Tuesday, October 31, 2006

அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...!

எனக்கு எத பகிர்ந்துக்கிறது எதனை பகிர்ந்துக்ககூடாதுன்னு இன்னும் ஒரு தெளிவு பிறக்காத இந்த காலக் கட்டத்தில், தருமி இங்கே அமெரிக்கத் துளிகள் அப்படின்னு ஒரு பதிவு போட்டதினாலே இதனை பகிர்ந்து கொண்டேயாக வேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவு. உங்களின் பார்வைக்கு.

எனக்கும் அமெரிக்கா வந்த புதிதில் தருமி கவனித்த விசயங்கள் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டு கேள்விகணைகளாக துளைத்தெடுத்தது உண்டு, மறுப்பதற்கில்லை. ஏன், சக இந்தியர்களை பொது இடங்களில் பார்த்தால் ஒரு நட்புணர்வுடன் கூடிய புன்முறுவல் பெறுவது ஒரு பெரிய விசயமாக இருக்கிறது? ஆரம்ப காலங்களில், அப்படி எதிர்பார்த்து மூக்குடை பட்டதுமுண்டு, மறுப்பதற்கில்லை.

இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா? எனக்கு அப்படித்தான் தெரிகிறது. இருந்தாலும் எனக்கு கிடைத்த சில சொந்த அனுபவங்களை கொண்டு, இது போல் மற்றவர்களுக்கும் அப்படி நடந்திருந்தோ அல்லது காது வழி செய்தியாக கேட்டிருந்தோ சற்று முன்னெச்சரிகையாக அப்படி இருகிய முகம் கொண்டவர்களாக மாறிப் போய் நடந்து திரிகிறோமோ என்ற எண்ணத்தின் தாக்கம் இந்த பதிவுனை பதிவிட தூண்டியது.

கீழே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு பின்னூட்டம் 1997ல் நடந்தது. அதிலிருந்து எனக்கு கிடைத்த செய்தி, ஒரு மனிதருடைய அணுகு முறை அவரின் பிறப்பும், வளர்ப்பும், கல்வியும் மற்ற புற சூழ்நிலைகளை பொருத்தே அமைகிறது. இந்தியர்கள் பார்பதற்கு ஒரே மாதிரியான உருவமைப்பு வெளி நாட்டவர்களுக்கு காணக் கிடைத்தாலும், தனிப்பட்ட மனிதருக்கு அவரின் சொந்த மொழி, ஜாதி, படிப்பு, அந்தஸ்து மற்றும் இத்தியாதிகள் அவருடனேயே நாடுகள் தாண்டியும் ஒட்டிக் கொண்டு வருவது தவிர்க்க முடியாத ஒரு விசயமாக, அது ஒரு firmly embedded behaviorஆக பரிணமித்துக் கொண்டேதான் உள்ளது.

இப்பொழுது அந்த பழைய பின்னூட்டத்தைப் படியுங்கள்:

Thekkikattan said... Deiva,

ஓ, அந்த அனுபவம்பத்தி இங்கே கொஞ்சம் பகிர்ந்துக்க சொல்லிறீங்களா... செய்றேனே,

நான் அமெரிக்கா வந்த புதிதில் நான் இருந்த இடம் கொஞ்சம் அதீதமா வெள்ளைக்காரங்க வசிக்கும் பகுதி (long island, New York) , அதனால இந்தியர்களெ பார்க்கிறதே கொஞ்சம் கஷ்டமின்னு வச்சுக்கங்ளேன். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையிலெ ஒரு நாள் மிதிவண்டி போட்டு ஊர்வலம் வந்துகிட்டு இருக்கிறப்ப திடீர்னு ஒரு இந்தியா ஆள் ஒருத்தர் நம்ம சாயல்லே வீட்டுக்கு வெளியில ச்சேர் ஒண்ணு போட்டு உட்கார்ந்திருந்தார்.

எனக்கு அவரை பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி மிதிவண்டிய அப்படியே சாச்சி போட்டுட்டு ஓடிப் போயி அய்யா, நீங்க இந்தியாவன்னு மூச்சிறைக்க கேட்டேன். அவரும் நிதானம மேலே கீழே பார்த்துப்புட்டு ஊருக்குப் புச்சா அப்படின்னு ஆங்கிலத்தில கேட்டுப்புட்டு நான் ஒரு மலையாளி, நீங்க தமிழா, அப்படின்னா, தமிழ் பேசுற மக்கள் இருக்கிற பக்கம போயி ஆத்மாவை கண்டுப் பிடிச்சுங்கன்னு சொல்லிட்டு பேச்ச முடிச்சுக்கிட்டாரு.

எனக்கு என்னட இதுன்னு ஆகிப்போச்சு, எவ்ளோ பேசவேண்டியிருக்கிற இடத்தில ஒரு மொழி வந்து புகுந்து காலிபண்ணிப் புடிச்சே அப்படின்னு ஒரே ஏமாத்தமா போயிருச்சு, இவ்வளவுக்கும் அவரு வீட்டுக்கும் நான் இருக்கிற வீட்டுக்கும் நடந்து போற தொலைவுதான்னு வச்சுக்கங்க.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு உலக அறிவு கிட்ட ஆரம்பிச்சு எப்படி நாம் மனிதர்கள் நமக்குள்ளேயே நிறைய பிளவுகளை வச்சுக்கிட்டு வெளியில வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். வெளுத்தது எல்லாம் பால் இல்லை என்கிற குழந்தை தனமான எண்ணத்திலிருந்து அடெல்ட் உலகத்துக்கு வந்துட்டேன் (அதிக மனிதனாக இராதே... உன் ஃபீலிங்க்ஸ் எல்லாம் கடலுக்கு அப்பாலே வச்சுக்கோ).

அதற்கு பிறகும் சில டெஸ்ட்களும் செஞ்சுட்டுத்தான், குஜாராத்தி மக்களோட இன்னபிற குரூப் இப்பிடி...

இப்ப எனக்கு நானே ஒரு நாடு, அதிலெ நானே எவெரித்திங்...

பி.கு: இதில் மாணவ உலகத்திற்கும், சாப்ட் வேர் மக்களுக்கும் பொருந்தாது.

