Tuesday, October 03, 2006

*பரிணாமப் போர்* எழில், அபூ முஹை இவர்களுடன் தெகா...

நண்பர்கள் எழிலும், அபூ முஹையும் கடந்த சில தினங்களாக பரிணாமம் பொருட்டு ஒரு போர் நடத்திக் கொண்டுள்ளார்கள். நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தாலும் என்னையும் பிடிச்சு சில ஆட்கள் உள்ளே தூக்கிப் போட்டுடுறாங்க :-)).

அவங்க நிமித்தமா நான் கடல் மாட்டம் இருக்கிற விசயத்திலிருந்து ஒரு துளி எடுத்துச் சிந்தப் போக விளைவு நீங்களும் இந்த ஜோதியில நனையணுமின்னு ஆகிப் போகுது.

சரி, எழில் இங்கேயும், அபூ முஹை இங்கேயும் ஆளுக்கொரு பதிவா போட்டு இருக்காங்க, அத முதல்ல படிச்சிக்கங்க. தவறாம பின்னூட்டங்கள படிங்க அங்கதான் நிறைய விசயங்கள் இருக்கு ;-).

அபூ முஹை அவர்களொடத படிச்சிட்டு என்னோட முதல் பின்னூட்டம் ஒண்ணு போட்டேன். தெரியும். திரும்பவும் எழுதுற மாதிரி இருக்குமின்னு. அதே மாதிரி திரும்பவும் அவர் பதில் அடிச்சி இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருந்தார். அதுக்கு பதில் சொல்லப் போகி நீண்ண்ண்டுப் போச்சு.

சரி, இங்கயும் இருக்கட்டும் பிறகு உதவுமின்னு பதிந்து வைச்சிருக்கேன்.

சில மாதங்களுக்கு முன்பு சுவனப்ரியனுக்கும் எனக்கும் இந்த தலைப்பில *பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா... கருத்துப் பரிமாற்றம் பண்ணிக்கொண்டோம், அதுவும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் அதனையும் படிச்சிப் பாருங்க.

இப்ப என்னோட அன்மைய பதிவுகளுக்கான பின்னூட்டத் தொகுப்புகள்... முதல் பின்னூட்டம்...

I feel, placing some facts over here is useless and baseless.

//'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்ற அடிப்படை உயிரியல் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது. பரிணாம கோட்பாடு சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டால், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் கொள்கை பொய்யாகி விடும். இதற்கு பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?//

ஏனுங்க, ஒரு சினை முட்டையும், ஒரு விந்தணுவும் இணைந்து இம்புட்டு பெரிய ஜடங்களான நம்மை, இரண்டு, நான்கு, எட்டுன்னு பல்கிப் பெருகிதானேங்க எங்கன மூஞ்சி இருக்கிறது, எங்கன கையிருக்கிறது, இப்படி எல்லா செய்திகளையும் மரபணு மூலம செய்தி கோர்வைகள் எடுத்திட்டு போறது எல்லாம், இது யாரு சொல்லிங்க நடக்குது?

அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட காமெட் (comet) ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே, என்று சிந்திச்சு அது தொடர்ப நிறைய காலங்களையும் ஆராய்ச்சில் செலவு செஞ்சு சிந்திக்கும் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய கூற்றுக்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

என்கிட்ட காட்டு இது எல்லாத்துக்கும் ப்ரூப்பேன்னு அடம் பிடிச்ச எப்படிப்பா. சின்னப் பிள்ளைங்க விளையாட்டு மாதிரி இருக்குது. மில்லியன் வருஷமுன்ன என்னமோ ஒரு நூற்றாண்டு மாதிரி நினைச்சுக்கிட்டும், பேசிகிட்டும் இருக்கிறோம்.

சரி 68 மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் இந்த சூப்பர், டூப்பர் மூளையைக் கொண்ட கடவுளின் புதல்வன் எங்கே இருந்தான்? உடனே நீங்கள் அப்ப மனுஷன் இருந்தானா இல்லையான்னு எப்படி உங்களுக்கு தெரியும், பக்கத்தில இருந்து நோட் எடுத்தியான்னு கேட்கப் புடாது... யோசிக்கணும், அந்த புத்தகத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுப்புட்டு மத்த புத்தகங்களையும் படிக்கணும்...

இப் பூமியில் நம்மின் தற்காலிக இருப்பும் ஒரு சான்ஸ் மட்டுமே... இதில் இன்னும் கொஞ்ச காலங்களுக்கு இருந்து போயிச் சேருவதா, இல்லை அடித்துகொண்டு சீக்கிரமா போயிச் சேருவதா என்பது நமது கையிலும் இருக்கிறது.

டைனோசார்களுக்கு அதி பயங்கர பசின்னா, நமக்கு அதி பயங்கர "மதம்"பிடிச்ச மதம் பிடிச்சிருக்கு இது இரண்டுமே எடுத்திட்டு போய்ச் சே(ரப்)ர்ந்த இடம் ஒண்ணாத்தான் இருக்கப் போகுதோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு...

Posted by *இயற்கை நேசி* Mon Oct 02, 07:27:21 AM

அதற்கு அவர் இப்படியாக தனது ஐயப்பாடுகளை தெரிவித்திருந்தார்...

//அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே//

எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதான் பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர ஆதாரபூர்வமாக எதுவும் இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

ஆனால் பதிலளிக்கப்படாத கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

1) உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் பூமியின் மீது மோதிய போது இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா? அல்லது பல உயிர்கள் தோன்றினவா?

2) உயிரினங்கள் தாம் வாழும் காலச்சூழலுக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெற்றன என்றால், உலகெங்கிலும் வசிக்கும் மனிதர்கள் ஒரே உடலமைப்பை கொண்டிருப்பது எப்படி? பனிப்பிரதேசங்களில் வாழும் மனிதர்களுக்கு கரடிகளைப்போல உடலெங்கும் முடியும், பாலைவனப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ஒட்டகத்தைப் போன்ற திமிலும், கடற்புறங்களில் வசிப்பவர்களுக்கு மீனைபோல செதிளும் இல்லாமற் போனதேன்?

3) குரங்கிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்கிறது பரிணாம கோட்பாடு. இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், ஏன்? பரிணாம factory-ஐ மூடி விட்டார்களா என்ன? அல்லது, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு குரங்காக தூங்கியவர்கள் மறுநாள் காலை மனிதனாக விழித்தெழுந்தார்களா?

Posted by இப்னு பஷீர் Mon Oct 02, 08:45:35 PM

மீண்டும் என்னுடையது...

அதில் பல கேள்விகள் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த புத்துணர்வை ஊட்டியதால், எங்கே தொடங்குவது என்று தெரியாமல் தொடங்கினேன், தொடங்கி எங்கே முடிப்பது என்றும் தெரியாமல் முடித்தேன். ஏனெனில் இதில் நிறைய விசயங்கள் சொல்லப் பட வேண்டி உள்ளதால், எப்படி விளக்க முற்படினும் நிறைவு பெறாமலேயே போனதைப் போன்ற உணர்வைத் தருகிறது.

இதோ அ. முஹையின் பின்னூட்ட பதிலுக்கு எனது பின்னூட்டம்...

இந்த "இருக்கலாம்" என்ற அனுமான வார்த்தையை அறிவியல் கோப்புகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்துவதற்குக் காரணமய்யா, அந்தத் துறை இன்னும் வளர்வதற்கு ஏதுவாக இருக்க அனேக வாய்ப்புகள் இருப்பதனை கருத்தில் கொண்டே (to be plausible for new things, since our mind is dynamic so it tends to expand as we grow and know more new things... it is not so rigid like our Religious conceptual theories). இப்பொழுது கூட லூசியும், கயல் விழியும் நம்முடைய அண்மைய கால மூதாதையர்கள், 3 மில்லியன் வருடங்கள் முன்பு வரையிலும் என்று கண்டுபிடித்தார்களே. அது போல இன்னும் நிறைய தடயங்கள் வர வர சேர்த்துக் கொள்ளத்தான் இந்த "இருக்கலாம்."

