Monday, July 31, 2006

எனது தூசி தட்டப்பட்ட நூலகம்...

என் கண்களில் சிக்கிய சில புத்தகங்களை அலமாரி தட்டுகளிலிருந்து ஓவ்வொன்றாக உருவி இங்கு ஏத்தி வைக்கும் முயற்சியுடன் இந்தப் பதிவு.

இப்பொழுதெல்லாம் என்ன புத்தகம் வாங்கினோம், இரவல் கொடுத்தோமா இல்லைய, நம்முடன் இருக்கிறதா இல்லையா, இது போன்ற கேள்விகளுக்கு உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் புரட்டிப் பார்க்க ஏதுவாகவும், திரும்பவும் வாங்கிய புத்தகங்களை வாங்கி விடாமல் இருக்கவும் உதவவே இந்த பதிவு.

இங்கு ஏத்தப் பட்டிருக்கும் புத்தகங்கள் அதனை மீண்டும் பார்க்கும் பொழுது ஞாபகத்தில் வந்து போனவைகளை கொண்டு அவ் நண்பர்களை இங்கு ஏற்றுவதா வேண்டாமா என்பதனை கருத்தில் கொண்டே பதிந்து வைக்கிறேன்.

நிறைய புத்தகங்கள் கணக்கில் வராமலும் இருக்கலாம். தெகா இம்புட்டுத்தானா இல்ல இன்னும் வைச்சிருக்கியான்னு கேக்கிற ஆட்களுக்கு நம்ம படிச்சது சம்பந்தம இருக்கிற புத்தகங்கள் அது பாட்டுக்கு அந்த பக்கம் உட்கார்ந்து என் வாழ்க்கையை வேடிக்கப் பார்த்துகிட்டு இருக்காங்க. அவனுங்கள ஆட்டத்தில சேர்க்கல.

எது எப்படியோங்க, எனக்கு புத்தகம் படிக்கிற வெறிய தூண்டி விட்டது என்னுடைய ஒரு நண்பன் அவன் பெயர் சுரேஷ் தி.ஜா எழுதின மோக முள் அப்படிங்கிற புத்தகம் படிக்க படிக்க என்னுள் பத்திகிட்டு எரிஞ்சுது , அப்ப நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன் கேக்கவா வேணும் (பலான புத்தகமெல்லாம் பல மைல் தூரம் தள்ளி நண்பர்களுடன் சேர்ந்து போயி பார்த்துப்புட்டு அங்கேயே தலையை சுத்தி தூக்கிப் போட்டுட்டு வந்திடறது....)

பிறகு சாண்டில்யன் பைத்தியம் இப்படியே நான் பரிணமித்து பரிணமித்து இப்ப கீழே இருக்கிற ஆட்களோடவும் கைபிடிச்சுட்டு நடந்தாச்சு.

இப்போ போகலம் லிஸ்ட்க்கு வாங்க:

இப்போதைக்கு இது தான் எனது உலக அரிச்சுவடி :-

1. Atlas of world history (From the origin of mankind to the present day) Edited by Kate Saton and Liz Mckay.

1a. South-East Asia On a Shoe String - Lonely Planet - (அதிலும் இந்த கைடு ரொம்பவேவேவே உதவுனுச்சுங்க தனியா நான் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து எல்லாம் சுத்திப் பார்க்கும் பொழுதெல்லாம், இன்னமும்...)

2.Teach Yourself Photography - Lee Frost (முயற்சி திருவினையாக்கும் புத்தகங்கள்)

3. Understanding Exposure - Bryan Peterson

4. The Explorer II World Atlas - Ronald McNally.

5. The Oxford English Dictionary - (அசடு வழியிறதிலிருந்து காப்பாத்திக்க)

6. The Universe in a Nutshell - Stephen Hawking

7. The Illustrated Brief History of Time - Stephen Hawking

7a. Parallel Universes (The Search for Other Worlds) - Fred Alanwolf

8. Practical Skywatching - The Nature Companions

ரொம்ப அவசியம படிக்க வேண்டிய புத்தகங்கள்...

9. அக்குனிச் சிறகுகள் (சுய சரிதம்) - எ.பி.ஜே. அப்துல் கலாம், அருண்

10. திவாரிஇந்தியா 2020 - எ.பி.ஜே. அப்துல் கலாம்

11. நான் துணிந்தவள்! - கிரண் பேடி (வரலாறு)

அப்புறம் இந்த அகராதி இன்னமும் வாங்கவில்லையென்றால் வாங்கி முயற்சித்துப் பாருங்கள் - "அடச் ச்சீ" என்ற பேச்சு வழக்க தமிழ் வார்த்தைக்கு கூட ஆங்கிலத்தில் எப்படி கூற முடியும்மென்பதிலிருந்து... நிறைய அருமையான தமிழ் வார்த்தைகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நான் அதிகமாக, தமிழ் எழுதும் பொழுது எழுத்துப் பிழை செய்வதால் இதுதான் எனக்கு தமிழ் வாத்தியார்...

12. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாராதி

கீழே அடுக்கப்பட்டுள்ள நண்பர்கள் மற்றும் மனிதம் உணர்ந்தவர்கள் எல்லாம் "அடெ ரொம்ப அலட்டிக்காதே தெகா... எல்லாம் சரியா வந்துடுமின்னு" எதார்த்த வாழ்கையை எனக்கு எப்பவெல்லாம் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கோ அப்பவெல்லாம் இவங்க என்னோட நடக்க வந்திடுவாங்க....

13. நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ
14. அன்பெனும் ஓடையிலே... ஓஷோ
15. வெற்றுப் படகு-1 - ஓஷோ
16. வெற்றுப் படகு-2 - ஓஷொ
17. ஞானத்தின் பிறப்பிடம் - ஓஷோ
18. ஞானக் கதைகள் - ஓஷோ
19. மிகவும் தவறாகக் கருதப்படும் மனிதர் - ஒஷோ
20. தந்தரா - ஓஷோ
21. நாரதரின் பக்தி சூத்திரம் - ஓஷோ
22. தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - ஓஷோ
23. நம்பிக்கை நட்சத்திரமாய் - ஓஷோ
24. கடவுள் உங்கள் உள்ளேதான் இருக்கிறார் - ஓஷோ
25. புல் தானகவே வளர்கிறது - ஓஷோ
26. புல் மீண்டும் தானகவே வளர்கிறது - ஓஷோ
26a. தம்பதம் - ஒஷோ
27b. வாழும் கலை - ஒஷோ
27. ராஜ யோகம் - சுவாமி விவேகானந்தர்
28. கர்ம யோகம் - சுவாமி விவேகானந்தா
29. பக்தி யோகம்- சுவாமி விவேகானந்தா
30. ஞான யோகம் - சுவாமி விவேகானந்தா
40. விவேகானந்த இலக்கியம் - சகோதர சகோதரிகளே
41. மனவாசம் - கவிஞர் கண்ணதாசன்
42. கடவுள் இருக்கிறாரா? சுஜாதா
43. ராமாயாணம் - ராஜாஜி
44. மகாபாரதம் - ராஜாஜி
45. திருக்குறள் - கலைஞர் உரை
46. சந்தேகம் தெளிதல் பாகம் 1 & 2 - சுவாமி சித்பவானந்தர்
47. வாரம் ஒரு தகவல் பாகம் 1 & 2 - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

சில கவிதை புத்தகங்கள், நான் ரசித்து படித்தவர்களின் தொகுப்பிலிருந்து சில....

48. ஞானிகளின் தோட்டம் - கலீல் ஜிப்ரான்
49. தீர்கத்தரிசி - கலீல் ஜிப்ரான்
50. மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்
50a. ஞானக் களஞ்சியம் - கலீல் ஜிப்ரான்

51. பால்வீதி - அப்துல் ரகுமான்

52. கனவுக் குதிரகைகள் - மு. மேத்தா
53. ஒரு வானம் இரு சிறகு -மு. மேத்தா
54. ஊர்வலம் - மு. மேத்தா
55. இதயத்தில் நாற்காலி - மு. மேத்தா

56. வைரமுத்து கவிதைகள் - கி.பி 2000 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு
57. தண்ணீர் தேசம் - வைரமுத்து
58. காவி நிறத்தில் ஒரு காதல் - வைரமுத்து
59. கல்வெட்டுக்கள் - வைரமுத்து

60. ஆயுத பூசை - ஜெயகாந்தன்

61. இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்

மீண்டும் ஆங்கிலத்தில் வாழ்வியல் சார்ந்த ஐயங்களுக்கு இவர்களின் புரிதல்களின் மூலமாக ஏதாவது எனக்கு கிடைக்குமா என்று...

