Wednesday, May 31, 2006

இன்னொரு புலம்பல் மதுமிதாவிற்காக...

வலைப்பதிவர் பெயர்: பிரபாகர்

வலைப்பூ பெயர் :

தெக்கிக்காட்டான் - எனது வளர்சிதை மாற்றத்தினைசமூகத்தினுடே புகுத்தி என்னை வளர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் தொடங்கப்பட்டது.

இயற்கை நேசி - இயற்கை சார்ந்த விழிப்புணர்வேற்று பூ

ஊருணி - எனது ஆங்கிலப் பதிவு

ஊர்:

புதுக்கோட்டையை அடுத்த சிறு காய்ந்துப் போன டவுனுமில்லாத கிராமமுமல்லாத - கரம்பக்குடி. எங்கெங்கோ எதற்கோ சுற்றித் திரிந்துவிட்டு, தற்போதைய வாசம் அட்லாண்டா...

நாடு:

இப்ப எந்தப் பக்கம் ரெண்டு பக்கமும்தான், இந்தியா-அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:

என் பசி என்னைக் இங்கு கொணர்ந்தது எனலாம்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

அக்டோபர், 09, 2005

இது எத்தனையாவது பதிவு:

எல்லா பூக்களையூம் சேர்த்து 56

இப்பதிவின் சுட்டி(url):

http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post_30.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

*தெக்கிக்காட்டன்* என்பது ஒரு வலைப்பூவின் பெயர். ஏன் அப்படி ஒரு பெயரை பொருக்கி எடுத்தேன் என்றால், ஒரு ந(ட்)ப்பு ஆசையில்தான் எத்துனை பேர் இங்கு பெயருக்கும் ஆளுக்கும் முடிச்சுப் போடமல் உள்ளே வருகிறார்கள் தைரியமாக என்பதனை காண்பதற்கும், சுய அறிவிப்பாக நான் பெயருக்கும் வெளிப்புற தோற்றதிற்கும் அப்பாற்பட்டவன் என்பதனை உணர்த்துவதற்குமே... அங்கு நான் வளர்ந்து சிதைவுறுவதை அவ்வப்பொழுது எழுதி வருகிறேன் (எழுத்துப் பிழைகளுடன்).

எனது மற்றொரு வலைப்பூ *இயற்கை நேசி* அங்கு இயற்கை விழிப்புணர்வூட்டும் பொருட்டு எனது சொந்த அனுபவங்களையும், படித்ததையும், பார்த்தையும், கேட்டதையும் ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டும், பரிணாமம் எனும் இப்பொழுதுக்கு கெட்ட வார்த்தையாக உள்ளதை நல்ல வார்த்தையாக்கும் முயற்சிலும் கூட அப்பூவை இயக்க எண்ணம்.

*ஊருணி* எனும் ஆங்கில வலைப்பூவும் உள்ளது, அதில் நிறைய விசயங்களை என்னுள் நடக்கும் மாற்றங்களை, புரிதல்களையும் பதித்து வைக்கிறேன், தெக்கிக்காட்டான் பதிவுகளுக்கும் இந்த வலைப்பூவிற்கும் சிறிது தொடர்பு இருக்கலாம்.

சந்தித்த அனுபவங்கள்:

எதனை விடுவது எதனை சேர்ப்பது... கற்றுக்கொண்டே இருக்கிறேன், நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமுமாக... அனுபவமே ஒருவரின் அளவிற்கரிய பெட்டகம் என்பதனை நம்புகிறேன்.

பெற்ற நண்பர்கள்:

ஹீம்... மனிதர்கள் பலவிதம்... ஏகப்பட்ட நல்ல உள்ளங்கள், வளர்ந்தும் வளரும் நிலையிலும்.

