Monday, May 15, 2006

பின்னூட்ட போராட்டங்கள்...!?

இங்கு வலைப்பதியும் அனைத்து அன்பர்களும் இதனை தயவு செய்து படித்துப் பாருங்கள்...சீனியர், சூனீயர் பாகுபாடின்றி... இமேஜை தள்ளிவைத்துவிட்டு உள்ளே வாருங்கள் அன்பர்களே...

1) இதற்கென ஒரு பதிவு பதிய வேண்டுமென கொஞ்ச நாட்களாகவே எண்ணியிருந்தேன். நானும் சில நல்ல ப்ளாக்குகள் சென்று படித்து வருகிறேன், அங்கெல்லாம் பதிவர் தனது எண்ணங்களை பதிப்பித்த பின், அதற்கு வரும் பின்னூட்டங்கள்தான் அப்பதிவை நிறைவு செய்கிறது. ஆனால்...

2) ஈமெயில் ஐ.டி கொடுத்து தாங்களுக்கு பின்னூட்டமிட மன்மில்லையெனில், the choice is yours. இதில் என்ன இருக்கிறது, அவர் பயன்படுத்தும் சேவையில் அது போன்று வடிவமைத்திருந்தால் அது அப்படியே பயன் படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அவர்களை கீழே தள்ளி பேசுவது நலம் பயக்கா...

3) பின்னூட்டமென்பது ஒரு addictive விசயமல்ல என்பதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், தெரிந்தவர்களின் பதிவுகளை மட்டுமே படிப்பது பின்னூட்டமிடுவது, புதியவர்களாக இருப்பின் நல்ல விசயங்களை முன் நிறுத்தினாலும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது, இது போன்ற விசயங்கள் அடி வடிகட்டிய பசலித்தனம் எனலாம்.

4) ஒரு நல்ல விசயத்தை படித்ததும் மனதில் முதலில் என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே இங்கே கொட்டி பகிர்ந்து கொள்வதின் மூலம் எழுதியவருக்கும் வாசிப்பவருக்குமிடையே கருத்து பரிமாற்றத்தின் மூலம் தன்னை உள் நோக்கி பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.

5) இங்கு இருக்கும் சில சீனியர் எழுத்தாளர்கள் எல்லா இடங்களில் சிக்கியுள்ள அரசியல், Image பிரச்சனைகள் போல மாட்டிக் கொண்டு உழண்டு கொண்டுள்ளாதாகப் எனக்குப்படுகிறது. இங்கும் அது போன்ற பாகுபாடுகள் தேவைதானா? நாம் ஏன் இப்படி இருக்கிறோம், எனக்குப்புரியவில்லை...

6) அது போல ஒரு மாயை வலையில் சிக்கியிருப்பது நல்ல படைப்பாளிகளை நாம் இழப்பதற்கு வழிகோலளாம். சில நல்ல உள்ளங்களும் இங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.

7) இந்த பின்னூட்ட விசயம் பொருட்டு ஒரு தனிப் பதிவிட வேண்டுமென்பது எனது அண்மை காலத்திய எண்ணம், நீங்கள் இங்கு தனிப் பதிவிட்டிருப்பதால் இங்கும் தனிப்பதிவாகவும் (மேலும் சில கருத்துகளுடன் என் பதிவிலும் விட்டுச் செல்கிறேன்.) சீனியர்களும் இமெஜையை சற்று ஒரங்கட்டி வைத்துவிட்டு, எல்லோரையும் வளர்த்து தானும் வளர வேணுமாய் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் பெயரளவில் உள்ள காட்டான்.

அன்புடன்,

தெக்கிக்காட்டான்.

26 comments:

Suresh said...

Well said.......but keep writing, don't bother about the other's comments, what you write is important.

Thekkikattan said...

