Monday, October 23, 2006

காகிதப் புலிகளும் *வச்சிபார்க்கத் தெரியாத* கமலும்!!

இது போன்ற ஒரு பதிவ போடணுமின்னு எனக்கு எப்ப "விருமாண்டி" கேசட் வெளியீட்டு விழாவும் அதனைத் தொடர்ந்த அரசல் புரசலான குரு (கே. பாலசந்தர்) - சிஷ்ய (கமல் ஹாசன்) பந்தம் கொஞ்சம் விரிசலாகி அனல் கணந்ததைக் காண முடிந்தலிருந்து கமலின் உள்ளத்தில் உள்ள சில சிந்தனைகளை உணர முடிந்தது.

இந்த பதிவை இப்பொழுது கொணர்ந்தற்கு காரணம், அவரது குருவான இயக்குனர் பாலசந்தர் பல புரட்சிகரமான கருத்துள்ள படங்களை கமலைக் கொண்டும், ஏனைய கதாபாத்திரங்களை கொண்டும் தமிழ் கூறு சமூதாயத்திற்கு சொல்லியிருக்கிறார் என்பதனை கேள்விப் பட்டிருக்கின்றேன். இருந்தாலும், அப்படிபட்ட படங்களை இந் நாள் வரையிலும் காண கொடுத்து வைக்கவில்லை.

இருப்பினும் நமது தமிழ் மணத்தில் அண்மையில் சத்தியப் ப்ரியன் எழுதிய கமல் - ஒரு சகாப்தம் என்ற பதிவின் மூலம் பல திரைப்படங்களின் சிறப்பு தொகுப்பு ஒரே இடத்தில் கிடைத்தது. அதுவும் ஒரு காரணம் இந்த பதிவை துரிதப் படுத்தி எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்வதற்கு.
விதவை மறுகல்யாணம், விபச்சாரியை(?!) பட நாயகன் காதலித்து மணப்பது இப்படி பலப்பல என திரைப்படங்களின் மூலம்(மட்டுமே) பல புரட்சிகள் முன் வைக்கப்பட்டதாக கேள்விபட்டதுண்டு.

ஆனால், இன்று கமலுக்கு நல்ல நண்பர்கள் அருகமையில் இல்லாமல் இருப்பதால்தான், யாரும் இடித்துக் கூறுவதற்கு இல்லையெனவும், அதனால்தான் அவரும் தனக்கு அமைந்த மனைவிமார்களில் ஒருவரையேனும் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கருத்துச் சொல்லி மேடையில் சொல்லாமல் சொல்லி தனது குரு, விருமாண்டி பட கேசட் விழாவில் பொறுப்பாக இடித்துக் கூறிவிட்டார்.

அன்றுதான் கமலின் மறு முகத்தை காண முடிந்தது. பொதுவாகவே, கமல் தனது சொந்த குடும்ப விசயம் குறித்து பொதுவில் பேசுவதை விரும்பவது கிடையாது (அடுத்தவர்களும்). அப்பச்சத்தில் அப்படி ஒரு வசனத்தை, மேடையேறி போட்டுடடைத்ததால், அவரும் சற்றே சினம் சீண்டப் பட்டவராக அதற்கு பதிலிருக்கும் தொனியில் கூறியது.

சமூகத்தில் நல்ல (புரட்சி) கருத்துக்களை கூறுபவர்கள் யாரும் தனது சொந்த வாழ்வில் முயன்று சோடை போவது கிடையாது. அவர்கள் பாதுகாப்பான வலையின் மேல் இருந்துதான் தனது புரட்சிக் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

விதவை திருமணத்தை ஆதரித்து கருத்தும் கூறும் ஒருவர் தனது சொந்த வாழ்க்கையில் அப்படி ஒரு வாழ்வை அமைத்துக் கொள்வது கிடையாது. இது போன்றே ஏனைய கருத்துக்களும் (ஏன் அப்படி? உடனே அதற்கு நாம் கூறும் மறுமொழி, அது அது அவரவர்களின் சொந்த விருப்பத்தை பொறுத்தது, அதில் நாம் யார் நம் மூக்கை நுழைக்க என்று... நான் முயன்று தோற்றவன் என்ற முறையில் கேக்கிறேன் இங்கு). இப்படியாக தனது சொந்த வாழ்வில் என்ன நடந்து கொண்டிருக்கக் கூடும் என்பதனை அந்த "காகிதப் புலிகளுக்கு" சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார் கமல் அன்று. எவ்வளவு புரிதலுக்கென உள்ள இடைவெளி என்று பாருங்கள்.

இதிலிருந்து சில விசயங்கள் எனக்குப் புரிய வந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது போன்ற புரட்சிகரமான கருத்துக்களை சொல்லி பேரும், பணமும், புகழும் வேண்டுமானால் அள்ளி குவித்திருக்கலாம் வெள்ளித் திரைகளின் மூலமாகவும் அல்லது புதினங்களின் மூலமாகவும், தனது சொந்த வாழ்வில் யாரேனும் தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்களா இந்த காகிதப் புரட்சியாளார்கள் என்பது எனக்குத் தெரிந்து தெரியவில்லை (இருக்கலாம் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக). உதாரணத்திற்கு, குழந்தைகளின் தத்தெடுப்பை பற்றிய கருத்தைச் சொல்லி படம் எடுக்கும் ஒருவர், தனக்கென்று ஒரு குழந்தையேனும் தத்தெடுத்து தனது வீட்டிலேயே வைத்து வளர்க்கிறாரா? அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்ள?

சரி, கமல் என்ன செய்திட்டார் தனக்கு அப்படி "வைத்துப் பார்த்துக் கொள்ள தெரியாதவர்" என்ற பெயரை ஈட்டிக் கொள்ள. புரிகிறது, அவரது சொந்த வாழ்வை பற்றி நாம் தர்க்கவிப்பது நாகரீகமற்ற செயல் என்பது. இப் பொழுது கமலும் ஒரு நடிகர் இல்லாத பட்சத்தில் ஒரு சராசரி நபராக இருந்திருந்தால் இப்பொழுது அவரது வாழ்வு விமரிசனத்திற்கு ஆளாகி இருப்பதைப் போல ஆகியிருக்குமா?

அவர் பொது வாழ்வில் இருப்பதால் மட்டும் தனக்கென்று சொந்த விருப்பு, வெறுப்புகள் தன் வாழ்வில் இருக்காதா? அல்லது அப்படியே இருந்தாலும் தான் ஒரு "ரோல் மாடலாக" மற்றவர்களுக்கு இருக்க வேண்டுமென்ற சமூதாய கட்டாயத்தின் பேரில் தனது சொந்த சந்தோஷத்தை தொலைத்து தியாகியாகி விட வேண்டுமென்ற கட்டாயாமா, என்ன? இதில் எது?