இல்லையெனில் கடவுள் போன்ற "சர் ஐசக் நீயுடன்" சொல்லிவிட்டார் அதனால் அவர் கூறிய கோட்பாட்டில் எந்த புது மாற்றங்களையும் செய்ய முடியாது என, எப்படி நாமே எழுதி வைத்துக் கொண்ட இந்த மதக் கோட்பாடுகளை கட்டிக் கொண்டு மாரடிக்கின்றொமோ அது போல நிலமை ஆகி, அடித்துக் கொண்டு சாக வேண்டி வரும். அதனால் தான் அந்த அனுமான "இருக்கலாம்" என்ற வார்த்தை.

இரண்டாவது, நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு இயற்கையின் சூட்சுமங்களை அறிந்து கொள்ள முயற்சிக்க வில்லையெனில், உங்களுக்கு அடிப்படை விசயங்களை இது போன்ற பின்னூட்டங்களை கொண்டு விளக்குவது நலம் பயக்கா.

//இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா?//

மீண்டும், நான் கூறிய ஒரு சினை முட்டையும், விந்தணுவும் நடத்தும் விந்தையைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சித்தீர்களா? அமீபா, பாரமீசியம் போன்ற தன் இனப் பெருக்க உயிரினங்கள் எவ்வாறு பல்கிப் பெருகுகிறது என்பதனைப் பற்றிய பிரஞை தாங்களிடம் உள்ளதா?

சரி, எப்படி இயற்கையில் புது உயிரின உருவாக்கம் (Speciation) நடைபெறுகிறது என்ற அடிப்படை புரிவு தாங்களுக்கு உண்டா? அதற்கென உதாரணமாக நிறைய தென் அமெரிக்கா காடுகளில் உள்ள குரங்கினங்களில் நடைபெற்றிருக்கிறது, தேடி (தேடினால்தான் கிடைக்கும்) அறிந்து கொள்ள முயற்சித்துப் பாருங்கள்.

நான் எனது இளநிலை பட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தான் படித்தேன். அங்கு டாக்டர் முகமது இஸ்மெய்ல் பரிணாமம் சார்ந்த கோட்பாடுகளைப் பற்றிய வகுப்புகள் எடுத்தார். அப்படி அவர் எடுக்கும் பொழுது எனக்கு இந்த மதங்களுக்கும், இந்த பாடத்திற்கும் சிறிதளவேனும் தொடர்பு இருப்பதாக எண்ணவே தோன்றவில்லை. ஏன் என்பது இப்பொழுது கொஞ்சம் விளங்குகிறது. அந்த பேராசிரியருக்கு இது தொடர்பான பிரஞ்கை இருந்திருக்குமா அன்று, என்று இன்று யோசிக்கிறேன்.

முடிந்தால் அடுத்த முறை அங்கு சென்று பேசலாம் இது நிமித்தமென எண்ணியுள்ளேன்.

//இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? //

இது போன்ற கேள்விகளையெல்லாம் படிக்கும் பொழுது நீங்கள் இது தொடர்பாக போக வேண்டிய தொலைவு வெகு தூரம் என்று தெரிகிறது. ஏன், அவ்வளவு தூரம் செல்ல வேண்டும், நமது தாத்தாவிற்கு தாத்தாவிலிருந்து 200வது தாத்தாவுக்கு எந்த ஊர், அவர் எப்படி இருந்தார், அவரின் குணாதியசம்மென்ன, என்ற குறிப்பேடு தாங்கள் கையில் நமது தகப்பனார்கள் ஏதாவது நோட்டுப் புத்தகம் போட்டு எழுதி ஒப்படைத்துவிட்டா செல்கிறார்கள். நாமும் நாளை அதனை நமது சந்ததிகளிடத்தே ஒப்படைத்து விட்டு செல்ல.

எப்படி அந்த உணர்வு நம்முள் வருகிறது, அந்த பண்புகளும், குண நலன்களும்... அப்படியே அவர்கள் இன்று நம்மோட வாழ நேர்ந்து போனால் நமது நிலைதான் என்ன? அப்படி அவர்கள் நம்மோட இன்று வாழவில்லை என்பதால் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று பொருளா?

இங்குதான் தகுதி உள்ளது தப்பிப் பிழைக்குமென உள்ள கோட்பாடு அமுலுக்கு வருகிறது. அந்த ஹோமோ எரக்டஸூம் நம்முடன் சம காலத்தில் வாழ நேர்ந்திருந்தால், யாரிடம் அதிக தகுதி உணவை பறிக்க, சேமிக்க, குடும்பத்தை கட்டிக் காப்பாத்த, வளைந்து கொடுத்துப் போக இருக்கிறதோ அதுகள் தப்பிப் பிழைக்கும். போராட்டத்தில்.

நாம் நம் தாத்தாவிற்கு அந்த நிலையை உருவாக்கி கொடுப்போம் அப்படி வாழ்வா, சாவா நிலை வந்தால் என்பதே உண்மை.

எனவே, அந்தப் பண்புகள் ("அடப்போங்கப்ப எத்தனை முறை சொல்றதுன்னு வருது எனக்கு") ஒரு தலைமுறையில இருந்து இன்னொரு தலைமுறைக்கு மரபணு சமிக்கைகள் மூலமா கடத்தப் படுது. உதாரணதுக்கு, நான் வெள்ளைக் காரிய திருமணம் பண்ணிக் கொண்டால், எனக்குப் பிறக்கும் குழந்தையும் அதனை தொடர்ந்து வரும் சந்ததிகளும் என்னுடைய மரபணுவையும் (கொஞ்சமாவது - காலம் கடக்கக் கடக்க) தூக்கி கொண்டு திரியும் என்பதில் ஏதாவது மறுப்பு இருக்கிறதா?

இங்கே இரு வேறு பட்ட மனித இன கலவை நடந்ததாக கொள்ளுங்கள், பின்னாளில் தேவையில்லாத குணங்களை கொண்ட மரபணுக்கள் கொஞ்ச கொஞ்சமாக தவிர்க்கப் பட்டு கிடைக்கும் சீதோஷ்ண நிலைக்கும், உணவு வகைகளுக்கும் தேவையான பண்புகளை இரண்டு பக்கமும் எடுத்துக் கொண்டு பல்கிப் பெருகி ஒரு சூழலில் புதிவிதமான இனமாகவே நடந்து வந்து இன்னமும் நடையை கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். அதனால் எங்கடா அந்த முதல் ஆள் என்று கேக்கக் கூடாது... அப்படியும் தொல் பொருள் ஆராய்சிகளின் போது இடைப்பட்ட இனங்களின் எலும்பு மிச்சங்கள் கிடைக்காமலில்லை, இல்லையா? நம்மிலிருந்து மிகுந்த வேறுபாடுகளுடன்...

அதனால் அன்று, நான் அந்த படத்தில் இல்லையென்பதால் என்னுடைய பங்களிப்பு அங்கு இல்லை என்று பொருளா?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கைவலிக்கிறது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இல்லையென்றால் தனிப்பதிவு போட வேண்டி வரும் :-)

48 comments:

Sivabalan said...

தெகா

Excellent Post.

மீன்டும வருவேன்...

நீங்களும் சொல்லிட்டேதான் இருக்கீங்க.. என்னமோ போங்க..

இலவசக்கொத்தனார் said...

//நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தாலும் என்னையும் பிடிச்சு சில ஆட்கள் உள்ளே தூக்கிப் போட்டுடுறாங்க :-)).//

ஹிஹி, உங்க கருத்தை எல்லாம் சொல்லலைன்னா எப்படி?

//கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், ஏன்? பரிணாம factory-ஐ மூடி விட்டார்களா என்ன? அல்லது, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு குரங்காக தூங்கியவர்கள் மறுநாள் காலை மனிதனாக விழித்தெழுந்தார்களா?//

இதுக்கு பதிலே சொல்லலையே.

