Monday, June 19, 2006

இதோ எனது ஆறு...

என்னை ஆறுடன் இணைத்த நாகை சிவாவிற்கு நன்றிகளுடன் எனக்குப் பிடித்த ஆறுகள் இங்கே...

I பிடித்த ஆறு மனிதர்கள்:

* பயணத்தின் பொழுது அருகே அமர்ந்திருக்கும் எவரும்...

* சட்டை போடத எங்கள் ஊர் ஊமையன் (பெயரளவிற்கு)...

* எனது நல்ல நண்பர்களாகிப் போன அப்பாவும், அம்மாவும்...

* எனது குட்டி நண்ப-மகன்...

* வாழ்கையை நிஜமாக வாழும் எவரும் (உள்ளொன்று வைத்து புறமொன்று)...
* போரட்டமே வாழ்வாக வாழ்ந்து இப்பொழுதும் ஜெயிக்கத் துடிக்கும் எந்த மனிதர்களும்...

II பிடிக்கமலேயே(பிடித்து) செய்து வருவது:

* கண், காது போலவே இப்பொழுது ஒட்டிக் கொண்டு திரிய எத்தனிக்கும் செல் ஃபோன்...

* பெட்ரோல் போடும் பொழுது என் வாகனத்தின் மீது ஏற்படும் வெறுப்பு...

* சாரை சாரையாக போகும் கார்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு நெளிவது...

* வீட்டினுள் தமிழ் சப்தம் கேட்பதற்கென இருக்கும் சன் ட்டி.வி...

* வீட்டிற்குள் நடக்கும் வெட்டிப் பஞ்சாயத்து...

* மிதந்து பேசும் அன்பர்களுடன் உரையாடல்...

III எப்பொழுது வேண்டுமானாலும் செய்ய விரும்புவது:

* மிஸ்டியான காலையில் தனிமையில் காட்டிற்குள் சென்று பறவைகளின் சப்பதத்தை பருகுவது...

* மழை பெய்யும் பொழுது மழைக் காடுகளில் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டே அதன் அழகை ரசிப்பது...

* மழைத் துளி சிலீர் சிலீரென்று முகத்தில் அறையெ கண்ணை குறுக்கிக் கொண்டு டூ-வீலர் ஓட்டுவது...

* இப்பொழுது பழகிப் போன அட்லாண்டா - நூ யார்க் கார் பயணம், தன்னந் தனியே சிந்தனைகளினூடையே பாடல்கள் மட்டுமே உணவாக அருந்தி 18 மணி டிரைவிற்கு பிறகு தரிசனம்...

* இந்தியாவில் எங்கே போகிறோம் என்று தெரியமாலே பயணிக்கும் நீண்ட தூர ரயில் மற்றும் பேருந்துப் பிரயாணங்கள்...

* ஹிமாலய மலையோரங்களில் பேருந்தில் அமர்ந்து கீழே வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்குகளை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ந்து விடலாம் என்ற நினைவுக்கூடேயே பயணித்துக் கொண்டே அதன் அழகைப் பருகுவது...

IV வாழ்வின் பிரமாண்டங்கள் என நான் எண்ணி பிரமிப்பது:

* எப்படி உலகில் உள்ள இந்த ஏழு பில்லியன் மக்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாச வித்தியாசமாக இருப்பதை காணும் பொழுது, இயற்கையின் பிரமிப்பை கண்டு மலைத்துப் போவது...

* எப்படி நாம் சிந்திக்கும் விதம் நம்மை யார் என்பதனை நிர்ணயிக்குது என்பதனை சிந்திக்கும் பொழுது...

* பஞ்சம், பட்டினி என்பது எப்படி ஒரு சாரருக்கு மட்டும் சொந்தமாகிப் போனது என்று பார்க்கும் பொழுது...

* பஞ்சத்திலிருந்து தப்பித்து மூணு வேளை சாப்பாடு நிச்சயம் எனும் நாளில் வானத்தை அண்ணாந்து பார்க்க கற்றுக் கொண்ட மனிதம்...