அவரை ஒரு தனிப்பட்ட மனிதராக அணுகும் பட்சத்தில் நம்மிடையே இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் மறையும் பொழுது, ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சுய பரிசோதனை தன் வாழ்வை பொருட்டும் நிகழ்த்திப் பார்க்க முடியும் அது எதுவெனினும்.

சமூகம் ஒரு கட்டமைப்பை வைத்து திணித்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அளவுகோலினை நிர்யிணத்திருந்தால் தனிமனித தேடல்களுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது அல்லவா? அதுவும் கமல் போன்றவர்கள் "லைம் லைட்"க்கு கீழ் இருந்து போவதால், அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் போன்றவர்கள்தான். ஒரு சதாரண மனிதனுக்கு கிடைக்கக் கூடிய சுதந்திரம் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

41 comments:

Thekkikattan|தெகா said...

ஒர் டிஸ்கி: இது என்னுடைய பார்வையில் எனக்குப் பட்டதை மற்றுமே இங்கு முன்வைத்துள்ளேன்.

இலவசக்கொத்தனார் said...

எச்சூஸ் மி. இப்போ என்ன சொல்ல வறீங்க? எனக்கு புரிஞ்சது இதுதான்.

ஒரு தனி மனிதன் வாழ்க்கை அவன் தேர்ந்து எடுத்துக்கிறது. அவன் ஒரு பிரபலம் என்பதால் சமூகம் எதிர்பார்க்கும்படி அவன் வாழ்க்கை இருக்க அவசியமில்லை.

சரிதானா?

துளசி கோபால் said...

//கமல் போன்றவர்கள் "லைம் லைட்"க்கு கீழ் இருந்து போவதால்,
அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் போன்றவர்கள்தான். ஒரு
சதாரண மனிதனுக்கு கிடைக்கக் கூடிய சுதந்திரம் கூட அவர்களுக்கு
கிடைப்பதில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.//

நடிகர்களுக்கு அதி முக்கியவத்துவம் கொடுத்து அவுங்க தும்முனாக்கூட, அதை ஒரு 'செய்தி' யா
போட்டுக் காசு பார்க்கிற மீடியாக்கள்தான் இல்லாதது, பொல்லாதது எல்லாத்தையும் பரப்பி விட்டுருது.
சாதாரண மனுஷங்களை 'சினிமா' எப்படி ஆட்டுவிக்குதுன்னு சரியாப் புரிஞ்சுக்கிட்டு 'உழைக்கிறது'
இந்த மீடியாக்கள்தான்.

நானும் ஒரு டிஸ்கி போட்டுக்கறேன். இதுவும் என் சொந்தக் கருத்து மட்டுமே:-))))

SathyaPriyan said...

எனது பதிவு தங்களுக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது என்று குறிப்பிட்டதற்கு நன்றி.

கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தனது சம கால நடிகர்கள் பலரை விட பல சிறந்த படங்களை தந்தவர். பல புதிய உத்திகளையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப் படுத்தியவர்.

அவரை பற்றி மிகவும் மோசமாக விமர்சிப்பவர்கள் கூட அவரது நடிப்பை பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றி வரும் விமர்சனங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியே இருக்கின்றன. பிறரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது தவறு. அதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை.

அதே நேரத்தில், அவர் ஒரு சராசரி மனிதர் இல்லை. ஒரு மிகப் பெரிய நடிகர். அவரை பலர் கூர்ந்து கவனிக்கிறார்கள். பலர் பின்பற்றுகிறார்கள். பலர் அவரை வெறும் நடிகராக மட்டுமே பார்ப்பதில்லை. அவருக்கு சமூகப் பொருப்பு இருக்க வேண்டாமா? நானும் நீங்களும் தவறுகள் செய்வதால் விளையும் தீமைகளை விட அவர் தவறுகள் செய்தால் விளையும் தீமைகள் அதிகம்.

இவ்வளவும் சொல்லிவிட்டு கடைசியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், இங்கே பலரும் ஏதோ கமல் மட்டுமே தவறு செய்வது போலவும், மற்ற நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள் போலவும் பேசுகிறார்கள். என்னைக் கேட்டால், கமல் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை, மற்றவர்கள் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள்.

Sundar Padmanaban said...

தெக்கிட்டான் சார்

கமல்னதும் ஓடியாந்தேன்.

இது மாதிரி வாத எதிர்வாதங்களைப் பொருத்தவரை என் நிலை -நடிகனோ, ஓவியனோ, எழுத்தாளரோ, விளையாட்டு வீரரோ - ஒரு கலைஞனின் கலைத்திறமை மட்டும் விமர்சனத்திற்குள்ளாக்காமல் அவர்களது சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்ப்பதற்குச் சமம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் 'பின்பற்றப் படவேண்டிய' தலைவர்களல்ல. பொதுவாழ்வில் அவர்கள் இல்லை - அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனத்திற்குள்ளாக்க!

அவர்கள் "எடுத்துக் காட்டாக" இருக்கவேண்டியவர்கள் என்ற மாயக் கட்டாயத்தை ஏற்படுத்துவது விபரீதத்தில் முடியும். எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் போன்ற சமூக அழுத்தங்கள் தாங்காது கலையை விட்டு அவர்கள் விலகக் கூடும் - அல்லது கலைக்கான தனது பங்களிப்பை மட்டுப்படுத்தக் கூடும். Don't express to impress others - express to express yourself என்பார்கள். அடுத்தவன் என்ன நினைப்பானோ என்று பயந்துகொண்டிருந்தால் தனக்கென்று வாழமுடியாத கட்டாய சூழ்நிலைக்கு கலைஞன் மட்டுமல்ல - எந்தவொரு மனிதனும் தள்ளப்படக்கூடும்.

"காதலிக்காமல் காதல் கதையை எழுதமுடியாது" என்று காதலிக்காத ஒருவரின் காதல் கதை எழுதும் முயற்சிக்குப் பதிலளித்த சுஜாதாவிடம் 'அப்ப நீங்க கொலைக் கதைகளெல்லாம் எழுதுகிறீர்களே?' என்று கேட்டாராம் எழுத முயன்றவர்.

கமலை வீம்பு பிடித்தவர் என்றும் சிலர் சொல்கிறார்கள். அப்படி வீம்பாக நெடுங்காலம் இருப்பதும் எளிதான விஷயமில்லை.

