண்றங்க பெரும்பாலும் அப்படின்னு. அந்த மாதிரியான தீவுகளில் இப்படி கல்லறைங்களா நிறைய இடங்கள் ஆகிப் போன அப்புறம் எப்படி பின்னாலில் வளர்ச்சிப் பணிகள் எல்லாம் பார்துப்பாங்க? இடப் பற்றாக்குறை வராதா?

இப்ப நான் இருக்கிற ஊர் ஒரு சின்ன டவுனா இருந்துச்சு ஒரு ஐந்து வருசத்துக்கும் முன்னாலே வரைக்கும் இப்ப ஜன நெரிசல் தாங்கலே, அட ஆளுக்கு ஒரு காரவைச்சுகிட்டுதான், ட்ராபிக் ஜாம் எங்க பார்த்தாலும், சினிமால காட்டும் போதும், இந்தியாவிலிருந்து பார்க்கும் போதும் ஆசையா இருந்துச்சு ஆனா அத செஞ்சு பார்க்கும் போது பகப் பகன்னு உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது, தினமும் பண்ணும் போது.

நான் போயிட்டு வந்துகிட்டு இருக்கிற சாலை வந்து நான்கு லேன் சாலை, இரண்டு ஒவ்வொரு வழியிலும், இப்ப அது பத்தலெ, சாலையை விரிவு படுத்துறாங்க, அப்படிப் படுத்தும் பொழுது ஒரே ஒரு சிக்கல் ஒரு இடத்துல மட்டும். ஒரு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு graveyard இருக்கு நிறைய கல்லறைங்களோட. அங்ஙன வந்தவுடன் அப்படியே வேலை நின்னுப் போயிகிடக்கு. நாங்க ட்ராபிக் ஜாம்ல, ஹாய்ய ஏ.சி போட்டுகிட்டு 3 டாலருக்கு பெட்ரோல் (1 காலன்) போட்டு எரிச்சுகிட்டு மூணு மைல கடக்க 25 நிமிஷத்துக்கு மேல எடுத்துக்கிட்டு (எந்த ஈராக் புள்ளை சாவுதோ அதுக்கு, நமக்கென்ன).

அங்கதான் தோன்றினது, இந்த கேள்வி இன்னும் அழுத்தமா, இங்க கொண்டுவந்து அத எழுப்புற வரைக்கும். அந்த காலத்து இந்தியர்கள் ரொம்ப சுமார்ட் மக்கள்னு நினைக்கிறேன். ரொம்ப யோசிப்பாங்க போல, பிராக்டிகலா!

அட நீங்க என்னங்க நினைகிறீங்க, இதைப் பத்தி...

113 comments:

Partha (பார்த்தா) said...

என் ஓட்டு எரிப்பதற்கே!

இடப்பற்றாக்குறை என்பதை விட, புதைக்கப்பட்ட இடம் ஒருவரை சார்ந்தவர்களுக்கு ஒரு புனிதஸ்தலம் ஆகிவிடுவது தான் பெரிய பிரச்சனை.

இறந்தவுடன் எரித்து ஒரு பிடி சாம்பலை கையில் கொடுத்தால் முடிந்தது வேலை!

ஆமா, does burring fertilize the sand?

Sivabalan said...

தெகா!
நம்ம சென்னை, கோவை மற்றும் சில இடங்களில் எரிக்க மட்டுமே முடியும்!! நீங்க சொன்ன மாதிரி இதை எல்லா இடங்களிலும் அமுல்படுத்தலாம்!!

நல்ல பதிவு!!

Thekkikattan said...

Partha நீங்க சொன்னது ரொம்பச் சரியே. என் ஓட்டும் அதற்கே!

//ஆமா, does burring fertilize the sand?//

ஹீம்ம்...சாம்பல் வந்து கால்சியம் தானே, எல்லாம் இங்கிருந்து தானே வந்துச்சு, என்னா புதைச்சா நிறைய உரம், ஆனா கொஞ்சம் மாசுப்படுத்தல் ஆகுமே மண்ணுக்குள்ள...

எரிச்சா தீர்ந்தது கதை, என்னா மாதிரி வியாதி உள்ள ஆளா இருந்தாலும் தீ தீயாக்கிடாது...

அன்புடன்,

தெகா.

Thekkikattan said...

சிவா,

//நம்ம சென்னை, கோவை மற்றும் சில இடங்களில் எரிக்க மட்டுமே முடியும்!! நீங்க சொன்ன மாதிரி இதை எல்லா இடங்களிலும் அமுல்படுத்தலாம்!!//

ஓ பண்ணலாமே, நல்ல ஐடியாதான். ஒரு நாள் தான நடக்கும் எல்லாம்.

எப்போ சிவா நீங்க எழுத ஆரம்பிக்கப் போறீங்க!

தெகா.

இலவசக்கொத்தனார் said...

நான் ஒரு பின்னூட்டம் போட்டேனே. வரலையா?

எரிக்கும்போது காற்று மாசுப்படுமா? அப்படின்னா பார்ஸிகள் மாதிரி பிணந்தின்னி கழுகுகள் வளர்க்க வேண்டியதுதான்.

துளசி கோபால் said...

வெள்ளைக்காரங்களை இங்கே இன்னும் புதைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. கடுமையான நோய்
வாய்ப்பட்டிருந்தவங்களை மட்டும் செத்துப் போனதுக்கப்புறம் எரிக்கறது உண்டு.

இங்கே இருக்கும் இந்தியர்களுக்கு எல்லாம் எரிக்கறதுதான் வழக்கமா இருக்கு.

நானும் முதலில் இப்படிதான் சொன்னேங்க. எரிச்சுட்டு, அந்த சாம்பலை கங்கையிலே கரைச்சிருங்கன்னு
ஒரு ஸ்டேண்டிங் ஆர்டர் கொடுத்துட்டேன். அப்புரம் கங்கையிலே ரொம்ப அசுத்தம் சேர்ந்துக்கிட்டுப்
போகுதுன்னுப் படிச்சப்புறம், நம்ம அளவுலேயாவது பொல்யூஷனைக் குறைக்கலாமுன்னு இங்கே நம்ம
வீட்டுத் தோட்டத்துலெ ரோஸ் செடிக்கு உரமாப் போட்டுருங்கன்னு சொல்லிட்டேன்.

இங்கே இப்பெல்லாம் 'பெட்'ங்களுக்கும் செமெண்ட்டரி வந்துருச்சுங்க. ஆனா நம்ம பூனைங்களை எரிச்சு,
அதோட அஸ்தியை வாங்கி வச்சிருக்கோம்.நான் போறப்ப என்னோட சவப்பெட்டியிலே அதையும் வைக்கணுமுன்னு
ஏற்பாடு.

ஆனா இடம் இருந்தாலும் இல்லாட்டாலும் எரிக்கரதுதான் நல்லது. இல்லீங்களா?

நாமக்கல் சிபி said...

உருப்படியான பதிவு.
என் ஓட்டு எரிப்பதற்கே!

//ஒரு நாள் தான நடக்கும் எல்லாம்.//

உண்மை. நிச்சயமாய் தானாகவே நடக்கும்.

Sivabalan said...

துளசி கோபால்,

என்ன முடிவே பண்னிடீங்க போல இருக்குது!! நல்ல கருத்த சொணீங்க! நீங்க சொண்னது மிக சரி!


தெகா!

இப்பதான் எழுத முயற்சி பண்னிட்டுருக்கேன்!!

supersubra said...

அன்புள்ள தெக்கிட்டான்

நீங்கள் மதசார்பற்ற கேள்வியாக இதை வைத்தாலும் இந்து மத அறிவியல் விளக்கும் ஒரு வாய்ப்பாக என் பதிலை இங்கு முன் மொழிகிறேன்.

இந்து மதத்தில் பெரும்பாலும் முற்றும் துறந்த ஞானிகளை (இப்பொழுதே சொல்லிவிடேன் - போலிச்சாமியார்களை இதில் சேர்க்க கூடாது) மற்றும் நல்ல அரசர்களை மட்டும் புதைப்பதையும் மற்றபடி பெரும்பாலான சாதாரண மனிதர்களை எரிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

எரித்த பின் ஜுராசிக் பார்க் சினிமா போல் சாம்பலிலிருந்து உயிர்ப்பிக்க முடியாது. ஆனால் புதைக்கபட்ட உடம்பிலிருந்து என்றாவது ஒரு நாள் ஜுராசிக் பார்க் DNA Cloning அறிவியல் நிஜமாக மாறும் பொழுது மீண்டும் உயிர்ப்பிக கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் அப்படி மீண்டும் உயிர்ப்பித்தாலும் மனித இனத்திற்கு உபயோகமான மனிதர்களை மட்டும் உயிர்ப்பித்தால் போதும் என்பதற்கான அமைப்புதான் இந்து மதத்தின் அமைப்பு. இது முழுக்க என் சொந்த எண்ணோட்டம்.

Thekkikattan said...

அய்யோ இலவசக்கொத்தனார் இங்க வந்ததுமில்லமெ ஒரு சூப்பர்ப் விசயத்தையும் ஞாபகப் படுத்திட்டாரே, நிஜமாவே!!

இ.கொத்தனார், பார்ஸிகள் டெக்னிக் கொஞ்சம் முரட்டுத்தனமா

இருந்தாலும், ரொம்ப சென்சிபில்-ஆ இருக்கு. நன்றி!

ஹீம்...எவ்ளோவோ நாம காற்றை மாசுப் படுத்துறோம், இந்த 60 கிலோ உடம்பை எரிச்சா பூமிக் காத்து சூடேறப் போகுது...

தெகா.

நன்மனம் said...

என் ஓட்டும் எரிப்பதற்கே.

//இ.கொத்தனார், பார்ஸிகள் டெக்னிக் கொஞ்சம் முரட்டுத்தனமா இருந்தாலும்//

இத பாக்க நேரிட்டா மனுஷன் சாவுக்கு ரொம்பவே பயப்பட ஆரம்பிச்சுடுவான் எல்லாம் சாகம இருக்க வழி தேடினான்னா புமி தாங்கதையா... தாங்காது.:-))

இப்பவே சில மனுசங்களே இ.கொ சொன்னா ஜென்மங்களா இல்ல இருக்கானுங்க.

மதி கந்தசாமி (Mathy) said...

என் ஓட்டு எரிப்பதற்கே.

திபேத்தியர்களின் பழக்கம் -

http://mathy.kandasamy.net/musings/2005/10/14/288

micromagician said...

Super...

micromagician said...

EN OTTUM ERIPPADHARKEY...

VERY VERY NICE and USEFUL..

sam said...

எங்க மதத்தில் - அதாவத் நான் பிறந்த மதத்தில் கல்லறைதான் இப்போதைக்கு வழக்கம். வருஷத்துக்கு ஒருதடவை கல்லறைத் திருநாள்னு அங்க போய் மக்கள் 'திதி' கொண்டாடி...இதல்லாம எனக்கு வேணான்னு சொல்லியிருக்கேன். பாவம் பிள்ளைகள் ஆளுக்கு ஒரு புறம் இருக்கும்போது இந்த நாளில் கல்லறைக்கும் போக முடியாமல் எதுக்கு மனசளவில கஷ்டப்படணும்; பேசாம உடம்ப தானம் பண்ணிருங்கன்னு சொன்னா வீட்டுக்காரம்மா ரொம்ப சென்டியா இருக்காங்க. at least எரிச்சிருங்கன்னு சொல்லியிருக்கேன்.

