கோடைகாலம் இதோ வந்துவிட்டது மிக அருகமையில், நம்மில் எல்லோருமே உயிரை கையில் பிடித்துக் கொண்டு எப்படியாவது இந்த கோடையை "Heat Stroke" எதுவுமில்லாமல் கடத்தி விட வேண்டும் என்று கவலைப்படலாம். சரி, ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு நாம் இப்படித்தான் இந்த வெப்ப தகிப்பில் சிக்கி மூச்சு முட்டுமளவிற்கு வாழ்ந்தோமா என்றால், யோசிக்க வைக்கிறது. இல்லையா?
நாம் கொஞ்சம் சீரியசாக விசயத்துக்குள் செல்லுமுன்னர் எனது கீழ் கண்ட சுட்டியில் சென்று உலகமயமாக்கல், மக்களின் எண்ண மாற்றம், அதனை தொடர்ந்து இயற்கை விடும் பெரும் மூச்சு இவைகளை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இங்கே இருக்கிறது... "இயற்கைச் சீற்றம்..."
கடந்த வருடம் ஃபிரான்சில் நூற்றுக்கணக்கனோர் கடும் சூட்டு அலைகளால் பீடிக்கப்பட்டு இறந்து போனதை அறிந்திருக்கக் கூடும். அதில் பெரும்பான்மையினர் சீனியர்கள்தான். இத்தனைக்கும் ஃபிரான்சு டெம்பரேட் நாடுகளில் ஒன்று. கோடையிலும் கூட 80 லிருந்து 90 டிகிரி தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்பொழுது நிலைமையோ தலை கீழாக இருக்கிறது. கோடை காலங்களில் இப்பொழுதெல்லாம் 100 டிகிரியை பாதரச முட்கள் அதிகமாக தொட்டு வருகிறதாம். பூமி பந்து முழுதுமே!
சரி இந்த வெப்பம் ஏற்றம் எங்கிருந்து வருகிறது? திடீரென்று நமது சூரியன் தனது வெப்பமேற்று திருகானைத் திருகி கொஞ்சம் வெப்பத்தை அதீத படித்துக் கொண்டதோ? இல்லை பூமி தனது சுற்றுப் பாதையிலிருந்து நகர்ந்து தன்னை சூரியனுக்கு அருகமையில் அமர்த்திக் கொண்டதா? அதுவுமில்லை, இதுவுமில்லை. அப்படியெனில் என்ன நடக்கிறது. நீங்களும் நானும் நம் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்கள்தான் இந்த "வெப்ப சூடேட்ற்றதிற்கு" முழுக் காரணமும். எப்படி?
இதில் உலகமயமாக்கல் என்ற மாபெரும் அசுரனின் பங்கு பல மடங்குகள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லோரும் எல்லா வசதிகளுடன் டாம் பீம்மென்று எப்படி மற்றவர்களை போல சிந்தனையற்று சுயநலத்துடன் வாழ்வு முறையை அமைத்துக் கொள்கிறார்களோ, அதே போன்று தாங்களும் வாழ வேண்டுமென தனது சீதோஷண நிலைக்கு ஒவ்வாத விசயங்களையும் பின் தொடரும் முனைப்பு, இது போன்ற எத்தனையோ சுய சிந்தனையற்ற செயல்கள்.
எத்தனை நாட்கள் நாம் கண்மூடித்தனமாக நம் பார்வைக்கு அப்பால் தானே ஏதோ நடக்கிறது என்று விடும் அத்தனை நச்சு புகைகளையும் இந்தப் பூமிப் பந்து தாங்கி நம்மை எடுத்துச் செல்லப் போகிறது? இன்று சீனா மற்றும் இந்தியா போன்ற அதி வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பெட்ரோலியத்தை நம்பி ஓடும் வாகனங்களை பெருக்குவதில் ஒரு அசைக்க முடியா வாழ்வின் முற்றாக அந் நாட்டு குடும்பங்களிடையே பல்கி பெருகி வருகிறது.
நாம் அங்கே எட்டும் முன்பே இந்த வளர்ந்த நாடுகள் அடித்த அட்டுழீயத்தால் "green house gases" நமது வாயு மண்டலத்திற்கு மேலே தொங்கியபடி சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தினை வடி கட்டி அனுப்பாமல் (ஒஷொன் அழிவால்) அப்படியே அனுப்பி விடுகிறது. அவ்வாரு வரும் வெப்பம் இங்கு உள்ள நீர் நிலைகளும், திறந்த வெளி புல் மைதானங்களும், காடுகளும் கிரகித்து கொண்டது போக மீதம்முள்ள வெப்பம் திரும்பவும் வாயு மண்டலத்திற்கே அனுப்பபட்டு நமது மண்டலத்திலிருக்கு வெளியே சென்று கொண்டிருந்தது.