* எப்படி மனித மனம் மட்டும் "இப்படியும்" "அப்படியும்" எண்ணக் கற்றுக் கொண்டது... அவர் அவர்களின் தேவைகளுக்கேற்ப...

* திறந்த கதவின் நிலையை பிடித்துக் கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டு ஏதோ நீண்ட பிரயாணம் பூமிப் பந்தில் இருந்து கொண்டு செல்வதாக எண்ணித் திளைப்பது - ஏனைய கோள்களின் இருப்பும், அதன் சுழற்சியும், பால் வீதிகளின் மிதப்பும் அதன் பயணங்களும், பிறகு இப் ப்ரபஞ்சத்தின் அகன்ற விரிவடையும் தன்மையினை நினைவிற் கொள்ளும் பொழுது ஏற்படும் மலைப்பு - இரவு வானம்.

V படித்ததில் மனதில் தைத்தது:

* தே தேர்டு சிம்பன்சி - ஜேர்டு டைமண்ட் எழுதியது, ஒரு பரிணாம சிந்தனையூட்டு புத்தகம் - மனித விலங்குகளைப் பற்றியது...

* த புக் - ஆலன் வுட்ஸ் எழுதியது, எல்லா மதங்களையும் தோலுரித்து, மதங்கள் எப்படி மனிதனுக்கு சங்கிலியிட்டுச் சென்றிருக்கிறது என்று காட்டும் பொருட்டு உள்ள தத்துவப் புத்தகம்...

* ஓஷொ எழுதிய அருதிப் பெரும்பான்மையான படைப்புகளும்...

* டீபக் சாப்ராவின் சில படைப்புகளும் அவரின் எண்ண ஓட்டமும்...

* பால்ய வயதில் படித்த தி. ஜா-வின் மோக முள்... (சில வருடங்களுக்கு முன்பு படித்த "த அல்கெமிஸ்ட்" - Paulo Coelho)...

* இன்னும் படித்துக் கொண்டே பிரமித்துக் கொண்டிருக்கும் - ஸ்டீவன் ஹாவ்கிங்-ன் ப்ரபஞ்சம் பற்றி எழுதிய புத்தகங்கள்...

VI என்னை சமீபத்தில் கவர்ந்த ஆறு பேர்:

நிறையெ பேர் இங்கு இருக்கிறார்கள், முன்னமே அவர்கள் இந்த ஆறில் கலந்து விட்டதால் இப் பொழுது சில பேர் என் பார்வையில்...

* தருமி

* ஞானசேகர்

* நாமக்கல் சிபி

* செல்வ நாயகி

* சந்தோஷ்

* கார்த்திக்

19 comments:

துளசி கோபால் said...

// பஞ்சத்திலிருந்து தப்பித்து மூணு வேளை சாப்பாடு நிச்சயம் எனும் நாளில் வானத்தை அண்ணாந்து பார்க்க கற்றுக் கொண்ட மனிதம்...//

இதைத்தான் 'தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்'ன்னு சொல்லி இருக்கு.

Anonymous said...

...திறந்த கதவின் நிலையை பிடித்துக் கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டு ஏதோ நீண்ட பிரயாணம் பூமிப் பந்தில் இருந்து கொண்டு செல்வதாக எண்ணித் திளைப்பது...

அடடே, தெகா என்ன மாதிரியான உலகமைய்யா உங்க உலகம் ((-; மிக அருமை!

சாருமதி

இலவசக்கொத்தனார் said...

என்னென்னமோ சொல்லறீரு. நல்லா இருங்க சாமீ!

Thekkikattan said...

//இதைத்தான் 'தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்'ன்னு சொல்லி இருக்கு. //

ஓ அப்பிடீங்களா துள்சிங்க... ரொம்ப லேட்டாகத்தான் எனக்கு நீங்க சொன்ன கான்செப்ட் புரிய ஆரம்பிச்சுச்சுங்க... ரொம்பபப லேட்... உங்க பேரை என் ஆறில் இணைப்போமின்னு யோசிச்சேன் அப்புறம் உங்க நெலமை தெரியமா செய்யக் கூடாதுன்னு தோணுச்சு விட்டுட்டேன்... :-)

Venkataramani said...

