Monday, April 24, 2006

*ஆளவந்தான், கமல்----பரிணாமம்*

இதுவும் ஒரு மீள்பதிவே, காரணம் என்னுடைய நீண்ட தலைப்புகள் கொஞ்ச நாட்களாக, ப்ளாக்கர் டேட்டபேஸ்லிருந்து காணமல் போயிக்கொண்டிருந்தது. இப்பொழுது டார்வினிய கொள்கையை நம்ம நாதர் விளக்கி கூறியதற்கு பிறகு "தகுதி உள்ளது மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்ற" கூற்றின் படி தப்பிப் பிழைக்க எத்தனிக்கும் ஒரு முயற்சியில்...இக் கட்டுரையை தூசி தட்டி அலமாரியிலிருந்து எடுத்து உங்களுக்காக...

சரி, ஆளவந்தான், கமல்---பரிணாமம் அப்படின்னு ஒரு குத்து மதிப்பா ஒரு தலைப்ப வச்சியிருக்கியே கமலுக்கும் பரிணாமத்திற்கும் என்ன சம்பந்தம் தெகா, அப்படின்னு கேக்கிறீங்க இல்லையா. நாம ஊரு படங்கள் இன்னமும் நாலு சுவத்துகுள்ள நடக்கிற கூத்த விட்டு வெளியே வருவேனா அப்படின்னு அடம் பிடிச்சிக் கிட்டு இருக்கிற சூழ்நிலையிலெ கமல் நம்ம மல்லுக் கட்டி அடுத்தக் கட்டத்துக்கு இழுக்கப் பார்க்கிறார், இல்லையா?

இத வந்து ஒரு 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் மட்டும் ஒரு தனி மனித இனமாக வாழ்ந்த வந்த "நியண்டர்தால்" களிடமிருந்து நாம் "ஹோமோ சாபியன்ஸ்" சற்று உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு அவர்களை காணமலோ அல்லது நம்முடன் கலக்க வைத்தோ நம் இருத்தலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டோமல்லவா. அது போலவேத்தான் கமல் நமது சமுதாயத்தில் நடத்தும் போரட்டமும் என்பது என் கருத்து...

கமல் போன்றவர்கள் தப்பிப் பிழைத்து அடுத்தக் கட்டத்திற்கு சென்று விடுவார் அவர் அன்று இல்லா விடினும். ஏன் என்றால், மீடியாவின் மூலமாக அறிவியல் அருமையான கலவை அல்லவா?

இதோ இங்கு அந்தப் பதிவு...

நானும் நேற்று "அன்பே சிவம்" இரண்டாவது முறையாக அனுபவித்து பார்த்தேன். கமல் போன்றவர்கள் நம்மிடையே மிக்க திறமைகள்லிருந்தும் சரிவர புரிந்துகொள்ளப்படாமல் சிரிதே அங்கீகரிக்ப்பட்டுள்ளார். காரணம் வெளிவேசம் போடத்தெரிந்தும் எதார்த்த வாழ்வோடு இருப்பதால்தானோ என எனக்குப் படுகிறது.

"ஆளவந்தான்" நம்மில் பல பெயருக்குப் புரியாமல் போனதற்கு காரணம், அவர் அக்கதையில் வரும் சிறு வயது கமல் "physical and emotional-abuse"-க்கு ஆட்பட்டு போனதால் அதுவே ஒரு மன நோயாக பின்பு வளர்ந்து (Dissociated Identity Disorder-DID_போன்று) அவர் காணும் காட்சிகள்யாவும் மனத்திரையில் snap shots மற்றும் flash back, hallucinations_களாகவும் Animation உயிர்பெற்று விரிவடைவதாகவும் காட்டும்பொழுது புரிந்து கொள்வதில் சற்று சுனக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

அது போன்ற விடயங்களை நாம் படித்தோ அல்லது கேள்விபட்டிருக்கவோ வாய்பில்லமால் போனதாக இருக்கலாம் (its a sheer lack of awareness in our side_I believe Kamal is always a bit advanced for our standard). அது கமலின் குறை கிடையாது, நம்மின் பின்தங்கிய அறிவு சார்பே! அது போன்ற விடயங்களை காட்சிகளாக திரையில் எளிமைபடுத்தி எல்லோருக்கும் புரியும் வண்ணம் வழங்கியிருக்கிறார். என்னைப் பொருத்தவரையில் கமல் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சமூதய அக்கறையுடன் எடுக்கப் படுவதாக தோன்றுகிறது. அவைகள் இன்று புரிந்துகொள்ளபடாமலிருந்தாலும் ஒரு நாள் எல்லோராலும் கவனிக்கப்படும்.

ஆளவந்தான் படத்தை இது போன்ற ஒரு DID உள்ள ஒருவருடன் பார்க்க நேர்ந்தது படம் பார்த்துவிட்டு வெளிவரும் பொழுது அவர் கேட்ட முதல் கேள்வி இதெல்லாம் எப்படி கமலுக்கு தெரியும். பிறகு "கடவுள் பாதி" பாடலை அவர் கேட்க விரும்புவதில்லை ஏனெனில் அவருக்கு அது flooding flashbacks-களை கொணவர்தால். புரிகிறதா, என்ன சொல்லவருகிறென்னென்று இதெல்லாம் educational awareness என்று.