ஒரு கலைஞனாக அவரை மிகவும் ரசிக்கிறேன். அவரது சொந்த வாழ்க்கை ரசிகனாக எனக்குத் தேவையில்லாத விஷயம்.

சொந்த வாழ்க்கை குறித்தான எடுத்துக்காட்டுகளுக்கு என் பெற்றோரிலிருந்து எத்தனையோ பேர் என்னைச் சுற்றியே இருக்கின்றனர். அதற்கும் கமலைக் கூப்பிடுவது ஆரஞ்சுப்பழம் ஏன் காரமாக இல்லை என்று விமர்சிப்பதைப் போலாகும். அப்படியே அதற்கும் அவரை எடுத்துக்காட்டாக நான் எடுத்துக்கொள்ள நினைத்தால் அது என் சொந்த விருப்பத்தின்பேரிலான முடிவாகத்தான் இருக்குமே ஒழிய சொந்த வாழ்க்கைக்குரிய சமூகத்தின் மதிப்பீடுகளின் மீதானதாக இருக்காது என்றும் சொல்ல விரும்புகிறேன்.

நன்றி.

இலவசக்கொத்தனார் said...

இது ஒரு சோதனைப் பின்னூட்டம். பி.க. எல்லாம் இல்லைங்க.

Anonymous said...

இ.கொ,

//அவன் ஒரு பிரபலம் என்பதால் சமூகம் எதிர்பார்க்கும்படி அவன் வாழ்க்கை இருக்க அவசியமில்லை. //

அதே தான் நான் சொல்ல வருவதும். சும்மா, ஊருக்காக சொந்த வாழ்விலும் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது, ஒரு தனி நபரின் சுதந்திரம் தானே? அதனைத்தான் அப்படி சொல்ல வந்தேன். எந்த காலத்தில் தான் உண்மைக்கு மவுசு இருந்தது, சொல்லுங்க.

உண்மைக்காக வாழ்ந்தால் இப்படி "வைச்சுப் பார்க்கத்தெரியாத" பெயர் எடுப்பதெல்லாம் ஒரு பெரிய விசயமில்லை என்பது, கமல் போன்றவர்களின் வாழ்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

Anonymous said...

//நடிகர்களுக்கு அதி முக்கியவத்துவம் கொடுத்து அவுங்க தும்முனாக்கூட, அதை ஒரு 'செய்தி' யா
போட்டுக் காசு பார்க்கிற மீடியாக்கள்தான் இல்லாதது, பொல்லாதது எல்லாத்தையும் பரப்பி விட்டுருது//

ஆமாம் அவங்களுக்கு தெரிஞ்சதத்தானே சொல்ல முடியும். அவங்க எதிர் பார்ப்புக்கு உள்ளே வராத, தன் பார்வைக்கு எட்டாத விசயங்களை யாராவது செய்யப் போனால் அது சமூதாயத்திற்கு ஒவ்வாது அப்படி இப்படி என்று எழுதி அதனையும் காசாக்குவதுதான், இன்றைய மீடியாக்களின் பங்கு.

எவ்வளவு பிரபலம் என்றாலும் அவர்களும் மனிதர்கள் தான் என்று என்னைக்கு பார்க்க ஆரம்பிக்கிறோமோ அன்று எல்லாம் சரியாகிவிடும். என்னங்க நான் சொல்றது.

//நானும் ஒரு டிஸ்கி போட்டுக்கறேன். இதுவும் என் சொந்தக் கருத்து மட்டுமே))//

ஓ, நீங்களும் டிஸ்கி போட்டுகிட்டீங்களா ! :))

Thekkikattan|தெகா said...

மிக மிக உண்மையான வரிகள் தெகா!கலக்குறீங்க...//

வானமே எல்லை" - இ.கொவிற்கு எழுதிய பின்னூட்டத்தை படிச்சிருங்க...

உண்மைதானேங்க நான் சொல்றது, காகிதப் புலிங்க கடிச்சா இரத்தம் வருமா :-))??

Sridhar V said...

தெக்கிக்காட்டான் அவர்களே,

இந்த 'வச்சிபார்க்கத் தெரியாத' அப்படினு சொல்றீங்களே... அதுல ஒரு சின்னக்குழப்பம்.

கமல் அவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், சம்பந்தப்பட்டவர்கள் மனமொத்து மணம் புரிந்திருக்கிறார்கள் / மண விலக்கும் பெற்றிருக்கின்றார்கள்.

அவர் வாழ்க்கையில் இணைந்த இரு பெண்களுமே சமூக அந்தஸ்தும், பொருளாதார சுதந்திரமும் உள்ளவர்கள்.

கணவன், மனைவி சம்பந்தப்பட்ட ஒரு விஷய்த்தில், கணவரை மட்டும் 'வ்ச்சிப் பார்கத் தெரியாத' என்று ஏன் சொல்ல வேண்டும்? மனைவிமார்களுக்க்கு இது பொருந்தாதா?

உண்மையில் இந்திய குடும்ப நீதிமன்றங்களில் மண விலக்கு பெறுவது என்பது பெண்களுக்கு லாபகரமானதுதான். எனது நன்பருக்கு நட்ந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்தான் நான் அப்படிச் சொல்கிறேன்.

Thekkikattan|தெகா said...

Sridhar Venkat said...

//கணவன், மனைவி சம்பந்தப்பட்ட ஒரு விஷய்த்தில், கணவரை மட்டும் 'வ்ச்சிப் பார்கத் தெரியாத' என்று ஏன் சொல்ல வேண்டும்? மனைவிமார்களுக்க்கு இது பொருந்தாதா? //

என்னங்க அதனை ஒரு உள்குத்தாத்தான் சொல்லியிருக்கேன்... கொஞ்சம் sarcasm கலந்து. "வச்சிப் பார்கத் தெரியாத" அப்படின்னு சொன்னது, நான் இல்லைங்க அப்படின்னு ஊரெல்லாம் அவரைப் பத்தி பேசுது இல்லையா, அதனைத்தான் நான் கொஞ்சம் வாங்கி திரும்ப அவங்க கிட்டேயே கொடுக்க முயற்சி செஞ்சு இருக்கேன் இந்த பதிவின் மூலமாக.

எனவே, நான் கமலைப் பற்றி கீழே போட்டுச் பேச வில்லை.

இப்ப புரியுதுங்கலா...

தருமி said...