Thekkikattan said...

Oh my Goodness, துள்சிங்க சாவுங்கிற விசயச்தை எவ்ளோ அருமையா எதிர் கொள்ள இருக்கீங்க, நீங்க பெரிய அளவில பேசப் படணும்மின்னு நான் ப்ரியப்படுறேன்.

//அப்புரம் கங்கையிலே ரொம்ப அசுத்தம் சேர்ந்துக்கிட்டுப்
போகுதுன்னுப் படிச்சப்புறம், நம்ம அளவுலேயாவது பொல்யூஷனைக் குறைக்கலாமுன்னு இங்கே நம்ம
வீட்டுத் தோட்டத்துலெ ரோஸ் செடிக்கு உரமாப் போட்டுருங்கன்னு சொல்லிட்டேன்.//

கண்களில் தொபுக்கடீர்னு நீர் கோத்துகிச்சுங்க அந்த வரிகளை படிச்சவுடன்.

கங்கை... நீங்க சொன்னது ரொம்ப ரொம்பச் சரி.

அதுக்குத்தான் உங்கள பிடிச்சேன், கரெக்ட்டா அடிப்பீங்கன்னு, அடிச்சுட்டீங்க.

சில பதிவுங்கள என்னத்த சொல்றது. விடுங்க. துள்சிங்க.

நிஜ அன்புடன்,

தெகா.

Thekkikattan said...

நாமக்கல் சிபி, அது என்னங்க அப்படி சொல்லிப்புட்டீங்க. உருப்படியான பதிவுன்னு.

சரி நல்ல இருந்துச்சு சொல்லிட்டீங்க. இன்னும் கடுமையா சிந்திக்கனும்.

நன்றி, சிபி!

தெகா.

நாமக்கல் சிபி said...

என்னை புதைக்கறதா இல்லை எரிக்கறதா.....

யாரிடம் கேட்டுச் சொல்ல?
இதை யாரிடம் கேட்டுச் சொல்ல?


மின்னலே - பாடலின் டியூனில் இருக்கிறது உங்கள் பதிவின் தலைப்பு!

Thekkikattan said...

சிவா...

எழுதுங்க எழுதுங்க! மெதுவா வாங்க.

சூப்பர்சுப்ர,

ஒரு அருமையான விசயத்தை இங்க வச்சிருங்கிய நிறைய அதப் பத்தி பேச ரூம்கள் உண்டு நீங்க சொன்னீங்க...

//புதைக்கபட்ட உடம்பிலிருந்து என்றாவது ஒரு நாள் ஜுராசிக் பார்க் DNA Cloning அறிவியல் நிஜமாக மாறும் பொழுது மீண்டும் உயிர்ப்பிக கூடிய வாய்ப்பு உள்ளது.//

அவ்ளோ நீண்ண்ண்ட காலங்கள் வரைக்கும் அவ்வாறு புதையுண்ட உடம்புகளிலிருந்து DNA extraction முடியுமா என்பது பற்றி எனக்கு அவ்ளொவாக தெரியவில்லை (விதிவிலக்கு உண்டு குளிர் பிரதேசங்களில் வேண்டுமானால் பதப்படுத்தப் பட்ட நிலையில் நீண்ட காலங்கள் உடம்பு பிரயோசனப் படும் வகையில் இருக்கலாம்-தெரியவில்லை).

அப்படியே முடிந்தாலும் ஆன்மிக விதிகளின் படி விழிப்புணர்வு என்பது ஒருவருக்கு நடக்கும் ஒரு phenomenon என்பதுவே, க்லோனிங் மூலமாக அந்த தன்மையை வழங்க முடியுமா?

//அதனால் அப்படி மீண்டும் உயிர்ப்பித்தாலும் மனித இனத்திற்கு உபயோகமான மனிதர்களை மட்டும் உயிர்ப்பித்தால் போதும் என்பதற்கான அமைப்புதான் இந்து மதத்தின் அமைப்பு.//

என்னங்க இப்படி அடிச்சு சொல்லிபுட்டீங்க. அப்போ இதுக்ககாத்தான் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் மெரீனா பீச்ல அடிச்சு பிடிச்சிகிட்டு இடம் பிடிக்கிறாங்களா. நமக்கு அந்த Brainy மக்கள் பின்னால் தேவைப்படலாமின்னு, உண்மையிலேயே நீங்க சொன்னது நடக்க நம்மூருல சாத்தியப் பட்ட ஐயோ நினைக்கவே பயமா இருக்கு...சில ஆட்களெ க்லோன் பண்ணி எடுத்திட்டு வந்தா...நாடு தாங்கதப்பா...
;-)

இருப்பினும் வித்தியாசமான கோணத்தில் சிந்திச்சு இருக்கிறீர்கள். நன்றி சுப்ரா!

தனியா ஒரு பதிவு போட்டுறுவோம்...தவறாமல் வந்துடுங்க...

அன்புடன்,

தெகா.

Thekkikattan said...

சிபி, நீங்க உண்மையிலேயே நம்புறீங்களா நாமதான் முதன்முதல ஒரு விசயத்தை கண்டுபிடிச்சோம் அல்லது அது மாதிரி சிறப்பா யோசிச்சோம் அப்படின்னு. எனக்கு அதில கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது, ஏன்னா, எல்லமே எப்பவுமே எதெல்லாம் நாம புதுசா கண்டுபிடிச்சாதவோ, அல்லது யோசிக்கிறதவோ நம்புற விசயங்கள் எல்லாம், நம்மை சுத்தி எப்பொழுதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

உதாரணத்துக்கு நீங்க சொன்ன அந்த படப் பாடலின் வரிகள் என்னுடைய தலைப்புடன் ஒத்துப் போன விசயத்தை வைத்துக்கொள்வோம். அந்த பாடல் ஆசிரியருக்கு எனக்கு முன்பே அவரது விழிப்புணர்வின் உச்சத்தில் எட்டியிருக்கிறது, எனக்கு கொஞ்சம் தாமதமாக இப்பொழுதுதான் எட்டியது, எனவே எனக்கு இது புதிய அனுபவம், அதன் மூலமாக நாம் ஒரு உண்மையை தாமதமாக உணர்கிறோம் அவ்ளோதான். இது போலத்தான், எல்லா உண்மைகளுமே, எப்பொழுதும் இப் ப்ரபஞ்சத்தில் நிரம்பிக் கிடக்கிறது, நாமதான் நேரம் எடுத்துக் கொள்கிறோம், அவைகளை உணர்வதற்கு!

என்ன கொன்னுபுட்டேனா...ஒரு பதிவில் இதனைப் பற்றி எழுதியிருக்கிறேன், நேசி என்ற பெயரில்...ஆபூர்வக் காதல் என்ற தலைப்பில் வந்து கொண்டே இருக்கிறது.

வாங்க அடிக்கடி நிறைய இது போல விசயங்களை கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

தெகா.

Sam said...

//என்ன கொன்னுபுட்டேனா//
என்ன தெக்கி, உங்க ஆங்கிலப் பதிவுகளையும் படிக்கிறேன். இமயமலைப் பக்கம் கொஞ்ச நாள்
போனீங்களா :-)) உங்க எண்ண ஓட்டம் பிடிச்சிருக்கு.

சூப்பர் சுப்ராவிற்கு ஒரு கேள்வி கேட்கலாமா?
குளோனிங் முறையில ஒரு உயிரக் கொண்டு வந்தாலும், அது பிறக்கிற நேரம் கால மாறுதலால்
அதுக்கு வேற சாதகம்தானே! அவருக்கு சாதகத்தில நம்பிக்கை இருக்கிறதால இந்தக் கேள்வி!

அன்புடன்
சாம்

Thekkikattan said...

நீங்க சொல்லியிருந்த விதம் மிக அருமை...

//எங்க மதத்தில் - *அதாவத் நான் பிறந்த மதத்தில்* கல்லறைதான் இப்போதைக்கு வழக்கம்.//

நீங்கள் கூறுவதுடன் முழுமையாக என்னால் ஒத்துப் போக முடிகிறது.

உடம்ப தானமா?...ஐயா! எங்கோ போயீட்டீங்க...வீட்டுகார அம்மாவுக்கும் கொஞ்சம் உங்ககிட்ட இருக்கிற wisdom-த்தா பகிர்ந்துக்கங்க...இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப சுயநலந்தா போங்க.

அந்த பக்கமும் போயிருக்கேன் சும்மா சுத்திப் பார்க்க...ஓ படிக்கிறீங்களா...

நம்ம 'சுப்ராதான்' தாரளமா நீங்க கேளுங்க க்ளோனிங் பத்தி...எல்லோரும் தெரிஞ்சுக்குவோம்.

அன்பன்,

தெகா.

Sam said...

இங்கே 2 சாம் இருக்காங்க!!!!!!
அன்புடன்
சாம்

Thekkikattan said...

சாம்,

ஹா..ஹா..ஹா...

பெரும் மதிப்பிற்குரிய சாம் நீங்கள் எழுதும் விதத்தை வைத்தும் அதன் context-யை வைத்துமே இது இந்த சாம்தான் என்றும், உங்கள் பெயரில் வைத்து எலியை தட்டினால் உங்கள் profile பக்கம் என்னை எடுத்துக் கொண்டு போகிறதே...!

இப்ப என்ன பண்ணுவீங்க...

ஆமா, சாம் அவர்களே நீங்க எத்தனை மணிக்கு காலையில எழுந்துருப்பீங்க... ;-)

தெகா.

Sam said...

உங்க பின்னூட்டத்தில் முதல் சாம் 'தருமி'.
அன்புடன்
சாம்

Thekkikattan said...

சாம் (#2)

ஒரே குழப்பமா இருக்கே...நான் என் சொட்டைத் தலையை போட்டு தடவிக் கிட்டே இப்ப இங்க ஒரு கேள்வி...சாம் (இரண்டாவது சாமுக்கு) உங்களின் பெயர் *சாமுத்ரா* என்றும் இருக்குமே அவரா நீங்கள்?

அப்படியாயின், குழப்பத்திற்கு மன்னிக்க!

நீங்கள் எனது ஆங்கிலப் பதிவு படிப்பவராயின் ஏன் தாங்களின் கருத்துக்களை அங்கு என்னுடன் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது. அவைகள் என்னை வேறு மாதிரியும் சிந்திக்க தூண்டலாமல்லவா?

மேலும் தாங்களின் கருதுக்களை இங்கு விட்டுச் சென்றமைக்கு நன்றி...சாம் (#2).

உங்களின் கொழுந்து முழுதும் படித்தேன் இப்பொழுதுதான். மிகவும் அருமை. ஏன் நிறுத்திவிட்டீர்கள் அங்கு?