இது அடெல்ஸ் ஒன்லி. ;-))

Monday, May 22, 2006


மேலே பேசப் பட்ட மனிதர் முதல் தலைமுறை, தனது உறவுமுறை அடிப்படையில் அமெரிக்கா குடிபெயர்ந்தவராக இருக்கலாம். அதனால் அவருக்கு ஏற்கெனவே இந்தியாவில் நல்ல உலக நடப்புகள் தெரிந்த நட்பு வட்டங்கள், கல்வி சார்ந்த உலகம் சுற்றும் நண்பர்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். அச் சூழலில் அவருடன் நான் கூறிய அத்துனை firmly embedded behaviorகளும் பயணித்து, காது வழி செய்திகளை கொண்டு, பிற இந்தியர்களை சந்தித்தால் keep it short என்ற அறிவுரையின் படி நடந்து கொண்டிருக்கலாம்.

புதிதாக வந்தவர்களுக்கு கொஞ்சம் மன ஆருதலும், சில நேரங்களில் சொந்த வீட்டு நிர்வாகத்திற்குகென (பலசரக்கு சாமான்கள் வாங்கும் கடை, அல்லது அங்கு சென்று வருவதற்கென வாகன வசதி இப்படி) பல ரூபங்களில் இன்னல்கள் இருக்கலாம். அப்படி அவர்கள் நெருங்கி வரும் பட்சத்தில் எப்படி பதிலுரைப்பது என்ற எண்ணமே கூட இருக்கலாம்.

இதிலும் இங்கு நீண்ட காலங்கள் வசிப்பவருக்கு, அது போன்ற சில சூழ் நிலைகள் அமையப் பெற்று அதற்கென இறங்கி வேலையும் பார்த்த பட்சத்தில் என்ன இருதியில் கிடைக்கிறது. கசப்பான அனுபவங்களாக கூட இருந்திருக்கலாம்.

எனக்கு சில அப்படியும் இப்படியும் கிட்டியது. அவைகளிலிருந்து சில. எனக்கு Long Islandல் இருந்த காலத்தில் ஒரு குஜாரத்தி குடும்பம் அறிமுகமானது, அதுவும் பேருந்து பிரயாணத்தின் போதுதான். அந்த மனிதர் தனது 50களின் தொடக்கத்தில் தனது பொறியாளர் வேலையையும், தனது துணைவியாரின் மேல் நிலை ஆசிரியப் பணியையும் இந்தியாவில் துறந்து விட்டு, தனது ஒரே மகனுக்கென அமெரிக்கா குடிபெயர்ந்தவர்கள். மிக்க கஷ்டம் இங்கே.

ஆரம்பத்தில் தனது சகோதரியின் வீட்டில்தான் இருந்தார்கள், ஆனால் எவ்வளவு நாட்களுக்கு ஒரு குடும்பத்திற்கே கார் ஓட்டி, தட்டு முட்டு சாமான்கள் வாங்குவதற்கு எடுத்துக் கொண்டு திரிய முடியும் இன்னொரு host குடும்பத்திற்கு. வந்த மூன்று மாதங்களிலேயே வெளியே வரும் சூழ்நிலை.

அந்த நேரத்தில்தான் என்னுடைய அறிமுகம் கிடைத்தது. பிறகு கிட்டத்தட்ட அந்த அறிமுகம் இரண்டு வருடம் தொடர்ந்தது. அவருக்கு வேலை முடிந்து வரும் பொழுது காரில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் இறக்கி விடுவது, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குச் செல்லவும், பலசரக்கு சாமான்கள் வாங்கவும் என்று லிஸ்ட் கொஞ்சம் நீண்டுதான் இருந்தது.

இருப்பினும் நான் அங்கு இருந்த வரையிலும் பார்த்துக் கொண்டேன். பிறகு அங்கிருந்து இன்னொரு மாநிலத்திற்கு நாங்கள் வந்து விட்டதால், என்ன அவர்களுக்கு ஆனது என்று தெரியவில்லை. எனக்கு நடந்ததை மற்றவர்கள் அறிந்து கொள்ளும் பொழுது - இப்படியாக நடக்கலாம் என்ற அனுமானம் மற்றவர்களுக்கு.

பிறகு இப்பொழுது மிக அண்மையில் நடந்தது. இங்கு ஜியார்ஜியாவில், ஒரு நாள் என்றுமில்லாமல் பெட்ரோல் பங் ஒன்றில் ஒரு கோப்பை தேநீர் வாங்காலமென்று சென்ற பொழுது இந்திய இளைஞர் ஒருவர் காரில் அமர்ந்த படி செல் பேசியில் இருந்தார், அவரும் என்னை பார்த்திருந்ததால் கையசைத்துவிட்டு கடையினுள்ளே சென்று கொண்டிருந்தேன். ஆனால் அவர் பின்னால் வந்து தமிழிலேயே, நீங்கள் தமிழா என்று வினாவினார். நானும் ஆமாம் என்று ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடங்கள் தொலை பேசி எண்கள் பரிமாறிக்கொண்டு அன்று மாலை சந்திப்பதாக பிரிந்தோம்.

அவர் நான் இருக்கும் டவுனில் வேலை பார்பதற்காக வந்திருப்பதாகவும், தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். நானும் எனது வீட்டில் தற்சமயத்திற்கு எனது தம்பியுடன் மட்டுமே இருப்பதால், வெளியில் தங்குவதற்கு பதிலாக எனது வீட்டிலேயே கொடுக்கும் வாடகையை கொடுத்துவிட்டு தங்கலாமே என்று கூறினேன். ஆனால், பார்ட்டி உஷார் பார்ட்டி போல (என்ன உஷாரோ, நானும் திருந்தாத ஜன்மம் :-)

பின்னால், அவர் வேலையில் ஏற்பட்ட பெரும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு வேலையை வேண்டாமென்று எழுதி கொடுத்துவிட்டு (வேண்டாமய்யா என்று நாங்கள் சொல்லியும்), இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே அலுவலத்திற்கு செல்லும் பொழுது, போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கிருந்து எனக்கு தொலைபேசி வருகிறது. என்னை விட்டால் அவருக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை என்றும், எப்படியாவது தன்னை பெயிலில் வெளியே எடுக்குமாறும் கலக்கமுற்ற நிலையில் தொலை பேசினார்.

