சமீபகாலமா பதிவுகள் எழுதவே தோணுவதில்லை. நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு எனது எண்ணவோட்டத்தை சுடச்சுட பதியும் பொழுது, அந்த ஒட்டு மொத்த நிகழ்வின் பரிமாணமோ வேறு மாதிரியாக நாட்பட நாட்பட வெளிச்சத்திற்கு வருகிறது. அதுவும் இந்தியாவில் நடைபெறும் அரசியல், கலவரங்கள் சார்ந்த நிகழ்வுகள்.
அதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் அரசு சட்டக் கல்லூரியில் (எல்லா அரசாங்க கல்லூரிகளிலுமே என்று கூட கூறி விட முடியும்) காலங் காலமாக நடைபெற்று வரும் இந்த ஜாதிச் சண்டையின் பின்னணியை ஆர அமர கவனிக்கும் பொழுது யாருக்கும் தெரிய வந்திருக்கும். இதனில் முக்கியமாக கேமராவும் கையுமாக, ஒருவர் தற்கொலைக்காக ஒரு உயரமான நீர்த் தொட்டியின் மீது ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதனை நேரடி ஒளிப்பரப்பு செய்வதாகட்டும், கல்லூரியில் ஒருவரை ஒருவர் மாட்டடி அடித்துக் கொண்டு அவர்களும் செத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வன்முறை சார்ந்து இம்யுனிடி கொடுப்பதில் காட்டும் அக்கறையாகட்டும் இந்த வியாபார மீடியாக்களின் பங்கு சகிக்க முடியா அளவிற்கு சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. அது நம் வளர்ச்சியில் ஒரு அபாயகரமான சந்திப்பில் நின்று தவறான பாதையில் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கான ஒரு வழியாக எனக்குப் படுகிறது.
________________________________
சரி இப்பொழுது பதிவின் கருவிற்குள் செல்வோம். அவந்திகா அண்மையில் நடந்தேறிய மற்றுமொரு ரியல் லைஃப் ஷோ இதுவும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பெற்றது "மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக்" காரணம் இந்திய அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், சரியான, நேர்மையான அரசியல்வாதிகளை இந்தியா பெற்று விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் குறையுமா என்றும் வினவி ஒரு தொடர் விளையாட்டை ஆட அழைத்திருக்கிறார்.
இந்த தீவிரவாத தாக்குதல் அல்லது உலகம் தழுவிய நவீன தீவிரவாத அணுகுமுறை சார்ந்து என் மனதில் எண்ண அலைகள் அவ்வப்பொழுது தீவிர'மாக எழுந்து வீழ்வதுண்டு. இருந்தாலும், இன்றைய பொருளாதார கட்டமைவில் நடைபெறும் சித்து விளையாட்டுக்களும், புவியிருப்பில் அமைந்திருக்கும் நாடுகளின் அரசியல் சார் நகர்வுகளையும் ஒட்டு மொத்தமாக கவனிக்கும் பொழுது, மனித பரிணாம நகர்வில் ஆண்ட்ரோஜனையும், அட்ரீனலின் ஓட்டத்தினையும் கொண்டே எடுக்கப்படும் சுயநலத்தனமான முடிவுகளின் வெளிப்பாடே இந்த நவீன தீவிரவாத விளையாட்டோ என்று என்னை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது.
காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு.
ஆனால் இன்றைய நிலவரப்படி அது போன்ற ஒரு பாதையில் எந்தவொரு மதத்தினையும் நாம் பரிணமிக்க போதுமான கால அவகாசம் கொடுப்பதாக தெரியவில்லை, அந்தந்த குழுமங்களும் தங்களின் "கடவுளர்களை" காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்காக போராடுவதாகப் படுகிறது. இச் சூழலில் வன்முறையும் ஒரு வாழ்வின் அங்கமாக தேவைப்படாத நாடுகளின் மீது கூட வைத்து திணிக்கப் படுகிறது.
