Tuesday, April 25, 2006

*அருணகிரி - குளோபல் வார்மிங் - தெகாவின் பதில்*

அருணகிரி இங்கே *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா? எனக்கு ஒரு பின்னூட்டமிட்டுள்ளார் அதனை படித்தால் கொஞ்சம் விளங்கும் நாங்கள் எதனைப் பற்றி விவாதித்து கொண்டுள்ளோம் என்பது...நன்றி அங்கு சென்று படித்து வருகமைக்கு...அதற்கு பதில்தான் கீழே...

அன்பு அருணகிரி, தாங்கள் நிறையப் படிப்பீர்கள் என்று கருதுகிறேன் அப்படியெனில் நல்லது. சரி விசயத்திற்கு வருவோம். அறிவியல் ஆராய்ச்சில் இரண்டு விதமான முறையில் ஆராய்ச்சி செய்து உங்களது கேள்விகளுக்கு பதிலை நாடலாம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா? முதல் வகை அனுகுமுறையில் Quantative Data Collection இதன்படி வரும் முடிவிற்கு ஒரு முறைப்படி பல நிலைகளில் எதுவாக ஆராய்ச்சிப் பொருளாக இருக்கிறதோ அதனைப் பொருட்டு டேட்டா சேகரித்து இதற்கு புள்ளியியல் கணக்கீட குறைந்த பட்சம் ஒரு சில ஆண்டுகளேனும் தேவைப்படலாம் (அல்லது குளோபல் வார்மிங் போன்ற சூழ்நிலையில் சில பத்தாண்டு சேகரிப்போ தேவைப்படலாம்) அவ்வாறு சேகரிக்கப்பட்ட டேட்டா விசயங்களை நம் மூளைக்கு எட்டிய வகையில் அப்படி இப்படியென்று வளைத்து தமக்கு வேண்டிய(ஹி...ஹி..ஹி) கேள்விகளுக்கு பதில் சொல்ல வைக்கலாம்! இது ஒரு மாதிரியான அணுகுமுறை.

மற்றொரு அணுகுமுறை, Qualitative Data Collection சில நேரங்களில் அவ்வாறு அணுகமுடியாத பட்சத்தில் முழுமையாக பல வேறு இடங்களில் தொடர் கண்காணிப்பின் மூலமோ அல்லது தன்னை சுற்றி ஏற்படும் மாற்றங்களை ஒன்றுக்கொன்றுடன் தொடர்புப் படுத்தி, உணர்ந்து இதற்கும் வருடங்கள் தேவைதான், இருப்பினும் இது போன்ற செய்திக் கோர்வைகள் ஒரு தலைமுறையிலிந்து மற்றொரு தலை முறைக்கு கீழிறக்கம் செய்யப் படலாம். உ.த: எனது தாத்தா ஒரு பெரும் ஏரியை குறுக்காக நடந்ந்ந்ந்து (இன்று) கடக்கும் பொழுது, எப்படி இந்த ஏரி அவரது இளமை பருவத்தில் வருடம் தோறும் தண்ணீர் நிலையுடன் இருந்தது போன்ற செய்திகள், அதனை சுற்றி எது போன்ற பட்சிகளை அவர் கண்டார் போன்ற infos.

In fact Aruna, in the West we have two kinds of people, one who is willing to be honest and tell the truth and the other one just the opposite keeping in their mind of tomorrow, providing food on the table for their family, denying the fact. You can get all kind of reading literatures, at some point of time, you have to feel the changes within your range and see how rapidly we are losing mother natures provisions. Rather than until you wait for some quantitative data to arrive and infer the change is real and imminent.

Do you know in our South India, we used to get three seasonal rainfalls on time until 1800s, that happened, it was reall?!!! until the Westerners reached out there and placed their hand on to the Western Ghats (Even in the foothils of Himalayas in the northeastern India) and started shaving off the rainforest for cash crops such as Cardamom, Coffee, Tea etc., And that was when ,we started seeing immediate changes in our vicinity in the following decades and much worse in today's standard.

