Sunday, July 30, 2006

எனது தூசி தட்டப்பட்ட நூலகம்...

என் கண்களில் சிக்கிய சில புத்தகங்களை அலமாரி தட்டுகளிலிருந்து ஓவ்வொன்றாக உருவி இங்கு ஏத்தி வைக்கும் முயற்சியுடன் இந்தப் பதிவு.

இப்பொழுதெல்லாம் என்ன புத்தகம் வாங்கினோம், இரவல் கொடுத்தோமா இல்லைய, நம்முடன் இருக்கிறதா இல்லையா, இது போன்ற கேள்விகளுக்கு உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் புரட்டிப் பார்க்க ஏதுவாகவும், திரும்பவும் வாங்கிய புத்தகங்களை வாங்கி விடாமல் இருக்கவும் உதவவே இந்த பதிவு.

இங்கு ஏத்தப் பட்டிருக்கும் புத்தகங்கள் அதனை மீண்டும் பார்க்கும் பொழுது ஞாபகத்தில் வந்து போனவைகளை கொண்டு அவ் நண்பர்களை இங்கு ஏற்றுவதா வேண்டாமா என்பதனை கருத்தில் கொண்டே பதிந்து வைக்கிறேன்.

நிறைய புத்தகங்கள் கணக்கில் வராமலும் இருக்கலாம். தெகா இம்புட்டுத்தானா இல்ல இன்னும் வைச்சிருக்கியான்னு கேக்கிற ஆட்களுக்கு நம்ம படிச்சது சம்பந்தம இருக்கிற புத்தகங்கள் அது பாட்டுக்கு அந்த பக்கம் உட்கார்ந்து என் வாழ்க்கையை வேடிக்கப் பார்த்துகிட்டு இருக்காங்க. அவனுங்கள ஆட்டத்தில சேர்க்கல.

எது எப்படியோங்க, எனக்கு புத்தகம் படிக்கிற வெறிய தூண்டி விட்டது என்னுடைய ஒரு நண்பன் அவன் பெயர் சுரேஷ் தி.ஜா எழுதின மோக முள் அப்படிங்கிற புத்தகம் படிக்க படிக்க என்னுள் பத்திகிட்டு எரிஞ்சுது , அப்ப நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன் கேக்கவா வேணும் (பலான புத்தகமெல்லாம் பல மைல் தூரம் தள்ளி நண்பர்களுடன் சேர்ந்து போயி பார்த்துப்புட்டு அங்கேயே தலையை சுத்தி தூக்கிப் போட்டுட்டு வந்திடறது....)

பிறகு சாண்டில்யன் பைத்தியம் இப்படியே நான் பரிணமித்து பரிணமித்து இப்ப கீழே இருக்கிற ஆட்களோடவும் கைபிடிச்சுட்டு நடந்தாச்சு.

இப்போ போகலம் லிஸ்ட்க்கு வாங்க:

இப்போதைக்கு இது தான் எனது உலக அரிச்சுவடி :-

1. Atlas of world history (From the origin of mankind to the present day) Edited by Kate Saton and Liz Mckay.

1a. South-East Asia On a Shoe String - Lonely Planet - (அதிலும் இந்த கைடு ரொம்பவேவேவே உதவுனுச்சுங்க தனியா நான் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து எல்லாம் சுத்திப் பார்க்கும் பொழுதெல்லாம், இன்னமும்...)

2.Teach Yourself Photography - Lee Frost (முயற்சி திருவினையாக்கும் புத்தகங்கள்)

3. Understanding Exposure - Bryan Peterson

4. The Explorer II World Atlas - Ronald McNally.

5. The Oxford English Dictionary - (அசடு வழியிறதிலிருந்து காப்பாத்திக்க)

6. The Universe in a Nutshell - Stephen Hawking

7. The Illustrated Brief History of Time - Stephen Hawking

7a. Parallel Universes (The Search for Other Worlds) - Fred Alanwolf

8. Practical Skywatching - The Nature Companions

ரொம்ப அவசியம படிக்க வேண்டிய புத்தகங்கள்...

9. அக்குனிச் சிறகுகள் (சுய சரிதம்) - எ.பி.ஜே. அப்துல் கலாம், அருண்

10. திவாரிஇந்தியா 2020 - எ.பி.ஜே. அப்துல் கலாம்

11. நான் துணிந்தவள்! - கிரண் பேடி (வரலாறு)

அப்புறம் இந்த அகராதி இன்னமும் வாங்கவில்லையென்றால் வாங்கி முயற்சித்துப் பாருங்கள் - "அடச் ச்சீ" என்ற பேச்சு வழக்க தமிழ் வார்த்தைக்கு கூட ஆங்கிலத்தில் எப்படி கூற முடியும்மென்பதிலிருந்து... நிறைய அருமையான தமிழ் வார்த்தைகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
நான் அதிகமாக, தமிழ் எழுதும் பொழுது எழுத்துப் பிழை செய்வதால் இதுதான் எனக்கு தமிழ் வாத்தியார்...

12. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாராதி

கீழே அடுக்கப்பட்டுள்ள நண்பர்கள் மற்றும் மனிதம் உணர்ந்தவர்கள் எல்லாம் "அடெ ரொம்ப அலட்டிக்காதே தெகா... எல்லாம் சரியா வந்துடுமின்னு" எதார்த்த வாழ்கையை எனக்கு எப்பவெல்லாம் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கோ அப்பவெல்லாம் இவங்க என்னோட நடக்க வந்திடுவாங்க....

13. நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ
14. அன்பெனும் ஓடையிலே... ஓஷோ
15. வெற்றுப் படகு-1 - ஓஷோ
16. வெற்றுப் படகு-2 - ஓஷொ
17. ஞானத்தின் பிறப்பிடம் - ஓஷோ
18. ஞானக் கதைகள் - ஓஷோ
19. மிகவும் தவறாகக் கருதப்படும் மனிதர் - ஒஷோ
20. தந்தரா - ஓஷோ
21. நாரதரின் பக்தி சூத்திரம் - ஓஷோ
22. தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - ஓஷோ
23. நம்பிக்கை நட்சத்திரமாய் - ஓஷோ
24. கடவுள் உங்கள் உள்ளேதான் இருக்கிறார் - ஓஷோ
25. புல் தானகவே வளர்கிறது - ஓஷோ
26. புல் மீண்டும் தானகவே வளர்கிறது - ஓஷோ
26a. தம்பதம் - ஒஷோ
27b. வாழும் கலை - ஒஷோ
27. ராஜ யோகம் - சுவாமி விவேகானந்தர்
28. கர்ம யோகம் - சுவாமி விவேகானந்தா
29. பக்தி யோகம்- சுவாமி விவேகானந்தா
30. ஞான யோகம் - சுவாமி விவேகானந்தா
40. விவேகானந்த இலக்கியம் - சகோதர சகோதரிகளே
41. மனவாசம் - கவிஞர் கண்ணதாசன்
42. கடவுள் இருக்கிறாரா? சுஜாதா
43. ராமாயாணம் - ராஜாஜி
44. மகாபாரதம் - ராஜாஜி
45. திருக்குறள் - கலைஞர் உரை
46. சந்தேகம் தெளிதல் பாகம் 1 & 2 - சுவாமி சித்பவானந்தர்
47. வாரம் ஒரு தகவல் பாகம் 1 & 2 - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

சில கவிதை புத்தகங்கள், நான் ரசித்து படித்தவர்களின் தொகுப்பிலிருந்து சில....

48. ஞானிகளின் தோட்டம் - கலீல் ஜிப்ரான்
49. தீர்கத்தரிசி - கலீல் ஜிப்ரான்
50. மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்
50a. ஞானக் களஞ்சியம் - கலீல் ஜிப்ரான்

51. பால்வீதி - அப்துல் ரகுமான்

52. கனவுக் குதிரகைகள் - மு. மேத்தா
53. ஒரு வானம் இரு சிறகு -மு. மேத்தா
54. ஊர்வலம் - மு. மேத்தா
55. இதயத்தில் நாற்காலி - மு. மேத்தா

56. வைரமுத்து கவிதைகள் - கி.பி 2000 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு
57. தண்ணீர் தேசம் - வைரமுத்து
58. காவி நிறத்தில் ஒரு காதல் - வைரமுத்து
59. கல்வெட்டுக்கள் - வைரமுத்து

60. ஆயுத பூசை - ஜெயகாந்தன்

61. இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்

மீண்டும் ஆங்கிலத்தில் வாழ்வியல் சார்ந்த ஐயங்களுக்கு இவர்களின் புரிதல்களின் மூலமாக ஏதாவது எனக்கு கிடைக்குமா என்று...

62. An Autobiography of M. K. Gandhi
62a. Apostle of Peace by Swami Satchidananda
63. Autobiography of a Yogi - Paramahansa Yogananda
64. Ageless Body Timeless Mind - Deepak Chopra
65. Buddhism Plain and Simple - Steve Hagen
66. Buddhism - The Global Spirit Libray
67. Conscious Immortality - Sri Ramana Maharshi
68. Cosmology and Creation - the spiritual Significance of -contemporary cosmology by Paul Brockelman
69. Ethics for the New Millennium by Dalai Lama
69a. Encounter the Enlightened by Jaggi Vasudev
70. Ecstatic Flight into Himalayas - G.R. Venkatraman
71. Kailash Journal -Pilgrimage into the Himalayas by Sri Swami Satchidananda
72. Light of Yoga - B.K.S Iyengar
73. None High; None Low by Gandhi
74. Nothing is Impossible - Christopher Reeve
75. Oh, Mind Relax Please - Swami Sukhabodhanada
76. Reason For Hope - A spritual journey by Jane Goodall
77. Richard Hittleman's Yoga
77a. Science of Being And Art of Living (Transcendetal Meditaiton) - Maharishi Mahesh Yogi
78. Shaving The Inside of your skull (Crazy wisdom for discovering who you really are) by Mel Ash.
79. Science and Spirituality Pilani v. Krishnamurthy
80. The Master's Touch - Swami Satchidananda
80a. The Book (On the Taboo Against Knowing Who You Are) by Alan Woods
81. The Goldern Present - Swami Satchidananda
82. Total Freedom - J. Krishnamurthy
83. The Voices of Heaven by Frederik Poh
84. The Master's Touch - Swami Satchidananda
85. The Mind of God - Paul Davies
86. The Art of Happiness - Dalai Lama
87. The Tao of Health, Longevity, and Immortality by Chung and Lu
88. The Way of the Wizard - Deepak Chopra
88a. Ageless Body, Timeless Mind: The Quantum Alternative to Growing Old - Deepak Chopra

89. The Path to Love - Deepak Chopra

90. The Alchemist - Paulo Coelho
90a. By the River Piedra I Sat Down and Wept by Paulo Coelho
90b. Veronica Decides to Die by Paulo Coelho
90c. Zahir by Paulo Coelho
91. The Future of the Body (Exploration into Further Evolution of Human Nature)- Michael Murphy
92. The Ultimate Journey (A Retracing Journey Made Hsuan Tsang) -Richard Bernstein
93. Voice of Himalayas - Swami Sivananda
94. Why Religion Matters - Huston Smith
95. Yoga the Iyengar Way - Silva, Mira and Shyam
95a. The City of Joy by Dominique Lapierre

