Wednesday, June 07, 2006

சாத்தான் தினமாம் இன்னிக்கு...

இன்னிக்கு என்னமோ சாத்தானின் தினமாம், எது இன்னிக்கு தொடங்கினாலும் அது விளங்காதாம், ஏன்னா 6.6.06 எந்த புத்தகத்திலோ யாரோ எழுதி வைத்திருக்கிறாரம். அதான் இந்த பதிவெ இன்னிக்கு தொடங்கி வைப்போமின்னு...ஹி...ஹி...ஹி.

ஏங்க மனித மண்டை எப்பப் பார்த்தாலும் கோணங்கித்தனமா யோசிச்சு வைக்கிது. இப்பெ இந்த நாள்லெ பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஒரு மாதிரியா பார்க்கப் படணுமாம், அதினாலே காலச்சாரங்களின் அதிபதியான அமெரிக்கா நாட்டில் வாழும் சில சிறப்பு ஜந்துக்கள் குழந்தை பிறப்பு தேதியை தள்ளி போட்டுக் கொண்டதாம். கருமமுட சாமீ.

அப்படித்தான் பிறந்து வைத்து விட்டால் அக்குழந்தைகளை என்ன பண்ணுவது? சரி, இது போன்ற ஒரு விசயம் இருக்கிறது என்பதனை அறியாத நாட்டில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? எதோ எனக்கு இதற்கும் நம்மூரில ஜாதகம் குறைந்த பட்சம் 10 பொருத்தம் பார்த்து பண்ணுவதற்கும் தொடர்பு இருப்பதாக தோன்றுகிறது. அவ்வாறு ஒரு பொருத்தமெல்லாம் இருக்கிறது என்று தெரியாமலேயே திருமணம் செய்து கொள்ளும் மக்களின் கதை என்னவாகிறது?

அது போலவே என் சாமீயை கும்பிட்டதான் நேர் பேருந்தில் செர்க்கம் இல்லென்னா... அப்படின்னா, அப்படி ஒரு சாமீ இரு(ந்துரு)க்கிறார் அப்படின்னு தெரியாதவங்க எல்லாம் என்னாவாகிறார்கள், இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது... ?

ஒண்ணுமே புரியலே உலகத்திலே... வட்டம் பெரிசாக பெரிசாக நிறைய கேள்விகள் மட்டுமே எஞ்சி நிற்கிறது எனக்கு.

21 comments:

இலவசக்கொத்தனார் said...

அண்ணா,

இந்த மாதிரி விஷயமெல்லாம் பத்தி யோசிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு அரசமீனவன் வுட்டுகிட்டு உக்காந்தீங்கன்னா எல்லா கேள்விக்கும் பதில் வரும். அதவிட்டுட்டு சும்மா இங்க வந்து புலம்பினா என்ன ஆவறது?

பொன்ஸ்~~Poorna said...

எரிக்கிறதுக்கு அப்புறம் பொறக்கற நேரத்துக்குத் தாவிட்டீங்களா!!

நம்மூர்ல மட்டும் என்ன வாழுதாம்.. நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று நேரம் பார்த்து சிசேரின் செய்பவர்கள் இருக்கிறார்களே.

தெ.கா.. இதெல்லாம் சும்மா.. ஏதோ ஒரு நாள் நல்ல நாள்னு சொல்றது போல, ஒரு நாள் கெட்ட நாள்.. அம்புட்டுத் தான்.. எதுக்கு இதைப் போய் பெரிசா எடுத்துகிட்டு, பதிவு போட்டுகிட்டு?!!!

துளசி கோபால் said...

தெ.கா,
எனக்கும் இப்பத்தான் ஞாபகம் வருது. எங்க அக்கா ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலே
படிச்சுக்கிட்டு இருந்தப்ப நடந்துச்சு.
அப்ப புதுசா வந்துருந்த போப் 666 வது போப்பாம். உலகம் அழிஞ்சுரும். நல்லதுக்கில்லைன்னு
சொல்லி கிட்டு இருந்தாங்களாம் பள்ளிக்கூடத்துலே.

