*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாக படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு படிக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...
நாயகி,
...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...
உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.
எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடதியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.
இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சாமாய் இருக்கிறது.
எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.
அது போன்ற தருனங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருனங்கள் அல்லாவா, என எண்ணச் செய்தன.
ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜன்மங்கள் புரிந்து கொள்வதில்லை.
உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்கையை ஒரு பொருளாற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அழைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.
அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.
விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.
தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?
இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரட்சினைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...
...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...
ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??
****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!
பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)
19 comments:
நாயகி, பெரிய மனசு பண்ணி பொழப்ப ஓட்ட வைச்சதுக்கு நன்றிங்கோ ;-))
தெகா,
//செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். //
போய் சேர்ந்தா சரிதான்.. ம்ம்ம்ம்..
தெகா: சில சமயம் அரசியல் தலைவர்கள் தங்கள் சுய இலாபத்திற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஒரு குழுவினை வளர்த்து, ஆதரித்து பிறகு அவர்கள் தங்களுக்கே எதிரானவுடன் தீவிரவாதம் என்ற முறையில் அவர்களை அடக்குவதும் பார்த்திருப்பீர்கள்தானே. பிந்தரன்வாலேயில் இருந்து இன்றைய சதாம் வரை இது தொடர்கிறது. அதன்பின் அவரவர் தங்களை சார்ந்திருப்போர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி எது சரி எது தவறு என்று சிந்திக்க முடியாத நிலையும் உருவாகிறது. உரிமைகள் மறுக்கப்பட்டதோடு இது போன்ற சில காரணங்களும் அடங்கும். இதுதவிர மதங்கள் ரீதியில் சிலரும் இனங்கள் ரீதியில் சிலரும் என்று பலரூட்டி வளர்க்கும் தீ. இதில் மாட்டி கொண்டு தவிப்பவர்கள் அடிநிலை தொண்டனும் ஊழியனும் மட்டுமே.
தெகா,
//சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?... //
அருமை அருமை..
கலக்கிடீங்க..
என்னமோ போங்க..
பதிவுக்கு நன்றி
சிவா, அந்த italized quoting வந்து என்னோடது இல்லப்பா, அது செல்வநாயகி அவங்களோடது. அது ரொம்ப உண்மை அப்படிங்கிறதுனாலதான் எனக்கு இந்த பதிவையே தனிப் பதிவா போடணுமின்னு தோணுச்சு.
இப்ப இருக்கிற இந்த சாதிப் பிளவுகள் பிற்காலத்தில் ஒரு தீவிரவாத முறையிலே அணுகப்படாக்கூட வாய்பிருக்கிறது அப்படிங்கிற முறையில சிந்திச்சு எழுதினாது தான் இந்த பதிவு...
தெக்கிக்காட்டான்,
உங்களின் பின்னூட்டத்தை இங்கு பதிவாகவும் இட்டது நல்ல விடயம்.
பார்த்தா,
///How can you analyze the actions of a terrorist through the tantrums of a child?///
தீவிரவாதமும், வன்முறையும் சரியென்று நம்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு தனிமனிதனை மனதில் எண்ணிக்கொண்டே எழுதிய வரிகள் அவை.
என்றாலும் உங்களின் கருத்து எனக்கு இன்னொரு மாற்றுச் சிந்தனையை அறிமுகப்படுத்துகிறது. நன்றி.
//தெக்கிக்காட்டான்,
உங்களின் பின்னூட்டத்தை இங்கு பதிவாகவும் இட்டது நல்ல விடயம். //
நாயகி, இங்கு வந்து அதனை உறுதி செய்து விட்டு தோளிலும் தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றமைக்கு, இன்னுமொரு நன்றிங்கோவ்...
தேகா,
தனிமனித தத்துவ தளத்தில் இருந்து நீங்களும் செல்வநாயகியும் எழுதி உள்ளீர்்கள்.