ஒரு சதாரண மனிதனுக்கு கிடைக்கக் கூடிய சுதந்திரம் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது//

உண்மைதான்.that is the price they pay for being so popular. ஆனால் கமல் இதை handle செய்வது எனக்குப் பிடிக்கும். நான் அப்படித்தான் என்று சொல்ற தைரியம் எல்லோருக்கும் வருவதில்லை.

நன்மனம் said...

//எனவே, நான் கமலைப் பற்றி கீழே போட்டுச் பேச வில்லை.//

தெ.கா என்ன சொல்ரீங்கனு புரியல.

(என்னவோ மத்ததெல்லாம் புரிஞ்சா மாதிரி ஆக்ட் உட்ருக்கேன்.... கண்டுக்காதீங்க :-))) )

கமல் அவர்களை ஒரு நடிகனாக பார்க்க தூண்டும் பதிவு, சரியா!!!

Sivabalan said...

தெகா

நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆனால் உங்கள் பாணி கொஞ்சம் கடினப் படித்திவிட்டது.

இருந்தாலும் நீங்கள் எடுத்துக்கொண்ட விசயம் மிக அருமையான விசயம்.

காகித புலிகளைவிட கமல் எவ்வள்வோ மேலானவர்.

அந்த மேன்மையான மனிதனைப் பற்றிய பதிவுக்கு நன்றி.

உடல் தானம். கண் தானம், இரத்த தானம்.. மேலும் பட்டியல் நீளும்..


வாழ்க கமல்!! வாழ்க அவர் நற்தொண்டு!!

Thekkikattan|தெகா said...

சத்திய ப்ரியன்,

தாங்களுடைய பதிவின் சுட்டியை இங்கு இணைத்துக் கொண்டேன், ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில். நான் கூறியது போலவே, உங்களின் பதிவும் ஒரு காரணமே.

//அவரை பலர் கூர்ந்து கவனிக்கிறார்கள். பலர் பின்பற்றுகிறார்கள். பலர் அவரை வெறும் நடிகராக மட்டுமே பார்ப்பதில்லை. அவருக்கு சமூகப் பொருப்பு இருக்க வேண்டாமா? நானும் நீங்களும் தவறுகள் செய்வதால் விளையும் தீமைகளை விட அவர் தவறுகள் செய்தால் விளையும் தீமைகள் அதிகம். //

அது யாரின் தவறு? அது போல அடுத்தவரின் வாழ்வை பார்த்து தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை பிற்போக்குத்தனத்திற்கு.

அது போல இந்த ஆட்டு மந்தைகளுக்காக, தன்னுள் இருக்கின்ற தாகங்களை தேடி தணிக்காமல் இந்த மந்தைகளுக்கு ஒரு "ரோல் மாடலாக" இருக்க வேண்டுமென்று தன்னை தொலைத்துக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட முறையில் அவரும் மனிதர் தானே?

என்ன மக்களோ, போங்க.

//கமல் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை, மற்றவர்கள் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள்.//

இது மிகவும் சரி. இதுதான் உண்மையில் நடக்கிறது. தொழிலுக்காக நடிப்பவர் ஒருவரை, வாழ்விலும் "நடி" என்றால் கொஞ்சம் தேடுதல் சார்ந்த மனிதனுக்கு கஷடம் என்பதனை கண் கூடாக பார்க்கிறோம். சதாராண ஒர் மனிதனை கடவுளாக்கி பிறகு அவர் தலையில் தூக்கி நம்முடைய எதிர்பார்ப்புகளை சுமத்தி... ச்சே, ச்சே...

ஜோ/Joe said...

முழுவதும் உடன்படுகிறேன்.

Thekkikattan|தெகா said...

சுந்தர்,

//அவர்கள் "எடுத்துக் காட்டாக" இருக்கவேண்டியவர்கள் என்ற மாயக் கட்டாயத்தை ஏற்படுத்துவது விபரீதத்தில் முடியும். எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் போன்ற சமூக அழுத்தங்கள் தாங்காது கலையை விட்டு அவர்கள் விலகக் கூடும் - அல்லது கலைக்கான தனது பங்களிப்பை மட்டுப்படுத்தக் கூடும். Don't express to impress others - express to express yourself என்பார்கள். அடுத்தவன் என்ன நினைப்பானோ என்று
பயந்துகொண்டிருந்தால் தனக்கென்று வாழமுடியாத கட்டாய சூழ்நிலைக்கு கலைஞன் மட்டுமல்ல - எந்தவொரு மனிதனும் தள்ளப்படக்கூடும்//

அருமையாக விளக்கியுள்ளீர்கள். புரிந்தால் சரி. ஆனால், புரியாது :-( அதுதான் வேதனையான விசயம்.

//"காதலிக்காமல் காதல் கதையை எழுதமுடியாது" என்று காதலிக்காத ஒருவரின் காதல் கதை எழுதும் முயற்சிக்குப் பதிலளித்த சுஜாதாவிடம் 'அப்ப நீங்க கொலைக் கதைகளெல்லாம் எழுதுகிறீர்களே?' என்று கேட்டாராம் எழுத முயன்றவர். //

:-))

நன்றி, தாங்களின் அற்புதமான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு.

SathyaPriyan said...

//
சத்திய ப்ரியன்,

தாங்களுடைய பதிவின் சுட்டியை இங்கு இணைத்துக் கொண்டேன், ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில். நான் கூறியது போலவே, உங்களின் பதிவும் ஒரு காரணமே.
//

அஹா!!!!! நட்சத்திர வாரத்தில் எனது பதிவின் சுட்டியை இணைத்து எனக்கு இலவச விளம்பரம் அல்லவா தந்து இருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றி தான் கூற வேண்டும் :-)

//
அடுத்தவரின் வாழ்வை பார்த்து தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை பிற்போக்குத்தனத்திற்கு.

அது போல இந்த ஆட்டு மந்தைகளுக்காக, தன்னுள் இருக்கின்ற தாகங்களை தேடி தணிக்காமல் இந்த மந்தைகளுக்கு ஒரு "ரோல் மாடலாக" இருக்க வேண்டுமென்று தன்னை தொலைத்துக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட முறையில் அவரும் மனிதர் தானே?
//

அவ்வாறு செய்பவனே உண்மையான தலைவன். ஆனால் கமல் தலைவனல்ல ஒரு கலைஞன். சினிமாவை நேசிப்பவன். சினிமாவை நேசிப்பவர்களால் நேசிக்கப் படுபவன்.

மற்றபடி தங்களின் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன்.

Thekkikattan|தெகா said...