62. An Autobiography of M. K. Gandhi
62a. Apostle of Peace by Swami Satchidananda
63. Autobiography of a Yogi - Paramahansa Yogananda
64. Ageless Body Timeless Mind - Deepak Chopra
65. Buddhism Plain and Simple - Steve Hagen
66. Buddhism - The Global Spirit Libray
67. Conscious Immortality - Sri Ramana Maharshi
68. Cosmology and Creation - the spiritual Significance of -contemporary cosmology by Paul Brockelman
69. Ethics for the New Millennium by Dalai Lama
69a. Encounter the Enlightened by Jaggi Vasudev
70. Ecstatic Flight into Himalayas - G.R. Venkatraman
71. Kailash Journal -Pilgrimage into the Himalayas by Sri Swami Satchidananda
72. Light of Yoga - B.K.S Iyengar
73. None High; None Low by Gandhi
74. Nothing is Impossible - Christopher Reeve
75. Oh, Mind Relax Please - Swami Sukhabodhanada
76. Reason For Hope - A spritual journey by Jane Goodall
77. Richard Hittleman's Yoga
77a. Science of Being And Art of Living (Transcendetal Meditaiton) - Maharishi Mahesh Yogi
78. Shaving The Inside of your skull (Crazy wisdom for discovering who you really are) by Mel Ash.
79. Science and Spirituality Pilani v. Krishnamurthy
80. The Master's Touch - Swami Satchidananda
80a. The Book (On the Taboo Against Knowing Who You Are) by Alan Woods
81. The Goldern Present - Swami Satchidananda
82. Total Freedom - J. Krishnamurthy
83. The Voices of Heaven by Frederik Poh
84. The Master's Touch - Swami Satchidananda
85. The Mind of God - Paul Davies
86. The Art of Happiness - Dalai Lama
87. The Tao of Health, Longevity, and Immortality by Chung and Lu
88. The Way of the Wizard - Deepak Chopra
88a. Ageless Body, Timeless Mind: The Quantum Alternative to Growing Old - Deepak Chopra

89. The Path to Love - Deepak Chopra

90. The Alchemist - Paulo Coelho
90a. By the River Piedra I Sat Down and Wept by Paulo Coelho
90b. Veronica Decides to Die by Paulo Coelho
90c. Zahir by Paulo Coelho
91. The Future of the Body (Exploration into Further Evolution of Human Nature)- Michael Murphy
92. The Ultimate Journey (A Retracing Journey Made Hsuan Tsang) -Richard Bernstein
93. Voice of Himalayas - Swami Sivananda
94. Why Religion Matters - Huston Smith
95. Yoga the Iyengar Way - Silva, Mira and Shyam
95a. The City of Joy by Dominique Lapierre

இப்பெலாம் சும்மா காதல் நவரசம் சொட்டும் காதல் கதைகள், அப்புறம் கத்தியால குத்தினது யாருன்னு கண்டுபிடிக்கிற கதைகள் மேல இருந்த கவர்ச்சி எல்லாம் போய்டுச்சுங்க... இப்ப இந்த மாதிரி சமூக அக்கரை உள்ள அல்லது அறிவியல் விசயங்களைப் பத்தி பேசுற நாவல்கள் மட்டும்தான் வீட்டுக்குள்ள அனுமதி... அவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு;

96. Out of India (Selected Short Sotries) - Ruth Prawer Jhabhavala
97. Shiva Dancing -by Bharti Kirchner
98. Disclosure by Michael Crichton
99. Timeline by Michael Crichton
100. Airframe - Michael Crichton
100a. The Next - Michael Crichton
101. Tyrannosaur Canyon- Douglas Preston
102. Heat and Dust - Ruth Prawer Jhabvala
103. The Prey by Michael Crichton
104. David Copperfield by Charles Dickens
105. The Great Novels of Thomas Hardy
106. The God of Small Things - Arundhati Roy
107. My Dateless Diary, The Guide, Swami and Friends, The Banyan Tree, Malgudi Tiger - R. K. Narayan (இவரு எழுதின இன்னும் ஒரு சில நாவல்கள் இருக்கு எப்பவேண படிக்கலாம்)
108. The Old Man and the Sea - Earnest Hemingway
108a. The Pearl by John Steinbeck
109b. East, West by Salman Rushdie
109c. Fatal Deception (The untold story of Asbestos) by Michael Bowker

உலகம் போற போக்கை தெரிஞ்சுகிறதுக்கும், அப்புறம் சுற்றுப் புறச் சூழல் மாசுபாடு அதனில் நமது பங்கு பத்தி அறிஞ்சுகிறதுக்கு வீட்டில் உள்ள சில புத்தகங்கள்....