16 comments:

Sivabalan said...

Good Blog!

Thekkikattan|தெகா said...

Thanks Siva for keep visiting and encouraging me to think!!!

Anbudan,

TheKa.

Sivabalan said...

Mr.TheKa,

It is very important to encourge good bloggers like you to keep good blogs alive.

It is just my simple wish.

Kindly keep your good work.

வசந்தன்(Vasanthan) said...

நல்லதொரு பதிவு.

"ஆள வந்தானை"ப் பற்றி பெரும்பாலானோர் நல்லதாகச் சொன்னதில்லை. (அத்தோடு படத்தைப் பற்றிக் கதைக்கப்பட்டதைவிட கமல்-தாணு பிரச்சினைதான் அதிகம் கதைக்கப்பட்டது)
ஆனால் எனக்கு மிகப்பிடித்த படம்.
இப்போது கமலிடம் பிடிக்காத விசயம், இன்னும் 'ஆள வந்தானாக' இருப்பது (அவரது உடம்பைச் சொல்கிறேன்).

Thekkikattan|தெகா said...

Yeaa Siva, I have been observing all along, there are so many issues running here, though, mostly on politics and petty issues like religiously motivated! What to do!

Hope everybody get to read away from those too.

Thanks,

TheKa.

Thekkikattan|தெகா said...

வசந்தன், தாங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்,
தெகா.

தருமி said...

"கமல் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சமூதய அக்கறையுடன் எடுக்கப் படுவதாக தோன்றுகிறது. " //
- காதலெல்லாம் ஹார்மோனின் வேலைன்னு பாடலாசிரியர் எழுதியிருக்கலாம்; ஆனால் அது கமலின் வார்த்தைகளாகவே படுகின்றன. ஓர் ஆசிரியனாக இருந்த எனக்கு இந்த வரிகள் இளைஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் நன்கு தெரியும். இன்னொண்ணுகூட சொல்லலாம் - கொஞ்சம் "ஆய்" விவகாரம்தான், மூச்சா போன பிறகு கை கழுவணும்னு (சதி லீலாவதி) நமக்குச் சொல்லிக் கொடுத்ததும் அடித்தட்டு வரை சென்றடைந்தது.

"...mostly on politics and petty issues like religiously motivated!"// அப்டின்னு சொல்லியிருக்கீங்க உன் பின்னூட்டத்தில. கொஞ்சமா சுருக்குன்னு குத்திச்சு !!

J said...

அன்புள்ள தெகா,
இப்போதுதான் படித்தேன்.
கமல் ஹாசன் மிகச் சிறந்த கலைஞன் என்பதைவிட ஒரு நல்ல சமூக விஞ்ஞானி. அவருடைய சினிமாக்களில் காணக்கிடைக்கும் சமூகபிரஞ்ஞையுடன் கூடிய சிந்தனைகள் அதிகம் பேரை சென்று அடைய வில்லை என்பதுதான் நம் வருத்தம்.
உதாரணத்திற்கு, 'சொர்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான்' போன்ற வரிகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமல்லவா?
அவருடைய 'மகாநதி' ஒரு மனிதனை, எப்படி சூழ்நிலையும், சந்தர்ப்பமும் திருப்பிப் போட்டுப் பாடாய்ப் படுத்துகிறது என்பதை துடிக்கத் துடிக்கச் சொன்னதை மறக்க முடியுமா?
இப்படி நிறைய எழுதலாம்.
நல்ல பதிவு.
அன்புடன்,
ஜவஹர்.

Thekkikattan|தெகா said...

ஆமாங்க தருமி அந்த மாதிரி விசயங்களத்தான் மக்கள் விரும்பி நேரத்தை கொள்ளும் பொருட்டு படிப்பார்கள் போல. எனக்கு சோர்வு வந்து விடுகிறது, இந்த மாதிரி உதாவாக் கரை அரசியல் வாதிகள், அவர்களின் 2 செண்ட்ஸ் எண்ணங்கள் இவைகளை எல்லாம் படிப்பதற்க்கும் கேட்பதற்க்கும், என்னை ஒரு 100 வருடங்களுக்கு பின்னால் போட்டுக் கொண்டால்தான் முடியும் ;)

தருமி ஐயா, நீங்கள் என்னை நிறைய விமர்சிக்க வேண்டும்மென வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும்.

தெகா.

Thekkikattan|தெகா said...