இப்படி எத்தனை எத்தனையோ கண்மூடித்தனமான காட்டுத்தனமான செயல்கள் in the name of exploration and its consequent exploitations இன்னமும் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னையும் உங்களையும் போன்றவர்கள் அவர்கள் நடத்தும் அரசியலில் நம்மை தொலைத்து விட்டு எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்று தெரியாமல் குழம்பிப் போய், என் கிரமத்தில் சம்பந்தமே இல்லாமல் தொடர்ந்து ஐந்து ஆரு வருடங்களாக மழையில்லாமல் மக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் கூட வழியில்லாமல் தவிப்பது என்னவென்று விளங்காமல் எந்த ஊரு Senator வந்து புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு ஊருணி வற்றி போனதற்கு அந்த சொட்டைதலையன் ஓட்டும் SUV, HUM VEE-யும் காரணமாக இருக்கலாம் என்று ஒத்துக் கொள்வதற்கு. ஆமா, அமெரிக்கா செனடேடர் தான், இந்தியாவையும் ஆட்சி செய்கிறாறோ?

எது எப்படியோ, நான் எண்ணுவது இதுதான் Collective_ஆக முழு உலகமே ஒரு விசயத்தை இது போன்று உணரும் பொருட்டு அது பொய்பதற்கு வாய்ப்பில்லை. சரி வுடுங்க இன்னும் நிறைய கார்கள் விற்பனைக்கு இருக்கு இப்படி பயந்து செத்த எப்படி அததெல்லாம் வித்து சொத்து சேர்த்து இன்னும் கொஞ்சம் கடைகள் பரப்புறது அப்படின்னு பெரிய சொட்டையெல்லாம் சேர்ந்து சட்டை போடத மக்களை மிதிக்கமா மிதிக்குறகுள்ள நானும் அடிச்சு புடிச்சு computer programe எழுத கத்துகிட்டு நாலு காச சம்பாரிச்சு ஒரு காரை வாங்கிப்புட்ட நானும் மனுசந்தான் அப்படின்னு சொல்லனுமில்லை. வரட்டா!

நம்மலையெல்லாம் எல்லாம் வல்ல ஒஷொன் காப்பாற்றுமாக!

அன்புடன்,

தெகா (ஊருணி வற்றி போன கவலையுடன்...).

27 comments:

Sivabalan said...

A good reply!!

Good one!!

Another info, Tamilnadu's Annual Precipitation is exceeds 1000 mm. But most of the time we are not meeting this. Remember, TN does not have any perennial rivers.

//(ஊரணி வற்றிப் போன கவலையுடன்...). // A true status.

Thekkikattan|தெகா said...

hmmm...Sirapunji in Assam is used to be one of the highest rainfall receiving ends, now the drought is there! Have you heard of that story? Keep encouraging. Thanks again.

TheKa.

arunagiri said...

தெ.கி, நான் எழுதியவற்றை நீங்கள் அவசரமாகப் படித்தீர்களோ? மீண்டும் எனது பின்னூட்டத்தை ஒருமுறை படித்துப்பாருங்கள். நான் எழுதியவற்றிற்கு உங்களின் இந்தப்பதிவில் எந்த பதிலும் இல்லை என்பதே உண்மை.

ஆறுகள் மறைவதற்கு deforestation, அதன் விளைவாக மழை குறைதல் போன்ற நேரடிக் காரணிகள் உள்ளன. பஃறுளி ஆறும், சரஸ்வதி நதியும் வற்றியது குளோபல் வார்மிங்கினால்தான் என்று கூறி விட முடியுமா?

பூமிப்பந்து பல காலகட்டங்களில் குளிர்ந்தும் சூடாகியும் வந்துள்ளது என்பதே உண்மை. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த அதிக அளவு குளோபில் வார்மிங் எல்லாமே அதிக அளவு co2 வெளியாவதற்கு முன்பு நிகழ்ந்தது. 1940-க்கும் 70-க்கும் இடையில் பூமியின் temperature குறைந்தது- ஆனால் அதே கால கட்டத்தில் co2 அளவு அதிகரித்தது.