109. Born to Work (Child Labor in India - Neera Burra
110. Siva & Her Sisters (Genders, Caste, and Class in Rural S. India - Karin Kapadia)
111. The World is Flat - Thomas Friedman
112. Longitudes and Attitudes - Thomas L. Friedman
113. Discordant Harmonies (A New Ecology for the Twenty-First Cnetuary)
114. Elephant Days and Night -Dr. R. Sukumar
115. Wild Sex (All ABout Birds and Bees)- Susan Windybank
116. Global Warming - The Green Peave Report Edited by Jeremy L
117. Megatrends Asia - John Naisbitt
118. Thunder From the East - Nicholas D. Kristof & Sheryl WuDnn
119. India Seen Afar - Kathleen Raine
120. The Third Chimpanzee - Jared Diamond
120a. Guns, Germs and Steel - Jared Diamond
120b. Collapse (How Societies Choose To Fall or Succeed - Jared Diamond
121. Health for Peace- Suresh Kulkarni
122. Growing up with two languages - Una Cunningham et al.,
123. The Moral Animal (Why We are the way we are) - Robert Wright
123a. Biopiracy: the plunder of Nature and Knowledge by Vandana Shiva
123b. Fast Food Nation (The dark side of all-american Meal) by Eric Schlosser

யாருக்காவது எப்பாவது உதவுமேன்னு (உதவிடுச்சு முன்னமே...இனிமேலும் பயன்படுமின்னு) வாங்கி படிச்ச புத்தகங்கள்...

124. The Dissociative Identity Disorder - Deborah Bray Haddock
125. Trust After Trauma: A Guide to Relationships for Survivors and Those Who Love Them by Aphrodite Matsakis
126. Men Are from Mars, Women are from Venus - John Gray Ph.D
127. The Wounded Women by Linda Schierse Leonard
128. The Hunger for Ectasy - Jalaja Boheim, Ph.D

சில ஆங்கில தத்துவ ஞானிகளின் புத்தகங்கள் கவிதை வடிவில்...

129. Tears and laughter- Kahlil Gibran
130. Mirrors of the Soul - Kahlil Gibran
131. The Wisdom of Kahlil Gibran
132. Selected Poems of Rainer Maria Rilke

இது மட்டுமில்லாமல் National Geography, Smithsonian Magazineம் மற்றும் Conservation Societyயும் ரெகுலராக வீட்டிற்கு வரும் விசயங்கள், படிக்கத்தான் நேரமில்லை.

மொத்த "என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்காவும்," 1956லிருந்து வாங்கப்பட்ட "நேஷனல் ஜியோகிராஃபியும்" எங்களது நூலகத்தில் அடக்கம். இவைகளை மெதுவாக இந்தியாவிற்கு நகர்த்திக் கொண்டு இருக்கிறேன்... அங்கு ஒரு பொது நூலகம் ஒன்று அமைக்கலாம் என்ற எண்ணத்துடன்...

இன்னும் படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சவாரிச் சுமையெல்லாம் இறக்கி வைச்சுபுட்டு அப்புறம் புத்தகங்களோட குடித்தனம் நடத்தணும்மின்னு ஆசையிருக்கு...

கற்றது கைமண்ணளவு... இம்புட்டையும் படிச்சுப்புட்டு எனக்கு கிடைச்ச செய்தி - அன்பு ஒண்ணுதான் அழியாதது அப்படிங்கிறதுதான்.

பி.கு: இப் பதிவு இந்தப் பதிவின் தாக்கமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பதிவின் மூலம் ஓர் அழைப்பு விடுத்து, எனக்கு ஞாபகம் மூட்டி இது போன்ற ஒரு பதிவிட வழிகோணியதற்கும், தூசு தட்டி பிறகு அடுக்குவதற்கும் அப்பதிவிட்டவருக்கு எனது நன்றிகள்.

Thursday, July 27, 2006

தீயணைப்புவண்டியும் குடிகார மனிதனும்

Image Hosted by ImageShack.us

நேத்து ஒரு காமெடிங்க இங்க நான் இருக்கிற இடத்திலே. எப்பப் பார்த்தாலும் இந்த ரெண்டு தம்பதிகளும், அதான் அந்த ஆம்புலன்ஸ்-தீயணைப்பு வண்டி சும்மா...வய்ங்...வய்ங்..வய்ங்னு போர்க்கல அடிப்படை வேகத்திலே போறத, நான் குப்பை கொட்டிகிட்டு இருக்கிற ஹைவே பக்கத்திலேருந்து பார்த்துகிட்டே இருக்கலாம்.

நேத்து என்னாகிப் போச்சுன்ன, என் மக்கள் எவ்வளவு தூரம் கடமையில் கண்ணாக இருக்றாங்க அப்படின்னு க்ளோஸ் அப்பிலருந்து ஒரு சீனு பார்த்தேன்... அதெ மத்தவங்களும் பார்த்தும் எல்லா இடத்திலேயும் காத்து வர மாதிரி ஒரே சிரிப்புத்தான் போங்க.இந்தாங்க கதை.

