போராட்டத்தை வாசிப்பனுபவத்தின் மூலமாகப் பெற முடியுமா? முடியும் என்கிறது இரு வேறு வித்தியாசமான தளங்களைக் கொண்ட புத்தகங்கள்.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Saturday, July 27, 2019
Dragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்
போராட்டத்தை வாசிப்பனுபவத்தின் மூலமாகப் பெற முடியுமா? முடியும் என்கிறது இரு வேறு வித்தியாசமான தளங்களைக் கொண்ட புத்தகங்கள்.
Posted by Thekkikattan|தெகா at 4:43 PM 0 comments
Labels: அறிவியலும் நானும், எழுத்தாளர்கள், புத்தகங்கள், மொக்கை, வாசிப்பாளன்
Tuesday, April 09, 2019
ரஜினிக்கு ஒரு கடிதம்: நதிநீர் இணைப்பு
அளவிற்கு மீறிய புகழ், பணம், அதிகாரம் இது எல்லாமே ஒரு நிலையில் காலம் ஒருவருக்கு வைத்த செக்மேட் அல்லது சாபம் எனக் கொள்ளலாம்.
இவைகள் அனைத்தும் கிடைத்தும் ஒருவருக்கு தன்னுடைய லிமிட், டிலிமிட் அறிந்து கொள்ளத் தேவையான தனக்கென நேரம் செலவழிப்பு, நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தேவையான மன நிலை, தன்னுடைய நிலைக்கென தன்னிடம் பழகும் மனிதர்களைத் தாண்டிய நட்பு பேணும் மனநிலை அமைவது என்பது சிம்ம சொப்பனமே!
உண்மையான "டவுன் டு எர்த் பர்சன்" என்பது அதுவாகத்தான் இருக்க முடியும். எளிமை, பணிவு, பக்குவம் என்பதும் அந்த உலகத்தின் கூரையில் தான் இருக்கிறோம் என்றாலும், இடம், பொருள் தன்னுடைய அறிவிற்கு இதைச் சொல்வது பொருத்தமானதா என்று அறிந்து பேசுவதில் இருக்கிறது.
இந்த நதிநீர் இணைப்பை பற்றி இந்த சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தன்னுடைய மட்டித் தனமான வாதத்தை வைக்கிறாரே, இவர் இந்த பூமியுனுடைய இரண்டு பில்லியன் ஆண்டுகளின் படிமலர்ச்சிப் பற்றி ஏதாவது வாசித்திருப்பாரா?
கடந்த 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் எது போன்ற கரடு முரடான வளர்ச்சிகளை இந்த பூமி முகம் கொடுத்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தி இருப்பாரா? ஏன் அவ்வளவு தூரம் போகிறோம் பெர்மியன், ட்ரையாசிக், ஜுராசிக், க்ரேட்டேசியஸ் என்ற பூகோள கால க்ரமத்தில் என்னவெல்லாம் இந்த பூமி மேலோடு மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று அவருக்கு யாராது சொல்லி இருப்பார்களா?300 மில்லியன் ஆண்டுகள் வரைக்குமே கண்டங்களே இல்லாமல் ஒன்றாக பாஞ்சியா (Pangea) என்ற முழுப் தரைப்பகுதியாகத்தான் இந்த பூமி இருந்திருக்கிறது. ஒரே கடல்தான்.
டைனோசார்கள் கோலுச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் நிலப்பரப்பு பிய்த்துக் கொண்டு தனித்தனியாக கண்டங்களாக நகர்ந்திருக்கிறது. அப்பொழுது ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த நதிகள், ஆறுகளுக்கெல்லாம் என்ன வாகி இருக்கும்?
இருந்த பெரிய ஆறுகள் காணாமல் போயிருக்கும் அத்துடன் அதனையொட்டி வாழ்ந்த உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துப் பட்டிருக்கும். பூமியின் மோலோடு மாற்றி அமைக்கப்பட்டதால் புதிய ஆறுகள் அதனதன் வழியை கண்டுபிடித்து உருவாகி இருக்கும். அதனையொட்டிய நிலப்பரப்பில் அதனையொட்டிய சுற்றுச்சுழலுக்கு தகுந்த தகவமைவுகளுடன் உயிரினங்கள் உருவாகி படிமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்.