ஆனால், இன்றைய சூழலில் திறந்த வெளி புல் மைதானங்கள் அனைத்தும் வியாபார மையங்களாகவும், வாகன நிறுத்துமிடமாகவும், கான்கீரிட் காடுகளாகவும் ஆக்கப் படும் நிலையில் பூமியை தாக்கும் முழு வெப்பமும் கிரகிக்க முடியா சூழலில் அவ்வெப்பம் ஒரு கண்ணாடி பிம்பத்தில் அடிக்கப்பட்ட ஒளி கற்றை மறு பிரதிபலிக்கப்படுவது போல் திரும்பவும் தனது முழு வீச்சில் அவ்வெப்பம் நமது atmosphere_க்கே திரும்பச் செல்கிறது. அவ்வாறு செல்லும் வெப்பம் மீண்டும் அந்த green house gas-களால் தடுக்கப் பட்டு நமது outer atmosphere-க்கு போக விடாமல் தடுத்து மீண்டும் நமக்கே, திருநெல்வேலி அல்வாவாக கொடுக்கப் பட்டுவிடுகிறது, ப்ளஸ் புதிதாக நுழையும் வெப்பமும் சேர்த்து சாகுட மனுசாதான்.
இப்படி நாமே நம் பூமிப் பந்தை ஒரு அடுப்பாங்கரையில் வைத்து சூடு படுத்திக் கொள்வது போல சூடேற்றம் பண்ணிவருகிறோம். இதன் விளைவு, நான் முன்பு கொடுத்த சுட்டியில் எழுதியிருந்ததின் பொருட்டே கணக்கிலடங்கா இயற்கை பேரழிவுகள் தான் விளைவு.
தொடர் வறட்சி, தொடர் வெள்ளம், சூறாவளிகள், கடல் மட்ட உயர்வு அதன் பொருட்டு காணாமல் போகும் தீவு கூட்டங்கள் மற்றும் கரைகள் தோரும் கடல் நீர் ஆக்ரமிப்பு, குடி நீர் வற்றி போதல், புதுப் புது நோய்களை உருவாக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியக்கள் பல்கி பெருகும் வாய்ப்பு. இப்படி சங்கிலி தொடர் போன்ற விளைவுகள்.
ஆனால் நம் கண்ணுக்கு முன்னால் நிற்கும் அத்தனை அதி நவீன பொருட்களுமே சுற்றுப் புறச் சூழலை பாதிக்கும் நச்சை கக்கிகொண்டிருக்கிறது. அப்படின்னா என்னதான்ட தெகா பண்ணச் சொல்ற அப்படீன்னு என்ன பாத்து கத்துறது என் காதுகளில் சீரிப் பாயும் கார்களின் ஒலிகளுக்கிடையே கேட்கத்தான் செய்கிறது. என்ன செய்வது, பெட்ரோல் அரிதாகிக் கொண்டுவரும் இக் காலக் கட்டத்தில் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் ஏன் எதற்காக நாம் இக் காரியத்தையும் செய்கிறோம் இதற்கு மாற்றாக இயற்கை நட்போடு அக் காரியத்தை செய்து முடிக்க முடியுமா என்று எண்ணலாம்.
அமெரிக்கன் அப்படி வாழ்கிறானே நான் வாழ்ந்தால் என்ன என்று சிந்திக்கும் நாமும் அவர்களை போன்று நம் மூளையை அடகு வைத்து விட்டு "கார்பரெட்" நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அதனையே கண்களை கட்டிக் கொண்டு பின் தொடர வேண்டுமென அவசிய மில்லை. நாம் இருப்பதோ "tropical zone"-னில் என்பதனை மறந்து விடக் கூடாது. வெப்பம் ஒரு 2-4 டிகிரி ஏறிவிட்டால் கூட நாம் வெளியெ தலை காட்ட முடியாதப்பூ.
இரண்டாவது பதிவு இங்கே ... *அருணகிரி - குளோபல் வார்மிங் - தெகாவின் பதில்*
என்னயப் பத்தி
சிதைந்த வரை
-
▼
2006
(52)
-
▼
April
(8)
- என்ன வெயிலு சுட்டெரிக்கிறதா...!