ஜவஹர் சார், நீங்கள் கூறியபடியே கமல் என் மனதில் தைத்துப் போனதனால்தான் இந்த பதிவை இடத் தூண்டியது. இங்கு பிளாக்குகளில் எழுதும் பொழுது ஒரு அறிவியல் ஜார்னலுக்கு எழுதும் தோரனையுடன் எழுத வேண்டும்மென சில பேர் எதிர் பார்க்கிறார்கள். இது போன்ற சிந்தனையுட்டு பதிவிகளெ மிகவும் அரிதாக கிடைக்கும் பட்சத்தில் நேரம், வேளை பொருட்டு உங்கள் மனதில் நின்ற விசயங்களை, கிரகித்து கொண்டவைகளை எழுதும் பொழுது, டேட்டா கொடு என்றால் எங்கு போவது (குளோபல் வார்மிங் பற்றி பேசிக் கொண்டுள்ளேன் சார்). கிடைக்கும் நேரத்தில் ஏதோ நம்மால் இயன்றதைத்தான் செய்ய முடியும்மென்று கருதுகிறேன். எப்படியோ விசயத்தை புரிந்துக் கொண்ட்டால் சரி. அதுதானே நோக்கம்.

நன்றிகள்,

அன்பு,
தெகா.

Anonymous said...

Good post. Actually I am fortunate to understand the movie to the core when it was realised (since am a medical student). I watched this movie 3 times in chennai theaters, most imporatantly am not a Kamal fan before movie realised.
few things amazed me about the movie:
1.characterization of mottai kamal, the way he walks wearing big glasses,his voice modulation for this character,way he sits on top of the tree when his car fell in to pond...amazing
2.2nd scene in hospital with tejaswani, its different romance, which hero would dare to say he had intimate relationship before marriage in second scene, its suttle matured romance
3.who wouldn't like that song kadavul padi mirugam paddi........

well.Its better for me to stop here before someone fires me with words...... keep writing.

ஜெயஸ்ரீ said...

நல்ல பதிவு

திரைப்படத்தைப் பார்த்தபோது எனக்கும் இதுதான் தோன்றியது. பலர் புரிந்துகொள்ளத் தவறியது இதைத்தான் என நினைக்கிறேன். the movie made perfect sense

Thekkikattan|தெகா said...

அன்பு அனானி, எனக்கு கூட முதல் முறை பார்க்கும் பொழுது கமல் ஏதோ சொல்ல வருகிறார் என்பது மட்டுமே விளங்கியது. ஆனால் பின்னால் எனது வாழ்க்கையில் ஒரு நிஜ நபருடன் அதுவும் எனக்கு வேண்டியவர் அந்த மெட்ட கமலை ஒத்த கதையும் வாழ்வும் வாழ்ந்து இன்று அவ் நினைவுகளுடன் போராடி வாழ்வதை பார்க்கும் பொழுது, அது சம்பந்தமாக படிக்க என்னை தூண்டியது.

அதுக்கு பிறகுதான் அது ஒரு தனி உலகம் என்பதும், அதில் இவ்ளே உள்ளதா என்றும் அதியச்துப் போனேன்.

அப்படியெனில் கமல் அந்த கதைக்காக எவ்ளே படித்திருக்க வேண்டும், தயாரிப்பளருக்கு விளக்கி கூற எவ்ளே உழைத்திருக்க வேண்டும் என்பதனையெல்லாம் யோசிக்கும் பொழுது கமலின் மீது எனக்கு ஒரு மதிப்பும் அவரின் ஆர்வமும் தெரியா வந்தது. அதற்க்குப் பிறகு அந்த டாகுமெண்டரி படத்தை இரண்டாவது முறையாக புரிந்து வீட்டில் ஆர அமர பார்த்தேன். ரசித்தேன்.

அதனை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள இங்கு எழுதினேன். உலக ஞானம் பெருவது எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளத்தானே என்ற உணர்வுடனே.

நன்றி, அனானி...!

தெகா.

Thekkikattan|தெகா said...

ஜெயா தாங்களின் வருகைக்கு நன்றி...!

புரிதல் என்பது வயதுக்கும் தனக்கு கிடைக்கும் உலக பிரவேசத்திற்க்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக நான் உணர்கிறேன். ஒரே மாதிரியான (நல்ல) புத்தகத்தை பல நிலைகளில் (வயது, வளர்ச்சி) திரும்ப படிக்கும் பொழுது புதுப் புது கோணங்கள் அப் புத்தகதின்று வெளிவருவதனைப் போன்றே. இதுவும், நல்ல படைப்புகள் அனைத்துமே, இப்படித்தான். காலத்தை தாண்டி நிற்க்கும் அனைத்தும்.

அன்பு,

தெகா.

Unknown said...

நல்ல பதிவு. அறிவியல் பூர்வமாக இருந்ததுடன் டெக்னிக்கலாகவும் படம் நன்றாகவே இருந்தது. குறிப்பாக இரண்டு கமல் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி - இரண்டு வேறு வேறு நபர்கள் போலவே இருந்தது சிறப்பு.

Andrea said...

நல்ல பதிவு. அறிவியல் பூர்வமாக இருந்ததுடன் டெக்னிக்கலாகவும் படம் நன்றாகவே இருந்தது. குறிப்பாக இரண்டு கமல் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி - இரண்டு வேறு வேறு நபர்கள் போலவே இருந்தது சிறப்பு.

Related Posts with Thumbnails