Thursday, August 03, 2006

*அசுரனின்* கோக் பதிவும் தெகாவின் பார்வையும்...

அசுரனின் கோக் பதிவை படித்ததும் என் மனதில் பட்டதை அவருக்கு பின்னூட்டமாக வழங்கியதை இங்கு உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

அவர் தனது பதிவில் கோக் குளிர்பான கம்பெனி எப்படி தாமிரபரணி போன்ற ஜீவ நதிகளைச் சுருங்கச் செய்துகிறது என்பது பற்றியும், இந்தியாவிலும் நிலத்தடிநீர் மிக விரையில் காணாமல் போய் கொண்டிருப்பதைப் பற்றியும் ஏனைய கோக் சார்ந்த விஷம வியாபார உக்திகளையும் படம் பிடித்து தனது பதிவில் இட்டுள்ளார்.

தயவு செய்து எல்லோரும் ஒருமுறை அந்தப் பதிவினை இங்கு சொடுக்கி சென்று படித்துப் பாருங்கள்.

இந்தியாவின் நிலத்தடிநீர் எங்கே? ஏன் இவ்வளவு விரைவில் பாலைவனவாக்கம் நடந்தேறுகிறது? தென்னிந்தியாவிலும் மற்றும் பல இந்திய மாநிலங்களிலும் இதே நிலையே... !

இதோ என்னுடைய பின்னூட்டம் அவருடைய பதிவிற்கு;

அசுரா,

மற்றொரு சிந்தனையூட்டு, அபாயமணி அடிக்கும் கட்டுரை உங்களிடமிருந்து.

எத்துனை பேர் இதனை படிக்கிறார்கள்? சிந்திக்கிறார்கள். நிலத்தடி நீரை மாசுபடுத்தி, அதனை நச்சாக்கி, அந்த நீருக்கு ஒரு நிறத்தையூட்டி மக்களை புத்தியிழக்கச் செய்து, இயற்கையை சுரண்டும் இந்த மறுகாலனியாதிக்கம் மிக விரைவாக உலகத்தை சுருட்டி விடும் போலிருக்கிறது.

எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. படித்து சிந்திப்பதற்குத்தான் ஆட்களை காணோம்!

நீங்கள் கொடுத்த சுட்டிகளின்றி, மற்றொரு விசயமும் விஷமாக பரவிக்கொண்டுள்ளது bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபத்தை முன்னெறுத்தியே அன்றி வேறன்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவர்களின் கை, விதை தானியாங்களுடன் நின்று போகவில்லை, இப்பொழுது மீன் வகைகளிலும் கைவரிசை காட்ட ஆரம்பித்திருப்பது அறிவீர்களா?

பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்ற வகை மீன் மரபணு-மாற்று தொழில் உக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை அவ்வகை மீனின் மரபணுவில் சொருகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி, அந்த மலட்டு மீன்களை இயற்கையினுல் திணிப்பதனால் ஒரிஜினல் மீன் வகைகள் அவற்றுடன் போட்டியிட முடியாது காணாமலே இவ்வுலகத்தை விட்டு அகற்றப் படுகிறது... உங்களுக்கு புரிகிறதா இந்த வியாபார யுக்தி?

இந்த மறுகாலனியாதிக்கத்தின் உக்தி, உலக சந்தையை தன் கைக்குள் கொண்டுவருவது, அது ஒன்றுதான் அதன் குறிக்கோளாக முன் நிக்கிறது. மற்றபடி இயற்கையோ, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை.

இது ஒரு இருட்டடிப்பு உண்மை. நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!

63 comments:

மகேந்திரன்.பெ said...

தெகா இப்படித்தான் டுனா மீன்* ( tuna *bluefin fish)னையும் அட்லாண்டிக் மற்றும் பசுபிக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறையவே வேட்டையாடியதில் திமிங்கலங்கள் தங்களுக்கு உணவற்று அவற்றின் இனப்பெருக்கம் குறைந்தவண்ணம் உள்ளன மனிதன் உணவுக்கும் எத்தனையோ வழிகள் இருக்கையில் சுறா வேட்டையும் திமிங்கல வேட்டையும் இன்னும் நடந்து கொண்டுதானே இருக்கிறது!

மகேந்திரன்.பெ said...

ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னும் வேட்டை ஆயுதங்களின் தயாரிப்புக்கு முன்னும் ஆசியாவெங்கும் பறவிக்கிடந்த இந்தியப் புலிகள் இன்று சில நூறுகளில் அடங்கிவிட்டது சைபீரியப் புலிகளின் கதியும் அதுவே .

A word From the Endangerd tigers By BBC "before the inventory of weapons This is the Most Dangerous Predator on earth"

Thekkikattan said...

வணக்கம் மகி,

இதுபோன்று எவ்வளவு சொல்லிக் கொண்டே போகலாம்... சிந்தனையற்ற இயற்கை சுறண்டல் தன் அழிவிற்கு தானே வழி தேடிக் கொண்டது போலத்தான். சிறீலாங்கவிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் என்ன நடந்திருக்கிறது என்பதனை எனது வரப்போகும் பதிவுகளில் சொல்கிறேன்.

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

Sivabalan said...

// மறுகாலனியாதிக்கத்தின் உக்தி //

இக கருத்து நிச்சயம் ஏற்கப்படவேண்டும்.

//இயற்கையோ, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை//

இதுதான் இன்றைய இயற்கை நேசிகளின் மிகப் பெரிய சவால்.

மகேந்திரன்.பெ said...

பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அப்பவும் கடன் தானா ?:)

Thekkikattan said...

//பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அப்பவும் கடன் தானா ?:) //

புரியாலயா, அதிலிருந்த உள்குத்து. அதுதான் சுரன்டிப் புட்டாங்களே இருக்கிற பணத்தையெல்லாம்... விதை வருஷம் வருஷம் வாங்கி தான் விவசாயம் பண்ணனும், அதானலே உணவு தன்னிரைவு போயச்சு, நிலத்தடி நீர் எடுக்க முடியாது, ஏன்னா, தண்ணீர் பற்றாக் குறையால், நமது அரசங்கம் நீர் வலத்தை தனியார் மயமாக்கி விடும்.

இப்பிடி எல்லாத்துக்கும் பணம் எடுத்துக் கொண்டே இருந்தா... நீங்களும் நல்ல ஒரு கலர் பிரிண்டரா வாங்கி சும்மா இருக்கிற நேரத்தில நோட்டு பிரின்ட் அடிக்க வேண்டியதுதான்...

ஏன்னா அடுத்த குழந்தையை IQ upgrade பண்ணனுமில்ல ;-)))

மகேந்திரன்.பெ said...

//நீங்களும் நல்ல ஒரு கலர் பிரிண்டரா வாங்கி சும்மா இருக்கிற நேரத்தில நோட்டு பிரின்ட் அடிக்க வேண்டியதுதான்//

அதெல்லாம் முயற்சி பன்னியாச்சு பேப்பர்தான் வேஸ்ட் :))))

ஆனா நம்ம கோவிந்தனோட பிரண்டு ஒருத்தர் மீன் புடிக்கிரதுல கில்லாடி :))
http://paarima.blogspot.com/2006/08/blog-post.html

Thekkikattan said...

