நேற்று பல குப்பை அரசியல் செய்திகளுக்கிடையே மிகச் சாதாரணமாக ஒற்றை வரியில் பறவைப் பார்வையில் ஒரு வீட்டைக் காமித்து, பொருளாதார நஷ்டத்தால் மனமுடைந்த ஒருவர் தன்னையும் சுட்டுக் கொண்டு தன் வீட்டிலிருந்த மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டு விட்டு மரணித்துக் கொண்டார்னு ட்டிவியில வாசிச்சாங்க. நானும் அட பன்னாடைப் பசங்களா, சாவுறதுன்னா எவன் சாவணுமின்னு நினைக்கிறானோ அவன் மட்டும் போய்ச் சேரவேண்டியதுதானே அதுக்கு எதுக்கு மற்றவர்களையும் துணைக்கு அழைக்கணுமின்னு நினைச்சுட்டு விட்டுட்டேன்.
இன்னிக்கு காலையில நம்ம துணைவியார் அப்பாம்மாவை அழைத்துருப்பார் போல. நம்மூர் உலகத் தரம் வாய்ந்த பத்திரிக்கைகளான தினகரன், தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்கள் அமெரிக்காவில் யாராவது ஒருவருக்கு காலையில் "பாத்ரூம்" வரவில்லையென்றால் கூட உடனே பிக்கினியோட ஒரு வெள்ளையம்மாவை போட்டு செய்தியாக்கிவிடும் அமெரிக்கா பாசம் நம்மூடது, இல்லையா.
சில நேரத்தில உண்மையாகவே எனக்கே சில நேரத்தில அங்கிருந்துதான் அமெரிக்காவில நடக்கிற செய்திகளே இங்கே தெரியவரும், சன் ட்டிவி மூலமாவும், செய்தித்தாள் படிச்சிட்டு தொலைபேசி மூலமா மக்கள்கிட்டயிருந்தும் :)). அந்தளவிற்கு அமெரிக்கா மேல நம்மாளுங்களுக்கு பாசமோ பாசம்.
இந் நிலையில் நம்ம துணைவியார் அவரோட அப்பாகிட்ட பேசப் போக அவரும் அந்த உலகத் தரமான செய்திகளை, அதாவது இந்த நேரத்தில் அமெரிக்காவில் வெறும் 2500 ரூபாய்க்கு எப்படி வீடு கிடைக்கிறது இந்த பொருளாதாரச் சரிவால்ங்கிற செய்தியிலருந்து, அதோட நான் மேலே சொன்ன அந்த சுட்டுக்கிட்டு செத்த செய்தியையும் ஊதியிருப்பாங்க போல படிச்சிட்டு அதனை குறிப்பிட்டு என்னம்மா இப்படியெல்லாம் நாடு போயிட்டு இருக்கிறதா இங்க பேசிக்கிறாங்க, நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க ஒண்ணும் பிரச்சினையில்லையேன்னு அப்பாவியா கேட்டுருக்கார்.
நம்மூர் செய்தித்தாள்கள் எல்லாம் என்னமோ அமெரிக்காவின் வீழ்ச்சி பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடுற நாள நினைச்சு ஒண்ணும் தெரியாத புதுப்பட்டி ஆளுங்களுக்கு கதையை ஜோடிச்சுக் கொண்டு போயி சேர்த்துக்கிட்டு இருக்கிற கணக்க அள்ளிவிட்டுக்கிட்டு இருக்காங்க.உண்மை நிலவரம் தெரியாம.
நாந்தான் கேக்கிறேன், இங்க புத்தியில்லாம உலகத்தில உற்பத்தி பண்ணிக் கொடுக்கிற ஒரு சிறு ஊக்குல இருந்து குழந்தைக விளையாடுற விளையாட்டுச் சாமான்கள் வரைக்கும் எதப் பத்தியும் யோசிக்காம வாங்கி எல்லோருக்கும் வேலை கொடுத்து பணத்தை சுழற்சியில விட்டுக்கிட்டு இருக்கிற ஒரு நாடு போண்டியா போன அதனையே நம்பி இருக்கிற மற்ற நாடுகள் என்னய்யா பண்ணும்?
நம்மூர்ல இப்ப கொடி கட்டி பறந்துட்டு இருக்கிற இந்த மென் பொருள் உற்பத்தி, அதனைத் தொடர்ந்த வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி, அண்ணிய செலவாணிப் பணம் இதெல்லாம் நின்னு போன, எப்படிய்யா மூணு வருஷத்திற்கு முன்ன வரை 1500 ரூவா கொடுத்து வாடகைக்கு இருந்த ஒரு அறையை இன்னிக்கு 15,000 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு இருக்க முன் வருகிற "வருண்" பையில பணமிருக்கும்? இதெல்லாம் கணக்குப் போட்டு பார்த்தா இப்படியெல்லாம் சம்பளம் போட்டுக் கொடுக்கிற முதலாளி நாசமா போகணுமின்னு நினைச்சு நம்மூரு உலகத் தரம் வாய்ந்த நாளிதழ்கள் எழுதுமா, அது போன்ற கதையை, சொல்லுங்க.