தொடர்புகள் மட்டுமே காரணிகள் ஆகி விடாது. அபத்தப் பொருத்தம் கருதி சொல்கிறேன்: மூக்கு இருப்பவருக்கெல்லாம் சளி பிடிப்பதால் மூக்குதான் சளிக்கு மூல காரணம் என்று சொல்லி விட முடியுமா? கார்பன்-டை-ஆக்ஸைடுடனான குளோபல் வார்மிங் தொடர்பு விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ice age காலத்தில் குளோபல் வார்மிங் இருந்தது, குளோபல் வார்மிங்கைத் தொடர்ந்து கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரித்தது - குளோபல் வார்மிங்கிற்கு முன்னால் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு குறைந்திருந்தது. இது இப்போதுள்ள theory-க்கு முற்றிலும் மாறுதலாக உள்ளதைக் கவனியுங்கள்.

குளோபல் வார்மிங்கின் மேல் வைக்கப்படும் பெரிய குற்றச்சாட்டு it rushes to conclusions and prescribes solutions too soon என்பதுதான். இப்போது உலக அளவில் அரசியலாக்கப்பட்டும் விட்டது. அறிவியல் கோணம் என்ற அளவில் இருந்து அரசியல் பிரச்சாரம் என்ற அளவுக்கு திசை மாற்றப்பட்டு விட்டது.

நம் முன்னோர்கள் மரம் வளர்த்ததும், மலையையும், காட்டையும், நதியையும் தொழுது வணங்கியதும் அந்த இயற்கையோடு நாம் கொண்ட பிரிக்க முடியா உறவை உணந்ததால்தான். குளோபல் வார்மிங் போன்ற சிக்கலான விளக்கங்கள் இல்லாமலேயே இயல்பாக நடந்த விஷயங்கள் இவை.

மேற்கத்திய தத்துவ அமைப்பிலும் கலாசாரத்திலும் மனிதனைத்தவிர மற்றவை அனைத்தும் மனிதனால் ஆக்கிரமிப்பு செய்வதற்காகவே ஆண்டவனால் அளிக்கப்பட்டவை. இதன் விளைவாக உருவாகும் கண்மூடித்தனமான இயற்கை அழிவுக்கு ஒரு மாற்று என்ற வகையில் குளோபல் வார்மிங் அல்லது குளோபல் கூலிங் (தெரியுமா, 70-களில் popular-ஆக இருந்த சமாசாரம் குளோபல் கூலிங்) என்று எது உதவினாலும் அது வரவேற்கத்தக்கதே. அறிவு பூர்வ விளக்கங்களை மதிக்காத சமுதாயத்திற்கு சில சமயம் கடவுள் பூச்சாண்டி தேவைப்படுவது போல, இயற்கையை மதிக்காத ஒரு சமுதாயத்திற்கு விஞ்ஞானப் பூச்சாண்டி ஒன்று தேவைப்படுகிறது. "அது ஒன்றும் பூச்சாண்டி அல்ல, தீர்மானமான அறிவியல் முடிவுதான்" என்று ஒரு அறிவியல் தீர்மானமாக அதனை ஒப்புக்கொள்வதில் சில கேள்விகள் இருக்கவே செய்கின்றன. (உண்மைகள் அறிவியலுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை- அது வேறு விஷயம்).

உங்களது தலைப்பு (கற்பனையா, நிஜமா) குளோபல் வார்மிங்கை இருபுறமும் ஆராய்ந்திருக்கும் என எண்ணி வந்து ஏமாந்தேன். அதனைப்பற்றி உங்களின் தொடரும் மவுனம் எனக்கு ஒரு தொடரும் ஏமாற்றம்.

பொதுவாக பகடி குறித்த என் கருத்து: பகடிப்பதிவுகளே வலைப்பக்கங்களில் அதிகம் உள்ளன. பகடி என்பது விவாதத்திற்கு பதிலாகி விடாது, அப்படி எழுத மாற்றுக்கருத்துக்களைத் தேடிப்படிப்பதோ, அதற்கு நேரம் செலவழிப்பதோ தேவையில்லை என்பதால் எளிதாக எவரும் செய்து விடக்கூடியதுதான்.

குறிப்பாக உங்கள் பகடிக்கு என் ஒரே பதில்: "you are barking the wrong tree" என்பதுதான்.

Thekkikattan|தெகா said...