வாங்க மாயவரத்தான்,

இது போன்று அது உண்மையாக இருந்தாலும் சரி புணைந்தாக இருந்தாலும் சரி, எனக்கு சற்று வெளிச்சத்தில் வைத்துப் பார்க்க ஆசை. இந்த ஊடகத்தையும் அது போன்ற நச்சு எண்ணங்களை வைத்து இன்னும் நம்மை பின்னோக்கி நடக்க வைக்கமல். அனைவரும் ஒன்றிணைந்து மனதில் என்ன படுகிறதோ அதனை இங்கு பகிர்ந்துகொள்வோமே...


தெகா.

Thekkikattan said...

வாங்க சுரேஷ்,

//what you write is important. //

அது புரிகிறது சுரேஷ், இருப்பினும் எனக்கு சற்றே நமெல்லாம் நாகரீகமைடய வேண்டும் என்று ஆதங்கப் படுகிறேன்.

எனக்கு விளங்கிறது, இங்கு நான் எழுதிவைக்கும் விசயங்கள் நாளைக்கு ஒரு டைரி குறிப்பாக என்னை நானே புரட்டிபார்த்துக் கொள்ள உதவுப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் நாம் ஏன் இங்கும் அந்த old world attitude-யை இங்கு கொணர வேண்டுமென்பதுதான் என் ஐயம் இங்கு.

நாம் படித்தவர்கள் நான்கு கண்டங்களை (maybe) பார்த்தவர்களும் இப்படி இருந்தால் நாளைய தலைமுறை என்னாவாகும்...? :-(

தெகா.

Muthu said...

தெ.கா,
எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதைப் பார்க்க மட்டும் ஒரு எண்ணியை வலைப்பதிவில் சேர்த்துக்கொண்டால் போதும். பெரும்பாலும் படிக்கும் அனைவருமே பின்னூட்டம் இடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. படிக்கும் ஆயிரம் பேரில் 20 பேர் பின்னூட்டமிட்டாலே பெரிய விஷயம்தான்.

இலவசக்கொத்தனார் said...

5,6 கொஞ்சம் உதாரணங்கள் குடுங்களேன். ;)

இலவசக்கொத்தனார் said...

//நாம் படித்தவர்கள் நான்கு கண்டங்களை (maybe) பார்த்தவர்களும் இப்படி இருந்தால் நாளைய தலைமுறை என்னாவாகும்...? :-(//

உள்குத்து மாதிரி தெரியுதே. ஆன கிஷயம் புரியலை. கொஞ்சம் தெளிவா சொல்லி இந்த மரமண்டைக்கு புரிய வையுங்களேன்.

சரியா படிங்க. 'புரிய வையுங்களேன்.' வெறும் 'வையுங்களேன்.' இல்லை. :D

துளசி கோபால் said...

இமேஜை( அப்படி ஒண்ணு எனக்கு இருக்கான்னே தெரியலையே!) தள்ளிவச்சுட்டு உள்ளே வந்தாச்சு.

இனி என்ன செய்யணும்?

Thekkikattan said...

வாங்க முத்து சார்,

நீங்கள் சொல்வது சரிதான், பின்னூட்டமிட்டு சொல்வதற்கு நேரம் கூட ஒரு தடையாக அமையலாம். இருப்பினும், தான் ஒரு விசயத்தை படிக்கும் பொழுது அவருக்குள் ஏற்படும் சாதகமான அல்லது முறணுற்ற மாற்றங்களை மற்றுவருடன் பகிர்ந்து கொள்வதால் அவருக்கு ஒன்றும் இழப்பதற்கு கில்லையே.

பணமோ காசோ கொடுத்து நாம் பின்னூட்டங்கள் பப்ளிஸ் செய்வது கிடையாது.

பின்னூட்டம் என்பது ஒரு அத்தியவாசியம், ஏனெனில், நீங்கள் ஒரு அருமையான எதிர் மறையான கருத்தை சிந்தித்திருக்கலாம், என் கோணத்தில் எனக்கு எட்டாத விதத்தில்...அதனை அப்படி இங்கு பகிர்ந்து கொள்வதின் மூலம் உங்களின் ஆக்கப் பூர்வமான எண்ணம் எத்தனை உள்ளங்களை திறக்கும் சாவியாக இருந்திருக்கலாம்.