சிவா,

//இதுதான் இன்றைய இயற்கை நேசிகளின் மிகப் பெரிய சவால்.//

இன்னும் நிறைய இயற்கை நேசிகள் குறுகிய கால நோக்கை விட்டுத்தள்ளிவிட்டு சற்றே இயற்கை புரிந்துணர்வுடன் செயல் பட்டாலே ஓரளவிற்கேனும் நம்மால் நமது வரும் சந்ததியற்கு நாம் இயற்கைபால் ஒன்றிணைந்து அனுபவித்த விசயங்களில் ஒரு 20% கொடுத்து விட்டு செல்ல முடியும்.

மரபணு தொழிற் நுட்பத்தில் நாம் தொலைந்து போக என்ன மோட்டார் இணைக்கப்பட்ட மிசின்களா?

அழகு said...

சிந்திக்க நிறையபேர் இருக்கிறோம். ஆனால் செயலென்று வரும்போது, ஆதிக்கவெறி பிடித்த அரசுகளின் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியுள்ளதே!.

அதையும் அசுரன் சுட்டியிருக்கிறார். கோக்குக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய ம.க.இ.க தொண்டர் இப்போது சிறையில்!

வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது.

மகேந்திரன்.பெ said...

//மரபணு தொழிற் நுட்பத்தில் நாம் தொலைந்து போக என்ன மோட்டார் இணைக்கப்பட்ட மிசின்களா? //

நான்கூட ஒருதடவை கொஞ்சம் கிறுக்குத் தனமா யோசனை பன்னினேன் எதுக்கு நமக்கு தேவையில்லாம முடி வளந்து அதை வெட்டி நகம் வளந்து அதை வெட்டி பல் விழுந்து அதை ஒட்டி இப்பிடி எதுவும் இல்லாம ஒரு பிக்ஸ்ஸட் ப்ரொப்பர்டி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?

Thekkikattan said...

அழகு,

//ஆதிக்கவெறி பிடித்த அரசுகளின் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியுள்ளதே!. //

அதற்குத்தான் இது போன்ற ஊடகங்கள் துணைக்கு வருகின்றன். போதுமான அளவிற்கு விழிப்புணர்வு அரிதிப் பொரும்பாண்மையானோருக்கு சென்றடைந்து விட்டாலே. அது போய் சேர வேண்டிய இடத்திற்கு தானகவே போய்ச் சேர்ந்துவிடும்.

//அதையும் அசுரன் சுட்டியிருக்கிறார். கோக்குக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய ம.க.இ.க தொண்டர் இப்போது சிறையில்! //

அது போன்ற களத்தில் இறங்கி வேலைபார்ப்பவர்கள் ஒரு புறமிருந்தாலும், அறிவியல் உலகில் என்ன நடக்கிறது என்பதனை ஆழந்தறிந்து அதனை சாதரண ஒரு தனிமனிதனுக்கு கிட்டும் வகையிலும் வழிவாகை செய்வது அவசியமில்லையா?

டாக்டர் வந்தனாசிவா, போன்றவர்கள் குறிப்பிட்ட அளவில் இது போன்ற தானிய பன்முகதன்மை இழப்பை நன்கு வெளி உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார்...

தாங்களின் வருகைக்கும் பின்னூக்கிக்கும் எனது நன்றிகள்!

Thekkikattan said...

மகி,

//அதெல்லாம் முயற்சி பன்னியாச்சு பேப்பர்தான் வேஸ்ட் :)))) //

அதானே கேட்டேன் ;-))) நான் ஒரு ரெண்டு மூனு ரிம் பேப்பர் போட்டு முயற்சி பண்ணியிருப்பேன் ;-)))

//ஆனா நம்ம கோவிந்தனோட பிரண்டு ஒருத்தர் மீன் புடிக்கிரதுல கில்லாடி :))//

புரியுது, புரியுது, மீன் பிடிகிறது அத்தியவாசியத் தேவை என்பது மாறி இப்பொழுது அது ஒரு recreational activityயாக ஆகி, மீனை பிடித்து மீண்டும் தண்ணிக்குள்ளேயே விட்டுடணுமா... இப்ப போன வார நான் மீன் பிடிச்ச இடத்தில நடந்த ஒரு விசயம்...

என்னத்தா சொல்ல...

குரவை, கொழுத்தி மீன்கள் பிடித்ததுண்டா... கோடை விடுமுறையில் ஊர்க்காடுகளில்?

இலவசக்கொத்தனார் said...

முடிந்த அளவு இயற்கை பழரசங்களைத் தவிர மற்ற குளிர்பானங்கள் அருந்துவதில்லை என எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் சிறு துளி.

//எதுக்கு நமக்கு தேவையில்லாம முடி வளந்து அதை வெட்டி நகம் வளந்து அதை வெட்டி பல் விழுந்து அதை ஒட்டி இப்பிடி எதுவும் இல்லாம ஒரு பிக்ஸ்ஸட் ப்ரொப்பர்டி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? //

இதைத்தான் நம்ம பரிணாம வளர்ச்சி பதிவுல கொஞ்சம் காமெடியா சொல்ல ட்ரைப் பண்ணினேன். :)

மகேந்திரன்.பெ said...

/recreational activityயாக ஆகி, //

அது ரெக்ரியேஷன் எனும் பெயரில் செய்யப்படும் சித்திரவதை அதைவிட அதை பிடிக்காமலேயே இருக்கலாம்

/குரவை, கொழுத்தி மீன்கள் பிடித்ததுண்டா//

அதெல்லாம் நிரைய எங்க கிணத்துல அதுக்காகவே வளக்கிறோம் :)


அட்ரஸ்தான் குடுக்கமுடியும்...... இன்னும் என்னாத்த சொல்ல :))

Thekkikattan said...

இ.கொ,

//முடிந்த அளவு இயற்கை பழரசங்களைத் தவிர மற்ற குளிர்பானங்கள் அருந்துவதில்லை என எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் சிறு துளி. //

முதுகில் தட்டிகொடுக்கிறேன். இதுதான் நான் சொல்ல வரும் அணுகு முரையும். இதனைத்தான் நான் ஆங்கிலத்தில் Collective Consciouness என்று கூற வருகிறேன்.

தாங்களை போன்று ஒவ்வொருவரும், விலை மழிவாக கிடைக்கிறதே வாங்கி அருந்தினால் என்ன என்று இல்லாமல் சற்றே அதிகமாக இருந்தாலும் இயற்கை சார்ந்த பொருட்களையே அங்கீகரிப்பது என்ற சுய புரிதலுக்கு வந்து விட்டால் போதும்.

உதாரணமாக நீங்கள் கோழி அல்லது மீன் சாப்பிடுபவர் என்று வைத்துக்கொள்வோம், அப்படி கடைக்குச் சென்று வாங்கும் பொழுது அது பண்னையில் வைத்து வளக்கப்படாமல் இயற்கை முறையில் கிடைத்த வகைகலை அங்கீகரித்து குறிப்பாக ஒவ்வொரு முறையும் வாங்குவது.

இது போல எல்லோரும் மாறினால்... மீனவ அரசனுக்கு நாட்டுக் கோழி ரொம்ப அருமையான காம்போ இல்லையா... :-))

Thekkikattan said...

