Friday, September 29, 2006

டில்லியில் இந்தியா ஒளிரும் சில காட்சிகள்...!!!

Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us


Image Hosted by ImageShack.us

Image Hosted by ImageShack.us
இந்தியாவில் 2.1 மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதுக்கும் குறைந்த வயதில், ஆண்டுதோறும் சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால் மாண்டுவருவதாக, ஐ.நா சபை சுட்டறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதில் 700 மில்லியன் இந்தியர்கள் சுத்தமான குடிநீரே கிடைக்காமல் அவதியுருவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.


மற்ற காட்சிகளுக்கும், கட்டுரைக்கும், புள்ளி விபரங்களுக்கும் இங்கே சென்று பார்க்கவும்...


***சிறு முயற்சி முத்துவும் இங்கே நீர் பாதுகாப்பின் அவசியம் பொருட்டு பேச்சு வார்த்தை நிகழ்த்தினது காண சொடுக்கிப் பாருங்க... நன்றியுடையவர்களாய் இருப்போம்..

13 comments:

புதுமை விரும்பி said...

தெகா, மனதைக் கனமாக்கும் ஒரு பதிவை போட்டுவிட்டீர்கள் (:-(

சுட்டிக்கு நன்றி.

Sivabalan said...

தெகா

இது கிட்டதட்ட சென்னைக் காட்சி போலத்தான்..

வருத்தமளிக்கும் விசயம்..ம்ம்ம்ம்...


என்னமோ போங்க..

துளசி கோபால் said...

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு,
தண்ணியை வேஸ்ட் செய்ய மனசு வராது.

இங்கே தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தறேன்னு ஸ்ப்ரிங்க்ளர்களை திறந்து
அப்படியே விட்டுட்டுப்போறவங்களைப் பார்த்தா எரிச்சலா இருக்கு.

வடுவூர் குமார் said...

பல பெரிய நகரங்களில் (நமது தேசத்தில்) அங்கங்கே இந்த மாதிரி பல இடங்கள் இருக்கிறது.
"டவுன் பிளானிங்"-அவசமாக கவனிக்கப்படவேண்டிய சமாச்சாரம்.

பொன்ஸ்~~Poorna said...

"சொட்.. சொட்.. "என்று இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஆனந்த விகடனில் ஒரு தொடர் வந்தது. இந்தியா முழுவதும் தண்ணீரை எப்படி வீணாக்குகிறார்கள், எப்படி அன்னிய கம்பனிகள் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள நீர்வளத்தை ஒப்பந்தங்களின் மூலம் வாங்கி அதையே அந்த நாட்டு மக்களுக்கே அதிக விலைக்கு விற்கின்றன என்பது போன்ற விஷயங்களில், அந்தத் தொடர் எனக்குள் உருவாக்கிய விழிப்புணர்வை இப்போது இந்தியாவில் எங்கும் நாம் பார்க்க முடியவில்லை என்பதே நிஜம்.

வெளியூரில் வாழ்ந்த காலத்தில், சென்னையின் தண்ணீர் சிக்கனத்தை எங்கு போனாலும் கடைபிடிப்பது என் வழக்கம். கோவையைச் சேர்ந்த என் அறைத்தோழிகள், "இதெல்லாம் எதுக்கு, அதான் நல்லா தண்ணி வருதே" என்று சொல்லி மனம் போல் நீரைப் பயன்படுத்தியதும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியதும் பார்க்கையில்.... நீரைப் பற்றிய (குடி நீர், குடிக்காத நீர்) விழிப்புணர்வு இந்தியா முழுவதும் உருவாக்கவேண்டியது முக்கியம்..

குழலி / Kuzhali said...