இப்பொழுது இந்திய துணைக் கண்டச் சூழலுக்கு வருவோம். நம் புவியியல் இருப்பு உலக வரைபடத்தில் உற்று நோக்கினால் ஒரு சூடான பகுதியில் (geo-politicaly we are located in a complex place) இருப்பதனைக் பார்க்கலாம். இச் சூழலில் எந்தவொரு முடிவினையும் நம் நாடு எடுத்தோம் கவிழ்த்தோமென்று தான் தோன்றித் தனமாக எடுத்து அதனை நிறைவேற்றி பார்த்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.
உண்மை அப்படியாக இருக்க "கொம்பு சீவி" விடப்படுவதினால் கோபம் கொப்பளித்து 'பாடம் கற்பிக்கிறேன் பார்!' என்று மல்லுக்கு நின்றால் தொலைதூரப் பார்வையில் நாம் சந்திக்கவிருக்கும் இன்னல்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. எனவே நம்மூர் அரசியல்வாதிகள் அண்டைய நாடுகளுடன் பகை பாராட்டி அதன் மூலம் ஓட்டு அரசியல் வேண்டுமானால் செய்து கொள்ளலாமே தவிர இது நடைமுறைக்கு சாத்தியப் படாத ஒன்று!
இருக்கும் வழி ஒரே வழியே! பொருளாதார வகையில் தன்னிறைவு எட்டி, தன் நாட்டிற்கு போதுமான பாதுகாப்பை, எல்லை கடந்த தீவிரவாதத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்தற்குரிய வழிமுறைகளைக் கண்டு, நாட்டின் எல்லைக்குள் வாழும் எல்லாரும் நிறைவாக வாழும் ஒரு வழிவகை கண்டு, பிரிவினை வாத அரசியலை தவிர்த்து நாட்டினை எடுத்துச் செல்வதே வாழும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையளிக்கும் கட்டத்தில் இருப்பதாக ஏனைய தீவிரவாத விசயங்களில் கவனத்தை செலுத்தாமல், தான் பயனுறும் உடனடித் தேவைகளில் கவனம் செலுத்த முடியும்.
நாம் வெறுமனே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பொருளும் கிடையாது, என்னமோ அரசியல்வாதிகள் எங்கிருந்தோ குதித்து நம்மிடையே தோன்றிவிட்டதாக நினைத்துக் கொள்வதற்கு! அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே! அது அப்படியாகக் கிடையாது என்று கூறினால், கண்டிப்பாக நம்மால் அது போன்ற பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? மாற்றுத் தலைவர்களை நம் எண்ணங்களின் பிரதிபலிப்பானை தேடிக் கொண்டே இருப்போமே...! இத்தனை கோடி மக்களிருந்தும் நமக்கு கிடைப்பதெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே எனும் பொழுது என்ன தெரியவருகிறது அதிலிருந்து?
ஒண்ணு மட்டும் நிச்சயம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண வோட்டம் இந்த "சுயநலப்" போக்கு சார்ந்து மாற வேண்டும், அதற்குத் தேவை என்னன்ன அப்படின்னு ஒவ்வொரு தனிமனிதனும் தீவிரமாக யோசிக்க வேண்டும், அப்படி யோசித்து தன்னைத் தானே திருத்திக் கொண்டு பொது வாழ்க்கைக்கும், ஏனைய துறைகளுக்கும் சென்றால் மட்டுமே ஒரு விடிவுகாலம் நம் நாட்டிற்கு கிட்டும் என்பது எனது எண்ணம்.
நானும் இன்னோட பங்கிற்கு ஒரு நாலு பேரை முன்னுரைக்கிறேன்...
1) தருமி
2) சுரேகா
3) சுகா
4) சந்தோஷ்
மேலும் இவங்க இல்லாம யாரெல்லாம் தானும் தன்னோட பார்வையை முன் வைக்கணுமின்னு நினைக்கிறீங்களோ கண்டிப்பா செய்ங்க. நன்றி!
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (41)
- அனுபவம் (104)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (108)
- நினைவோடை (18)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (10)
- மருத்துவம் (2)
- முதுமை (12)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Sunday, December 07, 2008
இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்!
பி.கு: இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - வன்முறை வாழ்க்கைக்கு யார் பொறுப்பு...?
