கிசுகிசுவிற்கு செவியைத் தீட்டியதால்
வீட்டிற்குள் ஓலமிடும்
கூக்குரல்களை நிசப்தமாக்கினோம்
மனதில் ஊனமுடன்!
அறுவடையாக
வாழ்க்கையின் ஓட்டத்தில்
துணைகளுடன்
துருவத்திற் கொருவராய் நாம்!
இருந்தும் பட்டுத் தெளியா சமூதாயம்
நாளை யாரென்றெண்ணி இன்று
தொலைக்கும்...!!
6 comments:
கிசுகிசுக்கள் கேட்பதால் நம்மை நோக்கி இடப்படும் சப்தம் செவியில் விழாது.
ஆஹா அழகா சொல்லியிருக்கீங்க.
வதந்திகளுக்கும் கிசுகிசுவுக்கும் நம்ம மக்கள் அப்படி ஒரு உயர்ந்த இடம் கொடுத்திருக்காங்க.. அதுமட்டும் இருந்துச்சுன்னா சாப்பாடு தூக்கம் மறந்து சந்தோஷமா இருப்பாங்க..ஒரு வேளை அதும் ஒரு வித போதையோ... தன் கஷ்டநஷ்டத்தை மறக்க வழியோ. :)
வாங்க ஜமால், முதல் முறை நம்ம பக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி!
--------------------
முத்து,
//ஒரு வேளை அதும் ஒரு வித போதையோ... தன் கஷ்டநஷ்டத்தை மறக்க வழியோ. :)//
மிகச் சரியா கண்ணாடிக்கு பின்புறமும் என்ன இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க. அதே தான், எங்கே வெற்றிடமாக உள்ளே உணரப்படுகிறதோ அங்கேதானே எதனைக் கொண்டோ நிரப்பற் கோரி இது போல வெளிமுகமாக தேடப் படுகிறது. :-)
//வீட்டிற்குள் ஓலமிடும்
கூக்குரல்களை நிசப்தமாக்கினோம்//
தீர்க்கமா சொல்லியிருக்கீங்க!!
படம் ஒரு படி மேல படம் அதை பிரதிபலிச்சிருக்கு!
சூப்பர்ண்ணா!!
mmmm arumai :)
Post a Comment