சற்றே சிந்தியுங்கள் அன்பர்களே...

தெகா.

Thekkikattan said...

இ.கொ,

இதில் உள் குத்து வெளிகுத்து எந்த குத்தும் கிடையாது. எந்த பிரட்சினையும் இதன் மூலம் வேண்டாம், புதியவர்களுக்கு சிறிது துள்சிங்க டானிக் கொடுப்பது போல் அவ்வப்பொழுது அவர்கள் படைப்பதையும் படித்து... தட்டிகொடுத்துவிட்டு வருவது இன்னும் அவரை responsible உள்ள ஆளாக மாற்றகூடும்.

மீண்டும் ஒருமுறை இ.கொ ப்ளீஸ் ஒரு குத்து வேணாமே!

தெகா.

Anonymous said...

ஆரம்பத்தில் நான் கூட அனைத்து வலைபதிவர்களது பதிவுகளையும் படித்துவந்தேன். நமது கருத்தை எழுதலாம் என செல்லும்போது பல வலைபதிவர்களது களத்தில் பிளாக்கர்களுக்கு மட்டுமே கருத்து கூறும் வாய்ப்பு உள்ளது.புதிய வாசகர்கள் (அனானிஸ்) கருத்து கூறும் வாய்ப்பு இல்லை.தற்போது அத்தகைய வலைபதிவர்களது களங்களுக்கு நான் செல்வதே இல்லை. மதியாதார் தலைவாசல் மிதிய வேண்டாம் என்பதே காரணம்.

அன்பு வலைபதிவர்களே!!பிளாக்கர்கள் கருத்து மட்டும் போதுமென்றால் மிக குறுகிய வட்டத்தில் தான் நீங்கள் வலம் வரமுடியும்.விமர்சனங்கள் தாங்குபவர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரமுடியும். எந்த ஒரு எதிர்கருத்தும் தங்கள் பார்வைக்கு வந்த பின்னர் தான் கள்த்திற்கு வரமுடியும். எனவே ஏன் இந்த தயக்கம்???????.

அன்பு வாசகர்களே!!எதிர்கருத்துக்களை
பண்பான வார்த்தைகளில் கூறி பதிவர்களை உற்சாகபடுத்துவோம்.

அன்புடன்,
துபாய் ராஜா.

Thekkikattan said...

துள்சிங்க,

அப்படியே கொஞ்சம் நேரம் என்ன எழுதுறதுன்னே தெரியமா உட்கார்ந்து இருக்கேன் உங்களுக்கு. நீங்க எனக்கு மிகப் பெரிய உதவி செஞ்சிருக்கிங்க, அதே போல நிறைய பேருக்கு செஞ்சுகிட்டும் இருக்கீங்க அப்படிங்கிறதா என்னால உணர முடிகிறது.

knowledge என்பது என்னை பொருத்தமட்டில் பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே... அதனை நீங்கள் நன்கே புரிந்து வைத்திருக்கிறீர்கள்... அது பகிரப் பகிர வள்ளுவம் கூறுவது போல ஊறிக்கொண்டே இருக்கும் புதிய புதிய பரிமாணங்களில்...

தயவு செய்து என்னை தவறாக எண்ண வேண்டாம்...

தெகா.

வவ்வால் said...

வணக்கம் தெற்கத்திகாட்டான்,நன்றி.

எனது வலைப்பதிவில் தங்களது பின்னூட்டதிற்கு பதிலாக பதிவு செய்ததையே இங்கு மீண்டும் பதிவு செய்கிறேன்.பின்னூட்டங்களின் எண்ணிக்கை தரும் போதையை நான் எனக்கும் தாருங்கள் என்று கேட்க பதிவிடவில்லை.பின்னூட்டமிட சில பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு புதிய வாசகர்களை துரத்தும் துர்பாக்கிய நிலைக் குறித்தே எனது கவலையை தெரிவித்துள்ளேன்.