Sivabalan said...

இங்கே படிக்க வருகிறவர்கள் இந்த விடியோவையும் கொஞ்சம் பாருங்க...

http://www.royalsoc.ac.uk/portals/jones/rnh.htm

அருமையான SEMINAR .. நிச்சயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ

இலவசக்கொத்தனார் said...

நேசி, இந்த கட்டுரையில் நீங்கள் உங்களிடம் விவாதிப்பவர்களுக்கு ஓரளவு பரிணாமம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது. நான் ஒரு விவாதத்திற்கு சென்றால் என்னால் முடிந்த அளவு இரண்டு பக்க நியாயங்களை படித்துதான் செல்வேன். ஆனால் நீங்கள் அது தெரிந்தால் வா அல்லது வராதே எனச் சொல்வது போன்ற நிலைப்பாடு எடுத்துள்ளதாகவே தோன்றுகிறது. அது வேண்டாமே. அதற்குப் பதில் இதுதானய்யா விஷயம் எனச் சொல்லலாமே. அதைத்தான் நாங்களும் உம்மிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.

உங்கள் கோபமும் இயலாமையும் புரிகிறது. ஆனால் அதை எழுத்தில் காட்ட வேண்டாமே.

Thekkikattan said...

சிவா,

சொல்லிட்டேத்தான் இருக்கேன், ஆனா யாரும் அதனைப் படிச்சி புரிஞ்சுக்கிட்ட மாதிரி தெரியலியே. என்னப் பண்றது சொல்லுங்க. இந்த விசயத்தை கொஞ்சம் நம்மோட லாஜிக்கும் பயன்படுத்தி அணுகவில்லையென்றால், விசயத்தைப் பிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.

சிவா, உங்களுக்கு பரிணாமம் பற்றி படிக்கும் பொழுது மதம் தொடர்பா ஏதாவது பயம் வந்ததா? எனக்கு கொஞ்சம் கூட தோனவில்லையே, எனக்கு மட்டும்தானா இல்ல இன்னும் யாராவது அப்படி இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்குவோமின்னு கேக்கிறேன்..

Partha (பார்த்தா) said...

"Belief is the death of intelligence. As soon as one believes a doctrine of
any sort, or assumes certitude, one stops thinking about that aspect of
existence."
~ Robert Anton Wilson

Sivabalan said...

தெகா

பரிணாமம் என்பது மதம் எனும் மாயைக்கு கொடுத்த மிகப் பெரிய அடி. எனவே "மதம்" பிடித்தவர்கள் அப்படித்தான் சும்மா ரவுஸ் கிளப்புவார்கள் கண்டுக்காதீங்க..

பரிணாமத்தைப் பற்றி படிக்கும் போது எனக்கு அதிகம் "கோபம்" வந்தது "மதத்தின் மீதும்" அதன் "பாதுகாவல்ர்கள்" என சொல்லிக் கொள்பவர்களின் மீதும்...

SK said...

மிக அருமையான பதிவு.

பல தீர்க்கமான வாதங்களை முன் வைத்திருக்கிறீர்கள்.

இ.கொ. உங்கள் மீது சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுடன் எனக்கு ஒப்புதல் இல்லை.

முழுதும் தெரியாமல் ஒருவர் ஒரு நிகழ்வை நியாயபடுத்தி எழுதுவார்.

அதைப் பற்றித் தெரிந்தவர் அதற்கு பதில் சொல்லும்போது, எங்கே இதில் 'இது தெரியாவிட்டால் வராதே' என்ற நிலைப்பாடு வருகிறது.

முதல் நிலையாக புரியாமல் பேச ஆரம்பித்தது எவர் குற்றம்?

எனக்குப் புரியவில்லையே!

அடுத்து, வெள்ளைக்காரியை மணம் செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய சில நிகழ்வுகளை தெ.கா. சொல்லிய போதிலும், இன்னும் மறுநாள் தூங்கி எழுந்ததும் மாறினரா எனக் கேட்பது வாதமா, விதண்டாவாதமா?

இரு பக்க நியாயங்களையும் படித்துச் செல்வதென்றால் என்ன பொருள்?

இதுவும் புரியவில்லையே!

பரிணாமம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாமல் பதிவு போட வந்தவர்களை விட்டுவிட்டு தெ.கா,வை காய்ச்சுவது, கனியிருப்பக் காய் கவர்ந்தது போல இருக்கிறது!

பரிணாமத்தில் மதம் எப்படி நுழைந்தது!?

இதுவும் புரியவில்லையே!

சரவணகுமார் said...

""பரிணாமம் பற்றி படிக்கும் பொழுது மதம் தொடர்பா ஏதாவது பயம் வந்ததா? எனக்கு கொஞ்சம் கூட தோனவில்லையே, எனக்கு மட்டும்தானா இல்ல இன்னும் யாராவது அப்படி இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்குவோமின்னு கேக்கிறேன்.."""

சரியான கேள்வி...பரிணாமம் பற்றி படிக்கும் போது மதம் பற்ரியோ..அல்லது மதம் அதை மறுதலிப்பது பற்றியோ ஒன்றும் சொல்லப்படுவதில்லை...அதே போல் வீட்டில்...கோவிலில்...இன்ன பிற இடங்களில் மதம் பற்ரி போதிக்கப்படும் போது பரிணாம தத்துவம் பற்ரி பேசப்படுவதில்லை

ரெண்டு இடத்திலேயும் லின்க் மிஸ்ஸிங்...அதனால் அந்தப் பருவத்தில் எந்தப் பாதிப்பும் வராது...

பட் தானாய் சிந்திக்கும் போது/மற்றவருடன் விவாதிக்க ஒரு நிலைபாட்டை எடுக்கும் போதுதான் கான்ரடிக்ஷன் உள்ளுக்குள் டிஷ்யூம்...டிஷ்யூம் போடும்...

.இது ஒரு குறிப்பிட்ட வயதுக்கப்புறம் தலைக்குள் இருக்கும் "கிட்னியை" உபயோகிக்கும் எல்லாருக்கும் வரக்கூடியதுதான்...அதை யூஸ் பண்ணாதவர்களை... ம்ம்..ம்ம்..என்ன சொல்ல...பரிணாம வளர்ச்சி இன்னும் அடையவில்லை(தலைக்குள் உண்மையிலேயே கிட்னிதான் இருக்கிறது) என்பது தவிர :))

என் வாழ்வின் மிகப் பெரிய அதிர்ச்சி..கிருத்தவர் ஒருவர் எம் எஸ் ஸி படித்தவர்...பைபிளில் இறைவன் ஒளியைப் படைத்தான்..அப்புறம் சூரியனைப் படைத்தான்..என்பது மாதிரியான ஒரு முரண்பாட்டை(இப்போது சரியாக ஞாபகமில்லை) சரிதான் என வாதிட்ட போதுதான் :))

அடக் கடவுளே..படிப்பு அறிவு என்பது மதத்துக்கு முன் எவ்வளவு அன்னியப்பட்டு நிற்கிறது என ..படைத்த .கடவுளை நினைத்துக் கொண்டேன் :))

Thekkikattan said...

//ஹிஹி, உங்க கருத்தை எல்லாம் சொல்லலைன்னா எப்படி?//

ஆட்டிவித்தவன் யாரோ, யாரோ~~~

//இதுக்கு பதிலே சொல்லலையே.//

என்ன இ.கொ இப்படிச் சொல்லீப்புட்டீரு... தாத்தாவை வைச்சுப் பேசுனது எல்லாம் அந்த பரிணாமச் தொழிற்சாலையின் சம்பந்தமாகத்தானே.

இப்ப யாரவது அந்த பரிணாமச் சுழற்சி நின்றுவிட்டதாக சொல்லவில்லையே. அதுவும் ஒரு கடிகாரம் போன்றதுதான், எந்த திசையை நோக்கி நாம் அதிக உழைப்பை மனம் உருகி போடுகிறோமோ அந்த திசையில் பரிணாம முள் நகர ஆரம்பிக்கிறது.