இவை எதுவுமே ஒரே இரவில் அடைந்த மாற்றங்கள் கிடையாது. கோடிக்கனக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த பின்னணியில் வைத்து நம்மை பார்த்தால், நாம் யார் இந்த பூகோளத்தின் வரைபடத்தை திருத்தி எழுதிக் கொள்ள? அப்படி நதிகளின் வழியை திருத்தி அமைக்கும் பொழுது எது போன்ற நீண்ட கால மாற்றங்களை இந்த சுற்றுப் புறச் சூழல் முகம் கொள்ளும் என்று சிந்தித்தது உண்டா, மிஸ்டர். சூப்பர் ஸ்டார்?
அன்று தழைத்து, கொழித்து வாழ்ந்து வந்த டைனோசார்கள் இன்று எங்கே? எதனால் அவைகள் அழிந்து பட்டிருக்கக் கூடும்? நீரும், உணவும் தானே அடிப்படை ஆதாரம் அனைத்து உயிரினத்திற்கும் ஆறுகள் தன்னியல்பில் தனது பாதை கண்டு கடலில் கலப்பது தானே காலச் சக்கரம் அதற்கு வழங்கிய இயல்பு. இதில் உங்க ஒரு கோடி ரூபாய் கொண்டு வேண்டுமானால் இருக்கும் குளம், குட்டை, ஆறுகளை தூர் வார கொடை அளியுங்கள்.
போகாத ஊருக்கு வழி காட்டாதிங்க. செலவு மிச்சம்னு.
யாரோ சொல்கிறார்கள் என்பதால் லாஜிக் இல்லாத தன்னுடைய அறிவிற்கு எட்டாத விசயத்தை எல்லாம் உளரி வைக்கக் கூடாது. தானே தேடிப் படித்து, சிந்தித்து பெரும் பெரும் பிரச்சினைகள் பொருத்து வாயை விட வேண்டும்.
உங்களுக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்கிறேன். ஆராய்ச்சிக்கான புத்தகமே ஆனாலும் ஒரு சினிமாவிற்கு உண்டான பிரமாண்டம் இருக்கிறது. உங்களது வாழ் நாளுக்குள் வாசியுங்கள். பிறகு நதிநீர் இணைப்பு பற்றி பேச கொஞ்சம் யோசிப்பீர்கள்.
The Rise and Fall of the Dinosaurs: A New History of a Lost World by Stephen L. Brusatte
Posted by Thekkikattan|தெகா at 11:35 AM 0 comments
Friday, March 15, 2019
வெறுப்பின் எச்சமே அழிவு: Hatred Is Self-destruction
Posted by Thekkikattan|தெகா at 10:40 PM 0 comments
Labels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை, வன்முறை
Saturday, March 02, 2019
நரி மனிதர்கள் ஒரு சிறுகதையின் ஊடாக நிகழ்கால அரசியல்!
தமிழில் : வெங்கட் சாமிநாதன்.
Posted by Thekkikattan|தெகா at 9:34 PM 0 comments
Labels: எழுத்தாளர்கள், நிகழ்வுகள், புத்தகங்கள், மொக்கை, வாசிப்பாளன், விமர்சனம்
Tuesday, February 26, 2019
போர் ஒரு வியாபாரம்! War Business
அங்கிருந்தெல்லாம் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவிற்கு போட்ட பணம் திரும்ப வரவில்லை. நாட்டின் படை வீரர்களின் இழப்பும் அதிகம். அமெரிக்க பொது மக்களுக்கு பொருளாதார இடர் பாடுகளைத் தாண்டி உயிருக்கு அச்சுறுத்தல் பயம் கூட இல்லை. ஏன்னா, பூகோள ரீதியா ரொம்ப பாதுகாப்பான தொலைவில இருக்குற ஒரு நாடு.
இந்த நிலையில் நம்முடைய நிலப்பரப்பிற்கு வருவோம். இத்தனை பெரிய நெருக்கடியான மக்கள் தொகையை ஒரு குறுகிய இடத்திற்குள் வைத்துக் கொண்டு, சும்மா போர் போர் என்று இரண்டு பக்கமும் மார்தட்டினால் இழப்பு என்னவோ அனைத்து விதத்திலும் இரண்டு பக்கத்திற்கும்தான்; இரண்டு விதத்திலும், பெரும் பொருளாதார மற்றும் உயிர் சேதத்தை சந்திப்போம்.
