Friday, June 09, 2006

*மதம் தேவையா* - "அ.குமாருக்கு" ஒரு பதில்

இங்கு நண்பர் அருள் ஒரு பதிவு மதம் தேவையா என்ற தலைப்பில் ஒரு கேள்வியை வைத்துள்ளார், அங்கு சென்று படித்துவிட்டு இதனை தொடர்ந்தால் வால் தலை புரியும் எதனைப் பற்றியது இப்பதிவு என்பது... ஒரு நடை இதிலேஏறி போயிட்டு வந்திடுங்க ப்ளீஸ்...

ஒகே அருள், மதம் என்பது எதுவரைக்கும் என்பதனைப் பார்ப்போம். தாங்களுக்கு தனது சிறு வயதில் தி.க மக்களையும் அவர்களுடன் தங்களுக்கு அவ்வளர்ச்சிக்குரிய இறை நம்பிக்கைகளுடன் தர்க்கிக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது, சரியா? அவ்வாறு அவ் மன நிலைக்கு இட்டுச் சென்றது எது? தாகம்! அத் தாகமும் தேடலும் இருக்கு வரைதான் நீங்கள் ஒரு சூழலில் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எதிலிருந்து "நீச்சல் எது" "மிதத்தல் எது" என்ற வித்தியாசங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு, இல்லையா?

ஓஷோவிற்கு தனது குழந்தைப் பருவமொட்டியே அத்தாகமும் மிதப்பதற்கான நல்ல சூழலும் அவரைச் சுற்றி தனது பாட்டானர் மூலமும் இதர விசயங்கள் மூலமும் வாய்த்திருந்தன. ஆனால், நம்மை போல conditioned சூழ்நிலையில் சிக்கித் தவித்தவர்களுக்கு அப் பசி நம்மை நாமே ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் வரைக்கும் தொடர வேண்டி வருகிறது.

எந்த நாள் வரை என்றால் ஒஷொ ஒரு "சிவப்பு சாமியார்" கிடையாது என்பதனையும் அவரது புத்தகங்களை தானே பணம் கொடுத்து வாங்கி படிக்கும் காலம் கிட்டும் வரை (ராணி என்ற பத்திரிகை ஒரு காலத்தில் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைந்த காலத்தில் ஒஷொவைப் பற்றிய ஒரு விஷப் பிரச்சாரம் நடத்தி வந்தது... ஒஷொ ஒரு செக்ஸ் சாமியார் என்று... அது போன்ற வாரப் பத்திரிகைகள் வாங்கி படிக்கும் ஒரு விழிப்புணர்வற்ற மக்களிடையே வாழும் சூழலிருந்து விலகி).

அந் நாளை நாம் எட்டும் வரை இந்த மதம் சார்ந்த கோட்பாடுகளை சுவைத்து எது கிட்டுகிறது என்பதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம், அல்லவா? எல்லா வரையறுக்கப்பட்ட புத்தகங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் ஒரு எல்லையும் உண்டு அல்லவா? அவ் எல்லையைத் தொட்டு கேள்விகள் மட்டுமே எஞ்சும் பொழுது, தேடலும் தொடர்கிறது. அத் தேடலே உங்களை "மித, நீந்ததே" என்ற விழிப்புணர்விற்கு இட்டுச் சென்றது எனலாமா?

மனம் என்பது பரிணாமங்களை சந்தித்து தினமும் மாற்றங்களின் ஊடே பயணித்து நாம் விழிப்புற்று திறந்த நிலையில் இருக்கும் பொழுது மட்டுமே "மிதக்கும் நிலையை" எட்ட வாய்ப்பளிக்கிறது. அவ்வாறு அற்ற நிலையில் இருக்கும் பொழுதுதான், நாம் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தும் எழுகின்றன வீழ்கின்றன.