மகி
//அது ரெக்ரியேஷன் எனும் பெயரில் செய்யப்படும் சித்திரவதை அதைவிட அதை பிடிக்காமலேயே இருக்கலாம்..//

என்னைய பண்ணச்சொல்லிப்புட்டாய்ங்க இங்கே மினசோட்ட ஏரியில... ஆசையா 25$ கொடுத்து லைசன்ஸ் வாங்கி ஒரு மணி நேரத்தில நானும் என் பையனுமா சேர்ந்து மூனு "பாஸ்" வகை மீன புடிச்சோம், என் நாக்கில் நீர் சுரந்தது ஆகா வீட்டுக்கு எடுத்துட்டு போயீன்னு... ஆனா, வந்து சொல்லிப்புட்டாய்ங்க திருப்பி தண்ணிகுள்ள விட்டு புடணும் அடுத்த ஆட்கள் எல்லாம் விளையாடணுமில்லையா அப்படின்னு :(

//அதெல்லாம் நிரைய எங்க கிணத்துல அதுக்காகவே வளக்கிறோம் :) //

அப்ப ஊருக்கு வந்த மீன் கொழம்பு கிடைக்குமின்னு சொல்றீங்க.. :-) ஹும்ம்... திரும்பவும் நாவில் ...

//அட்ரஸ்தான் குடுக்கமுடியும்...... இன்னும் என்னாத்த சொல்ல :)) //

இந்தா போயிகிட்டு இருக்கேன்... எந் நன்றி செயதாற்கும்.... :-)))

மகேந்திரன்.பெ said...

தெகா ஊருக்கு எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க (நான் அப்ப ஊர்ல இருந்தா) சிலேபியும் குறவையும் , கெளுத்தியும், ஆரா மீனும் நம்ம கிணத்து பெசல் ஒரு கட்டு கட்டலாம்ல ஆமா வர்ரேன்னு சொன்னீங்க இன்னமுங்கானும்?

இலவசக்கொத்தனார் said...

//மீனவ அரசனுக்கு நாட்டுக் கோழி ரொம்ப அருமையான காம்போ இல்லையா... :-))//

அய்யோஓஓஓ

அது அரச மீனவன்யா.

Thekkikattan said...

மகி,

//நான்கூட ஒருதடவை கொஞ்சம் கிறுக்குத் தனமா யோசனை பன்னினேன் எதுக்கு நமக்கு தேவையில்லாம முடி வளந்து அதை வெட்டி நகம் வளந்து அதை வெட்டி பல் விழுந்து அதை ஒட்டி இப்பிடி எதுவும் இல்லாம ஒரு பிக்ஸ்ஸட் ப்ரொப்பர்டி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?//

எல்லாம் விசய புரிதல்களில்தான் வருகிறது, ஞான வெளிச்சமே. Instant remedy இயற்கை சார்ந்ததல்லவே.

நாமே சிருஷ்டிப்பவனாக மாறிவிட்டால் பிறகு இந்த மரங்களும், செடிகளும், கொடுகளும் எதற்காக...

எதற்காகவோத்தானே அவைகள் நமக்கு முன்னமாகவே இருந்து இந்த பூமியில் இருக்கிறது.

அவ்வளவு எதற்கு கண்களில் லேசர் போன்ற ஒரு ஒளிக்கற்றை புறப்பட்டு நாம் வெட்ட வேண்டியா பாகத்தை உற்று நோக்கினாலே வெட்டுவது போல அமைந்து விட்டால், அடெடா என்ன வசதி, என்ன வசதி... இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 15$ முடி வெட்டும் பணம் மிச்சம் ;-)))

மகேந்திரன்.பெ said...

15 $ :(
10 aed :) dubai

Thekkikattan said...

இ.கொ,

//மீனவ அரசனுக்கு நாட்டுக் கோழி ரொம்ப அருமையான காம்போ இல்லையா... :-))//

அய்யோஓஓஓ

அது அரச மீனவன்யா. //

அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியாலா, எப்பொழுதுமே எனக்கு "அரச மீனவனுக்கும், மீனவ அரசனுக்கும்" கன்பூசன் ஆஃப் லெபனானவே இருந்துகிட்டு இருக்கு...

ஏன் அப்படி, இன்னும் அரசன் உள்ளே போகவில்லையே (அல்லது மகியோட சரக்கப்பத்தி இப்பத்தான் படிச்சுட்டு வந்தேன், அந்த எஃபெக்ட்டோ?) ;-)))

Thekkikattan said...

மகி,

//15 $ :(
10 aed :) dubai //

ஒரு aed எவ்வளவு இந்திய ரூபாய்க்கு? இங்க ஏன் கேக்றீங்க, காருக்கு பெட்ரோல் போட்டு, மத்த பில்லு எல்லாம் கட்டிட்டு பைய பாத்த, நாகேசு(?) பாடினாமாதிரி, கையில வாங்கினேன் பையல போடலே போன இடம் தெரியலேங்கிற மாதிரி தான் நெலைமை...

அங்கன எப்படி ஒட்டகத்தில துரத்திட்டு வந்து பிடிங்கிட்டு போயிடறாங்களா?

துளசி கோபால் said...

நானும் கோக் விஷயம் படிச்சேன்.

நிலத்தடி தண்ணீர் மட்டுமா கொள்ளை போகுது.இதுகளைக் குடிக்கறதாலே நம்ம
உடம்புலே இருக்கற கால்சியம்கூட கொஞ்சம் கொஞ்சமாப் போயிருதாமே.

நம்ம வீட்டுலே இதையெல்லாம் வாங்கறதே இல்லை. பழரசம்தான்.
அதுவும் நோ ஆடட் ஷுகர்.

நம்ம நாட்டுலே இந்த GEக்குத் தடா. மாடிஃபைட் சாமான்கள் கிடையாது. கண்டு பிடிச்சுட்டா
மொத்த cropஐயும் அழிச்சுடறதுதான். திமிங்கில வேட்டையை நிறுத்தணுமுன்னு 'க்ரீன் பீஸ்'
போராடுது. ஆனா சப்பானு? கேக்கமாட்டேங்குதே(-:

நமக்கு அப்புறம் வர்ற தலைமுறைக்கு நாம் ஏன் வச்சுட்டுப்போகணும்ன்ற மனப்பான்மை
வளர்ந்துக்கிட்டு இருக்கு, மறைமுகமா. அதுதான் ரொம்ப வருத்தம்.

மனுசனைப்போல அபாயகரமான உயிரினம் வேற இன்னொண்ணு இருக்கறமாதிரித் தெரியலை(-:

Thekkikattan said...

//ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னும் வேட்டை ஆயுதங்களின் தயாரிப்புக்கு முன்னும் ஆசியாவெங்கும் பறவிக்கிடந்த இந்தியப் புலிகள் இன்று சில நூறுகளில் அடங்கிவிட்டது சைபீரியப் புலிகளின் கதியும் அதுவே . //

மகி, அந்த கதை கேள்விபட்டு இருக்கீங்கள. சும்மாங்க கையில துப்பாக்கி இருக்கு அப்படிங்கிறதால யானை மேல ஏறி உட்கார்ந்து கிட்டு, ஜாலிக்காக யாரு எத்தனை புலி சுட்டோமின்னு ஃபோட்டோவிற்காக ப்போஸ் கொடுக்கிறதுக்காக, சனியன் பிடிச்சவனுங்க (கி.பி) 1800ல தொடர்ந்து ரெண்டு மூனு நாள்னு வேட்டைக்கு போயி புலி சுட்டு நாங்க சுட்ட புலின்னு ஒரு 10 டைகர்ஸ்-ஆ வரிசைய படுக்கப் போட்டு கால தூக்கி அது மேல வைச்சு ப்போஸ் கொடுத்த காலம் அதெல்லாம்.

இப்ப நீங்க சொன்ன மாதிரி சுருங்கி வந்துருச்சு. என்ன பண்ணறது. மூளையத்த பசங்க, பின்விளைவுகள பின்னாடிதான் தெரிஞ்சுக்கிறானுங்க.

Thekkikattan said...

துள்சிங்க,

//உடம்புலே இருக்கற கால்சியம்கூட கொஞ்சம் கொஞ்சமாப் போயிருதாமே.//

கால்சியம் விசயம் இங்க கூட படிச்சிருக்கலாமே http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_14.html...

//மாடிஃபைட் சாமான்கள் கிடையாது. கண்டு பிடிச்சுட்டா
மொத்த cropஐயும் அழிச்சுடறதுதான்.//

உண்மையில சூப்பர்ப்ங்க அந்த விசயம். இந்தியவில கொஞ்ச காலங்களுக்கு முன்பு வரைக்கும் 2000க்கு மேற்பட்ட நெல் வகைகள் இருந்துச்சாம் இப்ப எல்லாத்தையும் தூக்கிட்டு ஜஸ்ட் ஆல்டர் பண்ண ஒரு வகைதான் இருக்காம்.

எவ்வளவு மோசமான வேளை பாருங்க. இப்படியே போன காசுக்காக என்னவேனா பண்ணலாமா?

// ஆனா சப்பானு? கேக்கமாட்டேங்குதே(-: //

சப்பான் ஆளுங்களுக்கு தரையில எதுவும் மூவ் ஆகாக்கூடாதே புடிச்சி அப்படியோவோ இல்ல அவிச்சுசோ திண்ணுப்புடுவானுங்க, அரைவேக்காட்டு பசங்க...

நீங்க பக்கத்தில வேற இருக்கீங்க பாத்து உங்க அரசாங்கத்துகிட்ட சொல்லி கவனமா இருங்க... ஆட்களை கொஞ்ச நாள் அடிச்சி திங்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவானுங்க :-)))

சந்தோஷ் aka Santhosh said...

//முடிந்த அளவு இயற்கை பழரசங்களைத் தவிர மற்ற குளிர்பானங்கள் அருந்துவதில்லை என எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் சிறு துளி. //
அட நம்ம பாலிசி. இங்க கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளை எதிர்த்து பல வலை தளங்கள் உள்ளன இன்றைய செய்தித்தாளை பாத்திங்கன்னா மறுபடியும் கோக் மற்றும் பெப்சி பிரச்சனை உருவாகி உள்ளது தெரியும். ஒரு பக்கம் சுனாமி போர் அப்படின்னு மனுசன் செத்துட்டு இருக்கான் இன்னொரு பக்கம் இப்படி உலக அழிவு ரொம்ப தூரம் இல்லை அப்படின்னு நினைக்கிறேன்.

இங்க ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க அதைப்பத்தி.

Anonymous said...

அழகு
//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது.///

முன்னராக,,
அனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,!!

களத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் !!

இலவசக்கொத்தனார் said...

//முன்னராக,,
அனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,!!//

//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது. //

ஐயாமாருங்களா,

இப்படி எல்லாம் களப்பணின்னு இறங்கிட்டா தெரியத மக்கள்கிட்ட சொல்லி அவங்கள களத்துக்கு அனுப்பற வேலையை யாரு பாக்கறது?

அதுக்குத்தான் சொல்லறேன் நீங்க எல்லாம் களப்பணி செய்யுங்க, நான் பின்னூட்ட சேவை செய்யறேன்,

எப்பவுமே நாட்டுக்கு சேவை செய்ய ஒரு நாகரீக கோமாளி வேணுமய்யா....

Thekkikattan said...

இலவசம்,

//அதுக்குத்தான் சொல்லறேன் நீங்க எல்லாம் களப்பணி செய்யுங்க, நான் பின்னூட்ட சேவை செய்யறேன்,//

அது என்ன இப்படி சொல்லிபுட்டீக, இந்த ஃபீல்ட பத்தி வுமக்கு என்ன தெரியும், சும்மா அலுச்சாட்டியம் புடிக்காம ஒழுங்க சொல்றத கேட்டு நடந்துகோங்க.

நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன், நீங்க போங்க முதல்ல...

இலவசக்கொத்தனார் said...

//நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன், நீங்க போங்க முதல்ல... //

பாத்துக்கறாராமில்ல. நான் வரலைன்ன தமிழ்மண முகப்பில உம்ம பதிவு வருமாய்யா? வந்துட்டாரு போங்க போங்கன்னு. என்னமோ திருப்பதி கோயில்ல ஜருகண்டி சொல்லற மாதிரி.

சீனு said...

எல்லோரும் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதோடு மட்டும் நிற்காமல், ஒரு இயக்கமாக அக்காமாலா, கப்ஸி ஆகியவைகளுக்கு எதிராக பிரசாரம் செய்யவேண்டும். மக்கள் வாங்குவது நிறுத்தி விட்டால், பிரச்சினை தானாக தீரும் அல்லவா?

Orani said...

அன்பு அனானி,

//முன்னராக,, அனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,!!

களத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் !! //

ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள்.

முதலில் அதற்கான அவசியத்தை உணர்தல் மிகவும் அவசியம்... அதனை எல்லோரிடத்திலும் எடுத்துக் கொண்டு சேர்க்க வேண்டும. குழந்தைகள் நல்ல தொடக்கம், என்பது என் கருத்து.

மகேந்திரன்.பெ said...

மறுமொழிகளில் வரவில்லை தெகா என்னாச்சோ தெரியலியே வரவேற்புக்கு மிக்க நன்றி

Thekkikattan said...

அன்பு அனானி,

//முன்னராக,, அனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,!!

களத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் !! //

ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள்.

முதலில் அதற்கான அவசியத்தை உணர்தல் மிகவும் அவசியம்... அதனை எல்லோரிடத்திலும் எடுத்துக் கொண்டு சேர்க்க வேண்டும. குழந்தைகள் நல்ல தொடக்கம், என்பது என் கருத்து.

அசுரன் said...

இயற்கை நேசி,

எனது கட்டுரைக்கு தாங்கள் இட்ட பின்னூட்டத்தை தங்களது தளத்தில் இட்டு இந்த மோசடி, சுரண்டல், இந்தியாவை மீண்டும் அடிமையாக்கும் முயற்சியை மேலும் அதிகமான ஆட்கள் அறிந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்,

எனது தளத்தில் தங்களுக்கு நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு மீண்டும் இடுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நன்றி,
அசுரன்.
*************

//bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபமே.//

//பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்று மீன் மரபணு-மாற்று தொழிலியுக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை சொறுகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி... //

இயற்கை நேசி,

தங்களது உயிரியல் அறிவு இந்த மறுகாலனியாதிக்கச் சதியை வீச்சாக அம்பலப்படுத்த பேருதவியாக இருக்கும்.