அதை உண்மைன்னு நம்பிக்கிட்டு, நாளைக்குதான் உலகம் அழியப்போகுதே, என்னத்துக்கு
ஸ்கூல் போகணுமுன்னு முக்கியமான ஒரு பரிட்சைக்கு அக்கா போகலை.

விஷயம் தெரிஞ்சு அம்மாகிட்டே( எங்க அம்மா) நல்லா திட்டு வாங்குனாங்க. அடுத்தவங்க
வாங்குன திட்டு, அடி எல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்!.

சம்பவம் நடந்தே ஒரு 45 வருசம் இருக்கலாம். இதுவரைக்கும் ஒண்ணும் ஆகலை.

துளசி கோபால் said...

ஆமாம் பொன்ஸ்,

//இதைப் போய் பெரிசா எடுத்துகிட்டு, பதிவு போட்டுகிட்டு?!!!//

எதுக்கு இப்படி பின்னூட்டமெல்லாம் போட்டுக்கிட்டுன்னும் சேர்த்திருக்கலாம்:-)))))

கஸ்தூரிப்பெண் said...

இது இரண்டாமாயிரத்து ஆண்டு உலக அழிவு கதைப் போலத்தான். ஆனால் சுனாமி வந்து தாக்கப் போவதை மட்டும் out of syllabus –ல் விட்டு விட்டார்களே அதுவேத்தான்.
“நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும்” என்று பாடி உலாவ வேண்டிய நேரம்.

ஜோ / Joe said...

ஒரு பக்கம் நம்பிக்கை இப்படி இருக்க ,மறு புறம் சீனர்களுக்கு 666 என்பது மிகவும் அதிர்ஷ்ட எண்ணாம் .கோக்கியான் என்ற சீன மொழி வடிவத்தில் 6 என்ற எண்னை உச்சரித்தால் அதில் அதிர்ஷ்டம் என்ற அர்த்தம் வருமாம் .எனவே 666 என்பதால் மும்மடங்கு அதிர்ஷ்டமாம் .மலேசியாவில் திருமணப்பதிவு அலுவலகங்களில் 6/6/06 அன்று தள்ளுமுள்ளு ஏற்படுகிற அளவுக்கு கூட்டமாம் .ஏகப்பட்ட சீன ஜோடிகள் இந்த நாளில் திருமணம் செய்து கொண்டால் மும்மடங்கு அதிர்ஷ்டம் என்பதால் இந்த நாளில் திருமணம் செய்துகொண்டார்களாம்,

நாமக்கல் சிபி said...

இந்த மாதிரி ஒரு நாள் இல்லாம போயிருந்தா இப்படி ஒரு பதிவு போட வாய்ப்பு கிடைச்சிருக்குமா தெகா?

தாணு said...

மூட நம்பிக்கைக்கு மேல் நாடுகளும் தப்பவில்லை. தன் மீது நம்பிக்கையற்று அலைபவர்கள் எந்த தேசத்தில் இருந்தாலும், இப்படித்தான் இருப்பார்கள்

அன்புத் தோழி தயா said...

06.06.06 நான் அன்னிக்கு ரொம்ப சந்தோசமாயிருந்தேன் எந்த சாத்தானும் என்கிட்ட வரலயே???

Thekkikattan said...

இ.கொ,

//ஒரு ரெண்டு அரசமீனவன் வுட்டுகிட்டு உக்காந்தீங்கன்னா //

முதல்லெ ஒண்ணுமே புரியலே 'அரசமீனவனா அப்படியே உட்கார்ந்துட்டேன். அப்புறமா, தெளிவுரை பெற்றவுடந்தான் புரிஞ்சுச்சு.

