Monday, July 03, 2006

மரணத்தில் ஒரு முயற்சி...

சந்தோஷத்திற்காகவும் அமைதிக்காகவும்

யுரேனியம், புளூட்டோனியம்மென்று

ஓடிக் களைத்த மனிதம்

கல்லறைகளில் கண்டு கொண்டது...!





பி.கு: ஒரு சின்ன முயற்சி மன்னிச்சு பெரிய மனசுப் பண்ணி வுட்டுபுடுங்க ;-))

21 comments:

நாகை சிவா said...

கண்டு கொண்டதை எதை என்று சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும். (அமைதியை தானே சொல்லுறீங்க)

நாகை சிவா said...

//கல்லறைகளில் கண்டு கொண்டது...//
அப்ப எரிப்பவர்கள் எங்கு கண்டு கொள்வார்கள். (உண்மையிலே தெரியாமா தான் கேட்குறேன்)

Amar said...

அநியாயம்.
நான் எதோ புளூட்டோனியமுன்னு எழுத ஆரம்பிச்சா போட்டிக்கு நீங்களும் வந்த சின்னபசங்க நாங்க எங்க போறது?

Sivabalan said...

தெ கா

மிக அருமை.

Amar said...

//அப்ப எரிப்பவர்கள் எங்கு கண்டு கொள்வார்கள்//

சாமி இந்த பிரச்சனையை விடுங்கப்பா!

Thekkikattan|தெகா said...

நாகை சிவா,

//கண்டு கொண்டதை எதை என்று சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும். (அமைதியை தானே சொல்லுறீங்க)//

அதெ...

இதொ மற்றுமொன்று...வுமுக்காக

மரணத்திற்கு ஒரு நன்றி
என்னை இங்கு இன்று இப்பொழுது
வாழ் என்று சுவையூட்டியதற்கு...

கோவி.கண்ணன் said...

தெக்கி அவர்க்ளே... கவிதை முயற்சி நன்றாக இருக்கிறது ... கவிதையுடன் தொடர்பான ஒரு படத்தையும் ஒட்டிவிடுங்கள் மேலும் பொழிவு பெறும்.

நாகை சிவா said...

////அப்ப எரிப்பவர்கள் எங்கு கண்டு கொள்வார்கள்//

சாமி இந்த பிரச்சனையை விடுங்கப்பா//

அப்படிகிறிங்களா, இல்ல தெகா ஏதும் பதில் வைத்து இருப்பார் என்று நினைத்தேன்.

Thekkikattan|தெகா said...

நாகை சிவா,

//கல்லறைகளில் கண்டு கொண்டது...//
அப்ப எரிப்பவர்கள் எங்கு கண்டு கொள்வார்கள். (உண்மையிலே தெரியாமா தான் கேட்குறேன்)

அது அந்த வரிகளுக்கு ஒரு சப்தம் கொடுக்குது இல்லையா, அதற்காத்தான் கல்லறைகள் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்...

சரி உங்களுக்காக அந்த சந்தந்தை மாற்றி...

சந்தோஷத்திற்காகவும் அமைதிக்காகவும்

யுரொனியம், புளூட்டோனியம்மென்று

ஓடிக் கலைத்த மனிதம்

கல்லறைகளிலும், பிண எரியூட்டலிலும் கண்டு கொண்டது...!

:-)))) சந்தோஷம் தானே நண்பரே...!

நாமக்கல் சிபி said...

//சந்தோஷத்திற்காகவும் அமைதிக்காகவும்

யுரொனியம், புளூட்டோனியம்மென்று

ஓடிக் கலைத்த மனிதம்

கல்லறைகளில் கண்டு கொண்டது...!
//

தெகா! நாலே வரிகளில் நச் என்று அடித்திருக்கிறீர்கள்.
சூப்பர். இதை முயற்சி என்றெல்லாம் சொல்லி ஏன் குறைவாக எடை போடுகிறீர்கள். இதற்குள் எவ்வளவு பெரிய சங்கதி இருக்கிறது என்று இலவசக் கொத்தனார் வந்து சொல்வார் பாருங்கள்!

பாராட்டுக்கள்!

நாமக்கல் சிபி said...

அப்படியே இன்னொரு விஷயம்! (விஷமம் அல்ல)

//ஓடிக் கலைத்த மனிதம்//

ஓடிக் களைத்த மனிதம் என்றல்லவா இருக்க வேண்டும்.

கலைத்த - அடுக்கி அழகாக வைக்கப் பட்டிருந்தவற்றை கலைப்பது.

களைத்த - ஓய்ந்து போவது!

நாமக்கல் சிபி said...

//அப்படிகிறிங்களா, இல்ல தெகா ஏதும் பதில் வைத்து இருப்பார் என்று நினைத்தேன்.
//

நாகையாரே! தெகா பற்றி குறைவாக எடை போட்டுவிடாதீகள். அவருக்குள் நிறைய விஷம ஞானம் உண்டு!
மன்னிக்க விஷய ஞானம் உண்டு!

(நாகையாரே! தெகா பற்றி குறைவாக எடை போட்டுவிடாதீகள். அவர் 80 கிலோவிற்கு மேல் இருக்கிறார் என்று அவர் சமீபத்தில் பார்த்த எடைச் சீட்டு சொல்கிறது)

பொன்ஸ்~~Poorna said...

//கலைத்த - அடுக்கி அழகாக வைக்கப் பட்டிருந்தவற்றை கலைப்பது.