நண்பர் வைசா அரசியல் தளத்தில் இருந்து சொன்ன பின்னூட்ட நோக்கில் நானும் இரண்டு பதிவுகள் எழுதியுள்ளென்.
குழலியும் எழுதியுள்ளார்.
பரவாயில்லை.இரண்டு நாட்களுக்கு முன் இதைப்பற்றி வலையில் எழுதுவதே வன்முறையாக இருந்தது.இன்று நிலைமை தெளிந்துள்ளது.
படிக்க:
http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html
http://muthuvintamil.blogspot.com/2006/10/commoncivilcode-curfew.html
பார்த்தா,
//தீவிரவாத்தை பத்தி பேசும் போது தேச பக்திய scaleஆ use பண்றது சரியில்லை...//
அதே..
பிறகு, உங்களோட கேள்விக்கு செல்வநாயகியிடமிருந்து பதில் வந்திருக்கிறது பார்த்தீர்களா 'பார்த்தா' ;-)?
ரொம்ப இயல்பா ஒத்துக்கிட்டாங்க தன்னுடைய சிந்தனை தளத்தை வேறுரொரு முறையில் தாங்கள் சொடுக்கி விட்டாதாக... இப்படித்தான் இருக்கணும், நாளொருமேணியும் பொழுதுதொரு வண்ணமாக வளர்வதற்கு ஏதுவாக...
அப்புறம் அந்த குழந்தைகளின் tantrum throwingக எப்படி அணுகணுமின்னு முறைப்படி பெற்றொர்களுக்கு தெரிஞ்சுருக்கிறது ரொம்ப அவசியமிங்க. சில பெற்றோர்கள் குழந்தைகளின் நெஞ்சில் வடுக்களை விட்டுச் செல்வதுமில்லையா? அது போலவே இங்கும் வடுக்களை ஏற்படுத்திக் கொடுக்க அனேக வாய்ப்புகள் இருக்கிறது.
வன்முறையின் வராலாற்றை ஆய்ந்து அதன் மூலம் தேடி குணப்படுத்த வேண்டும் என்ற ஆசைகள் சொல்லளவில் மிக இனிமையாக இருக்கும். முகத்திலடிக்கும் உண்மையான கூற்றாகிய இதை எதிர்த்து ஒருவர் பேசிட முடியாது. ஆனால் இப்படி பட்ட வாக்கியங்கள் எல்லா வன்முறை சூழல்களிலும் நடைமுறை சாத்தியம் இல்லை. இந்த வாக்கியம் வன்முறையின் இருபுறத்திலும் உள்ளவர்களின் உணர்வுகளை ஒரே தராசு கொண்டு அளக்கிறது. நீங்கள் வன்முறையில் பாதிக்கப்பட்ட எந்த நபரை கேட்டாலும் அவர்கள் அவரது இழப்பைதான் பெரிதாக கருதுவார்கள். அவர்களுக்கு அடுத்தவர் இழப்பு இவருக்கு கண்ணுக்கு தெரியாது. இது
மனித இயல்பு. நடைமுறை தீர்வே யோசிக்க வேண்டும். ஓருபுற வன்முறை வெற்றி பெருங்கால் அதே போன்ற பல வன்முறை தாக்குதலுக்கு ஆளாக நேரிட வேண்டி வருமோ எனற பயம் வன்முறையால் அடிவாங்கிய அடுத்த புறத்திற்கு வரும். ஆதலால் எந்த புறமும் வன்முறை தீர்வுக்கு உடன் படாது.