அன்புடன்,
தெகா.

Sivabalan said...

தெகா!

இந்த பதிவில் யாரும் மதம் சார்பாக எதிர்ப்பு பின்ண்னூடமிடாமல்யிருபது ஆச்சிரியமாக / சந்தோசமக உள்ளது!!

Sivabalan said...

தெகா!

ஆங்கில பதிவின் முகவரி கொடுங்க!!
என்னனு பார்ப்போம்/ படிப்போம்!!

Sam said...

சமுத்ராவை சாம் ஆக்கியது நீங்கதான். நான் தீபக் பற்றி கருத்துச் சொன்னேன்

Thekkikattan said...

சிவா, ஆமால்லெ இருந்தாலும் நான் ஒரு disclaimer மாதிரி ஒண்ணு கொடுத்துட்டோமில்லெ ஆரம்பத்திலேயே.

இருப்பினும் ரொம்ப மென்மையான ஒரு பதிவுதானே எல்லோரும் ஏத்துக்கிற யோசிக்கிற மாதிரி.

அப்படி யாரவது ஆரம்பிச்சியிருந்த பின்னூட்ட வாசிகள் பிச்சுப் புடுவாங்கள்ளெ பிச்சு.

இங்கு ஒண்ணு நான் கவனிச்சிக் கிட்டு வாரேன் (தமிழ் மணத்தில...). ஒண்ணும் சொல்றமாதிரி இல்லெ போங்க.

அன்புடன்,

தெகா.

இலவசக்கொத்தனார் said...

//இங்கு ஒண்ணு நான் கவனிச்சிக் கிட்டு வாரேன் (தமிழ் மணத்தில...). ஒண்ணும் சொல்றமாதிரி இல்லெ போங்க.//

இது என்னதுண்ணா?

Thekkikattan said...

ஓ சாம்,

சாரிங்க (பொதுவா நான் ஃபார்மாலிடிஸ் பார்க்கிறது இல்லெ), கோவிச்சுக்கிட்டீங்களா...? புரியுது புரியுது.

சிவா,

அப்பாலே போயி படிச்சா உங்க கருத்த மூஞ்சில அடிச்ச மாதிரி பட்டுண்னு சொல்லிடணும்...இந்தாங்க அந்த சுட்டி

http://orani-sittingby.blogspot.com/

அன்பு,
தெகா.

Thekkikattan said...

இ.கொ...

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா வந்துட்டீங்களே...என்னையெ மானிடர் பண்ணிகிட்டே இருக்கீங்களா...இ.கொ

சாமி, நான் வரலே இந்த விளையாட்டுக்கு...

supersubra said...

அன்புள்ள சாம்

எனக்கு சோதிடம் ஜாதகத்தில் நம்பிக்கை உண்டு. ஓரளவு படித்திருக்கிறேன். அதன் complexities ஓரளவுக்கு மேல் என்னால் பொறுமையாக படித்து புரிந்து கொள்ள முடியவில்லை.

நீங்கள் கேட்ட கேள்விக்கு என் பதில். ஜாதகம் வாழ்வில் வரும் இன்ப துன்பம் ஏற்படுத்தும் வினைகளுக்கான ஒரு வழிகாட்டி. அதை எதிர் கொள்வதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் (உருவாக்குவதும்)அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்தது. ஒரு மேஜையிலிருந்து ஒரு பொருள் விழும் என்று சுட்டிக்காட்டுவது ஜாதகம். அது உடையுமா உடையாதா என்பது அதை பிடிக்க உங்கள் கை செயல் படும் வேகத்தை பொறுத்தது.

அதனால் வாழ்நாள் முழுவதும் சேமிக்கப்பட்ட ஒரு நல்ல குணத்தின் பதிவு அவருடைய DNA க்களில் நிரந்தர மாறுதல் ஏற்படுத்தியிருக்கும் என்பது என் ஊகம்.தொடர்ந்து செய்யப்படும் ஒரு செயல் பழக்கத்தை ஏற்படுத்தும். அதை வாசனை என்றும் கூறுவார்கள். வாசனை என்பது ஒரு குணத்தை நிரந்தரமாக பதியவைக்கும் முறை. அது பிறவிகளைத்தாண்டி தொடர்ந்து வரும் என்பது முன்னோர் நம்பிக்கை. முற்பிறவி வாசனை என்று சொல்லும் வழக்கம் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

ஆனால் இது மிகவும் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட வேண்டும்.

இலவசக்கொத்தனார் said...

//.என்னையெ மானிடர் பண்ணிகிட்டே இருக்கீங்களா.//

அதெல்லாம் ஒண்ணும் இல்லை. தமிழ்மண முகப்பில் மாறி மாறி நம்ம பதிவுதான் வருதா, அதான் ஒரு ஆவல்.

ஆனாலும் நம்ம பதிவுக்கு வந்து உங்க பங்குக்கு களப் பணி ஆற்ற வரக்காணுமே. ஹிஹி

இலவசக்கொத்தனார் said...

ஆஹா, இங்க வந்து ஆளைக்காணுமேன்னு கம்பிளெய்ண்ட் குடுத்துட்டு அந்தப் பக்கம் போனா நம்ம பதிவுல உங்க வருகை. அசத்தல் டைமிங் சாமி.

Thekkikattan said...

நன்மனம்,

உண்மையிலேயே நீங்க என்ன ரொம்ப சிரிக்க வைச்சுட்டீங்க, இப்படிச் சொல்லி....

//இத பாக்க நேரிட்டா மனுஷன் சாவுக்கு ரொம்பவே பயப்பட ஆரம்பிச்சுடுவான் எல்லாம் சாகம இருக்க வழி தேடினான்னா புமி தாங்கதையா... தாங்காது.:-)) //

உண்மைதான் நீங்க சொன்னது...பாருங்க சாகப் போற கிழத்துக்கெல்லாம் என்ன ஆசைன்னு...

மனுசனுக்கு எப்பங்க ஆசையே இல்லாத நெல...பிரியலங்கா!!

நன்றி, இந்த பக்கம் வந்து போனதுக்கு.

தெகா.

நாமக்கல் சிபி said...

//மின்னலே - பாடலின் டியூனில் இருக்கிறது உங்கள் பதிவின் தலைப்பு!//

பின்னூட்டத்தை கவனமாகப் பாருங்கள் தெகா!

பாடலின் டியூனோடு ஒத்துப் போகிறது என்றுதான் கூறியுள்ளேன். பாடல் வரிகளோடு அல்ல!

பாடல் வரிகள்
"அட என்ன இது! என்ன இது இப்படி மாட்டிக் கொண்டேன்,

இது பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரிடம் கேட்டுச் சொல்வேன்"

என்று இருக்கும்!

Thekkikattan said...

சிபி,

என்னா சிபி, தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களா, நான் எப்போதான் சென்சிபில்-ஆ பேசப் போறேன்னு தெரியலயே...

சிபி, நான் சொல்லி இருக்கிறதே திரும்ப ஒரு முறை தத்துவ ஆங்கிள்-லெ இருந்து படிச்சு பாருக்களேன், நான் என்ன சொல்லவாரேன்னு தெரியும்.

நீங்க சொல்ல வருவது எனக்குப் புரியுது, நான் என்னெ defend பண்ணிக்கல்லெ சிபி.

What I was trying to say is "whatever the thoughts we think and bring it out; those thoughts are already out there existing and nothing is new." Though, those thoughts when it occurs to us, it is unique to our experience to us. That is it. Do you get me Sibi?

Love,

Theka.

Sam said...

//முற்பிறவி வாசனை என்று சொல்லும் வழக்கம் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
ஆனால் இது மிகவும் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட வேண்டும்//.

நீங்கள் இயற்கை (nature)என்பதை மட்டும் சுட்டிக் காட்டுகிறீர்கள். வளர்ப்பு சூழ் நிலை (nurture) என்றும் இருக்கிறதே!
ஹிட்லரின் DNAவை எடுத்து உயிர்ப்பிப்போமேயானால், அவர் வாழ் நாளில் இருந்த சூழ் நிலைகள்
திரும்ப வரப் போவதில்லை. அவருடைய கொடூரமான சிந்தனைகள் செயல்படுத்தப் பட்டாலும்
பாதிப்புக்குள்ளாவோர் பல லட்சம் பேராக இருக்க முடியாது. இதைத்தான் நான் சொல்ல வந்தது.
பெற்றோர்கள் இந்த முறை வேறு விதமாக வளர்க்கலாமல்லவா! ஒருவரை குளோன் செய்வதால்
அசலின் அதே பாதிப்பு ஏற்பட வழியில்லை என்று சொல்ல வந்தேன். உங்களை மாதிரி எனக்கும்
சாதகத்தில் நம்பிக்கை உண்டு.

அன்புடன்
சாம்

நாமக்கல் சிபி said...

//சிபி, நான் சொல்லி இருக்கிறதே திரும்ப ஒரு முறை தத்துவ ஆங்கிள்-லெ இருந்து படிச்சு பாருக்களேன், நான் என்ன சொல்லவாரேன்னு தெரியும்.
//

புரிகிறது தெகா! முதலிலேயே உங்கள் கேள்வி புரிந்துவிட்டது! ஆனால் பாடல் வரிகளோடு ஒத்துப் போனதாக நீங்கள் நினைத்து விட்டீர்களோ என்றுதான் நினைத்தேன்.

//அந்த பாடல் ஆசிரியருக்கு எனக்கு முன்பே அவரது விழிப்புணர்வின் உச்சத்தில் எட்டியிருக்கிறது, எனக்கு கொஞ்சம் தாமதமாக இப்பொழுதுதான் எட்டியது, எனவே எனக்கு இது புதிய அனுபவம், அதன் மூலமாக நாம் ஒரு உண்மையை தாமதமாக உணர்கிறோம் அவ்ளோதான்//

இதைவைத்துதான் நீங்கள் இன்னும் அப் பாடலைக் கேட்காமலிருக்கக் கூடும் என்று நான் எண்ணினேன்.

தவிர

//மின்னலே - பாடலின் டியூனில் இருக்கிறது உங்கள் பதிவின் தலைப்பு!//

என்று நான் எழுதியபோது கூட நீங்கள் சொன்னதுபோல் நாம்தான் கண்டுபிடித்தோமா/முதன்முதலாக இப்படி யோசிக்கிறோமா? என்றெல்லாம் எனக்குள் தோன்றவில்லை.

பாடலின் டியூனில் இருக்கிறது உங்கள் பதிவின் தலைப்பு என்று நிறைய பேருக்கு தங்கள் பதிவின் தலைப்பை பார்த்தவுடன் தோன்றியிருக்கலாம்.
பின்னூட்டமிடாமல் போயிருக்கலாம். அல்லது பின்னூட்டமிடும் அளவிற்கு இது ஒரு விஷயமே அல்ல என்று கருதியிருக்கலாம்.

