நேத்து ஒரு காமெடிங்க இங்க நான் இருக்கிற இடத்திலே. எப்பப் பார்த்தாலும் இந்த ரெண்டு தம்பதிகளும், அதான் அந்த ஆம்புலன்ஸ்-தீயணைப்பு வண்டி சும்மா...வய்ங்...வய்ங்..வய்ங்னு போர்க்கல அடிப்படை வேகத்திலே போறத, நான் குப்பை கொட்டிகிட்டு இருக்கிற ஹைவே பக்கத்திலேருந்து பார்த்துகிட்டே இருக்கலாம்.
நேத்து என்னாகிப் போச்சுன்ன, என் மக்கள் எவ்வளவு தூரம் கடமையில் கண்ணாக இருக்றாங்க அப்படின்னு க்ளோஸ் அப்பிலருந்து ஒரு சீனு பார்த்தேன்... அதெ மத்தவங்களும் பார்த்தும் எல்லா இடத்திலேயும் காத்து வர மாதிரி ஒரே சிரிப்புத்தான் போங்க.இந்தாங்க கதை.
ஒரு சிவப்புக் கழுத்தன் (Red Neck) படிக்காத, பாமரத்தனமான வெள்ளைக்காரன இப்படித்தான் இங்க கூப்பிடுறாங்க...அதோட மொழி பெயர்பு தெகாவோடது, கண்டுக்காதீங்க. அந்த கழுத்தன் நெறைய குடிச்சுப்போட்டு சவமாட்டம் விழுந்து கிடந்துருக்கிறான், ஒரு கடை வாசல் முன்னாலே.
மக்கள் அரண்டு போய் 911னெ கூப்பிட முதலில் ஒரு போலிஸ் காரர் வந்து முகத்தில் சுளீர்ரென்று ஐஸ் வாட்டர் அடிச்சு எழுப்புனப்ப கண்டுபிடிச்சுட்டார் தலைவரு தண்ணியில் மிதக்கிறாருன்னு. அப்புறம் என்னங்க நியாயம சுய புத்தி உள்ள ஆட்கள் பண்ணுவாங்க.
நம்ம சிட்டிசன யோவ் ஏய்யா இப்படி பண்றெ ஒழுங்க வீடு போய்ச் சேருய்யான்னு, நம்மூரு காவல் தெய்வங்கள இருந்தா அவருக்கு அங்கேயே தீர்ப்பு வழங்கி அவர அனுப்பிச்சு வச்சுருப்பாங்க இல்லியா.
ஆனா, இந்த ஆபீசர் அடிச்சாரு ஃபோன எவன் வீட்டு காசு, உடனே ஒரு ஆம்புலன்சு, அதனை தொடர்ந்து ஒரு தீயணைக்கும் வண்டி, கதறிகிட்டு வருது அந்த செனேடர காப்பாத்தி உயிர் பிழைக்க வைக்க. அந்த ஆளு அப்பவே எழுந்து நின்னு ஒரு தம்மு வேற நம்ம அறிவுக் கொழுந்து ஆபீசருக்கிட்ட இருந்து நெருப்பு பெட்டி வாங்கி அடிச்சுக்கிட்டு இருக்காரு.
இந்த சூழ்நிலையில் அந்த ரெண்டு வண்டியும் வந்துச்சு, தீயணைப்பு வண்டி ஒரு ரவுண்ட் வுட்டுட்டு போயிடுச்சு. ஆம்புலன்ஸ் ஆட்கள் மட்டும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, அந்த ஆள ஏத்தி உட்கார வைச்சுகிட்டு போயிட்டாங்க. அனேகமாக வீட்டுல கொண்டு இறக்கி விடுவாங்கன்னு நினைக்கிறேன்.
எப்படியோ, நம்ம சிவப்பு கழுத்தனுக்கு பில்லு, ரெண்டு வண்டியும் வந்துட்டு போனதுக்கு தீட்டிபுடுவாங்க. அவங்களுக்கும், அன்னிக்கு எவ்வளவு ஆக்டிவ்வா டூட்டி எல்லாம் பார்த்தோம்னு ஆகிப்போச்சு.