இப்பெலாம் சும்மா காதல் நவரசம் சொட்டும் காதல் கதைகள், அப்புறம் கத்தியால குத்தினது யாருன்னு கண்டுபிடிக்கிற கதைகள் மேல இருந்த கவர்ச்சி எல்லாம் போய்டுச்சுங்க... இப்ப இந்த மாதிரி சமூக அக்கரை உள்ள அல்லது அறிவியல் விசயங்களைப் பத்தி பேசுற நாவல்கள் மட்டும்தான் வீட்டுக்குள்ள அனுமதி... அவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு;

96. Out of India (Selected Short Sotries) - Ruth Prawer Jhabhavala
97. Shiva Dancing -by Bharti Kirchner
98. Disclosure by Michael Crichton
99. Timeline by Michael Crichton
100. Airframe - Michael Crichton
100a. The Next - Michael Crichton
101. Tyrannosaur Canyon- Douglas Preston
102. Heat and Dust - Ruth Prawer Jhabvala
103. The Prey by Michael Crichton
104. David Copperfield by Charles Dickens
105. The Great Novels of Thomas Hardy
106. The God of Small Things - Arundhati Roy
107. My Dateless Diary, The Guide, Swami and Friends, The Banyan Tree, Malgudi Tiger - R. K. Narayan (இவரு எழுதின இன்னும் ஒரு சில நாவல்கள் இருக்கு எப்பவேண படிக்கலாம்)
108. The Old Man and the Sea - Earnest Hemingway
108a. The Pearl by John Steinbeck
109b. East, West by Salman Rushdie
109c. Fatal Deception (The untold story of Asbestos) by Michael Bowker

உலகம் போற போக்கை தெரிஞ்சுகிறதுக்கும், அப்புறம் சுற்றுப் புறச் சூழல் மாசுபாடு அதனில் நமது பங்கு பத்தி அறிஞ்சுகிறதுக்கு வீட்டில் உள்ள சில புத்தகங்கள்....

109. Born to Work (Child Labor in India - Neera Burra
110. Siva & Her Sisters (Genders, Caste, and Class in Rural S. India - Karin Kapadia)
111. The World is Flat - Thomas Friedman
112. Longitudes and Attitudes - Thomas L. Friedman
113. Discordant Harmonies (A New Ecology for the Twenty-First Cnetuary)
114. Elephant Days and Night -Dr. R. Sukumar
115. Wild Sex (All ABout Birds and Bees)- Susan Windybank
116. Global Warming - The Green Peave Report Edited by Jeremy L
117. Megatrends Asia - John Naisbitt
118. Thunder From the East - Nicholas D. Kristof & Sheryl WuDnn
119. India Seen Afar - Kathleen Raine
120. The Third Chimpanzee - Jared Diamond
120a. Guns, Germs and Steel - Jared Diamond
120b. Collapse (How Societies Choose To Fall or Succeed - Jared Diamond
121. Health for Peace- Suresh Kulkarni
122. Growing up with two languages - Una Cunningham et al.,
123. The Moral Animal (Why We are the way we are) - Robert Wright
123a. Biopiracy: the plunder of Nature and Knowledge by Vandana Shiva
123b. Fast Food Nation (The dark side of all-american Meal) by Eric Schlosser

யாருக்காவது எப்பாவது உதவுமேன்னு (உதவிடுச்சு முன்னமே...இனிமேலும் பயன்படுமின்னு) வாங்கி படிச்ச புத்தகங்கள்...

124. The Dissociative Identity Disorder - Deborah Bray Haddock
125. Trust After Trauma: A Guide to Relationships for Survivors and Those Who Love Them by Aphrodite Matsakis
126. Men Are from Mars, Women are from Venus - John Gray Ph.D
127. The Wounded Women by Linda Schierse Leonard
128. The Hunger for Ectasy - Jalaja Boheim, Ph.D

சில ஆங்கில தத்துவ ஞானிகளின் புத்தகங்கள் கவிதை வடிவில்...

129. Tears and laughter- Kahlil Gibran
130. Mirrors of the Soul - Kahlil Gibran
131. The Wisdom of Kahlil Gibran
132. Selected Poems of Rainer Maria Rilke

இது மட்டுமில்லாமல் National Geography, Smithsonian Magazineம் மற்றும் Conservation Societyயும் ரெகுலராக வீட்டிற்கு வரும் விசயங்கள், படிக்கத்தான் நேரமில்லை.

மொத்த "என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்காவும்," 1956லிருந்து வாங்கப்பட்ட "நேஷனல் ஜியோகிராஃபியும்" எங்களது நூலகத்தில் அடக்கம். இவைகளை மெதுவாக இந்தியாவிற்கு நகர்த்திக் கொண்டு இருக்கிறேன்... அங்கு ஒரு பொது நூலகம் ஒன்று அமைக்கலாம் என்ற எண்ணத்துடன்...

இன்னும் படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சவாரிச் சுமையெல்லாம் இறக்கி வைச்சுபுட்டு அப்புறம் புத்தகங்களோட குடித்தனம் நடத்தணும்மின்னு ஆசையிருக்கு...

கற்றது கைமண்ணளவு... இம்புட்டையும் படிச்சுப்புட்டு எனக்கு கிடைச்ச செய்தி - அன்பு ஒண்ணுதான் அழியாதது அப்படிங்கிறதுதான்.

பி.கு: இப் பதிவு இந்தப் பதிவின் தாக்கமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பதிவின் மூலம் ஓர் அழைப்பு விடுத்து, எனக்கு ஞாபகம் மூட்டி இது போன்ற ஒரு பதிவிட வழிகோணியதற்கும், தூசு தட்டி பிறகு அடுக்குவதற்கும் அப்பதிவிட்டவருக்கு எனது நன்றிகள்.

143 comments:

Sivabalan said...

தெகா

ஒரு சூப்பர் லிஸ்ட் போட்டிருக்கிறீங்க... ஒவ்வொன்னா படித்துவிட்டு மீன்டும் வருகிறேன்..

Sivabalan said...

தெகா

இன்னொரு விசயம்..

நான் இப்பதிவின் சுட்டியை என்னுடைய நூலகப் பதிவில் இனைத்துக் கொள்ள அனுமதி கோருகிறேன்.

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

தெகா, நண்பர்களை வைத்து நம்மை எடை போடலாம். என்னைப் பொறுத்தவரை(ற்?)

என் நண்பர்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்கள்.

நல்ல புத்தகம் வைத்து இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

இலவசக்கொத்தனார் said...

ஏம்ப்பா, எது சுட்ட புத்தகம், எது சுடாத புத்தகம் அப்படின்னு சொல்லவேயில்லையே. ஹிஹி.

(புத்தகம் பத்தி எல்லாம் சொல்லற அளவுக்கு நமக்கு ஞானம் இல்லைங்கோ.)

கோவி.கண்ணன் said...

தெகா..... ஓசோ புத்தகங்கள் நிறைய வைத்துள்ளீர்கள். நான் ஓசோவின் ரசிகன்

Thekkikattan|தெகா said...

//நான் இப்பதிவின் சுட்டியை என்னுடைய நூலகப் பதிவில் இனைத்துக் கொள்ள அனுமதி கோருகிறேன்.//

தாரளமாக இணைத்துவிடுங்கள அன்பரே...

அப்புறம் மொதுவாக வந்து மீண்டும் மீண்டும் கேளுங்க கேக்க வேண்டியதை...

துளசி கோபால் said...

யப்பா...... இவ்வளோ இருக்கா?
43, 44 மட்டும்தான் எங்கிட்டே இருக்கு. அப்புறம் 45 இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு.

பேசாம இங்கே பார்சல் பண்ணிருங்க. லிஸ்ட் அனுப்பறேன்:-))))

Thekkikattan|தெகா said...

Manu,

//தெகா, நண்பர்களை வைத்து நம்மை எடை போடலாம். என்னைப் பொறுத்தவரை(ற்?)//

மிகச் சரி என்றே நினைக்கிறேன். எது போன்ற புத்தகங்கள் தன்னைச் சுற்றி இருக்கின்றன என்பதனை பொருத்தே நமது எண்ணங்களின் தாக்கமும் வேறுபடுகிறது.

புத்தகங்களின் தேர்வே ஒருவரின் வாழ்வை செம்மையிட்டுச் செல்லும் ஒரு கருவியாக கூட செயல் பட முடியும்.

புத்தகம் எழுதும் ஆசிரியர் தனது கண்ணோட்டத்தை முன்வைக்கும் பொழுது அதனை வாசிக்கும் வாசனுக்கு முழு உரிமையும் இருக்கிறது, அதனை முழுமையாக உள்வாங்கி தனது சிந்தனைகளை அதனுடே தைத்து, ஒரு புதுவித சிந்தனை தாக்கத்தை வளர்த்துகொள்ள.

அதுவே ஒரு மிகப் பெரிய வித்தியாசம் நண்பர்களுடன் உரையாடு வதற்கும் சிந்தனையூட்டத்தை முதலில் பண்மைபடுத்தி பிறகு உரையாடுவதற்கும் (உதவலாம்).

புத்தகங்கள் சிந்தனையை விசாலப்படுத்த மிகவும் அவசியம்.

நன்றி, மனு!

Thekkikattan|தெகா said...

எங்கய்யா போனீர் சிவா, திரும்ப வந்து என்னமோ சொல்றேனீங்களே அதான் தேடிகிட்டு இருக்கேன்... தூங்கப் போயீட்டீங்களாங்க ;-))

Sivabalan said...

தெகா

என்னுடைய வலைப் பதிவில் இப் பதிவை இனைத்துவிட்டேன்.

Sivabalan said...

தெகா,


// சந்தேகம் தெளிதல் பாகம் 1 & 2 - சுவாமி சித்பவானந்தர்
47. வாரம் ஒரு தகவல் பாகம் 1 & 2 - தென்கச்சி கோ. சுவாமிநாதன் //

இந்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தவை...

அதும் இவர் குரலை ரேடியோவில் கேட்கும்போது இன்னும் அருமை..

Thekkikattan|தெகா said...

சிவா,

// சந்தேகம் தெளிதல் பாகம் 1 & 2 - சுவாமி சித்பவானந்தர்//

இந்த புத்தகங்கள் எங்கே உங்களுக்கு கிடைத்தது?

இந்த புத்தகங்கள் வாங்கியதே ஒரு அருமையான அனுபவம் எனக்கு. நேரடியாக திருச்சிக்கு பக்கத்தில் இருக்கும் ராமகிருஷ்ன மத்'தில் சென்று வாங்கினோம்.