(பிகு: நான் கூட அதைச் சொன்னது மேலும் ஒரு பின்னூட்டத்தைச் சேர்க்க மட்டும்தான். ஹி.ஹி)

(நானும் அதற்குப் பதில் சொல்லி, பின் வேறு ஒரு கோணத்தில் உங்களுக்கு கேள்வி வைத்ததற்கும் அதே காரணம்தான் என்று நீங்களும் சொல்லக் கூடும்...ஹி..ஹி)

சந்தோஷ் aka Santhosh said...

thekkikattan,
என்னோட ஓட்டு எரிப்பதற்கும் இல்லை புதைப்பதற்கும் இல்லை. முடிந்த அளவிற்கு உறுப்புக்களை தானம் செய்து விட்டு பிறகு உடலை மருத்துவக்கல்லூரிக்கு கொடுப்பதற்கு. வாழும்போது தான் உபயோகமா எதும் செய்றது இல்ல செத்தபிறகாவது இது மாதிரி ஏதாவது செய்யலாம் இல்லையா?

Thekkikattan said...

சிபி,

பாருங்களேன் நீங்கள் எதார்த்தமாக ஒரு விசயத்தை எழுப்பப் போய், அது எவ்ளோ விசயங்களை அலசி ஆராய பிரயோசனப் பட்டிருக்கிறது என்பதை. ஆதனால் தான் பின்னூட்டம் நம்மிடையே முக்கியத்துவம் தெரிய புரிய வரும்...

இப்பொழுது பாருங்கள் சாமுக்கும் சூப்பர் சுப்ரவுக்கும் ஒரு நல்ல டாபிக் கிடைத்திருக்கிறது...

நானும் க்ளோனிங்க் பற்றி எனது அபிப்பிராயத்தை இங்கு அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

மேலும், இதோ சந்தோஷ்-வும் நல்ல ஒரு பாயிண்ட் கொடுத்திருக்கார். அதனைப் பற்றி நம்மின் கருத்து என்னா?

தெகா.

நாமக்கல் சிபி said...

//பாருங்களேன் நீங்கள் எதார்த்தமாக ஒரு விசயத்தை எழுப்பப் போய், அது எவ்ளோ விசயங்களை அலசி ஆராய பிரயோசனப் பட்டிருக்கிறது என்பதை. ஆதனால் தான் பின்னூட்டம் நம்மிடையே முக்கியத்துவம் தெரிய புரிய வரும்...
//

உண்மைதான் தெகா!
அதே போல் இன்னொரு மனவியல் ரீதியான உணர்வு ஒன்று உண்டு! அதை நீங்கள் எப்போதேனும் உணர்ந்திருக்கிறீரா?

எதாவது ஒரு இடம்/சம்பவம்/சம்பாஷனை கடந்து முடிந்தபின் இதை நீங்கள் ஏற்கனவே நாம் ஏற்கனவே அறிந்தது போல் ஓர் உணர்வு ஏற்படும். சில சமயம் அடுத்த வசனம் என்ன என்று கூட நமக்கு ஏற்கனவே தெரியும் என்பது போல் ஓர் உணர்வு. இதை நான் சில சமயம் உணர்ந்து வியந்திருக்கிறேன். நீங்கள் எப்படி?

நாமக்கல் சிபி said...

//முடிந்த அளவிற்கு உறுப்புக்களை தானம் செய்து விட்டு பிறகு உடலை மருத்துவக்கல்லூரிக்கு கொடுப்பதற்கு//

இதுவும் நல்ல யோசனைதான்.
ஆராய்ச்சிக்கும்/பிறருக்கு பயன்படக்கூடிய பகுதிகள் போக மீதம் இருக்கும் உடலை எரித்துவிடச் சொல்லலாம்.

Thekkikattan said...

சிபி,

ஹீம்...பாரநார்மல்...நீங்கள் கூறும் உணர்வுக்கு Deja Vu என்று கூறுவார்கள்...

சில விசயங்கள் எனது அனுபவத்திலும் நடந்திருக்கிறது. ஆனால் நிறைய படித்து விட்டீர்களென்றால் சில விசயங்களில் நீங்கள் முகமூடி அனிந்து நம்முடைய intuitive உணர்வுகளை கொலை செய்து விடவேண்டும்(விடுகிறோம்) to be with majority.

உதாரணமாக, ஒருவர் பி.எச்டி பண்ணிவிட்டார் என்றால் நிர்ணயித்தபடி அவர் இதனைத்தான் நம்ப வேண்டும், இதனை அடிப்படையிலேயே மறுத்து விட வேண்டும்மென்ற மனப் பாங்கு.

அதனை உண்மையிலேயே தனது அனுபவத்தின் மூலமாக உணர்ந்து கூறுகிறார என்பது இரண்டாம் பட்சமே. இயற்கையில் எதுவும் சாத்தியமே.

நம் புலன்களை தாண்டி நிறைய விசயங்கள் நமக்கு எட்டமலே இருக்க வாய்ப்புகள் இருக்கிறது அல்லவா. உதராணமாக நம்மால் ரேடியோ அலைகளை பார்க்க முடிவது இல்லை, அதனால் அவை காற்றில் இல்லை என்று கூறிவிட முடியுமா...

அது போலத்தான்...நம் புலன்களுக்கு எட்டாத என்னென்னோவோ...!!!

தெகா.

பொன்ஸ்~~Poorna said...

இதெல்லாம் யோசிச்சதே இல்லைங்க.. ஆனா, எரிச்சிட்டா தொல்ல விட்டுது.. அதனால எரிப்பதுக்குத் தான் என் வோட்டு.. யாராவது, ஆராய்ச்சி தான் பண்ணுவேன்னு அடம்பிடிச்சா குடுத்துற வேண்டியது தான்:)

கவிதா|Kavitha said...

என் ஓட்டு எரிப்பதற்கே!

இலவசக்கொத்தனார் said...

இப்போதைக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன? எக்ஸிட் கருத்தாய்வுகள் எரிப்பது தான் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கின்றனெவே....:)

Thekkikattan said...

மதி அவர்களே, ரொம்பச் சீக்கிரம் நீங்கள் கொடுத்த சுட்டியில் பயணிக்க இருக்கிறேன். படித்துவிட்டு எப்படி இருந்தது என்பதனை விபரமாக அலசுவோம்.

நன்றி, இந்த பக்கமா வந்து உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு...

அன்புடன்,

தெகா.

இலவசக்கொத்தனார் said...

50வது பின்னூட்டம்.

வாழ்த்துக்கள் :)

Thekkikattan said...

இ.கொ,

பின்னூட்டங்கள் பெருவதால் ஏதாவது $$ சம்பாதிக்கிறோமா...? ஒரு முக்கியாமான விசயங்களை நாம் இங்கு முன் நிறுத்தும் போது...நாம் நமக்கு தெரிந்த விசயங்களை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த ப்ளாக் என்ற ஒரு முறையே வந்திருக்க வேண்டும்.

தினப் பத்திரிக்கைகளுக்கும் ஏனைய ஏடுகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இதற்கு உண்டு ஏனெனில் எழுதியாவர் readily available to ask as to why he thought that way and the stuff...you can raise and share your opinion not to just say hi and add up the #.

இ.கொ அப்படி பின்னூட்டம் தான் இலக்கு என்றால், நான் இங்கு சொல்கிறேனே அதனை சொல்லி வைக்கமாட்டேன்.

பிரிதொரு நேரத்தில் இதனை திருப்பி பார்க்கும் பொழுது, இ.கொ என் வாழ்வில் சில சுவடுகளை விட்டுச் சென்றதை நான் உணர வேண்டும், அது உங்களால் முடியும் என்று நம்பினால், உங்களால் முடியும்.

மீண்டும் பின்னூட்டம் ### நமது இலக்கு அல்ல இ.கொ.

இது கூட ஒரு பகிர்தல்தான் தவறாக எண்ணவேண்டாம்.

Anyway, thank you for paying attention to me!!!

பி.கு: நகைச்சுவை உணர்வு இல்லாத தெகான்னு நீங்க நினைப்பீங்க...கரெக்ட்...மத்தபடி தவறாக எண்ண வேண்டாம் உங்கள் பின்னூட்டங்கள் எனக்குத் தேவை எதிர்காலத்தில் (பதிவுகளில்)...ஹி...ஹி...ஹி

Theka.

நாகு said...

என் ஓட்டும் எரிப்பதற்கே!

Thekkikattan said...

சூப்பர் சுப்ராவிற்கு ஒரு கேள்வி இங்கு, நீங்கள் கூறியிருக்கிறீர்கள்;

//அதனால் வாழ்நாள் முழுவதும் சேமிக்கப்பட்ட ஒரு நல்ல குணத்தின் பதிவு அவருடைய DNA க்களில் நிரந்தர மாறுதல் ஏற்படுத்தியிருக்கும் என்பது என் ஊகம்.//

மேலே கூறிய கூற்று உண்மையெனில் ஆன்மா (சுயம்) தனது கடந்த கால வாசனைகளுடன் இங்கு தனது தோடலை புதிய உடம்பிலிருந்து தொடங்குவது இல்லையா...?

நான் படித்த வரை, உடம்பு என்பது ஆன்மா அணிந்து கொள்வது (மாத்தி மாத்தி ஒரு வேறு சட்டையை போல), தனது வேட்கையை தணிக்கும் மட்டும், என்றல்லவா படித்ததாக ஞாபகம்.

இபொழுது நீங்கள் அவ் வாசனைகளை உடம்பின் DNA விருந்து பெறமுடியும் என்கிறீர்கள்.

இருப்பினும், பண்பு நலன்கள், குண நலன்கள் மரபணு கீழிற(க்)கம் அடைவதில்லை என்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்பட்ட உண்மை. அதற்கு உ.தா: சிறந்த விளையாட்டு நபரின் திறமைகள் அவரது சந்ததிக்கு எடுத்துச் சொல்லப் படுவதில்லை என்பது.

இருப்பினும் ஆன்மா கோட்பாட்டில் சில விளக்கங்கள் எனக்கு போதுமானதாகவும், சென்சிபில் ஆகவும் இருப்பதாக கருதுகிறேன். இப்பொழுதுக்கு!

ஏன் ஒரே பெற்றொர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஒரே மாதிரியான குணத்தையோ, திறமைகளையோ பெற்றிருப்பதில்லை?

அது எங்ஙனம் மாறுபடுகிறது?

நீங்கள் கூறும் கூற்று உண்மையெனில் எல்லா பிள்ளைகலும் தன் தாய் தந்தையெரின் குணத்தை ஒட்டியல்லாவா இருக்க வேண்டும்? அவ்வாறு இருப்பதில்லையே, ஏன்?

வாங்க பேசுவோம்!!

அன்பு,
தெகா.

Sivabalan said...

உங்க ஆங்கில முகவரிக்கு நன்றி!!

100 பின்ணூடத்தை நோக்கி.. வாழ்த்துக்கள்!!

கால்கரி சிவா said...

தெகா சார்,

உடம்பை தானம் பண்ணுவதுதான் சிறந்த வழி. இறந்தவுடன் உபயோகப் படும் உயறுப்புகளை வேண்டியவற்கு தானம் தந்துவிட்டு மற்ற உறுப்புகளை மருத்துவம் படிக்கும் மாணவர்க்கு உபயோகமாக அவர்கள் ஆராய்ந்து கற்றுக் கொள்ள வசதியாக தந்துவிடலாம்.