எனக்கு ஒரே படபடப்பு என்னாடா இது இப்படி ஆகிப் போகிவிட்டதே என்று. பிறகு இங்கிருக்கும் மக்களிடம் பேசி சிறிது அறிவு அது சார்ந்து பெற்றுக் கொண்டு பெயிலில் எடுத்தும் ஆகிவிட்டது. அவருக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் பட்சத்திலும் தனது ஜாதி பொருட்டு ரொம்பவே பெரிமிதம் உண்டு, ஒரு முறை என்னை அவரின் பெயருடன் ராஜாவை இணைத்து அழைக்கச் சொன்னதிற்கு நான் அழித்த மறுமொழியை 'காட்டான்' பாணியில், அவரின் வாழ்வில் மறக்க வாய்ப்பில்லை.

வீட்டிருக்கு சாப்பிட அழைத்தாலும் என்ன நினைப்பாரோ தெரியாது, ஏதோ நாம் அவரிடமிருந்து எதிர்பார்த்துதான் அழைக்கிறோமென்று ஒரு தடுமாறல் இருக்கும். பிறகு அந்த அரெஸ்ட்டுக்கு பிறகு அவரது பேச்சில் ஒரு மாற்றம் தெரிந்தது. எங்கள் வீட்டிலும் வந்து தங்கித்தான் இருக்க வேண்டுமென்ற சூழ்நிலை.

எனக்கு ஏதோச்சையாக சந்தித்த சந்திப்பில் கிடைத்த சில நல்ல நண்பர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் மதுரைக்காரர்கள் ரொம்ப பாசக் காரங்கப்பா. எல்லாத்தையும் அப்படியே, சிதம்பர ரகசியமாகவே இருந்தாலும் பகிர்ந்துப்பாங்க. வெள்ளாந்தியான மனசு.

சரி, எப்படியோ நான் கூறிய விசயங்களிலிருந்து சில உண்மைகள் கிடைத்திருக்கக் கூடுமென்று நினைக்கிறேன். அப்படி கிடைத்திருந்தால் கூட்டிக் கழிச்சு அவங்க அவங்களும் அவுக அவுகளுக்கு எது சரின்னு படுதோ அது படி வாழ்கையில சோதனைகள் மேற்கொண்டு அனுபவிச்சு பார்த்திட வேண்டியதுதான்.

கடன் அன்பை முறிக்கும் :-)

35 comments:

Thekkikattan|தெகா said...

Test comment...!!!

Anonymous said...

Hello TK,
I got here from Mr.Dharum's post on relevant subject.
/*
இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா?
*/

This is exactly the point I made it over there. As I mentioned in that comment, there are some cases show off this behviour based on their attitude/social status/caste - they are few, and obviously you know how to handle them :). Apart from that few, for the most it's really a pschycological and social skill issue than a habit of a community. Nice post.

Thx.
KVD.

இலவசக்கொத்தனார் said...

தெக்கி,

நீங்களும் சரி, தருமியும் சரி. ஒரு விஷயத்தைப் பார்க்கறது இல்லை. நம்ம ஊரில் ஒரு லிப்டில் (சரிங்க, மின்தூக்கி) ஏறினா ஒருத்தராவது அடுத்தவங்க முகத்தைப் பார்த்து ஒரு புன்னகையோ, ஒரு ஹலோவோ சொல்வோமா?

நான் வெளிநாடு செல்ல ஆரம்பித்த பிறகுதான் இப்படி சொல்ல வேண்டுமென்ற தெளிவே பிறந்தது. அதன்பின் அதனை நான் இந்தியாவில் செய்தால் யாருடா இது கேனையன் என்பது போன்ற பார்வைதான் பதிலாகக் கிடைத்து இருக்கிறது.

ஆகையால் நீங்கள் குறிப்பிடும் பாராமுகம் வெளிநாடுகளில் மட்டும் நடக்கும் ஒரு விஷயமில்லை. அது நம் வளர்ப்பின் வெளிப்பாடு. There seems to be an inherent mistrust about others in our minds.

நமக்கு இந்தியாவில் இந்த மாதிரி அந்நியர்களின் பரிச்சியம் தேவைப்படாததால் அது அவ்வளவு முக்கியமானதாகத் தெரிவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் நம் நண்பர்கள் இல்லாத கணங்களில் இது அத்தியாவசியாமாகத் தோன்றுகிறது. அது கிடைக்காத வருத்தமும் மேலோங்குகிறது.

இன்று நாம் வலைப்பதிவின் மூலம் அறிமுகமாகி, முகம் பார்க்காமல் தினமும் சாட்டிங்கும் போனும் செய்து நெருக்கமான நண்பர்களாக இருக்க முடிகிறது. அது போலத்தானே நேரில் பார்க்கும் நேரங்களிலும் இருக்க வேண்டும்?

துளசி கோபால் said...

தெ.கா,

கொத்ஸ் சொன்னதுபோல நானும் 'கேனச்சியாக' பார்க்கப்பட்டிருக்கிறேன்.
இப்ப எட்டு மாசம் முன்னாலெ ச்சென்னையில் இருந்தப்பக்கூட:-))))

மதுரைக்காரவுகளைப் பத்திய கணிப்பு ரொம்பச்சரி. ஆமாம், இது 'மதுரை மருமகளுக்கும்'
பொருந்தும்தானே? :-)))

வடுவூர் குமார் said...

இங்கும் அப்படித்தான்.
சமீபத்தில் கூட மூக்குடைப்பட்டேன்.
அதனாலேயே கொஞ்சம் பார்த்தும் பார்க்காமல் நடக்க கற்றுக்கொண்டு வருகிறேன்.

Anonymous said...

Hello TK,
I got here from Mr.Dharum's post on relevant subject.
/*
இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா?
*/

This is exactly the point I made it over there. As I mentioned in that comment, there are some cases show off this behviour based on their attitude/social status/caste - they are few, and obviously you know how to handle them :). Apart from that few, for the most it's really a pschycological and social skill issue than a habit of a community. Nice post.

Thx.
KVD.

Tuesday, October 31, 2006

Sivabalan said...

தெகா

நீங்க சொல்லவரும் கருத்து ஒரு வகையில் ஏற்புடையதே.

Unknown said...

நீங்க எல்லாம் என் கருத்தை ரொம்ப விரும்பிக் கேட்டதால பெரிய பின்னூட்டம்:-))))

தப்பா சரியான்னு சொல்லலே.