நமது மண்டை இப்பொழுது இந்த மனித இனத்தையே துடைத்தெறிவது என்ற நோக்கில் நகர்வதைப் போன்று இருப்பதால், அணு ஆயுதம், மதம், கோட்பாடுகள் என்று எது எதையோ கண்டுப்பிடித்து வைத்துக் கொண்டு அந்த திசையில் நகர்ந்து சொல்வதை பார்க்கவில்லையா?

இது சிறிது சிறிதாகத்தான் நடந்தேறும், ஆனால் நடந்து முடிந்திருந்த பொழுது நாம் வெகு தொலைவு வந்திருப்போம் அதனை உணர்வதிலிருந்து, ஏனெனில் மாற்றமே இன்று நாமாக... புரியுதா???

Thekkikattan said...

சிவாண்ணா ;-) அந்த சுட்டிக்கு நன்றி. எப்படிங்க உங்களுக்கு எல்லாம் டக் டக்கின்னு கிடைக்கிது. ஒரே பிரமிப்பா இருக்குதப்பா.

நான் இன்னும் பார்க்கலை அந்த பக்கத்தை, இன்னிக்கு மாலை பார்க்கிறேன். வீட்டில இருந்து.

செல்வன் said...

இது பற்றிய எனது முந்தைய கட்டுரை ஒன்று.

http://holyox.blogspot.com/2006/01/blog-post_20.html

செல்வன் said...

கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது fஇனிஷெட் நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், ஏன்? பரிணாம fஅcடொர்ய்-ஐ மூடி விட்டார்களா என்ன? அல்லது, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு குரங்காக தூங்கியவர்கள் மறுநாள் காலை மனிதனாக விழித்தெழுந்தார்களா?//

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதே முதலில் தப்பு.குரங்குக்கும்,சிம்பன்சிக்கும்,போனபோவுக்கும் மனிதனுக்கும் இருந்தது ஒரே ஆதி மூதாதை என்பது தான் சரி.

இந்த ஆதிகுரங்கினத்திலிருந்து கிளைத்து வந்தவை தான் சிம்பன்சி,குரங்கு,உராங்க் உடான் ஆகியவை.

இதேபோல் ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு ஆதிமூதாதை இனம் உண்டு.புலியும்,சிறூத்தையும்,பூனையும் இப்படி ஒரே ஆதிமூதாதை இனத்திலிருந்து கிளைத்தவை தான். அந்த ஆதிமூதாதை இனம் பல்வேறு கிளைகளாக பிரிந்து விட்டது.

அதனால் ஏன் குரங்கு இப்போது மனிதனாகவில்லை என கேட்பது தப்பு.குரங்கு எப்போதும் மனிதனாகவில்லை.ஆதிமூதாதைகுரஙினம் ஒன்றுதான் மனிதனானது.

பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டது என்பதும் தப்பு.இன்னும் மில்லியன்கணக்கான ஆண்டுகள் கழித்து மனிதனிலிருந்தும்,குரங்கிலிருந்தும்,பூனையிலிருந்தும் புது உயிரினங்கள் உண்டாகும்.

Anonymous said...

ஹிஹி, உங்க கருத்தை எல்லாம் சொல்லலைன்னா எப்படி?

//கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், ஏன்? பரிணாம factory-ஐ மூடி விட்டார்களா என்ன? அல்லது, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு குரங்காக தூங்கியவர்கள் மறுநாள் காலை மனிதனாக விழித்தெழுந்தார்களா?//


பரிணாம வளர்ச்சி 100 வருஷத்துல எல்லாம் நடக்காது. அதுக்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகும். அப்படி இருந்தவை தான் வானரங்கள். இன்னும் யோசித்து பார்த்தால் பரிணாம வளர்ச்சி என்பது தசாவதரங்களை ஒத்ததாக எனக்கு தோன்றுகிறது. நான் இந்து மதத்துக்கு வால் பிடிக்கவில்லை. தோனுனதை சொல்லுகிறேன்

முத்து ராமன்

செல்வன் said...

டார்வின் 1871'ல் The Descent of Man and selection in relation to sex என்ற புத்தகத்தை எழுதினார்.அதில் அன்றைய விஞ்ஞானிகள் மனிதன் ஒரு குரங்கு என்பதை ஒத்துக்கொள்ள மறுத்ததை கடுமையாக சாடினார்.அன்றைய விஞ்ஞானிகள் மனிதனை பிமானா என்ற ஒரு இனமாக,குரங்கிலிருந்து வித்யாசமானவனாக கருதினர்.இப்படி மனிதனை ஒரு தனி இனமாக பிரிப்பதையே டார்வின் வேடிக்கையாக நினைத்தார்."மனிதன் தன்னை தானே பாகுபடுத்துவதால் தான் தன்னை ஒரு தனி இனமாக நினைக்கிறான்" என்று அவர் எழுதினார்.
டார்வினின் கருத்துக்களுக்கு ஆதரவு வேகமாக பரவியது.1863'ல் தீவிர கிறிஸ்துவரான டக்ஸ்லி ஏப்பையும் மனிதனையும் பாயின்ட் பை பாயின்டாக ஒப்பீடு செய்தார்.டார்வினின் அனைத்து கருத்துக்களும் உண்மை என்பதை அவர் கண்டார்.டக்ஸ்லி அடுத்து மனித்னையும் கொரில்லாக்களையும் ஒப்பீடு செய்தார்.ஒப்பீட்டின் அடிப்படையில் கொரில்லாக்களும் மனிதனும் வெகு நெருக்கமானவர்கள் என்று கண்டார்.கொரில்லாக்கள் வேறு எந்த வகை குரங்குகளையும் ஏப்களையும் விட மனிதனுக்கு நெருக்கமானவை என்று அவர் கண்டார்.

மனிதன்,கொரில்லா,போனபோ,உராங்க் உடான்,சிம்பன்ஸி,குரங்கு ஆகிய குரங்குகள் அனைத்தும் ஓரினம் தான்.இவை அனைத்துக்கும் ஒரே மூதாதைதான்.25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குரங்கார் இந்த இனத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் போய்விட்டார்.2 - 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் குரங்கு இனத்தில் இருந்து பிரிந்து போய்விட்டான்.

மனிதனை இப்படி கொரில்லா,போனபோ,உராங்குடான் வகை குரங்குகளில் சேர்த்தபிறகும் சர்ச்சைகள் ஓயவில்லை.டார்வினின் கருத்துக்கு அசைக்க முடியாத ஆதாரம் 1905'ல் ஜார்ஜ் நடால் மூலம் கிடைத்தது.

நட்டாலின் ஆய்வு முறை மிகவும் எளிதானது.முயல்களை எடுத்துகொண்டு அவற்றின் உடலில் மனித ரத்தத்தை செலுத்தினார்.மனித ரத்தத்தை முயல் ரத்தம் ஏற்றுக்கொள்ளாது.மனித ரத்தத்தை ஒரு வெளிநாட்டு படையெடுப்பாளர் போல் முயலின் நோயெதிர்ப்பு அணுக்கள் கருதும்(Immune system).உடனடியாக சீரத்தையும்(serum),ஆனிடிபயாட்டிக்குகளையும் (anti biotics) முயலின் நோயெதிர்ப்பு அணுக்கள் உற்பத்தி செய்யும்.

அந்த முயல் ரத்தத்தை நட்டால் சுத்தம் செய்து சீரத்தை எடுத்தார்.அந்த சீரம் மனித எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக்குகளை(anti human serum) கொண்டிருந்தது.இதே போல் முயல் உடம்பில் இருந்து சிம்பன்ஸி எதிர்ப்பு சீரம் (anti chimp serum),உராங் உடான் எதிர்ப்பு சீரம்,எலி எதிர்ப்பு சீரம், குதிரை எதிர்ப்பு சீரம் போன்ற பல மிருகங்களின் எதிர்ப்பு சீரங்களை அவர் எடுத்தார்.