எனவே மதங்கள் ஒருவனை கேள்விகள் கேட்கும் விழிப்புணர்வு நிலைக்கு இட்டுச் செல்வதற்கும் உதவலாம் அல்லவா? ஒரு விசயத்தைப் பற்றி தர்க்கம் செய்வதற்கு, ஒன்று அவ் விசயத்தைப் பற்றி நன்கு படித்து கிரகித்திருக்க வேண்டும், அல்லது "அதுவாகவே" இருந்து வாழ்ந்து அனுபவித்து இருந்து இருக்க வேண்டும். என்னை பொருத்த மட்டில் நான் இரண்டாவது சாரத்துடன் இணைத்துக் கொள்வேன். ஏனெனில் நீ அதுவாகவே வாழ்ந்துருக்கிறாய் எனும் பொருட்டு நல்லது கெட்டது இரண்டுமே புசித்திருக்க வேண்டும்.

இது தருமி அவர்களுக்கு கிட்டியது, அவரின் தாகம் அந்த புத்தகத்துடன் (பைபிள்) தடைப்பட்டு போகவில்லை, எனெனில் அவரின் விழிப்புணர்வு நிலை மேலோங்கி இருக்கக் காரணமாக அம் மதம் சார்ந்த வழிபாடுகள் மற்றும் இத்தியாதி விசயங்கள், அவரது தாகத்தை மென்மேலும் அதீதப் படுத்திய காரணியாகக் கூட இருந்திருக்காலமல்லவா?

அந்த ஒரு சிறு பாதையே அவரை இன்று நம்மிடையே கொணர்ந்து நம்மையும் சிந்தனையோட்டத்தில் கலக்கவைத்தது எனலாமா? இருப்பினும் அது ஒரு தனிமனிதனிரின் உழைப்பு, தேடல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதனால அவருக்கு divine force-ல் நம்பிக்கையிருக்காது என்று நான் கூறிவிட மாட்டேன், "அவரின் விழிப்புணர்வு நிலை மற்றொரு தளத்திற்கு உயர்ந்திருக்கிறது, அவ்வளவே" என்பது எனது நிலைப்பாடு.

மதத்தினால் கட்டுண்டு போவதில் எனக்கும் உடன்பாடு கிடையாதுதான். இருப்பினும் மதங்கள் ஒரு அரண் போல நாம் விபரம் தெரியாத வயதில் நம்மை நெறியிட்டு வழி நடத்தி அவ் விழிப்புணர்வு நிலைக்கு எட்ட உதவுகிறது. ஒரு சமூதாயம் விபரம் தெரியாத வயது மக்களை வழி நடத்தி மதம் அற்ற சூழலில் எடுத்துச் சொல்ல முடியாது எனென்றால், நம்மில் நிறைய "பெரிய சிறியவர்களின்" மனம் அடைபட்டு "அ" நிலையிலேயே தடைப்பட்டு கிடப்பதால் தான்...

தேடல் உள்ளவருக்கு தித்திக்கும் தேன் இவ் வாழ்கை, அவருக்கு நல்ல இரவுத் தூக்கமும் கிட்டலாம் எப்படியெனில் திறந்த மனது இருப்பதால் அவர் எதற்காகவும் அஞ்சத்தேவையில்லை எதனையும் ஏற்கலாம், இழக்கலாம் என்ற நிம்மதியுடன் இருப்பதால்.அவ்வாறு மதமே அற்ற சூழலில் எல்லா மக்களும் விழிபுணர்வுற்று "மித, நீந்ததே" நிலையை எட்டியிந்தால் மட்டுமே நம்முடைய பிள்ளைகளுக்கும் அந்த "state of mind concept"-யை வாழ்ந்து விட்டுச் செல்ல இயலும். அரிதுப் பெரும்பான்மையினோர் அவ்வாறு தேடலற்ற, சுய சிந்தனையற்ற ஒரு சூழலில் வாழும் பொருட்டு, எப்படி தரம் பிரித்து எதில் "உண்மை" இருக்கிறது என்பதனை அறிவது?