இப்படியெல்லாம் படத்தை வலைப்பதிவில் போட்டு ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் இருக்கும் இந்தியாவின் ஏழ்மையை (அமெரிக்காவில் சாக்கடை சுத்தம் செய்பவர்கள் இல்லையா?, அங்கே படிக்காதவர்கள் சதவீதம் தெரியுமா?, பணக்கார நாடான துபாயில், சவுதியில் தண்ணீர் கிடைக்காமல் அரச குடும்ப வாரிசுகளே செத்திருக்கிறார் தெரியுமா?) படமெடுத்து போட்டு காசுபார்க்கும் கூட்டத்திற்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை என்ற பதிவுகள் கூடிய சீக்கிரத்தில் இந்த பதிவிற்கு எதிர்வினையாக எதிர் பார்க்கலாம் :-))))

Thekkikattan said...

புதுமை விரும்பி,

உண்மையை உள்ளதாக பேசும்பொழுது மனது கனமாவது இயற்கைதானே. உங்களுக்குத் தெரியாததா?

அதானல் தானே உடோபியா உலகில் இருப்பதே நலமென்று அந்த பக்கமே இருக்க யாவரின் மனமும் விரும்புகிறது. அப்படியா, புதுமை விரும்பி...??

மங்கை said...

தெகா

ஒரு பக்கம் இந்த மாதிரி அவதி படற மக்கள்... நம்ம பிளாட் இருக்கும் பகுதியில 24 மணி நேரமும் தண்ணி கீழ போய்ட்டு இருக்கு... வெப்பத்த தணிக்க வீட்டு வேலை செய்றவங்கள வச்சு தெருவெல்லாம் சாயந்திரம் 6 மணி வரைக்கும் தண்ணீர் இறைக்கிறதுதான் வேலை இங்கு இருக்கும் பெண்களுக்கு..

மங்கை

Thekkikattan said...

//நம்ம பிளாட் இருக்கும் பகுதியில 24 மணி நேரமும் தண்ணி கீழ போய்ட்டு இருக்கு... வெப்பத்த தணிக்க வீட்டு வேலை செய்றவங்கள வச்சு தெருவெல்லாம் சாயந்திரம் 6 மணி வரைக்கும் தண்ணீர் இறைக்கிறதுதான் வேலை இங்கு இருக்கும் பெண்களுக்கு.. //

மங்கை,

அப்பன்னா, இந்த டில்லி எங்கே இருக்கு ;-). இன்னமும் இந்தியா வரைபடத்துக்குள்ள இருந்தா சரி :-))

நீங்க சொன்ன விசயத்தையும் தெரிஞ்சுக்கலாமுன்னுதான் இந்த பதிவே... நன்றி வந்து பார்த்ததை தைரியமாய் பகிர்ந்து கொண்டமைக்கு, உங்களுக்கு இருந்தாலும் ரொம்பத் தகிரியங்க...
;-)))

Anonymous said...

தெகா,

Glass is half-full or half empty?

இந்தியா ஒளிர்கிறது என்ற எண்ணத்தை எனது நகர்புற/மத்தியதர நண்பர்கள் பலரிடம் கண்டிருக்கிறேன். இவர்கள் பார்வை மேல்நோக்கியே உள்ளது. அதாவது, நாடு இன்னும் வளர்ச்சி அடையும். அவர்களின் வாழ்க்கைத்தரம் மேலும் உயரும் என்று. சற்று யோசித்துப் பாருங்கள், 15 வருடங்களுக்கு முன்னால் இத்தகைய நம்பிக்கை யாருக்காவது இருந்ததா?.
இதற்கு காரணம் 90களில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் என்பதை மறுக்க முடியுமா?

நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் வாழ்க்த்தரத்தை வைத்தே இந்தியாவின் வளர்ச்சியை கணிக்கிறார்கள். இவர்கள் யாரும் கிராமங்களையோ, அடித்தள மக்களின் வாழ்க்கையையோ நெருக்கமாகப் பார்த்திருக்கமாட்டார்கள். அதனால் அது ஒரு myobic பார்வையே.

