Saturday, April 22, 2006

*டேனா ரீவ்ஸ்*-என் சிந்தனையில்...

இது ஒரு மீள் பதிவு பல முறை முயன்றும் தோர்வுற்று போன ஒரு பதிவு. இதோ இங்கு மீண்டும் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக...

*சூப்பர் மேன்* படங்களில் நடித்து வந்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தது எல்லோரும் அறிந்திருக்கக் கூடும், அப்பொழுது மக்களிடையே அப்படி ஒரு cinema legend, எல்லோரும் அனுதாபப் படும்மளவிற்கு ஒரு குதிரைச் சவாரியின் போது ஏற்பட்ட விபத்தால் கழுத்திற்கு கீழே செயலிழந்து நடை வண்டியிலிருந்தபடியே அவரின் துணைவியாரின் (டேனா) உதவியுடன் வாழ்ந்து இறந்தாறென்று.

இன்று உண்மையின் ஆழ்நிலை இருத்தலை முழு அமெரிக்காவுமே டேனாவின் மறைவின் பொழுது உணர்ந்ததாக டேனாவின் தன்னலமற்ற செயலின் மூலமாக உணர்தப்பட்டதாக எங்குமே பேசப் படுகிறது எனக்கும் அப்படித்தான் படுகிறது.

எதார்த்த வாழ்வில் இன்று டேனாதான் *சூப்பர் மனிதர்" ஆனார்! எப்படி? இன்னும் உண்மை அன்பு, இறக்கம் ஆன்மா சேர்வின் (soul union) தாக்கம் இவைகளுக்கு ஒரு உருவம் கொடுத்ததுபோல் டேனா மனத்தளர்ச்சியின்றி ரீவ்ஸ் அருகமையிலிருந்து தனது ஆன்மா வளர்ச்சியினை காட்டியதின் விளைவு, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் materiterialistic கலாச்சார சூழலில் வாழும் பொரும்பாண்மையோருக்கு வாழ்வின் எதார்த்த சூழ்நிலையுடன் தன்னிலை உணர்ந்து இயைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து நலிந்து வரும் இக் காலச் சூழலில், அது தவறு என்று சுட்டி காட்டி தனது இருத்தலின் ஆழத்தை உணர்தியுள்ளார்.

துணைகளுல் யாரவது ஒருவர் இரவில் குறட்டை விட்டால் மற்றொரருவர் தனது தூக்கத்தை காலி செய்து மன உளைச்சாலுக்கு ஆளாக்குகிறார் என்று கூறி விவாகரத்து கோரும் வேகத்திலிருக்கும் கலாச்சார சூழலில் டேனா போன்ற பெண்மணிகள் அமெரிக்காவின் "நம்பிக்கை நட்சத்திரமாக" மின்னுவதில் ஒன்றும் வியப்பில்லை.

பெண்ணியப் புரட்சி என்ற பெயரில் அன்பு சொலுத்துவது, கருணை காட்டுவது, குழந்தை பெற்று தனது பெண்மையின் மான்பினை காட்டுவதை பலவீனமாக சிலர் கருதும் இவ் வேளையில் எல்லோருக்கும் சேர்த்து டேனா போன்ற பெண்மணி பெண்மையின் மான்பினை நான்றாக வாழ்ந்து உணர்த்தி விட்டதாகப் படுகிறது. அவரின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சாலி செலுத்தி ஆன்மா சாந்தியடைய வணங்கும், தெகா.

3 comments:

Thekkikattan said...

Sam said...

உங்க டேனா ரீவ் பதிவில பின்னூட்டம் இட முடியல. நல்ல பதிவு. எனக்கும் பிடித்த ஒருவர். அகத்தின் அழகு
முகத்தில் தெரியும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்.
அன்புடன்
சாம்

Saturday, April 08, 2006

Thekkikattan said...

Sivabalan said...

நல்ல பதிவு!!

Friday, April 21, 2006

Thekkikattan said...

அன்பு சாம், தாங்கள் கூறியது மிகவும் உண்மையே! இங்கு அவர் இறந்துபோன வாரத்தில் மீடியாக்களில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டது நீங்கள் சுட்டிகாட்டிய உண்மைதான். இது போன்ற நிகழ்வுகள் எங்கெல்லாம் நடக்கிறதோ அது அவ் சமுதாயத்திற்க்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் டானிக் மனிதர்களாக இவர்கள் கருதப்பட வேண்டும். அவர்கள் வாழ்விலிருந்து நிறைய விசயங்கள் கவணிக்கப்பட தக்கது.

அன்பு சிவா, உங்களின் ஊக்கத்திற்க்கும் நன்றிகள்!

அன்புடன்,

தெகா.

Related Posts with Thumbnails