Wednesday, October 19, 2005

முதுமை ஒரு சாபக்கேடா...?

முதுமை என்பது ஒரு அழகானதொரு விசயமென்பதை நான் பல சந்தர்ப்பங்களில் கவனித்து அதிசயித்தது உண்டு. அதே சமயத்தில் சில காணக் கூடாத விசயங்களையும் கண்டுணர்ந்தது உண்டு. இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் தன்னிச்சையாக இயங்கும் (கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகிய) குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது. இது பல நிலைகளில் அம் மாதிரியான அமைப்பை அங்கீகரிப்பதும் யாவரும் அறிந்ததே.

இச் சூழ்நிலையில் ஒரு காலக் கட்டத்தில் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள், ஆனால் இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. இன்று புலம் பெயர்தல் என்பது அயல் நாடுகளுக்குத்தான் என்ற நிலை மாறி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் செல்வது அத்தியாவசியமாகி வருகிறது.

இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை. அவர்களை முதியவர்கள் காப்பகத்தில் பிடித்துத் தள்ளி விட்டு விட்டு நாம் right behind our own dreams since we have gotten our own wings.

இவ் விடத்தில் யாரைக் குற்றம் கூறுவது என்று எனக்கு விளங்கவில்லை. புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல, அதே தருனத்தில் நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லைதான்.

வந்த இடத்தில் நன்றாக பணமும், பெயரும், வாழ்க்கைத் துணையும் நமக்கு அமைந்து விட்ட தருனத்தில் நாம் நமது எதிர் கால பத்தாண்டு திட்டத்தில் நம்மை தொலைத்துக் கொண்ட நேரத்தில் குரல் மக்கிப் போன அப்பாவின் ஞாபகம் கொஞ்சம் காணாமல் போனதில் வியப்பில்லைதான்.

இருந்தாலும் அவர்களுக்கென்று நம் வயதில் என்ன கனவு இருந்ததென்று நாம் அவர்களிடத்தே எப்பொழுதாவது வினாவி இருக்கிறோமா? அவர்களின் கனவின் விலையில் நம்முடைய வாழ்க்கை, அது தானே உண்மை.

அம்மாவிற்கு நெஞ்சு வலியென்றால் பணம் மட்டுமே அவரை குணப் படுத்திவிட முடியுமா? அதே சமயத்தில், யாரும் அவர்கள் அருகாமையில் இன்றி குறைந்த அளவிற்கே அவர்களுக்கும் தன் உடல் நலத்தைப் பற்றிய பிரக்ஞை இருக்கும் பட்சத்தில் அவர்களின் கதிதான் என்ன? Ignorant people just leave them alone என்று கூறி மூட்டை கட்டி அனுப்பி விடத்தான் முடியுமா? எப்படி எனக்கு நானே ஆறுதல் அளித்துக் கொள்வேன், ஏதாவது ஒன்று ஏடா கூடமாக நடந்து விட்டால்? அவர்களுக்கென்று கனவு இருந்திருக்காதா, நம் பிள்ளைகள் நம்மை வயதான கலத்தில் பக்கத்திலிருந்து காப்பாற்றுவார்கள் என்று?

இது இப்படியாக இருக்க அருகாமையில் இருக்க வாய்ப்பு கிடைத்தும் பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது? எனக்கு தெரிந்து ஒரு கிராமத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான ஒரு பெரியவர் தனது இறுதி காலத்தில் தட்டை தூக்கிக் கொண்டு நேரத்திற்கு ஒரு வீட்டில் சோறு என்று அலைந்து திரிந்த கன்றாவியும் எனது சிறு வயதில் பார்க்க நேர்ந்ததுண்டு. இன்றும் இதில் விளங்காத ஒரு விசயம் அம் மூன்றில் ஒருவருக்கு கூடவா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் புரியாது போயிருக்குமென்பது தான் அது?

நம் குழந்தை நாம் எப்படி இச் சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதனை role model-ஆக நம்மை வைத்துதானே பார்த்துக் கற்றுக் கொள்கிறது "விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்" இதனை ஏன் நாம் மிகவும் தாமதமாகவே விளங்கிக் கொள்கிறோம்?

பி.கு: இங்கே மங்கையும், காட்டாறும் இதே லைனில் ஆளுக்கொரு பதிவும் பதிந்து வைத்திருக்கிறார்கள். (ஆகஸ்ட் 15, 2007 என் ஞாபகத்திற்காக இங்கு இந்த லிங்குகளை இணைத்துக் கொண்டுள்ளேன்).

11 comments:

NambikkaiRAMA said...

அருமையான சிந்தனை.

Thekkikattan|தெகா said...

நன்றி பாசிடிவ் ராமா, அடிக்கடி வந்து போங்கள் சிந்தனைகள் மேலும் சிறக்க.

அன்புடன்,

தெக்கிக்காட்டான்.

சிவா said...