விலை நம்ம முடியாத அளவிற்கு மிகவும் குறைத்து வழங்கப்பட்டது. இன்னும் தென்கச்சி அவர்களின் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன, போட்ட எல்லாரும் சிரிப்பீங்களேன்னு விட்டுட்டேன், அதற்கெல்லாம் மேலே அலுப்பா வந்துச்சு... நீங்க என்னடான்ன என்கிட்டேயும் இருக்கு அப்படிங்கிறீங்க :-))

Sivabalan said...

தெகா

// க்ரியாவின் தற்காலத் தமிழ் அகாராதி //


இது நீங்க சொன்ன அகராதி புத்தகம் இந்த புத்தகம் தானே..

Thekkikattan|தெகா said...

/இது நீங்க சொன்ன அகராதி புத்தகம் இந்த புத்தகம் தானே...//

அதுவேதான் இது... யாரவது ஊருக்கு போயிட்டு வந்த கண்டிப்பா உங்களுக்கு ஒரு பிரதி வாங்கிட்டு வரச்சொல்லுங்க, சிவா. உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

அந்த அகாராதி பக்கங்களை திருப்பும் போது மட்டும் ரொம்ப்ப கவனம திருப்புவேன், ஏன்னா இப்பெல்லாம் அடிக்கடி வேற பயன் படுத்துறேன, பக்கம் பக்கமா கையோட வந்திடுமோன்னு ஒரு பயம்...

Sivabalan said...

தெகா

//நான் துணிந்தவள்! - கிரண் பேடி (வரலாறு)//

இந்த புத்தகத்தைப் பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவு எழுதுங்கள்..

உங்கள் நண்பன்(சரா) said...

இம்பூட்டு புத்தகம் படிக்கிற ஆளா நீங்க..? நன்று,
எனக்கு உங்கள் போல் வாசிக்க கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்லுவேன், அதானல் என்ன இதோ இப்போழுது நாம் தமிழால் இணைந்துள்ளோம், இதன் மூலம் நீங்கள் படித்தவற்றை பதிவிட்டால் போயிற்று, என்போன்றவர்களும் தெரிந்து கொள்வோம், சரிதானே..



அன்புடன்...
சரவணன்.

Thekkikattan|தெகா said...

வாங்க சரவணன் முதல் முறைய இந்த பக்கம் வந்திருக்கீங்க.

இம்பூட்டு புத்தகத்தையும் படிச்சி கிழிச்சுபூட்டுத்தான் சரவணா, நான் இப்ப தெக்கிக்காட்டானா பூட்டேன்.

நீங்க என் வீட்டுல படிக்கிற ஒவ்வொன்னும் இது எல்லாம் கலந்த கலவைதான்...

தனித்தனியாக இனிமேல் பிரிக்க முடியாது இல்லீங்களா, உங்கள ஒரு விசயம் பாதித்சுடுசுன்னா எல்லாமுமாகவே நாம ஆயிடுவோம், அப்படிங்கிற மாதிரி இருக்கு...

Unknown said...

நமக்கு ஓஷோவை படிப்பதை விட கேட்பதில் தான் ஆர்வம் அதிகம் என்னிடம் அவரின் புத்தகங்களை விட அவரின் பேச்சுக்கள் அடங்கிய ஒலிப்பேழைதான் அதிகம். ஆங்கிலத்தில் இருக்கும் அவரின் அந்த வசீகரக் குரல் கேட்பவர்களின் மனதை கொள்ளைகொள்வது

Unknown said...

ஒரு சொந்த கதை- இங்கே ஏடிவிடி -அதாங்க விளம்பரம் தெகா மன்னிப்பீராக
http://paarima.blogspot.com/2006/07/blog-post_28.html

Muse (# 01429798200730556938) said...

தெக்கிக்காட்டாரே,

இந்த லிஸ்ட்டில் நீங்கள் படித்த புத்தகங்கள் எத்தனை?

கோபித்துக்கொள்ளாதேயும். என்னிடம் நிறைய புத்தகங்கள் படிக்க நேரமில்லாமல் கிடக்கின்றன. வாழ்ந்து கெட்ட பெண் போல அவை கிடப்பதைக் காணச்சகியாமல் நண்பர்களுக்குப் படிக்க ஓஸி கொடுப்பதோடு ஸரி.

இதையெல்லாம் படிக்க எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்? சொன்னால் ரொம்பப் புண்ணியமாகப் போகும்.

உங்கள் நண்பன்(சரா) said...

//வாங்க சரவணன் முதல் முறைய இந்த பக்கம் வந்திருக்கீங்க. //

ஆமாம் நண்பரே உங்கள் பக்கத்திற்க்கு இது தான் முதன் முறை, இனி அடிக்கடி வருவேன்,


அன்புடன்...
சரவணன்.

Thekkikattan|தெகா said...

மூயுஸ்,

//இந்த லிஸ்ட்டில் நீங்கள் படித்த புத்தகங்கள் எத்தனை?//

நல்ல கேள்வி, இதற்கு ஒரு பெட்டி "நேஷனல் ஜியோக்ஃரபி" தரலாம் முடிந்தால் வந்து வாங்கிக் கொண்டு போங்கள் ;-))). நீங்க சொல்றது கரெக்ட்டு தான் மூயுஸ், ஒரு புத்தகம் புதிச கையில் கிடைச்சவுடன் ஆர்வத்தோட பிரிச்சு படிக்க ஆரம்பிச்சுடுவோம், அப்புறம் ஒரு 25 பக்கத்துகிட்ட போன தெரிஞ்சுபோயிடும், அப்புறம் என்ன பண்றதுன்னு.

இங்க இருக்கிற லிஸ்ட் எல்லாம் அப்படி இப்படின்னு கொடுத்தது எடுத்துட்டு போறது கொண்டாந்து தாறேன் அப்படிங்கிறதுட எச்சம் தான்... ஒரு 70% முழுமையா படிச்சிருப்பேன்... அப்படி ஒரு புத்தகம் படிச்சுகிட்டு இருக்கும் போதுதான் திடீர்னு "தெகா" ஞானமடைஞ்சுட்டான் ;-))).

//இதையெல்லாம் படிக்க எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்? சொன்னால் ரொம்பப் புண்ணியமாகப் போகும்.//

எல்லா இருக்கும் சூழல்தான் அன்பரே, அடி வாங்கி அடி வாங்கி ஒஷோவே சில நேரத்திலே எனக்கு அப்பாவ இருந்து பேசின நேரங்கள் எல்லாம் உண்டு, படிக்கிறதுக்காகவே.... காட்டான் என்ற கூட்டுக்குள் பாஞ்சாச்சு :-))

நன்றி வந்து கேள்விய கேட்டதுக்கு... நீங்க அப்படி தூக்கி கொடுக்கிற புத்தகங்கள்லெ ஒரு ரெண்டு இந்த பக்கம் தள்ளி விடுங்களேன்...

Thekkikattan|தெகா said...

/நான் துணிந்தவள்! - கிரண் பேடி (வரலாறு)//

இந்த புத்தகத்தைப் பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவு எழுதுங்கள்...//

ரொம்ப அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் அது சிவா! அதுவும் கிரண் "திகார்" சிறைச்சாலையில எப்படியெல்லாம் ஊழல், போதைப் பொருள், கைதிகளுக்குள் கோஷ்டிச் சண்டை இதெல்லாம் சொல்லி விளக்கும் பொழுது, நிஜமாலுக்குமே நாமல்லாம் ரொம்ப லக்கி வெளியே இருக்கிறதுனாலேன்னு தோணும்.

ஆனா, கிரண் பதவியேற்று அங்கிருக்கும் எல்லா கைதிகளுக்கும் விபாசன முறையில யோகசனம் கத்துக்க ஒரு வாய்ப்ப ஏற்படுத்தி அசத்தும் பொழுது, ச்சே அது நிம்மதியான வாழ்கைய இருக்கும் போலவேன்னு ஃபீல் பண்ண வைப்பார்.

ஒரு தனிமனிதனின் ஆக்கப்பூர்வம் கிரணின் மூலமாக வெளிப்படும் ஓவ்வொரு தருணமும், மனிதனில் அடை பட்டுக் கிடக்கும் அந்த Potentialலை பார்க்கும் ஒரு சந்தர்பம் கிடைக்கும் நமக்கு "கிரண் பேடி"யின் மூலமாக.

ஒரு இரண்டு மாதங்களுக்கு என்னுள் அந்த தாக்கம் பீடித்தது, அந்த புத்தகம் படித்து முடித்து.

Muse (# 01429798200730556938) said...

>>நன்றி வந்து கேள்விய கேட்டதுக்கு... நீங்க அப்படி தூக்கி கொடுக்கிற புத்தகங்கள்லெ ஒரு ரெண்டு இந்த பக்கம் தள்ளி விடுங்களேன்...<<<

ஸந்தோஷமாக. பெங்களூர் வந்தால் வீட்டிற்கு வரவேண்டும்.

செல்வநாயகி said...

/நான் துணிந்தவள்! - கிரண் பேடி (வரலாறு)//


முக்கியமான புத்தகம் அது. நீங்கள் இங்கு குறிப்பிட்டது மீண்டும் ஒருமுறை அதைப் படிக்கத் தூண்டுகிறது. நன்றி.

AZZAI. COM said...

Hi! greeting from malaysia. visit me

Thekkikattan|தெகா said...

இ.கொ,

//ஏம்ப்பா, எது சுட்ட புத்தகம், எது சுடாத புத்தகம் அப்படின்னு சொல்லவேயில்லையே. ஹிஹி.//

அவ்வை பாட்டி பாடினது மாதிரி வந்து சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமாங்கிற தொணியில, இதில் சுட்ட பழமெது சுடாத பழமொது என்று கேக்றீங்களே இது வுமக்கே நியாயமா இருக்கிறதா?

சுட்ட புத்தகங்கள் சிலவும் உண்டுதான், ஆனால் யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையாகமென்று அள்ளி வழங்கிய "சுடப்பட்ட" பழங்களே அதிகம்.

//(புத்தகம் பத்தி எல்லாம் சொல்லற அளவுக்கு நமக்கு ஞானம் இல்லைங்கோ.)//

இப்படிச் சொன்ன விட்டுருவோமா? உங்க மகோந்திரன்.பெ கூப்பிட்டு இருக்காரு, ஓழுங்க இருக்கிறதெல்லாம் ஸ்டாக் எடுத்து அது வெறும் மென்பொருள் எழுதுற "manaul" ஆ, இருந்தாலும் சரி இங்கன ஏத்தி வைச்சுப்புடணும், ஆமா.

Thekkikattan|தெகா said...

கோவியாரே,

//தெகா..... ஓசோ புத்தகங்கள் நிறைய வைத்துள்ளீர்கள். நான் ஓசோவின் ரசிகன்//

ஓஷோ, ஒரு புதையல் தோண்டத் தோண்ட கொடுத்துகொண்டே இருக்க. அவரின் புத்தகங்கள் என் கட்டியிருந்த கண்களை திறந்து விட்டது என்றால் அது மிகையாகது.