வன்முறை என்பது வசவு வார்த்தைகள், களவு, பொய்,பாலியல் வன்முறை, ஆயுதமேந்திய வன்முறை என பல பகுதிகளாக உள்ளது. எந்த வித வன்முறையும் தகுந்த வார்த்தை கொண்டு நியாப்படுத்தி விடலாம். பாலியல் வன்முறைக்கு உயிரியலையும், களவுக்கு ஏழ்மையையும் உதாரணமாய் கூறலாம். கூட்டாய் வாழும் சமூதாயத்தில் இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடும் போது அதனால் பாதிக்கப்படுபவர் பெரும்பான்மை மக்களே. குற்றங்களை மன்னித்தல் வன்முறையாளர்களால் கையாலாகத தனமாகவே பார்க்கப்படுகிறது என்பதே நடைமுறை. திரைப்படங்களில் மட்டுமே முழ நீள பேச்சின் இறுதியில் வில்லன்கள் திருந்துவர். நடைமுறையில் ஒருமுறை தவறு செய்தவர்கள் அதிலிருந்து தப்புகையில் அதே தவறை திரும்ப செயவர். இந்த முறை இன்னமும் நுணுக்கமாகவும்,மாட்டிக் கொள்ளாத வகையிலுமே அந்த தவறு இருக்கும்.
தினசரி வாழ்க்கையே கேள்வி குறியாகும் போது வன்முறைகளில் இருந்து தங்களுக்கு வேலி அமைத்து கொள்ளுதல் தேவையாய் இருக்கிறது. வேலி முள்ளால் கட்டுதல் பெரும்பாலோரின் தேவையாகிறது. வன்முறையில் ஈடுபடும் குழுக்கள் கூறும் வாக்கியமான 'நான் என்ன ஆயுதம் எடுப்பென்பதை என் எதிரியே முடிவு செய்கிறான்' என்பது பெரும்பான்மை குழுவுக்கும் பொருந்தும்.
மனிதர்கள் தனிதனியாய் வாழும் போது பொது விதிகளையோ, பொது புத்திகளையோ கொண்டு செல்ல வேண்டியதில்லை. கூட்டாய் வாழ்கையில் பொது விதிகள் தேவைப்படுகின்றன. கூட்டாய் வாழ்கையில் யார் யார் கூட்டாய் வாழ்வது என்ற குரல்கள் வருகின்றன. எல்லோரும் ஒரளவு ஒப்புக் கொண்டு கூட்டு வாழ்க்கை தொடங்கும் போது ஒரு பகுதி பிரிந்து செல்ல ஆசைப்படுகிறது. ஆசைப் படும் உரிமை உண்டு பிரித்து விடுவோம் என்பது சொல்வதற்கு எளிது. ஆனால் கூட்டு சமூதாயத்தில் ஒரு குழுவின் பிரிவு அந்த சமூதாயம் முழுவதும் எக்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பார்க்க வேண்டும். சிறு குழுவின் பிரிவு பெருங்குழுவின் பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவற்ற பல முக்கிய கூறுகளை பாதிக்கையில் பிரிவு நடைமுறை சாத்தியமில்லை. டோமினோ விளைவு வருமென தெரியுமிடத்தில் முதல் சீட்டை யாரும் உருவமுடியாது.
யார் சமூதாயத்தை கட்டினார். சமூதாயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என ஆதாயம் குறையும் ஒவ்வொருவரும் கொடி பிடிக்க ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு வீடும் தனி நாடாகும். அப்போதும் யாருக்கேதும் குறை இருந்து கொண்டேதான் இருக்கும்.
தீவிரவாதத்தை குழந்தையாகவும், வன்முறையை அடமாகவும் சமூகத்தை தாயாகவும் காட்டல் சரியான உவமையன்று. தீவிரவாதம் நோய், சமூகம் தாய், தண்டனைகள் மருந்து. எல்லா நேரங்களிலும் மருந்து இனிப்பதில்லை. அது மருந்தின் குறையல்ல. நோயின் குறை
தனிமனித தத்துவ தளத்தில் இருந்து நீங்களும் செல்வநாயகியும் எழுதி உள்ளீர்்கள். - முத்து -தமிழினி
அந்த தளம் இப்போது தேவையா என்பது என் கேள்வி.