//தங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே. நான் சொல்ல வருவது எத்தனை பின்னூட்டம் வருகிறது என்ற எண்ணிக்கை விளையாட்டை குறிக்க அல்ல. இப்படி தடைகள் உள்ளமையால் ஒரு தரமான தேவையான பின்னூட்டம் பதிவு பெறாமலே புறக்கணிக்க படும் நிலையை எண்ணியே பதிவிட்டுள்ளேன்.ஒரு வலைப்பதிவில் ஏதேனும் தவறாகக் கூறப்பட்டிருந்தால் அதனை வழக்கமாக வருபவர்கள் எப்போதும் போல முகஸ்துதி பாடி குறிப்பிடாமலே போகலாம்.புதியவர்கள் நேர்ப்பட உண்மைக் கருத்தை கூற விரும்பினாலும் இது போன்ற இத்தியாதி ... இத்தியாதி சம்பிரதாய வேலி கண்டு விலகிப் போகலாம்.
//

பொன்ஸ்~~Poorna said...

தெகா,
பதிவு என்னவோ நல்லாத் தாங்க இருக்கு.. ஆனா, எல்லாரையும் இப்படிச் சொல்ல முடியாதுங்க... நான் வலைபதுவுக்கு வந்த புதிதில், நிறைய 'சீனியர், சீனியர் மோஸ்ட்' வலை பதிவர்கள் வந்து படித்து, பின்னூட்டம் போட்டு, நல்ல ஊக்கம் கொடுத்தாங்க.. அதெல்லாம் இல்லைன்னா நான் எப்போவோ வலைபதிவெல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு போயிருப்பேன்.. இன்னிக்கும் புதுசா வர்றவங்களுக்கு இமேஜ் பாக்காம உதவி செய்யறவங்க, ஊக்கம் கொடுக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க..

//பின்னூட்டமென்பது ஒரு addictive விசயமல்ல என்பதனை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும், தெரிந்தவர்களின் பதிவுகளை மட்டுமே படிப்பது பின்னூட்டமிடுவது, புதியவர்களாக இருப்பின் நல்ல விசயங்களை முன் நிறுத்தினாலும் கண்டுக்கொள்ளமல் விட்டுவிடுவது, இது போன்ற விசயங்கள் அடி வடிகட்டிய பசலித்தனம் எனலாம்.
//
இதுல தான் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை.. அதிக பின்னூட்டம் வருவது (விஷயமே இல்லாமல்) ஒரு மாயைன்னு சொல்றீங்களா? இல்லை நமக்குத் தெரிந்தவர்களின் பதிவு மட்டும் படிச்சு பின்னூட்டம் போடுவது அடிக் ஷன் என்று சொல்றீங்களா?

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு தெக்கிக்காட்டான்.

Thekkikattan said...

குமரன்,

எங்கு எத்தனை பேர் என்னைத் தவறாக புரிந்து கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.

நான் சொல்ல வருவது என்னவெனில் ஒரு சுகாதாரமான கருத்து பரிமாறல் இங்கு நிலவ வேண்டுமென்பதே.

உ.தா: நல்ல நல்ல ஆங்கிலப் பதிவுகளில் சில சமூகம் சார்ந்தே அல்லது ஆன்மா புரிதலின் பொருட்டோ கேள்விகளை முன்வைக்கும் பொருட்டு அங்கு கலந்து கொள்ளும் அனைவரும் தனது கண்ணோட்டத்தை புரிதல்களை பகிர்ந்து கொள்கிறார்கள், அதில் எத்தனை விதமான மனித கோணங்கள் ஒரே விசயத்தை மற்றொருவர் பார்க்கும் விதம் அதனை அங்கு வைக்கும் பொழுது புதிய சிந்தனைவோட்டம் இப்படி....