ஒரு சிவப்புக் கழுத்தன் (Red Neck) படிக்காத, பாமரத்தனமான வெள்ளைக்காரன இப்படித்தான் இங்க கூப்பிடுறாங்க...அதோட மொழி பெயர்பு தெகாவோடது, கண்டுக்காதீங்க. அந்த கழுத்தன் நெறைய குடிச்சுப்போட்டு சவமாட்டம் விழுந்து கிடந்துருக்கிறான், ஒரு கடை வாசல் முன்னாலே.

மக்கள் அரண்டு போய் 911னெ கூப்பிட முதலில் ஒரு போலிஸ் காரர் வந்து முகத்தில் சுளீர்ரென்று ஐஸ் வாட்டர் அடிச்சு எழுப்புனப்ப கண்டுபிடிச்சுட்டார் தலைவரு தண்ணியில் மிதக்கிறாருன்னு. அப்புறம் என்னங்க நியாயம சுய புத்தி உள்ள ஆட்கள் பண்ணுவாங்க.

நம்ம சிட்டிசன யோவ் ஏய்யா இப்படி பண்றெ ஒழுங்க வீடு போய்ச் சேருய்யான்னு, நம்மூரு காவல் தெய்வங்கள இருந்தா அவருக்கு அங்கேயே தீர்ப்பு வழங்கி அவர அனுப்பிச்சு வச்சுருப்பாங்க இல்லியா.

ஆனா, இந்த ஆபீசர் அடிச்சாரு ஃபோன எவன் வீட்டு காசு, உடனே ஒரு ஆம்புலன்சு, அதனை தொடர்ந்து ஒரு தீயணைக்கும் வண்டி, கதறிகிட்டு வருது அந்த செனேடர காப்பாத்தி உயிர் பிழைக்க வைக்க. அந்த ஆளு அப்பவே எழுந்து நின்னு ஒரு தம்மு வேற நம்ம அறிவுக் கொழுந்து ஆபீசருக்கிட்ட இருந்து நெருப்பு பெட்டி வாங்கி அடிச்சுக்கிட்டு இருக்காரு.

இந்த சூழ்நிலையில் அந்த ரெண்டு வண்டியும் வந்துச்சு, தீயணைப்பு வண்டி ஒரு ரவுண்ட் வுட்டுட்டு போயிடுச்சு. ஆம்புலன்ஸ் ஆட்கள் மட்டும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, அந்த ஆள ஏத்தி உட்கார வைச்சுகிட்டு போயிட்டாங்க. அனேகமாக வீட்டுல கொண்டு இறக்கி விடுவாங்கன்னு நினைக்கிறேன்.

எப்படியோ, நம்ம சிவப்பு கழுத்தனுக்கு பில்லு, ரெண்டு வண்டியும் வந்துட்டு போனதுக்கு தீட்டிபுடுவாங்க. அவங்களுக்கும், அன்னிக்கு எவ்வளவு ஆக்டிவ்வா டூட்டி எல்லாம் பார்த்தோம்னு ஆகிப்போச்சு.

இப்படி இருந்த இவனுங்க எப்படியா விளங்குவானுங்க. அப்புறம் ஏன் காற்று மாசுபடாது, வெப்பம் ஏறாது. ஒரு கவ்வொதி பயலுக்கு தீயணைக்கிற வண்டி. சிரிக்காம என்னாத்த பண்ணச் சொல்லுறீங்க, சொல்லுங்க.

வளர்ந்த நாடுன்ன சும்மாவா?

Friday, July 21, 2006

நீயும் நானும் அண்ணன் தம்பிடா...


மறந்து போன
உறவை
புதுப்பிக்கும் எண்ணத்துடன்
இதோ
வாலில்லாக் குரங்குகளுடன்
ஒர்
வால் குரங்குகளின்
சந்திப்பு...!பி.கு: இடது கைப் பக்கம் சிவப்பு துண்டு முக்காடு போட்டுகிட்டு உட்கார்ந்து அந்த பிரதர கவுக்கிறதுதான் நான்... மத்த பேரல்லாம் முன்னமே கவுத்த என் பிரதர்ஸ் ;-))

Thursday, July 20, 2006

பரிணாம ஏணியில் ஒரு பசு...வீராணம்
காவேரி
குழாயடிச் சண்டை
என்று பிய்ந்து நைந்து போன
மனித மனம்
ஒரு பசுவின்
பரிணாம ஏற்றத்தை
ரசிக்க மறந்து போனது...!

Wednesday, July 19, 2006

Indian Bloggers, Its a High Time...

Sorry guys I am away on a trip, therefore, no tamil script to feed in. However, a thought to share with you all. Please go through the following passage... thank you!

Here is the day, the most expected one from our recent past is with us to face. All along, since the most welcoming blogosphere existence, I was expecting something like this "a temporary shut down thingy" would happen. And exactly that has happened in the name of national security. And now what?