பத்மா அர்விந்த் அவர்களே,
நீங்கள் கூறுவதுடன் என்னால் முழுமையாக ஒத்துப் போக முடிகிறது. ஆனால், இன்றைய அரசியல் உலகில் இது போன்ற Staled tactics தவிர்க்க முடியாததைப் போலல்லாவ நடந்தேறுகிறது நாடுகள் தோறும்.
தனி மனித தத்துவ ரீதியில் இந்த பிரட்சினைகளை அணுகப் போயி நாம் ஏதாவது சொல்லப் போனால் கொஞ்சம் அச்சம் மூட்டும் வகையிலே எதிர் வினை கருத்துகள் வந்து விழுகிறது. எதற்காக, மூன்றாமாவர் கூறிய கருத்துக்களைப் படித்து அதனை தனது சொந்த கருத்தாக இங்கு கொணர வேண்டுமென்பது எனக்கு விளங்கவில்லை.
//இதில் மாட்டி கொண்டு தவிப்பவர்கள் அடிநிலை தொண்டனும் ஊழியனும் மட்டுமே.//
இதற்கு என்னதான் வழி...?
வைசா, முதல் முறைய நம்ம பதிவு பக்கமா வந்திருக்கீங்க வாங்க. உங்களுக்கும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுப் போச்சா :-))
//இந்தத் தீவிரவாதத்தைத் தோற்றுவித்த காரணிகளுக்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தீர்வை முன்வைக்கும் போது தீவிரவாதம் இல்லாமல் போய்விடுகிறது: எ/கா ஐஆர்ஏ.//
அது என்னங்க ஐஆர்ஏ...?
//இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சாமாய் இருக்கிறது.
//
////மனித உயிர்களைக் கொன்றவன் மட்டுமே வன்முறையாளன் என்ற அளவுகோல். உயிரை மட்டும் விட்டுவிட்டு இன்னொரு மனிதனின் உணர்வுகளை, உரிமைகளைக் கொல்வதற்குப் பெயர் என்ன சொல்வது? //
//அதற்கானதை நாம் மறுத்ததே வன்முறை என நினைக்கும் குழந்தை//
வன்முறை என்ற சொல்லாடலின் ஆளும் வர்க்க தன்மை குறித்து, அதன் அர்த்தங்கள் வசதிக்கேற்ப்ப திரிக்கப்படுவது குறித்தும் காந்தி பற்றிய விவதாம் ஒன்றில் எனக்கும் மா. சிவகுமாருக்கும் ஒரு சின்ன போர் நடந்து கொண்டிருக்கிறது.
மேற் சொன்ன பகுதிகள் மா. சிவகுமாருக்கான பதில்காளாக உள்ளன.
இந்த இடத்தில் வன்முறை அதன் எதிர்மறை கூறிலிருந்து பார்ர்க்குமிடத்தில் காந்தியை வைத்து பார்த்தால் அவரும் வன்முறையாளர் என்பது தெரியவரும்.
இந்த பதிவை வெளிச்சத்திற்க்கு கொண்டு வந்தமைக்கு நன்றி,
அசுரன்
முத்துவே,
தாங்களோட ரொண்டு பதிவுகளையும் படிச்சிட்டேன். இந்த கை சும்மாவே இருக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு ஏதாவது சொறி பிடிச்சவன் கணக்கா எழுதி வைச்சுடச் சொல்லுது. பிறகு யாரவது, ஏதானாச்சும் கேட்டு வைச்சா, கக்கோ பிக்கேன்னு முழிச்சு வைக்க வேண்டியாத இருக்கு ;-)
இந்த ப்ளாக் பேசமா ஒரு டைரி குறிப்பாவே (இருந்திருக்கலாம்) தடைப்பட்டு போயிருக்கலாம்.