உண்மையான போர் என்று வரும் போது இரண்டு நாட்டு நிலப்பரப்பிற்குள் வான்வழி தாக்குதல் நிகழ்த்தினால், எந்த எடை கொண்ட குண்டுகள் போட்டுக் கொண்டாலும் எதுவும் பயனற்று போகப் போவதில்லை. எங்கு விழுந்தாலும் பாரிய சேதத்தை உண்டு பண்ணும். அதனை யார் அனுபவிப்பது?
போருக்கு பின்னால் நம்முடைய திறமையைப் பார்த்து, நம்மை விட குட்டி நாடுகள் உங்களுடைய போர் தளவாடங்களில் நாலு அதில், பத்து இதிலன்னு ஆர்டர் கொடுத்து பிசினெஸ் செய்து கொள்ள உதவப் போகிறதா?
இப்படி நடக்கவே வாய்ப்பற்ற, தேவையற்ற ஒன்றை வைச்சு அரசியல் லாபத்திற்காக ஹாலிவுட் படக் கதை ரேஞ்சிற்கு செஞ்சா நம்முடைய நம்பிக்கையை, மானத்தை நாமே பன்னாட்டு மேடையில இழந்துடுவோம்.
ஆல்ரெடி, இந்தியாவில படிச்சு வாங்கின பட்டங்களை ஒரு பயலும் வெளியில மதிக்கிறதே இல்லை. அதிலே இந்த மாதிரியெல்லாம் சுய சொரிதல் செஞ்சா ...ஹ்ம்ஹும்.
ஆனா ஒன்னு மட்டும் தெரியுது...
நம்மை ஆள்பவர்களுக்கு பன்னாட்டு மேடையில் இந்தியாவை ஓர் உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கும் எந்தவிதமான உண்மையான அக்கறையும் கிடையாது. இருந்திருந்தால் இந்தியா என்றோ அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்டியிருக்க முடியும்.
அவர்கள் யாருக்கும் இந்திய கான்ஸ்டிடியூஷன் மீது எந்த விதமான நம்பிக்கையுமில்லை, மரியாதையுமில்லை. 🙄
பார்த்து பொழச்சிக்கிடக்கிற வழியப் பார்ப்போம்!
Posted by Thekkikattan|தெகா at 1:29 PM 0 comments
Labels: அரசியல், உலகம், செய்தி, நிகழ்வுகள், மொக்கை
Monday, February 25, 2019
முதல் கோணல் முற்றும் கோணல்: Sinking Ship PMK
திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது?Posted by Thekkikattan|தெகா at 8:40 PM 0 comments
Thursday, February 21, 2019
5, 8th STD பொதுத்தேர்வு குலக்கல்விக்கான நுழைவுவாசல்!
Posted by Thekkikattan|தெகா at 7:42 PM 0 comments
Labels: அரசியல், சமூகம், சீரழிவு, நிகழ்வுகள், மொக்கை
Wednesday, November 07, 2018
அரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission!
Posted by Thekkikattan|தெகா at 5:56 PM 0 comments
Labels: அனுபவம், சமூகம், சினிமா, நிகழ்வுகள், மொக்கை
Monday, May 07, 2018
ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்!
Posted by Thekkikattan|தெகா at 10:22 PM 0 comments
Labels: அரசியல், இந்தியா, சமூகம், தெளிதல் சார்ந்து, நிகழ்வுகள், மொக்கை
Friday, May 04, 2018
புதன் கெரகத்திற்கு ஆள் எடுக்கிறோம்: கொச்சைப் பதிவு!
Posted by Thekkikattan|தெகா at 10:37 PM 0 comments
Labels: அரசியல், இந்தியா, சமூகம், நிகழ்வுகள், மொக்கை
Wednesday, May 02, 2018
வாயால் வடை சுடுவது எப்படி?
Posted by Thekkikattan|தெகா at 8:24 PM 0 comments
Labels: அரசியல், அனுபவம், இந்தியா, நிகழ்வுகள், மொக்கை
Sunday, April 15, 2018
நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்?
Posted by Thekkikattan|தெகா at 8:51 PM 4 comments
Labels: சமூகம், சீரழிவு, நிகழ்வுகள், மொக்கை
Monday, April 09, 2018
தம்பிகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!