Posted by Thekkikattan|தெகா at 8:31 AM
Labels: சமூகம், தீவிரவாதம், தொடரழைப்பு, மதங்களும் நானும், வன்முறை
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
பொருளாதாரம்,புவியியல், அரசியல்.. இப்படி ஒரே வகுப்பறை சூழல்..பாடமெல்லாம் நாலு தடவை படிக்கனும்..
சீரியஸா திங்க் செய்து.. கடமுடா வார்த்தைகளோட எழுதி இருக்கீங்க.. உங்க பார்வை என்னன்னு அந்த கண்ணாடி போட்டு படிச்சிட்டு திரும்ப வரேன்.. :)
கலக்கிப்புட்டீரே...!
கொக்கியத்தொக்கிக்கிட்டு நானும் வரேன்..
:)
பொருளாதாரம்,புவியியல், அரசியல்.. இப்படி ஒரே வகுப்பறை சூழல்..பாடமெல்லாம் நாலு தடவை படிக்கனும்..
சீரியஸா திங்க் செய்து.. கடமுடா வார்த்தைகளோட எழுதி இருக்கீங்க.. உங்க பார்வை என்னன்னு அந்த கண்ணாடி போட்டு படிச்சிட்டு திரும்ப வரேன்.. :)//
முதல் பின்னூட்டமே இப்படி பயமூட்டுற மாதிரி போட்டா பின்னூட்டதை படிச்சுட்டு பதிவை படிக்கிற ஆட்கள் சத்தமில்லாம நழுவி போயிடுவாங்கன்னு தெரிஞ்சே உங்க பதிவுக்கு போட்டியா நான் இந்தப் பதிவ போட்டேன்னு திட்டமிட்டே செஞ்சிருக்கீங்கன்னு தெரியுது... :))
சரி, அது என்னா அந்த ஸ்பெஷல் கண்ணாடி...??
ஐய்யா எத்தன நாள் காத்துட்டு இருந்தீங்க....
geo-political, androgen , estorgen mmmm ...ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...
anyways...கொட்டிட்டீங்க...:-)
கொக்கியத்தொக்கிக்கிட்டு நானும் வரேன்..//
சட்டுபுட்டுன்னு வும்மோட பதிவ போடுவோய். நன்றி!
தீவிரவாதம் உலகளாவியதாக இருந்தாலும் இந்தியாவில் 'Home Grown' என்றே நினைக்கிறேன். என்னதான் பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்தாலும் உள்ளுரில் உதவி இல்லாமல் இப்படி மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவது என்பது முடியாது. நாம் கையாள வேண்டியது இந்த 'Home Grown' தீவிரவாதத்தை என்று நினைக்கிறேன்.
ஐய்யா எத்தன நாள் காத்துட்டு இருந்தீங்க....
geo-political, androgen , estorgen mmmm ...ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...//
அவந்தி என்னய tag பண்ற வரைக்கும் ;) முன்னமே என் கை துருதுருத்தாலும் இது கொஞ்சம் சிக்கலான விசயமென்பதால் அமைதியாக இருந்தேன்.
எதனையும் வலிந்து திணிப்பதில்லை அதுவே அப்படியாக நிகழ்ந்திருது :-))
//anyways...கொட்டிட்டீங்க...:-)//
இன்னும் என்னன்னவோ சொல்லலாம்தான் ஆனா பதிவு நீண்டு, அதனையும் நீங்க எல்லாம் படிச்சிட்டு திட்டிட்டு போவீங்களேன்னுதான் இந்த முறை வால நறுக்கிப்புட்டேன்.
//நாம் வெறுமனே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பொருளும் கிடையாது, என்னமோ அரசியல்வாதிகள் எங்கிருந்தோ குதித்து நம்மிடையே தோன்றிவிட்டதாக நினைத்துக் கொள்வதற்கு! அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே//
நல்ல கருத்துக்கள். இவ்வாறான சிந்தனைகள் விரிவு பெறும் போதே ஆரோக்கியமான ஒரு சமூக வளர்ச்சி, சமூக இணக்கப்பாடு என்பனவற்றை எதிர்பார்க்க முடியும்.
//காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு. //
தெகா,
இந்த வரிகள் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. முதலில் தற்போதைய மனிதனுக்கு மதங்கள் தேவையா? சரி, அப்படி தேவை என்று ஒருவன் முடிவு செய்துவிட்டால் மதங்கள் ஏன் தோன்றின? எதற்காக யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அதன் தற்போதைய பணி என்ன? தற்போதைய சூழலி அது எவ்வாறு தகவமைக்கப் பட வேண்டும். அதை செய்யும் உரிமை யாருக்கு உண்டு?இது போல் பல கேள்விகள்?
உண்மை என்னெவென்றால் இது போன்று மனிதனுக்கு பகுத்தறிய நேரமில்லை அல்லது மனமில்லை?
ஆனால் இந்த தீவிரவாதிகள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. அல்லது மதங்கள் எனும் நீர்நிலையின் அடியில் சென்று அதாவது எங்கே இருக்க வேண்டும் என்று மதங்கள் சொல்கிறதோ அங்கே நில்லாமல் அதையும் தாண்டி சென்ற புழுக்கள் தான் இந்த தீவிரவாதிகள்.
For Man sake, let us F--- this religionism. Let us be human...
Let us wish for PEACE
//தீவிரவாதம் உலகளாவியதாக இருந்தாலும் இந்தியாவில் 'Home Grown' என்றே நினைக்கிறேன். என்னதான் பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்தாலும் உள்ளுரில் உதவி இல்லாமல் இப்படி மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவது என்பது முடியாது. நாம் கையாள வேண்டியது இந்த 'Home Grown' தீவிரவாதத்தை என்று நினைக்கிறேன்.//
மிக்கச் சரியாக கணித்திருக்கிறீர்கள். ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு உள் விவகார பிரச்சினை தலையெடுக்கும் கனம்தோறும், பிரச்சினையை வீட்டிற்குள் வைத்துக் கொண்டு தூரத்தில் நிற்பவனை கை காட்டிவிட்டு நின்று கொள்வதினால், வீட்டுப் பிரச்சினை அடங்கிவிடுவதாக நினைத்துக் கொள்ள முடியாதுதான்.
ஆனால், பிரச்சினையே இல்லாத இடமென்று எங்குமே இல்லை என்ற நிலையில் தன் வாழும் சுழலிற்கேற்ப தாக்கம் கொடுக்கும் விசயங்களின் போக்கை தீவிரப் படுத்துவம், மிதப் படுத்தி வைத்துக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது என்பதனை உணர்ந்து, பிரச்சினையின் ஆழம் அறிந்து இயங்குவது உள்நாட்டுப் பிரச்சினையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவலாம்.
இங்கும் "ஓட்டு அரசியல்" அண்டைய நாடுகளுடன் விளையாடுவதனைப் போன்று உள் நாட்டிற்குள் மதங்களையும், இனங்களையும் கொண்டு விளையாண்டால் விளைவு பட்டுணர்ந்தால்தான் உண்டு.
நம் நாட்டில் மாநிலங்களுக்குள்ளயே இன வாதம் தலை தூக்குகிறதே... அதுவும் அண்மைய காலங்களில் சற்றே தூக்கலாக... ஏன் அப்படி? இதனை வளரும் விடும் பொருட்டு என்னாவாகும், உணர்ந்திருக்கிறார்களா... எல்லாவற்றையும் வைத்து அரசியல் பண்ணும் இந்த அரசியல்வாதிகள்??
//நல்ல கருத்துக்கள். இவ்வாறான சிந்தனைகள் விரிவு பெறும் போதே ஆரோக்கியமான ஒரு சமூக வளர்ச்சி, சமூக இணக்கப்பாடு என்பனவற்றை எதிர்பார்க்க முடியும்.//
பரவலாக மனித மனங்களில் இது போன்ற எண்ணங்கள் இல்லாமலில்லை, ஆனால் அது போன்ற எண்ணங்களை மழுங்கடிக்கும் விதமாக நடந்தேறும் "கொம்பு சீவி" பிரச்சாரங்களே உண்மையை மறைத்து தற்காலிகமாக பகைமை உணர்வை விதைத்து, குறுகிய பலன்களை எட்டுவதாக நினைத்து அதனை நடை முறைபடுத்தலின் எச்சமே இது போன்ற நிகழ்வுகளின் மூலமாக அறுவடை செய்ய விழைகிறது.