இந்த நோக்கில் 'இந்தியா ஒளிர்கிறது' என்பதை நான் நம்புகிறேன். ஆனால், 'வெளிச்சம்' நாடு முழுவதும் பரவி இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அவை இன்னமும் கீழ்மட்டத்திலுள்ளவர்களை, கிராம மக்களைச் சென்றடையவில்லை.
அதற்கு கல்வி, விவசாய சீர்திருத்தங்கள், கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை செய்யவேண்டும்.

பாஜகவின் பார்வை நடுத்தர வர்க்கத்தின் பார்வை. இடதுசாரிகளின் பார்வை கீழ்மட்ட மக்களின் பார்வை.
இரண்டிலுமே உண்மையுள்ளது.

பொருளாதார வளர்ச்சியே நம் நாட்டின் ஏழ்மையை அகற்றும். அதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் தேவைப்படலாம். ஆனால் அதற்கு இடதுசாரிகள் எந்த அளவுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதே கேள்வி.

Thekkikattan said...

Siva,

Be Positive! Be hopeful!! Oneday everybody gets everything!!!

Never ever give up ;-)

Anonymous said...

இந்த குழலி தொல்லை தாங்க முடியலையப்பா... சரக்கடிச்சவன் மாதிரி என்னத்தையாவது ஒளரி வச்சுட்டு அப்புரம் சல்பேட்டா அடிச்சவன் மப்புல சிரிக்கிரா மாதிரி அதுக்கு ஸ்மைலி வேறு.

இதுக்கு எதிர்வினைப் பதிவு எப்படி வரும் அப்படீன்னு இந்த இணைய மருத்துவர் அப்பிடியே நாடி பிடிச்சு கண்டு பிடித்து விட்டார்....

இதையே அன்புமணி சுகாதாராத்துறை அமைச்சராக இருக்கும் போது தலைநகரில் இந்தக் கதி அப்படீன்னு யாராவது எழுதியிருந்தா..இவரு குதிச்சுக்கிட்டு வந்து டிஃபெண்ட் பண்ணுவாருன்னு அடுத்தவங்களும் சொல்லலாமே...

சரி இதுக்கு தீர்வுதான் என்ன அப்படீன்னு கேட்டா இதப் பத்தி நான் 1956-ல் ஒரு பதிவு போட்டிருக்கேன் அப்படீன்னு ஒரு லின்க் குடுத்துருவாரு...போதும்டா சாமி

Thekkikattan said...

//இங்கே தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தறேன்னு ஸ்ப்ரிங்க்ளர்களை திறந்து
அப்படியே விட்டுட்டுப்போறவங்களைப் பார்த்தா எரிச்சலா இருக்கு.//

துள்சிங்க,

இந்தாங்க சில புள்ளி விபரம் உலகம் தழுவிய முறையில் நம்மின் நன்னீர் கையிருப்புப் பற்றி;

உலகத்தில மொத்தமாகவே 2.5 சதவீதம்தான் உப்புத்தன்மை இல்லாம தண்ணீர் இருக்கிறதாம். அதிலும் மூன்றில் இரு மடங்கு பனிப்பாறைகளிலும், பனிச் சரிவுகளிலும் சிக்கியுள்ளதாம்.

இது இப்படியாக இருக்க, மழை வேறு பொய்த்து வருகிறது. எனவே 21வது நூற்றாண்டு ஒரு நீருக்கென அடித்துக் கொள்ளும் ஒரு நூற்றாண்டாகவும் அமையாலாமென கருதப்படுதுங்க...

லான் ஸ்பிரிங்களர் தானே சொல்லிறீங்க அதெ என்னத்துக்கு கேக்றீங்க. ஆனா, நான் இருக்கிற மாநிலம் கொஞ்சம் வறட்சி அதிகம் அதினால, சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே புல் வளர்க்க அனுமதி உண்டு ;-)

Related Posts with Thumbnails