அடுத்ததாக மனித ரத்தத்தை எடுத்து எலி எதிர்ப்பு சீரத்தில் கலந்தார்.உடனடியாக நுரை லேசாக பொங்கியது.மனித ரதத்தை மனித எதிர்ப்பு சீரத்தில் கலந்ததும் நுரை பொங்கி பிரிஸிபிடேட் உண்டானது.மனித எதிர்ப்பு சீரம் மனித ரத்ததை அவ்வளவு கடுமையாக எதிர்த்தது.

மனித ரத்தத்தை குரங்கு எதிர்ப்பு சீரத்தில் கலந்ததும் அதை விட குறைவாக எதிர்ப்பு பதிவானது.ஆனால் ஏப் எதிர்ப்பு சீரத்தில் மனித ரத்தத்தை கலந்ததும் மிக கடுமையான எதிர்ப்பு வந்தது.

மனித ரத்தத்தை மனித எதிர்ப்பு சீரம் எந்த அளவு எதிர்க்குமோ அதே அளவு எதிர்ப்பு ஏப் எதிர்ப்பு சீரமும் காண்பித்தது.மனிதன் ஏப் இனம் என்பதை அறிவியல் பூர்வமாக நார்ஜ் நடாலின் இந்த புகழ் பெற்ற ஆய்வு காட்டியது.அதன் பிறகு டார்வினின் கோட்பாடு உலகெங்கும் ஏற்கப்பட்டது.

இலவசக்கொத்தனார் said...

செல்வன், ரொம்ப நல்ல தகவல்கள். இது வரை நான் படித்திராத தகவல்கள். தந்தமைக்கு நன்றி.

துளசி கோபால் said...

பிரமிப்பு தரும் பதிவு.

எழில் said...

தெக்கிக்காட்டான் அவர்கள் சொல்வது போல பதிவை விட பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள்தான் நிறைய சொல்கின்றன.

எனக்கு என்ன பிரச்னை என்றால், இப்படி எழுதுவதை முஸ்லீம் பிரச்சார பதிவாளர்கள் படிப்பதுமில்லை, அதனை புரிந்து கொள்ள முயற்சி செய்வதுமில்லை.

பரிணாமத்தை எதிர்த்து ஏதேனும் பக்கச்சார்புள்ள "குரான் சொல்வதெல்லாம் வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து உண்மை" என்று சொல்லக்கூடியவர்கள் இண்டலிஜன்ஸ் டிஸைன், கிரியேஷனிஸம் என்று சூடோ சயின்ஸ் எழுதி வைப்பதை மேற்கோள் காட்டுகிறார்கள்.

பரிணாமம் தவறு என்றால், டி.என்.ஏ எலக்ற்றானிஸ், நாம் எழுதும் இண்டர்னெட் எல்லாமே இருக்காது என்பது அவர்களுக்கு புரிவதே இல்லை. அணுக்கொள்கைதான் டி.என்.ஏ மூலக்கூறு வை புரிவதற்கு அடிப்படை. அந்த மூலக்கூறு காப்பி பண்ணுவதில் நடக்கும் தவறுகள்தான் ம்யூட்டேஷன், அந்த ம்யூட்டேஷனால்தான் பரிணாமம் நடக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்கு தேவையற்றதாக இருக்கிறது.

இவ்வளவு எழுதிய பின்னரும் ஏதேனும் ஒரு பதிவர் திரும்பி பழைய டேப்பை ஓட்டப்போகிறார். தெக்கிக்காட்டான் மண்டையை பிச்சிக்கொள்ள போகிறார்.

செல்வன் said...

சிறு திருத்தம்

ஆன்டிபயாடிக் என முந்தைய பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்.அதை ஆன்டிபாடி( antibodies ) என படிக்கவும்.(பிழை திருத்ட்துக்கு நன்றி ராமநாதன்)

அப்புறம் இந்த Intelligent design(I.D) பத்தி சொல்லணும்னா அது அமெரிக்காவில் இருக்கிற அடிப்படைவாத கிறிஸ்துவர்கள் உருவாக்கிய கோட்பாடு.அதை பரிணாமவாதத்துக்கு எதிரா உருவாக்கி அவங்க பள்ளிகளில் சொல்லி கொடுக்க துவங்கினாங்க.அதை அமெரிக்க கோர்ட்டுகள் அனைத்தும் தடை செய்து விட்டன.காரணம் அது அறிவியல் போர்வையில் இருக்கும் மதம்.அதில் எந்த உண்மையும்,அறிவியலும் கிடையாது.அதனால் அதை பள்ளிகளில் சொல்லிக்கொடுப்பதிலிருந்து தடை செய்து விட்டார்கள்.

"விட்டேனா பார்" என அவர்கள் தாங்களாக ஒரு நிறுவனத்தை துவக்கி பல உப்புமா பல்கலைகழகங்களில் பட்டம் பெற்ற முனைவர்களை அழைத்து தனி ஆவர்த்தனமே நடத்தி வருகின்றனர்.ஆனால் அவர்களை விஞ்ஞானிகள் ஏற்பதில்லை.அவர்களின் எந்த படைப்பும் இதுவரை எந்த அறிவியல் ஜர்னலிலும் பதிப்பிடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

koothaadi said...

நல்லப் பதிவு .

செல்வன் -உங்கள் பதில் நிறைய தகவல்களை சொல்லியுள்ளது ..இதைப் படிபதன் மூலம் எனக்குத் தெரிந்த பரிணாமக் கொள்கை வெறும் துகள் தான் இன்னமும் படிக்க வேண்டியது நிறைய என்பதைச் சுட்டிக் காட்டியது

மத ஆதரவு / பரிணாம எதிர்ப்பாளர்கள் கொஞ்சமும் படிக்காமல் அல்லது பரிணாமக் கொள்கை என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயர்ச்சிக்காமல் ஒண்ணாம் கிளாஸ் ல கத்துக் கிட்டத வச்சுகிட்டே வாதம் புரிவது மாதிரி இருக்கிறது ..

கால்கரி சிவா said...

//இது அண்மைய போரட்டத்திற்கும் பொருந்துமோ????
//

எந்த போராட்டம்

SK said...

//இது அண்மைய போரட்டத்திற்கும் பொருந்துமோ????//
தெக்கிக்காட்டனின் விளக்கத்தைப் படித்ததும், மனிதனுக்கு அடுத்த நிலைதான் இந்த தீவிரவாதியோ எனத் தோன்றுகிறது!

சாதாரண மனிதன் போல சிந்திப்பதில்லையே இவர்கள்!

சத்தியமாக மனதில் இப்போது தோன்றிய விஷமத்தனம் கொஞ்சமும் இல்லாத நியாயமான கேள்வி இது!

நம்புங்கள்!

தெ.கா. இது தேவையற்றது எனக் கருதி பிரசுரிக்கவில்லையெனில் வருத்தப் பட மாட்டேன்.

Thekkikattan said...

என்னக்கி மனிதக் குரங்கு எழுந்து நடக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து, முயற்சி மட்டுமே ஒரு இனம் பிரிதொரு இனமாக கிடைக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு, அடுத்த நிலைக்கு தன்னை இட்டுச் செல்கிறது.