Thekkikattan said...

சந்தோஷ்,

நீங்க சொன்னது....

//முடிந்த அளவிற்கு உறுப்புக்களை தானம் செய்து விட்டு பிறகு உடலை மருத்துவக்கல்லூரிக்கு கொடுப்பதற்கு.//

நான் உங்க கூட ஒத்துப் போகிறேன், ஆனா பாருங்க அந்த எண்ணம் வந்ததா...சரினுட்டு DMV போயி ட்ரைவர் லைசென்ஸ் வாங்கும் போது கேட்டாங்க...do you want to be an Organ Donor_ன்னு? சுளீர்னு, யாரோ சூடு வைச்சமாதிரி இருந்தது...அப்புறமா கொஞ்சம் நிதானத்துக்கு வந்தவுடன் "சரின்னு" சொல்லிட்டேன்.

அந்த சிரிது இடைவேளையில் என்ன நடந்ததுன்னு தெரியல. பயமா? என்னாட இவன் இப்பவே உயிரோட இருக்கும் போதே என் சாவுக்கு அப்புறம் இதெ பண்ணிக்கட்டுமான்னு கேக்கிறானே அப்படின்னு...

ஏங்க, உயிரோடு இருக்கும் போதும் நமக்கு பல கவலை, நாளைக்கு காலைலெ நாம்மோட வேளை இருக்குமா இருக்காதா, அப்பிடி இப்பிடின்னு எல்லாத்த பொருத்தும் கவலை பயம், சாவை பார்த்தும் பயம் கவலை...வாழவும் பயம்...ஆமா, நாம என்னதாங்க பண்றேம் இங்க...

இதான் செத்து செத்து பொழைக்கிறதா, சந்தோஷ்?

ஆமா, நீங்க ஆர்கன் டோனர் தானே, இங்கே ;-) ?

தெகா.

Thekkikattan said...

பொன்ஸ், கவிதா வருகைகு நன்றிகள்!

பின்னூட்டமின்னவே பயமா இருக்கு...

அதொட சீரியஸ்னெஸ் போயே போச்சு...இதெல்லாம் ஒரு ப்ளாக்-ஆ அப்படின்னு தோனுது.

சரி விடு...எல்லாம் கால போக்குல சரியாயிடும்!!!

தெகா.

supersubra said...

//பின்னூட்டம் பற்றி -பிரிதொரு நேரத்தில் இதனை திருப்பி பார்க்கும் பொழுது, இ.கொ என் வாழ்வில் சில சுவடுகளை விட்டுச் சென்றதை நான் உணர வேண்டும், அது உங்களால் முடியும் என்று நம்பினால், உங்களால் முடியும். //

நான் இப்பொழுதே என் குடும்பத்திடம் சொல்லிக்கொண்டிருகிறேன் இணையதளத்தின் உதவியுடன் நான் எனது சிந்தனை ஓட்டங்களைப்பதிப்பதன் மூலம் என் காலத்திற்கு பிறகும் நான் வாழ்வேன் என் கருத்துக்களை வருங்கால சந்ததியினர் அலசுவர் என்று பெருமையுடன்.
//மேலே கூறிய கூற்று உண்மையெனில் ஆன்மா (சுயம்) தனது கடந்த கால வாசனைகளுடன் இங்கு தனது தோடலை புதிய உடம்பிலிருந்து தொடங்குவது இல்லையா...?//

இதற்கான பதிலை என் மறு பிறவி பற்றிய பதிவில் http://yennottam.blogspot.com/2006/03/blog-post_31.html
கொடுத்திருகிறேன்.ஒருவரின் எல்லா பிறவிகளும் ஒரே ஆன்மாவின் பதிப்பாக பிறப்பதில்லை. இங்கே அந்த ஒரு என்ற சொல்லுக்கே இடமில்லை.

//நான் படித்த வரை, உடம்பு என்பது ஆன்மா அணிந்து கொள்வது (மாத்தி மாத்தி ஒரு வேறு சட்டையை போல), தனது வேட்கையை தணிக்கும் மட்டும், என்றல்லவா படித்ததாக ஞாபகம் இபொழுது நீங்கள் அவ் வாசனைகளை உடம்பின் ட்ணா விருந்து பெறமுடியும் என்கிறீர்கள்.//
மிகவும் சரி. ஆனால் ஒரு திருடன் போட்டிருந்த சட்டையின் வியர்வை வாசனை மூலம் போலிஸ் நாய் அத்திருடனை கண்டு பிடிக்க முடியுமல்லவா.அது போல் ஆன்மாவின் வாசனையும் ஓரளவுக்கு அது வாழ்ந்த உடலில் இருக்கும் என்பது என் கருத்து.

Sivabalan said...

தெகா,

எரிச்சா, ஒரு கலர் டிவியும், கம்புயூட்டரும் இலவசமுன்னு அறிவிச்சிட்டால், பிரச்சனை முடியுமுன்னு நினைகிறென்!!

நீங்க என்ன நினைக்கிறெங்க !!!

சந்தோஷ் aka Santhosh said...

தெகா,
நம்மளோட உடம்பும் உயிரும் இந்தியாவுக்குத்தான் ஏதோ பஞ்சம் பிழைக்க வந்த இடத்துல வந்தோமா போனோமான்னு இருக்கணும்.
சாவு எப்பவோ வரத்தான் போகுது அதுக்காக எதுக்கு இப்பவே செத்து செத்து பிழைக்கணும் அப்படிங்கற mind set வந்துட்டா அந்த பயம் போயிடும் தெகா.

Thekkikattan said...

சுப்ரா...

பின்னூட்டங்கள் பற்றி மிகவும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்... இங்கு *மணத்தில்* சில நேரங்களில் பின்னூட்டம் என்பது அதன் பொருளையே இழந்து நிற்கிறது. எண்ணவோட்டங்கள் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்வது போல் தெரியவில்லை.

இருப்பினும் சுப்ரா...நீங்கள் கூறிய கீழ்காணும் விசயம் எனக்குப் பிடிபட வில்லை... உடம்பின் வாசனை எப்படி ஆன்மாவிற்கு?

//மிகவும் சரி. ஆனால் ஒரு திருடன் போட்டிருந்த சட்டையின் வியர்வை வாசனை மூலம் போலிஸ் நாய் அத்திருடனை கண்டு பிடிக்க முடியுமல்லவா.அது போல் ஆன்மாவின் வாசனையும் ஓரளவுக்கு அது வாழ்ந்த உடலில் இருக்கும் என்பது என் கருத்து.//

இது எப்படி சாத்தியப்படும்... வேண்டுமானால் உடம்பை கொண்டு சில கரும வினைகளை (action) சேகரிக்கக்கூடும்... கொஞ்சம் விளக்கம் தேவை...

தெகா.

நாமக்கல் சிபி said...

//செத்து செத்து பிழைக்கணும் //

இந்த வெளையாட்டு எங்க தலை கைப்புவுக்கு பிடிக்கவே பிடிக்காது!

அதுசரி! நீர் இன்னும் ஒரு முடிவுக்கே வரலையா?

Samudra said...

ஹை! எனக்கு புடிச்ச டாபிக்.

நாங்க நெம்ப வெவரமுங்க.எங்க பாட்டன்,அவிங்க அப்பன் எல்லாரையும் எங்க தொட்டத்துல தான் எரிச்சோம் எரிச்சிட்டு அந்த இடத்துல ஒழவு ஓட்டிபோட்டொம்.அவிங்களே அப்பிடி செஞ்சு போடுங்கன்னு சொல்லி வச்சுட்டு தான் வனக்கம் போட்டாங்க.

சமாதி கிமாதின்னு அந்த கெரகமெல்லாம் நமக்கு ஆகாதுங்க.

Thekkikattan said...

சிபி,

//அதுசரி! நீர் இன்னும் ஒரு முடிவுக்கே வரலையா?//

ஏன்யா, நீர் வாயவிட்டலே சிரிப்பா இருக்கு?

சிரிப்பா சிரிக்கியளே...கொடுத்து வைச்சவரு...

ரொம்ப சீக்கிரம் வாக்குப்பதிவ எண்ணி எல்லோரையும் என்ன பண்றது அப்படின்னு சொல்லிடுவோம்... :-))))

Thekkikattan said...

சமுத்ரா,

படிக்கும் போதே தெரியுதே எம்புட்டு விவரமுன்னு, அப்புச்சிகா...! நல்லாருங்க! நீங்க சொன்னதா படிச்சுப்புட்டு சிரிப்பு தாங்ளாப்பு....

//நாங்க நெம்ப வெவரமுங்க.எங்க பாட்டன்,அவிங்க அப்பன் எல்லாரையும் எங்க தொட்டத்துல தான் எரிச்சோம் எரிச்சிட்டு அந்த இடத்துல ஒழவு ஓட்டிபோட்டொம்.அவிங்களே அப்பிடி செஞ்சு போடுங்கன்னு சொல்லி வச்சுட்டு தான் வனக்கம் போட்டாங்க.//

நீங்க ஓட்டு போட்டீகளா இந்த எலெக்க்ஷான்-லா. இல்லெ போடமாட்டீங்க அப்படின்னு சிலுப்பிகிட்டு இருந்திகளே அதான் கேக்கிறேன்...

கிரகமப்பு ;-))))

Sivabalan said...

தெகா,

அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தோனும்!!

பெறிய அளவுல பிரச்சாரம் பண்னுனா பலன் இருக்கும் நினைகிறென்!!

நாமக்கல் சிபி said...

தெகா!
ஒரு காயினை எடுத்து டாஸ் போட்டு பார்த்து சீக்கிரம் முடிவைச் சொல்லுங்க!
நமக்கு இன்னும் நிறைய வேலை இருக்குல்ல!

சட்டு புட்டுன்னு காரியத்தை முடிச்சிட்டு கிளம்பனும்!

(...என்னாது.. இதா வந்துட்டேன்...இவரு இப்ப ஒரு முடிவுக்கு வந்துடுவார்.. இப்ப வந்துட்டேன்...)
:-)வேறொரு இடத்துல கூப்பிடறாங்கப்பா...

Thekkikattan said...

சிபி,

செத்த இருளே, இன்னும் ரெண்டு மூணு பேரு முக்கியாம வர வேண்டியிருக்கு, அப்புறமா காரிய பண்ணிவிடுவோம் ;-)))

காசு சுண்டி போட்டு சொல்ற முடிவா இது,.. நல்ல கதையை கொடுத்தீக போங்க... நில வரத்தைப் பார்த்த சில உணர்ச்சி வசப்பட்ட ஜீவன்களெ தவிர மீதமிருக்கிறது எல்லாம் என்னெ எரிச்சுடுங்க ப்ளீஸ்ஸ் அப்படின்னு சொல்லுதுக... கொஞ்சம் ட்ரிக்கியான சூழ்நிலைதான்...