வாய்ப்பிருந்தால் விதை நெல் பற்றியும், கடல் வளங்களின் அழிவு பற்றியும் கட்டுரை எழுதலாமே...(எனக்கு தெரிந்து மிகப் பெரிய அளவில் அழித்தொழிக்கப்படுவது கடல் வளங்கள்தான். இதைப் பற்றி பரவலான விழிப்புணர்ச்சி இன்னும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் கடல் வளங்களின் அழிவுதான் மனித குலத்திற்க்கு ஆகக் கேடான அழிவாக இருக்கும்).

அல்லது தரவுகள் கொடுத்தால் இருவரும் இணைந்து எழுதலாம்.

//இது ஒரு இருட்டடிப்பு உண்மை, நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!//

கவலைப்பட்டு எதாவது நடந்துவிடுமா? மாறாக நமது குழந்தைகளின் நலனுக்காகவாவது வாய்ப்புள்ள இடங்களில் வாய்ப்புள்ள தளங்களில் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க திட்டத்திற்க்கு எதிராக சகலவிதமான வழிகளிலும் போராட வேண்டும்.

நன்றி,
அசுரன்.

Thekkikattan said...

//ஒரு பக்கம் சுனாமி போர் அப்படின்னு மனுசன் செத்துட்டு இருக்கான் இன்னொரு பக்கம் இப்படி உலக அழிவு ரொம்ப தூரம் இல்லை அப்படின்னு நினைக்கிறேன்.//

எவ்வளவுக்கு எவ்வளவு நம்மோட நடவடிக்கை இங்க வேகம் பிடிக்குதோ அவ்வளவு அவ்வளவுக்கு இயற்கை அதோட அதிருப்தியை பல முகம் கொண்டு வெளியிட்டுக் கொண்டுதான் இருக்குது.

ஒண்ணும் வேண்டாம் இங்க அடிக்கிற வெயில பாத்தீங்களா 100 லிருந்து 105 டிகிரி. கலிஃபோர்னியாவில heat strokeஆம்.

உங்க வீட்டுக்கு வந்தேனே... சொல்லிப்புட்டும் வந்தேன்...

மனதின் ஓசை said...

நம்மை சுற்றி நடக்கும் எல்லா தவறுகளையும் கண்ணை திறந்து நன்றாக பார்த்துக் கொண்டே கவலைப்படாமல் இருக்கக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு உள்ளோம்..இது மாறும்வரை இது போன்றவை நிகழத்தான் செய்யும்.

Thekkikattan said...

//நம்மை சுற்றி நடக்கும் எல்லா தவறுகளையும் கண்ணை திறந்து நன்றாக பார்த்துக் கொண்டே கவலைப்படாமல் இருக்கக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு உள்ளோம்..இது மாறும்வரை இது போன்றவை நிகழத்தான் செய்யும்.//

சரியாக சொன்னீர்கள் 'மனதின் ஓசை' நம்மிடையே நிறைய புத்திசாலிகளும் உள்ளார்கள். பச்சை பணமே, பின்னாலில் எல்லாமும் கையை விட்டு போனதுற்கு பிறகு திரும்பவும் கொண்டு வர முடியுமென்று, நியாயம் பேசி, கிண்டலும் அடித்து வருவதற்கு.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாமே அந்த நினைப்புத்தான் இங்கு வருகிறது, இது போன்ற மனிதர்களை சந்திக்கும் பொழுதும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் பொழுதும்.

குறுகிய கால பயன்பாட்டு பார்வை இருக்கும் வரைக்கும் இது போன்ற இயற்கை கற்பழிப்பு, நமக்கு வலிப்பது கிடையாது, ஏனென்றால் இயற்கைத்தாய் வாய் விட்டு புலம்பி அழுவது கிடையாது. அவள் வேறு மாதிரியாக விஷத்தை நம் போன்ற ஜந்துக்களின் உடம்புக்குள் சொலுத்தி மெல்லச் சாவடிப்பது ஒன்றெ அவளுக்கு கிடைத்த தீர்வு.

அல்லது வருபட்டு, வதை பட்டு, குண்டடி பட்டு மற்ற நாடுகளுடன் எப்படி இயற்கை வழங்களை பெருவது என்பதற்காக போட்டி போட்டு சாக வேண்டியதுதான். பஞ்சத்துக்கு பிறந்த பேராசை பிடித்த காட்டு நாய்களை விட மேசமான மனிதச் பிறவிகளுடன் இந்த பூமியை பகிர்ந்து இருந்து சாக வேண்டியதுதான்.

Thekkikattan said...

ம.ஓசை, மேலும் ஒரு உண்மை...

அது போலவே சுய அறிவை விடுத்து, அரிதுப் பொரும்பாண்மையினர் ஊதுகிறார்களே அந்த சங்கை அதனால் நானும் ஊதுகிறேன், என்று மெத்தப் படித்த குருட்டு ஆசாமிகளும் பகுத்தறிவற்ற ஊன ஜன்மங்களே...

மனதின் ஓசை said...

தேகா.. ரொம்பவே சூடாகி விட்டீர்கள் என நினைக்கிறேன்..சிறிது காட்டம் குறைக்கலாமே...

//பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாமே அந்த நினைப்புத்தான் இங்கு வருகிறது,//

இதில் கொஞ்ஜம் மாறுபடுகிறேன்...இது மட்டுமே காரணம் அல்ல என நினைக்கிறேன்..இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விட்டு விட்டர்கள் என்றே தோன்றுகிறது..நேர்மையாக வாழவே முடியாத ஒரு சமூகத்தை உருவாக்குவதில் பெரிதளவு வெற்றி பெற்று விட்டர்கள் என்றே தோன்றுகிறது...அதன் பாதிப்பே இப்பொழுதைய நம் மனநிலை... இயலாமை கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம்மை இப்படி மாறி விட்டது என நான் நம்புகிறேன்..

மங்கை said...

தரமான, சிந்தனையை தூண்டும், விளிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை தரும், அசுரன், தெகா மற்றும் இயற்கை நேசி ஆகியவர்களுக்கு வாழ்த்துக்கள் ..
""Coca-colo-nialism "" தில் இருந்து நம்மை நாமே தான் விடுதலை செய்து கொள்ள வேண்டும்.. மக்கள் சிந்திக்க வேண்டும்..இந்த விளிப்புணர்வு பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும்..

அசுரன் said...

இயற்கை நேசி,

//அப்பவும் கடன் தானா ?:) //

புரியாலயா, அதிலிருந்த உள்குத்து. அதுதான் சுரன்டிப் புட்டாங்களே இருக்கிற பணத்தையெல்லாம்... விதை வருஷம் வருஷம் வாங்கி தான் விவசாயம் பண்ணனும், அதானலே உணவு தன்னிரைவு போயச்சு, நிலத்தடி நீர் எடுக்க முடியாது, ஏன்னா, தண்ணீர் பற்றாக் குறையால், நமது அரசங்கம் நீர் வலத்தை தனியார் மயமாக்கி விடும்.

