Wednesday, October 12, 2005

யார் பெரியவன்...?

சிறுவனாக இருக்கும் பொழுது ஒரு சில விசயங்களை பெறுதற்கென, ..ச்சே நான் பெரியவனாக இருந்திருந்தால் அது எனக்கு கிடைத்திருக்குமோ என்று நினைத்து எப்பொழுதுதான் நான் பெரியவனாக ஆவேனோ என்று சிறு வயதில் நினைக்கத்தோன்றும். அது அந்த வயதிற்கே உரித்தானது.

அந்த சிறு வயது அவா நிலையை தான் வயதளவில் நெடுக வளர்ந்தும் மன அளவில் சிறுவனாக வாழும் நம்மில் பலர் எப்படிப் பெரியவனாவது என்ற குழப்ப நிலையில் தான் "இப்படியானால் பெரியவனோ, அப்படி நடந்து கொண்டால் பெரியவனோ" என்று கருதி ஒரு அரசியல் வாதியாகவோ, நிறையப் பணம் சேர்த்தோ அல்லது நிறையப் படிப்பவன் போல் பாசாங்கு செய்தோ அல்லது குறைந்த பட்சம் ஒரு (அடி)கட்டப் பஞ்சாயத்து ஆசாமியாகவோ அவதாரம் எடுக்கச் சொல்கிறதோ, என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

என்னைப் பொருத்தமட்டில் எப்பொழுது இந்த பிரக்ஞை ஒருவருக்கு தான் "பெரியவன்" என்று நினைக்கத் தோன்றுகிறதோ அன்றே அவரின் ஒவ்வொரு அசைவிலும் போலித்த்தன்மை அத்தியாவசியம் ஆகிறது. இன்னும் ஒரு சிலர் இப்படி நடந்து கொண்டால், இப்படிப் பேசினால் நமது அங்கீகாரம் சமுதாயத்தில் உயர்வதாய் நினைத்து தனது வாழ்க்கையையே நகைப்புக்குள்ளாக்கி கொள்கிறார்கள்.

தனக்கு சிறிதும் தொடர்பில்லாத விடயங்களை செய்து கொண்டு வெளிப் பார்வைக்கு நான் இப்படிப் பட்டவனாக்கும் என்பது போல் நடை உடை பாவனைகளை செய்து கொண்டு ஆனால் அவர்களுக்குள் ஒரு ஒன்றுமற்ற வெற்றீடமாக வாழ்கிறார்கள். அப்படி வாழ்வதில் யாருக்கு லாபம்?

இவர்கள் என்றைக்கேனும் தனக்காக என்று ஒரு நாள் வாழ்ந்து அதிலுள்ள சுகத்தை அனுபவித்திருப்பார்களா? போலியாக வாழ்வதில் தான் எத்தனை ஏமாற்றங்கள் முதலில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதில் எத்தனை இழப்பு?

தனக்காக வாழும் பொழுது அதனை ரசித்து மனநிறைவோடு செய்யும் ஒருவர் அதற்கு மாறாக யாராகவோ நடிப்பதில்தான் எத்தனை அசெளகரியத்தை அனுபவிக்கிறார். மாறி வரும் அல்லது சுருங்கி வரும் இவ்வுலகில் இன்றைய நடைமுறை நாகரீகமாக கருதப் படுவது எதுவெனில் "நீ அடுத்தவர்களுக்கு அசெளகரியத்தை கொடுக்காமல் எது செய்தாலும் அது நாகரீகம்."

அப்படி ஒரு வாழ்க்கையை தனக்காக வாழும் பொழுது வெளிப் பகட்டை ஒரு பொருட்டாக கருதாத பட்சத்தில் வாழ்க்கையில் ஒரு நிம்மதியும் தெளிவும் குடும்ப உறுப்பினர்களிடத்தே தோன்றக் காண்போம். அப்படி வாழும் பொழுதுதான் மனத்தளவில் ஒருவன் பெரியவன் ஆகிறான் என்பது என்னுடைய கருத்து. அப்படிப் பட்டவர்களின் மூலமே அவர்கள் ஒன்றி வாழும் இச் சமுதாயத்திற்கும் ஏதேனும் படைப்ப(பங்க)ளிக்க இயலும்.

இது போலிச் சாமியார்களுக்கும் வனத்தில் (மறைந்து) வாழும் உண்மைச் சாமியார்களுக்கும் உள்ள குறைந்த பட்ச ஆறு வித்தியாசங்களைப் போன்றது.

3 comments:

துளசி கோபால் said...

தெக்கிக் காட்டான்?
என்னங்க பேரே வித்தியாசமா இருக்கு.

வந்துட்டீங்கல்லே நம்ம தமிழ்மணத்துக்கு. வாங்க வாங்க.

என்னவோ சொல்ல நினைக்கிறீங்க. சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

Thekkikattan|தெகா said...

Nantri Thulasi, I am trying to type in Tamil the Font set up is not working in here. Anyway, thanks again let other friends also know a new KAaTTAn is here.

Anbudan,

Thekkikattan.

கீதா said...

என்னைப் பொருத்த வரைக்கும் நீங்க சொன்னது சரிங்க. சின்ன குழந்தைங்களா இருக்குறப்ப வரும் சுதந்திரம் பெரிசானதும் குறைஞ்சிடுது. இப்படி பேசினா தப்பாயிடுமோ. இப்படி செய்தா வருத்தப் படுவாங்களோ.. இப்படி நிறைய யோசிக்க வேண்டி இருக்கு. நிறைய சமயங்களில் நாம் நாமா இருக்கோமான்னு ஒரு சந்தேகம் வருது..மீண்டும் குழந்தை பருவத்துக்கு போயிரலாம்னு ஒரு ஏக்கம் வருது.

Related Posts with Thumbnails