Posted by Thekkikattan|தெகா at 5:33 PM 0 comments
Labels: அரசியல், சமூகம், சீரழிவு, செய்தி, நிகழ்வுகள், மொக்கை
Wednesday, March 07, 2018
பெரியார் எப்போது யாருக்காக சாதி வெறியர் ஆனார்?: Periyar
Posted by Thekkikattan|தெகா at 3:42 PM 0 comments
Labels: அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள், மொக்கை
Thursday, February 22, 2018
பிக் பாஸின் நட்ட நடு செண்டர் மய்யம் ஓஆர்ஜி: Maiam
காந்தி சென்னார் என்று தீவிர நடுநிலை வாதியான கமல் சார் மேற்கோள் காட்டியது, ”மனிதனின் தேவைகளுக்கு வேண்டுமானால் இந்த பூமி தன் வளங்களை வழங்கலாம் ஆனால் பேராசைக்கு வழங்க முடியாது.” இது கமலுக்கே பொருத்தமான ஒன்றுதானே! சரிதான். இவரின் சிறிய வயது ஆசையான நடிப்பு உலகில் தான் ஓர் இடத்தை அடைய வேண்டுமென்று உழைத்து அவராலான அளவில் புகழையும் ஈட்டி திருப்தி அடைந்து விட்டார்.
இப்பொழுது எந்த இசங்களையும் பின் பற்றி மக்களுக்கான பொதுச் சேவை ஆற்ற வேண்டிய நிலையில் இந்த நாடும், நாட்டு மக்களும் இல்லை, வெறும் ஊழலற்ற(?) அரசாட்சி மட்டுமே வழங்கினாலே போதுமானது என்று புதுப் படம் எடுப்பதனைப் போன்று ஒரு கட்சியையும், அதற்கான கொடியையும் ஏற்றி ஸ்ரீப்ரியா, ஸ்நேகன், பரணி, வையாபுரி போன்ற மொழி போராட்ட மற்றும் பொருளாதார மேதைகளை மேடையேற்றி இன்னொரு “பிக் பாஸ்” பாணியில் மக்களாட்சியில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.
இத்தனை ஆண்டுகள் இஞ்ச் பை இஞ்சாக நகர்த்தி இன்று நாம் அடைந்திருக்கும் இந்த ஜனநாயக உரிமைகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளி மின்னும் ஒளி வெள்ளத்தின் கீழ் ஊழலாக சுருக்கி நீட், காவேரி நதி நீர் பங்கீடு, இயற்கை வளங்களை புரட்டி போட்டு சாமியார் வளம் பேணல், ந்யூட்ரினோ திட்டம் என்பனவற்றை புட்டியில் அடைத்து கடலில் வீசி விட்டு மூளைச் சலவை செய்ய எத்தனிக்கிறார்.
யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் தனக்கு நடிப்பு நன்றாக வரும் என்ற ஒற்றை காரணத்தை முன் வைத்து வரலாற்றை மறக்கடித்து கண்ணுக்கு முன்னால் அடைந்திருக்கும் வளர்ச்சிகளை குறுக்கி, மற்றுமொரு பீகாராகவும், உத்திர பிரதேசமாகவும் எல்லா துறைகளையும் பின்னுக்கு இழுத்துப் போக நினைப்பவர்களுக்கு துணை நின்று “மதுரை டயலக்” பேசி ஓட்டு அரசியல் பண்ணி விடலாம் என்று நினைப்பது எந்த விதத்தில் சேர்ப்பது?
மக்களை எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிட்டிருந்தால் இப்படியான ஒரு “மேனாமினிக்கி” அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கட்சி தொடங்க ஆசை வந்திருக்கக் கூடும்?
ரசினியும் சரி கமலும் சரி இரண்டும் வேறுவேறல்ல ஒரே குட்டை மட்டைதான். வரலாற்று ரீதியாக, சரியாக இந்தியாவில் தமிழகத்தின் நிலை எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறது என்று பிடிபடாத அந்த அப்பாவி மக்களை ஒரு பிள்ளை பிடிப்பவனின் சாதுர்யத்துடன் இவர்களை பிஜேபி உள்ளே நுழைந்து கிடைச்ச வரையும் லாபம் என்ற நோக்கில் சுருட்ட நினைக்கிறது.