எனதருமை நண்பர் அருணாவிற்க்கு, அந்த பெரிய்யயய புத்தகத்தை எடுத்து படிக்க மனமில்லாத தெகா தொய்வுற்று எழுதிக் கொள்வது. வாதம் பிரதி வாதம், தர்க்கம் பிரதி தர்க்கம் இவைகளுக்கு முடிவு ஏது, நான் ஒரு வகையில் ஒரு ஆராய்ச்சிதனை அணுகி எனக்கு என்ன வேண்டுமோ அதனை பெரும் பொருட்டு விசயங்களை அனுகுகிறென், அதுவே முடிவாகவும் கிடைக் வைக்க முடிகிறது. யார் என்ன சொல்ல வேண்டுமோ அதனைத்தான் நாமும் தேடித் எடுத்து இங்கு கொடுக்க முன் வருகிறொம், இல்லையா!!! இப்பொழுது, பூமி மட்டும்தான் நமக்கு இன்னும் intersteller travel பண்ண வாய்ப்பு கிட்டும் வரையாவது குடிக்க தண்ணீர் கிடைக்மான்னு பார்த்துக் கொள்வோம் (ஒரு லிட்டர் குடிக்கும் தண்ணீர் ரூ25/=மே). அது வரைக்கும் John, Tom, Wolf, Wood இவர்கள் அனைவரும் எழுதிய புத்தகங்களை ஒரத்தில் வைத்து விட்டு நமது ஊர் சட்ட போடதா மாக்களுக்கு எதாவது சொல்ல முடியுமான்னு, நான் யோசிக்கப் போறேன்.

நீங்க படிச்சிகிட்டேடடட இருங்க...நான் உங்களின் நேரத்தை வீணடித்ததிற்க்கு பொருத்தாள்க! இருப்பினும் உங்கள் கருத்துக்கள் இங்கு நிறைய பேருக்கு உதவலாம். நன்றி, நன்றி!!!

Anbudan,

TheKa.

arunagiri said...

ஒரு சிக்கலான விஷயம் குறித்த விவாதம் இவ்வளவு விரைவில் முடிவடைந்தது அப்பாடா என்று இருக்கிறது. :) நன்றி, நன்றி.

நீங்களும் இனி இதுபோலப்பல hollow கிண்டல் பின்னூட்டங்கள் இட்டு "நமது ஊர் சட்ட போடதா மாக்களுக்கு" உதவும் பணியைத்தொடருங்கள். நன்றி, நன்றி, நன்றி.

அன்புடன்,

அருணகிரி.

Thekkikattan|தெகா said...

உங்களுக்கு தேவையானால் படிக்க அனேக இடங்கள் கிடைக்கும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்க்கு நான் மனத்தில் கொண்டு எழுதியது என்னைப் போன்ற சாமானியர்களுக்குத்தான்...உங்களுக்காக அந்த டேட்டா சுட்டியை இங்கு தருகிறேன் படித்து தெளிவு பெறுக!

இது திண்ணை.காம்_ல் வந்தது, இதனை இணைப்பதில் ஒன்றும் பிரட்சினை வராது என்று கருதுகிறேன்...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40604214&format=html

அன்புடன்,

தெகா.

arunagiri said...

(no e-kalappai sorry)

I had read the thinnai article- lots of pictures but thin on real data. Significantly, does not touch the uncomfortable questions surrounding this phenomenon at all.
Writing for the simple people does not mean presenting multi-facted phenomena in a unidimensional fashion.

Btw most of our simple people do not require complex Global Warming theories to understand the perils of deforestation.

Hope you will also read some of the arguments from the other side and try presenting both sides to those simple people. You may be in for a pleasant surprise. See you another time in another blog. Thanks for giving space for my comments.

Voice on Wings said...

அருணகிரியின் கேள்வி முக்கியமானது, விடையளிக்கப்பட வேண்டியதும் கூட. ஒரு விஞ்ஞான வலைப்பதிவில் நான் கண்ட கட்டுரை இங்கே. இதன்படி, தற்போது காணப்படும் காற்று மண்டலக் கரியமில வாயு் அதிகரிப்புக்குக் காரணம் மனித நடவடிக்கைகளே, இயற்கைக் காரணங்களல்ல, என்பதே. கரியமிலவாயுவின் greenhouse effectஇனால் உலகின் வெப்பக் கதிரியக்கம் (reflected solar radiation) காற்று மண்டலத்திலேயே சிறை பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்ததே.