மற்றுமொரு கபடமற்ற செயலுடன் நானும் எனது வீட்டாரும் இருந்ததை நினைவு கூர்ந்து அத்துடன் எனது இந்த நீண்டு போன பின்னூட்ட பதிலை நிறுத்திக் கொள்கிறென். நான் பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருப்பதற்கும் முன்புதான் என்று நினைக்கிறேன் ஒரு ஃபாஷனுக்காக ஃபான்சி கடையில் விற்ற சிலுவையும், பிறையையும் கருப்புக் கயிற்றில் அணிந்த திரிந்த ஞாபகம் இங்கு வந்து போனது. மேலும் எனது அம்மாவின் பூஜை அறையில் மேரியும், குழந்தை ஏசுவும் சிறு கற்சிலையாக ஏனைய இந்துக் கடவுளர்களின் வரிசையில் கொலுவீற்றிந்ததும் நினைவில் வந்து போனது. அது எனது தங்கையின் விருப்பத்திற்காக (மத நல்லிணக்க கருத்து {எங்களுக்கு இன்று இருப்பதற்கு} எனது பெற்றோர்களின் "மித, நீந்ததே" என்ற சுய வெளிப்பாடு ஒரு காரணமோ?).

ஆக, இந்த மதங்கள் கோட்பாடுகள் நிரம்ப படித்தவர்களுக்கும், நிரம்ப விபரம் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே ஒரு விசயமாக படுகிறது. அது ஏன்?

மனம் எவ் நிலையிலும் திறந்திருப்பவர்களுக்கும் சுயத் தேடல் உள்ளவர்களுக்கும் என்றென்றும் "மித, நீந்ததே கான்செப்ட்" சாத்தியம். புல் தானகவே வளர்கிறது, மீண்டும் ஒஷொ ;-))

பி.கு: நான் *எரிக்கிறதா இல்லெ புதைக்கிறதா* என்ற ஒரு பதிவை இங்கு இட்டு வைத்ததிற்கும் ஒரு காரணமுண்டு. அதுவும் மனத் திறப்பு பற்றிய ஒரு திறனாய்வே...

12 comments:

Sivabalan said...

தெ கா

உங்கள் வழக்கமான ஸ்டைல் இங்கே மிஸ்ஸிங்.

எனினும் அருமையான பதிவு. மீன்டும் மின்டும் படித்தால்தான் புரியும் என்று நினைக்கிறேன்.

ஆனால் உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன்.

இவ்வளவு காலம் மதங்களால் ஏற்பட்ட் நல்லதைவிட இப்போழுது நடக்கும் தீமைகளே அதிகம். இந்நிலையில் இந்த மத்ங்கள் தேவையா என்பதுதான் என் கேள்வி.

பொன்ஸ்~~Poorna said...

தெகா, ஒரு முறை ப்ரூப் ரீட் பண்ணுங்களேன் ப்ளீஸ்!! ரொம்ப கஷ்டமா இருக்கு படிக்க..

Other wise please mail me and will tell u my issues :)

நாமக்கல் சிபி said...

மதம் எதற்காக?

பொன்ஸ்~~Poorna said...

தெகா, வந்து மொய் போடுங்க!! :)

Thekkikattan said...

உங்களுக்கெல்லாம் ஏன் புரியாமப் போனதுன்னு இப்பதான் எனக்குப் புரியுது :-))). நான் நிறைய விசயங்களே சும்மா மேலோட்டம தொட்டு விட்டுட்டு போயிட்டேன்...புரிவது மாதிரி சொன்ன பல வீட்லெ வாங்கி சாப்புட்டுபிட்டு வெளியே திரும்பி எடுத்து வைச்ச மாதிரி...

இந்த் "புல் தானகவே வளர்கிறது"... அதனை தொடர்ந்து ஒரு சிரிப்பு இப்படியெல்லாம் போட்ட யாருக்குத்தான் பிரியும். புல் தானகவே வளர்கிறது அப்படிங்கிறது ஒஷொவோட மற்றொரு புத்தகத் தலைப்பு...அதுவும் "மித, நீந்ததே" என்ற ஆழமான விசயத்தை சுருக்கி கொடுப்பது போலவே அமைந்து போனது. புரியரப்ப பிரியும். இல்லேன்னா நான் திரும்ப எல்லாத்தையும் அழிச்சுட்டு திரும்ப எழுதவா... என் பேனாவிலெ வேற இங்க் இல்லை... ஹீம் கொஞ்சம் சிபியோ, பொன்ஸுவோ ரீஃபில் பண்ணிகொடுத்த பண்ணலாம்... ;-))

இல்லென்னா இது ஒரு புரியாக் கவிதை... அதையும் தாண்டி புனிதமாக இருந்து விட்டு போகட்டும்...