ஒண்ணும் ஆவாது சிபி, அதான் ஐஸ் பொட்டிக்குள்ள வச்சிருக்கமுல... நீங்க பொயித்து வார எடத்துக்கு பொயித்து வாங்க நான் வெயிட்டு பண்றேன். ;-)))

தெகா.

இலவசக்கொத்தனார் said...

//சட்டு புட்டுன்னு காரியத்தை முடிச்சிட்டு கிளம்பனும்! //

என்னை வந்து பின்னூட்டம் போடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அப்புறம் 70, 80ன்னு கணக்கு வேற காமிக்கறீங்க. விஷய ஞானத்தோட போட நமக்கு அவ்வளவு சரக்கு இல்லை. ஆனாலும் கை அரிக்குதே.

johan-paris said...

பெரியார் கேட்டது போல்; ஊறுகாயா? போடமுடியும். அடுத்தவர்களுக்கு உதவக்கூடியதைத் தானம் செய்துவிட்டு; மிகுதியை எரிப்பதால் உலகெங்குமுள்ள இடப் பிரச்சனையும் தவிர்க்கலாம்.இதை எல்லா மதத்தினரும் பின்பற்றுவது நன்று.வெளிநாடுகளில் கத்தோலிக்கர்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.
யோகன்
பாரிஸ்

Samudra said...

//படிக்கும் போதே தெரியுதே எம்புட்டு விவரமுன்னு//

நானூறு வருசம் ஆச்சு எங்க முப்பாட்டானுக்கு முப்பாட்டனுக இந்த ஊருக்கு வந்து....மூயாம இவியக கோட ஓரியாடிகிட்டே இருக்க வெவரமா இருக்கோனுமுங்கோவ்!


//ீங்க ஓட்டு போட்டீகளா இந்த எலெக்க்ஷான்-லா. இல்லெ போடமாட்டீங்க அப்படின்னு சிலுப்பிகிட்டு இருந்திகளே அதான் கேக்கிறேன்...//

என்னையை ஓ போட உடலீங்க. :-(

எல்லா அந்த கொக்கிகாரனுக்கு புடிச்ச கெரகம்! நான் போட்ட வோட்டையுஞ்சேத்து 14 வோட்டு வித்தியாசத்துல ஆப்பு .... :-)

Thekkikattan said...

இ.கொ,

இந்த பின்னூட்ட ட்ரிக் வந்து எல்லொரையும் அதாவது நல்ல விசய்ங்களை படிக்க தவறவிட்டவங்களுக்கும் உதவுமின்னுதான். அப்படி வந்து...ஹி..ஹி..ஹி

//விஷய ஞானத்தோட போட நமக்கு அவ்வளவு சரக்கு இல்லை.//
யாருய்யா அப்படி சொன்னது. அதுவே ஒரு blessed state தான் தெரியுமா, இ.கொ. நல்ல கேள்வியா கேட்டு வைக்கலாம்.

//ஆனாலும் கை அரிக்குதே.//

அப்படி கையெ அரிச்சா யு ஆர் அல்வேய்ஸ் இவ்விடெ வெல்கம்...! ;-)))) பாவம் இனிமெ தமிழ்...

sivagnanamji(#16342789) said...

பல்லவரத்திலெ ஒரு பிரமுகர் சமாதியை ஆக்ரமிச்சு வீடு கட்டியிருக்காங்க.....அவனவன் உட்காரவே இடம் கிடைக்காது போலிருக்கு...எரிக்ரதுக்கு தான் என் வாக்கு

Thekkikattan said...

வாங்க யோகன் முதல் முறைய என் வாசல் மிதித்திருக்கிறீர்கள் நன்றி, நன்றி!

//அடுத்தவர்களுக்கு உதவக்கூடியதைத் தானம் செய்துவிட்டு; மிகுதியை எரிப்பதால் உலகெங்குமுள்ள இடப் பிரச்சனையும் தவிர்க்கலாம்.இதை எல்லா மதத்தினரும் பின்பற்றுவது நன்று.//

உண்மையோ உண்மை, ஆனால் இங்கு நிறைய முக்கிய புள்ளிகள் வந்து தன்னுடைய நிலையை பகிர்ந்து கொள்ளவில்லையே, ஏன் என்பது விளங்கவில்லை, பயமா? தெரியவில்லை...

நான் இந்த கேள்வியை இங்கு வைத்ததின் காரணமே எந்தளவில் நம் ஆத்ம பரிணாமம் அடைந்திருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளவே...

//வெளிநாடுகளில் கத்தோலிக்கர்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். //
கண்டிப்பாக அவர்கள் செய்தாக வேண்டும், இல்லையெனில் ஒரு டெட் எண்டில் சென்று திரும்ப வருவது போல் ஆகிவிடும்...

மீண்டும் நன்றி, உங்களுடைய நிலையை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு...

நேசி.

Sivabalan said...

தெகா

இந்த பதிவில், நீங்கள் மதங்கள் எவ்வாறு உதவலாம் என்று சொல்லாமல் இந்த பதிவு நிறைவு பெறாது என்பது என் எண்னம்!!

நாகை சிவா said...

எரிப்பது தான் சரி. இந்து மதமும் அதை தான் வலிவுறுத்துகிறது. காரணம் தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன். இரண்டு நாள்கள் முன்பு தான் இங்கு நண்பர்க்களுடன் விவாதம் நடத்தினோம். தனியாக ஒரு பதிவு போடலாம் என்று இருக்கின்றேன். கிறிஸ்துவ மதத்தில் புதைப்பதற்கும் காரணம் இருக்கின்றது. என் பதிவில் விலாவாரியாக எழுத முயச்சின்றேன்.

Thekkikattan said...

சிவாஞானம்ஜி,

//அவனவன் உட்காரவே இடம் கிடைக்காது போலிருக்கு...// :-)))

அதே, இந்த புரிதல் எலோருக்கும் வந்துவிட்டால் இந்த பிரட்சினை ஒரு 'டெட் எண்ட்' சென்று சந்திக்காமலே நல்ல விதத்தில் இதற்கு ஒரு முடிவு கட்டலாம்.

இல்லென்னா, இதனைக் கொண்டு புதைக்கிறதுக்காக திரும்ப இடம் சும்மா கிடக்கிற நாடுகள ஆக்கிரமிச்சு அதனால ஏற்படக கூடிய உயிர் சேதம்... இப்படி ஏதாதவது ஒரு "தியரி" மூலமா சிந்திச்சு பார்க்கலாம்...

எப்படியோ, உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி!

தெகா.

நாமக்கல் சிபி said...

என் சகலையோட பையன் (6வது படிக்கிறான்) அவங்களோட ஸ்கூலில் பசங்க ஒரு பாட்டை இந்த மாதிரி மாத்தி பாடுவாங்களாம்.

ஒரிஜினல் பாட்டு
---------------
மேகம் கொண்டு வா, மெத்தை போட்டு வை.....

மாற்றப்பட்டது
-------------

கிழவியைக் கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மூக்கில் பஞ்சு வை
நெத்தியில் காசு வை

இன்று முதல் எழவு.....
உங்கொப்பனுக்கு செலவு.....

எரிக்கவா... புதைக்கவா...நீ வா.....

-----------------------------

அதைக் கேட்டவுடன் உம்ம இந்த பதிவுதான் ஞாபகத்துக்கு வந்தது...

Thekkikattan said...

ஓ மை குட்னெஸ், செம ஜோக்கப்பா, எங்கேயாவது இருந்து சுட்டுகிட்டு வந்து அசத்தி புடுறீங்க சிபி, அந்த உல்டா பாட்டுல ஒரு லைன் செம ஃபன்னி...

//இன்று முதல் எழவு.....
உங்கொப்பனுக்கு செலவு.....//

:-)))

தெகா.

Thekkikattan said...

சிவபாலன்,

இப்பத்தான் கவனிச்சேன் உங்களுடைய நிறைய கேள்விகளை எப்படி கவனிக்காம தாவிப் போயிருக்குமின்னு... சாரிங்க சிவா

//எரிச்சா, ஒரு கலர் டிவியும், கம்புயூட்டரும் இலவசமுன்னு அறிவிச்சிட்டால், பிரச்சனை முடியுமுன்னு நினைகிறென்!!

நீங்க என்ன நினைக்கிறெங்க !!!//

அப்படி அறிவிச்சா அது எல்லோருக்கும் போயிச் சேருமா? ஆமா, சிவா ஏன் பெரும் பெரும் நம்மூரு தலைவருங்க மட்டும் புதைக்கிறதெ விரும்புறாங்க...

ஆனா டில்லியிலெ இருக்கிற அதெவிட பெரும் தலைகள் எல்லாம் எரிக்கிறதெ விரும்புறாங்க... ஹீம் பிரியலேயெ... உங்களுக்கு ஏதாவது பிரியுதா...

இந்த கேள்வி ஓபன் எல்லோருக்கும் அவர் அவர்களும் தாங்களுக்கு தெரிந்ததை இங்கு கூறினால் எனக்கு அந்த விட்டுப் போனதிற்கும் பதில் கிடைத்து விடும்...

தெகா.

பொன்ஸ்~~Poorna said...

நெஜமாவே நீங்க இன்னும் ஒரு முடிவுக்கு வரலியா?!!! சிபி சரியாத்தான் சொல்லி இருக்காரு!!

Thekkikattan said...

பொன்ஸ்,

எல்லோருக்கும் நாம பேசர விசயம் போயி சேருகிற வரைக்கும் நான் பாடியை ரிமூவ் பண்றமாதிரி இல்லெ :-))

என் கேள்விக்கு என்னப் பதில்...???

நல்ல preservative-தான் பயன் படுத்திறேன், கப் அடிக்க சான்ஸே இல்லை ;-))

பொன்ஸ்~~Poorna said...

சாரி தெகா,
என்னைப் பொறுத்தவரை நான் பதில் சொல்லியாச்சு. அடுத்தவருக்காகவோ, பொதுப்படுத்தியோ பேசுவது எனக்கு ஆகாத விஷயம்.
அத்தோட, நமக்கின்னும் காலம் இருக்குங்கய்யா.. விதி வரும்போது பார்த்துக்கிடலாம்.. அதுக்குள்ள நீங்க ஒரு முடிவுக்கு வந்திருக்க மாட்டீங்களா என்ன?!!

இருக்கட்டும், இன்னோரு கேள்வி, எரிக்கிறவங்களோ, புதைக்கிறவங்களோ, அந்தப் பாடிய முக்கியமான தெருக்களில் எடுத்துகிட்டுப் போய் போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்காங்களே, அதைப் பத்தி பேசினீங்களா?

Thekkikattan said...

பொன்ஸ்,

//அடுத்தவருக்காகவோ, பொதுப்படுத்தியோ பேசுவது எனக்கு ஆகாத விஷயம்.//

அது எப்படிங்க நம்ம மாதிரி சமுதாய அக்கரை இருக்கிறவங்க இப்படி ஒரு "க்ளோபல் பிரட்சினையை" ஒதுக்கித் தள்ள முடியும். நாமதான் முன்னோடியா இதப் பத்தி பேசினோம் அப்படின்னு நம்ம வரலாற்று புத்தகத்திலெ துண்டு போட்டு இடம் பிடிக்கிறதா இல்லையா?