மேலே கொடுத்த சுட்டியின் விவாத இழையில் பல சுவாரசியமான பின்னூட்டஙளையும் காணலாம் :) குறிப்பாக, சில அமெரிக்கர்களின், "நாங்கள் வெளியிடும் கார்பனை விட அதிகமான அளவில் எங்கள் காடுகள் அவற்றை உறிஞ்சுகின்றன (carbon sinks). ஆகவே, உலக மக்கள் அனைவரும் எங்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள்" போன்ற வாதங்கள்.

Sivabalan said...

I read all comments. Good.

But, global warming is a big hot topic.

I do not think & want Mr.TheKa to give a comprehensive thesis on this topic.

Basic idea of this blog is to trigger common people to think on this line. People may have different line of thought on this topic.

Those who are very much interested to read more, they very well can go on Google search.

I do not think that Mr.Arunagiri is trying to give good comments.

Mr.Arunagiri, do you have any personal feelings about Mr.TheKa. If so, then this is not the place for it. You can very well send him a personal email.

Mr.Teka is trying his level best to give a good & nice blog.

But, we, as a readers, can give a constructive criticism but not with personal base.

Thekkikattan|தெகா said...

Dear Aruna, Voice and Siva thanks for your comments. I too realised the the "global warming" issue is a hot topic subject to debate. However, what I did over here was simply trying to pass the term and associated concern what we see locally. I do believe in "think locally and act globally concept, though." Since, in my thirty years of my existence on this planet, in particular, living and visiting my village I have seen so many drastic changes associated with human activity how the water table and the tree cover have changed.

And also I have worked extensively earlier in the Western Ghats Hills trodding breadth and length of it, and seen how much it is affected by anthropogenic pressure. It is very sad to see how deeper the pressure is penetrated.

I can write a whole lot of it. But today I am sitting here and wondering whether I should go on share those or simply let go, since, people are expecting me to present those with data, and slide shows rather than treating it like an information is shared based on the "feel" you get from your experience.

Anyway, thanks for visiting my page! Good day guys!!

TheKa.

Anonymous said...

Inconveneint truth about global warming

Voice on Wings said...

தெக்கிக்காட்டான், தயங்காது உங்களுடைய கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் data / ஆதாரம் அளிக்க இயலாது. எங்கள் பகுதியில் நிலத்தடி நீரை இறைத்தால் அது சிவப்பாக / மஞ்சளாகவெல்லாம் வந்து கொண்டிருப்பதால் அதை சுத்தமாகப் பயன்படுத்துவதற்கே முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அருகிலிருக்கும் பெருந்தொழிற்சாலைகள்தான். அவைகளால் எங்கள் நிலத்தடி நீரே பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது என்று எந்த ஆதாரத்தை வைத்து நிருபிக்க முடியும்? இது போன்ற dataவெல்லாம் வெளியிடப்படுமா? எல்லாம் அதிகாரத்திலிருப்பவர்களை சரிகட்டி விட்டால் சாதகமான dataவே வெளிவரும். ஆகவே, எந்தவிதமான கட்டாயத்திற்கும் உங்களை உட்படுத்திக் கொள்ளாமல் உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

ஒரு வேண்டுகோள் - தமிழிலேயே விவாதங்களைத் தொடர்ந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

arunagiri said...

Sivabalan,

I think this is the first time I have even come across the.ka's views in the web world. I don't have anything personal against him, and I think even theka would not feel that way. My comments are just replies to his comments and views. I do not even disagree that we should preserve nature. I was just pointing that there are some unresolved questions on global warming and sidestepping those would not address the topic fully.

Btw there is a lot of info in all the exchanges between me and the.ka, and if you can only see some "personal grouse" I pity you. And if you do not have anything intelligent to share on the topic then scoot off. This is not your blogspace and my discussion was with the.ka only.

The.ka,

I just want to remind you that it was you who drew out a separate topic based on a response I posted in your other blog. If you write a public blog there will be different views. It is your blog and you are allowed to filter any inconvenient responses. But, after posting a topic and responses to it, you should not be wondering why people question your views. Anyway whether to continue or not is purely your decision. I just have this to say:

One either writes or one does not write- one just does not wonder in a public blog whether to write or not- not unless one's conviction rests NOT on its own strength but on the crutches of other's opinions to walk on, not unless one thinks that information-acceptance is more important than information-exchange, not unless one wants supporters to gather up and shout down others. I fervently hope that none of these is your reason for wondering whether to write or not.