இப்படி இருந்த இவனுங்க எப்படியா விளங்குவானுங்க. அப்புறம் ஏன் காற்று மாசுபடாது, வெப்பம் ஏறாது. ஒரு கவ்வொதி பயலுக்கு தீயணைக்கிற வண்டி. சிரிக்காம என்னாத்த பண்ணச் சொல்லுறீங்க, சொல்லுங்க.
வளர்ந்த நாடுன்ன சும்மாவா?
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Wednesday, July 26, 2006
தீயணைப்புவண்டியும் குடிகார மனிதனும்
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
ஓ.. அதானே பார்த்தேன்.. என்னடா... ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மணி ஆட்டிடு கிளம்பிடுறாங்களே... அவ்ளோ எமெர்ஜென்சி கேசா கடக்குன்னு...
தெகா
வாய்விட்டு சிரித்தேன்... நன்றி... நன்றி...
அதான் அவரு //ஒரு தம்மு வேற நம்ம அறிவுக் கொழுந்து ஆபீசருக்கிட்ட
இருந்து நெருப்பு பெட்டி வாங்கி அடிச்சுக்கிட்டு இருக்காரு.//
பிடிக்கிற நெருப்பை அணைக்க வந்தாங்கன்னு வச்சுக்கலாமா? :-))))
தெ.கா.
இதுலே ஒண்ணு கவனிக்கணும்.குடிகாரரா இருந்தாலும். அது ஒரு மனுஷன்.
மனுஷ உயிருக்கு விலை இருக்கா? அதுதான் எப்படியும் காப்பாத்தணும் என்ற அக்கறையோட
வந்துருக்காங்க.
நம்மூர் இந்தியாலே கதை வேற மாதிரி. வீடுங்க பத்தி எரிஞ்சாலும் இவுங்க ஆடி அசைஞ்சு
வர்றதுக்குள்ளெ எவ்வளோ உயிர் & பொருட்சேதம்?
தலைப்பை முதல்லே மாத்துங்க:-)))) இதுவே அமெரிக்கனா இல்லாமப் போயிட்டா விட்டுட்டுப்
போயிருவாங்களா?
தீயணைப்புவண்டியும் குடிகார மனிதனும்
துள்சிங்க,
//இதுலே ஒண்ணு கவனிக்கணும்.குடிகாரரா இருந்தாலும். அது ஒரு மனுஷன்.
மனுஷ உயிருக்கு விலை இருக்கா? அதுதான் எப்படியும் காப்பாத்தணும் என்ற அக்கறையோட
வந்துருக்காங்க.//
அவரு தண்ணியிலேயே குடும்பம் நடத்துவாரு போல.
மனுஷன் எல்லாம் சரிதாங்க, அதுக்காக இவ்வளவு ஆர்பாட்டம் கொஞ்சம் அதிகமுங்க.
//தலைப்பை முதல்லே மாத்துங்க:-))))
இதுவே அமெரிக்கனா இல்லாமப் போயிட்டா விட்டுட்டுப்
போயிருவாங்களா? //
மாத்திப்புடுறேன், இருந்தாலும் என்னையும் சேர்த்துத்தான் திட்டிகிட்டேன். ஏன்னா, இப்ப எனக்கும் எல்லா உலக பிரஞகையும் போச்சு, இந்த மாதிரி ஸ்பாயில் ஆயி ஆயி, ஒரு டாலர் பொரிட்டோ வாங்க 2 டாலர் பெட்ரொல் போட்டு அளவிக்கு காட்டான் தேரிட்டான்ன அப்புறம் சொல்லிறீங்க...