சிபிகிட்ட சொல்லுங்க அவருக்கு இடம் வேண்டுமா வேண்டாமா அப்படின்னு கேட்டு... :-)

//இருக்கட்டும், இன்னோரு கேள்வி, எரிக்கிறவங்களோ, புதைக்கிறவங்களோ, அந்தப் பாடிய முக்கியமான தெருக்களில் எடுத்துகிட்டுப் போய் போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்காங்களே, அதைப் பத்தி பேசினீங்களா?//

அடடா, முக்கியாமான இப்படி ஒரு சிந்தனை வச்சிகிட்டு இப்படி வஞ்சகம் பண்ணியிருக்கீகளே, பார்த்தீங்களா இந்த தெகா போட்டு வாங்கிட்டான்... மக்களே பதில் சொல்லட்டும் அதுக்கு இல்லென்னா நான் சொல்லிபுடறேன் கடைசியா...

பொன்ஸ்~~Poorna said...

//அடடா, முக்கியாமான இப்படி ஒரு சிந்தனை வச்சிகிட்டு இப்படி வஞ்சகம் பண்ணியிருக்கீகளே,//

அட, முன்னயே தோணிச்சு தெகா.. இந்தப் பதிவு நீங்க போட்டப்போ நான் சென்னைல இருந்தேன்.. எரிக்கிறதுக்கு ஓட்டு போட்டுட்டு வீட்டுக்குப் போனப்போ இந்தமாதிரி போக்குவரத்துப் பிரச்சனைல மாட்டிகிட்டேன்.. திரும்ப மறு நாள் வந்து இதப் பத்தி முழ நீளத்துக்கு தமிழில் தட்டி பின்னூட்டம் போட்டேன்.. பின்னூட்டம் சரியா உங்களுக்கு வரலைன்னு அப்போவே சந்தேகம்.. சரி, மறுக்கா என்னாத்துக்கு தட்டிகிட்டு, நாளைக்கு பாத்துக்கிடலாம்னு விட்டுட்டேன்.. அப்புறம், நீங்க, நம்ம முதல் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி இருந்தீங்களா, அதைப் பார்த்ததும், இப்படிப் பின்னூட்டத்துக்கு பயப்படுறவருக்கு என்னத்த சொல்லி என்னத்த பண்ணன்னு..

ஹி ஹி..

சரி, நம்ம சிந்தனையைக் கொஞ்சம் திறனாயுங்க.. வாரேன்

இலவசக்கொத்தனார் said...

என்ன திரும்பி எரிக்கவா புதைக்கவான்னு ஆரம்பிச்சுட்டீங்க? யாராவது ஸ்பெஷல் ஆளுங்களுக்கு காத்திருக்கீங்களா?

நாமக்கல் சிபி said...

//சிபிகிட்ட சொல்லுங்க அவருக்கு இடம் வேண்டுமா வேண்டாமா அப்படின்னு கேட்டு... //

நாந்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே! எரிச்சா போதும்னு. அப்புறமும் எனக்கு எதுக்குங்க இடம். என்னை புதைக்கிறதுக்கா?

dondu(#4800161) said...

ஒருவனுக்கு தந்தி வந்ததாம். "உங்கள் மாமியார் இறந்து விட்டார், எரிப்பதா புதைப்பதா?"

அவன் பதில் தந்தி அடித்தானாம். "எதுக்கு ரிஸ்க்? எரிச்சுட்டு சாம்பலை பொதைச்சுடுங்க"

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுமா said...

காமெடி அருமை டோண்டு...

Thekkikattan said...

பொன்ஸ்,

//திரும்ப மறு நாள் வந்து இதப் பத்தி முழ நீளத்துக்கு தமிழில் தட்டி பின்னூட்டம் போட்டேன்.. பின்னூட்டம் சரியா உங்களுக்கு வரலைன்னு அப்போவே சந்தேகம்//

ச்சே, இவ்ளோ நாளைக்கு அறிவுத் தேக்கம் ஆயிப்போச்சே. சரி இப்ப வந்துட்டீங்க... எடுத்து வுடுங்க கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு.

//இப்படிப் பின்னூட்டத்துக்கு பயப்படுறவருக்கு என்னத்த சொல்லி என்னத்த பண்ணன்னு.. //

நாங்கெல்லாம் "திருப்பாச்சி" அருவாவெ (அடெ சினிமா கத்தி இல்லைங்க) தலைக்கு படுக்கும் போது தலைகணியா வச்சுட்டுப் படுத்துக்குறாவய்ங்க, பின்னூட்டத்துக்கு பயப்படுறதாவது... இங்கெ காலாய்ங்க பார்பேம்... ஒரு மாச மழையிலெ கட்டிப் போட்டாலும் உள்ளே ஒரு சொட்டு தண்ணி இறங்காது, அவ்ளோது தோலு கெட்டியாக்கும்:-))))

Thekkikattan said...

கண்ணாடி காரரே,

//நாமதான் முன்னோடியா இதப் பத்தி பேசினோம் அப்படின்னு நம்ம வரலாற்று புத்தகத்திலெ துண்டு போட்டு இடம் பிடிக்கிறதா இல்லையா?//

நான் சொன்ன இடம் பிடிக்கிற விசயம், வரலாற்று புத்தகத்திலெ. இங்க பின்னூட்டமிட்ட எல்லோரும் ஒரு சிறப்பு இணைப்ப அந்த புத்தகத்தில் வரிசைப் படுத்தி பேசப்படப் போறங்க... நம்புங்க சிபியாரே

முத்து(தமிழினி) said...

தெகா,

ஜோ பதிவுல இருந்து இங்க வந்தேன்.சில விஷயங்கள் ரொம்ப யோசித்தால் தீர்வு வராது.

சுலப தீர்வு:

1.உடல் உறுப்புகளை எல்லாம் தானம் கொடுத்துவிட்டு அவனவன் விருப்பப்படி எரிக்கவோ இல்லை புதைக்கவோ செய்யலாம்.


(மத்தபடி கூடு விட்டு கூடு பாய்வது சம்பந்தமான பின்னூட்டங்கள் சுவாரசியமோ சுவாரசியம்)

G.Ragavan said...

தெக்கி, இந்தப் பதிவு முன்னால் வந்தது எனத் தெரியும். பின்னூட்டம் இடாமல் இருந்ததிற்குச் சிறப்புக் காரணங்கள் எதுவுமில்லை.

என்னைக் கேட்டால் எரிப்பதற்குதான் ஆதரவு. கொஞ்சம் மாசுதான். இல்லையென்றால் புதைத்து விட்டு அங்கு ஒரு கல்லறை எழுப்பி அந்த இடமும் அவனுக்குச் சொந்தமாகி அதை வைத்துக் கொண்டு பின்னால் சண்டையாகி...அடுத்து வருகின்றவருக்கு இடமில்லாமல் செய்வதை விட இது சிறந்தது. மருத்துவ ஆராய்ச்சிக்கும் தானத்திற்கும் குடுக்கலாம். அவர்கள் ஆராய்ச்சி செய்து எஞ்சியவற்றை எரித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.

G.Ragavan said...

பிறகொன்று...இந்த எரிப்பதை மக்கள் மதக்கண்ணோட்டத்தோடு அணுகாமல் சமூக அக்கறைக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும்.

ஓகை said...

நான் சார்ந்திருக்கும் சாதியில் புதைப்பதுதான் வழக்கம். ஆனால் என் வாக்கு எரிப்பதற்கே. காரணத்தை பலரும் இங்கே சொல்லிவிட்டார்கள்.

இங்கே ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். இந்து மத ஜாதிகளே ஒரு இந்துவை புதைப்பதா அல்லது எரிப்பதா என்பதை இதுநாள்வரை தீர்மானித்து வந்ததன. ஆனால் இந்த நடமுறைகள் என் நட்பு வட்டத்திலேயே மாறியதைக் கண்டிருக்கிறேன். வழக்கமாக புதைக்கும் சாதியில் நடந்த ஒரு மரணத்தில் இங்கு பலரால் குறிப்பிடப்பட்ட நல்ல காரணங்களுக்காகவே எரிப்பதெனெ முடிவு செய்யப்பட்டு பல உறவினர்களின் எதிர்ப்பிற்கிடையிலும் நிறைவேற்றப்பட்டது. காலங்கள் மாறுகின்றன.
இதற்கு நேர் எதிரான நிகழ்வையும் நான் கண்டிருக்கிறேன். வழக்கமாக எரிக்கும் சாதியில் ஒரு மரணம் புதைப்பதாக மாற்றப்பட்டது ஏழ்மையின் காரணத்தால். எரிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகமாதலால் சாதி வழக்கத்தை மீறும் குற்றவுணர்வோடு சிலர் புதைப்பதும் நடக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

எனக்கு என்னமோ இந்த பதிவு 100 வாங்காம இறக்கவே போறதில்லைன்னு தோணுது. அப்புறம்தானே எரிக்கறது, புதைக்கறது எல்லாம்..

Thekkikattan said...

முத்து (தமிழினி),

வாங்க, ஜோ பதிவுல இந்த லிங்கெ கொடுத்தற்கு காரணம் ஜோ மற்றும் ஏனையெ அன்பர்கள் மிகவும் பொருப்புடனும் மத நல்லிணக்க முறையிலும் சிறப்பாக அந்த ஃபாரத்தை எடுத்துச் சென்றார்கள். பாரட்டத்தக்கது.

இருப்பினும் பிற மத அன்பர்களும் இந்த "குளோபல்" பிரட்சினையை எப்படி அனுகப் போகிறோம் என்பதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.

விசயங்கள் பேசப்பட பேசப்படத்தானே தீர்வுகளும் வெளிச்சத்திற்கு வருகிறது, பிறகு தெளிவும் பிறக்கிறது.

எனவே நீங்கள் அனைவரும் அங்கு வந்து இந்து மத அன்பர்கள் அல்லாத ஏனையவர்கள் இந்த "எரிப்பு, புதைப்பு" விசயத்தில் ஏன் பண்ணலாம் அல்லது பண்ணமுடியாது என்பதனை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

காஞ்சி பிலிம்ஸ் said...

ஏன் நம்முடைய உடம்பை முழுவதையும் தானமா கொடுத்துவிடலாமே? கண், கல்லீரல், எலும்பு மஞ்சை,இதையம்,தசை, தோல் இப்படி அனைத்தையும் ஆராய்ச்சி செய்யும் மருத்துவ கூடங்களுக்கு தானமாக கொடுத்தால் ஒன்றும் கெட்டுபோவப் போவதில்லையே. நான் என்னுடைய உடம்பை அப்படி தானமாக கொடுக்க சம்மதித்துள்ளேன்.எனக்கு மரணம் சம்பவித்த இரெண்டு மணி நேரத்திற்குள் என்னுடைய பிணத்தை அவர்கள் வந்து பெற்றுக்கொள்வார்கள். என்னுடைய பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இதில் இப்பொதைக்கு சற்று வருத்தம் தான். உயிரோடு இருக்கும் போது தான் அடுத்தவனுக்கு உபத்திரமாகவே இருக்கிறோம், செத்த பிறகாவது அடுத்தவனுக்கு உதவலாமே எங்கிற நப்பாசைதான். சரி இப்ப சொல்லுங்க நீங்க என்ன செய்யப் போறிங்க ?