1. நான் பாத்த வரை இங்கயும் class difference இருக்கிறது. FOB (அதாங்க, Fresh Off Boat:-) யா, இல்ல பச்சை அட்டை, குடியுரிமை அது இதுன்னு ஒரு வித்தியாசம் பாக்கறாங்க. அதுக்குக் காரணம் (னு நான் நினக்கிறது) இங்கயே ரொம்ப நாள் தங்கினவங்க குடும்பங்களில் கலந்திருக்கும் அமெரிக்கக் கலாசாரத்தை நம் FOB-க்களால் தாங்க முடிவதில்லை. (23-வயது பெண்ணுடன் உள்ள ஒரு நம்மூர் பெண்மணி, விவாகரத்து ஆன நம்மூராரை - அவருக்கும் வளர்ந்த/வளர்கின்ற குழந்தைகள் உண்டு - மறுமணம் செய்தார் என்று அறிந்து கேள்வி கேட்டு நம்மாட்கள் நோக அடித்து விட்டார்கள்:-(.

2. AMWAY: என்னோட நல்லா தோழனாகச் சென்னையில் பழகினவன், இங்க வந்திட்டு, தொ(ல்)லைபேசியிலேயே அறுத்து(த் தான்) விட்டான், AMWAYயில் சேரச் சொல்லி. முன்பின் தெரியாதவர்கள், Mall-இல் பார்த்து விட்டு, "உங்களை எங்கியோ பாத்துருக்கேனே நம்மூருல! பிரமாதமான பிஸினஸ் வாய்ப்பு ஒண்ணு இருக்கு" என்று தொடங்கி MLM கடலை போடுபவர்கள் நிறைய.

3. வளர்ப்பு விதங்களால் நம்மில் பலருக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு. அவள்/ன் செய்கிற வேலையை விட நான் செய்வது உயர்வு; எனக்கு சம்பளம் நிறைய / என் வீடு பெரிசு - இந்த எண்ணம் இல்லாவிடில் நம்மை விட "உயர்ந்தோர்" (perception:-) கூட பேச நா வராது; அவுங்களை எப்பிடி கவுக்கலாம்/மட்டம் தட்டலாம்னு பாப்பாங்க..., ஒவ்வொரு சின்ன விஷயமும் போட்டியில் போய் முடியும்:-(((

4. புதிசாக வந்தவங்க, ரொம்ப நாள் இருக்கறவங்க தனக்கு உதவி செய்யணும் னு எதிர்பாத்தாலும், அந்த உதவிக்குத் தான் உகந்தவங்கன்னு ரொம்ப பந்தாவாக நினக்கிறது....

இந்த மூணாவது ரகத்திற்கு பயந்தே பலருடன் ரொம்ப பேசுவது இல்லை. ஒரு சிரிப்போடு விட்டுட்டுப் போயிடறது:-(

VSK said...

இ.கொ. சொன்னது போல, நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, இப்படிப் புலம்புவது சரியாக எனக்கு படவில்லை.

தர்மம் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும்!

[charity begins at home!]

தன் மேல் தவறில்லாதவ்ன் எவனோ, அவன் முதல் கல்லை எறியட்டும்!

Deiva said...

Thekki,

I am also from Madurai and try to be friendly with fellow indians irrespective of language/caste or any other issues. The problem here is that they are more calculative / manipulative as you said. Even if we call somebody for lunch or dinner, they think we are calling them since we are going to get some favours from them in return which is not of good taste. With many experiences now, we haven't changed yet.
Deiva.

கிவியன் said...

தெ.கா,

KVD சுட்டிக்காட்டியது போல் இது நிச்சயம் மனோதத்துவம் சார்ந்த நிகழ்வே. சொந்த நாட்டில் உங்களையறியாது எந்த ஒரு அந்நிய உணர்வுக்கும் அட்பட வாய்ப்பே இல்லாதால், எதிரே மாடு வந்தா என்ன மனுஷன் வந்தா என்னன்னு போய்டு இருப்போம். ஆனா இதே வெளிநாட்டுக்கு வந்த பின்னாடி நம்மையறிது ஒருவித அந்நிய உணர்வு நம்மை தொற்றிக்கொள்வதால் நம்ம ஊர் காரப்வுகள கண்டவுடன் ஒரு பரவசமேற்படும்.

//அதிலும் மதுரைக்காரர்கள் ரொம்ப பாசக் காரங்கப்பா.// உண்மையோ உண்மைங்க (மருதக்காரனகரதுனால சொல்லலப்பு)

பொன்ஸ்~~Poorna said...

தெகா, இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருக்கு..

நீங்க சொல்வது உண்மைதான்னு தோணுது.. ஆனா, அமெரிக்காவில் எனக்குப் பெரிய அளவில் கசப்பான அனுபவங்கள் இல்லை.. சும்மா எல்லாரையும் பார்த்து "hi, how are you?" ன்னு நெஞ்சார்ந்த ஈடுபாடே இல்லாம கேட்க நானும் கத்துகிட்டேன்னு நினைக்கிறேன்.. ;) அத்தோட, அதைத் தவிர எதையும் எதிர்பார்க்கவும் இல்லை..

சொல்லப் போனால், இப்போ திரும்பி இந்தியா வந்து, இங்கே கூட பார்க்கும் செக்யூரிட்டி, டிராபிக் சிக்னலில் நிற்கிறவங்க, எங்க ப்ளாட்டில் இருக்கும் அடுத்த வீட்டு கார் ஓட்டுனர்னு, பார்க்கிறவங்களுக்கெல்லாம் குட் மார்னிங் கூட சொல்லிகிட்டிருக்கேன், கேனச்சி மாதிரி ;)

இப்ப கூட கடைக்குப் போனால், போன் பேசினால், கடைசியா, "நன்றி"ன்னு சொல்லி முடிக்கும் போது நம்மை ஏன் வினோதமா பார்க்கிறாங்கன்னு யோசிச்சிகிட்டே அதைத் தொடர்ந்து செய்துகிட்டு தான் இருக்கேன்.. பார்ப்போம், எத்தனை நாள் இப்படிப் போகுதுன்னு..

Anonymous said...

sharing certain things
i am facing here in dubai
more than 60% indians are living here in that 75% malayalees
whenever u meet the malayalees
the first question is r u malayalee
then the treament will come what u face mr.t.k

jv

Floraipuyal said...