உதாரணத்திற்கு 100,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த Wise Man என்றழைக்கப்படும் ஹோமோ சாபியன்ஸ் மூன்று வித உப பிரிவுகளுடன் வாழ்ந்ததாக சான்றுகள் இருக்கிறது. இதில் நியான்டர்தால்கள், குரோ-மாக்னன் மற்றும் அன்மைய கால நாம்.
சரி, மற்ற இருவர்களுக்கும் என்னாவாகி இருக்கலாம், காலப்போக்கில் என்றால், தகுதியற்றது மெல்லச் சாகும் என்பதற்கிணங்க, பயன் படுத்திய ஆயுதங்கள் (தன்னை பாதுகாத்து கொள்ளவும், வேட்டையாடவும்), உணவு பழக்க வழக்கங்கள் (வெறும் தாவர உணவை மட்டும் உண்ணாமல், மாமிசத்தையும் உணவாக சேர்த்துக் கொண்டது), பற்களின் அமைப்பு, மொழி கையாளும் திறன். இவையனைத்தும் மற்ற இரு சமகால மனிதனை ஒத்த மற்ற உப பிரிவுகளை, இந்த தற்கால 'நாம்' சந்தித்த பொழுது அவர்களை போட்டியினுடே வீழ்த்தி துடைத்தெறிந்திருக்கலாம் இருக்கலாம் அல்லவா?

ஏன், சம காலத்தில் ஹோமோ எரக்டஸ்ஸும், ஹோமோ சாபியன்ஸும் ஒன்றாக வாழ நேர்திருந்தாலும் அவைகளுக்கிடையே ஏன் இனக் கலப்பு நடைபெறவில்லை? இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். உதாரணத்திற்கு புலியும், சிறுத்தையும், சிங்கமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் ஏன் இயற்கையில் வித்தியாசமான வாழ்வுமுறையும், வேட்டையாடும் அணுகு முறையும், சாப்பிடும் விலங்களின் தேர்வு முறையும் வித்தியாசமாக இருக்கிறது? மேலும், கருவுற்று குட்டி சுமக்கும் காலம் அவைகளுக்கிடையே வித்தியாசப் படுகிறது.

அதுபோலவேத்தான் இந்த ஹோ. எரக்டஸும், ஹோ. சாபியன்ஸும் இது போன்ற வேறுபாடுளுடன் இருந்திருக்கக் கூடும். Speciation!

இப்பொழுது இவைகளை கருத்தில் கொண்டு சற்றெ ஆழ்ந்து யோசித்தால் speciation இயற்கையில் நடைபெறுவதற்கு சாதகமான புறச் சூழல் நிகழ்வு பொருத்தும், அவ்வாறு ஒரு இனம் தனித்து விடலின் பொருத்தும் வேகமான முறையில் கிடைக்கும் உணவு, கையாளும் ஆயுதம், மற்றும் நன்றாக செப்பனிடப் படாத மொழிப் பரிமாற்றம் ஒரு புது வகை வளர்ச்சியில் பின் தங்கிய இனம் ஒன்று தோன்றுவதில் சுணக்கம் இருக்க வாய்ப்பில்லையோ என எண்ணத் செய்கிறது.

எப்படி மடகாஸ்கர் எனும் தீவில் பக்கத்திலேயே இருக்கும் ஆப்பிரீகா கண்டத்திலேயே இல்லாத பறவை, பூச்சி, மற்றும் பாலூட்டிகளின் வகைகள் காணப்படுகிறது, அதுபோலவே. இந்த தற்கால மனிதனிலிருந்து, ஆஸ்திரோலிய, நியூ Zலாந்த் போன்ற தீவுகளில் தனித்து விடப்பட்ட Aborginals ஒரு sub-humanனோ என்று எண்ணத் தோன்றுகிறது.

செல்வன் said...

eaters of the dead என்ற புத்தகத்தில் நியாண்டர்தால்கள் 8ம் நூற்றாண்டில் கூட இருந்ததாக அரபு வணிகர் ஒருவரை மேற்கோள் காட்டி மைக்கேல் க்ரீச்டன் எழுதியுள்ளார்.

Thekkikattan said...

இ.கொ,

//நான் ஒரு விவாதத்திற்கு சென்றால் என்னால் முடிந்த அளவு இரண்டு பக்க நியாயங்களை படித்துதான் செல்வேன். //

//உங்கள் கோபமும் இயலாமையும் புரிகிறது. ஆனால் அதை எழுத்தில் காட்ட வேண்டாமே.//

அதெல்லாம் ஒரு கோபமும் இல்லையப்பா. கொஞ்சம் எதிர்பார்ப்பு அவ்வளவுதான். மற்றபடி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம்தான். இங்க என்ன செம் வகுப்பா எடுக்கிறோம். எல்லாருக்கும் போயிச் சேரணுமா என்னா... இம்புட்டு போதும் அப்படிங்கிற ஒரு திருப்திதான்.

நிர்மல் said...

நல்ல பதிவு தெ.கி.

செல்வனும், நீங்களும் பின்னூட்டம் முழுதும் தகவல்களால் நிரப்பி இருக்கிங்க.

லொடுக்கு said...

ஆமா! இதைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுனால யாருக்கு என்ன லாபம்?? :)

Anonymous said...

லொடுக்கு பாண்டி
"ஆமா! இதைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுனால யாருக்கு என்ன லாபம்?? :)""

தெரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்தால் ஒட்டகத்துலருந்து அடுத்த ஸ்டேஜுக்கு போயிறலாமுல்ல :))

Partha (பார்த்தா) said...

//லொடுக்கு பாண்டி said...

ஆமா! இதைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுனால யாருக்கு என்ன லாபம்?? :)
Wednesday, October 04, 2006//

மதம்-ங்கற நோயை கொஞ்சமாவது கட்டுப்படுத்தலாம்.

To some It could be the 'Total Perspective Vortex' machine described in The Hitchhiker's Guide to the Galaxy :-)

Thekkikattan said...

பார்த்தா,

என்ன அருமையாக சொல்லி இருக்கிறார். அதுவே உண்மை. விடப்பிடியாக ஒரு விசயத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கும் பொழுது மற்ற விசயங்களை புறம் தள்ளுவது அவசியமாகிப் போகிறது.

இந்த இடத்திற்கு பொருத்தமான ஒன்றை, நல்ல நேர அணுகுமுறையுடன் இங்கு கொணர்ந்தமைக்கு, நன்றி!

Anonymous said...

பரிணாம வளர்ச்சியை கூறு போட்டு வகுந்துக்கிட்டுருந்த அபு முஹை, இறை நேசன்,நல்லடியார்,அப்துல் குத்தூஸ் முதலானோர் இங்கெல்லாம் வந்து படித்து பார்க்கவோ அல்லது பின்னூட்டம் இடவோ மாட்டார்கள்..பின்னி பெடலெடுத்துருவாங்கல்ல...(கருத்துக்களால்தான்)....அவர்கள் வராததால் அவர்கள் பினாமிகளான சுல்தான் போன்றோரும் வரமாட்டார்கள்..ஆனா இதையே அவங்க பதிவுல எழுதுனா மாங்கு மாங்குன்னு பதில் எழுதுவாங்க...அப்ப மட்டும் இவங்க கிட்ட மாற்ருக்கருத்துக்கு டேட்டா பேஸ் வந்துருச்சா என்ன...தன்னோட பதிவுல இஷ்டத்துக்கு என்ன வேணா எழுதிட்டு அப்படியே வேணும்ங்கற பின்னூட்டத்தை மட்டும் அலவ் பண்ணிக்கிட்டு அக்கடான்னு இருந்துரலாமுல்ல.... இதுவே இணையத்தின் மிகப்பெரிய வரமும் சாபமும் ஆகும் :))) இங்கு முஸ்லீம் வலைப்பதிவர்களை மட்டும் சொல்வது இந்த பதிவுக்கு சம்பந்தமானது என்பதால்தான்...மற்றபடி கருத்து முக்கால்வாசி வலைப்பதிவர்களுக்கு பொருந்தும்:))

Thekkikattan said...

எஸ்.கே,

தாங்களின் பின்னூக்கிக்கும், வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும், நன்றிகள்.

விடுங்க, இ.கோ இன்னும் கொஞ்சம் செய்தி கிடைக்குமான்னு உசிப்பி விட்டு பார்த்திருப்பாரு :-)

நாடோடி said...

டார்வினிடம் ஒரு சிலர் "டார்வினின் தந்தை ஒரு குரங்கு" என்று கேலி பேசினர்.