கற்றவை:

அனுபவமே ஒருவரின் அளவிற்கரிய பெட்டகம் என்பதனை நம்புகிறேன். மேலும் அன்பே சிவம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

கிடைக்கிறது... இருந்தாலும் கொஞ்சம் பின்னால் திரும்பி பார்த்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

இனி செய்ய நினைப்பவை:

என்னை வளர்த்துக் கொள்வதும், பலதரப்பட்ட மனிதர்களின் மூக்குக் கண்ணாடியின் வழியியே இவ்வாழ்வையையும் அதன் முறண்பாடுகளை காணுவதும்...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

எங்கே தொடங்குவது... ஹீம் அதான் அந்த ரெண்டு கெட்டான் ஊரு கரம்பக்குடி, மழை பேஞ்சாத்தான் தண்ணீர் அப்படிங்கிற காஞ்சுப் போன புழுதி பறக்கும் ஊருல என்னுடைய பயணம் ஆரம்பித்து, ஊரணிக் கரையில இருக்கிற அரச மரத்தில ஏறி உக்கார்ந்து பரீட்சைக்கு படிச்சி, அப்புறம் ஊர் ஊரா சுற்றி அந்த டிகிரி இந்த டிகிரின்னு வாங்கி, கடைசில கோயம்புத்தூர் பக்கமா போயி மழைகாடுகளில் ஆதிவாசிகளோட வாசிகளா ஐக்கியமாகி. அங்கொயிருந்து சம்பந்தமே இல்லாத கான்கீரிட் காடான அமெரிக்கா வந்து விழுந்துட்டேன் இப்போ.

18 comments:

பொன்ஸ்~~Poorna said...

//கோயம்புத்தூர் பக்கமா போயி மழைகாடுகளில் //
//கான்கீரிட் காடான //

அதான் காட்டானா? :)

Thekkikattan said...

பொன்ஸ்,

அதே, அதுதான் காரணம், காட்டில் அலைந்து திரிந்ததால் காட்டான் ஆனேன். எனக்கு நானே இட்டுக் கொண்ட பெயர். நல்லா இருக்கா?

தெகா.

சந்தோஷ் aka Santhosh said...

தெகா,
கலக்குங்க ரொம்ப சீரியசா எழுதி இருக்கீங்க போல.

Thekkikattan said...

சந்தோஷ்,

சுயபுராணம் பாடும் பொழுது கொஞ்சம் கிண்டலும், சீரியாசவும் இருக்கட்டுமேன்னு புலம்பித் தள்ளினினேன், ரொம்பவா சீரியாச இருக்கு?

நன்றி சந்தோஷ்...

தெகா.

Sivabalan said...

// எனது வளர்சிதை மாற்றத்தினைசமூகத்தினுடே புகுத்தி என்னை வளர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் தொடங்கப்பட்டது //

அருமையான வரிகள்..

Thekkikattan said...

சிவா,

நன்றி! கொஞ்சம் ஊதி புகைய வைக்கிறேன் ;-)))

தெகா.

Dharumi said...

//என் பசி என்னைக் இங்கு கொணர்ந்தது எனலாம்.//
ப்ரபா,உம் 'பக்தியை' மெச்சினோம். இருப்பினும் பிடியுங்கள் சாபம்: என்றும் இந்தப் பசியோடு இருங்கள்!

இலவசக்கொத்தனார் said...

//வளர்சிதை மாற்றத்தினைசமூகத்தினுடே புகுத்தி //

ஏங்க தெகா. நல்லாத்தானே இருந்தீங்க. இப்போ என்ன திடீர்ன்னு சமக்கால நவீனத்துவத்தோட எழுதறீங்க?

கொஞ்சம் தமிழில் எழுதுங்க சாமி.

Suka said...

தெகா .. அருமை :)

//கடைசில கோயம்புத்தூர் பக்கமா போயி மழைகாடுகளில் ஆதிவாசிகளோட வாசிகளா ஐக்கியமாகி//


இது எந்த இடம் .. ஒரு சக ஆதிவாசிங்க முறைல கேக்குறேன் :)

சுகா

Thekkikattan said...

எனக்குத் தெரிந்த ஏதோ ஒரு நல்ல வார்த்தை தேடிபிடித்து இங்கன போட்டேன், பிரியலேன்னு சொல்லிப்புட்டீகளே...

நான் அப்பாலேருந்து சென்னை தூய தமில் பேசப் போறேன்... அப்புறம் அந்த சன் ட்டி.வி ஸ்பிரிங் கழுத்து அம்மா கதை என்னாச்சு...? ஃபோன் போட்டு சொல்லிட்டீகளா?