நாமக்கல் சிபி said...

தெகா!

ஒரு சிலருக்கு புரியலைன்னா எல்லாருக்கும் புரியலைன்னு பொருளல்ல! நீங்க பாட்டுக்கு உங்க கருத்துக்களை சொந்த பாணியில சொல்லிகிட்டே இருங்க!//இல்லென்னா இது ஒரு புரியாக் கவிதை... அதையும் தாண்டி புனிதமாக இருந்து விட்டு போகட்டும்//

இது கோட நல்ல ஐடியா! புரிஞ்சா பதிவு, இல்லேனா கவுஜ!

பொன்ஸ்~~Poorna said...

இப்போ என்னன்னு சொல்றீங்க? ஓஷோ சரியா? இல்லையா? இனி இந்தப் பக்கம் வந்தா ஓஷோவைப் படிச்சிட்டு தான் வரணும் போலிருக்கே..

நாகை சிவா said...

திரு. தெக்கி காட்டான்!
உங்களை ஆறு பதிவிற்கு அழைத்து உள்ளேன். கொஞ்சம் கருணை காட்டி(நேரத்தை ஒதுக்கி) ஒரு ஆறு பதிவை போடவும்.
சுட்டி இதோ.
http://tsivaram.blogspot.com/2006/06/blog-post_17.html

Dharumi said...

எல்லோருக்கும் கல்யாணம் தேவையா? - இதற்குப் பலரும் தரும் வழக்கமான பதில்:YES, since it is an UNAVOIDABLE evil.

மதங்களும் இந்த category-ல்தான் வருகிறதோ?

மதங்கள் தனிமனிதனுக்கு நல்லதாகத்தான் அமைந்து விடுகின்றன - அதனால் தான் மதங்களை போலீஸுக்கு ஒப்பிடுவார்கள்.
ஆனால் சமூகத்திற்கு என்று வந்துவிட்டால் ஆதி காலத்திலிருந்தே இந்த மதங்கள் எல்லாமுமே - எந்த exception-ம் இன்றி - கெடுதல்களே விளைவித்ததாக, நானல்ல, வரலாறுகள் கூறுகின்றன.

Anonymous said...

what language is this? i just chanced upon this blog!

Thekkikattan said...

//இப்போ என்னன்னு சொல்றீங்க? ஓஷோ சரியா? இல்லையா? இனி இந்தப் பக்கம் வந்தா ஓஷோவைப் படிச்சிட்டு தான் வரணும் போலிருக்கே..//

ஒஷோ ஒரு தவறாக புரிந்து கொள்ளப் பட்டவர் என்று ஒரு புத்தகமே இருக்கிறது. ஆனால் நாம் அவர் சொல்ல வருவதை புரிந்து கொள்ள அவரின் படைப்புகளை சுவைத்திருந்தால் தான் உங்களின் பார்வைக்கு அவர் யார் என்பதனை கூற முடியும். எனவே அவரின் படைப்புகளை முயற்சித்துப் பாருங்கள்.

S. அருள் குமார் said...

மன்னித்துக்கொள்ளுங்கள் தெ கா.
இப்போதுதான் உங்களின் இந்த பதிவைப் பார்க்கிறேன். மேலோட்டமாகப் பார்த்ததில் சில விஷயங்கள் புரியவில்லை. மீண்டும் பொருமையாக படிக்கவேண்டும். நான் கவனிக்காமல் விட்டதற்கு மன்னிப்பு கேட்க்கவே இந்த மறுமொழி :)

//"புல் தானகவே வளர்கிறது"... //

கீழ்காணும் வருகள் இதை முழுமைப்படுத்தலாம்:

சும்மா உட்கார்ந்திருக்கிறது
அமைதியாய்,
புல்
தானாகவே வளர்கிறது
வசந்தம் வரும்போது.


நன்றி.

Related Posts with Thumbnails