இப்பிடி எல்லாத்துக்கும் பணம் எடுத்துக் கொண்டே இருந்தா... நீங்களும் நல்ல ஒரு கலர் பிரிண்டரா வாங்கி சும்மா இருக்கிற நேரத்தில நோட்டு பிரின்ட் அடிக்க வேண்டியதுதான்...

ஏன்னா அடுத்த குழந்தையை IQ upgrade பண்ணனுமில்ல ;-))) //

நெத்தியடி....எல்லாருக்கும் உறைக்கும் விதமாக சொல்லியுள்ளீர்கள்

அசுரன் said...

அழகு,

//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது. //

சரியாக சொல்கிறேர்கள்......

எல்லாம் சரி என்று சொல்பவர்களில் எத்தனை பேர் தங்களது சுகங்களை தங்களது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக தியாகம் செய்துவிட்டு போராட, களப்பணீ செய்ய முன்வருகிறார்கள்?

நன்றி,
அசுரன்

அசுரன் said...

//சரியாக சொன்னீர்கள் 'மனதின் ஓசை' நம்மிடையே நிறைய புத்திசாலிகளும் உள்ளார்கள். பச்சை பணமே, பின்னாலில் எல்லாமும் கையை விட்டு போனதுற்கு பிறகு திரும்பவும் கொண்டு வர முடியுமென்று, நியாயம் பேசி, கிண்டலும் அடித்து வருவதற்கு.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாமே அந்த நினைப்புத்தான் இங்கு வருகிறது, இது போன்ற மனிதர்களை சந்திக்கும் பொழுதும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் பொழுதும்.

குறுகிய கால பயன்பாட்டு பார்வை இருக்கும் வரைக்கும் இது போன்ற இயற்கை கற்பழிப்பு, நமக்கு வலிப்பது கிடையாது, ஏனென்றால் இயற்கைத்தாய் வாய் விட்டு புலம்பி அழுவது கிடையாது. அவள் வேறு மாதிரியாக விஷத்தை நம் போன்ற ஜந்துக்களின் உடம்புக்குள் சொலுத்தி மெல்லச் சாவடிப்பது ஒன்றெ அவளுக்கு கிடைத்த தீர்வு.

அல்லது வருபட்டு, வதை பட்டு, குண்டடி பட்டு மற்ற நாடுகளுடன் எப்படி இயற்கை வழங்களை பெருவது என்பதற்காக போட்டி போட்டு சாக வேண்டியதுதான். பஞ்சத்துக்கு பிறந்த பேராசை பிடித்த காட்டு நாய்களை விட மேசமான மனிதச் பிறவிகளுடன் இந்த பூமியை பகிர்ந்து இருந்து சாக வேண்டியதுதான். //

இன்னுமொரு சரியான பார்வை.....
வாழ்த்துக்கள் இயற்கை நேசி


இதைத்தான் நான் கம்யுனிசமா அல்லது சாவா என்றூ கேட்கிறேன்

இந்த உலகம் தனது இயல்பான வளர்ச்சிப் போக்கில் சென்றால் அது கம்யுனிச சமூகத்தில்தான் சென்று அடையும்.

மாறாக ஏகாதிபத்தியங்கள் இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி நடைபெறவிடாமல் தடை செய்கிறார்கள். இது முட்டை அழுகி கூமுட்டை ஆகும் செயலை நோக்கி செல்லுவது ஆகும்.

ஆக ஒரு நல்ல பொறுப்புள்ள பகுத்தறிவுள்ள மனிதனின் கடமை இந்த சமுதாயம் தனது அடுத்த சமுதாயமான கம்யுனிச சமுதாயத்தை பெற்றெடுக்க உதவி செய்வது. அதாவது ஏகாதிபத்தியங்களை அடித்து விரட்டுவது. அதாவது முட்டை பொறிந்து கோழி வெளியே வர உதவுவது.

நன்றி,
அசுரன்.

அசுரன் said...

//அழகு
//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது.///

முன்னராக,,
அனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,!!

களத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் !! //


மேலே உள்ள அனானியின் கூற்றை
நானும் வலிமொழிகிறேன்.

நன்றி,
அசுரன்

அசுரன் said...

//அழகு
//வலைப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டுக் களத்தில் இறங்க எல்லாரும் சித்தமாக வேண்டிய தருணமிது.///

முன்னராக,,
அனைத்து நண்பர்களின் இத்தகைய பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்,!!

களத்தில் இறங்கி முண்னனியாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும், நாமும் மாற வேண்டும் !! //


மேலே உள்ள அனானியின் கூற்றை
நானும் வலிமொழிகிறேன்.

நன்றி,
அசுரன்

அசுரன் said...

//அது போலவே சுய அறிவை விடுத்து, அரிதுப் பொரும்பாண்மையினர் ஊதுகிறார்களே அந்த சங்கை அதனால் நானும் ஊதுகிறேன், என்று மெத்தப் படித்த குருட்டு ஆசாமிகளும் பகுத்தறிவற்ற ஊன ஜன்மங்களே... //

சாட்டையடி.....

தங்கள மண்டைக்குப் பின்னால் ஒளிவட்டம் கட்டிக் கொண்டு கூட்டத்தோடு கோவிந்தாவை வித்தியாசமான ரிதத்தில் பொடுவதாலேயே அறிவுஜீவிகளாக கருதப்படும் சிலரின் முகத்திரை, அவல முகத்தை இப்படி பொசுக்கென்று கழட்டி விட்டீர்கள்.

இதுவரையான தங்களது பின்னூட்டங்களிலேயே இந்த பதிவுக்கான பின்னூட்டங்கள் அதிக விமர்சன பூர்வமான, நேரடியான கருத்துக்களுடன் உள்ளன.....

வாழ்த்துக்கள்

Sivabalan said...

தெகா

//வாய்ப்பிருந்தால் விதை நெல் பற்றியும், கடல் வளங்களின் அழிவு பற்றியும் கட்டுரை எழுதலாமே...//

உங்கள் எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ.. அப்பொழுது இதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்க...

பொன்ஸ்~~Poorna said...

//ஆனா, வந்து சொல்லிப்புட்டாய்ங்க திருப்பி தண்ணிகுள்ள விட்டு புடணும் அடுத்த ஆட்கள் எல்லாம் விளையாடணுமில்லையா அப்படின்னு //
தெகா, யூ டூ?!!! கொடுமை!!! உயிருங்க அது.. விளையாட்டுப் பொருளா!!!


நானும் கோக் பெப்ஸி குடிக்கிறதில்லை. எங்க வீட்லயும் யாரும் குடிப்பதில்லை. அத்துடன் எனக்குத் தெரிந்த நண்பர்கள் குடித்தாலும் சும்மா விடுவதில்லை. அட்வைஸ் பண்ணியே தொல்லை பொறுக்க முடியாமல் அவர்கள் ஒன்று நிறுத்தி விடுவார்கள் அல்லது குறைத்து விடுவார்கள்.. அவ்வளவு தான்.. :)

Thekkikattan said...

