சரி இனிமேல் எனக்குத் தோன்றியதை இங்கு இறைத்து கொட்டிவிடலாம். நான் சொல்லப் போகும் விசயங்கள் அனைத்தும் பொதுவாக இன்றைய சூழலில் எப்படி சில மனிதர்கள் தன் முகம் மறந்து முகமூடி அணிந்து கொள்ள பிரயத்தனப்படுகிறார்கள். அதுவும் தான் இந்த ஊரின் "கலங்கரை விளக்கமென்றும்" அலைந்து திரி(ந்)து தெரியும் இவர்கள் ஒரு அழுக்கு பெரியவர்கள். கவிப்புலவன் பாரதி பாடிவைத்த பாடல்களில ஏதாவது ஒன்று ஒரு சூழலில் இந்த போலிமனிதர்களின் வாழ்க்கையை தரம் பிரித்துக் காட்டி விடுகிறது.
எனது வாழ்விலும் அப்படி சில மனிதர்களை சந்திக்கும் சமயத்தில் அவர்களுனூடே இருந்து கொண்டு அவர்களின் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விசயங்களை கவனிக்கும் வாய்ப்பையும் பெற்றேன், இவைகளை வழி தவறி, இடறி இவ்வலைப் பதிப்பிலே விழும் நண்பர்களுக்கு வாசிக்கும் பொழுது எங்கேயோ கேட்ட குரலாக இருந்தால் நான் மட்டும் இத்தனிமையில் இல்லை என்பது திண்ணம்.
அவ்வப்பொழுது வாழ்வியல் சார்ந்த முரண்பாடுகள், எனக்குள்ளும் என்னைச் சுற்றியும் நிகழும் பொழுதெல்லாம் அது எவ்விதம் என் மனத்தினுள் மாற்றங்களை நிகழ்த்தியது என்பதனை அப்படியே எந்தக்கலப்படமும், முகமூடியும் அற்ற நிலையில் கொட்டித் தீர்க்க எத்தனித்துள்ளேன். முடிந்த அளவிற்கு நாகரீகமான வார்த்தைகளைக் கொண்டு. இங்கு அனைத்தும் உண்டு அறிவியல் முதல் ஆன்மீகம் வரை.
நாம் ஓடி ஓடிச் சேர்க்கும் அத்தனை மனம் சார்ந்த அறிவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே என்பதனில் சிறிதும் எனக்கு சந்தேகமில்லை. சில அன்பர்கள் அவ்வாறு பெற்ற அறிவை அதெப்படி மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வது எவ்வளவு உழைப்பிற்கிடையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் அதனை எப்படி நான் வந்து... என்று எண்ணி தனக்கென மட்டுமே வாழ்ந்து கருகிச் சாவும் கடுகுகளுக்கிடையே...
இங்கு எனக்குத் தெரிந்து தெளிந்தவைகளை உங்களுடன் கட்டாயமாக தெக்கிக்காட்டான் என்ற புனைபெயரில் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். தெக்கிக்காட்டானுக்கு முகமூடி கிடையாது, பெயரிலே தெரிந்திருக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது?
5 comments:
நீங்கள் தமிழில் வலைப்பதியத் தொடங்கி இருப்பது நல்ல விதயம். குறைந்தது மூன்று பதிவுகளை இட்டுவிட்டு தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
-மதி
-தமிழ்மணம் நிர்வாகிகள் சார்பாக-
நன்றி மதி. தமிழ்மணத்தில் என்னை இணைத்துக்கொள்ளும் நாளை மிக ஆவாலோடு எதிர் நோக்குகிறேன். மீண்டும் உங்கள் சேவைக்கு நன்றி.
தெக்கிக்காட்டான்.
Varuka Nanbare..Ungal Peyar Ennavo?
அன்பு நண்பரே புதிதாக வலைப்பதிவுலகில் நுழைந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கூறி வரவேற்கிறேன்.
வெற்றி உண்டாகட்டும். நல்ல அருமையான பதிவுகளை படைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
இன்னையிலேந்து நாம் லல்வு பண்ண ஆரம்பிககலாமா?
Post a Comment