Friday, October 14, 2005

எது நாகரீகம்...?

உலகம(ந்த)யமாக்கப்பட்ட இன்றைய சூழலில் நடுத்தர தட்டு மக்களிடையே எப்படி வாழ்ந்தால் நம்மை நாகரீகம் அடைந்தவர்களாக அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற குழப்ப நிலை பீடித்திருப்பதை எங்கு திரும்பினும் காண, கேட்க முடிகிறது. நாகரீகம் அடைந்ததாக மார் தட்டிக் கொள்ளும் வளர்ந்த நாடுகள் எந்தத் தவறுகளை செய்து தன்னை திருத்திக் கொள்ள முற்பட்டு வருகிறதோ, அதே தவறை நாம் மிகவும் முயற்சித்து பெற்றுக் கொள்ள எத்தனிப்பது வேதனையான விசயம். இயற்கையில் கிடைக்கும் நல்ல குடி நீரை தவிர்த்து "கோக்" குடிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம்?

"கோக்" குடித்தால் so cool என்று நினைத்து உடல் நலத்தை தெரிந்தோ தெரியாமலோ பாழடித்துக் கொள்வதை உணர்கிறோமா? மேலை நாடுகளில் நடத்திய ஆராய்ச்சிகளின் மூலம் தெரிந்த உண்மை கோக் குடிப்பதின் மூலம் உடம்பிலுள்ள எலும்புகளின் அடர்வுத் தன்மை குறைகிறது என்பது. இதனால் எலும்பு எளிதில் முறியும் தன்மை அதிகரிப்பதாக அவ் ஆராய்ச்சி எடுத்துரைக்கிறது.

அதன் படி சில அமெரிக்கா மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கோக் விற்பனை தடுப்பு அமுலில் உள்ளது. உண்மை இப்படியாக இருக்க நாம் ஏன் அறிந்தே அத் தவறை செய்ய நம் குழந்தைகளை அவ் ஆபத்திற்கு யிட்டுச் செல்ல வேண்டும்.

அது போன்றே fast food சாப்பிடுவதும் so cool என்று கருதி வளர்ந்த நாடுகளில் எது Junk Food என்று பெயரிட்டு ஒரு டாலருக்கும் இரண்டு டாலருக்கும் குறைவாக செலவு செய்து ஒடும் ஓட்டத்தில் முழுங்கி வைக்கும் sandwich-களில் எவ்வளவு கலோரி இருக்கிறது எவ்வளவு கொழுப்பு உட்கொள்கிறோம் என்று பிரக்ஞையற்று உண்டு பின்னாலில் obesity-க்கு ஆளாகிறார்கள்.

ஆனால் கொஞ்சம் படித்தவர்களோ அங்கேயே தேடித் தேடி நாம் இப்பொழுது உங்க வீட்டிலும் எங்க வீட்டிலும் சாதாரணமாக உட்கொள்ளும் பச்சைக் காய்கறிகள் (Organic Food-மிக்க பிரபலம்) மற்றும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். உண்மை இப்படியாக இருக்க நாம் இப்பொழுது pizza சாப்பிடுவது வயித்து பசிக்கு என்பதை மறந்து மதியம் சாப்பிட்டு விட்டு இரண்டு மூன்று நாள் கழித்தும் அது பற்றி பீற்றிக் கொள்ளும் "பாற்கடல் அமுதம்" ஆகி விட்டதை நினைத்தால் என் தலை தொங்கிப் போய் விடுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்சா சாப்பிட்டால் முக்தியா கிட்டும் அதுவும் small pie (ரூபாய் 350-க்கு) வாங்கி பழநி பஞ்சாமிர்தம் சாப்பிடுவது போல் ஆறு பேர் சாப்பிட்டுவிட்டு?

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல அமெரிக்காவில் ஒரு McChicken_னின் விலை ஒரு டாலர் அதே குப்பையை நம்மூரில் 100 ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்கி சாப்பிடுவதின் நோக்கம் என்ன, உடல் நலத்தை பேணுவது கருதியா, இல்லை இதற்கு முன்பே அதை அடிக்கடி சாப்பிட்டு நாக்கு அடிமைப் பட்டு போனதாலா, அல்லது நிறைய சம்பாதித்து (சாதித்து) விட்டோம் எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் போனதினாலா (அப்படியென்றால் இங்கு ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது, நமது நாட்டில் இன்னும் அறுபது விழுக்காடுகளுக்குமேல் பட்டினிச் சாவு நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை) அல்லது merely just to say, hey, look today we ate at McDonald என்ற அல்ப சுய சிந்தனையற்ற நிலையை காட்டவா? இதில் எது?