இது போன்ற ஒரு சூழல் வந்ததிற்கு இது வரையிலும் ஆட்சி செய்து வந்த கழகங்களே காரணம். தேசிய அளவில் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி என்ன அது எப்படி சாத்தியமானது, எது போன்ற போராட்டங்களை முன்னெடுத்து நம்மால் இந்த நிலையை அடைய முடிந்தது போன்ற விடயங்களை கட்சி பாராபட்சமின்றி எடுத்து கொண்டு சேர்க்காததே முதன்மையான காரணம்.
கழக ஆட்சி மட்டும் 1969க்கு பிறகு தோன்றாமல் இருந்திருந்தால் நான் இன்று அடைந்து இருக்கும் இடத்தை இன்னும் இரண்டு பிறப்பு எடுத்தாலும் அடைந்திருக்க முடியாது. என்னை போன்றுதான் இங்குள்ள அரிதி பெரும்பாண்மையான தமிழக மக்களுக்கும் என்றே நினைக்கிறேன்.
இல்லையென்றால் பிகாரிகளும், ராஜாஸ்தானிகளும் உத்திரபிரதேசக்காரர்களும், ஹர்யானகாரர்களைப் போன்றும் நானும் தேடித் தேடி மாமிசம் உண்பவர்களையும், காதலர் தினத்தன்று ஜோடியாக நடந்து செல்பவர்களை சாலையோரத்திலும், உணவு விடுதிகளிலும் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அடித்துக் கொன்று போடுபவர்களில் ஒருவனாக ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப் போல வாழ்ந்து கொண்டிருப்பேன். இந்த வேலையில் என்னை நாகரீக மடைந்தவனாக மடைமாற்றம் செய்த பகுத்தறிவாத முன்னோடிகளுக்கு நன்றி செலுத்தாமல் வேறு எந்த சூழ்நிலையில் செய்வேன்.
இன்னமும் கமல் போன்றவர்களை இத்தனை உயரத்தில் வைத்து அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் இன்னமும் நாம் போக வேண்டிய தொலைவு மிச்சமிருக்கிறது என்றுதானே புரிந்து கொள்ள முடிகிறது.
இவர் மிகச்சரியாக அரசியல் செய்ய வேண்டிய இடம் பிகார். கேஜ்ரிவாலை அழைத்துக் கொண்டு அடுத்த பிரதம மந்திரியாக தயாராகிக் கொண்டிருக்கும் யோகி, இன்றைய வாய்ச்சவடால் மோடிக்கு எதிராக பிற மாநிலங்களில் சென்று குறைந்த பட்சம் நாகரீகமாக உலக அரங்கில் முன் நிறுத்தி செல்ல அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை கல்வியறிவு, வாழ்வாதரங்களை அமைத்து கொள்ள வகுப்பு எடுக்கட்டும்.
இது தமிழகத்திற்கு தேவையற்றது! இப்பொழுது என்னால் யூகிக்க முடிகிறது இது போன்ற ஓநாய் கூட்டங்களுக்கு இடையே இத்தனை ஆண்டுகள் ஓர் இயக்கத்தை வழி நடத்தி சென்றிருக்க வேண்டுமானால் எத்தனை சாதுர்யம் தேவைப்பட்டிருக்கும். விழித்தெழு!
Tuesday, February 13, 2018
அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!
கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.
என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.
ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது
ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?
சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?
அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?
ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.
அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.
இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??
இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?
எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!
Posted by Thekkikattan|தெகா at 3:51 PM 0 comments
Labels: அனுபவம், சமூகம், சீரழிவு, தீவிரவாதம், நிகழ்வுகள், மதங்களும் நானும், மொக்கை
Thursday, February 08, 2018
பக்கோடா பட்டாதாரிகள்: Pakoda Politics!
ஒரு போஸ்ட் படிச்சேன். அம்பூட்டு மண்டைக்காரனும் அந்த முகாம்லதான்யா அடைஞ்சு கிடக்காய்ங்க. ஒரு சில வரிகளை அந்த போஸ்ட்ல இருந்து இங்கே கட் அன்ட் பேஸ்ட் செஞ்சுருக்கேன், நமக்கு பேசு பொருளா இருக்கட்டும்னு.
// *மதுரை வீதிகளில் பானிபுரி விக்கிறவன் எல்லோரும் வடஇந்தியர்கள் தான். ஒரு நாளைக்கு குறையாமல் ₹ 2000 க்கு வருமானம் பார்க்கிறான். அவனுக்கு படிப்பறிவே கிடையாது. ஆனால் அவன் பிள்ளைகள் உயர்தர பள்ளிகளில் படிக்கின்றனர்.