Internet revolution, as we all aware of, is taking us into another level of human intelectuality. This tool is, I believe breaking all the barricades and providing a chance to reach out and share the individuals idea, knowledge and wisdom at the snap of a finger around the world.

It can create a huge impact in the pattern of ones belief system. When one individual indepth vision into something is brought out and shared with the fellow readers, he/she ignites the fire onto others too, to think and change their whole dimension of looking at things. Is not it a great boon for our time?

Now what is going on here with blogging, and banning it in our system. I firmly believe there is something is moving with blogging, which could have tremendously attracted the attention of the biggies and now they feel threatned.

If the banning is only temporary, its tolerable, otherwise, it is a high time for Indian bloggers to unite together to fight and revoke the lost right so called the freedom of expression.

Another link to ponder over... அருந்ததி ராயின் இந்தியா...!

Sunday, July 09, 2006

மரணம் இனிக்கிறது - (தேன்கூடு போட்டி)

"உஸ் என்ன எழவுடிது, பத்து மணிக்கெல்லாம் மண்டையெ போட வைக்கிற வெய்லு கொளுத்துன்னு," அங்கலாய்த்துக் கொண்டே 101 வயது ருக்கு கொல்லைப்புறம் இருக்கிற மகவீட்டு திண்ணையிலே விசிறி மட்டையும் கையுமாய் தினமும் தன் கட்டையை சாய்த்துவிடுவாள் ருக்கு கிழவி.

கிழவி வயசுக்கும் விசிறி மட்டைக்கும் ஒரு தொடர்பு இருக்குங்கிற மாதிரி, கிழவி தூங்குதா இல்லை முழிச்சுகிட்டு இருக்குதான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, ராத்திரி ஒரு மணியா இருந்தாலும் சரி, மூணு மணியா இருந்தாலும் சரி கைமட்டும் விசிறியொட வீசிகிட்டே இருக்கும்.

ருக்கு ஆத்தாவின் உயரம் நல்ல ஆறடிக்கு இருந்திருக்கணும், நல்ல வெட வெடன்னு உயரம், எளமையிலே நல்ல கலரோட இருந்திருக்கும்ன்னு யார் பார்த்தாலும் சொல்லிடலாம். அப்படி ஒரு உடல் வாகு. ஆனால் முதுமையின்னாவே திரும்பவும் குழந்தையா தேய்றதானேன்னு, கிழவியும் தினமும் கொஞ்ச கொஞ்சமா சுருங்கி போய்கிட்டே இருந்தது. உடல் அளவிற்கு. ஆனா மனசு எப்பொழுதும் ஒரே மாதிரிதான். இன்னமும் அதொட கணவர பத்தி பேசி கிண்டல் பண்ணா வெட்கம் பார்க்கமுடியும் அதுகிட்டெ.

ஆனாலும் இப்பவும், நல்ல திடகாத்திரமா, யார் உதவியுமில்லாம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு குளிக்கிறதிலேருந்து மற்ற எல்லா வேலையுமே காலைலெ டாண்னு அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்திருச்சு செஞ்சிடும்.

ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ராத்திரிலே கண் தெரியாம திறந்து கெடந்த கிணத்துக்குள்ளே விழுந்து, கூடையிலே சவாரிச்சு மேலே வந்துச்சு உடைஞ்சுப் போன இடுப்போட, அன்னிலைலிருந்து குமிஞ்சுதான் நடக்கணும்கிற நெலமை.

அப்படி இருந்தாலும் தினமும் நேரத்திலே வீட்டு கொல்லைப்புறம் பெருக்கிறதிலேருந்து, சாமன் சட்டு கழுவுற வரைக்கும் ஒண்ணும் விட்டு வைக்கிறது கிடையாது. ரெண்டு புள்ளைங்க பெத்ததுதான். ஆசைக்கு ஒண்ணுன்னு. இப்பொ மவன் பெரிய ஆபிசர ஊருர போய் உத்தியோகம் பாக்குறான், மவ உள்ளூருலேயே கட்டிக் கொடுத்து, இன்னைக்கும் கிழவிக்கு துணையா இருக்கா.

கிழவிக்கு எந்த குறைச்சலும் இல்லைதான். யாரடவாது பேசிக்கிட்டே இருக்க ஆளுங்க, நல்ல ஊர் கதை பேசும். ஆனா நெளிவு சுளிவுவோட. அப்படியும் எப்பாவது பிரச்சனை வந்து மவ காதுக்கு வரும் போது கொஞ்சம் ரெண்டு பேருக்கும் அரச புரசலா சாப்பாடு நேரத்திலே, "இந்த கிழவிக்கு வாய வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா, ஏன் இப்படி பண்ணிவைச்சுத் தொலையுது" அப்படின்னு மவ ஆரம்பிக்க, கிழவி, "அடி நான் என்னடி அப்படி சொல்லிப்புட்டேன், வாயெ புடுங்கினா ஒரு வார்த்தை சொல்லி வைச்சேன்" அப்படிங்கிறது அப்பபொ நடக்கிற பேச்சு.