நெம்ப வித்தியாசமாத்தேன் எழுதியிருக்கீக தெ.கா..

//வீட்டினுள் தமிழ் சப்தம் கேட்பதற்கென இருக்கும் சன் ட்டி.வி...//
வெறும் சத்தம்தான் சன் டிவிங்கறீங்களா.. சத்தமா இருந்தா கூட பரவாயில்லை. சீரியல்களின் போது ஏகத்துக்கு இரைச்சலும் அழுகையும்..

//* எப்படி மனித மனம் மட்டும் "இப்படியும்" "அப்படியும்" எண்ணக் கற்றுக் கொண்டது... அவர் அவர்களின் தேவைகளுக்கேற்ப...//
மனிதன் ரொம்ப கில்லாடி.

Thekkikattan said...

சாருமதி,

வாங்க, வாங்க!! என்னமோ மனசில பட்டதே இங்கன சொல்லி வைச்சுப் புடறது... அம்புட்டுத்தேன். நன்றி!

Dharumi said...

எப்படி உலகில் உள்ள இந்த எழு பில்லியன் மக்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாச வித்தியாசமாக இருப்பதை காணும் பொழுது, இயற்கையின் பிரமிப்பை கண்டு மலைத்துப் போவது...//
எனது ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று

நாகை சிவா said...

இவ்வளவு விரைவாக அமர்க்களமாக போட்டு உள்ளீர்க்கள். நன்றாக உள்ளது நண்பரே!

நீங்கள் கூறியவற்றையில் என்னை மிகவும் கவர்ந்தது
//போரட்டமே வாழ்வாக வாழ்ந்து இப்பொழுது ஜெயிக்கத் துடிக்கும் எந்த மனிதர்களும்...//
//எப்படி மனித மனம் மட்டும் "இப்படியும்" "அப்படியும்" எண்ணக் கற்றுக் கொண்டது... அவர் அவர்களின் தேவைகளுக்கேற்ப...//
//எப்படி நாம் சிந்திக்கும் விதம் நம்மை யார் என்பதனை நிர்ணயிக்குது என்பதனை சிந்திக்கும் பொழுது...//

அருமை!
//ஹிமாலய மலையோரங்களில் பேருந்தில் அமர்ந்து கீழே வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்குகளை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ந்து விடலாம் என்ற நிணைவுக்குடே //
நீங்கள் கூறியதை போல நானும் இதை அனுபவித்து உள்ளேன். ஆனால் தமிழகத்தில் மட்டுமே! .(வால்பாறை, ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல்)

செல்வநாயகி said...

இது என்ன விளையாட்டென்று புரியவில்லை முதலில்:)) சங்கிலித்தொடர் போல் எல்லோரும் எழுதுவதென்று புரிந்துகொள்கிறேன். இந்த வரிசையில் உங்கள் பதிவைத்தான் முதன்முதலாகப் படிக்கவும் செய்கிறேன். நேரம் கிடைக்கையில் நிச்சயம் முயல்கிறேன். நன்றி தெக்கிக்காட்டான்.

Thekkikattan said...

இ.கொ,

//என்னென்னமோ சொல்லறீரு. நல்லா இருங்க சாமீ!//

என்னென்னமோன்னா, ஏதாவது உருப்பிடற மாதிரி இருக்குதா?

எங்க ஆட்டத்தா ஆரம்பித்து வைத்த தாயீ (யானையெல்லாம்) இந்த பக்கமே காணோம், என்ன நடக்குது இந்த கூடாரத்திளேன்னு சில நேரங்கள் பிரிய மாட்டேங்கிது, இலவசம்!

நன்றிங்க!

பொன்ஸ்~~Poorna said...

தெகா,
எதைச் சொல்றது, எதை விடுறதுன்னு தெரியலை. நல்லா எழுதி இருக்கீங்க. எல்லாமே நல்லாருக்கு. எல்லாமே எனக்கும் பரிச்சயமானது(other than your people), உங்க புத்தக ரசனையைத் தவிர. அந்த லிஸ்ட்ல நான் இதுவரை படிச்சது பாலோ கோய்லோ மட்டும் தான். அவரோடது எல்லாமே படிச்சிட்டேன். The Alchemist நல்லார்ந்துச்சு. அப்புறம், Eleven Minutes படிச்சீங்களா? Veronica Decides to Die -உம் நல்லா இருக்கும்.