- *ஐஸ்வர்யா ராய்-சுஷ்மிதா சென்-உலகமயமாக்கலின் தந்திர...
- *அருணகிரி - குளோபல் வார்மிங் - தெகாவின் பதில்*
- *ஆளவந்தான், கமல்----பரிணாமம்*
- *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?
- *டேனா ரீவ்ஸ்*-என் சிந்தனையில்...
- *பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா...
- என்னுடைய பதிவுகள் என்னவாகின்றன...
-
▼
April
(8)
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Sunday, April 23, 2006
*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
அன்புள்ள தெகா,
குளோபல் வார்மிங் பற்றி அச்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கும், உங்களைப் போன்று பொறுப்புடன் யோசிப்பவர்களுக்கும் நிறையவே இருக்கிறது.
நாம் எதுவெல்லாம் செய்யக்கூடாது, எதுவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து வரையறுத்துக் கோள்ளவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
உங்கள் பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள்.
அன்புடன்,
ஜவஹர்.
தெ கா,
சொன்னது ரொம்பச் சரி.
ஊதற சங்கை ஊதியாச்சு.
அன்பு ஜவஹருக்கும், துள்சிக்கும் நிறைய நன்றிகள், முதல் படி ஏதொ நம்மால் முடிந்தது, கடை கன்னிகளுக்கு சென்று தட்டு முட்டு சாமான்கள் வாங்க அடிக்கடி காரை எடுத்துக் கொண்டு நீண்ட தொலைவு செல்பவர்கள், மாதம் இருமுறை என்பதை ஒருமுறை என்று குறைத்துக் கொள்ளலாம்...
இப்படியாக ஒவ்வென்றிலும் நாம் ஒவ்வொருவரும் இப் பூமியை தனது சொந்த வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது போல் வைத்துக்கொள்ள பிராயச்சித்தப்பட்டலே போதுமானது, நாம் நமது குழந்தைகளிடத்தேயும் அவர்களின் சந்ததிகளிடத்தேயும் பத்திரமாக நமது வீட்டை பாதுகாத்து ஒப்படைத்து விட்டதாக திருப்தி காணலாம்.
தாங்கள் வருகைக்கு நன்றி...!
அன்பு,
தெகா.
ஜவஹர் said...
அன்புள்ள தெகா,
குளோபல் வார்மிங் பற்றி அச்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கும், உங்களைப் போன்று பொறுப்புடன் யோசிப்பவர்களுக்கும் நிறையவே இருக்கிறது.
நாம் எதுவெல்லாம் செய்யக்கூடாது, எதுவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து வரையறுத்துக் கோள்ளவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
உங்கள் பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள்.
அன்புடன்,
ஜவஹர்.
Sunday, April 23, 2006
துளசி கோபால் said...
தெ கா,
சொன்னது ரொம்பச் சரி.
ஊதற சங்கை ஊதியாச்சு.
Monday, April 24, 2006
Good one!!!
Nice!!
தெ.கா, பேசாமல் பெருநகரங்களில் கார் உபயோகப்படுத்தகூடாதென்று சட்டம் போட்டுவிட்டு, மாட்டு வண்டிதான் போகோனும் அன்றால், வேலைக்கு வேலைவாய்ப்பும் ஆச்சு வேகமாய் போனா மாதிரியும் ஆச்சு. :-)
சிவா நன்றி!
கார்த்திக்...கிண்டல் ஹா! என்னத்தை வேளைக்குப் போயி என்னத்த வெட்டி முறிக்கப் போறொம். ஏதே, பொழப்பு போகுதா அதச் சொல்லுங்க. நாளைக்கு சாப்பாட்டுக்கு வழிய சொல்லுங்க அப்படின்னு நீங்க கேட்கமா கேட்கிறது எனக்கு புரியுது. இந்த வருடம் அமெரிக்காவில இன்னும் கோடையே ஆரம்பிக்கல அதுக்குள்ள சுமார் 650 tornados தரையை முத்தம்மிட்டு சென்று விட்டது. கேள்வி பட்டீங்களா?
நமக்கென்ன கார்த்தி, அமெரிக்கனோ, ஐரோப்பியனோ ஏதாவது ஒரு மாற்று தொழில் நுட்பத்துடன் வரும் வரைக்காவது, என் வீட்ட இன்னொரு சுனாமியோ இல்ல எலி புடிச்சு சாப்பிடற நிலைக்கு எடுத்துட்டு போகமாக இருந்த சரி.