நீங்க எப்படி... ஒரு கேன் பால் வாங்க நீங்களும் தான் நான் சொன்னதை செய்றீங்கன்னு எனக்குத் தெரியுமே :-))
தெ.கா,
//நீங்க எப்படி... ஒரு கேன் பால் வாங்க நீங்களும் தான் நான் சொன்னதை
செய்றீங்கன்னு எனக்குத் தெரியுமே :-))//
அதுதான் இல்லை. நம்ம வீட்டுக்குப் பக்கத்துலே (660 மீட்டர் தூரம். கார்லே போய் அளந்து பார்த்தேன்)
ஒரு கடையிலேதான் பால் வாங்கறோம். ஆனா ரெண்டு கேன் வாங்குனா ச்சீப். ஆனா ரெண்டையும்
தூக்கிக்கிட்டு நடக்கக் கஷ்டம். 4 லிட்டர். அதனாலே நான் மட்டும் போனா கார். கோபாலோடு போனா
நடை. ஆளுக்கு ஒரு கேன் தூக்கியாறலாம். நடைக்கு நடையும் ஆச்சு:-))))
//ஆனா ரெண்டு கேன் வாங்குனா ச்சீப். ஆனா ரெண்டையும்
தூக்கிக்கிட்டு நடக்கக் கஷ்டம். 4 லிட்டர். அதனாலே நான் மட்டும் போனா கார். கோபாலோடு போனா
நடை. ஆளுக்கு ஒரு கேன் தூக்கியாறலாம். நடைக்கு நடையும் ஆச்சு:-)))) //
அடெ நல்ல ஐடியாவ இருக்கே. சரி நீங்க மட்டும் போகும் போது கார் எடுத்துட்டு போறேன் அப்படின்னு சொல்றீங்க, ஏன் சின்னதா ஒரு ஸ்ட்ரோலர் ஒன்னு வாங்கிட்டீங்க அப்படின்ன உங்க நடையை மிஸ் பண்ண வேண்டாம் பாருங்க, வீட்டுகாரர் ஊரில் இல்லாம இருக்கிறப்ப கூட... ஐடியா ஐடியா...
//நடைக்கு நடையும் ஆச்சு:-)))) //
ஆமா, நீங்க நடந்தா வறேன் சொன்னீங்க...நேர பார்த்தா அப்படியாத் தெரியும் :-))))) புரியுதா, நான் இல்லப்ப எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்....
//ஆமா, நீங்க நடந்தா வறேன் சொன்னீங்க...நேர பார்த்தா அப்படியாத் தெரியும் :-)))))//
தெகா!!
பதிவுல கலாய்க்க ஒரு ஆளு, பின்னூட்டத்துல கலாய்க்க எங்க துளசி மேடமா!! இது சரியா இல்ல சொல்லிபுட்டேன். அவங்க யானை எந்த பல்லமா இருந்தாலும் தொரத்தும் மறந்துடாதீங்க... மறந்தும் இருந்திடாதீங்க :-)
ஸ்ட்ரோலர் எதுக்கு வாங்கணும்? மகளொடது இன்னும் எங்கோ ஒரு மூலையிலே கிடக்கு:-))))
நானே ஒரு 'மொபிலிட்டி ஸ்கூட்டர்' வாங்கிக்கலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். இங்கே
தாத்தா, பாட்டிங்க 'விர்'ன்னு அதுலே போறதைப் பார்த்து எனக்கும் ஒரே ஆசை. கடைக்குள்ளேகூட
அதுலெயே போகலாம். பார்க்கிங் கஷ்டமே இல்லை. பார்க் பண்ணாத்தானே? அதான் இறங்கவே வேணாமே:-)))
அதுலேயே ஒரு ச்சின்னக் கூடையை இணைச்சுட்டா பால் கேன் உக்காந்துராதா?
டெல்பீன்,
வாங்க வாங்க. பாருங்க தெக்கி வீட்டுலே உங்களை நான் வரவேற்கிறேன். நீங்க தமிழ் தட்டச்சு
செய்ய ஆரம்பிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு.