அது வும்மைதான் சாமீ... மண்டையை சுத்த விட்டா எல்லா கேள்விக்கும் டக் டக்குன்னு விடை கிடுச்சுடுது. இன்னிலெருந்து நீவீர் தான் எனக்கு 'குரு.' பிடியுமையா வுமது தட்சினையாக நான்கு அரசமீனவனெ... கவனிக்க எனக்கு ரெண்டு ரெகமெண்ட் பண்ணியாதால் வுமக்கு நான்கு. குருவை மிஞ்சிய சீடனாக வேண்டாம் என்ற mindfullness-வுடன் ;-)))

Dharumi said...

இதுல உங்க ஊர்ல ஒரு அம்மாவுக்கு 6 பவுண்டு வெயிட்ல ஒரு குழந்தை பிறந்திருச்சின்னு அந்த அம்மாவுக்கு ரொம்ப கவலைன்ன்ய் சன் டிவியில ஒரு செய்தி...எந்த ஊருக்குப் போனாலும் மடத்தனங்களுக்குக் குறைவில்லை.

Sivabalan said...

தெ கா,


நாம் அனைவரும் கடவுள் and சாத்தான்...

Belated B'day Wishes to Everyone...

Thekkikattan said...

பொன்ஸு...

//எதுக்கு இதைப் போய் பெரிசா எடுத்துகிட்டு, பதிவு போட்டுகிட்டு?!!!//

நீங்க சொல்றதும் சரிதான், நானும் இந்த நாள்லெ ஏதாவது எழுதணுமே அப்படின்னு யோசிக்கிறப்போ இந்த விசயம் கண்ணுலெ மாட்டினுச்சு... அதான் போட்டு தாக்கிப்புட்டேன்...

எல்லா ஊருலெயும் இந்த கதை இருக்கத்தான் செய்து... ஆமாம் நீங்க என்ன ரொம்ப சிந்திக்கிறீங்க... உங்க அர்டிகிள் படிச்சேன் தருமியோடதிலெ, அசத்துப்புட்டீக போங்க

பொன்ஸ்~~Poorna said...

// உங்க அர்டிகிள் படிச்சேன் தருமியோடதிலெ, //
அட, தெகா, நீங்க வேற.. அது தருமியோட ஆர்டிகில்.. நம்ம வெறும் பின்பாட்டு தான் :) ..

மெயின் தொடரைப் படிங்க.. ரொம்ப நல்லா இருக்கு.. உங்க இப்போதைய ஏன் இப்படியோட நிறைய ஏன் இப்படிக்கள் வந்து விழுவது கியாரன்டி :) நாலைந்து பதிவு போட மேட்டரும் கிடைக்கலாம்.

Thekkikattan said...

துள்சிங்க...

//அப்ப புதுசா வந்துருந்த போப் 666 வது போப்பாம். உலகம் அழிஞ்சுரும். நல்லதுக்கில்லைன்னு
சொல்லி கிட்டு இருந்தாங்களாம் பள்ளிக்கூடத்துலே.//

அப்பொ அழியாமல் இருந்ததால்தான் எப்படியாவது 1999-லெ வைச்சு கதையை முடிச்சுப்புடுவோமின்னு Y2K பிரட்சினையெ எடுத்தும் நீங்க மசிஞ்சு கொடுக்கலேயே... சரி திரும்ப எங்களுக்கு ஒரு 2999 வராமலா போகப் போகுது அப்ப வைச்சுகிடுறோம்...

எது எப்படியோ ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஜாலிதான் குறைந்த பட்சம் ஒரு நாள் லீவ்... அதெல்லாம் அனுபவிச்சு பார்த்தாத்தான் தெரியும்... மழை, புயல் இப்படி ஏதாவது ஒண்ணு வந்த அடடா :-)))

பசுமையான நினைவுகள் அப்படியே வைச்சுருக்கீங்க...