அதுவரைக்கும், oh come on man, life is so short, cheer up! enjoy you life man_ அப்படிங்கிற தத்துவ நோக்குல கண்ணை கட்டிகிட்டு...ஹும் மவுண்ட் ரோட்டுல பைக்குல போகும் போது முகத்துல கைகுட்டையை வச்சு கட்டிகிட்டு சில்லுன்னு போயிகிட்டு இருக்க வேண்டியது தான்.
கார்த்திக், நன்றி தாங்களின் கருத்துக்கு உங்களுக்காவது நேரம் கொஞ்சம் கிடைத்ததே பொருமையா இந்த மாதிரி பதிவுகளை படிக்கிறதுக்கு, நீங்கள் கொஞ்சம் யோசிக்கிறீங்கன்னு எனக்குப் படுது. மாட்டுவண்டிக்கு டயர் ரொடேட், ஆயில் மாற்றம், ஃபிளாட் டயர், ஏ.சி. போச்சு அப்படின்னு இப்படின்னு மண்டக் குடச்சல் இல்ல மன நல மருத்துவர் கிட்ட போர அளவிற்க்கு ;)
அன்பு,
தெகா.
தொக நல்லதொருப் பதிவு .குளோபல் வார்மிங் ஒரு பிரச்சினை என்று மேற்கிலுள்ள லிபரல் மக்கள் கத்திக் கொண்டு இருந்த போதும் இந்தியர்களிடம் இந்த விசயம் பத்தி ஒரு விழிப்பு உணர்ச்சி இல்லை ..நம் சந்த்தியருக்கு நாம் பூமிப் பந்தை ஒழுங்காய் விட்டுச் செல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ..
அன்பு கூத்தாடி, இங்கு வந்து இது போன்ற மண்டகாயவைக்கும் பதிவை படித்தற்க்கு மிக்க நன்றிகள். தாங்களின் கரிசனம் எனக்குப் புரிகிறது. இருப்பினும் இது போன்று விசயங்களை பேசுபவர்களை பொதுவாக கேபிட்டலிசம் நாடுகளின் வரிசையில் இந்தியாவை சேர்க்க துடிக்கும் அன்பர்களுக்கு சுத்தமாக பிடிக்காது.
மேலை நாடுகளில் அது போன்ற விழிப்புணர்விற்க்கு நிறைய காரணங்கள் உண்டு அதில் முதன்மையாக வருவது, மன உருத்தல் ஏதெ தான் பெரிய தவறு செய்து கொண்டிருப்பதாக. இதற்க்கு உந்துதலாக அமைவது அங்கு படிக்க கிடைக்கும் விசயங்கள் இது சம்பந்தமாக.
இந்தியாவில் நாம் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும். இருப்பினும் நாம் இது வரையிலும் மேற்க்கை போல இயற்க்கையை ரொம்ப சீரழித்துவிடவில்லை, இருக்கும் மக்கட் தொகையை வைத்து பார்க்கும் பொழுது. இப் பொழுது நமக்கு வேண்டியது இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு ஊட்டும் பிரச்சாரங்களே, இது தொடர்பாக.
உங்கள் பதிவோடு ஒத்துப்போகிறேனா (பெரும்பாலும் "றேன்") என்பதை விட தலைப்பை misleading-ஆக வைத்துள்ளீர்கள் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்படிப்பட்ட தலைப்பைப் பார்த்து விட்டு 'சரிதான், ஒரு மாறுதலுக்காக குளோபல் வார்மிங் என்பது கற்பனைதான் என்று சொல்பவர்களின் சில (substantive) arguments-ஐயும் ஆராய்ந்து இருப்பீர்கள்' என எண்ணி வந்து ஏமாந்தேன்.
குளோபல் வார்மிங் குறித்து புள்ளி விவரங்களோடு கூடிய ஆதாரங்கள், ஆராயும் விதத்தையும் ஆராய்பரின் சார்பையும் வைத்து இரு சாராருக்குமே உதவுவதாகத்தான் உள்ளது என்பதை அறிவீரா?
State of Fear by Michael Crichton - இன்னமும் படிக்கவில்லையென்றால் உடனே படித்து விடவும், சற்று பிரச்சார நெடி அடித்தாலும் மாற்றுக்கருத்துகளை நன்றாகவே முன்வைக்கிறது. எந்த அளவுக்கு குளோபல் வார்மிங் science or pseudo-science எனக் கேட்கிறது.
