Friday, April 21, 2006

*பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா...

சுவனப்ரியன் தனது *பரிணாமப்" பார்வையை இங்கே குறித்து வைத்துள்ளார், இன்னும் நாம் எங்கே இருக்கிறொம் என்பதனை அறிய அன்பர்கள் கீழ் கண்ட சுட்டியில் சென்று அறியவும்...

http://suvanappiriyan.blogspot.com/2006/03/blog-post.html

அவருடைய பதிவை படித்துவிட்டு நான் கீழ் கண்ட முறையில் அவருக்கு பின்னூட்டமிட்டதை உங்களுக்காக இங்கே...

என்ன ஒரு கால விரயம், சுவனப்ரியன் தனது ஐயங்களை இங்கு தீர்த்துக் கொள்கிறாரா அல்லது பொழுது போகாமல் ஏதாவது...

மனிதன் மனிதனாக (இன்றைய நிலையை எட்ட) இப்படி நம்மை போல அரிதான மூளை வளர்ச்சியுடன் எட்ட கிட்டத்தட்ட பல மில்லியன் ஆண்டுகளாக குமிந்த நிலையில் பல கோடி வருடங்கள் (species, sub-species.. sub-species, then the survivor spp will carry on, the acquired characters and physiologically adaptive organs and formative information through DNA and RNA, giving rise to more powerful species onto the next species level. Actually, the changes will happen in micro level where you can not see it onto the next offspring of the previous species though it is passed; so the term is called EVOLUTION, you agree right, your KID is lot more smarter than you are...there our future evolution lies look at closely!).

பிறகு கொஞ்சம் தூரம் நிமிர்ந்து நின்று நடந்து சொல்லுமளவிற்கு திறமையுற்று அந்த திறமையும் பல கோடி வருடங்களின் பிராயச்சித்ததின் மூலம் எட்டி இப்படி இது நீண்டு கொண்டே போகிறது... இதற்கிடையில் மூளையின் வளர்ச்சியும் complexity_களை மேன்மெலும் அதீத படித்தபடியே வளர்ந்து வளர்ந்து...

இப்ப பார்க்கிற சிம்பன்சி, கொரில்லா, ஒரங்குட்டன் எல்லாம் நம்முடைய ஒரு மரத்தின் கிளைகள் போல அவர் அவர்களின் மூதாதையர்களின் வளர்ச்சிக்கும் தேவைகளுக்கும் (Niche) ஏற்ப தனது வளர்ச்சியுனூடே பக்க பிரிவாக மரபணு வேறுபாடுகளுடன் பிரிந்து...இருப்பினும் மிக்க வித்தியாசமில்லை 98% நம்முடைய மரபணுக்களுடன் ஒத்து போகிறது.

மேலே கூறியதற்கு சான்றாக மனிதன் மனிதனாவதற்கு முன்பு மனிதனை ஒத்த மூதாதை மனிதர்கள், பல வேறுபட்ட கண்டங்களில் மனிதனை ஒத்த மண்டை ஒடுகள், மற்றும் இதர எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்டு நாமும் அவர்களின் பங்காளிகளில் ஒருவர் தான் என உறுதிபடுத்தப் பட்டுள்ளது...

பரிணாமத்திற்கும் (அது என்ன ஒரு கெட்ட வார்த்தையா) ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது...? கடவுள்தான் எல்லாவற்றையும் ஆட்டி வைக்கிறான் என்று வைத்துக் கொண்டாலும், இதுவும் அவன் விளையாட்டுக்களில் ஒன்று என்று நிருபிக்கப்பட்ட மனித பார்வைக்கு எட்டிய விசயத்தை தலுவிப்போவதில் ஆன்மீகத்திற்கு எந்த தீங்கும் வரப் போவதாக எனக்குப் படவில்லை.

தன்னை உணர்ந்து தன்னில் இறைவன் இருப்பதை உணர்வதுதானே ஆன்மீகம்...

நான் விலங்கியியல் பட்ட படிப்பும் ஏன் டாக்டர் பட்டமும் வாங்கும் அளவிற்கு வளர்ந்தும் கூட ஒரு போதும் ஆன்மீகத்தையும், அறிவியலையும் போட்டு குழப்பிக் கொண்டதில்லை. அதன் மூலம் கால விரையம்தான் ஆவதாக கருதுகிறேன்.

ஆன்மீகம்மன்றி எல்ல மதத்திற்கும்தான் பிரட்சினை இருக்குமோ....ஒஹோ!