நக்கீரன்,
//ஓ.. அதானே பார்த்தேன்.. என்னடா... ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மணி ஆட்டிடு கிளம்பிடுறாங்களே... அவ்ளோ எமெர்ஜென்சி கேசா கடக்குன்னு...//
வேற என்னன்னு நினைச்சீங்க, எல்லாத்திலும் காசு. இப்ப நங்குன்னு பின்னாடி வந்த காரு உங்க மோதிப்புட்டான்னு வைசுக்கங்க, உடனே இந்த காம்போ வண்டிகள் வரும், நீங்கள் கையெடுத்து கும்பிட்டு அனுப்பினாத்தான், ஆம்புலன்ஸ் சரின்னு விட்டுட்டு போகும் உங்களை.
இல்லென்ன உங்களை அள்ளி ஸ்ட்ரெச்சர்லெ போட்டு கொண்டு ஹாஸ்பிடல்ல இறக்கிவிட்டுட்டு போயிடுவாங்க. இன்ஸ்சூரன்ஸ் பண்ணிடும்தான், இல்லென்னா???? 5 வருஷத்துக்கு கூப்பன் முறையிலெ மாதா மாதம் பணம் கட்ட வேண்டியதுதான்....
சிவா,
//வாய்விட்டு சிரித்தேன்... நன்றி... நன்றி...//
வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும். சிரிச்சுகிட்டே இருக்கணும்.
டாக். டெல்,
//உங்க ஊர் போலீஸ்காரங்க எப்படியெல்லாம் வேலை செய்கிராங்க..ம்ம்ம். கொடுத்துவச்சவங்க சார்..//
இந்த மாதிரி நேரத்தில் என்னுடைய பதிவினையும் படித்து அதற்கு பின்னூட்டமும் இட்டு சொன்றதற்கு எப்படி எனது நன்றியை தெரிவித்து கொள்வேன் என்று தெரியவில்லை.
எல்லாம் நல்ல படியாக முடிய பிரார்த்திக்கிறேன்.
சிவப்பு கழுத்தனுக்கு பில்லு, ரெண்டு வண்டியும் வந்துட்டு போனதுக்கு தீட்டிபுடுவாங்க...//
- இது கொஞ்சம் ஆறுதலா இருக்கு..
நன்மனம்,
//அவங்க யானை எந்த பல்லமா இருந்தாலும் தொரத்தும் மறந்துடாதீங்க... மறந்தும் இருந்திடாதீங்க :-) //
இப்ப நீங்க மட்டும் என்ன பண்றீங்களம், போங்க நல்ல மனம் நீங்க போட்டுக் கொடுக்காம...
ஆனா ஒண்ணு தெரியுது, என்னோட "யானை விரட்ட" நேசி பதிவுல படிச்சிருக்கீங்கன்னு, ஆனா, உங்க பாதத் சுவடுகளை அங்க காணலையே, வந்தா உள்ளேன் ஐயான்னு சொல்லிட்டாவது போகணும், சரியா :-)
//ஆனா, உங்க பாதத் சுவடுகளை அங்க காணலையே//
உள்ளேன் ஐயா சொல்லிட்டு தாங்க வந்தேன்.
அந்த பதிவு சுட்டி கொஞ்சம் கொடுங்களேன்.
நல்ல மனம்,
அட நம்ம பேருலதாங்க மிஸ்டேக்கூகூ... பெரிய மனசு பண்ணி உட்டுபுடுங்க... இப்பத்தான் ஒடிப் போயி பார்த்தேன் அங்கன, நீங்க என்னை கலாய்ந்திருந்தது தெரிந்தது :-0)
இருந்தாலும் ரொம்ப ஆசைப் பட்டு சுட்டி வேற கேக்கிறீங்க என்னவொரு தபா படிச்சுட்டு ஏதோ கேள்வி கேக்கப் போறீங்க போல அதினால இந்தாங்க சுட்டி ;-)),
http://kurangumudi.blogspot.com/2006/05/blog-post_06.html
ஆமா, என்னோட "சிம்பன்சி, மனித இனக்கலப்பு" பார்த்தீங்களா?