//ஆனால் கமல் இதை handle செய்வது எனக்குப் பிடிக்கும். நான் அப்படித்தான் என்று சொல்ற தைரியம் எல்லோருக்கும் வருவதில்லை.//

தருமி, நீங்கள் கூறியது போல, கமலும் தன்னை தனி மனித நிலையில் வைப்பதை தவிர்த்து, தெய்வ வழிபாட்டுக்குறிய மனிதனாக ஆக்காதீர்கள் என்பதற்கிணங்கவே அவரும் நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறார் என்பது கண் கூடாகவே தெரியும்.

இருப்பினும் அவருக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான், உண்மையை உண்மையாக காட்டிக் கொள்வதில், திரைமறைவிற்கு பின்னால் செய்வதைக் காட்டிலும்...

Thekkikattan|தெகா said...

நன்மனம்,

//(என்னவோ மத்ததெல்லாம் புரிஞ்சா மாதிரி ஆக்ட் உட்ருக்கேன்.... கண்டுக்காதீங்க :-))) ) //

அப்ப, நான் எழுதுனது உங்களுக்கு புரியலாயா? இல்லை இதில வேற ஏதாவது இருக்கா... :-))

//கமல் அவர்களை ஒரு நடிகனாக பார்க்க தூண்டும் பதிவு, சரியா!!!//

பிரபலமின்னா என்ன, அவங்களுக்கு மூன்றாவதா ஏதாவது கொம்பு கிம்பு முளைச்சு இருக்கா... காலையில எழுந்திருச்சா எல்லாருக்கு மூச்சா வருதுன்னோ, பின்னே... :-)))

Thekkikattan|தெகா said...

நன்றி ஜோ அவர்களே. கமல் சார்ந்த பதிவில் மட்டுமே என் வீட்டுப் பக்கம் உங்களை பார்க்க முடிகிறது... :-)

நன்மனம் said...

// இல்லை இதில வேற ஏதாவது இருக்கா... :-))//

ஆகா தெ.கா என்ன பாத்து இப்படி சொல்லிட்டீங்களே... அது சும்மா தமாசுக்கு சொன்னதுங்க....

//பிரபலமின்னா என்ன, அவங்களுக்கு மூன்றாவதா ஏதாவது கொம்பு கிம்பு முளைச்சு இருக்கா... காலையில எழுந்திருச்சா எல்லாருக்கு மூச்சா வருதுன்னோ, பின்னே... :-))) //

என்ன வெச்சு காமடி கீமடி பண்ணலியே.

:-))

பூத கண்ணாடி வெச்சு ஒருத்தரோட எல்லா அசவையும் பாத்துக்கிட்டே இருக்கறது நல்லது இல்லங்கறத நானும் ஒத்துக்கறேனுங்க. give him his space ங்கறதானுங்க என்னோட எண்ணமும்.

ecr said...

அண்ணே!

சத்தியமா சொல்றேன்!

நீங்க ஏன்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலை!

Thekkikattan|தெகா said...

ecr said...

நீங்க ஏன்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலை!//

எனக்கும் புரியலையே... சீரியஸ்லி...

ஓகை said...

கமலின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பல்ருக்கு அக்கரை கலந்த ஆதங்கமிருப்பது அவரை மேலும் பெருமைப் படுத்துகிறது. இதுவே அவருக்கு ஒரு விருதைப் போன்றது.

ஆனால் அவரும் அவருக்கு நெருங்கியிருக்கும் சுற்றமும் நட்பும் மட்டுமே விவாதிக்க வேண்டிய பிரச்சனை இது. கே.பாலச்சந்தர் அவ்வாறு பொது மேடையில் கூறியது எனக்கு உடன்பாடு இல்லை.

தெகா, உங்கள் தலைப்பு கூட எனக்கு சுருக் என்றுதான் இருந்தது.

Thekkikattan|தெகா said...

ஓகை,

ஹைய்யா, ஓகை அய்யா என் பக்கம் வந்திருக்கிறாரே :-) மிக்க மகிழ்சி!

//கமலின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பல்ருக்கு அக்கரை கலந்த ஆதங்கமிருப்பது அவரை மேலும் பெருமைப் படுத்துகிறது.//

கொஞ்சம் ஆழமாக கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் என்ன உண்மை என்பது விளங்கும். சும்மா, மேலோட்டமாக நுனிப்புல் மேய்பவராக இருந்தால் மட்டுமே அடுத்தவர்களின் மீது சுலபமாக எதையேனும் அள்ளி அடித்து விட முடிகிறது.

குருவின் (கே.பி) வாழ்வு சார்ந்த அணுகு முறைக்கும் சிஷ்யனின் (கமல்) அணுகு முறைக்கும் எவ்வளவோ "பட்டறிவு சார்ந்த" இடைவெளி விரிந்து கிடக்கிறது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே ஒரு சாட்சி. கவனித்தால் தெரியும், கமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாரே தவிர, எப்பொழுதும் தன்னை defend பண்ணிக் கொள்வது கிடையாது.

உண்மையாக வாழ்வதற்கும் ஒரு தெளிவும், துணிச்சலும் மிகவும் முக்கியம், அதுவும் இது போன்ற ஒரு "லைம் லைட்"க்கு கீழே அமர்ந்து கொண்டு இருப்பது கொஞ்சம் கடினம்தான்.

//ஆனால் அவரும் அவருக்கு நெருங்கியிருக்கும் சுற்றமும் நட்பும் மட்டுமே விவாதிக்க வேண்டிய பிரச்சனை இது. கே.பாலச்சந்தர் அவ்வாறு பொது மேடையில் கூறியது எனக்கு உடன்பாடு இல்லை.//

அப்படி எனக்கு பட்டதால்தான் இந்த பதிவையே அப்படி ஒரு தலைப்பு வைத்து எழுத வேண்டுமென்ற உந்துதல் வந்தது. இல்லையெனில், கே.பியின் வயதிற்காகவாவது ஓண்ணும் சொல்லமல் இருந்திருப்பேன். அவர், ஒரு புரட்சி படைப்பாளி என்பதும், பின்பு சொந்த வாழ்வில் முரண்பட்டு மனிதர்களின் மனதை உடைப்பதை பார்க்கும் பொழுது எழுத வேண்டியாதாகி விட்டது.

நன்றி, ஓகை அவர்களே!!!

Machi said...

பாலச்சந்தர் அவ்வாறு மேடையில் கூறியிருக்கக்கூடாது. முதலில் அவர் தான் ஒழுங்கா என்று சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். மேடையில் பேசி உலகம் அறிய வைத்துவிட்டார். மேடையில் பேச வேற விதயமே அவருக்கு கிடைக்கவில்லையா?