களைத்த - ஓய்ந்து போவது! //

இதே போன்ற அடுத்த சொல்லான கலாய்த்த என்பதற்கு விளக்கம் இங்கே

Thekkikattan|தெகா said...

ச்சிபி,

//ஓடிக் களைத்த மனிதம் என்றல்லவா இருக்க வேண்டும். //

இந்த தமிழ் படுத்துதுப்பா ;-)) கண்டுபிடிச்சு என் கிட்ட "ஹாண்ட் ஓவர்" பண்ணினத்துக்கு ரொம்ப டாங்ஸ்...

உங்க வீட்டாண்ட வந்து ரொம்ப நாளாச்சு, ஆனா வந்து படிச்சேன்...ஹி..ஹி..ஹி... செய்ய வேண்டிய கடமையை செய்யலா... இந்த வந்துட்டென்...

Thekkikattan|தெகா said...

சமுத்ரா...

//அநியாயம்.
நான் எதோ புளூட்டோனியமுன்னு எழுத ஆரம்பிச்சா போட்டிக்கு நீங்களும் வந்த சின்னபசங்க நாங்க எங்க போறது?// ;-)

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க... எதோ தோணுச்சு எழுதிப் புட்டேன். அதுவும் இந்த அணுகுண்டுகளைப் பத்தி யோசிக்கும் பொழுது.

ஆமா சமுத்ரா, ஒரு நாள் இந்த உலக மக்கள் எல்லோரும் ரொம்ப அமைதியை விரும்ம ஆரம்பிச்சு இந்த அணுகுண்டுகளை எல்லாம் அழிக்கணுமின்னு ஆசைப் பட்ட நம்மாள் சுத்தமா இந்த அணுக்களை கதிரியக்கமே இல்லாமல் பண்ண முடியுமா?

அதே போல இந்த அணுக் கழிவுகளுக்கு என்ன வாகிறது? சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு, கேக்கிறேன், உங்களுக்கு தெரியும் தெரிஞ்ச சொல்லுங்க விருப்பப் பட்டவங்க தெரிஞ்சுக்கட்டும். நன்றி சமுத்ரா.

பொன்ஸ்~~Poorna said...

//ஒரு நாள் இந்த உலக மக்கள் எல்லோரும் ரொம்ப அமைதியை விரும்ம ஆரம்பிச்சு //
தெகா, இதைத் தான் உடோப்பியான்னு சொல்வாங்க .. (கனவுலகம்னு தானே அர்த்தம்?)

Thekkikattan|தெகா said...

ஆமாங்க பொன்ஸு,

கனவுலகில் தானே எல்லாமே நாம எதிர் பார்கிற மாதிரி இந்த உலகம் இருக்கும் (appears to be everything just perfect).

அப்பொ இதெல்லாம் கனவுலதான் நடக்கும் அப்படிங்கிறீங்க? :-)))) ஒரு வார்த்தை சொல்ல ஒரு வரு...~~~~~~~~~ வந்து கிட்டே இருக்கு சிபிக்கு. அது சஸ்பென்ஸு ;-)

நாமக்கல் சிபி said...

//ஒரு வார்த்தை சொல்ல ஒரு வரு...~~~~~~~~~ வந்து கிட்டே இருக்கு சிபிக்கு. அது சஸ்பென்ஸு ;-)
//

அட! இதிலென்ன சஸ்பென்ஸூ!
சீக்கிரம் சொல்லுங்க தெகா!

ஹி.ஹி,.

Thekkikattan|தெகா said...

ச்சிபி,

//அட! இதிலென்ன சஸ்பென்ஸூ!
சீக்கிரம் சொல்லுங்க தெகா! //

இருங்கானும், நீங்க தூங்கி எழுந்துருச்சு வாங்க, நான் சுடச் சுட ஆவிப் பறக்க "செர்வ்" பண்றேன்... :-)))

Thekkikattan|தெகா said...

கோவி. க,

//தெக்கி அவர்க்ளே... கவிதை முயற்சி நன்றாக இருக்கிறது ... கவிதையுடன் தொடர்பான ஒரு படத்தையும் ஒட்டிவிடுங்கள் மேலும் பொழிவு பெறும்.//

நியாயமாக உங்களுக்கு நான் முதலிலேயே நன்றி சொல்லி இருக்க வேண்டும், சில நேரங்களில் இந்த தெகாவின் மண்டை ரிசீவிங் மோடுக்கு போய்விடும் ;-)) அப்படி இருக்கும் பொழுது சில நேரங்களில் சில மனிதர்களாகி விடுவேன்.

இருப்பினும் இதொ வந்துவிட்டேன், உங்களுக்கு ஒரு பெரிய நன்றியுடன்... "படம்" நீங்கள் சொல்லித்தன் சுட்டு இங்கே போட்டேன். பார்க்கலாம் உங்கள் கையால் வாங்கிய குட்டு எங்கே என்னை இட்டுச் செல்கிறது என...

Thekkikattan|தெகா said...

பொன்ஸூ,

***களைத்த - ஓய்ந்து போவது! //

இதே போன்ற அடுத்த சொல்லான கலாய்த்த என்பதற்கு விளக்கம் இங்கே//

இருந்தாலும் உங்க அடம் தாங்கள... 'களைத்த - கலாயத்தல் ரெண்டுக்கு முடிச்சுப் போட்டு என் வீட்டு ஆட்கள உங்க சங்கத்துப் பக்கம கூட்டிட்டு போறீங்கள...

இர்ந்தாலும் என் கவுஜாவைப் பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலேயே.. :-)

Related Posts with Thumbnails