என் அனுபவம் சற்றே மாறுபட்டது. நான் முதலில் வந்தது Florida வில் உள்ள Tampa வில். அங்கே என்னுடன் அலுவகத்தில் மற்றும் தங்குமிடத்தில் என்று பெரும்பாலும் தமிழர்களே. பின்பு பல்வேறு இடங்களுக்குச் சென்ற போது தனியனானேன். மற்ற இடங்களில் என்னைப் பார்க்கும் இந்தியர்கள் உடனே இந்தியில் பேச முற்படுகின்றனர். நான் தீவிர இந்தி எதிர்ப்பாளன் (மரமண்டையில ஏறலனா இப்படித் தானே சொல்லணும்? ) என்பதால் நீங்கள் பேசும் மொழி எனக்குப் புரியவில்லை என்று கூறி நழுவி விடுவேன்.

அடுத்து தமிழர்களைச் சந்தி்க்கும் பொழுது ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனை - தமிழில் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர் என்பதே. இங்கே அடலையில் நிறைய தமிழர்கள் இருப்பினும் அவர்களிடம் பேசுகையில் நான் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்திலேயே பதிலளிக்கின்றனர். நானும் விடாமல் எனக்குத் தமிழ் மட்டும் தான் தெரியும் தமிழிலேயேப் பேசலாமே என்று சொல்லப் பெரும்பாலோர் சந்தித்ததில் மகிழ்ச்சி மீண்டும் பிறகு சந்திக்கலாம் என்று கூறி முடித்துக் கொள்வர். ஆயினும் சில நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன் (பெரியண்ணன் சந்திரசேகரன் உள்பட).

Amway யினால் நான் பாதிக்கப் படுவதில்லை. இரண்டொரு நிமிடங்களிலேயே எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை என்று கூறி விடுவேன். பிறகு அவர்கள் நம்மிடம் வரமாட்டார்கள்.

குமரன் (Kumaran) said...

தெகா. நல்ல அனுபவப் பகிர்தல். எனக்கு இன்னும் இந்த மாதிரியான கசப்பான அனுபவங்கள் கிடைக்கவில்லை. ஒரு வேளை உங்கள் அளவிற்கு இரக்க குணம் என்னிடம் இல்லையோ என்னவோ?

நான் இங்கே முதலில் வரும்போது டி.சி.எஸ். மூலமாக வந்ததால் இங்கே ஏற்கனவே இருந்த டி.சி.எஸ். நண்பர்கள் எனக்கு வேண்டியதை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். ஆறு மாதத்திற்குப் பின்னர் வந்தவர்களை நானும் அப்படி பார்த்துக் கொண்டேன் (உண்மையைச் சொன்னால் யார் புதுசா வந்திருக்கிறவர்கிட்ட தன்னோட அறிவைக் காட்டி அளப்பரை பண்றதுன்னு ஒரே போட்டி தான் போங்க. திருமணத்திற்குப் பின் என் மனைவியார் கூட சில முறை சொல்லியிருக்கிறார். அவரிடம் நான் அளப்பரை விடுகிறேன் என்று). :-)

தனியாக இங்கே வருபவர்களுக்குத் தகுந்த உதவிகள் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் இப்போது பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் நிறுவனங்கள் மூலமாக வருவதால் பெரும் பிரச்சனை இல்லை என்றே இவ்வளவு நாள் எண்ணியிருந்தேன். அந்த துணிபை (assumption) மாற்றிக் கொண்டு இனிமேல் புதிதாக வருபவர்களுக்கு உதவ முயல வேண்டும்.

தருமி said...

ஆளுக்கு ஒண்ணு சொல்றீங்க...எல்லாத்தையும் வாசிச்சிட்டு மொத்தமா (எதிர்)வினையாற்ற நினைக்கிறேன் - அதாவது, react பண்றேன்னு சொல்றேன்.

Anonymous said...

இங்கு என்னைப் பார்த்தாலும் கூட எல்லோரும் ஒதுங்கிச் செல்கின்றனரே! இது எதனால்?

Thekkikattan|தெகா said...

முதலில் பின்னுரைத்தவர்க்கு பதிலிரைப்பதற்கு முன்பு தாவிப்போய் எஸ்.கே அவர்களின் இடத்தில் குதித்தற்கு காரணம், எஸ்.கே ஏதோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகத்தினாலே.

/****இ.கொ. சொன்னது போல, நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, இப்படிப் புலம்புவது சரியாக எனக்கு படவில்லை.

தர்மம் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும்!

[charity begins at home!]

தன் மேல் தவறில்லாதவ்ன் எவனோ, அவன் முதல் கல்லை எறியட்டும்!****/

அய்யா, இங்கே அனுபவப் பகிர்தல் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதில் யார் நிரம்ப நல்லவன், யார் கெட்டவன் என்ற தீர்ப்பு ரீதியில் எழுதப் படவில்லை.

ஏன் அப்படி புலம்புவதாக எண்ணுகிறீர்கள். அவர் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கொண்டே வாழ்வு சார்ந்த கேள்விகளுக்கு விடையை பெறும் பட்சத்தில், இங்கு பகிர்ந்துகொள்ளப்படும் தனிமனித தேடல்கள் எப்படி புலம்பல்களாக அமையப் பெறுகிறது?

//தன் மேல் தவறில்லாதவ்ன் எவனோ, அவன் முதல் கல்லை எறியட்டும்.

அப்படியே இதனையும் எதனை மனதில் நிறுத்தி எழுதினீர்கள் என்று விளக்கினால் தெரிந்து கொள்வேன்.

Sundar Padmanaban said...

//அதிலும் மதுரைக்காரர்கள் ரொம்ப பாசக் காரங்கப்பா. //

இந்த ஒரு இதுலதான் நீங்க எங்கிட்டோ போயிட்டீங்கண்ணே!

நம்ம ஊரு காரவுஹன்னா சும்மாவா? அண்ணெந்தம்பிமாரி பளகிருவோம்ல?

கால்கரி சிவா said...

//அதிலும் மதுரைக்காரர்கள் ரொம்ப பாசக் காரங்கப்பா//

மதுரைன்னா சும்மாவா..ஹி..ஹி...