ஆனா கிழவிக்கு இந்த வெயில் காலம் வந்துருச்சுன்னா சுத்தமா பிடிக்காது. ஏதோ நெஞ்சு பட படன்னு கோழி இறக்கைய அடிச்சுகிறது மாதிரி அடிச்சுகிதுன்னு கம்ளைண்ட் பண்ணிகிட்டே விசிறி மட்டையும் அதுவுமா மரத்துக்கு மரம் போயி உட்கார்ந்து விசிறிகிட்டே இருக்கும். பாக்கவே பாவமா இருக்கும்.

கிழவி வாழ்க்கையிலே எல்லாத்தையும் பார்த்துருச்சு. கணவனே தன்னோட 27 வயசிலேயே சாக கொடுத்திட்டு, அவரு வச்சுட்டுப் போன நெல புலங்களே வைச்சு புள்ளைய படிக்க வைச்சு, கல்யாணமும் பண்ணிக் கொடுத்து, மருமவ வெறுப்பு பார்த்து, மகன் பாசத்துக்கு ஏங்கி, தன் அண்ணன் வீட்டு புள்ளைங்க பசி, பட்டினியா கெடக்கிறத பார்க்க சகிக்காமெ கொல்லைப்புறம ஒரு புள்ளைய வரச் சொல்லி கழுத்துச் செய்ன கழட்டிக் கொடுத்து, மக வீட்டு பசி, பட்டினியிலெ உழண்டு, ஆறுதலா அங்கேயே கிடந்து, ரெண்டு வீட்டு பேரக் குழந்தைங்களயும் பார்த்து வைச்சுருச்சு.

கடைசிய மவ வீட்டு பஞ்சமும் பறந்து போய், பேரக் குழந்தைகளும் அது அதுவும் அங்கொண்னும் இங்கொண்னும்மாய் மணம் முடிச்சுப் போக ஆரம்பிக்கும் போது, அதுக்கு வயது 101 இருக்கலாம். அப்பவும் ஒரே புலம்பல்தான், "என்னாட பசங்களா என்னையெ விட்டுட்டு எல்லாம் போறீங்க, சாகக் கிடக்கையிலே யாரும் பக்கத்திலே இருக்க மாட்டீங்க போலன்னு." அப்படியேதான் நடந்தும் முடிஞ்சிச்சு.

அந்த கிழவி ஒவ்வொரு நாளும் காலன திட்டமா இருந்ததே இல்லை, எப்பெல்லாம் சின்ன வயசு பசங்கலோ இல்லை யாருக்கவாது மாரடைப்பே வந்து செத்து போன கிழவியோட பொலம்பல் இப்பிடித்தான் இருக்கும் "பாவம் நேத்தைக்கு மொளச்ச காளானெ எல்லாம் டக்கு டக்குன்னு பிடிங்கிக்கிறான், பாழப் போன எமதர்ம ராசா, என்னை அழைச்சுக்கிட்டா என்ன கேடு, அதுகளெ வுட்டுபுட்டுன்னு." அப்படி ஒரு மனசு.

அந்த ருக்கு கிழத்துக்கும் ஒரு நாள் அழைப்பு வந்தது. வயித்துபோக்குன்னு. மறுநாள் ரொம்ப அமைதியா தன்னை சுத்தி பேத்தி மக, கொள்ளு பேத்திகள், பேரன்கள் நிக்க, தன் மகளை மட்டும் கூப்பிட்டு ’ஒரு வா தண்ணி குடுடின்னு’ வாங்கி குடிச்சுப்புட்டு, கையிலிருக்க விசிறிமட்டை இன்னும் யாருக்காகவோ விசிறிக்கிட்டு இருக்கிற மாதிரி விசிறிக்கிட்டு இருக்க, மகளை வைச்சக் கண்ணு வாங்காம, தூங்குறத்துக்கு போற மாதிரியா எந்த வலியோ, குழப்பமோ, பயமோ இல்லாமல் இமைங்க மட்டும் படம் பார்த்த வரைக்கும் போதுமின்னு மூடிக் கொண்ட மாதிரி மூடிக்கிச்சு.