கமலை பாராட்டியே தீர வேண்டும், தன் தனிப்பட்ட வாழ்க்கை வேறு திரை வாழ்க்கை வேறு என்று பல முறை கூறி வேடம் போடாமல் நடப்பதால் அவருக்கு யாரும் கோயில் கட்டவில்லை.

என்ன செய்வது நமது தமிழக மக்களுக்கு திரை பிரபலங்கள் தான் முன் மாதிரி. கோயில் கட்டி கும்புடர ஆளுங்க நாம. ம்ம்.

Thekkikattan|தெகா said...

சிவா,

வாங்க, வாங்க ரொம்ப லேட்டாக வந்திருங்கீங்க... உங்க வீட்டுப் பக்கம் ஒரே அடிதடியா இருக்கு :-))

//காகித புலிகளைவிட கமல் எவ்வள்வோ மேலானவர். //

உணமைதானுங்களே...

//உடல் தானம். கண் தானம், இரத்த தானம்.. மேலும் பட்டியல் நீளும்..//

ஆமாம், இது எல்லாமே என்னை ஒரு சாதாரண மனித நிலையில் வைத்துப் பார்க்க வேண்டுமென்ற ப்ரக்ஞையின் அடிப்படையிலேயே எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள். புரியுதுதா, நண்பரே!!

Thekkikattan|தெகா said...

நல்ல'மனம்,

//ஆகா தெ.கா என்ன பாத்து இப்படி சொல்லிட்டீங்களே... அது சும்மா தமாசுக்கு சொன்னதுங்க....//

ஆகா! நன்மனம், என்ன பாத்து இப்படி நினைச்சுக் கிட்டீங்களே, நானும் சும்மானுச்சுக்கும்தான் கேட்டுவைச்சேன் :-)))

//என்ன வெச்சு காமடி கீமடி பண்ணலியே.//

:-))) அப்ப உங்களுக்கு வராவே வராதா...??

//பூத கண்ணாடி வெச்சு ஒருத்தரோட எல்லா அசவையும் பாத்துக்கிட்டே இருக்கறது நல்லது இல்லங்கறத நானும் ஒத்துக்கறேனுங்க. give him his space ங்கறதானுங்க என்னோட எண்ணமும்.//

Exactly. And that is what I am trying to make a point here. You know what we need, we need to pay attention to our own problems, rather than spending our energy outwardly :-).

Thekkikattan|தெகா said...

குறும்பன்,

//பாலச்சந்தர் அவ்வாறு மேடையில் கூறியிருக்கக்கூடாது. முதலில் அவர் தான் ஒழுங்கா என்று சிந்தித்து பார்த்திருக்க வேண்டும்.//

நாம் அங்கெல்லாம் போக வேண்டியதில்லை நண்பரே, அவர் அவர்கள் வேலையை அவர்கள் செய்தால் போதும். காகிதத்தில் புலியாக இருக்கிறாரா கே. பி, அவர் அப்படியே இருக்கட்டும். மற்றொருவர், சிறிது சொல்ல வந்த விசயத்தை நடை முறைப் படுத்திப் பார்க்க எத்தனிக்கிறாரா, அவரை அப்படி செய்ய விடுங்கள். எல்லோரும், ஒரே மாதிரியாக இருந்து விட்டால், பிறகு எல்லோரும் கே. பி மயமாகும் ஆபத்தும் உண்டு :-)

//மேடையில் பேசி உலகம் அறிய வைத்துவிட்டார்.//

ஓண்ணும் இல்லாததை சொல்லவில்லை. இருப்பினும், கே.பிக்கு புரிந்த மட்டில் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனையும் கமல் எப்படி எடுத்துக் கொள்வார் என்று நம் எல்லோருக்கும் தெரியும் தானே.

//என்ன செய்வது நமது தமிழக மக்களுக்கு திரை பிரபலங்கள் தான் முன் மாதிரி. கோயில் கட்டி கும்புடர ஆளுங்க நாம. ம்ம்.//

இதெ சொல்லுங்க முதலில் ;-)... எல்லாம் வெளி வேசத்திற்காக வாழ்பவர்கள் தானே, பிரியாது என்ன நடக்குதுன்னே... ஏன்னா, சுய புத்தி இருந்தாத்தானே, சிந்திக்க :-))

Siva said...

என்னை பொறுத்த வரை இந்த பதிவு கூட கமல் என்கிற தனிப்பட்ட மனிதனுக்கு வக்காலத்து வாங்குவது போலதான் தெரிகிறது... அதாவது மீண்டும் நாம் சினிமா மீதான கவர்ச்சியால் அதில் சம்மந்தப்பட்வர்களை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம்...நானும் கூட..

Thekkikattan|தெகா said...

காட்டுவாசி,

//என்னை பொறுத்த வரை இந்த பதிவு கூட கமல் என்கிற தனிப்பட்ட மனிதனுக்கு வக்காலத்து வாங்குவது போலதான் தெரிகிறது... //

தலிவா, I am not getting paid by Kamal or anyone. நாளைக்கு எழுந்து நான் வேலைக்கு போகவில்லையென்றால், யாரும் வந்து எனக்கு சாப்பாடு போடப் போவதில்லை. அதனால், நான் யாருக்காவும் வக்கலாத்து வாங்கி பேச வேண்டிய கட்டாயத்திலும் இல்லை :-).

//அதாவது மீண்டும் நாம் சினிமா மீதான கவர்ச்சியால் அதில் சம்மந்தப்பட்வர்களை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம்...நானும் கூட..//

ரெண்டாவது, சினிமாக்காரங்களா நான் எங்க வச்சு பாக்கணுமோ அங்கதான் வச்சு பார்க்கிறேன். என்ன, கமல் என் சிந்தனையுடனும் என் வாழ்வு முறையுடனும் ஒத்துப் போவதால், என்னால் அவரின் Shoeவுக்குள் பொருத்தி பார்க்க முடிகிறது. அவ்வளவே, மற்றபடி அந்த அளவுக்கு எனக்கு புத்தி மழுங்க வில்லை, யாருடைய வாழ்கையும் பார்த்து என் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவா பிறக்க.

Sridhar V said...

தெ.கா. அவர்களே,

//எனவே, நான் கமலைப் பற்றி கீழே போட்டுச் பேச வில்லை.

இப்ப புரியுதுங்கலா...
//

அப்ப நம்ம கேள்விய 'அப்படி' பேசறவங்களுக்கு redirect பண்ணிக்கிறேன்...