சிறு சிறு பல்வேறு நாட்டு குட்டிக் குட்டிக் கதைகள் கூறி அவர் கொடுக்கும் ஸ்டைலே ஒரு அலாதியாக இருக்கும், மிகவும் தாமதமாகவே (அவர் கூறியதைப் போன்றே) புரிந்து கொள்ளப் பட விருக்கும் ஒரு ஞானி.

Unknown said...

ஓஷோ-வானத்தில் இருந்து பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப் பட்டவர்

அவரின் வாட் இஸ் லவ் சொற்பொழிவு கேட்டிருக்கிறீர்களா?

பொன்ஸ்~~Poorna said...

நீங்க, அருள், சிவகுமார் சொன்னதால் ஓஷோ புத்தகம் ஒன்று பார்டர்ஸில் வாங்கினேன் ($15!!! ரெண்டு நாள் சம்பளம் ஸ்வாஹா என்று நினைக்கிறேன் :((( கிரெடிட் கார்டு பில் ஊருக்குப் போய்த் தான் கணக்குப் பார்க்கணும்!!! :( )

மத்தபடி தெகா, உங்களின் இந்தப் பதிவுக்கு என் ரியாஷன்.. "இம்புட்டுப் புத்தகம் படிச்சதுனால தான் "ஏன் இப்படி"... நல்ல வேளை சீக்கிரமே தெரிஞ்சுகிட்டேன்.. இனிமே புத்தகம் படிக்கிறத குறைக்கோணும்.. இன்னோரு "எதுக்கு இப்படி"யை வலையுலகம் தாங்குமா?! " ;)

Thekkikattan|தெகா said...

மகோ,

//அவரின் வாட் இஸ் லவ் சொற்பொழிவு கேட்டிருக்கிறீர்களா?/

அவரோட "Autobiography" படிச்சப்ப அவரோட இளமைப் பருவம் அவருக்கு கிடைச்ச அந்த சூழல் எல்லாம் வானத்தில் இருந்து பூச்சொரிந்துதான் கிடைத்தது போலவே இருக்கும்.

"லவ்" பற்றிய சொற்பொழிவு கேட்டது கிடையாது, ஆனால் Boredom, Compassion போன்ற சொற்பொழிவுகள் கேட்டு இருக்கிறேன், நீங்கள் கூறிய படி அவர் வழங்கும் விதம் அப்படியே கட்டிப் போட்டு விடும், அழகான கம்பீரமான குரல்...

நான் வால்பாறையில் இரவு நேரங்களில் வால்க்மென் கொண்டு எனது Boredom தொலைக்க அவரின் Boredom கேட்டதுண்டு ;-))

கப்பி | Kappi said...

தெகா..

பொறாமை பட வைக்கிறீர்கள் :))

என் பதிவில் சொல்லி இருந்தது போல் என் சித்தப்பா ஒரு ஓஷோ பித்தர்..அவர் மூலம் ஓஷோவின் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்..

'மணலும் நுரையும்' என் லிஸ்டில் மறந்து விட்டு விட்டேனே :(

Thekkikattan|தெகா said...

பொன்ஸு,

//நீங்க, அருள், சிவகுமார் சொன்னதால் ஓஷோ புத்தகம் ஒன்று பார்டர்ஸில் வாங்கினேன் ($15!!! ரெண்டு நாள் சம்பளம் ஸ்வாஹா என்று நினைக்கிறேன் :((( கிரெடிட் கார்டு பில் ஊருக்குப் போய்த் தான் கணக்குப் பார்க்கணும்!!! :( ) //

அட, பொருத்ததுதான் பொருத்தீங்க ஊருக்கு போயி நீங்க இங்க சிலவு பண்ண காசுக்கு அங்க இன்னுன் அவரின் நிறைய படைப்புகள வாங்கி இருக்கலாமில்ல... சொன்ன கேட்டாத்தானே... அடங்காததுக ;-)))

சரி சரி அப்படியே, கலீல் ஜிப்ரன் புத்தகம் ஒண்ணும் முயற்சித்து பாருங்க... அவரும் அசத்தல் தான், உங்க மண்டைக்கு நல்ல தீனி அங்க இருக்கு... திரும்ப வாரேன் என் கிரேஸி சங்கத்துக்கு ஆள் எடுக்க...

Thekkikattan|தெகா said...

கப்பி பய,

//பொறாமை பட வைக்கிறீர்கள் :)) //

இப்ப என்ன நீங்க 90 வயது கிழமா, இந்த பதிவுகளின் நோக்கமே நமக்கு நாமே சிறகுகள் வழங்கி கொள்வது பொருட்டே...

இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறோம், இன்னும் நிறைய தொலைவுகள் நமக்கு இருக்கிறது...

//'மணலும் நுரையும்' என் லிஸ்டில் மறந்து விட்டு விட்டேனே :( //

இப்ப என்ன எக்ஸம் எழுதி பேப்பர் கட்டி கொடுத்துவிட்டது போலவும் திரும்பவும் அதனை வாங்கி எதுவும் சேர்க்க முடியாதுங்கிறமாதிரி, சோகப்பட்டுகிறீங்க ;-)))... ஜஸ்ட் அந்த "மணலும் நுரையும்' சேர்த்திடுங்க... ;-)

கால்கரி சிவா said...

//Practical Skywatching - The Nature Companions//

டெலஸ்கோப் வச்சிருக்கீங்களா?

கால்கரி சிவா said...

////நீங்க, அருள், சிவகுமார் சொன்னதால் ஓஷோ புத்தகம் ஒன்று பார்டர்ஸில் வாங்கினேன் ($15!!! ரெண்டு நாள் சம்பளம் ஸ்வாஹா என்று நினைக்கிறேன் :((( கிரெடிட் கார்டு பில் ஊருக்குப் போய்த் தான் கணக்குப் பார்க்கணும்!!! :( ) //
//

புக்கு வாங்கிறதுக்கு முன்னாடி இங்கேயும் இங்கேயும் பாருங்க.

இந்தியாவிற்க்கு போய் ஓஷோவின் தமிழ் புத்தகங்களை வாங்கினால் பதிப்பாளருக்கும் மொழிப் பெயர்த்தவிற்கும் உதவிய மாதிரியும் இருக்கும்

Thekkikattan|தெகா said...

மாகோ,

//ஒரு சொந்த கதை- இங்கே ஏடிவிடி -அதாங்க விளம்பரம் தெகா மன்னிப்பீராக
http://paarima.blogspot.com/2006/07/blog-post_28.html //

ஓ, இப்பிடி ஒண்ணு இருக்கில்ல, மறந்தே போச்சு இந்த நான் வாரேன் உங்க வீட்டுக்கு... இதை வைத்து ஒரு நாளு பேரு நம்ம வீட்டாண்ட தடுக்கி விழுந்து பார்த்துவைச்ச கசக்கவா பூது....

பொன்ஸ்~~Poorna said...

சிவா,
//இந்தியாவிற்க்கு போய் ஓஷோவின் தமிழ் புத்தகங்களை வாங்கினால் பதிப்பாளருக்கும் மொழிப் பெயர்த்தவிற்கும் உதவிய மாதிரியும் இருக்கும் //
பதிப்பாளருக்கு உதவலாம்.. ஆனா மொழி பெயர்ப்பைப் படிப்பது எத்தனை impactfulஆ தூரம் இருக்கும்னு நினைக்கிறீங்க?

Sivabalan said...

தெகா,

// இந்த பதிவுகளின் நோக்கமே நமக்கு நாமே சிறகுகள் வழங்கி கொள்வது பொருட்டே... இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறோம், இன்னும் நிறைய தொலைவுகள் நமக்கு இருக்கிறது... //

சரியாக சொன்னீர்கள்..

ஆனால் ஆரம்பம் நன்றாக இருப்பதாக நான் உணர்கிறேன்..

கப்பி | Kappi said...

//இப்ப என்ன நீங்க 90 வயது கிழமா, இந்த பதிவுகளின் நோக்கமே நமக்கு நாமே சிறகுகள் வழங்கி கொள்வது பொருட்டே...

இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறோம், இன்னும் நிறைய தொலைவுகள் நமக்கு இருக்கிறது...
//

ஆம் தெகா..

அது சும்மா தமாசுக்கு :))

//எழுதி பேப்பர் கட்டி கொடுத்துவிட்டது போலவும் திரும்பவும் அதனை வாங்கி எதுவும் சேர்க்க முடியாதுங்கிறமாதிரி, //

எக்ஸாம் பேப்பருக்கெல்லாம் என்னைக்குங்க இந்த மாதிரி வருத்தப் பட்டிருக்கோம்? ;)

Thekkikattan|தெகா said...

கப்பி,

இப்பத்தான் உங்களுக்கு ஒரு பின்னூக்கியெ போட்டுபுட்டு இங்கன வந்து பார்க்கிறென், வும்மாது வந்துருக்கு...

//எக்ஸாம் பேப்பருக்கெல்லாம் என்னைக்குங்க இந்த மாதிரி வருத்தப் பட்டிருக்கோம்? ;) //

அதுவும் சரித்தான், எதானச்சும் அதுல பொலம்பி வைச்சுப்புட்டு அப்புறம் பின்னாடியே தொரத்திக்கிட்டு போயி (பேப்பர் ட்ரேஸ்)............... ;-)))) அப்புறம் நீங்களே ஃபில் பண்ணிக்கங்க, நான் என்னாத்த சொல்றது... :-))

புத்தகமின்ன அப்படியா...?!!

Unknown said...

ரொம்ப நன்றிங்க தெகா.

ஆமா நம்ம இலவசக்கொத்தனாருக்கு ஒரு பின்னூட்டம் போட்டேன் இன்னும் ஆளையே காணமே ஓடிட்டாரா?

என்னான்னா அவருக்கு வந்திருந்த 200 பின்னூட்டத்தையும் திருப்பி அனுப்பிவச்ச்சேன் அதுக்கப்புறமா ஆளையே காணமுங்க

Thekkikattan|தெகா said...

/ஆமா நம்ம இலவசக்கொத்தனாருக்கு ஒரு பின்னூட்டம் போட்டேன் இன்னும் ஆளையே காணமே ஓடிட்டாரா? //

அவரெல்லாம் அப்படி ஓடுற ஆளு இல்ல நீங்க வேற மகேந்திரன், லேட் ஆ வந்தாலும் சும்மா லேட்டாஸ்ட் ஆ வருவாரு,

ஐயம் வேண்டாம், ஆமா நான் ஆம்புலன்ஸ் பதிவில கேட்ட கேள்விக்கு எக்கோ தாக்கத்தோட விட்டீங்க... ஏதாவது பார்த்து கீத்து வைச்சிருங்கீங்கள ;-)))

Unknown said...

ரைபில் ஃபோர்ட் ரோட்ல இருந்து ப்ளாக் ரோடு வரைக்கும் ஆனா ஒரு வருச வேட்டை லைசன்ஸ் வேனும்ங்க

கப்பி | Kappi said...