பதிவு போட்டு நானும் அப்பெப்பா உள்ளேன் அய்யா சொல்லலேன்னா என்னை எல்லோரும் மறந்துடுவீங்க அதான் இப்படி ஒண்ணே போட்டேன்... பரவயில்லை ஒரளவிற்கு மொய் (பின்னூட்டம்) விழுந்துருக்கு... பொன்ஸுக்கு சிறப்பு நன்றி... இப்பெல்லாம் அடிக்கடி என் வீட்டுப் பக்கம் வந்து ரவுண்ட்ஸ் விட்டுட்டு போறாதுக்கு... அவங்களெ பார்த்த கொடுத்துடுங்க என் நன்றியெ!

பொன்ஸ்~~Poorna said...

வந்து பார்த்து நீங்களே நன்றி குடுப்பீங்களா.. என்ன தெகா இது:)

எப்படியோ, சாத்தான் தினம் உங்களுக்கு ரொம்ப லக்கியாய்டுச்சு :)

நாமக்கல் சிபி said...

//06.06.06 நான் அன்னிக்கு ரொம்ப சந்தோசமாயிருந்தேன் எந்த சாத்தானும் என்கிட்ட வரலயே???
//

இங்கன உக்காந்து பதிவு எழுதிகிட்டு இருக்கும்போது அங்க எப்படிங்க வரும்?

டபுள் ஆக்டெல்லாம் நம்ம ஆள் குடுக்க மாட்டார்.

:-)

நாமக்கல் சிபி said...

//முதல்லெ ஒண்ணுமே புரியலே 'அரசமீனவனா அப்படியே உட்கார்ந்துட்டேன். அப்புறமா, தெளிவுரை பெற்றவுடந்தான் புரிஞ்சுச்சு.
//

இப்ப தெரிஞ்சிகிட்டீங்கள்ள!
அரசமீனவனை பக்கத்துல வெச்சிகிட்டு தெளிவு பத்தி தெளிவா பேசுறீங்க! டூப்ளிகேட் சரக்கா இருக்கப் போகுது!

Thekkikattan said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணெ தாங்கள் முதல்வரவு இங்கு நல்வரவாகுக!

//ஆனால் சுனாமி வந்து தாக்கப் போவதை மட்டும் out of syllabus –ல் விட்டு விட்டார்களே அதுவேத்தான்.//

ஒண்ணும் வேணாம் இந்த Prophets-களெ அடுத்த புயல் எப்ப என்னிக்கு கரையெ கடக்கும் அப்படின்னு சொல்லச் சொல்லுங்கள் அப்புறமா நாம நம்புவோம் இரண்டாயிரம் வருஷம் கடந்து என்ன நடக்கப் போகுது அப்படிங்கிற விசயத்தை...

1999, 2999 அப்படின்னு உலகம் அழியிறத்துக்கு நாமலா பார்த்து நாள் குறிச்சா நாமெலே பார்த்து ஒரு உலகப் போரையும் தொடங்கி வச்சுகிட்ட இரண்டும் மேட்ச்சாகிடுமில்லெ... இது லாஜிக்லா இருக்குதில்லெ

Thekkikattan said...

வாங்க ஜோ,

நன்றி, மேலும் புள்ளிவிபரங்கள் கொடுத்து உதவியதற்கு. அது ஏன் அப்படி கிழக்கத்திய நாடுகளில் மாத்திரம் அப்படி?

Thekkikattan said...

சிபி,

கிட்டதட்ட அப்பிடித்தான்னு வைச்சுக்கங்ளேன், தேடிகிட்டு இருந்தேன் இது கிடைத்தது போட்டுட்டேன்.

தாணு,

முதல் முறையா நம் வீடு வந்திருக்கிங்க, வாங்க வாங்க... எந்த நாட்டுல இருந்த என்ன, சட்டியிலெ இருந்தா தானே அகப்பையிலெ வரும்... :-)

அன்புத் தோழி,

சந்தோஷமா இருந்தீங்களா... ஏன் ரொம்ப வேண்டியவர் யாரும் அன்னிக்கு பதிவு போடலயா? :-)))

Related Posts with Thumbnails