அதற்க்கு அவர் என் தந்தை யார் என்று தெரியாதிருப்பதைவிட குரங்கு என்று தெரிந்தது எவ்வள்வோ மேல் என்றார்.

ஆனா சரியான காமடி என்னனா பரிமாண வள்ர்ச்சியை காமி அப்படினு கேக்குறதுதான். இவர்கள் எப்பவும் இப்படித்தானா, அல்லது இப்படித்தான் எப்பவுமேவா?..
புரியல.

உயிரினங்களில் நடக்கும் பரிணாம வளர்ச்சி நின்றுவிடவில்லை. ஆனால் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் அதன் வளர்ச்சிவேகம் குறைந்துவிட்டது.

மனிதன் பூமியில் தோன்றி 3-4 பில்லியன் வருடங்கள்தான் ஆகின்றன. இதுவும் கிடைத்த தடயங்களை வைத்தே. டையனோசர்கள் 20பில்லியன் வருடங்கள் பூமியில் வாழ்ந்த உயிரினம். அவைகளை என்ன கடவுள் படைத்தி பின் தவறு என்று எரேஸ் பண்ணிட்டாரா?.தற்போது உள்ள பறவைகள் டையனோசர்களிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த ஒன்று என்ற கூற்றும் உள்ளது.

மனிதர்களில் பரிணாம வளர்ச்சி கேட்பவர்களுக்கு,
1.எஸ்கிமோக்கள்
இவர்கள் குட்டையானவர்கள். அதிகமான உடல் பருமன் உடையவர்கள்.
1.ஆப்புரிக்கர்கள்.
இவர்கள் உயரமானவர்கள். அதிக பருமன் இல்லாதவர்கள். குறைந்த அளவு உடல் முடி கொண்டவர்கள்.

இவைகள் அனைத்தும் சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்பட்ட மாற்றங்கள்.

Partha (பார்த்தா) said...

An interesting article in Washington times.
---
Humans May Have Limiting Effect on the Origin of (New) Species.

Humans can threaten species with extinction in many ways, including overfishing, pollution and deforestation. Now a pair of studies points to a new danger to the world's biodiversity: humans may be blocking new species from evolving.
---
http://www.nytimes.com/2006/05/23/science/23evol.html?ex=1160107200&en=4c714c1c73b3217d&ei=5070

சுல்தான் said...

//....அவர்கள் வராததால் அவர்கள் பினாமிகளான சுல்தான் போன்றோரும் வரமாட்டார்கள்.//
ஐயா அனானி. எனக்குத் தெரிந்தவரை நான் பின்னூட்டமிடுகிறேன். என்னைப் பாதிப்பவற்றிற்கு நான் பின்னூட்டமிடுகிறேன் எல்லோரும் போல். நான் யாருக்கும் பினாமி இல்லை.

நான் அவர்களை (யாரென்று தெரியாமல் கூட) சந்தித்திருக்கவும் வாய்ப்பு குறைவு. என் கருத்துக்கள் அவர்களோடு ஒத்துப் போகலாம்.
வலைப்பதிவர்கள் யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.

நான் என்னுடைய போட்டோ போட்டு எழுதுகிறேன். நீங்களோ பெயரிலி.
அடுத்து எனக்கும் மட்டரகமான எழுத்துக்கு பதிலளிக்கத் தெரியும். அது வேண்டாமே?

எனக்குத் தெரிந்து இஸ்லாத்தில் 80சதவிகிதத்துக்கும் மேலான கருத்துக்கள் நவீன அறிவியலோடு ஒத்துப் போகிறது. மிகுதி சரியா தவறா என்று நிருபிக்க முடியாததாக இருக்கிறது. ப்ராபபிளிட்டி கணக்குத்தான்.

பரிணாம விஷயமாக எனக்கு எழுந்த சந்தேகத்தை அவர் பதிவில் வைத்தேன். யாரும் பதிலளித்ததாய் தெரியவில்லை.

நான் பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி நிறையப் படிக்க வேண்டும். ஆனால் பயங்கர போராக இருக்கிறது. ஆனாலும் படித்து விட்டு நிறைய விவாதிப்போம். நன்றி.

Thekkikattan said...

சிவா,

//பரிணாமம் என்பது மதம் எனும் மாயைக்கு கொடுத்த மிகப் பெரிய அடி. எனவே "மதம்" பிடித்தவர்கள் அப்படித்தான் சும்மா ரவுஸ் கிளப்புவார்கள் கண்டுக்காதீங்க...//

இது எனக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது அவ்வளவு தூரம் பிடிபடவில்லை. இது போன்ற சூழலில்தான் எனக்கு இது பற்றிய ஆழமே தெரியவந்தது.

ஏன் வளர்ந்த நாடு என்று நாம் யாவரும் நம்பியுள்ள இந்த அமெரிக்காவில் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஜியார்ஜியா பள்ளி பாடப் புத்தகங்களிலிருந்தும் "பரிணாமம்" பற்றி சொல்லிக் கொடுக்கு பொழுது அதனை ஒரு தியரி என்ற முறையில் மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டுமென்றும்... இன்னும் கொஞ்சம் அதிகப் படியாக சென்று அந்த வார்த்தையையே நீக்க வேண்டுமென்று கூட அடித்துக் கொண்டர்கள்.

எந்த மதமாக இருந்தாலும் சரி, எது ஒன்று இந்த பூமியில் அமைதியை ஈட்டுக் கொடுக்க முடியாதோ, அதனை வைத்து கட்டிக் கொண்டு அழ நாம் என்ன கற்கால நியான்டர்தால்களா???

Partha (பார்த்தா) said...

தெகா,

ஓரே ஓரு கேள்வில இத முடிச்சிடலாம்.

பூமியின் வயது என்ன? இதற்கு creationism பேசரவங்களோட பதில் என்ன?

SK said...

பார்த்தா,
அதற்கு முன் இன்னொரு கேள்வியும் கேட்டு விடலாம்!
இந்த மதங்களின் வயது என்ன?

1500, 2000, 5000 [ஏன் 10000 என்றே வைத்துக்கொள்வோமே!] வருடங்களுக்குப் பின்பே தோன்றிய மதங்களும், மத நூல்களும் அதற்குத் தகுந்த 'பரிணாம' வளர்ச்சியின் அடிப்படையில்தானே தங்கள் தங்கள் கருத்துகளை இந்த விஷயத்தில் சொல்லியிருக்கக் கூடும்?

அறிவு பூர்வமான ஆராய்ச்சிகளுக்கும் இவைதான் மூல காரணம் என்பதையும் இந்நேரத்தில் மறுப்பதற்கில்லை.

பல மத நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையில்தான் இந்த ஆராய்ச்சி தொடங்கப் பட்டது என்பதே உண்மை.

எல்லா நூல்களும் கிட்டத்தட்ட அடிப்படையில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுதான் இருக்கின்றன இவ்விஷயத்தில்.

தனக்கே பெருமை வரவேண்டும் என்னும் ஆசையில் மிகைப் படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொன்றாக பரிணாமவளர்ச்சி அடைந்து மனிதன் வரை வந்த பின்னர்தானே இக்கருத்துகளும் புலப்பட்டன; பலப்பட்டன!

நல்லதைக் கொண்டு, அல்லதை அகற்றி, உள்ளதை உணர்வோம்.

மற்றபடி இவைகளை மறுத்துதான் இது நிகழ வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை என எண்ணுகிறேன்.

இது ஒன்றும் போட்டி அல்ல.

இன்று இருப்பதே நிஜம்.

நேற்றை வணங்கி, இன்று வாழ்ந்து, நாளையைப் போற்றுவோம்.

மற்றபடி, இதில் பிளவை உண்டுபண்ணுவது ஆரோக்கியமான செயலோ, உபயோகமான செயலோ அல்ல என நான் நம்புகிறேன்.

குறும்பன் said...