எனக்கு கசப்பான அனுபவம் எதுவுமில்லை. நானும் யாரைக் கண்டும் ஒடவில்லை. நான் யாரிடமும் புதுசு என்று காட்டிக் கொள்ளவில்லை. அதனால் என்னைக் கண்டு யாரும் ஓடவில்லை.
இணையத்தில் அபார்ட்மெண்ட்டை பார்த்து, இணையத்தில் மளிகை கடைகளை கண்டு பிடித்து, இணையத்தில் கார் வாடைகுக்கு எடுத்து எல்லாமே இணையமாய் வாழ்வு நடக்கிறது.

VSK said...

தப்பா எதுவும் சொல்ல வரலீங்க, திரு. தெ.கா.

இந்த மண்ணைப் பொறுத்தவரையில், இங்கு வரும் ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைப்பாடுகளைல் வருகின்றனர்.

அதனால், இதுதான் இப்படி என வரையறுத்துச் சொல்ல முடிவதில்லை.

நம்மைப் பொறுத்தவரைக்கும், அடுத்தவரிடம் இன்முகம் காட்டி, அன்பாகப் பேசி, முடிந்தால், உதவி தேவையென்றால் அவற்றைச் செய்து விட்டு பிறகு மற்றவர்கள் எப்படி என்பதைப் பற்றி பேசலாம் என்னும் கருத்தில்தான் அந்த "கல்லெறிதல்" விழுந்தது!

எனக்கு முந்தைய சில பின்னூட்டங்களில் சிலர் குறைபட்டிருந்தது "புலம்பலாக" எனக்குப் பட்டது. தவறெனில் மன்னிக்கவும்.

அவ்வளவுதாங்க!

குமரன் (Kumaran) said...

//இணையத்தில் அபார்ட்மெண்ட்டை பார்த்து, இணையத்தில் மளிகை கடைகளை கண்டு பிடித்து, இணையத்தில் கார் வாடைகுக்கு எடுத்து எல்லாமே இணையமாய் வாழ்வு நடக்கிறது.
//

இதை யாரும் கவிதை என்று சொல்லப்போவதில்லையா? இணையம் என்று நாலு அடிகளிலேயும் வந்திருக்கேப்பா...

:-)

Anonymous said...

I learnt this from my past 15 year experience in US.

Never work under Indian Managers (or for a consulting company owned by indians) because they treat you like a slaves or try to treat you like that.

Do not buy things from a Indian Sales man in stores or try to return when an Indian is in the customer service counter.

Thekkikattan|தெகா said...

KVD,

//As I mentioned in that comment, there are some cases show off this behviour based on their attitude/social status/caste - they are few, and obviously you know how to handle them :).//

நீங்கள் கூறுவதில் நிறைய உண்மைகள் இருக்கின்றன, குறிப்பிட்டுள்ள காரணிகளின் அடிப்படையில். ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் ஒரு சின்ன எதிர்பார்ப்புத்தான், ஏதோ ஒரு சூழ்நிலையில் கண்கள் திறக்கப்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்.

தாங்களின் பகிர்தலுக்கு நன்றியய்யா!

Thekkikattan|தெகா said...

இ.கொ,

ரொம்பத் தெளிவா சொல்லியிருக்கீங்க மறுக்கவில்லை.

There seems to be an inherent mistrust about others in our minds.//

பழக்கமின்மையும், நீங்க சொன்ன விசயமும் கலந்து பிறகு நான் சொன்ன எதுக்குட சாமீ நமக்கு வம்புன்னு ஒதுங்கி போறது. நம்ம குணமே பத்து நிமிடம் ஒருவரோட இருந்தா நமது வாழ்க்கை மொத்தமுமே ஒரு abstractஆ சொல்லி முடிச்சுர மாட்டோம்.

ஆமா, அப்படிச் சொல்லி mental disordersகளில் தப்பித்துக் கொள்வது மாதிரியா, இல்லை அதுவே ஒரு disorderதானா?? :-))

எல்லாம் தனித்தனி குடும்பமா கிடந்து கிடந்து மண்டை காஞ்சிப் போச்சுதுங்கோ...

Floraipuyal said...

//
//இணையத்தில் அபார்ட்மெண்ட்டை பார்த்து, இணையத்தில் மளிகை கடைகளை கண்டு பிடித்து, இணையத்தில் கார் வாடைகுக்கு எடுத்து எல்லாமே இணையமாய் வாழ்வு நடக்கிறது.
//

இதை யாரும் கவிதை என்று சொல்லப்போவதில்லையா? இணையம் என்று நாலு அடிகளிலேயும் வந்திருக்கேப்பா...

:-)
//
அதுக்கென்ன ஆக்கிட்டாப் போச்சு
இணையத்தில் தேடி அபார்ட்மென்ட் பிடித்துபின்
இணையத்தில் கண்டு மளிகையும் வாங்கி
இணையத்தில் வாடகைக்குக் காரெடுத்து எல்லாம்
இணையமாய் வாழ்வு நடத்து.

Thekkikattan|தெகா said...

கொத்ஸ் சொன்னதுபோல நானும் 'கேனச்சியாக' பார்க்கப்பட்டிருக்கிறேன்.
இப்ப எட்டு மாசம் முன்னாலெ ச்சென்னையில் இருந்தப்பக்கூட:-))))//

ஓகோ, இது எல்லாருக்கும் அப்ப நடக்குதுன்னு சொல்ல வாரீங்க (அதில என்னையும் சேர்த்துக்கோங்க).

ஒரு தடவை ஒரு ஊரு கிராமத்து பேருந்து நடத்துனருக்கிட்ட, முட்டி மோதி டிக்கெட் எடுத்துப்புபோட்டு தாங்ஸ்கோன்னு சொன்ன, யோவ் அடுத்த ஆள விடப்பா சீட்டு வாங்கன்னு.... :-)))). பிறகு ஒரு முறை சென்னையிலிருந்து திருச்சி பேருந்தில் வந்துட்டு, திருச்சியில் வந்து இறங்கும் போது - டிரைவர்கிட்ட சார் நல்லா ஓட்டீனிங்கா அப்படின்னு சொல்லிகிட்டு இருந்தா, யோவ் இறங்கைய்யா அடுத்த ஆளு இறங்கணுமில்ல... :-))))

பி.கு: இதெல்லாம் முன்னே பொழைக்க வந்த இடத்துக்கும் முன்னாடி சொல்லிகிட்டா திரிஞ்சோம்... இங்கன வந்துபோட்டு, பழக்கப் படுத்திபுட்டானுக...