மண்ணின் மைந்தன் BE.. BA.. Bsc படித்து விட்டு 5000 ஓவாவுக்கு வேலையை தேடி செய்றான். இல்லாமல் போனால் வேலை தேடி வெளியூருக்குப் போறான்.
ஏன் ? படித்தப் படிப்பை வைத்து இங்கேயே பிழைக்க முடியலே!* //
இதில இருக்கிற உள்பொருளில் இருக்கக் கூடிய முரண் கூட
தெரியாம இதனை ஒரு பேசு பொருளாக எப்படி முன் வைக்க முடியும்?
ஏற்கெனவே ஒரளவிற்கேனும் விழிப்புணர்வுற்று பள்ளிகளுக்கு அனுப்பி தங்களுடைய குழந்தைகளை தன்னை விட ஓர் உயர்ந்த நிலையில் வைத்து பார்க்க வைக்கத்தானே உயர் படிப்பு கடன உடன வாங்கி படிக்க வைக்கிறது.
B.Tech., B.E (ஆயிரத்தெட்டு உட்பிரிகளில் உள்ள துறைக் கல்விகள்), M.Scல (வைரலாஜி, மைக்ரோபயோலஜி, செல் பையாலஜி, வைல்ட்ஃலைப்) லொட்டு லொசுக்கின்னு படிச்சு திரும்பவும் தன்னோட அப்பன் சுட்டுக்கிட்டு இருக்கிற பக்கோடாவை திருப்பி போடவா 23 வருஷம் செலவு செஞ்சு திரும்பவும் அதே இடத்திற்கு கொண்டு வருவாங்க.
சரி அந்த படிப்பை எட்ட வைக்க எத்தனை கடன் சுமை இருக்கும்? எத்தனை சிரமப் பட்டிருப்பாங்க படிச்சு முடிக்க. ஒரு படிப்பை படிச்சு அதுக்கு தகுந்த மாதிரி வேல வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியாதது யாரோட தவறு? படித்த துறையில் தன்னோட திறமையை வளர்த்தெடுத்து நாட்டிற்கும், தனது வீட்டிற்கும் கொடுக்கும் வயதில் தெண்டச் சோறு, தடிமாடு என்று திட்டு வாங்கிக் கொண்டு சுவாசித்து திரிவது அத்தனை எளிதா என்ன?
சரி இங்கே ஒரு லாஜிகல் கேள்வி, அந்த பானிபூரி, பக்கோடா விற்கும் படிப்பறிவற்ற வட இந்தியர்கள் தங்களுடைய மாநிலம், கிராமம், மக்கள், மொழி தான்டி ஏன் இத்தனை தொலைவு வந்து ஒரு நாளைக்கு 2000ரூபாய் சம்பாதித்து அந்த பணத்தை கொண்டு என்ன செய்யப் போகிறார்? ஏன் அவர்களின் மாநிலத்தில் வாழ்வாதார வளர்ச்சிப் பணிகள் எங்கே போனது? இதே தமிழர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு செய்ய ஆரம்பித்த வேலையைத் தானே அதே படிப்பறிவற்ற வட மாநிலத்துக் காரர் தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய எத்தனிப்பார்: ஒரு வீடு, பிள்ளைகளுக்கு படிப்பு இத்தியாதிகள்.
// *ஒரு காலத்தில் TVS. Madura coats,, Fenner, Sitalakshmi mills, Meenakshi mills,, Thiagarajar mills, Visalakshi milll, மற்றும் ஏராளமாக Powerloom,, Handloom .. சில்வர் பட்டறை தொழில்களென பெருந்தொழில் மற்றும் சிறுதொழில் என கொழித்த மதுரை இன்று எல்லா தொழிலையும் தொலைத்து விட்டு சிரம பூமியாக மாறியுள்ளது.
மதுரை க்காரனுக்கு பொறுப்புணர்ச்சியில்லாமல், தொழில் வளம் பெருக செய்யும் எண்ணம் இல்லாமல், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராடி திருப்தி அடைகிறான்.
விவசாயம் முன்னேற கட்டப்பட்ட வைகை அணை, இன்றைய தினம் குடிநீருக்கு மட்டும் திறக்கப் படுகிறது.
இதனால் விவசாயமும் காலி.