இத் தருணத்தில் நம்மால் முடிந்ததெல்லாம் அது போன்ற பிரச்சரங்கள் வலுவிழந்து உண்மை தலையெடுத்து உலகமைதிகிட்ட வேணும் என்பதாகவே இருக்கட்டும்.
human,
//உண்மை என்னெவென்றால் இது போன்று மனிதனுக்கு பகுத்தறிய நேரமில்லை அல்லது மனமில்லை? //
கேள்விகளை நேர்த்தியாக கேட்கத் தெரிந்தால் இது போன்ற செயல்களில் ஈடுபடே குறைந்து விடுமே, அப்படியாக கேட்டுக் கொள்வதாக தெரியவில்லை. கண் மூடித்தனமான நம்பிக்கை மட்டுமே அங்கே வேரூன்றி இருப்பதாக தெரிகிறது எல்லா மதவாதிகளிடமும்.
/அல்லது மதங்கள் எனும் நீர்நிலையின் அடியில் சென்று அதாவது எங்கே இருக்க வேண்டும் என்று மதங்கள் சொல்கிறதோ அங்கே நில்லாமல் அதையும் தாண்டி சென்ற புழுக்கள் தான் இந்த தீவிரவாதிகள்.//
அந்த அடி நிலைக்கு சென்று விட்டால் இரண்டு நிலைகளில் மனிதன் பிளவுறுகிறான் போலும் 1) எல்லாவற்றையும் தழுவி ஏற்றுப் போகும் தன்மையில் 2)இது போன்று மதவாதம் தலைக்கேறி இவர்கள் இல்லையென்றால் அவர்களின் கடவுள்கள் மரணிக்க நேருமென்ற நிலை.
ஏன் ஒன்று மட்டும் மதக் காவலர்களுக்கு புரியாதது மாதிரி இருக்கிறார்கள், கடவுளுக்கு இவர்களின் அரவணைப்பும், பாதுகாப்பும் தேவையா? கடவுள் இவர்களுக்குத் தேவையானதை கொடுக்கும் நிலையிலிருக்கும் பொழுது.
நல்லதொரு பின்னூட்டத்தை பகிர்ந்து கொண்டமைக்கு, நன்றி!
anna ,
eenga solli irukira niraya visayangal sari..
athuvum intha live news channel news a sollurathai vida backgorund music ellam potu makkaluku thevaiatra unaruvukalai thoondi viduraanga..
i came to know abt one hindi movie which speaks how live news channel helps terrorists..
appuram came to war from india.. india is now developing coutry .. if india starts war , india ll be the great loser in current crisis..
india has to spend more money for buying weapons and war.. Other side , economy ll fall..
the war probablay will turn as nuclear war..
so many things..
U spoke about some harmons.. that is one of the accepted facts..
//இதனில் முக்கியமாக கேமராவும் கையுமாக, ஒருவர் தற்கொலைக்காக ஒரு உயரமான நீர்த் தொட்டியின் மீது ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதனை நேரடி ஒளிப்பரப்பு செய்வதாகட்டும், கல்லூரியில் ஒருவரை ஒருவர் மாட்டடி அடித்துக் கொண்டு அவர்களும் செத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வன்முறை சார்ந்து இம்யுனிடி கொடுப்பதில் காட்டும் அக்கறையாகட்டும் இந்த வியாபார மீடியாக்களின் பங்கு சகிக்க முடியா அளவிற்கு சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. அது நம் வளர்ச்சியில் ஒரு அபாயகரமான சந்திப்பில் நின்று தவறான பாதையில் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கான ஒரு வழியாக எனக்குப் படுகிறது.//
இப்ப உங்க பின்னூட்ட இணைப்பின் உதவியால் இங்கே வந்து விட்டேன்.