Please continue to write. I won't question hereafter since you have clarified that your writing is based on how you feel rather than based on data. But others still may. So please place a disclaimer that you are writing based on your feelings only.

arunagiri said...

"எங்கள் பகுதியில் நிலத்தடி நீரை இறைத்தால் அது சிவப்பாக / மஞ்சளாகவெல்லாம் வந்து கொண்டிருப்பதால் அதை சுத்தமாகப் பயன்படுத்துவதற்கே முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அருகிலிருக்கும் பெருந்தொழிற்சாலைகள்தான்".

உண்மை. தோல் பதனிடும் தொழிற்சாலைக்கழிவுநீரால் விளை நிலம் அழிந்து, குடிநீர் பாழ்பட்டதைப்பார்த்தவன் நான். (தண்ணீர் தண்ணீர் நினைவுக்கு வருகிறதா?) இந்த மாதிரி நேரடிக்காரணங்கள், குளோபல் வார்மிங்கை விட more compelling என்பது என் எண்ணம். அவற்றைப் பேச வேண்டும். (Btw இவற்றை எளிதாக நிரூபிக்கவும் முடியும்).

Thekkikattan|தெகா said...

அன்பு சிறகறே...நீங்கள் கூறியது போல ஒவ்வொரு ஊரிலும் அங்கு நடைபெறும் சுற்றுப்புற சீர்கேடு குறித்து கண்டுணர்ந்து அவ் வகையான நச்சுகளை குறைந்த பட்சம் நிலத்தடி நீரில் கலக்க வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு மேல் முறையீடு செய்யலாமல்லவா? ஆனால் இன்றைய சூழலில் அதற்க்கும் என்ன பிரச்சினையென்றால், அவ் விழிப்புணர்வுக்கு வந்தவனை உடனடியாக கவணிக்கும் முறையில் கவணிப்பதுதான்.

முடிந்த அளவிற்க்கு தமிழில் தட்டச்ச முயற்ச்சிக்கிறேன். நேரமின்மை கருதி வேகமாக அங்கிலத்தில் தட்டச்சிவிடுகிறென். புரிகிறது, எல்லோருக்கும் சென்றடைய தமிழ் உதவும் இங்கு என்று. நன்றி உங்களுடைய அறிவுறுத்தலுக்கு.

அன்பு,

தெகா.

Sivabalan said...

Mr. Arunagiri,

Thanks. I do "scoot off".

And if you consider you did not do any personal grouse, then it is good and it is a healthier forum, which I like most.

Thekkikattan|தெகா said...

//not unless one thinks that information-acceptance is more important than information-exchange, not unless one wants supporters to gather up and shout down others. I fervently hope that none of these is your reason for wondering whether to write or not. //

None of the above falls in my frame, plus, I do not want to be recognised with anything. I simply place my understanding as to what I see, I respect all comments irresepctive of positive and negative, if I am not welcoming then I am not fit to write, and I deny myself of growing further. So you are welcome to share whatever you have to say, Mr. Aruna.

Why did I wonder over here as to whether continue to introduce things like this or not? Because I do not want again be recognised with anything (& restrict myself with the possiblity of expansion), I share what I see and understand around me, at this very moment. That is all.

I could have re-gurgitated over here a whole bunch of tables explaining how those green house gases both man made and natural ones...thru Co2, CFC, Methane etc., are going up there and do what they do and what percentages, respectively. However, based on my understanding of the recent growth of humankind with motorcade, factories and the extensive usuage of petrolium products and gases causing damage to the very environment I live on today. Do you agree Mr. Aruna, we are loosing a massive amount of the world forest cover every year for the further human needs, right?

If that is the case, how we can forget the 'collevtive effect' on the global level. Modern technology alone emits Co2 46% at the rate of .5% increase a year. Think about it, whatever activity we do and play with the environment it should be proportional - while vehicular population grows, on the other hand, even the already existing forest cover depletes - that is absurd correlation I am talking about. No data nothing, a simple logic.

