Tuesday, July 04, 2006

மயானத்தில் தினமும் நான்...!

வாழ்வில் சிரிப்பு வேண்டி
மயானக் குளக்கரையை
நோக்கி ஓடிய
எனது ஹீரோ ஹாண்டா!

அப்பாவுடன்
ஒரு
நேரடித் தரிசனம்
முகம் தெரியா
மனிதப் பிணமொன்று
காற்றுடன் கலப்பதை!

வீடு திரும்பிய
எங்களுக்கு அம்மாவின்
புன் முறுவல்
இலவசமாய்!

வாழ்வின் எதார்த்தம்
எங்கள் மனதில்
பச்சை பசுமாய்
இவ் நிமிடம் வாழ வேண்டி...!!

6 comments:

Sivabalan said...

தெ கா,

மிக மிக அருமை.

ஆழாமான கருத்து.

இந்த விசயம் தெரிந்திருந்தும் நாம் ஆடும் ஆட்டம் தான் என்ன?

Sivabalan said...

தெ கா,

மிக மிக அருமை.

ஆழாமான கருத்து.

இந்த விசயம் தெரிந்திருந்தும் நாம் ஆடும் ஆட்டம் தான் என்ன!?

Thekkikattan|தெகா said...

சிவா,

//இந்த விசயம் தெரிந்திருந்தும் நாம் ஆடும் ஆட்டம் தான் என்ன?//

கரெக்ட்டா பிடிச்சீங்க சொல்ல வந்த விசயத்தை. சின்னச் சின்ன முயற்சிகள், பெரிய விசயங்களெ சுருக்கி சொல்ல முடியற மாதிரி தெரியுது, அதான் இப்படி.

நன்றி!

Anonymous said...

உங்கள் கவிதையின் கருத்து என்ன?
எனக்குப் புரியவில்லை.
சற்றுத் தெளிவு படுத்த முடியுமா?

Thekkikattan|தெகா said...

அன்பு நவன்,

எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எனது பழைய கூடையை கிளரி நீங்கள் எடுத்துப் படிக்கிறீர்கள் என்பதனை எண்ணும் பொழுது. அதற்கு எனது வந்தனங்கள்.!

இந்த கவிதை போன்ற எழுத்தில் நான் நினைத்து சொல்ல வந்தது: மனித வாழ்வு என்பது நெடு நீண்ட தூரப் பயணம் என்பது போல நமக்குப் புலப் பட்டாலும், அது ஒரு சிறிய முடிவுறும் பயணமே... கோவையில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு முறையும் நான் ஒரு மயானத்தின் வழியாக பயணிப்பதுண்டு, அவ்வாரு செல்லும் பொழுது இது போன்று மனித உடல் ஏதேனும் வேகும் பொழுது எனக்கு வாழ்வின் பொருள் மீண்டும் கண்களின் முன்னால் ஒரு முறை கேள்விக் குறியாக நிலை பெறுவது உண்டு.

மனித வாழ்வு நாம் வாழும் ஒவ்வொரு கனமும் எப்படி வாழ்கிறோம் என்பதனைப் பொருத்து தான் பொருள்ளதாக அமைகிறது என்றால், அதனை எப்படி அனுபவித்து நம் கூடவே வாழ்ந்து வரும் இந்த அப்பா, அம்மா, மற்ற சொந்த பந்தங்களுடன் அனுபவித்து வாழ்வின் சுவையை அதன் நிலையற்ற தன்மையை(மரணம்) கருத்தில் நிறுத்தி... அம்மாவின் புன் முறுவலின் பொருளணர்ந்து தினமும் ஆராதித்து மகிழ்வுடன் வாழ்ந்தால் அதுவே NOWNESS என்பதின் பொருளன்றோ, என்று நினைத்து அப்படி சொல்லி வைத்தேன்...

இன்னும் சில பதிவுகள் இதே லைனில் வெளியிட உள்ளேன். எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்கு இத் தருனத்தில் ஆருதலாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்...

நவன், மீண்டும் இங்கு உங்களின் கேள்வியாக என் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.

Anonymous said...

//அம்மாவின் புன் முறுவலின் பொருளணர்ந்து தினமும் ஆராதித்து மகிழ்வுடன் வாழ்ந்தால்//

அக்கணங்கள் உண்மையில் வாழ்கின்ற
கணங்கள் தாம்.

விளக்கத்துக்கு நன்றி.

Related Posts with Thumbnails