//இப்ப நான் உங்க கிட்ட கேக்கலைன்னு வச்சுக்கங்க... இந்த பின்னூட்டம் கிடைச்சுருக்குமா.... ஹி...ஹி...ஹி... அதான் ;-)//

என் அறிவுக் கண்ணை திறந்திட்டீங்க..

நன்றியை தேடிப் போய் சொல்லறது தான் பண்பாடு..அதனால தான் இங்க வந்து சொல்றேன் :))

Unknown said...

அட இது உங்களுக்கு இல்லைங்க கப்பிக்கு மான்வேட்டையாட கத்து குடுக்கிறேன்

Thekkikattan|தெகா said...

//அட இது உங்களுக்கு இல்லைங்க கப்பிக்கு மான்வேட்டையாட கத்து குடுக்கிறேன்..//

தப்பான ஆளுக்கிட்ட வந்து மானு கீனுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க, நமக்கு இன்னொரு முகம் இருக்குது மறந்துட்டீங்கள "நேசி - இயற்கை நேசி" ... என்டேஞ்ஜர் வகை மானூல எதுவும் கைவச்சுப்புடாதீங்க ஐ.யு.சி.என் ல மாட்டி வுட்டுப்புடுவேன்...

Unknown said...

தெகி என்ன இப்பிடி கேட்டு புட்டீங்க நான் ரொம்ப நல்லவன்...............

கால்கரி சிவா said...

தெகா, சில மொழிபெயர்ப்புகள் நன்றாகவே உள்ளன. ஒரிஜினலின் தாக்கம் மாறாமல் உள்ளன

கப்பி | Kappi said...

தெகா..

மகேந்திரன் மான் வேட்டை சொல்லி கொடுக்கறேன்னு ஏதோ கதை சொல்றாரு...

ஆனா ஒன்னும் விளங்க தான் மாட்டேங்குது..

// நமக்கு இன்னொரு முகம் இருக்குது மறந்துட்டீங்கள "நேசி - இயற்கை நேசி" ... என்டேஞ்ஜர் வகை மானூல எதுவும் கைவச்சுப்புடாதீங்க ஐ.யு.சி.என் ல மாட்டி வுட்டுப்புடுவேன்...
//

அந்த பாவிகளை கல்லால் அடிக்காதீர் :)))

கப்பி | Kappi said...

//தெகா, சில மொழிபெயர்ப்புகள் நன்றாகவே உள்ளன. ஒரிஜினலின் தாக்கம் மாறாமல் உள்ளன //

மாண்டிவிடியோ வட்ட ஆர்த்திகாஸ் குடியிருப்பாளர்கள் சங்கம் சார்பாக வழிமொழிவது கப்பி பய..

Unknown said...

மான் வேட்ட பத்தி பேசுன என்ன சல்மானா மாத்திடாதீங்க

Thekkikattan|தெகா said...

//தெகா, சில மொழிபெயர்ப்புகள் நன்றாகவே உள்ளன. ஒரிஜினலின் தாக்கம் மாறாமல் உள்ளன//

என்னை ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் 50 அடிக்க வைத்து ஜெயிக்க வைத்த, கால்கரி சிவா, வட அமெரிக்காவின் Lynxக்கு வாழ்த்த வயதில்லாமல் வணங்கி எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்... :-)

பி.கு: உங்களுடைய "டெலஸ்கோப்" பதில் வந்து கொணடே இருக்கிறது லிங்ஸ்... மனம் தளர வேண்டாம், மனம் தளர வேண்டாம்..... என்று கேட்டுக் கொண்டு இத் தருணத்தில் Calgary சிவாவை, அவரது நூலகத்தினுள் எங்களை ஒரு டூர் கூட்டிக் கொண்டு போகுமாறு அன்புடனும், சொரனையுடனும் கேட்டுக் கொள்ளும், தெகா ;-))

Unknown said...

50 பெற்ற தெகா வுக்கு வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா said...

/தெகி என்ன இப்பிடி கேட்டு புட்டீங்க நான் ரொம்ப நல்லவன்...............//

அதெ நம்பிதான் உங்களுக்கு டுபாய் Wildlife Conservation Forceகிட்டே இருந்து ஒரு கடுதாசி வார மாதிரி பண்ணியிருக்கேன், ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு சின்ன உதவி என்னொட நண்பருக்கு
;-))

Unknown said...

//Wildlife Conservation Forceகிட்டே இருந்து ஒரு கடுதாசி வார மாதிரி //

அட அதுல அய்யா ஏற்கனவே மெம்பருங்கோவ் ....:)

Thekkikattan|தெகா said...

பொன்ஸூ,

//தெகா, சில மொழிபெயர்ப்புகள் நன்றாகவே உள்ளன. ஒரிஜினலின் தாக்கம் மாறாமல் உள்ளன//

கால்கரி சிவா, சொல்றமாதிரியே மொழி பெயர்ப்பு எல்லாம் நீங்க தூர்தர்ஷன்ல பார்த்த மாதிரி இல்ல, வரிக்கு வரி மொழிப் பெயர்ப்பு.

இங்க எப்படின்னா முழுமையா படிச்சு உள் வாங்கிட்டு அதுக்கப்புறமாத்தான் கிட்டேயே போறது, ஒவ்வொரு பாராவுக்கும். எனக்கு ஒண்ணும் அவ்வளவு வித்தியாசமெலாம் தெரியவில்லை.

Thekkikattan|தெகா said...

கப்பி,

//என் அறிவுக் கண்ணை திறந்திட்டீங்க..

நன்றியை தேடிப் போய் சொல்லறது தான் பண்பாடு..அதனால தான் இங்க வந்து சொல்றேன் :)) //

அதெல்லாம் சரித்தான், உங்களுக்கு வந்து நன்றி சொன்னேனா இல்லையா, கொஞ்சம் கிழம ஆகிட்டு இருக்கேன் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.... ஹி....ஹி...ஹி, ( ச்சீ, இதெல்லாம் ஒரு பொழப்பளான்னு யாருப்ப அங்கன தூணுக்கு கீழே இருந்து முனுமுனுக்கிறது :-))) )

Unknown said...

//சந்ததேகமே இல்லை, நான் நினைச்சது சரியாத்தான் போச்சு... மாகோ பெரிய பன்னாட்டு மிருக கடத்தல் ஆள் அப்படிங்கிறது தெரிஞ்சுப் போச்சு...

உங்க வீட்டான்டை இருக்கிற, Wildlife Conservation Force, 1458A Igdipa yusup Rd, Dubailங்கிற முகவரிக்கு இப்பத்தான் தெரிவிச்சுருக்கேன் எதுக்கும் தலமறைவு ஆகாம அங்கேயே இருங்க... ;-) //

இந்த மிரட்டலுக்கெல்லாம் கோவிந்தன் பயந்துவிடமாட்டான் என்பதை பயமில்லாததுபோல் சொல்லிக்கொள்கிறேன் வரட்டும் அவர்கள்
அவர்களின் ஒட்டகத்தில் சவாரி செய்தேனா இல்லை அவற்றின் முதுகில் சிறுபிள்ளைகளை ஏற்றி ஒட்டகத்தை சித்திரவதை செய்தேனா பாலைவனம் எங்கும் நீண்டு கிடக்கும் மணல் வெளியில் பஹ்ரைன்காரன் போல் காரை ஓட்டி புழுதிவாரித் தூற்றினேனா ?, அல்லது என்னை எடுத்த எடுப்பில் கைது செய்துவிட நான் என்ன ஈரானா? :)

கப்பி | Kappi said...

//அதெல்லாம் சரித்தான், உங்களுக்கு வந்து நன்றி சொன்னேனா இல்லையா, கொஞ்சம் கிழம ஆகிட்டு இருக்கேன் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.... ஹி....ஹி...ஹி,
//

காசா பணமா..உங்களுக்கு என்ன வேணும்னாலும் சொல்லலாம்...

//( ச்சீ, இதெல்லாம் ஒரு பொழப்பளான்னு யாருப்ப அங்கன தூணுக்கு கீழே இருந்து முனுமுனுக்கிறது :-))) ) //

முனுமுனுக்கறதுன்னு ஆச்சுனா நேர்லயே முனுமுனுக்கனும்...தூணுக்கு பின்னாடிலாம் போகக் கூடாது

Thekkikattan|தெகா said...

/அல்லது என்னை எடுத்த எடுப்பில் கைது செய்துவிட நான் என்ன ஈரானா? :) //

:-))))))

எங்களுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் Pre-emtive aresst பண்ணி"யே தீருவோம்... பிரியாணி வாங்கி போட்டு ஆட்களை உங்களின் நண்பர் 'உருகுவே"யில இருந்து லாரி கொண்டு கொண்டு வந்தாலும்... நாய்'ங்கெல்லாம் யாரு, தீரன் புஷ்ஷின் தீவிர பக்தன்... பண்ணியே தீருவோம் பண்ணியே தீருவோம் அடிக்கிற வெயிலுமேல ஆனையாக ;-)))

கப்பி | Kappi said...

//என்னாது "சுக்கு" காபி ஆக்குமா? //

இப்படி திரித்து பேசினால் அஞ்சி ஓடி விட மாட்டார் துபாய் சிங்கம்..

//எங்களுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் Pre-emtive aresst பண்ணி"யே தீருவோம்...//
preemptive strike-க்கு அசராம நின்னு ஆடுவோம்..

அது மட்டுமில்லாம் இப்போ தான் அவருக்கு மான் கராத்தே ஞாபகப் படுத்திட்டு வந்திருக்கேன் ;)

// பிரியாணி வாங்கி போட்டு ஆட்களை நீங்கள் 'உருகுவே"யில இருந்து கொண்டுவந்தாலும்... //

மாட்டு கறி உலகத்துலயே அதிகமா ஏற்றுமதி பண்றவங்க இவிங்க தானாம்..

//நாய்'ங்கெல்லாம் யாரு, தீரன் புஷ்ஷின் தீவிர பக்தன்... ;-)))
//
தீரன் புஷ் புஸ்ஸா தான் போவாரு..

கப்பி | Kappi said...

//Pre-emtive aresst பண்ணி"யே தீருவோம்... //

இதைக் கண்டித்து செயற்குழு கூட்டி நாளை மாபெரும் வலையடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள போகிறோம்...

Thekkikattan|தெகா said...

//இப்படி திரித்து பேசினால் அஞ்சி ஓடி விட மாட்டார் துபாய் சிங்கம்...//

யாரு துபாய் அ'சிங்கமா? இப்பிடி எல்லாருமே அ'சிங்கமாகிட்ட யாருதேன், சிங்கமா இருக்கிறது... ;-)

//மாட்டு கறி உலகத்துலயே அதிகமா ஏற்றுமதி பண்றவங்க இவிங்க தானாம்..//

அதுனாலேத்தான் உங்குரு ஆளுங்க மாடட்டம் வேலை பாக்குறாங்களா, சொல்லவே இல்லை ;-)))

//தீரன் புஷ் புஸ்ஸா தான் போவாரு....//

ஆமா, கழிச்சல்ல போறவன்... எங்குரில் அவனுக்கு "பேபி கில்லர்"ன்னு பேரு ஓய்... யாருகிட்டயும் சொல்லதமே, சி.ஐ.எ அனுப்பி தூக்கிட்டுப் போய் பட்டையை உறிச்சுப் புடவாய்ங்க ;-)))

Unknown said...