And that is my concern I need not to be convinced with chi-square, anova, manova tests to understand the change is real and the threat is imminent while the change is occurring right in front of my eyes physically witnessing it everyday.

More later,

TheKa.

arunagiri said...

"Do you agree Mr. Aruna, we are loosing a massive amount of the world forest cover every year for the further human needs, right?"

the.ka, No question, deforestation concerns me too. I agree pollution and deforestation will have a collective effect on the overall environment also. The quality and the definite direction of that collective effect is not (yet) determinable accurately, predictably and consistently. So any fight against rape of nature is best done with direct and immediate factors (which are easily provable too)- is all I am saying. I think we are both concerned about the same thing. I just don't want some high-sounding questionable theories to muddle the real issue here, which is respect for nature of which we are an integral part.

Thekkikattan|தெகா said...

//The quality and the definite direction of that collective effect is not (yet) determinable accurately, predictably and consistently.//

If the above is proven after having gone through more devastation and the real kicks in of nature...can we reverse the damage that we have caused? when we are on that point it would be too late. The West will learn the lesson by pushing anything to the extreme (so they did learn with conseqence of eradicating Wolves and the imbalance in the prey-predator base etc.,), that is their way, we all know it.

Do you believe in "collective effect" right, Aruna...then how about "collective consciousness" of the environmental impact from people all around the world, people who live in villages seeing the change. Unlike in the West and Metros around the world, where people see the change only in the Menu boards at the fast food places (hehheehe).

I have not read yet the "State of Fear by Michael Crichton" I will try to find one at the used store near by me (!). Though, I read the other one 'Prey' it was a good one (on nanotech). Thanks.

TheKa.

arunagiri said...

"If the above is proven after having gone through more devastation and the real kicks in of nature...can we reverse the damage that we have caused? when we are on that point it would be too late".

the.ka., All I am saying is this issue can be fought without bringing in global warming- No, Let me rephrase it- this can be fought without being religious about the definiteness of global warming. Also, as I keep saying again and again the immediate factors such as deforestation, pollution etc provide more direct, and compelling factors to fight against rampant environmental rape.

"Collective consciousness" is a proposal, theory, hypothesis and is a subjective experiential phenomenon. I don't have any problem if Global warming is seen like this. But it is being touted as some proven definite scientific fact and everyone seems to be attributing anything and everything to this without due scientific process- it has already been declared proven when people are still searching for evidences and is being promoted today by sponsorship politics (academicia), fad (hollywood) and ideology (leftists) than by a real quest for truth.

Michael Crichton warns against such a rush towards a "sexy idea" by pointing to another such phenomenon, that had atleast experiential validity for some people then (and for some even today) but little scientific backing- Eugenics (improving humanity by eliminating "inferior" gene pools, to define it loosly). Lots of research dollars were spent with backing from scientists to politicians till it was taken to its logical end and culminated in the horror caled holocaust and later scientifically thoroughly discredited as genetics slowly evolved.

The frenzy with which Eugenics spread without significant challenge and without due scientific process, according to Crichton, resembles the frenzy that surrounds Global warming today and could lead to similar disastrous conclusions and consequences, if due scientific process is not followed.

As for me, you can be an environmentally responsible person without getting attached to such yet-to-be-proven concepts as Global warming.

Thekkikattan|தெகா said...

Aruna, let us assume that Michael is a deep thinker and always comes up with good stories, accepted.

We are in a society where the majority is waiting and believing in for apocalypse and armageddon like destruction and followed by the "judgement Day." So it seemingly they are desperately waiting for the judgement day to happen ASAP so that they can validate their good or bad quality in them and re-emerge....are you buying this? Well, I am not.

So what if the society "Mella sakamal" (for things like global warming, AIDS etc.,) they want to finish it off at one stroke and start all over again.

I consider Michael also a fellow traveller like you and me, he can be influenced by so many external factors. We have our mind of our own, so let us think for ourselves. Even a ten trees around my home back in my village bring in a whole lot of difference how I am breathing while I am in my home. So definitely it happens around the globe, if we are more conscious and responsible with as to what we do and if we give a chance really to wildlife (not only just on a car registration plate).