இலவசக்கொத்தனார் said...

அவங்க எதிர் கட்சியா இருக்கும் போது தைரியமா தங்கவேட்டை நிகழ்ச்சியை நான் கலாய்ச்சது உண்மைதான். ஆனா இப்போ அவங்க ஆளும் கட்சி. அதனால விமர்சனமெல்லாம் பண்ணுணா ஆட்டோ வரும். சாக்கிரதை.
சொல்லிட்டேன். அப்புறமா சொல்லலைன்னு சொல்லப்பிடாது.

Thekkikattan said...

சுவாமி தருமியானந்தா!

தாங்களின் சொல் அப்படியே நிஜமாகி நான் என்றைறைக்கும் குட்டுப் பட்டே சாவக் கடவேனாக ;-)))))))

மஞ்சூர் ராசா said...

இனி தவறாமல் படையலுக்கு நானும் வரலாமென்று நினைக்கிறேன். எப்படி வசதி?

Thekkikattan said...

இ.கொ,

//அவங்க எதிர் கட்சியா இருக்கும் போது தைரியமா தங்கவேட்டை நிகழ்ச்சியை நான் கலாய்ச்சது உண்மைதான். ஆனா இப்போ அவங்க ஆளும் கட்சி. அதனால விமர்சனமெல்லாம் பண்ணுணா ஆட்டோ வரும். சாக்கிரதை.
சொல்லிட்டேன். அப்புறமா சொல்லலைன்னு சொல்லப்பிடாது.//

எந்த கட்சி எப்பொ ஆட்சியெ மாத்துதோ அந்த கட்சிப் பக்கம் நாங்க பச்சோந்தி கணக்கா கலரோட கலரா மாறி ஜோதிலெ ஐயக்கம் ஆகிடுவேம்லெ...

இங்கன பழம் திண்ணு சீடு போட்டவாய்ங்க எங்க பரம்பரை. அப்புறம் எதுக்கு சகோதரக் கூட்டம் வீட்டுலெ ஆளுக்கொரு கட்சியிலெ இருந்த கீழே விழுந்தா அடி படாது பாருங்க அதென்... ;-)))

Thekkikattan said...

மஞ்சூர் ராசா,

//இனி தவறாமல் படையலுக்கு நானும் வரலாமென்று நினைக்கிறேன். எப்படி வசதி? //

அது என்ன அப்பிடி கேட்டிப்புட்டீக, என் வீடு திறந்த வெளி மைதானம் மாதிரி யார் வேணலும் வரலாம் போலாம். சுவடுகளையும் விட்டுச் செல்லலாம்... யு வார் தி மோஸ்ட் வெல்கம், இவிடெ...

அன்புடன்,

தெகா.

Thekkikattan said...

சுகா,

இது உங்களுக்கு முதல் முறை என் வீடு மிதித்தது என்று நினைக்கிறேன்.

நன்றி!

//இது எந்த இடம் .. ஒரு சக ஆதிவாசிங்க முறைல கேக்குறேன் :)//

டாப் சிலிப்ல இருந்து ஒரு 12 கிலோமீட்டர் ட்ரெக் பண்ணினோமின்ன வரகலியார்னு ஒரு ட்ரைபல் கேம்ப் இருக்கு அங்கதாங்க, சும்மா தவம தவமிருந்து இரவு வானத்த கேம்ப் நெருப்புக்கூடையே பருகிய அனுபவம் இன்னும் கண்ணுக்குள்...

இயற்கை நேசியில அதனைப் பற்றி விரிவா எழுதுவோம் வந்திருங்க தவறாம படையலுக்கு ;-))

தெகா.

Masilamanis said...

Dear Orani sorry Prabhakaran. Really enjoyed this bit of your writing. ok. God bless you

Thekkikattan said...

மாசி சார்,

இந்த பக்கமா வந்ததுமில்லமெ படிச்சுட்டு பின்னூட்டம் வேற போட்டுட்டு போயிருக்கீங்க.

ரொம்ப நன்றி, அடிக்கடி வாங்க இந்த பக்கமா. என்ன சார், சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு :-)

Related Posts with Thumbnails