// Pre-emtive aresst பண்ணி"யே தீருவோம்//
ப்ரிஎமிடிவ் அரஸ்ட் பன்ன இது என்ன மைனாரிடி ரிபோர்ட்டா இல்லை புஷ் என்ன டாம் க்ரூஸா ஸ்டீவன் ஸ்பீல்பெர்கே வந்தாலும் மான் வேட்டை நடந்தே தீரும் என்று மதியம்தான் சேதி வந்தது அல்ஜசீரா டீவியில் அல்கொய்தா பேசியது கேட்டதா பென்டகனில் இல்லை புஷ் புஸ்ஸென்று ஏர்போர்ஸ் ஒன்னில் பறந்துவிட்டாரா?

கப்பி | Kappi said...

//அதுனாலேத்தான் உங்குரு ஆளுங்க மாடட்டம் வேலை பாக்குறாங்களா, சொல்லவே இல்லை ;-)))//

அட நீங்க வேற..இவனுங்க ஆபிஸ் வர்றதே டைம் பாஸுக்கு தான்..


//
ஆமா, கழிச்சல்ல போறவன்... எங்குரில் அவனுக்கு "பேபி கில்லர்"ன்னு பேரு ஓய்... யாருகிட்டயும் சொல்லதமே, சி.ஐ.எ அனுப்பி தூக்கிட்டுப் போய் பட்டையை உறிச்சுப் புடவாய்ங்க ;-)))//

சி.ஐ.ஏ வரும்போது கட்டில் கீழே ஒளிஞ்சுக்கறேன்..அவனுங்களால கண்டு புடிக்க முடியாது..வேற எங்காவது போய் குண்டு போட்டுட்டு இருப்பானுங்க..

கப்பி | Kappi said...

//நாங்க பக்கத்து ஊரு நாட்டை தூண்டி விட்டு புகைமூட்டி எல்லா எலியையும் கைது பண்ணி கொண்டுபுடுவோம்... //

பக்கத்து நாடு என்ன குத்துவிளக்கு திரியா?? தூண்டி விடறதுக்கும் அதுல இருந்து புகை வர்றதுக்கும்??

Unknown said...

//யாரு துபாய் அ'சிங்கமா? இப்பிடி எல்லாருமே அ'சிங்கமாகிட்ட யாருதேன், சிங்கமா இருக்கிறது... ;-//)

துபாய் சிங்கத்தை அதன் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸில் வந்து பார்த்திருக்க வேண்டும் எனது அன்பு சகோதரன் இந்த "தள்ளாத" நிலையிலும் பொல்லாத புலியென சீரியிருப்பான், குவாட்டர் கோவிந்தனுக்கு தெரிந்தால் புஷ்ஷின் வண்டவாளம் ஏர்போர்ஸ் ஒன்னில் ஏறியிருக்கும், இப்படி பின்னூட்டத்துக்கு ஆசைப்பட்டு தனியாக கதம்பத்தில் மாட்டிக்கொண்ட எனக்கு சரியான தண்டனை சரியான தண்டனை...

Thekkikattan|தெகா said...

/ப்ரிஎமிடிவ் அரஸ்ட் பன்ன இது என்ன மைனாரிடி ரிபோர்ட்டா இல்லை புஷ் என்ன டாம் க்ரூஸா ஸ்டீவன் ஸ்பீல்பெர்கே வந்தாலும் மான் வேட்டை நடந்தே தீரும் என்று மதியம்தான் சேதி வந்தது அல்ஜசீரா டீவியில் அல்கொய்தா பேசியது கேட்டதா பென்டகனில் இல்லை புஷ் புஸ்ஸென்று ஏர்போர்ஸ் ஒன்னில் பறந்துவிட்டாரா? //

எங்களது அண்ணன் அஞ்சா நெஞ்சன் தீரன் புஷ், அப்படி ஹாலிவுட் படங்களை நிறைய பார்த்துப் பார்துத்தான் அதுவும் 1940கலிருந்து 60 வரைக்கும் வந்த "டெக்ஸஸில் கவ் பாய்" பேன்ற படங்களையெல்லாம் ஒன்று விடாமல் பார்த்து அது போலவே பேசியதால்தான்... இன்றும் நாங்கள அஞ்சாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதனை இத் தருணத்தில் உங்களுக்கு ஞாபகமூட்ட கடமைபட்டுள்ளேன்...

அய்யோ யாரோ ஒருத்தர் Govt. registration plate போட்டுகிட்டு ஃபோர்டு காரில் வந்து இறங்கிறாரே... ஏங்க இப்பிடி ஏன் வாய கிளரி வாம்பில மாட்டி விடுறீங்க ;-))

Unknown said...

//யாரு துபாய் அ'சிங்கமா? இப்பிடி எல்லாருமே அ'சிங்கமாகிட்ட யாருதேன்,//

துபாய் சிங்கத்தை அதன் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸில் வந்து பார்த்திருக்க வேண்டும் எனது அன்பு சகோதரன் இந்த "தள்ளாத" நிலையிலும் பொல்லாத புலியென சீரியிருப்பான், குவாட்டர் கோவிந்தனுக்கு தெரிந்தால் புஷ்ஷின் வண்டவாளம் ஏர்போர்ஸ் ஒன்னில் ஏறியிருக்கும், இப்படி பின்னூட்டத்துக்கு ஆசைப்பட்டு தனியாக கதம்பத்தில் மாட்டிக்கொண்ட எனக்கு சரியான தண்டனை சரியான தண்டனை...

Unknown said...

//எங்கள் குத்து விளக்கு, எப்பொழுதும் "டேவிஸ் காம்ப்"ல் தான் இருப்பார்//

டேவிஸ் கப்பா அப்ப கிரண்டுல இருப்பாருன்னு சொல்லுங்க ஒசாமா ஓசி ப்ளைட் எடுக்க வேண்டியதுதான்

கப்பி | Kappi said...

//அய்யோ யாரோ ஒருத்தர் Govt. registration plate போட்டுகிட்டு ஃபோர்டு காரில் வந்து இறங்கிறாரே... //


எஸ்கேஏஏஏஏஏஏப்ப்ப்ப்ப்..

AC-ய உங்களுக்குத் தெரியும்னு சொல்லி தப்பிக்கப் பாருங்க...

இல்ல உங்க புஸ் வானத்தை எடுத்து விடுங்க :))

Thekkikattan|தெகா said...

நாயகி,

//முக்கியமான புத்தகம் அது. நீங்கள் இங்கு குறிப்பிட்டது மீண்டும் ஒருமுறை அதைப் படிக்கத் தூண்டுகிறது. நன்றி. //

கடைசிய ஒரு முடிவு பண்ணி என் வீட்டு பக்கமும் வந்திட்டீங்க.

அந்த புத்தகம் படிக்க படிக்க மலைப்பும், மரியாதையும் ஏறிக்கொண்டே போனது, ஒரு தனி மனிதரால் இவ்வளவு எதிர்ப்புகளையும் தாண்டி சமாளிக்க முடியுமா என்பதிலும். மேலும் அவரை எந்த ஊருக்கு எந்த இலாக்கவிற்கு மாத்தினாலும், அங்கும் புரட்சி... குறிப்பாக கோவா மாற்றல்...

மிகவும் அருமையும்...

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

//யப்பா...... இவ்வளோ இருக்கா?
43, 44 மட்டும்தான் எங்கிட்டே இருக்கு. அப்புறம் 45 இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு.//

என்னங்க இதுக்கே "யப்பா இவ்வளோ இருக்கா" அப்படிங்கிறீங்க. நாடு விட்டு நாடு வந்தே இம்புட்டுன்னா, இன்னும் அப்பா அம்மாவோட எவ்ளோ விட்டு வந்திருப்பாங்க ;-))) ஆனா, நான் படிக்க மாட்டேங்க...

//பேசாம இங்கே பார்சல் பண்ணிருங்க. லிஸ்ட் அனுப்பறேன்:-)))) //

சரி சொல்லுங்க பார்சலுக்கு ஆர்டர் எடுக்க ரெடி, ரொண்டு இட்லி, தண்ணி சட்டினியா - கெட்டிச் சட்டினியா, என்னது மசால தோசை ரெண்டா... ஹா..ஹா...ஹா :-))

Thekkikattan|தெகா said...

பொன்ஸூ,

//"இம்புட்டுப் புத்தகம் படிச்சதுனால தான் "ஏன் இப்படி"... நல்ல வேளை சீக்கிரமே தெரிஞ்சுகிட்டேன்.. இனிமே புத்தகம் படிக்கிறத குறைக்கோணும்.. இன்னோரு "எதுக்கு இப்படி"யை வலையுலகம் தாங்குமா?! " ;) //


என்னமோ நாம ரொம்பவே "ஏன் இப்படி"ங்கிற மாதிரி இல்லாம இருக்கிற மாதிரிதான் சொல்றது. முன்னமே நீங்க 50% "அது" மாதிரி தான் ;-)),

இந்தாங்க முழுமையாக ஆக என்னோட பதிவில் இருக்கிற எண் # 78ல இருக்கிற அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்... அப்புறம் சிரிப்பு தான வந்துடும்... நம்ப அந்த ஹரித்துவர்ல காலம் என்ற ஓடையில் ஒரு நாள் சந்திப்போம் :-))))

துளசி கோபால் said...

தெ.கா.

ஆர்டர் தப்பா எடுக்காதீங்க. மசால் தோசை வேணாம். 'மசால் வடை'ன்னு இருக்கணும்:-)))))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
இம்புட்டையும் படிச்சுப்புட்டு எனக்கு கிடைச்ச செய்தி - அன்பு ஒண்ணுதான் அழியாதது அப்படிங்கிறதுதான்.
///

எல்லாரும் இதனை உணர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஹீம்(பெருமூச்சு).

ரவி said...

ஏராளமான இங்கிலீசு புத்தகம் வச்சிருக்கீரு...அது எல்லாம் நம்ம சிற்றறிவுக்கு எட்டாத விஷயமா இருக்கே அப்பு...

வைரமுத்துவோட கள்ளிக்காட்டு இதிகாசம் இல்லையா உங்களிடம்...

அருமைமான புஸ்தகம் அது சாமி...

மற்றபடி - இவ்வளவு பொறுமையாக லிஸ்ட் போட்ட உங்களை பாராட்டித்தானாகனும்..

Thekkikattan|தெகா said...

//Calgary சிவா said...
//Practical Skywatching - The Nature Companions//
டெலஸ்கோப் வச்சிருக்கீங்களா?//

க.சிவா, அந்த புத்தகமே அடிப்படை அறிவை வானத்தைப் பற்றி வழங்குவதற்கும், எது போன்ற டெலஸ்கோப் எது போன்ற "கேஸிங்" களுக்கு உதவலாம் என்பதை அறிவுறுத்தவே.