தெகா, நீங்க இதுவரை படிக்கலைன்னா, கண்டிப்பா படிக்க வேண்டியது The Zahir தான். அது உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்..

அப்புறம், பொன்ஸ் பிடிக்காமலேயே(பிடித்து) செய்து வருவது:
தெகாவின் சின்னச் சின்ன எழுத்துப் பிழைகள் படிப்பதற்கு எத்தனை கஷ்டமாக இருந்தாலும் விடாமல் படிப்பது.. கொஞ்சம் ஒரு தரம் படிச்சுப் பார்த்து பப்ளிஷ் பண்ணக் கூடாதா? எனக்காக! :)

Sivabalan said...

தெ கா..,

எல்லா 6ம் சூப்பர்.

// மழைத் துளி சிலீர் சிலீரென்று முகத்தில் அறையெ கண்ணை குறுக்கிக் கொண்டு டூ-வீலர் ஓட்டுவது... //

இது சூப்பரோ சூப்பர்.


உங்கள் பதிவுகளில் இயற்கை விசயங்களைப் பற்றி படிக்க சந்தோசமாக உள்ளது.

நன்றி

Thekkikattan said...

Venkatramani,

//வெறும் சத்தம்தான் சன் டிவிங்கறீங்களா.. சத்தமா இருந்தா கூட பரவாயில்லை. சீரியல்களின் போது ஏகத்துக்கு இரைச்சலும் அழுகையும்..//

பின்னே இல்லையா? வெறும் சத்தம் மட்டுமே... சீரியல் நேரங்களில் லிங்க் ட்டி.வி மாதிரி ஏதாவது தன்னார்வ தொண்டு தொலைக்காட்சி சானல்கள் இருந்தால் அந்த பக்கமா போயிட வேண்டியதுதான் ;-)

வருகைக்கு நன்றி!

Suka said...

அருமை தெகா !

//எப்படி நாம் சிந்திக்கும் விதம் நம்மை யார் என்பதனை நிர்ணயிக்குது என்பதனை சிந்திக்கும் பொழுது...//

வெகு அருமை :)

சுகா

Thekkikattan said...

தருமி,

//எனது ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று//

ஆச்சரியங்கள் தடைபட்டுப் போனால், வளர்ச்சியும் தேக்கமுற்று விடுமோ?

Thekkikattan said...

நாகை சிவா,

நன்றி!

//நீங்கள் கூறியதை போல நானும் இதை அனுபவித்து உள்ளேன். ஆனால் தமிழகத்தில் மட்டுமே! .(வால்பாறை, ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல்)//

என்னுடைய 2 செண்ட்ஸ்: திருமணம் செய்து கொள்வதற்கு முன் முடிந்த அளவிற்கு தனியாக நிறையெ இடங்களுக்கு முடிந்தால் சென்று வாருங்கள். உங்களுக்கு பிடித்திருக்கலாம்.

Thekkikattan said...

நாயகி,

மெதுவாக உங்களின் பதிவை போடுங்கள், ஒன்றும் அவசரமில்லை. நன்றி!

Thekkikattan said...

சிவபால,

உங்களுக்கு மட்டும் ஏந்தான் இப்படி வஞ்சனை பண்ணுகிறேன் என்று தெரியவில்லை.

எப்பொழுதும் நம்ம வீட்டு ஆளுதானேன்னு வருகிற புது விருந்தாடிகளெ கவனிக்கிறேனோ? தெரியலே. கண்டுப் பிடிச்சு, அதனை நசுக்கிப் புடுறேன். விடுங்க.

நமக்குள்ளெ என்ன.... :-))

delphine said...

hello.. don't you like to read books? you could have written about the books that you enjoyed. Do you like Enid Blyton?

Related Posts with Thumbnails