Sunday, October 30, 2005

ஆமா, என்னிக்கு தீவாளி...!

புலம் பெயர்ந்து வாழ்வதால் கோடி நன்மை கிட்டுவதாக பல பேர் சொல்லக் கேட்டு நானும் சொல்லிக்கிட்டு திரியறேன். ஆனா, இந்த மாதிரி தீவாளி, பொங்கள்னு வந்திட்ட 'ச்செ' இதுவும் ஒரு வாழ்க்கையான்னு வருதுப்பா. இவ்வளவுக்கும் குடும்பமாகவே வெளி ஊர்ல இருந்தும், இப்படி நியாயமான கோபம் வருவதை என்னால தவிர்க்க முடியலை.

தீவாளி நெரிசல்ல சும்மா எல்லாப் பொருளும் இலவசமா கொடுக்கிற கணக்கா கடை வாசல்ல கட்டையால ஒரு அடி வாங்கிபோட்டு, கொட்ற வேர்வையா இருந்தாலும் சரி இல்ல மழையா இருந்தாலும் சரி அப்படி அனாசியமா நடந்து திரிஞ்சிப்புட்டு, தொப்பலா நனைஞ்சு போன பட்டாச வீட்டுக்கு எடுத்துட்டு போயி ஊது வத்தியோ இல்லன்னா சாட்டை பொரியோ வைச்சு சும்மா வெத்து வேட்ட பத்த வைக்கிற கணக்கா பத்து நடை நடந்து பட்டாசுக்கும் வீட்டு முக கதவுக்குமா பொம்பள பயக சிரிக்க நாம காட்ற சீனல்லாம் போச்சே, இதுவும் ஒரு பொழப்பால.

ஆமா, இந்த தீவாளி என்னிக்கு வருது. சொன்னிங்கன்ன அன்னிக்கு இங்ஙன உள்ள கோயிலுக்வாது போயித்து வாரோம். ஆங், துணி மணியா, அதான்
வருச முழுக்க அந்த sale இந்த sale_ன்னு எடுத்து வைச்சுருகிறதேயே போட முடியாம இருக்கே இதில என்ன thrilling இருக்கு, அதில இருந்து ஒன்ன எடுத்து போட்டுகிட்டா போச்சு. என்னங்க பட்டாசா, ஏப்பா நான் வெளில இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா, அதெல்லாம் வெள்ளகார மச்சான் independence தினத்துக்கு கப்பல்ல வைச்சு மெத்தமா வெடிச்சு காமிப்பான், நாம கையை கட்டிகிட்டு பத்திரமா ஒரு மைலு தள்ளி நின்னு பாத்துகிடுறொம்.

சரி நான் பொயித்து வரட்டா, இந்த நாயித்து கிழமை 0vertime பார்கணும். காசு... காசு... ஹாலோவின் இருக்கு கிரிஸ்துமஸ் வருது I have to ask my kids to make a wish list, so Santa can (check his pocket and) do early shopping (ஆமாப்பா, நான் தெக்கிக்காட்டான்தான்).

4 comments:

துளசி கோபால் said...

என்னிக்கு வீட்டுலே பலகாரபண்டமெல்லாம் செய்ய ஆரம்பிக்கறமோ, அன்னையிலிருந்து தீபாவளி.

இங்கே பட்டாஸ் கிடைக்குது. அதை நவம்பர் 5 தேதியோட கொளுத்தி முடிச்சுரணும்.

கம்பி மத்தாப்பு, பூச்சட்டி வகையறாவை நம்ம வீட்டுத் தோட்டத்துலெ இருந்து விடலாம். தப்பில்லே.

சிவா said...

உண்மை தான் தெக்கிக்காட்டான்! அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சில நேரங்களில் வாழ்க்கையில் உண்மையான சந்தோசம் எது என்று இந்த மாதிரி தருணங்களில் தான் தெரிகிறது. :-)

சந்தோஷ் aka Santhosh said...

நானே மறந்து போயி(மறக்க முயற்சி செய்து தோற்று) ஒரு வழியாக Convience ஆகி இருக்கேன் நீங்க வேற நினைவுபடுத்தி விட்டிங்க.:(( காசுக்காக எதையெல்லாம் தியாகம் செய்ய வேண்டி வரும் என்று தெரியவில்லை. காசே தான் திபாவளியாடான்னு வாழ வேண்டி உள்ளது.

Anonymous said...

/உண்மை தான் தெக்கிக்காட்டான்! அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சில நேரங்களில் வாழ்க்கையில் உண்மையான சந்தோசம் எது என்று இந்த மாதிரி தருணங்களில் தான் தெரிகிறது./

I agree with Siva Sir 100%.

Rumya

Related Posts with Thumbnails