நம்மையும் நமது குழந்தைகளையும் இந்த வியாபாரச் சந்தையில் தினமும் இழந்து கொண்டிருக்கிறோம். மனிதன் மன மகிழ்வுடன் வாழத்தான் ஒடி ஆடி உழைப்பது எல்லாம் ஆனால் அந்த மகிழ்வு யாருடைய செலவில் வருகிறது என்பதை சற்று சிந்தித்து நமது முன்னோர்கள் நமக்கு விட்டு விட்டுப் போன இந்த இயற்கை வளங்களை நாமும் நமக்கு பின்னால் வரக்கூடியவர்களுக்கு பொறுப்புணர்வுடன் விட்டுச் செல்வது நாம் எந்த அளவிற்கு மனத்தளவில் நாகரீகம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டும்.

அதை விடுத்து மேலை நாட்டினர் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள் (with all that consumables like disposable everything) என்பதற்காக நாமும் அவ்வழி நடப்பதில் என்ன நாகரிகம்.

Disposable வழிதான் நாகரீகமென்றால் நாம் சேர்க்கும் குப்பையை யார் சுத்தப் படுத்துவது, இயற்கை பேரழிவுகளா? எப்பொழுது நாம் நமக்காக நம் சுற்றுச் சூழலிற்கு தகுந்த வாழ்வு முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னலேயே விட்டுச் சென்ற (உ.ம்: வாழை இலையில் உண்பது) "உண்மை நாகரீகச் சான்றோர்கள்" பழக்க வழக்கங்களை பின் பற்றிச் செல்வதில் கேடு ஒன்றுமில்லை என்று உணர்கிறோமோ அன்றுதான் கலச்சார சீரழிவும் இயற்கை வளமும் இந்த copy cat-களிடமிருந்து காப்பாற்றப்படும்.

4 comments:

சிவா said...

நீங்கள் சொல்வது சரி தான். எப்பவுமே அயல் நாட்டை பார்த்தே பழகி போய்விட்டது சில மக்களுக்கு. டீசண்ட் என்ற பெயரில் அவர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து ரெண்டுங்கெட்டான் ஆகி வருகின்றனர். கையை வைத்து சாப்பிட்டாலே ஏதோ பட்டிக்காட்டான் என்று சென்னையிலேயே நினைக்கின்றார்கள். ஒரு கரண்டியை வைத்து ஒரு வேகாத அரிசியை சாப்பிடுவது தான் Hygienic என்று ஆகிவிட்டது (தோசையை கூட கரண்டி வைத்து சாப்பிடும் காமெடி எல்லாம் பார்த்திருக்கீங்களா?). வில்லுப்பாட்டு, பாவை கூத்து எல்லாம் அழிந்து வருகிறது. அதை பார்த்தால் பட்டிக்காடு என்றாகி விட்டது. ஒரு பால் பாக்கெட் வாங்கினால் கூட ஒரு கேரி பேக் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு வீட்டில் ஒரு நாளைக்கு எத்தனை பாலிதீன் கவர்கள். கூடை தூக்கிட்டு போய் பொருள் வாங்கினால் டீசண்ட் இல்லையாம். அரை வேக்காட்டு தனமாகவே ஆகி கொண்டிருக்கிறது நம்ம ஊர். தமிழில் பேசினால் கூட பட்டிக்காட்டானாகி விடுவோம் போல :-)

நற்கீரன் said...

I agree with your observations that one should not blindly adopt life styles or choices of the western or developed countries, particularly when those life choices have proven to be defective. Drinking coke instead of water, eating junk or fast food instead of local garden fruits and vegetables are good examples. One can extend the examples to include “car” based life styles, TV addiction, “sexual liberation”, cell phone etc.

At the same time, the experience of eating pizza or eating out in Macdonald in India and in America are not the same. In India the experience is something novel, something different from the ordinary, and in some sense a foreign experience. You can compare this to Americans eating Rice and Parrpu for a high premium at a trendy restaurant.

Indian writer Ashis Nandy has written about this paradox at some length. Also, the book and critical reviews of the “The McDonaldization of Society” also discuss the subject matter at great length.

Thekkikattan|தெகா said...

சகோதரர் சிவாவிற்கும் நற்கீரன் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல. ஏன் இங்கு globalization பற்றி அவ்வளவாக யாரும் பேசுவது கிடையாது. நான் அவ்வப்பொழுது பேசலாம் என்று உத்தேசித்துள்ளேன். பார்க்கலாம். மீண்டும் நன்றி எனது தளத்தில் தடம் பதித்தமைக்கு.

அன்பன்,

தெக்கிக்காட்டான்.

குமரன் (Kumaran) said...

தெக்கிக்காட்டான் - மேலும் இதைப் பற்றி எழுதுங்கள். குறைந்த பட்சம் இதைப் படிப்பவர்களாவது தாங்கள் செய்யும் கூத்தைப் பற்றி அறிந்து தெளியட்டும்.

Related Posts with Thumbnails