இந்த கிழவி பள்ளிக்கூட பக்கம் போனதில்லெ, ஒரு வார்த்தை படிக்கத் தெரியாது. ஆனா நிறையெ பேருக்கு ஏதோ ஒரு விதத்தில உதவிருக்கு. யாருக்குமே சுமையா இல்லாம, சத்தமில்லாமலே வந்து, சத்தமில்லாமலே வாழ்ந்து போயிருக்குது. நெனச்சுப்பார்த்தா மரணத்தை இந்த கிழவியை விட யாருமே அனுபவிச்சு தழுவியிருக்க முடியாதோ அப்படின்னு தோணுது.

Wednesday, July 05, 2006

மயானத்தில் தினமும் நான்...!

வாழ்வில் சிரிப்பு வேண்டி
மயானக் குளக்கரையை
நோக்கி ஓடிய
எனது ஹீரோ ஹாண்டா!

அப்பாவுடன்
ஒரு
நேரடித் தரிசனம்
முகம் தெரியா
மனிதப் பிணமொன்று
காற்றுடன் கலப்பதை!

வீடு திரும்பிய
எங்களுக்கு அம்மாவின்
புன் முறுவல்
இலவசமாய்!

வாழ்வின் எதார்த்தம்
எங்கள் மனதில்
பச்சை பசுமாய்
இவ் நிமிடம் வாழ வேண்டி...!!

Tuesday, July 04, 2006

அன்பு நாமக்கல்லாருக்கு...

இந்த காதல் காவியத்தை எனது நண்பர் நாமக்கல்லாருக்கு(ம் *அவரது நயனுக்கும்*) அன்புடன் படைக்கிறேன்...

ஒரு வார்த்தை கேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்~~~~~
இந்த பார்வை பாக்க பகலிரவா பூத்திருந்தேன்~~~~

மனமாலை ஒண்ணு பூ பூவா கோத்திருந்தேன்~~~
அந்த சேதிக்காக நொடி நொடியா வேத்திருத்தேன்~~~

சூரியன சூரியென சுருக்குப்பையில்~~~~~
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்~~~

சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா~~~
என் சின்னச் சின்ன கம்மலுக்குள் பூட்டி வைச்சேன்~~~

தண்ணிக்குள்ளெ ரெட்டத் தாமரைச் கொடி
வெப்ப குளத்தையே குடிச்சுருந்தேன்~~~

அந்த ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம்
தயங்கி நின்னேன்~~~~

அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்~~~

ஊருக்குள்ளே ஒடும் தெருவில்
பாதத் தடங்கள் ஆயிரமிருக்கும்~~~

நீ நடந்த சுவடுகளிரிருந்தால்
எந்தன் கண்கள் கண்டுபிடிக்கும்~~~

நீ கிடைக்க வேண்டுமென்று
துண்டு சீட்டு எழுதிப் போட்டேன்~~~

பேச்சியம்மன் கோவில் சாமீ
பேப்பர் சாமீ ஆனதென்னெ~~~

கண்ணுக்குள்ளெ ஓடின உன்னை துரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்செ~~~

மனசுக்குள் ஒளிஞ்சுடும் உன்னை விரட்ட
உசிருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச~~~

நீ கொடுத்த கல் கூட
செங்கல் சாமீ ஆனதய்யா~~~

அடுத்த வீட்டு கல்யாணத்தின்
பத்திரிக்கை பார்க்கும் பொழுது~~~

நமது பெயரை மணமக்களாக
மாற்றி எழுதி ரசித்துப் பார்த்தேன்~~~

கட்டபெம்மன் உருவம் போல
உன்னை வரைந்தே மறைத்தே வைத்தேன்~~~

தேசப்பற்று ஓவியமென்று
வீட்டுச் சுவற்றில் அப்பா மாட்டெ~~~

அணைக்கட்டு போலவே இருக்கும் மனசு
நீ தொட்டு ஒடைஞ்சதுதென்ன~~~
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சதுதென்ன~~~

வேப்பம் மரம் சுத்தி வந்தேன்
அரச மரமும் பூத்தாதய்யா~~~~~~~~~~~~~~~~`பி.கு: ஏதோ என்னாலெ ஆனாது, "இன்பச் சந்தோஷமா" இந்நாளை ஆரம்பிங்கய்யா... :-)

Monday, July 03, 2006

மரணத்தில் ஒரு முயற்சி...

சந்தோஷத்திற்காகவும் அமைதிக்காகவும்

யுரேனியம், புளூட்டோனியம்மென்று

ஓடிக் களைத்த மனிதம்

கல்லறைகளில் கண்டு கொண்டது...!

பி.கு: ஒரு சின்ன முயற்சி மன்னிச்சு பெரிய மனசுப் பண்ணி வுட்டுபுடுங்க ;-))

Related Posts with Thumbnails