மேலும் குளோபல் வார்மிங் என்ற பெயரில் sponsorships-ஐ மனதில் கொண்டு நடத்தப்படும் அழுகுணி ஆட்டங்களையும், புள்ளி விவரத் திரித்தல்களையும், objective-ஆக குளோபல் வார்மிங்கை measure செய்வதிலும், மற்றும் கணிப்பதிலும் உள்ள நடைமுறைக் கஷ்டங்களையும் பல வலிய வாதங்களோடு நிறுவ முயல்கிறது இந்த eminently readable book. இதைப்படித்து விட்டு ஆசிரியரது வலைத்தளத்தில் உள்ள US senate-இல் அவர் தந்த disposition-ஐயும் படித்து விடுவது உத்தமம்.
குளோபல் வார்மிங் பொய்யென்பதல்ல அவரது வாதம். அதனை scientific-ஆகவும் consistent-ஆகவும் objective-ஆகவும் அளக்க உலகளாவிய ஒரு பொது முறையைக் கொண்டு வராது, அங்கங்கே தரப்படும் புள்ளி விவரங்களைக்கொண்டு வைத்து ஒரு செயற்கையான பீதியை உண்டாக்க முயலும் அத்தனை முயற்சியும் உண்மையானதோ முழுமையாக நம்பத்தக்கதோ அல்ல என்பதுதான் அவரது வாதம். குளோபல் வார்மிங் என்ற macro மற்றும் chaos விதிக்குட்பட்ட ஒரு phenomenon-ஐ ஆராய இப்போதிருக்கும் முறைகள் எதுவும் உதவாது என்பது மட்டுமல்ல, முழுவதும் புரியாமல் ஒரு macro sytem ஒன்றை tamper செய்யப்போனால் விளைவுகள் எதிர்மறையாகக் கூடப்போய் விடலாம் என்பதே அப்புத்தகத்தின் அடிக்கூறு.
இவர் இது போன்ற கருத்தின் (Law of unintended consequences என்று சொல்லலாமா?) அடிப்படையில் பல கதைகள் எழுதி உள்ளார்- sci-fi thriller என்ற வகையில். Most famous ones are "The Jurassic park, The Lost world, Prey, Timeline, The Andromeda strain" என்பவை அவற்றுள் சில.
STATE OF FEAR படிச்சீங்களா??
அருணா, தாங்களின் வருகைக்கு நன்றி, தாங்களின் ஐயப்பாடுகளுக்கு தனியாகவே ஒரு பதிவை இட்டுவிட்டேன் அந்த அளவிற்க்கு அதில் விசயமுள்ளது என்பதால், தயவு செய்து கீழ் காணும் சுட்டியை சொடுக்கி அங்கு சென்று படித்து என்னுடன் பகிர்ந்து கொள்வீரிகள் என்ற எதிர்பார்புடன் அன்பு தெகா...
http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_25.html
I did post one related to this sometimes back
http://samianalysis.blogspot.com/2006/03/blog-post_21.html#links
i don't know how many read this.We should create an awareness about this to the people otherwise we and our future generation will end up in having no place to live in the earth.
Also as an individual everbody should think what alternative one can do for avoid polluting the admosphere.Country like ours should seriously think of using "SOLAR ENERGY" where ever possible. Even we as an individual should try to use Solar Energy,to reduce the dependency on the conventional Power.This will not only saves our money but also gives some releif to the admosphere in indirect way.
I could not write in tamil,my office PC don't have e-Kalappai
சாமி, இந்த பக்கம் வந்து போனதுக்கு நன்றி! நீங்கள் கேட்டிருந்தபடியே எனக்கும் சந்தேகம்...நம் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களா இது போன்ற விழிப்புணர்வுவேற்றும் விசயங்களை படிக்க.
இருப்பினும் நமது கடமையை நாம் செய்வோம். நீங்கள் கூறிய படி மாற்று தொழில் நுட்பம் இயற்க்கை நட்பை மனத்தில் கொண்டும் எதுவாகி இருப்பினும் வரவேற்கத் தக்கதே.
நன்றி!
தெகா.
Thank you for the link! I really liked your post.
Scary isn't it? I am dreading to think how many tens of years it would take us Indians to understand that the budget airlines aren't exactly a blessing.
DesiGirl,
Thanks for showing up and leaving your comment. Please do visit often.
TheKa.
Post a Comment