Times Cover Story

http://www.time.com/time/magazine/article/0,9171,1541283,00.html

Scientists figured out decades ago that chimps are our nearest evolutionary cousins, roughly 98% to 99% identical to humans at the genetic level. When it comes to DNA, a human is closer to a chimp than a mouse is to a rat.

சின்னபுள்ள said...

http://www.tamilmuslim.com/vinghanam/uyirinathodram.htm#livingevidence

Thekkikattan said...

சரா,

//ரெண்டு இடத்திலேயும் லின்க் மிஸ்ஸிங்...அதனால் அந்தப் பருவத்தில் எந்தப் பாதிப்பும் வராது...//

இந்த இரண்டு இடத்திலும் லின்க் மிஸ் ஆனாது, விபத்து நடந்த மாதிரி நாம (உங்களுக்கும் எனக்கும்) படிச்ச, மட்டும் பிறந்த இடத்தில் மட்டும்தானா? அல்லது எல்லா இடத்திலும் இப்படியே லின்க் போடாமல் விட்டுவிடுகிறார்களா? இங்கு தர்க்கவிக்கும் சில அன்பர்களைப் பார்த்தல் தனது இளமை பருவம் தொட்டே (தொட்டில் முதல்) ஊட்டப் பட்ட நம்பிக்கை போலல்லாவா காட்சி தருகிறது.

மற்றபடி இங்கு வந்து எடுத்து, தாங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள்.

Thekkikattan said...

Selvam, thanks man for coming and sharing some of the scientific facts!!!

Thekkikattan said...

//இன்னும் யோசித்து பார்த்தால் பரிணாம வளர்ச்சி என்பது தசாவதரங்களை ஒத்ததாக எனக்கு தோன்றுகிறது. நான் இந்து மதத்துக்கு வால் பிடிக்கவில்லை. தோனுனதை சொல்லுகிறேன்//

அனானிமாரே1,

என்ன என்னன்னமோ புதுசா எல்லாம் சொல்லுறீங்களே... அதனைப்பத்தி கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்... என்னமோ தண்ணீக்குள்ளேயும், நிலத்திலயும் வாழ்றமாதிரியெல்லாம் சொல்றாங்க... அது, அப்படி தண்ணீக்குள்ள போயிறுந்ததா அல்லது அங்கேயிருந்து கரையேறுனாத, ஏன் அப்படி நடந்தது இப்படி ஏதாவது காரணமிருந்த சொல்லுங்கப்பா...

இப்படி ஆளாளுக்கு அலுச்சாட்டியம் பிடிக்கிறீங்களே...

அனானி, இப்ப என்னத்தா பெரிசா இங்கன போட்டு உடைக்கிறீங்கன்னு, இப்படி முகமூடி போட்டுகிட்டு வந்து எழுதுறீங்க...

இலவசக்கொத்தனார் said...

தெக்கி, உங்க அனுமதியோட ஒரு இலவச விளம்பரம் ஒண்ணு போட்டுக்கறேன். நண்பர்மாருங்களா கொஞ்சம் இங்கயும் வந்து பாருங்கப்பா. வெண்பாக்களாய் இதையே பேசறோம்.

Thekkikattan said...

துள்சிங்கோ, எதச் சொல்றீங்கோ பதிவச் சொல்றீங்களா இல்ல வந்த பின்னூட்ட செய்திக் கோர்வைகளைச் சொல்றீங்களா... ;-)

ஆளுங்க அடிச்சி நொருக்கிப்புட்டாங்க போங்க...

நீங்களும் படிச்சீங்களா, மண்டை காஞ்சு போயிருக்குமே...

Thekkikattan said...

கூத்தாடி தாங்களின் வருகைக்கும், பரிணாமத்து பக்கம் நிற்பதை காட்டிக் கொண்டதற்கும் மகிழ்சி கலந்த வணக்கங்கள் :-)

//ஒண்ணாம் கிளாஸ் ல கத்துக் கிட்டத வச்சுகிட்டே வாதம் புரிவது மாதிரி இருக்கிறது ...// :-))

அப்படியும் இருக்கலாம் கூத்தாடி, இல்லென்னா புரியுது அவங்களுக்கு, ஆனா புரியாத மாதிரி அந்த சிறைக்குள் இருந்த வர கொஞ்சம் பயம். ஏதாவது பிடிச்சிக்க ஒரு ஊன்றுகோல் மாதிரி தேவைப்படுமின்னு நினைக்கிறேன். ஆனால் அதில் உள்ள முரண்பாடு என்னன்னா... இறக்கி விட்டுட்டு இருந்து பார்த்த அதில் கிடைக்கும் "சுமை" இல்லாத பயணம் எவ்வளவு இனிமையானதுன்னு விளங்காமல்தானோன்னு எனக்குத் தோணுது.

Thekkikattan said...

//வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து உண்மை" என்று சொல்லக்கூடியவர்கள் //

எழில், இந்த வரிக்கு வரி தேடுதல் ஏதோ என்சைக்லோபீட்டியாவில தேடுற மாதிரி எது கேட்டாலும் உடனயே அந்த புத்தகங்களை திறந்து அடிக்கோடிட்ட பத்திகளை மோற்கோலிட்டி இப்படித்தான் இதில் சொல்லப்பட்டிருக்கிறது, எனவே அவ்வளவுதான்னு சொல்ற நிறைய பேற தினமும் பார்த்துக் கொண்டுள்ளேன்.

அதனை விட இங்கு அமெரிக்காவில் தன்னுடைய காரின் பம்பர்களில் மீன் சிம்பலை இணைத்துக்கொள்வார்கள் (பலபேர்) இதில் மீன் உள்ளே 'சீஸஸ்' என்றோ அல்லது 'க்ராஸ்' இருந்தாலோ அவர் "கிரியோஷனை" நம்புகிறார் எனவும், அதுவே அந்த மீன் சிம்பல் வெறுமானே இருந்தால் "பரிணாமத்தை" நம்புகிறார்கள் என்றும் பொருள். இப்படி ஒரு பனிப் போர் நடந்து கொண்டுள்ளது.

இதில் யார் காரின் பின்னாடி மீது அடி வாங்கும் (வேண்டுமென மோதப்படும்) வாய்ப்புகள் அதிகம், கூறுங்கள் பார்க்கலாம் :-)) ???

Thekkikattan said...

கால்கரி சிவா,

எந்த போராட்டமா? நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் தளம் தாங்களுக்குத் தெரியும்தானே... இயற்கையில் speciation எப்படி நடைபெறுகிறது என்பதனை இங்கும் சற்று தொட்டுத்தானே சென்றிருக்கிறோம்.

அதன் படி பார்த்தால் ஹோமோ சபியன்ஸ் சமகால இனத்திக்குள்ளே, நியன்டர்தால்கள் வாழ்ந்தார்கள் தானே அவர்கள் எச் சூழலில் இந்த 'மாடர்ன் நாம்'முடன் எதிர்த்து நின்று போராடி அவர்களின் இனத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. யோசித்துப் பாருங்கள், தான் பயன்படுத்திய tools, art, clothing, communication skill இவைகளையனைத்தும் மற்றொரு குரூப் இன்னும் அட்வான்ஸ்டூ அணுகு முறையுடன் இன்னொரு ஏரியாவிலிருந்து (கண்டம்) வந்து தொடர்பு ஏற்படும் பொழுது, இயற்கையாகவே, நியன்டர்தால்கள் துடைத்துதெரியப்பட்டார்கள்.

அதுபோலவே, இப்பொழுது நடக்கும் இந்த போராட்டத்தில் தகுதியுள்ளதை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லத்தான் போட்டு பார்த்துக் கொள்கிறார்களா?? என்ற நிலையில் கேட்டுவைத்திருந்தேன்... இருப்பினும் இந்த போராட்டத்தில் மிஞ்சி நிற்கப்போவது, கரப்பான் பூச்சிகளும் மற்ற சிறு பூச்சி இனங்கள் மட்டுமே... ஆனா அதனைப் பார்க்க நாம இருக்க மாட்டோமே...

Related Posts with Thumbnails