ஆனால் அது இங்கு நடை பெறுகிறதா என்பதுதான் எனது ஐயப்பாடே...

நிறைய பின்னூட்டங்கள் பெறுவதில் என்ன நன்மை இருக்கிறது? பின்னூட்டமிட்டுச் செல்வதினால் என்ன நன்மை என்பதனை பொருத்து வேண்டுமானால் ஒரு தனிப் பதிவு போடலாம். எனக்கு வேண்டியது கருத்து பரிமாற்றம்.

அதில் எந்த விதமான இடையூறுகளும் வேண்டாமே என்பதுதான். இதில் உங்களுக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருக்கிறதா?
பதிவுகள் எதற்காக பதியப் படுகிறது?

ஒருவரின் புரிதலின் பொருட்டு அவர் கையாளும் விசயத்தை இங்கு அவரின் பார்வையின்யூடே செலுத்தி முன் வைக்கும் பொழுது அவரின் புரிதல்கள் சில நேரம் தவறாகக் கூட இருக்கலாமல்லவா?
அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் சொல்லாமல் தனக்கு உதவி தேவை என்பதனை இங்கு கொணரும் பட்சத்தில் நம்மிடையே வெளிப் படுத்துகிறார் என்பதனை நாம் புரிந்து கொள்ள தவற விட்டுவிடக் கூடாது.

அனுபவமும், உலக அறிவும் நாமே தேடிச் சென்று பெற்றிந்தாலும் அதனை நமக்குள்ளே தேக்கி வைப்பதனைக் காட்டிலும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பிரேயோசனமாகிப் போகிவிடுகிறது அல்லவா?

அது பின்னூட்டங்களின் மூலமாக எட்ட முடியாதா? பின்னூட்டங்களின் எண்ணிக்கை????

தயவு செய்து என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிங்கள்... நன்றி உங்களின் பாரட்டுக்கு

தெகா.

கொழுவி said...

முதலாவதாக வந்தது உண்மையில் மாயவரத்தானின் பின்னூட்டம் தானா? போலியுடையதென்று நினைக்கிறேன்.

பிரசன்னா said...

நல்ல மேட்டர் ஓடிகிட்டு இருக்கு. அண்ண எனக்கு தெரிஞ்சு நான் சொல்றது. என் பதிவுக்கு, பரஞ்சோதி சார், பால பாரதி சார், துபாய் ராஜா, தருமி சார் எல்லாம் பின்னூட்டம் போடும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேல மேல எழுதணும்னு தோணுது. அதனால வலைப்பூ உலகத்துல பேர் எடுத்தவங்க பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும் அப்படின்றது என் கருத்து.
தப்ப எதுனா சொல்லி இருந்த மன்னிசிகுங்க
அன்பில் பிரசன்னா

இளவஞ்சி said...

தெ.க,

//சீனியர், சூனீயர் பாகுபாடின்றி...இமெஷ்யை தள்ளிவைத்துவிட்டு உள்ளே வாருங்கள் அன்பர்களே...//

இந்த சீனியர், ஜீனியர் அப்படிங்கற வார்த்தையெல்லாம் இப்போதான் கேக்கறேன்! எனக்கு தெரிஞ்சு யாருமே இங்க அப்படி சொல்லிக்கறதுமில்லை! நினைச்சுக்கறதுமில்லை!

கருத்துப்பரிமாற்றங்கள் தேவைதாங்க! அதுக்காக உன் கருத்தை நீ சொல்லியே ஆகனும்னு கட்டாயப்படுத்தக் கூடாதில்லையா? எனக்கு என்னவோ வந்து படிச்சவங்க எதையாவது ஒன்னை சொல்லிட்டுத்தான் போகனுங்கறதுல நம்பிக்கை இல்லை!

இங்க ஒரு நாளைக்கு சராசரியா 100 பதிவுக வருது! முதல்ல அத்தனை பதிவுகளையும் படிக்கறதே கடினம்! அதுல பின்னூட்டம் வேற கண்டிப்பாக போட்டுத்தான் ஆகனும்னா விடிஞ்சிரும்!