சரி, இம்புட்டு ஜனங்கள் இருக்கிற ஒரு நாட்டில எலோருமே ஒரே மாதிரி யோசிச்சு, ஒரே மாதிரி பேசினா எப்படிங்க இருக்கும். பல தரபட்ட மக்கள், பல நூற்றாண்டுகளா பக்கத்தில பக்கத்தில குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறப்ப, எல்லொரும் ஒண்ணா சொல்லி வைச்ச மாதிரி பேசினா, அவங்களுக்கு எங்கிருந்துங்க நம்பிக்கை வரும்.
நாம சொல்லி ஒண்ணும் நாட்டாமை தீர்ப்பை மாத்தி வழங்கிடப் போறதில்ல. இந்த பைசாவுக்கு லாயக்கில்லாத ப்ளாக் மூலமா சொல்லி. தெரியும். அதுக்காக வாய திறக்கப்பிடாது அப்படின்னா என்னங்கது, அநியாயமா இருக்கு...
Dharumi,
//அந்த தளம் இப்போது தேவையா என்பது என் கேள்வி. //
நான் சொல்ல வந்ததே வேற தளத்தில், இரும்பு அடிக்கிற இடத்தில கொசுவுக்கு என்ன வேலை அப்படிங்கிற மாதிரி இருக்கு என் நிலைப்பாடு...
சம்பந்தம் இல்லாத கேள்வி இங்கன ஒண்ணு கேட்டு வைக்கிறேன்... என் சின்ன வயசில ஒரு சாமீயார் சொன்னாறு... திருடனா இருந்தாலும், கொலைகாரனா இருந்தாலும் சரி எல்லோருமே அவனின் பிம்பங்கள் அன்றி வேற யாரும்மல்ல அப்படின்னு சொன்னதா, ஏதோ ஒரு புத்தகத்தில எழுதி இருக்கிறதா அவர் சொன்னாரு.
இதுதான் வாழ்கையே ஒரு முரண்பாடுற்றது அப்படிங்கிறதா??
நானும் ஒரு பழைய கடவுள் (புதிய கடவுள் - இதுவரைக்கும் அப்படி நினைத்துக் கொண்டுதானிருந்தேன், பெரிய பொறுப்பான வேலையாக இருப்பதால் அதிலிருந்து இறங்கி, சதாரண மனுச நிலைக்கு வந்துடறேன் :-). எட்ற அந்த த்ருப்பாச்சி அருவாள... ;-)))
P.S: என்னையும் உங்க ஆட்டையில சேர்த்துப்பீங்களா (anxiously waiting to be a partner ;-))
தெகா!இப்போதைக்கு உங்களுக்கு பின்னூட்டம் போடுவதாக இல்லை:)உங்கள் எழுத்து,அதற்கான பின்னூட்டங்கள்,செல்வநாயகியின் இடுகை என சிந்தனைகளை எங்கெங்கோ கொண்டு செல்கிறது.
ஒரு ரவுண்டு கட்டிட்டு மறுபடியும் வருகிறேன்.
போகிற போது அப்சல் பெயர் பழைய மறந்த நிகழ்வுகளை நினைவு படுத்தியது.
நோவம் சாம்ஸ்கி குழந்தைகளின் சத்தங்களை வைத்து linguistic தியரிகள் சொன்னது போல் செல்வநாயகி குழந்தைகளின் அடம் பிடிக்கிறது பற்றி சொன்னது யோசிக்க வைத்தது.அடத்திலயும் எல்லா குழந்தைகளும் ஒரே பாணியை பின்பற்றுவதில்லை என நினைக்கிறேன்.மண் சார்ந்த பழக்கமோ ஜீன் சார்ந்த குணமோ ஆங்கில,அரேபிய,எகிப்திய,பிலிப்பைன்ஸ்,இலங்கை,இந்திய குழந்தைகள் அடம் பிடிப்பதிலும் வித்தியாசம் காட்டுகின்றன.
மறுபடியும் வருகிறேன்.
இத்தனை ஆரோக்கியமான கருத்துக்களம் இப்போது பதிவுலகில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கின்றேன்.
Post a Comment