Anyway, here is link to check it out how the West pleads after the phenemenon...so called apocalypse...actually the article is written by Deepak Chopra...

http://www.intentblog.com/archives/2006/04/the_seduction_o_1.html

I appreciate your thoughts and sharing them with me!

arunagiri said...

"Even a ten trees around my home back in my village bring in a whole lot of difference how I am breathing while I am in my home".

நூற்றில் ஒரு வார்த்தை. இப்படிக் கண் முன் தெரியும் நிதர்சனங்களை உணர்வதற்கு குளோபல் வார்மிங் போன்ற சிக்கலான கோட்பாடுகளே தேவையில்லை என்பதே நான் சொல்ல வருவது. இயற்கையைப் புகழுவோம், மதிப்போம், வணங்குவோம். இயற்கையின் போக்கை நாம் முற்றும் அறிந்து விட்டதாகவோ அதனை நாம் "நம் வழிக்கு" கொண்டு வந்து விட முடியுமென்றோ எண்ணி விடலாகாது.

Sivabalan said...

Mr. TeKa,

I want to share .. (Intelligence ... balabala .. what ever you may call)

It was Mr.karunanidhi's regime, he convened a meeting of high officials to discuss about drought in Ramnad District. Everyone put forward their view. On this, the global warming also tabled. Kalaingar wants to find a solution with modern technology.

So he (secretariat) contacted Anna University (Because it is state owned)to give a solution. Anna University has water resource technology division, remote sensing division ... etc (I studied in Anna University)

So, then Dean -Civil Engg, Prof. Shantha Kumar, convened a meeting to discuss about it.

Prof. T. Natarajan, then Director, Institute of Remote Sensing, had given a solid workable model.

To be continued ...

Sorry Mr.Teka, I have some urgent work, I will send the remaining things tomorrow..

Thekkikattan|தெகா said...

சிவா, முடிந்தபோது மற்ற விசயங்களையும் இங்கு இணைத்து விடுங்கள் ரொம்ப பிரயோசனமாக இருக்கும்.

நேரமின்மை ஒரு மிகப் பெரிய இடர்பாடுதான்!

இருப்பினும் என்னால் முடிந்த அளவிற்க்கு இங்கு வழங்க முயற்ச்சிக்கின்றேன்.

அன்பு,

தெகா.

Sivabalan said...

I am Sorry Mr.Arunagiri. I misunderstand you.

I thought you are from so .. so.. group of people. Thats why I was liitle bit harsh on my comments.

I hope you can understand me that "what am I trying to say".

Mr.Teka, Please approve this message.

I continue...

Sivabalan said...

Prof. T. Natarajan's model is based on a Village near Uthirakosamankai, Ramanad.

We have some satellite data and survey maps of the particular village.

Model objective
1. Arrive a solution to built a water retaining structure (Lake or Pond)
2. Is there any existing structure available
3. If so what is the status.
4. Rainfall data
5. Other water source data.

Solution:
1. There is an existing pond. But there is no water. (ஊரணி வற்றிப் போன கவலையுடன்...)
2. Why the pond go dry. Evaporation loss. High temperature due to global warming?

3. But that’s not true when We digitize a map with available vector & raster data.

4. We have found that the pond is located not exactly on low lying area. According to the
Map the low lying area is 500m away from the existing pond. So this pond will fill only when
We have very good rainfall. But we may not meet annual average rainfall.

( So Global warming may not be the case for this)

5. So, according to the data, the pond should be built 500m away.

6. By using remote sensing technology, we can map the entire district within three months.
But lit bit cost consuming process. But the accuracy level is more.

So this same model is put forward to Kalaingar. As we expected, he accepted the model. But
he wanted to try in that particular village initially. And our model suggests the same thing also.

And it was built in that village. And it was very fruitful. The pond was full. But during summer it went dry. As usual, so and so group claim it was a failure model.

But Kalaingar wanted to go ahead. Unfortunately the fund agency refused. So it was not carried out to entire district.

I do knot know about the current status.

Thekkikattan|தெகா said...

Dear Siva, please go ahead and say what you have to say. Same here...i thought earlier that way too about Mr. Aruna, the way he defended, later I realized he honestly tries to extract more scienfic reality behind the fact.

That is ok...whoever it is we are sharing and growing, so nothing to be worried about.

Later for your experiement! Very useful!! Thanks.

Related Posts with Thumbnails