அதுக்காக பின்னூட்டங்கள் வராமையா இருக்குன்னு கேக்கறீங்களா?! எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க! பின்னூட்டமெல்லாம் பின்னாடி தன்னால தேடிக்கிட்டு வரும்! :)

Thekkikattan said...

பொன்ஸ்,

//நிறைய 'சீனியர், சீனியர் மோஸ்ட் வலை பதிவர்கள் வந்து படித்து, பின்னூட்டம் போட்டு, நல்ல ஊக்கம் கொடுத்தாங்க... அதெல்லாம் இல்லைன்னா நான் எப்போவோ வலைபதிவெல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு போயிருப்பேன்.//

மேலே கூறிய கருத்து முற்றிலும் உண்மை நானும் இல்லையென்று சொல்லவில்லை. அதற்கெனத்தான் என்னுடைய இந்த பதிவிலும் கூட நல்ல உள்ளங்கள் என்று ஹைலைட் பண்ணி சொல்லியிருக்கிறேன். 'க்ளோஸ்' பண்ணிவிட்டு என்ற எண்ண ஓட்டம் புதிய அன்பர்களுக்கு வந்து விடக் கூடாது.

இங்கு பதிபவர்களுக்கும் பின்னூட்டமிடுபவர்களுக்கும் சொந்த வாழ்கை என்ற ஒன்றும் இருக்கிறதுதான். அவர்கள் அதனையும் கவனித்துக் கொண்டு சும்மா பொழுது போக்கிற்காக இங்கு வெட்டியாக நேரத்தை வீணாக்குவதில்லை. ஏதோ தானும் தன் சார்ந்து வாழும் சமூதாயத்திற்கு ஒருவகையில் படைபங்களிப்பதாக கருதிதான் இவ்விடத்தில் கலந்து கொள்கிறார்கள்.

அவ்வாறு கலந்துகொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு வேண்டியது சிறிது ஊக்குவிப்பு நான் எனக்காக இதனை சொல்லவரவில்லை. இங்கு நிலவும், மத, இன, ஜாதி மற்றும் ஏனைய விசயங்களையும் பிளவுகளையும் பார்க்கும் பொழுது எனக்கு நாம் இலக்கை விட்டு விலகிச் செல்கிறொமோ என்று ஐயப் படவைக்கிறது. சரி வுடுங்க...இதனை இத்தோடு.

தெகா

நாமக்கல் சிபி said...

அதாவது எண்ணிக்கை சார்ந்த பின்னூட்டங்கள் பதிவின் விவாதப் பொருளை(டாபிக்) மாற்றிவிடக் கூடுமென்று எண்ணுகிறீர்கள்! அப்படித்தானே தெகா அவர்களே?

(இப்பின்னூட்டம் இப்பதிவு சார்ந்ததுதான் என்று எண்ணுகிறேன் :-))

Sivabalan said...

தெகா

உங்களிடமிருந்து, இன்னுமொரு நல்ல பதிவு!!

dondu(#4800161) said...

விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தபா என்றே பலரும் பேசுகின்றனர்.

உங்கள் வலைப்பூவில் அனானி ஆப்ஷன் இருப்பதை கூட சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் அதர் ஆப்ஷன் இருக்கிறதே? அது மிகவும் அபாயகரமானது. போலி மனிதர் அதை உபயோகித்துத்தான் மாயவரத்தான் பெயரில் பின்னூட்டமிட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்போது எலிக்குட்டி வைத்துப் பார்த்தாலும் சரியான ப்ரொஃபைல் எண் வருமாறு செய்யலாம். நீங்கள் அழித்த போலியின் பதிவில் மாயவரத்தான் அவர்கள் வலைப்பூவில் உபயோகிக்கும் இமேஜ் வந்ததா? அப்படி வந்திருந்தால் எலிக்குட்டியின் சோதனையில் வேறு எண் தெரிந்திருக்கும். இது சம்பந்தமாக நான் மாயவரத்தான் அவர்கள் சம்பந்தப்பட்டப் பதிவில் இட்டப் பின்னூட்டத்தின் நகல் இதோ. பார்க்க: http://mayavarathaan.blogspot.com/2006/05/325.html