ஆனால் நம்ம தமிழன் தான் விவசாயிக்கு சப்போர்ட் செய்து பேஸ்புக், வாட்ஸ்அப் ல் பொங்குவான்* .//
ஏன் இந்த தொழில்கள் எல்லாம் நலிவடைஞ்சு மூடினார்கள்? குடிநீர் பிரச்சினைக்கான காரணம் என்ன, யார் இதனில் அரசியல் செய்வது? ஏன் மக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து பொங்க வேண்டும், இந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எது காரணியாக இருந்திருக்கக் கூடும்? எதற்காக ஜல்லிக்கட்டு ஒரு பிரச்சினையாக மாற்றப்படணும்? எதற்காக மக்கள் தெருவிற்கு வந்து போராடணும்?
அப்போ தண்ணீர் பிரச்சினை, மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு, விவசாயத் துறையில் வளர்ச்சி குறித்த முன்னெடுப்புகள் எல்லாம் சிறு பிரச்சினைகள் ஆனால் ஜல்லிக்கட்டு விசயம் முதலில் கையாளப்பட வேண்டியது என்று ஒரு அரசாங்கமே அதனில் கை வைக்க எண்ணியதா?
எதற்காக பக்கோடா விற்ற ஒரு தலைமுறையின் பிள்ளைகள் மீண்டும் இருபது வருடங்கள் கழித்து பக்கோடா, பஜ்ஜி விற்க கடை விரிக்க வேண்டும்? சரி தெருவிற்கு எத்தனை பக்கோடா கடைகள் வேண்டும்?
ஏன்டா இதனையெல்லாம் ஒரு ஆர்க்யூமென்டாக எடுத்துட்டு வாரீங்களே உங்களுக்கெல்லாம் ஏதாவது அடிப்படை அறிவோ அல்லது குறைந்த பட்சம் இரக்கமோ கூட இல்லையா? ஒரு படித்தவன் தன்னுடைய படிப்பிற்கு பிறகு என்னவாக ஆக வேண்டுமென்பது அவனுடைய தேர்வாக இருக்க வேண்டுமே ஒழிய நீங்க சொல்வது போல, எப்படி வயிறு வளர்ப்பதுன்னு நீங்க சொல்லி அவன் செய்யும் நிலையில் இருந்தால் அரசாங்கத்தை இழுத்து மூடி விட்டு நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் முக்கு கடையில் டீ க்ளாஸ் கழுவி, பக்கோட வித்து காமிங்க ஏனைய குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளை B.E., டிகிரியுடன் டீ கடை வைக்க அனுப்புவார்கள்.
நீங்களும் உங்க வாதமும். கடுப்பு டாசா வருது!
Friday, February 12, 2016
வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2

கண்ணாடிப் படிகமென சன்னமாக உருண்டோடும் நீராக அத்தனை சுத்தமான தண்ணீர்.
இங்கு எங்குமே உணவு பற்றி பேசாததிற்கு காரணமிருக்கிறது. காலையில் கெட்டிச் சட்னி வைத்து வாங்கிய இரண்டு இட்லிகள் மதியம் மூன்று மணிக்கு பிரித்தால் என்ன வாசனையுடன் கிடைத்து விடக் கூடும். அத்தனை நடைக்குப் பிறகு பொட்டலத்தைப் பிரித்து கிள்ளிக் கிள்ளி சாப்பிடும் பொழுது அதன் சுவையே எந்த காண்டினெண்டல் உணவிலும் கிடைக்காத அளவில் உளத்தையும், வயிற்றையும் ஒரு சேர நிரைக்கும்.
வெளியில் வந்தால் மலைவாழ் தேயிலைத் தொழிலாளிகளின் தேநீர்க் கடையில் சில சமயம் ஈக்கள் முதல் போணி செய்யாத போண்டாவோ, வடையோ நல்ல சிவப்பேறிய தேநீருடன் உணவுக்குழாயை வருடியபடி இரைப்பையை நிரப்பும். அரவமற்ற வனப்பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் பசியால் கண்களில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைக்க சிவப்பேறிய கண்களுடன் கூடடைவோம்
Posted by Thekkikattan|தெகா at 11:33 AM 0 comments
Labels: இயற்கை, காடும் நானும், நிகழ்வுகள், நினைவோடை, மொக்கை