பைனாகுலாராவுது சரி 8@10 அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு ரேன்ஞ்சில வாங்கிப்புடலாம், ஆனால், ஏதாவது ஒரு டெலஸ்கோப் அம்புட்டு பணத்தைப் போட்டு வாங்கி "காரஷ்"லெ வைச்சுட முடியுமா?

அதுக்கெல்லாம் மேலே, இங்கன எங்கு இரவு வானம் இருக்கு அப்படிங்கிறதே தெரியல! ஒரே "லைட் பொல்லுயுசன்."

ஆக, நான் இன்னும் டெலஸ்கோப் பக்கம் காசப் போடல.

Unknown said...

ஏன் இப்படி கடமை (?) யை மறந்து போனீர்கள் தெகா?

Unknown said...

என்னை மறந்ததேன் நெஞ்சமே இங்கு நான் அங்கு நீ......

கப்பி | Kappi said...

//ஆமா, நேத்தைக்கு எங்கே விட்டோம், தொடரலாமா? //

நேத்து எப்படி எஸ்கேப் ஆனீங்க?? அத சொல்லுங்க..

கோவி.கண்ணன் said...

தேக இந்தோ பிடியுங்கள் என்னோட நூலக சுட்டி :
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_31.html

Thekkikattan|தெகா said...

//நேத்து எப்படி எஸ்கேப் ஆனீங்க?? அத சொல்லுங்க..//

குடும்பத்துக்கு சோரு போடணுமைய்ய, அப்பப்ப கொஞ்சம் வேலையும் பார்த்துகிடணுமில்லெ, சொந்த தொழிலவேற பூச்சு... வும்மை மாதிரிய ;-))))

Unknown said...

//அங்க போய் என்ன-னு கேளுங்க.. //

கப்பி..
பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன்
பக்கம் வரத் துடித்தேன்

//பட்டுக்கோட்டை பிரபாகர ஒரு முறை நான் பேருந்தில் பார்க்கிற சந்தர்பம் கிடைச்சது//

எங்கப்பா பொடா காரங்க இங்க வந்து பாருங்க தெகா அய்யா பிரபாகரன பட்டுக்கோட்டைல பாத்ததா சொல்றாரு

//களி கிண்டவிட்டாத்தான் சரி வரும் போல...//

இந்த மான் எந்தன் சொந்தமான்
பக்கம் வந்தமான்

பின்னூட்டம் போடுங்கய்யா போடுங்க :))

கப்பி | Kappi said...

//குடும்பத்துக்கு சோரு போடணுமைய்ய, அப்பப்ப கொஞ்சம் வேலையும் பார்த்துகிடணுமில்லெ, சொந்த தொழிலவேற பூச்சு... வும்மை மாதிரிய ;-))))//

அட நீங்க வேற..எனக்கும் இன்னைக்கு இங்க ஆப்பு தாங்க..

கப்பி | Kappi said...

உம்..

(இது உங்க கதைக்கு)

கால்கரி சிவா said...

தெ.கா. டெலஸ்கோப் அவ்வளவு விலை அதிமில்லை.$500 க்கு நல்ல டெலஸ்கோப் வாங்கிடலாம்.

நீங்கள் இருக்கும் பகுதியில் நிச்சயமாக ஒரு கிளப் இருக்கும். அதில் சேர்ந்தால் மாதம் $5 டாலருக்கு டெலஸ்கோப் கிடைக்கும். முயற்சிக்கவும்.
என் மகனின் ஆர்வத்தால் பல தூரத்து நட்சத்திரங்களைப் பார்த்து வியந்துள்ளேன்

கப்பி | Kappi said...

தெகா..

உண்மையை சொல்லுங்க..

அந்த பஸ்ல ஏறினதுக்கான உண்மையான காரணத்தை சொல்லுங்க..

கப்பி | Kappi said...

//எனக்கு என்னமோ அந்த ஆள பீட் பண்ணிப்புட்டதா நினைப்பு. //

உங்களுக்கு உள்ள இருக்கு ஒரு சூனா-பானா பெருமையில மிதந்திருப்பானே..

Unknown said...

எங்க பதிவுல வந்து கதை சொல்லுங்க நான் இங்க வந்து உம்கொட்டுறேன் :))
உம் அப்றம்......

கப்பி | Kappi said...

//ப. கோட்டை என்னை ஒரு மாதிரி பாத்து சிரிச்சுச்சு//

விடுங்க...இதெல்லாம் வீரனுக்கு சகஜம்...

//படிச்சுட்டு முடிஞ்சா சிரிச்சு வையுங்க...
//

ச்சே உங்கள எப்படிங்க வைய்யறது?

Thekkikattan|தெகா said...

kappi,
//உண்மையை சொல்லுங்க..
அந்த பஸ்ல ஏறினதுக்கான உண்மையான காரணத்தை சொல்லுங்க..//

பாம்பின் கால் பாம்பு அறியுமென்றும், கந்தனுக்கு புத்தி.... ;-)))))) அது இதுதானோய்யா :-))

Unknown said...

எங்க பதிவுல வந்து கதை சொல்லுங்க நான் இங்க வந்து உம்கொட்டுறேன் :))
உம் அப்றம்......

Unknown said...

உம் அப்றம்......

Unknown said...

//சந்தனமுல்லை என்பவர் கீழ்காணும் சுட்டியில் புத்தகப் பதிவு போட்டிருக்கிறார்,//

சுட்டி குடுத்தவனுக்கே சுட்டியா
முதல் கமெண்ட்ட நாந்தான் போட்டேன் ஆனா அவங்க பின்னூட்ட பொட்டியில எதோ கோளாரு போல போன வேகத்துல என் "மயிலுக்கு" பறந்து வந்திருச்சு அப்புறமாத்தான் சிபாவுக்கு சுட்டி குடுத்தேன்

http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_28.html#115444290068225352

கப்பி | Kappi said...

//என்னங்கய்யா, ப.கோட்டை கதையை கை கடுக்க உட்கார்ந்து அடிச்சு உங்ககிட்ட சொன்ன ஒண்ணும் அதெப் பத்தி பேசமாடேங்கிறீங்க//

அதான் ஏற்கனவே மூனு கருத்து சொல்லி இருக்கேன்..அதுக்கு ஒன்னு தான் பதில் சொல்லி இருக்கீங்க?

கப்பி | Kappi said...

அடுத்தது 100...
நீங்க போடறீங்களா..நான் போடவா??

சின்னப் புள்ளத்தனமா இங்கயே பதில் சொல்லி தொலைக்காதீங்க...அதுவே 100 ஆயிடும்..க்கும்..

Thekkikattan|தெகா said...

//உங்களுக்கு உள்ள இருக்கு ஒரு சூனா-பானா பெருமையில மிதந்திருப்பானே..//

நினைப்புத்தான் பொழப்ப கெடுத்துச்சாம்... அது இந்த கதையின் "நீதி."

கப்பி | Kappi said...

நூத்துல ஒரு நீதி சொன்ன தெகா..வால்க..வால்க..வால்க :D

Unknown said...

தெகா வின் கதையில் தெரியும் நீதி : எப்பவுமே எக்ஸ்ட்ராவா ஒரு அம்பது ரூபா எடுத்துகிட்டு பஸ்ஸில ஏறனும் அப்பத்தான் சரியான பஸ்ச புடிச்சு ஊருக்கு வரமுடியும்:))

100 + 1 ----- happy 100 hits

Thekkikattan|தெகா said...

என்னை நூறுக்கு தள்ளிவிட்டு மேட்சமடையவைத்த அன்புச் அ'சிங்கம், உருகுவேயின் வணங்காமுடி "கப்பி"யாருக்கு, கழுதைப்புலிகளின் தலைவன் தெகா, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... ;-)

கப்பி | Kappi said...

அது எங்கள் பாக்கியம் !! ;)

//கழுதைப்புலிகளின் தலைவன் தெகா//

கழுதைப்புலிகளுக்கு மட்டுமா தலைவன்...வாயில்லா ஜீவனுக்கெல்லாம் நீங்க தானே வாத்தியார் :D

Unknown said...

இப்படி நூறு அடித்ததும் சக பதிவரை அம்போவென ரன் அவுட் ஆக்கிய தெகங்குலியை குவாட்டர் கோவிந்தன் வன்மையாக கண்டிக்கிறார்

கப்பி | Kappi said...

//கிழிந்து போன, கூவம் ஆற்றில் துவைத்து ரீ-சைக்கில் செய்யப்பட்ட), எங்களூர் இழுத்தடிச்சான் பட்டி அய்யா குரங்குசாமி அவர்களின் சார்பாக,//

இதுக்கு இரண்டு அடி அடிச்சிட்டு போலாம் :D

Thekkikattan|தெகா said...

/இதுக்கு இரண்டு அடி அடிச்சிட்டு போலாம் :D //

ரெண்டு அடி அட்ச மட்டும் அப்படி உட்றபோறீகளாக்கும்... உடனே எழ்ந்துருச்சு சொல்லுவீங்க... இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு ;-))) திருந்துங்கப்பா...

Unknown said...

சீரியஸான கேள்வி 1: தென்னமரிக்க காடுகளில் வசிக்கும் மிகச்சிறிய குரங்கின் பெயர் என்ன?

கப்பி | Kappi said...

//இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு ;-))) திருந்துங்கப்பா...//

கொண்ட கொள்கையை நாங்க எந்த காலத்துலயும் விட்டுட மாட்டோம்...

குவாட்டர் ஏதோ டவுட் கேக்கறாரு..பதில் சொல்லுங்க..

Thekkikattan|தெகா said...

//சீரியஸான கேள்வி 1: தென்னமரிக்க காடுகளில் வசிக்கும் மிகச்சிறிய குரங்கின் பெயர் என்ன?//

இதெல்லாம் ஒரு கேள்வியா... சரி சரி உங்களுக்கு விடை முன்னமே தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் இந்தாங்க நேசியின் பதில் ... பிக்மி மர்மோசட் (piggmy mormoset)." இதன் நீளம் 35 செ.மீ, எடை 100 கிரமிக்குள்...

சரி உங்களுக்கு ஒரு கேள்வி இது தொடர்பாகவே... புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டிய எப்படி கூப்பிடுறாங்க?

Thekkikattan|தெகா said...

//குவாட்டர் ஏதோ டவுட் கேக்கறாரு..பதில் சொல்லுங்க..//

பதில் சொல்லி அரைநாள் ஆச்சு இன்னும் பதில காணல ;-)))?

அவருகிட்ட கேட்டதே உங்க கிட்டயும்...

இது தொடர்பாகவே... புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டிய எப்படி கூப்பிடுறாங்க?

கப்பி | Kappi said...

// புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டிய எப்படி கூப்பிடுறாங்க?
//

சிங்கப்புலி ??:P

அனிமல் ப்ளேனட்லாம் பாக்கறதில்ல நைனா :))

Unknown said...

mega bat -fruit eating fox


லைகர் :
புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டி லைகர்

Thekkikattan|தெகா said...