"அதாவது (ஒரிஜினல்) டோண்டு சார் பாணியில் சொல்வதானால் என்னுடைய பெயரில் வந்திருக்கும் பின்னூட்டத்தில் என்னுடைய பெயரின் மேல் எலிக்குட்டியையோ புலிக்குட்டியையோ வைத்தீர்களானால் தெரியும் எண் இது தான்."

நீங்கள் என்னிடமிருந்து முழுக்கக் கற்றுக் கொள்ளவில்லை மாயவரத்தான் அவர்களே. தெக்கிக்காட்டான் பதிவில் அதர் ஆப்ஷனிருக்கிறது. ஆகவே உங்கள் ப்ரொஃபைல் எண்ணை எலிக்குட்டியிலும் வரவழைத்துக் கொள்ளலாம். அதற்குத்தான் என்னுடைய போட்டோவையும் போட்டேன், மேலும் என் பின்னூட்டங்களின் நகல்களை என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இட்டேன்.

மூன்று சோதனைகளும் சேர்ந்து வெற்றி பெற்றால்தான் அது என்னுடைய பின்னூட்டம் என்பதை திரும்பத் திரும்பச் சொன்னேன். இப்போதும் கூறுவேன்.

இப்பின்னூட்டத்தின் நகலை தெக்கிக்காட்டானின் சம்பந்தப்பட்ட பதிவிலும் இடுவேன். பார்க்க: http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post_14.html

உங்கள் வலைப்பூவில் அதர் ஆப்ஷன் இல்லை, ஆகவே உண்மை டோண்டு என்பதைப் பார்க்க என் பதிவாளர் எண் மற்றும் போட்டோ சோதனைகள் ஒரு சேர வெற்றி பெற்றால் போதும்."

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட இதன் நகலை என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன்ஸ்~~Poorna said...

// இங்கு நிலவும், மத, இன, ஜாதி மற்றும் ஏனைய விசயங்களையும் பிளவுகளையும் பார்க்கும் பொழுது எனக்கு நாம் இலக்கை விட்டு விலகிச் செல்கிறொமோ என்று ஐயப் படவைக்கிறது. சரி வுடுங்க..//
உண்மை தெ.கா.. என் எண்ணமும் அதுவே..

Anonymous said...

தெகா, சரியான கேள்வியை முன்வைத்திற்கள், நன்பர்கள் சிலர் சொன்னபதில்கலும் எற்றுகொள்ளதக்கது, இருப்பினும் நீங்கள் சொன்னதில் முரன்பட்ட விடயங்கல் இருபின் நன்பர்கள் நாங்க்ள் கேள்வியை முன்வைப்தில் எந்த பாரபட்ச்மும் இல்லை.

Herodito said...

I dont understand a single word, but is just such a beautiful writting. God bless diversity.

Venkataramani said...

வணக்கம்.

'மட்டுறுத்தல் நண்பன்' என்ற ஒரு செயலியை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறேன். இதைப்பற்றிய என் இடுகை தமிழ்மணத்தில் அரைமணி நேரம் மட்டுமே தோன்றியதால் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயிலுடன் இதை உபயோகித்து மட்டுறுத்தலுக்கு தேவையான ஆலோசனைகள் அல்லது தன்னியக்க மட்டுறுத்தல் ஆகிய சேவைகளை பெறலாம். மேற்படி விவரங்களுக்கு இந்த சுட்டிக்கு செல்லவும். நன்றி.

-வெங்கட்ரமணி (அ) அந்நியன்

Related Posts with Thumbnails