நிறைய படிக்கணும்... நமது மனச விழிப்புணர்வுக்கு எடுத்துட்டு வரணும்... விசயங்களை கிரகித்து பின்பு கடவுளை (அல்லாவை, ஜீசஸ், சிவா) காண எல்லத்தையும் மறந்து அவனே எல்லாவற்றிலுமாக காணவேண்டும் என்று உங்களை பார்த்து கை கூப்பும் சிரிக்க சிந்திக்க தெரிந்த கடவுளின் சித்தத்தால் உருவான ஒரு சக Homo sapiens. ரத்தமாவது மிச்சமாகட்டும்.

அன்பே கடவுள்.


ப்ரியன் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்...

//எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.//

அதற்காக நான் கொடுக்கப்போகும் உதாரணம் சிறு பிள்ளைத்தனமாக இருக்கும் இருந்தாலும் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பதற்கு எளிது என்பதால் கொடுக்கிறேன்.

சுவனப்ரியனும் நானும் பிறக்கும் பொழுது சிறு கை குழந்தைகளாகத்தான் பிறந்தோம் ஆனால் எங்களுக்கு 80 வயது ஆகும் பொழுது அந்த கை குழந்ததையான நாங்கள் என்னவானோம்? வளர வளர, நானும் என்னுள் உள்ள உருப்புகளும், மூளையும் என்னவாகிறது...?

அதெ போல என் மகன் என்னை விட புத்திசாலியாக இருக்கிறான் அதனால் நான் படித்தவைகளையும், அனுபவ பட்டவைகளையும் மட்டுமே வைத்து அவன் கருவவதற்கு முன்பே அவனுடைய மூளைக்குள் வைத்து தைத்து விட்டதாக அர்த்தமா, எது...?

100 வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளை காட்டிலும் இன்றைய குழந்தைகள் நல்ல புத்திசாலியாக இருப்பதாக நாம் ஒத்துக்கொள்கிறோம், ஏன் அப்படி? நம் மூளை பலமடைந்து வருகிறதோ... இருக்கும் சூழ்நிலையை பொருத்து... நிறைய சிந்திக்கணும், அதற்கு நாம் மனதை திறக்கணும் அதுதான் சாவி மார்க்கத்திற்கு.

அன்பே அல்லா (இயேசு, சிவன்).

5 comments:

J said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தப் பதிவில், உங்கள் எழுத்தைப் படித்ததும், எனது பின்னூட்டத்தை இட்டேன். நீங்கள் படித்தீர்களா என்று தெரியவில்லை. முடிந்தால் படித்துப் பாருங்கள். அதோடு என்னுடைய பதிவில் 'தேடியதும் கிடைத்ததும்' என்று நான் எழுதியதை படித்தீர்களா?

Thekkikattan|தெகா said...

அன்பு ஜவஹர் தாங்களின் 'தேடியதும் கிடைத்ததும்' பதிவினை படித்தேன், மிகவும் நன்றாக இருந்தது. நான் பின்னூட்டமிடாதற்க்கு மன்னிக்க! பின்னூட்டமிடுவது மிகவும் அவசியம் என்பதனை அறிவேன். இங்கு வந்து படித்து பின்னூட்டமிட்டதற்க்கு மிக்க நன்றி. அவ்வப் பொழுது இது போன்ற விசயங்களை தொட்டுப் போவோம் அவசியம் ஏற்ப்படும் பொழுது.

என்னுடைய ஆங்கில பதிவு பக்கமும் முடிந்தால் சென்று வாருங்கள்

http://orani-sittingby.blogspot.com

தருமி said...

தெக்கி, ஜவஹர் - இருவருக்கும்.
நாம் மூவரும் சுவனப்பிரியனின் பரிணாமம் பற்றிய பதிவில் சந்தித்திருக்கிறோம். நம் மூவரின் கருத்துக்களில் தென்பட்ட ஒற்றுமை இந்தப் பின்னூட்டத்தை எழுத வைத்தது - more to say 'hi'...

Thekkikattan|தெகா said...

தருமி நான் இந்தியா வரும் பொழுது தாங்களை சந்திக்க வேண்டுமென எண்ணுகிறேன். Now somewhat I am figuring out the power of thoughts and collective consciousness! Wondering as to what am I talking about...keep wondering, more later! நன்றிகள் ஜவஹர் சாருக்கும் உங்களுக்கும் என்னைப் போன்ற வளரும் அன்பருக்கு உங்களை போன்ற சான்றொர்களின் மோதிரக் குட்டு பட ஆசை. தவறுகள் இருப்பின் தர்க்கவிக்கவும் இங்கே.

அன்பு,

தெகா.

Sivabalan said...

A good one!!

We have to go long long way to wake up our people.

I do not know "when do our people will come out of religion, god, caste..."

Related Posts with Thumbnails