தெக்கிக்காட்டான்! நானும் சில நேரம் யோசிப்பேன். வயதானவர்களுக்கும் நம்மை ஒரு இளமை பருவம், சந்தோசம் எல்லாம் இருந்திருக்கும் இல்லையா! நம்ம பெற்றோரை நாம பாத்துக்கிட வேண்டிய தான். முடிந்தால் வயதானவர்களுக்கு முடிந்த உதவி செய்யலாம். உங்கள் எழுத்துக்களில் நல்ல சிந்தனைகள் வெளிவருகிறது. தொடருங்கள்.

Thekkikattan|தெகா said...

இவ்வளவு பெரிய விசயம் வந்த புதிசில எழுதினேன், யாருமே கேப்பாரு இல்ல, சிவா? இப்பவாது படிங்கிறாங்களான்னு...

மங்கை said...

தெகா

உங்க பதிவ படிச்சேன்..ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க

பெற்றோர் நம் நலனுக்கு குறுக்கே வரமாட்டார்கள்... ஆனால் அருகில் இருக்க வேண்டிய சமயங்களில் நாம் அங்கு இருக்க முடிவதில்லை... இது தான் நம் மனதிற்கு பாரமாய் இருக்கிறது..

//அவர்களுக்கென்று கனவு இருந்திருக்காதா//

நீங்கள் சொன்னது போல் எல்லா பெற்றொருக்கும் இந்த கணவு இருக்கத்தான் செய்யும்..

//நம் குழந்தை நாம் எப்படி இச் சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதனை role model-ஆக நம்மை வைத்துதானே பார்த்துக் கற்று கொள்கிறது//

இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் போது தெகா அவர்களே..

ரவியின் அம்மா முதியோர் இல்லத்தில போய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை... நல்ல மருமகள்.. இப்போது மனம் திருந்தி பாசத்துடன் இருக்கும் கணவன்..
ஹ்ம்ம் அவர் மனதில் என்ன தான் இருக்கோ தெரியவில்லை..

மங்கை

Thekkikattan|தெகா said...

மங்மை அது எப்படிங்க சுட்டி கொடுத்த உடனேயே போயி படிச்சுட்டு ஒரு அருமையான பின்னூட்டமும் கொடுத்திடுறீங்க.

என்ன பண்ணறது அடுத்தவர் கனவுகளின் விலையில் நம்முடைய கனவுகள் நனவாகின்றன. எதார்த்தாம் அது தானே மங்கை?

இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாம் நமது பெற்றோர்கள் விசயத்தில் கருணையுடன் நடந்து கொள்ளலாமென்று எனக்குப் படுகிறது, அவர்கள் நம்முடன் வாழும் காலத்திலேயே... அவர்கள் இறந்த பிறகு அவர்கள் இப்படி, அப்படி என்று பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இன்று, நன்று அதுதான் நம்ம பாலிசி :-)

சரி உங்களொட சுட்டியை நான் இங்கே இணைத்துக்கொள்கிறேன்... ஒரு ஞாபகத்திற்காக... ஈசியாக இருக்கும் இங்கிருந்து அங்கு தாவுவதற்கு என்பதால்.... Growing Old

காட்டாறு said...

தெகா, இந்த பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைச்சதுக்கு நன்றிங்க! என்னோட கருத்து என்னன்னா அவங்க இப்படி செய்றாங்க இவங்க இப்படி செய்றாங்கன்னு சொல்றதுல உடன்பாடு இல்லைங்க.

ஏதோ ஒரு காரணத்தால், நாம் நம் பெற்றோரை கூட வைத்து பார்த்துக் கொள்ள முடியலையா, அதுக்காக வருத்தப் படுவதால் என்ன பயன்? எத்தனையோ பெரியவர்கள் நம்மை சுற்றி இருக்காங்க. அவர்களுக்கு ஒரு ஆறுதலா இருக்க முடியும் அல்லவா? இப்படி ஒரு ஒருத்தரும் நினைச்சா போதுங்க. முதுமையை அல்ல, பெரியவர்களைப் போற்றும் நாள் அருகாமையில் இருக்குதுன்னு நினைக்கலாம். Simple concept.

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

we are all bound to be very supportive to all our old people. Now it has become a fashion to put old people in oldage homes. And the pity is that the children send so much cards saying that 'I love you, I miss you' and still make them feel worse.//

நீங்க இங்க வந்து படிச்சிட்டு பின்னூட்டம் போட்டு இருக்கீங்கங்கிறதே திரும்ப இந்தப் பதிவ தோண்டிய எடுக்கும் பொழுதுதான் தெரியவந்தது.

தாமதமான பதிலுக்கு ஒரு மாப்பு. இந்த முதியோர்கள் இல்லத்தைப் பற்றியும் நம்ம காட்டாறு ஒரு பதிவு போடுறதா சொல்லி இருக்காங்க. பார்ப்போம் என்ன அங்க அவங்க சொல்றாங்கன்னு.

