Thursday, October 20, 2005

தனிப்பட்ட நபரின் நிதி நிலை சுதந்திரம்

தனிப்பட்ட நபரின் நிதி நிலை சுதந்திரம் அவரின் சமுதாய கண்ணோட்டத்தில் தொடங்குவதாக எனக்குப் படுகிறது. நான் முன்பே எனது வலைப்பூ பக்கத்தில் "உதவாக்கரை பட்டாதாரிகள்" என்ற தலைப்பின் கீழ் சில பல அன்பர்களின் (படிப்பிற்கு பிறகு ஊர் திரும்பும்) பொதுவான மனவோட்டத்தை அதில் நான் கவனித்து அவர்களுடன் பழகிய நாட்களிலிருந்து தெரிந்து கொண்டதை அங்கு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் சில சிந்தனைத் துளிகளை இங்கு விட்டுச் செல்லப் போகிறேன்.

எங்கேயோ கேட்டது "செய்யும் தொழிலே தெய்வம்" என்று நம்ம ஊரில் எல்லா விசயத்திற்கும் இது போன்ற பழ மொழி ஒன்று இருக்கும் அதற்கு எதிர் இணையான ஒரு சொல்லும் இருக்கும். நமது சமுதாயத்தில் இதனை தொழிலாக செய்தால் அவன் பெரியவன் அதனை தொழிலாக செய்தால் இவன் சிறியவன் என்று பால்ய வயதிலிருந்தே நாம் கற்பிக்கப் பட்டு நமக்கென்று ஏதேனும் சிறு தொழில் தொடங்க அனைத்து வாய்ப்புகளும் (வயதும்) சாதகமாக இருக்கும் நிலையிலும் அந்த தொழிலப் போயி நான் எடுத்து நடத்துறதான்னு விட்டுத் தள்ளிப்புட்டு மோட்டு வளையத்தை பார்த்தபடி வருடங்கள் பல கழிப்பதுண்டு.

என் நண்பர் ஒருவர் லண்டனிலிருந்து திரும்ப விடுமுறைக்காக ஊர் வந்திருந்த போது அவரை மற்ற வேலை வெட்டி இல்லாத (இருந்தும்) நண்பர்களுடன் ஒரு தேனீர் கடை முச்சந்தியில் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது ஒரு நண்பர் அந்த லண்டன் நண்பரை பார்த்து என்ன வேலை பாக்றீங்க அங்கன்னு சும்மா கேட்டு வைச்சார், கொஞ்சம் வாய் துடுக்கான மற்றொரு நண்பர் கொஞ்சமும் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் (அவர் வீட்டில் வேலை இல்லாமல் மூன்று பட்டதாரி சகோதரர்களிருந்தும்) "என்ன லண்டன்ல ஏதாவது டீ கடைல கப்பு கழுவு வாரு" என்று கூறியதை கேட்டு அனைவரும் அது ஒரு joke-ஆக நினைத்து சிரித்து வைத்தார்கள். என் மனதில் எங்கோ தைத்தது பிரிதொரு சமயத்தில்.

அப்படி வேலை செய்வதில்தான் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. எனக்கு தெரிந்து அமெரிக்காவில் சில நண்பர்கள் மென்பொருள் தொழில் தொய்வுற்று தனது வேலை போன நிலையில் பெட்ரோல் பங்களில் வேலைக்கு அமர்ந்தது இன்று ஞாபகத்திற்கு வருகிறது, எப்படி அவர்களால் அவ்வளவு சுலபமாக அதை எடுத்துக் கொள்ள முடிந்தது (Besides the reason working for dollars)? யோசிக்க வைக்கிறது.

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் Royal Blood Run_ ஆவதாக பிரிதொரு சமயத்தில் ஒரு ஆந்திர அன்பர் அமெரிக்காவில் இருக்கும் பொழுது சொல்ல கேட்டதும் உண்டு. ஆக மொத்தத்தில் நாம் இந்தியர்கள் அனைவரும் கீழே கூறப்பட்டுள்ளது போல் இல்லாமல் (we think like a king but work like a dog) போலி கெளரவத்திற்கு உட்பட்டு தன்னிலையறிந்து உலகயியல்பு புரிந்து முன்னேறும் மற்றவர்களையும் அவதூறு பேசித் திரிபவர்களையும் நம் சமுதாயம் தக்கவைத்துக் கொண்டுதான் விடுகிறது.

என்று நம்மிடத்தில் இவ் மன ஓட்டம் மாறி எத் தொழில் புரினும் அதனை நேர்மையுடன் வழி நடத்தி நாமும் வாழ்வதற்கு ஒரு வழிவகை தெரிந்து கொண்டு மற்றவர்களையும் வாழ வைத்தால், தன் குடும்பமும் நாடும் சுபிட்சம்காணும் என்பதில் ஐயமில்லை.

1 comments:

Radhakrishnan said...

அற்புதமான கட்டுரை தெகா. இந்த கட்டுரையின் போது வெளியுலகத்தில் இருந்தவர்கள் மிகவும் குறைவாகவே இருந்திருக்க கூடும்.

ஐந்து வருட கால முன்னால் உள்ள உங்கள் சிந்தனையை இன்றும் நான் உபயோகத்தில் வைத்து இருக்கிறேன் என நினைக்கும்போது காலம் மாறிவிட்டது, மனிதர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள் சில விசயங்களில் என நினைக்க தோன்றுகிறது.

Related Posts with Thumbnails