சரி சரி, இந்த் இண்டெர்னெட் வந்ததும் வந்துச்சு, ச்சே ச்சே... ;-))

சரி இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்... போர்னியோ காடுகளில் உள்ள ஒரு வாலில்லா குரங்கின் பெயரை குறிப்பிடுக... 5 மதிப்பெண்கள்.

Unknown said...

சீரியஸ் கேள்வி 2. அல்பட்ரொஸ் பறவை எத்தனை ஆண்டுகளில் இணை சேரும்?

கப்பி | Kappi said...

//சரி இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்... போர்னியோ காடுகளில் உள்ள ஒரு வாலில்லா குரங்கின் பெயரை குறிப்பிடுக... 5 மதிப்பெண்கள்.
//

வெய்ட் எ நிமிட் பார் பைவ் நிமிட்ஸ்

கப்பி | Kappi said...

Barbary Ape??

இதான் முதல்ல கிடைச்ச பதில்..

கப்பி | Kappi said...

தெகா..

இப்போ கண்ணைக் காட்டி ஆளைக் கண்டு பிடிக்கற போட்டி மாதிரி நீங்களும் நாலு நாலுகால் நண்பர்கள் போட்டவைப் போட்டு ஒரு போட்டி வைங்களேன்...

Thekkikattan|தெகா said...

/சீரியஸ் கேள்வி 2. அல்பட்ரொஸ் பறவை எத்தனை ஆண்டுகளில் இணை சேரும்?//

யய்யக்கள, உங்களுக்கு தெரியாத கேள்வியா கேளுங்கய்யா, பொசுக்கு பொசுக்குன்னு ஆன்லைன்லெ தேடி இப்பிடி அனியாயத்திற்கு புத்திசாலிகளா இருக்கீங்களே... :-))

இது காப்பி அடிக்கிறமாதிரிதான்...அரை மதிப்பெண் கூட உங்களுக்கு கிடையாது...

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அவை சேருகின்றன. இரண்டு மாதங்கங்கள் அடைகாப்பிற்கு பிறகே, குஞ்சுபரிப்பு நடைபெறுகிறது.
இந்த பறவைகள் வலசை போதலில் ரொம்பக் கெட்டிக் காரர்கள்!!

கப்பி | Kappi said...

//கப்பி உங்கள பத்தி கேட்டுருக்கார்:)) /

இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிடு தெய்வமே..

Unknown said...

நெசமாலுமே நான் ஒரு விலங்கு பிரியனுங்க பி.பி.சி. டிஸ்கவரி நே.ஜி போட்ட எல்லா டி.வி.டி.யும் இருக்கு எஙிட்ட

நான் ரொம்ப நல்லவனுங்க காப்பியெல்லாம் அடிக்கல இந்த கேள்வியே நான் பி.பி.சி யோட லைப் ஆப் பேர்ட்ஸ் பாத்து கேட்டது தான் டேவிட் அட்டன் பரோன்னா எனக்கு உசிரு என்னப்போயி காப்பின்னு சொல்லிட்டீங்களே இது நாயமா?

கப்பி | Kappi said...

//வலசை போதலில்//

அப்படின்னா?

Unknown said...

சரி அடுத்த கேள்வி ப்ளாடிபஸ் எப்படி பால் குடுக்குது?

கப்பி | Kappi said...

//யாம் 2 அரை மதிப்பெண்கள் வழங்குகிறோம்... ;-))) ஜஸ்ட் பாஸ்...
//
ஆத்தா நான் பாஸாயிட்டேன்...

Unknown said...

//மட்டன் பரோட்ட தெரியும்..இது என்ன அட்டன் பரோ?? :)))//

கப்பியோட கேள்விய பாத்தீங்களா தெகா நீங்க என்னப் போயி மிருக கடத்தல் காரன்னு சொன்னீங்க?

கப்பி | Kappi said...

/migration
//
இப்படி தமிழ்ல சொன்னா தானே தெரியும் :(

கப்பி | Kappi said...

//நீங்க என்னப் போயி மிருக கடத்தல் காரன்னு சொன்னீங்க? //

அட அது அறிவுப்பசில கேட்ட கேள்வி..நான் முட்டை கூட சாப்பிட மாட்டேன்..தெகா நம்புங்கோவ்வ்வ்வ்..

கப்பி | Kappi said...

எனக்கு இன்னும் 3 இருக்கு..ஆளுக்கு ஒன்னா போட்டுக்கலாம்...என்ன சொல்றீங்க?

Thekkikattan|தெகா said...

/சரி அடுத்த கேள்வி ப்ளாடிபஸ் எப்படி பால் குடுக்குது?//

ஆத்தாடி இப்பிடி ஒரு கேள்விய கேட்டு வாத்தியார வீட்டுக்கு அனுப்பி வீட்டு பாட செய்ய வச்சுப்புட்டாகளே... வெவகாரமான ஆளுதாப்ப நீங்க...

தெரிஞ்ச நீங்களே சொல்லிபுடுங்க...

Unknown said...

அதன் உடலின் மயிர்கால் களின் வழியே சுரக்கும் ஒரு திரவத்தை பாலாக ஊட்டுகிறது கொழுப்புச்சத்து நிறந்தது அப்பால் (உபயம் பி.பி.சி. ட்ரயல்ஸ் ஆப் லைப்- டேவிட் அ.பரோ)

கப்பி | Kappi said...

குறைவான கயமைத் தனத்தில் (33%) 100 அடிக்க உதவிய 'விலங்கியல் வேந்தன்' தெகாவிற்கும் 'பல்கலை பயில்வான்' மகேந்திரனுக்கும் நன்றி..நன்றி

கப்பி | Kappi said...

//ஒரு கேள்விய கேட்டு வாத்தியார வீட்டுக்கு அனுப்பி வீட்டு பாட செய்ய வச்சுப்புட்டாகளே... வெவகாரமான ஆளுதாப்ப நீங்க...
//

இதுக்காக கலங்கிவிடுவதா...
கமான் தெகா..யு கேன் டூ இட்...

கப்பி | Kappi said...

//நம்மூரில் காட்டுக்கழுதைகள் எங்கு காணப்படுகின்றன?//

மெட்ராஸ்ல ஒரு இடம் ஞாபகம் வருது...வேணாம் உசுரு மேல கொஞசம் ஆசை இருக்கு :D

கப்பி | Kappi said...

நன்றிக்கு நன்றிக்கு நன்றி..
தெகா..பதில் சொல்லிட்டு போங்க

கப்பி | Kappi said...

/தென் அமெரிக்க தீவிர வாதிகளின் வாதத் தந்தையும்//

இதைப்பார்க்காம நன்றி சொல்லிட்டேனே..

மாப்பு..வச்சிட்டாருய்யா ஆப்பு

Thekkikattan|தெகா said...

/மெட்ராஸ்ல ஒரு இடம் ஞாபகம் வருது...வேணாம் உசுரு மேல கொஞசம் ஆசை இருக்கு :D

தெகா..பதில் சொல்லிட்டு போங்க..//

நீங்க சொல்ற கழுதைங்க நிறைய திரியுது, என்ன மாதிரி.

நான் கேட்டது "அக்மார்க்" wild asses, அவைகள் குஜராத்தில் "ரன் அஃப் கட்ச்" எனுமிடத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

நீங்க சொல்ற காட்டுக் கழுதைகள் ஊரெலாமிருக்கு அதுகென்ன பஞ்சம் ;-)))

Unknown said...

இந்தியாவெங்கும் காணப் படுகின்றன சில துபாய்க்கும் உருகுவேக்கும் அமெரிக்காவுக்கும் வேலை நிமித்தம் சென்று விட்டதால் இப்போது உலகமெங்கும் காணப் படுகின்றன மேலும் சில சிங்கப்பூர் , தாய்லாந்து மலேசியா, ஜெர்மனி பாரிஸ் என்ற பறந்த உலகில் இந்தியக் கழுதைகள உலகமெங்கும் காணக் கிடைக்கின்றன

எப்பிடி என்னோட கடைசி பதில் இன்னைக்கு :)
நெசமாவே பதில் தெரியலீங்கோவ்

Unknown said...

நன்றி தெகா, கப்பி நாளை வேறு ஒரு அறிவியல் கேள்விபதிவில் சந்திப்போம்
பின்னூட்ட முயல் தெகா உருகுவே மான் வேட்டை புகழ் கப்பி இருவருக்கும் நன்றி

Thekkikattan|தெகா said...

Dr. Delphine,

//Did you collect them all in India or in USA? Yes. Only love is the best book.. that too true Love and friendship/ Am I right?//

எல்லா தமிழ் புத்தகங்களும் அங்குதான் வாங்கினேன், சில சமயங்களில் எனது நண்பன் எனக்கு பரிசாக கொடுத்தனுப்புவதுமுண்டு.

'அன்பு' மட்டுமே நிலையானது என்பதுபோலத்தான் புரிந்து வைத்திருக்கிறேன். நீங்கள் சொல்வது சரியே...

சுரேகா.. said...

அண்ணா...

கலக்கிப்புட்டீங்க...

132 புத்தகங்களின் கலவையா தெகா இருப்பது ரொம்ப பெருமையா இருக்கு..

ஓஷோவின் இன்னும் சில புத்தகங்கள் சிறப்பாக இருக்கும்..
1. தம்மபதம்
2. ஒரு கோப்பை தேனீர்
3. பெண் விடுதலை - ஒரு புதிய தரிசனம்.
4. கிளர்ச்சியாளன். - ஆன்மீகத்தின் ஆதார ஸ்ருதி.

ஊருக்கு வாங்க அசத்திப்புடலாம்.

Unknown said...

தெகா உங்களோட இயற்கை நேசி பதிவுக்கு ஒரு கேள்வி அனுப்பியிருக்கேன்

Thekkikattan|தெகா said...

குமரன் எண்ணம்,

//எல்லாரும் இதனை உணர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஹீம்(பெருமூச்சு)...//

இந்த பக்குவம் என்று, எப்படி, எந்த சூழலில் என்பதுதானே நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்காகத்தன் இதுபோன்ற ஒரு பதிவையே சிவபாலன் ஆரம்பித்து வைத்திருப்பாரோ?

நன்றி குமரன் தாங்களின் பின்னூக்கிக்கும் வருகைக்கும்.

Sivabalan said...

//Parallel Universes (The Search for Other Worlds) - Fred Alanwolf //

தெகா

இது ரொம்ப சுவாரசியமான விசயமாயிற்றே..

இதைப பற்றி ஒரு தனிப் பதிவாக போடுங்களேன்...

நிச்சயமாக உபயோகமாக இருக்கும்..

சிவாஜி said...

ஆஹா..................... அருமையான புத்தகங்கள். உங்களின் பகிர்வு உண்மையில் மிகவும் சந்தோசத்தையும் விட்டுப்போன பட்டியலையும் ஒருங்கே தருகிறது. நன்றி. நன்றி. நன்றி.

Related Posts with Thumbnails