மதுரைக்காரவுகளைப் பத்திய கணிப்பு ரொம்பச்சரி. ஆமாம், இது 'மதுரை மருமகளுக்கும்'
பொருந்தும்தானே? :-)))//

என்ன இப்பிடி கேட்டுபுட்டீக, மருதக்கார:-) ஆளுககிட்ட பழகிப்புட்டுத்தானே அப்புடி சொல்லுறேன்... எப்ப எங்க ஊரு, உங்க புகுந்த ஊரா ஆனுச்சோ அப்பவே நீங்களும் மருதக்காரவுகதான் :-)))

Anonymous said...

//நம்மில் பலருக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு. அவள்/ன் செய்கிற வேலையை விட நான் செய்வது உயர்வு; எனக்கு சம்பளம் நிறைய / என் வீடு பெரிசு - இந்த எண்ணம் இல்லாவிடில் நம்மை விட "உயர்ந்தோர்" (perception:-) கூட பேச நா வராது; அவுங்களை எப்பிடி கவுக்கலாம்/மட்டம் தட்டலாம்னு பாப்பாங்க..., ஒவ்வொரு சின்ன விஷயமும் போட்டியில் போய் முடியும்:-((( //

மிகச்சரியாக சொன்னீர்கள். நம்மூரில் மக்கள் தொகை அதிகமென்பதால் எதுக்கெடுத்தாலும் போட்டி - படிப்பு/பஸ்/சினிமா தியேட்டர்/ரேஷன் இத்யாதி. அதனால், முக்கித்தக்கி படித்து முடித்து வெளிநாடு வந்து ஜாலியாக இருக்கலாம் என்றெண்ணும்ப்போது இன்னொரு தேசியை பார்த்தவுடன் என்னடா இங்கயும் வந்துட்டீங்க என்ற ஒரு எண்ணம்.

என் அனுபவத்தில் பார்த்த சில போட்டி விஷயங்கள் சிரிப்பானவை - உன் வீட்டு கார்ப்பெட் என் வீட்டு கார்ப்பெட்டை விட அழுக்கு என்பதில் ஆரம்பித்து, ரெஸ்டாரண்டில் நான் போனால் மட்டும் சப்பாத்திக்கு அதிகம் நெய் விடுவார்கள் என்றெல்லா சல்லித்தனமான போட்டிகள்! அப்பா ஆளைவிடு - நீ நன்றாக் இருந்தால் மகிழ்ச்சி, என்னோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு வயிறெரியாதே என்று ஓடிவிட்டேன்! கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு மூலகாரணம் என்று புரியும்.

Thekkikattan|தெகா said...

என் அனுபவத்தில் பார்த்த சில போட்டி விஷயங்கள் சிரிப்பானவை - உன் வீட்டு கார்ப்பெட் என் வீட்டு கார்ப்பெட்டை விட அழுக்கு என்பதில் ஆரம்பித்து, ரெஸ்டாரண்டில் நான் போனால் மட்டும் சப்பாத்திக்கு அதிகம் நெய் விடுவார்கள் என்றெல்லா சல்லித்தனமான போட்டிகள்! அப்பா ஆளைவிடு -//

:-))))))) சரி கமெடிய்யா, நீர் சொன்னது, இதவிட கேவலமா மனுசன் நடந்துக்க முடியுமாங்கிற மாதிரி இருக்கு, நீங்க சொன்ன விசயம். ரொம்ப பயன்வுள்ள பகிர்வு.

ஏனுங்க சொல்ல வந்த விசயம் இந்த பதிவுக்கு ரொம்ப அவசியமான பகிர்வு, அப்படி இருக்கும் பொழுது பெயர் போட்டு எழுதலாமே...

எப்படியோ மிச்சமிருக்க காலத்தை அந்த மிச்சம் கரைச்சல் ஆசாமியோட இருந்து கழிக்கமா கழண்டுகிட்டது ஒரு அப்பாடா விசயம் :-))

Thekkikattan|தெகா said...

வடுவூரரே,

//அதனாலேயே கொஞ்சம் பார்த்தும் பார்க்காமல் நடக்க கற்றுக்கொண்டு வருகிறேன்.//

நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது. அதுவும், சிங்கையில் சொல்லவே வேண்டாம்.

Thekkikattan|தெகா said...

நீங்க சொல்லவரும் கருத்து ஒரு வகையில் ஏற்புடையதே.//

சிவா, ஒரு வரியில சொல்லிபுட்ட விட்டுவிடுவோமா ;-) எந்த கருத்தை ஏற்புடையதுன்னு சொல்ல வாரீங்க... இங்கு இரண்டு விதமான அனுபவம் முன்வைக்கப் பட்டுள்ளது :-)

மாட்டீனிங்களா... :-)))

Thekkikattan|தெகா said...

//kekkE PikkuNi said...

நீங்க எல்லாம் என் கருத்தை ரொம்ப விரும்பிக் கேட்டதால பெரிய பின்னூட்டம்:-))))//

ஆமா, ஆமா!! இப்ப நீங்க வந்து இம்பூட்டு விசயங்களை முன் வைக்கலேன்னா எப்படி நாம தருமியோட கேள்விக்கு பதில் கொடுக்க முடியும்? அவருக்கு பல பரிமாணங்களில் பதில் கொடுத்தாத்தான் மனிதர்கள்(குரங்குகள்;) பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் அப்படின்னு அவருக்கு தெரிஞ்ச கோட்பாட்டை திரும்ப பரிசோதிச்சுப் பார்க்க ஏதுவாக இருக்கும்.

எனவே நன்றிகள் நிரம்ப. உங்களின் பின்னூட்டம்தான் பல பரிமாணங்களில் உள்ளது எனவே நானும் சில வார்த்தைகள் அத்துடன் சேர்க்க பிரியப்படுகிறேன்.