இந்த மாதிரி காட்சிப் படுத்தல் ஒரு விதத்தில் ஊடக செய்தி அறிதல் என்ற மேம்போக்கான நிலைக்கும் அப்பால் கண்ணுக்குத் தெரியாமல் வெடிக்கும் வன்மம்,பார்த்துப் பார்த்து சோர்ந்து வாழ்வின் நடைமுறையின் ஒரு பகுதி(இதெல்லாம் சகஜமப்பா) என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்வை கவனிப்பதெல்லாம் அச்சத்திற்குரியவை.
வாசிப்பை தொடர்கிறேன்.
//அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே! அது அப்படியாகக் கிடையாது என்று கூறினால், கண்டிப்பாக நம்மால் அது போன்ற பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? மாற்றுத் தலைவர்களை நம் எண்ணங்களின் பிரதிபலிப்பானை தேடிக் கொண்டே இருப்போமே...!//
நேராப் பார்த்தா சரி மாதிரிதான் தோன்றுகிறது.ஆனால் பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க....லாஜிக் எங்கேயோ இடிக்கலை?தமிழகம் பொறுத்த வரையில் இந்த மடம் இல்லன்னா அந்த மடம் மாதிரி தோணல.இலங்கை போர் நிகழ்வுகளின் அனுபவங்கள் உலக,இந்திய,தமிழக அரசியல் பற்றிய பெரும் பாடத்தை எல்லோருக்கும் கற்றுக் கொடுத்திருக்கும்.சரியான மாற்றுத் தலமைக்கு நாம் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருப்போமோ.இருப்பதெல்லாம் வேர்விட்டு ஆழமாய்ப் போன விழுதுகள்.
//காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு.//
நல்ல சிந்தனை.
//தீவிரவாதம் உலகளாவியதாக இருந்தாலும் இந்தியாவில் 'Home Grown' என்றே நினைக்கிறேன். என்னதான் பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்தாலும் உள்ளுரில் உதவி இல்லாமல் இப்படி மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவது என்பது முடியாது. நாம் கையாள வேண்டியது இந்த 'Home Grown' தீவிரவாதத்தை என்று நினைக்கிறேன்.//
சின்ன அம்மணி பின்னூட்டத்தில் உள்ள Home Grown என்பதற்கும் முன்னாடி அதென்ன பயிற்சி மட்டும் பாகிஸ்தானில் எனபதில் இருக்கிறது தீவிரவாதத்தின் ஆணி வேர்.
ரா. ந,
ஆமாம், ஊடகங்கள் கொஞ்சம் நஞ்சம் மக்களிடத்தில் இருக்கிற அந்த ஈரத்தையும் உலர்த்திக் கொண்டிருக்கிறது போலும், மனித அவலங்களின் பொருட்டு எழும் பச்சாதாபங்களை மரக்கடிக்கும் பொருட்டு.
//.லாஜிக் எங்கேயோ இடிக்கலை?தமிழகம் பொறுத்த வரையில் இந்த மடம் இல்லன்னா அந்த மடம் மாதிரி தோணல.//
அப்படியா? வேற வழி ஏதாவது இருக்கிறதா? சீசனுக்கு தகுந்த மாதிரி இவருக்கு அவர் பரவாயில்லை, அவருக்கு இவர் பரவாயில்லை என்கிற ரீதியில்தானே சாய்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
//சரியான மாற்றுத் தலமைக்கு நாம் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருப்போமோ.இருப்பதெல்லாம் வேர்விட்டு ஆழமாய்ப் போன விழுதுகள்//
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் அது இல்லை. நம் தலைமுறையில் அது சாத்தியமில்லை என்றே தோன்றச் செய்கிறது.
//இலங்கை போர் நிகழ்வுகளின் அனுபவங்கள் உலக,இந்திய,தமிழக அரசியல் பற்றிய பெரும் பாடத்தை எல்லோருக்கும் கற்றுக் கொடுத்திருக்கும்.//
நன்றாக உலக அரசியல் மேடையையும் அதன் சார்புத் தன்மைகளையும் புரிந்து கொள்ள முடிந்த ஒரு நிகழ்வு அல்லவா அது.
நன்றி, தங்களின் விரிவான பின்னூட்டங்களுக்கு.
Post a Comment