கொஞ்சம் கூர்ந்து கவனிச்சீங்கனா... நம்மில் பெரும்பான்மையோர் எல்லா பிரபலங்களையும் ஒரே தராசில் வைப்பதில்லை. கமல் மாதிரி இருப்பவர்களை ஒரு 'முன் முடிவோடே' அணுகுகிறார்கள். இதைப் பற்றி தனி ஒரு ஆராய்ச்சியே செய்யலாம்தான். சரி விடுங்கள்... நாம் அழுக்கு மனதோடு சிந்தித்தால் அழுக்கான சிந்தனைகள்தானே தோன்றும்...

குருவும் சரி, சிஷ்யனும் சரி கொஞ்சம் எளிதில் உணர்ச்சி வசப் படக்கூடியவர்கள்தான்.

கமல் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள பாதை கடினமானது. எல்லா கட்டமைப்புகளையும் உடைத்துக் கொண்டு போகும் அவர் போக்கு (சிற்ச்சில சமரசங்கள் இருக்கும் பொழுதும்) மிகவும் தன்னம்பிக்கையானது. திறமை + துணிச்சல் + தேடல் எனற ஒரு deadly combination.

பதிவுக்கு நன்றி!

Thekkikattan|தெகா said...

//கமல் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள பாதை கடினமானது. எல்லா கட்டமைப்புகளையும் உடைத்துக் கொண்டு போகும் அவர் போக்கு (சிற்ச்சில சமரசங்கள் இருக்கும் பொழுதும்) மிகவும் தன்னம்பிக்கையானது. திறமை + துணிச்சல் + தேடல் எனற ஒரு deadly combination. //

தன்னைப் பற்றிய உள் மன தெளிவு இருந்தால், அது போன்ற சூழ்நிலையையாக இருந்தாலும் எதிர் கொள்ள முடியுமென்பதற்கு இதெல்லாம் ஒரு சான்றே.

அந்த தெளிவு இல்லாத பட்சத்தில் வெளியிலிருந்து கிடைக்கக் கூடிய பாரட்டுதலும், தூற்றுதலும் ரொம்ப்ப நேரத்திற்கு நிக்காது.

You are welcome, Venkat!!

Anonymous said...

//அவரை பலர் கூர்ந்து கவனிக்கிறார்கள். பலர் பின்பற்றுகிறார்கள். பலர் அவரை வெறும் நடிகராக மட்டுமே பார்ப்பதில்லை. அவருக்கு சமூகப் பொருப்பு இருக்க வேண்டாமா? நானும் நீங்களும் தவறுகள் செய்வதால் விளையும் தீமைகளை விட அவர் தவறுகள் செய்தால் விளையும் தீமைகள் அதிகம். //

என்னைப் பொறுத்தவரை இது தான் உண்மையான விடயம்.

நடிகன் என்ற முறையில் புரட்சிகரமான விடயங்களை முன்வைக்கும் கமல் வாழ்க்கையிலும் அவற்றைக் கடைப்பிடித்தால் தான் அவரது சுதந்திரம் பாதிக்காது இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்ர் அவ்வாறு இல்லை என்பது விருமாண்டி பட கேசட் விழாவில் அவரது மறுப்புரையிலிருந்து தெரிகிறது.

("அவர்கள் பாதுகாப்பான வலையின் மேல் இருந்துதான் தனது புரட்சிக் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.")

அந்தப் பாதுகாப்பான வலை என்பது நிச்சயமாக அவரது சொந்த விருப்பு வெறுப்புகளாகத்தான் இருக்கும்.

உண்மையில் நீங்கள் கூறியவாறு,

Don't express to impress others express to express yourself

என்ற கூற்றின்படி கமல் என்ற நட்சத்திரத்தின் மூலமாகப் பிரகாசிக்கும் புரட்சிகளும் புதுமைகளும் அவரது சொந்த வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றதா? இல்லையே..

உங்கள் விவாதப்படி மீடியாக்கள் வியாபார நோக்கோடு தனிப்பட்ட மனிதனது வாழ்வில் குறி பார்த்து மக்கள் மீது அடிப்பதால் சமூகத்திற்கு பெருந் தீமையைச் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். இதனால் அவை தனிப்பட்ட மனிதனது சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு அவன் கலைஞனாக இருந்தால் சமூகத்திலும் குழப்பத்தை உண்டு பண்ணி விடுகின்றன.
கலைஞனாக இருப்பவருக்கும் நிச்சயமாக சமூகப் பொறுப்பும் மீடியாக்களுக்கு அதை விட அதிகமாக சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

Thekkikattan|தெகா said...

//நடிகன் என்ற முறையில் புரட்சிகரமான விடயங்களை முன்வைக்கும் கமல் வாழ்க்கையிலும் அவற்றைக் கடைப்பிடித்தால் தான் அவரது சுதந்திரம் பாதிக்காது இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்ர் அவ்வாறு இல்லை என்பது விருமாண்டி பட கேசட் விழாவில் அவரது மறுப்புரையிலிருந்து தெரிகிறது.//

நவன், இதற்கு ஏற்கெனவே நிறைய பின்னூக்குகளின் மூலமாக பேசியிருக்கிறோம். ஒரு தனி மனித நிலையில், சொந்த விருப்பு, வெறுப்புகளை வெளிக்கொணர அவர்களுக்கு இடமளிப்பதும் நாகரீகம் தானே.

பொது வாழ்க்கையில் ஈடுபடும் அனைவரும் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள கலாச்சார "கோடு"களை அளவீடாகக் கடைபிடித்துக் கொண்டுதான் வாழ வேண்டுமென்று கட்டாயப் படுத்தினால். நம் எதிர் பார்ப்பின் படி அவர்கள் திரை மறைவிற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. பிறகு தைரியமாக உண்மையைப் பேசி திரை மறைவிற்கு முன்னால் செய்வதற்கும். வெளியில் தெரிந்தால் ஊர்ச் சிரிக்குமென்று மறைவிற்கு பின்னால் திருட்டுத் தனமாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்.

அப்படியேப் பார்த்தாலும், கமல் போன்ற நடிகர்கள் என்ன சுதந்திரப் போரட்டத் தியாகிகளா, அல்லது யோகிகளா... இல்லையே. அடுத்தப் படத்திற்கு எந்த நடிகையை போட்டுக் கொண்டால் படம் நன்கு ஓடும் என்று கேட்டு வாங்கி நடிக்கிறார்கள், அதனை நம்மால் சகித்து போக முடிகிறது. ஆனால், சொந்த வாழ்கையில் ஒருவர் தனது சொந்த பிரட்சினை குறித்து முடிவுகள் மேற் கொண்டால், நாம் சமூதாயத்தினை முன்னெருத்தி அவர் கையை கட்டிப் போடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

இரண்டாவதாக, உண்மை பேசுபவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

Anonymous said...

//புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள கலாச்சார "கோடு"களை அளவீடாகக் கடைபிடித்துக் கொண்டுதான் வாழ வேண்டுமென்று கட்டாயப் படுத்தினால்//

எனது பார்வைப் படி இந்தியக் கலாச்சாரம் அழகானது. இன்று நாம் அக்காலச்சாரத்தை சிதைத்துக் கொண்டிருப்பதால் தான் இக்கோடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

//ஒரு தனி மனித நிலையில், சொந்த விருப்பு, வெறுப்புகளை வெளிக்கொணர அவர்களுக்கு இடமளிப்பதும் நாகரீகம் தானே.//

இனி வருங்காலத்தில் இது தான் நம் நாகரீகமா?

// நாம் சமூதாயத்தினை முன்னெருத்தி அவர் கையை கட்டிப் போடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது//

எனக்கும் தான்.

நன்றி.

Anonymous said...

//புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள கலாச்சார "கோடு"களை அளவீடாகக் கடைபிடித்துக் கொண்டுதான் வாழ வேண்டுமென்று கட்டாயப் படுத்தினால்//

எனது பார்வைப் படி இந்தியக் கலாச்சாரம் அழகானது. இன்று நாம் அக்காலச்சாரத்தை சிதைத்துக் கொண்டிருப்பதால் தான் இக்கோடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

//ஒரு தனி மனித நிலையில், சொந்த விருப்பு, வெறுப்புகளை வெளிக்கொணர அவர்களுக்கு இடமளிப்பதும் நாகரீகம் தானே.//

இனி வருங்காலத்தில் இது தான் நம் நாகரீகமா?

// நாம் சமூதாயத்தினை முன்னெருத்தி அவர் கையை கட்டிப் போடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது//

எனக்கும் தான்.

நன்றி.

Thekkikattan|தெகா said...

நவன்,

//எனது பார்வைப் படி இந்தியக் கலாச்சாரம் அழகானது. இன்று நாம் அக்காலச்சாரத்தை சிதைத்துக் கொண்டிருப்பதால் தான் இக்கோடுகள் ஏற்பட்டிருக்கின்றன.//

உங்களின் கவலை எனக்கு முழுமையாக புரிகிறது. இந்திய காலச்சாரம் பல காலக் கட்டங்களில், பல விதமான தாக்கங்களையும் தாண்டி நிலை பெற்றுத்தான் வந்து கொண்டிருக்கிறது.

இது போன்ற நபர்களும், காலம் விட்டு காலம் நடைமுறை மாற்றங்களில் பயணிப்பதின் பொருட்டு நிறைய நன்மைகளே - இந்திய குடும்பங்களின் மீதான கட்டமைப்பு மறு பரிசீலித்து நிலை நிறுத்திக் கொள்ளப் பயன் படுகிறது.

அதற்கு தன்னுடைய வாழ்வை தொலைத்துக் கொண்டு அதனை அணுகிப் பார்க்க பூர்ண உரிமை வழங்கல் முக்கியம். அதுவே பரிணாமத்திற்கும் உகந்தது, இல்லையா, நவன்?

//இனி வருங்காலத்தில் இது தான் நம் நாகரீகமா?//

அதற்கு பதில், காலமே நமக்கு விடை. ஊஞ்சலில் தொடங்கி அது ஆடியாடி, ஒரு நிலைக்கு எட்டுவது போல... பரி சோதிப்பவர்கள் கண்டறியட்டும் நவீன நாகரீகம் எதனை கொய்து வருகிறது என்று. அது போன்ற பரி சோதிக்க வேண்டுமென்ற ஆவா, is like a bottled up energy, we should not suppress it, be who you are "state"... அதன் முடிவு நன்மையியேயே அமையும் இந்தியா போன்ற தென்மையான கலாச்சாரத்திற்கு... நம்பிக்கை இல்லையா, நவன் :-)

****// நாம் சமூதாயத்தினை முன்னெருத்தி அவர் கையை கட்டிப் போடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது//

எனக்கும் தான்.///

So, let them be who they are, India is much bigger than the odd cases... which includes me too... India will contain individuals like us too, and still it keeps going... :-)

Anonymous said...

அருமையான விளக்கம்.

ஏன் இப்படி? என்ற தலைப்பின் கீழ் உங்களது ஆக்கங்கள் நம்முடைய மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டிராமல்,

"ஏன்?"

என்ற கேள்வியே எழாதவாறு செய்யும் விதத்திலேயே முடிவில் அமைந்திருக்கின்றன என்பதற்கு மேலுள்ள உங்கள் விளக்கம் நல்ல உதாரணம்.

// So, let them be who they are, India is much bigger than the odd cases... which includes me too... India will contain individuals like us too, and still it keeps going... :-) //

நாம் இந்த தொன்மையான கலாச்சாரத்துக்கு செய்யும் பங்களிப்பு மிக மிக குறைவாக இருந்த போதும் அதன் இயல்பான சிறப்பினால் அது தன்னை எக்காலத்திலும் நிலை நிறுத்திக்கொள்ளும் என்று கூறியுள்ளீர்கள்.

சபாஷ்!

//அதன் முடிவு நன்மையியேயே அமையும் இந்தியா போன்ற தென்மையான கலாச்சாரத்திற்கு... நம்பிக்கை இல்லையா, நவன் //

எனக்கு நிச்சயம் நல்ல நம்பிக்கையுண்டு. நீங்கள் தான் எற்படுத்திவிட்டீர்களே! உங்கள் அருமையான விளக்கங்களின் மூலம்.

//தன்னுடைய வாழ்வை தொலைத்துக் கொண்டு அதனை அணுகிப் பார்க்க பூர்ண உரிமை வழங்கல் முக்கியம். அதுவே பரிணாமத்திற்கும் உகந்தது, இல்லையா, நவன்?

//is like a bottled up energy, we should not suppress it, be who you are "state"... //

பரிணாமக் கொள்கையும் ஒரு நிலையில் உண்மை எது என நாம் விளங்கிக்கொள்வதற்கு
அவசியம் என்று அதன் தேவையை நுணுக்கமாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். நன்றி

priyamudanprabu said...

என்னைக் கேட்டால், கமல் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை, மற்றவர்கள் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள்.
என்னைக் கேட்டால், கமல் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை, மற்றவர்கள் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள்.

Related Posts with Thumbnails