#1 நீங்க சொன்ன FOB நிரம்பச் சரி, அவர்கள் கொடுக்கும் ஷாக்'தரும் கவனிப்புகளிலிருந்துதான் நாம் எவ்வளவு தொலைவு கடந்து இந்த தத்து எடுக்கப்பட்ட நிலத்தில் நம்மை நிலை நாட்டியுள்ளோம் என்பதனை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் கூறிய அந்த மறுமணம் அவருக்கு பெரிய ஆச்சர்யப் படக் கூடியாதகவும், அசிங்கமாகவும் கூட பட்டிருக்கலாம். ஆனால், தனியாக வாழ்வதில் யாருக்கென்ன லாபம் என்ற புரிதல் நாட்பட நாட்பட இங்கு வாழ்பவர்களுக்கு பிடிபட ஆரம்பித்து விடுகிறது - அத்துடன் தனிமனித சுதந்திரம், சந்தோஷம், வாய்ப்புகள் - எல்லாவற்றுக்கும் அவன் அவன் ஜோலிய அவன் அவன் பார்க்கிறதினால, ஒரு வாய்ப்பு வாழ்க்கையை ஒரு பரிசோனையா நினைச்சு வாழ்ந்து அனுபவிச்சுப் போறதிற்கு - இல்லையா?

# 2 AMWAY: அப்ப நாடு தழுவிய முறையில் இந்த கொடுமை நடந்துகிட்டு இருக்கு அப்படின்னு சொல்ல வாரீங்க. எங்க போனாலும் இந்த Smart assகளின்(??) தொந்திரவு தாங்க முடியல. என்னை வந்த புதிசுல ஒரு வயசான பார்ட்டி பிடிச்சு உள்ளே தூக்கி போட்டு, காசும் வாங்கிட்டு, பொருட்களும் எங்களுக்கு நாங்களே வாங்கிக்கிற மாதிரி கதை ஆகிப்போச்சு. இரண்டாவது மாசம் நாங்க வுடு ச்ச்சூட்னு துண்ட காணும் துணிய காணுமின்னு தலை தெரிக்க ஓடிட்டோம். இப்பெல்லாம், யாரவது பக்கத்தில வந்து உங்கள எங்கோ......... னு ஆரம்பிச்சலே தலிவா, அவசரமான வேலை ஒண்ணு இருக்கு got to go... :-))

என்னங்க பெரிசா போச்சு.... சரி இதொட தொடர்ச்சியா 3ம், 4லும் அடுத்ததில போட்டுடுறேன்...

Thekkikattan|தெகா said...

kekkE PikkuNi said... ....தொடர்ச்சி -2

3. வளர்ப்பு விதங்களால் நம்மில் பலருக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு. அவள்/ன் செய்கிற வேலையை விட நான் செய்வது உயர்வு; எனக்கு சம்பளம் நிறைய / என் வீடு பெரிசு - இந்த எண்ணம் இல்லாவிடில் நம்மை விட "உயர்ந்தோர்" (perception:-) கூட பேச நா வராது; அவுங்களை எப்பிடி கவுக்கலாம்/மட்டம் தட்டலாம்னு பாப்பாங்க..., ஒவ்வொரு சின்ன விஷயமும் போட்டியில் போய் முடியும்:-((( //

ரொம்ப நிசர்சனமான வார்த்தைகள். அப்படியே ஏத்துக்கொள்கிறேன்.

இதனை தொடர்ந்து எனக்கும் ஒரு தெளிவு பிறந்தது. ஊருக்காகவும், தனிப்பட்ட மனிதர்களின் எதிர்பார்ப்பிற்காகவும் வாழ்வதை தவிர்த்து எனக்கென்று, எனக்கு பிடித்ததை செய்து, சுதந்திரமாக வாழ வேண்டுமானால் அடுத்தவர்களுடன் ஒப்பீட்டு செய்து வாழ்வதை தவிர்ப்பது முக்கியம்.

அதனை தொடர்ந்து எனது நண்பர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. அதன் தாக்கத்தில் பிறந்ததுதான் இந்த பதிவு இங்கே... அதனையும் படித்துப் பாருங்கள்.

#4 அந்த உதவிக்குத் தான் உகந்தவங்கன்னு ரொம்ப பந்தாவாக நினக்கிறது....//

நீங்க சொன்னதற்கு உதாரணமாக என்னுடைய இந்த பதிவிலயே ஒரு நண்பரின் உண்மைச் சம்பவம் சொல்லியிருப்பேன். அவர் அப்படித்தான் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். அவரை ஆற்றில் இருந்து இழுத்து போட்டதின் விளைவு, இப்பொழுது கொஞ்ச நேரத்திற்கு முன்பு கூட ஒரு ஆச்சர்யமான தொலைபேசி வந்தது ஃஎப். பி. ஐ'டமிருந்து அவரின் இன்றைய இருப்மை பொருத்து விசாரித்து. போதுமடா சாமீ என்று வருகிறது.

//இந்த மூணாவது ரகத்திற்கு பயந்தே பலருடன் ரொம்ப பேசுவது இல்லை. ஒரு சிரிப்போடு விட்டுட்டுப் போயிடறது:-( //

உங்கள் நிலையில் வருவதற்கு ரொம்ப அருகில் வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அதற்காக எல்லோரும் அப்படி ஆகிவிட வேண்டும் என்று பொருள் கிடையாது...

Thekkikattan|தெகா said...

அந்த லிங்க் சரியா வேலை பார்க்கலைன்னு நினைக்கிறேன்... இதுதான் அந்த சுட்டி

http://orani-sittingby.blogspot.com/2006/04/unveiling-mask.html

Unknown said...

//.... பல பரிமாணங்களில் பதில் கொடுத்தாத்தான் மனிதர்கள்(குரங்குகள்;) பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் அப்படின்னு அவருக்கு தெரிஞ்ச கோட்பாட்டை திரும்ப பரிசோதிச்சுப் பார்க்க ஏதுவாக இருக்கும்...//
இதுல உள்குத்து ஏதாவது இருக்குமோ:-))) குரங்குன்னு என்னியயும் சேத்துச் சொல்றீங்களா?

//பதிவு இங்கே... அதனையும் படித்துப் பாருங்கள்....//
ஆமா, படிச்சுட்டுத் தான் போன பின்னூட்டமே போட்டேன். நான் இந்த ஊர்ல பெரிசா (FBI அளவுக்கு;-) வம்புல மாட்டிக்கல. ஆனா, ஒத்தாசை செய்யப் போயிட்டு, ஒழச்சுட்டு, உதையும் வாங்கிட்டு வந்திருக்கேன்:-( வாழ்க்கைப் பாடம் தான்.

Related Posts with Thumbnails