இலவசக்கொத்தனார் said...

சரி. நான் 100 போடறேன். அதுக்காக நானுறு வந்தாத்தாம் புதைப்பேன் அல்லது எரிப்பேன்னு அடம் பிடிக்கக் கூடாது. என்ன?

(சரி, இனிமே வரலை. சரியா? உடனே கோபப்பட்டு எனக்கு பதில் போடாதீங்க.) :)

Anonymous said...

- Reuse as much as from body - let docs to decide the list.
- Burn the (rest of) body in electric oven.
- Let the family decide the rest with the ash, whether to keep it in home or else.

/*
அதனால் அப்படி மீண்டும் உயிர்ப்பித்தாலும் மனித இனத்திற்கு உபயோகமான மனிதர்களை மட்டும் உயிர்ப்பித்தால் போதும் என்பதற்கான அமைப்புதான் இந்து மதத்தின் அமைப்பு. இது முழுக்க என் சொந்த எண்ணோட்டம்.
*/
utter nonsense.

Thekkikattan said...

ராகவன்,

//இல்லையென்றால் புதைத்து விட்டு அங்கு ஒரு கல்லறை எழுப்பி அந்த இடமும் அவனுக்குச் சொந்தமாகி அதை வைத்துக் கொண்டு பின்னால் சண்டையாகி...அடுத்து வருகின்றவருக்கு இடமில்லாமல் செய்வதை விட இது சிறந்தது. மருத்துவ ஆராய்ச்சிக்கும் தானத்திற்கும் குடுக்கலாம். அவர்கள் ஆராய்ச்சி செய்து எஞ்சியவற்றை எரித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.//

உங்கள் நிலைப்பாடே எனக்கும்.

//பிறகொன்று...இந்த எரிப்பதை மக்கள் மதக்கண்ணோட்டத்தோடு அணுகாமல் சமூக அக்கறைக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும்.//

அதற்கான விடையை அறியவே நான் இங்கு திரும்பவும் இந்த பதிவை மீண்டும் உலாவ விட்டு வைத்திருக்கிறேன்.

ஆனால் நமது பிற மதத்து அன்பர்கள் யாரும் இவ்விடம் வந்து அவர்களின் கோணங்களையோ, ஏன் அவ்வாறு செய்வது உகந்தது அல்லது உகாதது என்பதனை இது வரையிலும் வந்து வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

இந்தியா போன்ற ஜன நெருக்கம் உள்ள நாடுகளில் நாளை இது ஒரு பிரட்சினையாகத்தானே ஆகப் போகிறது. அதனை ஏன் இங்கு நன்கு சிந்திப்பவர்கள் கூட போச யோசிக்கிறார்கள்? என்பதே எனது ஆதங்கம்.

வருவார்களா? பகிர்ந்து கொள்வார்களா? அல்லது தனிப்பதிவு போட்டு அழைக்க வேண்டுமா?

Thekkikattan said...

ஓகை,

//நான் சார்ந்திருக்கும் சாதியில் புதைப்பதுதான் வழக்கம். ஆனால் என் வாக்கு எரிப்பதற்கே. காரணத்தை பலரும் இங்கே சொல்லிவிட்டார்கள்.//

நன்றி, உங்களின் பார்வையை இங்கே வைத்தற்கு. பல நடைமுறைகளை கருத்துக்களை கணக்கில் கொண்டு உங்கள் "புதைக்கும் குரூப்"பில் இருந்தவர்கள், நடைமுறை காரணங்களுகென எரியூட்டியதாக நடந்தை இங்கு எல்லார் இடத்திலும் சொல்லி வைத்தற்கும்.

//வழக்கமாக எரிக்கும் சாதியில் ஒரு மரணம் புதைப்பதாக மாற்றப்பட்டது ஏழ்மையின் காரணத்தால். எரிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகமாதலால் சாதி வழக்கத்தை மீறும் குற்றவுணர்வோடு சிலர் புதைப்பதும் நடக்கிறது.//

அப்படிக் கூட நடக்கிறது என்பது நீங்கள் கூறிதான் எனக்கு தெரிய வந்தது. வருத்தம் அளிக்கிறது கேட்பதற்கே.

இலவசக்கொத்தனார் said...

இன்னுமாய்யா நீ அடக்கம் பண்ணலை. சீ. அடங்கலை. :)

(சரி. சரி. வரமாட்டேன்னு சொன்னேன். ஆனா தமிழ்மணத்தில் உம்மைப் பார்த்தா கை துறுதுறுங்குதே என்ன செய்ய?)

ஜோ / Joe said...

Thekkikattan,
நான் புதைப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் மதத்தில் பிறந்தவன் என்று உங்களுக்கு தெரியும் .உலகம் முழுதும் கத்தோலிக்க மதத்தினர் ஒரே முறையை பின்பற்றுகிறார்களா தெரியவில்லை .ஆனால் நான் பிறந்து வளர்ந்த முழுக்க கத்தோலிக்கர்களை கொண்ட கிராமத்தின் நடைமுறையை சொல்லி விடுகிறேன் .அங்கு ஒரு கல்லறை தோட்டம் இருக்கிறது .எரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை .புதைப்பது தான் .புதைத்த பின் வசதியுள்ளவர்கள் அதில் கல்லறை கட்டிக்கொள்வது முன்பு இருந்தது .ஆனால் தற்போது இட நெருக்கடியை கருத்தில் கொண்டு நிரந்தர கல்லறை தடை செய்யப்பட்டுள்ளது .புதைத்த பின் வெறும் மணலைக்கொண்டு கல்லறை போல அலங்காரம் செய்து மரச்சிலுவையும் நட்டுக்கொள்ளலாம் .ஆனால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப்பின் (10 வருடமா ,20 வருடமா சரியாக நினைவிலில்லை) அந்த கல்லறை தோண்டியெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு ,அந்த இடம் மறு பயன்பாட்டுக்கு உட்படும் .இதன் மூலம் இடப்பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது .

சிங்கப்பூரில் நான் பார்த்தது ..கத்தோலிக்கர்களும் மின்சாரம் கொண்டு உடலை எரித்து விட்டு சாம்பலை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள் .கத்தோலிக்க தேவாலயங்களின் அருகிலோ ,அடியிலோ கல்லறை தோட்டங்களுக்கு பதில் ,பல அறைகள் கொண்ட இடம் இருக்கிறது .இங்கு சுவர்களில் 2 அடி நீள அகலம் கொண்ட சிறிய அறைகளும் அவற்றுக்கும் பூட்டும் உள்ளது .தேவையானவர்கள் ஒரு அறைக்கு உண்டான கட்டணைத்தை செலுத்தி இறந்தவரின் சாம்பலை இங்கு வைத்துக் கொள்ளலாம் .கல்லறை திருநாளில் இங்கு வந்து மலர் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள் .

ஆக கத்தோலிக்க மதத்தை பொறுத்தவரை இரண்டுமே இருக்கிறது .அந்தந்த இடத்தின் சூழ்நிலையைப் பொறுத்து பின்பற்றப்படுகிறது.

Thekkikattan said...

ஒரு அடிப்படை கேள்வி இங்கே, ஏன் கிருத்துவ, இஸ்ஸலமிய மதங்களில் இறந்த பின் உடலை "புதைப்பதையே" வழக்கமாக கடைபிடிக்கப் பட்டு வந்திருக்கிறது?

இதற்கு ஏதாவது அடிப்படை மதம் சார்ந்த காரணங்கள் உண்டா? உண்டெனில் அது என்ன காரணம்?

சற்றெ விளக்க முடியுமா? யாரு வேண்டுமானலும் எனது ஐயங்களை தெளிவிக்கலாம். நன்றி!

Thekkikattan said...

இ.கொ,

//சரி. நான் 100 போடறேன். அதுக்காக நானுறு வந்தாத்தாம் புதைப்பேன் அல்லது எரிப்பேன்னு அடம் பிடிக்கக் கூடாது. என்ன?

(சரி, இனிமே வரலை. சரியா? உடனே கோபப்பட்டு எனக்கு பதில் போடாதீங்க.) :) //

எனக்கு ஒரு வும்மை தெரிய்ய்யனும் சாமீ :-))) அதுவரைக்கும் எம்மூரு சனம் எடுக்க விடமாடேங்கிதுக சாமீ.... ;-)))

Sivabalan said...

தெகா,

மிக அருமையாக இந்த விவாதத்தை கொண்டுசெல்கிரீர்கள்.

மிக்க நன்றி.

மதுமிதா said...

நல்ல சிந்தனை Thekkikattan

///"என்னை புதைக்கிறதா இல்லெ எரிக்கிறதா...?" ///

இந்த உங்கள் விருப்பத்தை நீங்களும், உங்க குடும்பமும் தான் முடிவு செய்யணும்.

ஏன்னா சடங்கு சம்பிரதாயங்களில் நம்மை அறியாமலேயே மதரீதியான நம்பிக்கைகள் முழுவதுமா நம்மை,
நாம் அறியாமலேயே வழிநடத்திட்டிருக்கிறது.

நாம் இறப்புக்குப் பின் இறுதித்தீர்ப்புக்குச் செல்ல வேண்டிய கட்டாயமில்லாத மதத்தில் பிறந்து இருக்கிறோம். அதற்கு எரிப்பது என்பது தான் உடன்பாடான விஷயம்.

இலவசக்கொத்தனார் வந்தாச்சுங்க இந்தபதிவுக்கு நன்றி

செந்தழல் ரவி said...

எரிச்சு - அந்த சாம்பலை புதைச்சிடுங்க...

:))

மாநகராட்சி அலுவலர் said...

ஒரு வருஷமா பாடிய ஊருக்குள்ளே வெச்சிகிட்டிருக்கீங்க!

சீக்கிரமா முடிவு செய்யவும்.

தஞ்சாவூரான் said...

தெகா, சுற்றுப் புறச் சூழல் மோசமா இருக்குற இந்தக் காலத்துலே, என்னை மட்டும் இல்லெ, யார் செத்தாலும் எரிக்கனும்னுதான் சட்டம் கொண்டுவரனும்!

supersubra said...

நீண்ட நாள் கழித்து மீண்டும் ஒரு பின்னூட்டம். உலகம் தோன்றின நாள் முதல் எல்லா நாடுகளிலும் எரிக்கிற வழக்கம் இருந்தால் இன்று ஆதிமனிதன் வரலாறு கண்டு பிடிக்க முடியாமலே போயிருக்கலாம்.

என்னுடைய க்ளோனிங் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மேலும் மேலும் வலுப்பெற்று வருகின்றன இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் (உயிரியல்). மைகேல் க்ரிட்டனின் Next Novel படிக்க வேண்டிய ஒன்று.

Related Posts with Thumbnails