//ஒரு இயக்கமாக அக்காமாலா, கப்ஸி ஆகியவைகளுக்கு எதிராக பிரசாரம் செய்யவேண்டும். மக்கள் வாங்குவது நிறுத்தி விட்டால், பிரச்சினை தானாக தீரும் அல்லவா?//

கண்மூடித்தனமான் குறுகியகால பயன்களை நம்பி இயற்கையை துச்சமாக கருதி எள்ளி நகையடுதல் இன்று அதுவும் ஒரு ஃபேஷன் ஆகிப்போனது சீனு.

சிறு துளிதான் பெருவெள்ளம், விழிப்புணர்வு ஒன்றே இதற்கெலாம் தீர்வு. பணம் படைத்தவன் எல்லாம் நன்றாக தூங்குகிறானாம், ஏ.சி அறையில் 24/7 வெளியே தலைகாட்டமால். அப்படி நாமும் ஆகும் காலம் எப்பொழுது? :(

Thekkikattan said...

அசுரா,

வேண்டுமளவிற்கு இங்கு உள்ள வளத்தை (பினாத்தல்களை) எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி. பிறகு ஒவ்வொன்றுக்கு பதிலிடுகிறேன்...

Thekkikattan said...

அசுரா,

//வாய்ப்பிருந்தால் விதை நெல் பற்றியும், கடல் வளங்களின் அழிவு பற்றியும் கட்டுரை எழுதலாமே...(எனக்கு தெரிந்து மிகப் பெரிய அளவில் அழித்தொழிக்கப்படுவது கடல் வளங்கள்தான். இதைப் பற்றி பரவலான விழிப்புணர்ச்சி இன்னும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் கடல் வளங்களின் அழிவுதான் மனித குலத்திற்க்கு ஆகக் கேடான அழிவாக இருக்கும்). //

மிக விரைவில் போட்டு விடுகிறென் அசுரா. நிறைய பேசுவதற்கு இருக்கிறது. அதே தருனத்தில் இங்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நான் எந்த பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராளி கிடையாது.

எனக்கு வேண்டியதெல்லாம் Sustainable Utilization strategy என்ற கோட்பாட்டை இயற்கையை மிகவும் சேதப்படுத்தி விடாமல் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதே.

Thekkikattan said...

மங்கை,

முதல் வரவு மென்மேலுன் நல்வரவாக அமைய வாழ்த்துக்கள்!

//தரமான, சிந்தனையை தூண்டும், விளிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை தரும், அசுரன், தெகா மற்றும் இயற்கை நேசி ஆகியவர்களுக்கு வாழ்த்துக்கள் ..//

இந்த தெக்காவும் இ. நேசியும் ஒரு பசங்கதான் என்பதனை உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்... :-)

Thekkikattan said...

மங்கை,

//""Coca-colo-nialism "" தில் இருந்து நம்மை நாமே தான் விடுதலை செய்து கொள்ள வேண்டும்.. மக்கள் சிந்திக்க வேண்டும்..இந்த விளிப்புணர்வு பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும்..//

அதுதான் எனது ஆவாவும்!! இது பெரிய அளவில் நடைபெற்று எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, நமது எஞ்சிய ஆற்றிலும், குளங்களிலும் நீச்சல் அடிக்க வேண்டும். இதுவும் என்னுடைய ஆவாவே!!

நடக்கும் அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். அந்த அம்மி நகர்வது எல்லாம் துலைஞ்சதற்கு பிறகு வேஸ்ட்...

Thekkikattan said...

மனதின் ஓசை,

//தேகா.. ரொம்பவே சூடாகி விட்டீர்கள் என நினைக்கிறேன்..சிறிது காட்டம் குறைக்கலாமே...//

என் எழுத்தில் "சூடு" இருந்ததை நன்கு கண்டுபிடித்திருக்கிறீர்கள். அவ்வாறு நான் சூடாக இருந்தற்கும் ஒரு காரணமுண்டு. பொருப்பற்று நாளைக்கு தானே வரப்போகிறது, இன்றைக்கென்ன என்று கண்ணை மூடிக்கொண்டு வியாக்கியானம் போசும் பொழுது, எனது வயதிற்கே ஊரிய உணர்வு வந்து போவதை தடுக்க முடியவில்லை.

Thekkikattan said...

//உங்கள் எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ.. அப்பொழுது இதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்க...//

நடக்கும் உண்மைகளை வெளிக்கெணர்வதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை. முகத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் இருட்டடிப்பு உண்மைகளை போட்டுடைத்து எல்லோரும் தெரிந்து கொள்வோம், எதனை நோக்கிதான் இந்த மனித இயந்திரம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதனை எல்லோரும் அறிந்து கொள்ளும் நல் நோக்குடன்.

Thekkikattan said...

பொன்ஸூ,

//நானும் கோக் பெப்ஸி குடிக்கிறதில்லை. எங்க வீட்லயும் யாரும் குடிப்பதில்லை. அத்துடன் எனக்குத் தெரிந்த நண்பர்கள் குடித்தாலும் சும்மா விடுவதில்லை. //

தெரியுமே! அம்புட்டுத்தேன்... ஏதோ நம்மாள முடிஞ்சது... நீங்க எப்பவோ பாஸூங்க... ;-)

//அட்வைஸ் பண்ணியே தொல்லை பொறுக்க முடியாமல் அவர்கள் ஒன்று நிறுத்தி விடுவார்கள் அல்லது குறைத்து விடுவார்கள்.. அவ்வளவு தான்.. :) //

நல்லவேளை நான் உங்க நண்பர்கள் சர்கில்ல பக்கத்துல இல்ல, தப்பிச்சேன்... :-))

Thekkikattan said...

இ.கொ,

அப்புறம் இன்னொரு முக்கியமான விசயமய்யா, இந்த சோட குடிக்கிறது ஆரம்பித்தில பார்த்தோம்ன நம்ம ஆட்கள், ஏன் நான் கூட அந்த கார்பனேட் பண்ணதினாலே ஒரு மாதிரிய சுரு சுருன்னு இருக்குமின்னுட்டு குடிக்காம. பெரும்பாலும் பாத்த அந்த காலங்கள்லெ பாவண்டோன்னு ஒரு கலரு குடிக்கிறது.

நல்ல சுமுத்தா உள்ளே இறங்குமின்னு, ஆனா எல்லாமே பழக பழக சரியா வந்துடுமில்லையா... அப்புறம் கொஞ்ச கொஞ்சம இந்த கார்பனேட் ட்ரிங்ஸ் குடிக்க ஆரம்பிச்ச பழகிப்பூடும்.

இதில இன்னொரு திடிக்கிடும் உண்மையென்னன்ன இந்த "பாஸ்ட் fபூட்" இந்த மாதிரி குளிர் பானங்கள்லெ எல்லாம் ஒரு வித மான நாக்கை அடிமை படுத்தி திரும்ப திரும்ப நினைச்சலே நாக்குல ஒரு மாதிரி நம நமப்பு வார மாதிரி அடிக்டிவ் ஏஜெண்ட் ஏதோ மிக்ஸ் பண்றாங்களாமா...

காசேதான் கடவுளடா....

Thekkikattan said...