எனக்கு இந்த மாதிரி வலுக்கட்டாயமா வயதானவர்களை அவர்களின் சொந்த வீட்டிலிருந்தே பிடித்துக் கொண்டு போய், இன்னொரு இடத்தில் தனக்கு பிடித்தமான ஊர், பழகிய மக்கள், பேரன், பேத்திகளிடமிருந்து அப்புறபடுத்தி வைப்பதில் உடன் பாடு கிடையாது.

இதில் நீங்கள் கூறியது போல இந்த வாழ்த்து அட்டைகள் மட்டும் வந்து என்ன பெரிதாக அவர்களுக்கு இன்றைய வாழ்வினைப் பற்றி ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்துவிடப் போகிறது?

Sridhar V said...

தெகா... நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

//நம் குழந்தை நாம் எப்படி இச் சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதனை role model-ஆக நம்மை வைத்துதானே பார்த்துக் கற்று கொள்கிறது "விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்" இதனை ஏன் நாம் மிகவும் தாமதமாகவே விளங்கி கொள்கிறோம்?
//

இதை படித்தவுடன் தோன்றியது - மகன்/மகள் இப்படி இருப்பதற்கு ஒரு வகையில் அவர்களின் பெற்றோர்களும் காரணம்தான் அல்லவா?

old-age home என்பது ஒன்றும் தற்போதைய விளைவுகள் அல்ல. முற்காலத்தில், ஒரே ஊரில் இருக்கும் குடும்பங்களில் வயதான பெற்றோரை கவனிப்பாரற்று விட்ட குடும்பங்களை பார்திருக்கின்றேன்.

எங்கள் குடும்பத்தில் ஒரு தூரத்து உறவினர் வயதான காலத்தில் வயதானோர் இல்லத்தில் சேர்க்கபட்டதை நேரடியாக பார்த்தும் இருக்கிறேன். இத்தனைக்கும் அவர் ஒரு அரசு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்று pension கூட வாங்கி கொண்டிருந்தார்.

95 வயதான பெரியவர் ஒருவர் தன் 7 மக்கள் எத்தனை முறை வருந்தி வருந்தி அழைத்தாலும் தன் 88 வயதான் மனைவியுடன் தனித்தே வாழ்ந்து வருவதையும் பார்த்து வருகிறேன்.

மொத்தத்தில் குடும்ப நாகரீகம் அவ்வளவு மோசமாகிவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது.

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

//என்னோட கருத்து என்னன்னா அவங்க இப்படி செய்றாங்க இவங்க இப்படி செய்றாங்கன்னு சொல்றதுல உடன்பாடு இல்லைங்க. //

நீங்க என்ன சொல்ல வாரீங்கன்னு புரியுது. நான் சொல்லிக் கொண்டிருக்கிற விசயம், தன் பெத்த பிள்ளைகளே தனது தாய் தந்தையை ஒரு சுமையாக கருதும் பட்சத்தில் எப்படி அவர்கள் மற்ற வயதானவர்களை தனது பெற்றொர்கள் போல பாவித்து அவர்களை அன்புடன் நடத்துவது.

நீங்கள் சொல்வது, அது போன்ற உணர்ந்த மக்களுக்கு இல்லையா. என்று என்னை இது போன்ற ஒரு பதிவு போட உந்தியதோ அன்றே நான் பார்க்கும் பெரியவர்களை நீங்கள் கூறிய அதே கண்ணொட்டத்தில் பார்க்க பழகி விட்டேன் என்றே நினைக்கிறேன். அதுவும் வெகு காலங்கள் பெற்றோர்களை விட்டு விலகி இருக்க நேரிடும் இத் தருனத்தில். இதனையே எனது பெற்றோர்களிடத்தும் கூறியிருக்கிறேன், எப்படி என்னால் இப்படி தூரத்தில் பிரிந்து இருக்க முடிகிறது என்று அவர்கள் என்னை கேட்ட பொழுது. உங்கள் வயதினை ஒத்த அனைவரும் எனக்கு நீங்களகவே படுகிறீர்கள் என்று கூறி அவர்களை புலகாங்கிதம் அடைய வைச்சிட்டோமில்ல :-).

நன்றி காட்டாறு!!

cheena (சீனா) said...

பிளாக்கர் சொதப்புகிறது. முதலில் இட்ட மறு மொழி வந்ததா தெரியவில்லை.

இங்கே மங்கையின் பதிவிலிருந்து வருகிறேன்.

முதியவர்கள் மக்களுடன் இருந்தாலும் சரி, தனித்து வாழ்ந்தாலும் சரி, முதியோர் இல்லங்களில் இருந்தாலும் சரி - யாரையும் சார்ந்திராமல் தங்கள் கால்களிலேயே நின்றார்களென்றால் பிரச்னைகள் அதிகம் வராது.

தலைமுறை இடைவெளியை அனுசரித்தும், கால மாற்றங்களைப் புரிந்து கொண்டும், விட்டுக் கொடுக்கும் மனோ பாவங்களை வளர்த்துக் கொண்டும் இருந்தால் வாழ்க்கை எங்கிருந்தாலும் சொர்க்கம் தான்.

Related Posts with Thumbnails