இது துபாயில் நடந்த ஒரு சம்பவம்.
ஒரு நாள் எங்கள் அறையில் இருந்து கீழே இறங்கி தேனிர் விடுதி ஒன்றுக்கு செல்லும் வழியில் தமிழர் ஒருவர் தண்ணியில் கிடந்தார் சுற்றிலும் நான்கைந்து பாகிஸ்தானிகள் நின்று கொண்டு அவரின் நிலைகண்டு கிண்டல் செய்து கொண்டிருந்தனர் நானும் எனது நண்பரும் அருகில் போய்
அண்ணே இந்தமாதிரி குடிச்சுட்டு எதுக்கு வெளியே வற்றீங்க ரூமுக்கு போங்க போலீஸ் வந்தா புடிச்சு ஊறுக்கு அனுப்புவான் என்றோம்
அதற்கு அவர் டேய் நீ உன் வேலைய பாத்துகிட்டு போடா எல்லாம் எனக்கு தெரியும் நானே நாலு வருசமா ஊருக்கு போக வழியில்லாமத் தான இப்படி கிடக்கிறன் வந்து இன்னிக்காவது அவனா அனுப்பட்டும் என்றார்
எஸ்கேப்................. அவர் போனாரா இல்லையா தெரியவில்லை
மகோ,
//டேய் நீ உன் வேலைய பாத்துகிட்டு போடா எல்லாம் எனக்கு தெரியும் நானே நாலு வருசமா ஊருக்கு போக வழியில்லாமத் தான இப்படி கிடக்கிறன் வந்து இன்னிக்காவது அவனா அனுப்பட்டும் என்றார் எஸ்கேப்... //
என்ன ஒரு யுக்தி பாருங்க, சிலவில்லாம ஊருக்கு வந்துருவோம்னு பார்க்கிறார் போல. போலீஸ் கொண்டு போயி "நாக்க" வெட்டாம இருந்தா சரி ;-)
ஆமா, உங்க ஊருல (நீங்க இருக்க) ஏதானைச்சும் தப்பு கிப்பு பண்ணா ஒவொன்னா வெட்டி எடுத்துப்புவாங்காளம அது அப்பிடியா... :-)))
//ஏதானைச்சும் தப்பு கிப்பு பண்ணா ஒவொன்னா வெட்டி எடுத்துப்புவாங்காளம அது அப்பிடியா... //
அப்பிடியா?
அப்பிடியா?
அப்பிடியா?
//அப்பிடியா?
அப்பிடியா?
அப்பிடியா? //
அப்பிடின்னா என்ன "எக்கோ தாக்கம்" அப்படின்னு வைச்சுக்கலாமா?
என்னமோ காது வழிச் செய்தி. சரி, நீங்க அங்க இருக்கீகளே, தெரிஞ்சவகளாச்சேன்னு கேட்டேன், ஆனா, உங்களுக்கே ரெண்டு கண்ணும் வெளியில வந்துட்டுப் போன மாதிரி, மூணு தடவை சொன்னதயே திரும்பச் சொல்ல ஆரம்பிச்சிடீங்க...
இப்ப நான் எஸ்கேப்ப்ப்ப்.... போலீஸ் சைரன் வேற கேக்குது ;-)))
தருமி,
//- இது கொஞ்சம் ஆறுதலா இருக்கு...//
அது ஏன் உங்களுக்கு கொஞ்சம் ஆருதலா இருக்குன்னு புரிஞ்சுக்க இம்புட்டு நாளாச்சு... ;-))))
நாங்கெல்லாம் ஒரு Equal Opportunity Giverங்க ;-)
ச்சே, என்ன ஃப்ரீ சர்வீஸ் கொடுத்திருந்த நம்மூர் மக்கள் எல்லாம், கொஞ்சம் வயிறு கொதிச்சுருப்பாங்க, என்ன அப்படித்தானே, தருமி...
Post a Comment