இ.கொ,

அப்புறம் இன்னொரு முக்கியமான விசயமய்யா, இந்த சோட குடிக்கிறது ஆரம்பித்தில பார்த்தோம்ன நம்ம ஆட்கள், ஏன் நான் கூட அந்த கார்பனேட் பண்ணதினாலே ஒரு மாதிரிய சுரு சுருன்னு இருக்குமின்னுட்டு குடிக்காம. பெரும்பாலும் பாத்த அந்த காலங்கள்லெ பாவண்டோன்னு ஒரு கலரு குடிக்கிறது.

நல்ல சுமுத்தா உள்ளே இறங்குமின்னு, ஆனா எல்லாமே பழக பழக சரியா வந்துடுமில்லையா... அப்புறம் கொஞ்ச கொஞ்சம இந்த கார்பனேட் ட்ரிங்ஸ் குடிக்க ஆரம்பிச்ச பழகிப்பூடும்.

இதில இன்னொரு திடிக்கிடும் உண்மையென்னன்ன இந்த "பாஸ்ட் fபூட்" இந்த மாதிரி குளிர் பானங்கள்லெ எல்லாம் ஒரு வித மான நாக்கை அடிமை படுத்தி திரும்ப திரும்ப நினைச்சலே நாக்குல ஒரு மாதிரி நம நமப்பு வார மாதிரி அடிக்டிவ் ஏஜெண்ட் ஏதோ மிக்ஸ் பண்றாங்களாமா...

காசேதான் கடவுளடா....

மகேந்திரன்.பெ said...

ஹி .....ஹி... நமக்கும் இந்த சோடா குடிச்சா அப்பிடித்தான் வாத்யாரே இருக்கு ஆனா அது சோடாவுல கலக்குற சைட்டிஸ்ஸாலன்னு இத்தன நாளா நெனைச்சுட்டேன் :))இந்த கோக் விவகாரம் கொஞ்சம் கோக்கு மாக்காத்தான் இருக்கு

Thekkikattan said...

பொன்ஸூ,

//தெகா, யூ டூ?!!! கொடுமை!!! உயிருங்க அது.. விளையாட்டுப் பொருளா!!! //

இதனை பொருத்து நிறைய பேசளாங்க, இப்ப ஒரு மான் வேட்டை, புலி, யானை வேட்டைகளுக்கும் இது போன்ற மீன், கோழி போன்ற அதிகமாக இனப்பெருக்கம் செய்ய வல்ல சிறு விலங்குகளை கொன்று sustainable வழியில் இயற்கையில் நாமும் (ஒரு விலங்குதான்) ஒரு அங்கம் என்பதில் மகிழ்வு கொள்ளலாம்.

இருப்பினும் நீங்கள் "கொல்லாமை" என்ற Metaphysics ரீதியில் இதனை அணுகுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த மீன் பிடிப்பது, கோழி சாப்பிடுவது இது எல்லாம் நான் சிறுவனாக இருக்கும் பொழுது எனது பெரியவர்கள் என்னிடத்தில் மதம் வளர்த்தது போல இவைகளை சாப்பிடுவதில் தவறில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக என் மூளையில் பதித்து வைத்ததால் "என் வழி எனக்கு, உங்கள் வழி உங்களுக்கு என்ற" கோட் பாட்டு புரிதலின்படி இரவு நேரங்களில் தூங்க முடிகிறது.

இருப்பினும் நானும் எனது அன்பு மகனும் ஆற்றின் கரையில் அமர்ந்து மீன்களும் தனது (சிறு மீன்) பிள்ளைகளை விளையாட, பள்ளிக்கு அனுப்பி விட்டு கவலைப் பட்டுக் கொண்டிருப்பதாக வாழ்வியல் பேசி ரசித்து சிரித்தோம்... ;-))

Thekkikattan said...

மனதின் ஓசை,

//இது மட்டுமே காரணம் அல்ல என நினைக்கிறேன்..இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விட்டு விட்டர்கள் என்றே தோன்றுகிறது..நேர்மையாக வாழவே முடியாத ஒரு சமூகத்தை உருவாக்குவதில் பெரிதளவு வெற்றி பெற்று விட்டர்கள் என்றே தோன்றுகிறது...அதன் பாதிப்பே இப்பொழுதைய நம் மனநிலை... இயலாமை கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம்மை இப்படி மாறி விட்டது என நான் நம்புகிறேன்...//

அங்கிருந்து தானே வில் புறப்படுகிறது பிறகு மெது மெதுவாக மெல்லச் சாகடிக்கும் விதமாக சமூகத்தினுடே புகுந்து நச்சை விதைக்க வைக்கும் அத்துனை விசயகங்களும் மேலிடத்தில் உள்ள பொருப்பற்ற, தனிப்பட்ட ஒரு குழுவின் சுயநலத்திற்கென எடுக்கப் பட்ட முடிவுகள்தானே அன்றி வேறென்ன?

அதனால் நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே... ஆனால் தனிப்பட்ட ஒரு நபர் விழிப்புணர்வுற்று ஏன் நான் இதனை பின் தொடர வேண்டும் என்ற கேள்வி நிலைக்கு வந்து வேண்டாதை புறம் தள்ள ஆரம்பித்தால், இது போன்ற பிரட்சினைகளுக்கு தீர்வு நம் கையிலும் தான் இருக்கிறது.

அசுரன் said...

அனைவரும் ஒரு விசயத்தை பார்க்க தவறுகிறீர்கள்,

இது கோக் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ அல்லது பூச்சிக் கொல்லி பற்றிய பிரச்சனையோ அல்ல.

இது நமது நிலத்தடி நீரை, நீலத்தங்கத்தை தனது சந்தைத் தேவைக்காக ஏகாதிபத்தியங்கள் கபளீகரம் செய்யும் 'GATS' ஒப்பந்தத்தின்படியான, நாட்டை காலனியாக்கும் ஒரு மறுகாலனியாதிக்கத் திட்டம் பற்றிய பிரச்சனை.

மக்கள் தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆறு , குளங்களை தனியார் மயமாக்கி அவன் எங்கு லாபம் கிடைக்கிறோதோ அங்கு விற்பது பற்றிய பிரச்சனை.

யார் உரிமை கொண்டாடுவது என்பது பற்றிய பிரச்சனை.

தண்ணீர் தனியார் மயம் பற்றிய பிரச்சனை.

தண்ணீர் மற்றும் இயற்க்கை வளங்களான -- சமூகத்தின் சொத்துக்களை யாரோ ஒரு சிலரின் லாப வெறிக்காக சமூகத்துக்கு எந்தப் பயனுமின்றி தனியார்மயமாக்குவது பற்றிய பிரச்சனை.

நாடு அடிமையாவது பற்றிய பிரச்சனை.

பாடுபட்டு பெற்ற அரைகுறை சுதந்திரம்கூட பறிபோவது பற்றிய பிரச்சனை.

இந்த அம்சத்தை யாரும் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.

கோக் லிட்டர் 1.2 பைசாவுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கிறது தெரியுமா?

எனது ப்திவையும் அதில் நான் கொடுத்துள்ள சுட்டிகளில் உள்ள விசயங்களையும் நேரம் செல்வழித்து படித்துப் பார்த்தால் நாம் எவ்வளவு பெரிய ஆபாயத்தை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியும்.

http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.html

Related Posts with Thumbnails