மனித வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு இன்றைய தினத்திலே எங்கு திரும்பினும் இயற்கை பேரழிவுகளால் நாம் பாதிக்கப் பட்டு வருவதுபோல் காணப்படுகிறதே, அது எந்த அளவிற்கு உண்மை. இது காலங்கள் தோறும் நடந்துவரும் ஒரு சாதாரண இயற்கைச் சுழற்சியா அல்லது காட்சி ஊடகங்களின் அதீத பங்களிப்பால் நாம் அப்படி உண்ர்கிறோமா அல்லது விஞ்ஞானப் பூர்வமாக நிருபிக்கப் பட்ட Green House Effect-ஆல் ஆன Global Warming-கினால? அண்மைக் காலங்களில் நாம் கடந்து வந்திருக்கின்ற பாதையை சற்று உற்று நோக்கினால் அச்ச மூட்டுவதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்தேரிய சுனாமி, அண்மையில் மும்பை மற்றும் ஆந்திராவில் கொட்டிய மழையளவு, வட மற்றும் தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் (Glaciers) உருகி கடல் மட்ட உயர்வால் காணாமல் போகும் தீவுகள், வட மற்றும் தென் அமெரிக்கா சூறாவளிக் காற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஈரான் நில நடுக்கம் இப்பொழுது நடந்திருக்கின்ற பாகிஸ்தான் நில நடுக்கமும் அதனையொட்டிய மனித இழப்புகளையும் காணும் பொழுது இயற்கை நமக்கு ஏதோ சொல்ல வருவதாக எனக்குத் தோன்றுகிறது.
இப் பூமிப் பந்து சூரியனில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் தன்னை தக்க வைத்துக் கொண்டதின் மூலமாக போதுமான அளவிற்கு வெப்பமும் ஏனைய மூலப் பொருட்களும் ஒருங்கே அமைந்து உயினங்கள் தோன்ற வழி வகை செய்தது. அதில் முதன்மை காரணியாக கருதப்படும் வெப்பநிலை மாறும்பொருட்டு அதனையே சார்ந்துள்ள அனைத்தும் மாற்றங்களை சந்திப்பதில் ஒன்றும் ஆச்சரியமூட்டுவதிற்கில்லை. இது இப்படியாக இருக்க எந்த அளவிற்கு இந்த Global Warming என்பது உண்மையென்பதை நம்புவதில் நம்மில் பலருக்கு (ஏன் தீரன் புஷ்-க்கு கூட) பிரச்சனையிருப்பதாக தெரிகிறது.
நாம் இப் பூமிப் பந்தை சூடேற்றித்தான் வருகிறோம் என்பதற்கு ஆதாரமாக ஆய்வுக் கூடங்களிலிருந்து வரும் ஆய்வுச் சுட்டறிக்கைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. நம் தாத்தா நம்மிடம் விட்டு விட்டுச் செல்ல துடிக்கும் ஏனைய விடயங்களில் இந்த இயற்கை பற்றிய அனுபவச் சுட்டறிக்கையும் அடங்கும். "என் காலத்தில மும்மாறி தப்பாம மழை பெய்யும், குளம் குட்டையெல்லாம் நிரம்பி வழியும்" என்று கூறி வந்த அதே தாத்தா இன்னிக்கு நம்மோட சேர்ந்து எலி பிடிச்சு வயித்த நிரப்பிக் கொள்ள வேண்டிய நிலை. என்னாச்சு அப்படின்னா? எங்கே போனது அந்த குளம் குட்டையெல்லாம்?
எங்கேயோ உள்ள தெக்கிக்காட்டில் ஒரு ஊருணி வற்றிப் போனதிற்கும் கலிஃபோர்னியாவில் ஹம்வி ஓட்டும் மெலிசாவிற்கும் தொடர்பிருக்கிறதா இல்லையா? இருக்கிறது! Eco-systemல் இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று ஏதோ ஒரு விகிதத்தில் சார்ந்துதான் உள்ளது. அக் கூற்றின் படி ஒவ்வொரு மெலிசாவும் தன் பொறுப்புணர்வு அற்ற நிலையில் "யாருக்கென்ன" என்று மற்றொருவரின் விலையில் இக் காற்றை மாசுபடுத்தலிலும் வெப்பமேற்றலுக்கும் பொறுப்பாளியாகிறார்.
உலகமயமாக்களின் மற்றுமொரு அசிங்க கம்பளம் இப்படியாகத்தான் விரிந்து வருகிறது. Bigger is beautiful and supersize everything are the slogans of globalization: Yet the nature's mantra goes like this Consume as much as you want until you are being consumed as whole.
இப்பொழுது வளர்ந்த நாடுகள் மட்டுமே அடிக்கும் அட்டுழீயத்திற்கே இந்த நிலையென்றால் சீனாவும், இந்தியாவும் இந்த கூத்தில் கலந்து கொண்டு வீட்டுக்கு இரண்டு கார்கள் என்ற நிலையில் நம் உலகம் எப்படியிருக்கும். WTO-வும் G8-தான் நம்மை காப்பற்ற வேண்டும் (ஹா...ஹா). இன்றைய காலக் கட்டத்தில் யாரைப் பார்த்து யார் என்ன கற்பித்துக் கொள்கிறோம் அது எதற்காக என்று நமக்குள்ளாகவே கேள்விகள் தொடுத்துக் கொண்டு, நாம் ஒவ்வொருவரும் நம் பொறுப்புணர்ந்து வாழ்வதற்கென்று இருக்கின்ற இந்த ஒரே ஒரு (பூமி கிரக) வீட்டைப் பேணி பாதுகாப்பது நமது கடமையென்பதை உணர்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டுமென்பது என் கருத்து.
என்னயப் பத்தி
சிதைந்த வரை
-
▼
2005
(15)
-
▼
October
(14)
- சொந்த விடயத்தில் இரண்டாம் வாக்கெடுப்பு
- ஆமா, என்னிக்கு தீவாளி...!
- புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-2
- புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-1
- பழுத்த மரமே கல்லடி படும்
- தனிப்பட்ட நபரின் நிதி நிலை சுதந்திரம்
- முதுமை ஒரு சாபக்கேடா...?
- இயற்கைச் சீற்றம்...
- ஆன்மீகம் சினிமா சந்தையில்...!
- எது நாகரீகம்...?
- யார் பெரியவன்...?
- உதவாக்கரை பட்டாதாரிகள்...!
- மனித அட்டைகள்...?
- எனது முதல் வலைப்பதிவு...
-
▼
October
(14)
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Wednesday, October 19, 2005
இயற்கைச் சீற்றம்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நான் ரொம்ப நாளாகவே சொல்லநினைத்தது இந்த விசயம்.
நீங்க நல்லா சொல்லிருகீங்க.
நன்றிகள் கல்வெட்டு, இது போன்ற கசப்பான உண்மைகள் பல உள்ளன. இதோ மற்றுமொரு Hurricane "Wilma" அட்லாண்டிக் பெருங்கடலில், கொஞ்சம் யோசிக்க வைக்கத்தானே செய்கிறது!
அன்புடன்,
தெக்கிக்காட்டான்.
Post a Comment