ஆஹா, பேச வந்த விசயத்தை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே. சரி, எழுதினதை அழிச்சுடவா முடியும், படிச்சு வைங்க.
இப்ப பேச வந்த டாபிக். இப்ப என்னாச்சுன்னா, இந்த பங்கு சந்தை, பங்கு சந்தைன்னு நவீன சூதாட்டக் க்ளப் ஒண்ணு நாட்டுக்கு நாடு வைச்சிருக்காங்க, அத வைச்சி சில பெருசுங்க பெரிய அளவில சூதாட ஆரம்பிச்சாய்ங்க உலகம் தழுவிய முறையில (இதுதான்னு இல்ல உணவுப் பண்டத்தில இருந்து, தங்கம், பெட்ரோல் etc., etc.,ன்னு...), இப்படி பெரும் பணக்காரய்ங்களா சேர்ந்து ஆடினா போர் அடிக்குதுன்னும், கைப் பத்தலைன்னுட்டு நடுத்தர தட்டுல வாயிக்கும் கைக்கும் வாழ்ந்திட்டு இருந்தவய்ங்களையும் கடன உடன வாங்கி சூதாட்டத்தில ருசி காமிச்சு இறக்கி விட்டாய்ங்க. விளையாட்டும் நல்ல ஜரூராத்தான் போயிட்டு இருந்துச்சு.
ஒன்னுக்கு பக்கத்தில போட்டுக்கிற பூஜ்யம் சேரச் சேர தயவு தாட்சன்யம் பார்க்காம ஆட்டம் விறுவிறுப்பு ஏறுனுச்சு தினமும், சுத்திவர தலையை திருப்பிக் கூட பார்க்க நேரமில்லாம எப்படிடா இன்னமும் ரெண்டு பூஜ்யத்தை இப்ப இருக்கிற எண்களோட சேர்க்கிறதுங்கிற ஒரே குறிக்கோளோட. இப்படியாக போனது திடீர்னு ஒரு நாள் "வீங்கிறதெல்லாம் வெடிக்குமின்னு" சொல்ற மாதிரி, வெடிக்கிற அந்த நாளும் வந்தவுடன் எல்லா பயலும் தன்னையே கிள்ளிப் பார்த்துக்கிட்டு இப்பத்தான் ஒவ்வொருத்தனா முழிக்க ஆரம்பிச்சிருக்கான் அந்தப் சூதாட்ட போதையில இருந்து.
இப்ப இந்தக் கட்டுரையில் முன்னமே சொன்ன சுட்டுக்கிட்டு செத்த ஒரு சாதாரண நடுத்தர தட்டு மகன் ஒருத்தர் எம்.பி. ஏ டிகிரியோட ஆரம்பிச்சிருக்கார், வேலைக்கு போகாமயே வீட்டில இருந்தபடியே அந்த பூஜ்யங்களை சேர்க்க ஆசைப்பட்டிருக்கார். அதில 5.40 கோடி சம்பாரிக்கிற அளவிற்கு சூதாட்டமும் கை கொடுத்துருக்கு. ஆனா, ஈசியா பணம் பார்த்தவனுக்கும், கொட்டு வாங்காம தேனீ எடுத்து நக்கிப் பார்த்தவனுக்கும் ஆசை விடுமா, விடலை போல, அதான் ஆட்டத்தில எடுத்தப் பணத்தையெல்லாம் திரும்பவும் அந்த கூடையிலயே போட்டு வைச்சி அழகு பார்த்திருக்கார். இந்த உடையற நாள் கிட்டவந்துட்டு இருக்கிறது தெரியாமலயே.
இப்ப உடைஞ்சுடுச்சு ஆனா இத எப்படி கையாள்கிறதுன்னு தெரியல இந்தாளுக்கு. ஏன்னா, பெரிய ஆசை சிறு சறுக்கல்கள் வழியில வருங்கிறதைக் கூட பார்க்கவிடாம கண்ணை கட்டி வைச்சிருச்சு. சரி, அடி வாரதுக்கு முன்னாடி கொஞ்சூண்டு அதில இருந்து எடுத்து குடும்ப நலனுக்காக அப்பால போட்டு வைச்சிருக்கலாமில்லையா? அப்படி போட்டு வைச்சிருந்தா இவரோட தொழில் அணுகுமுறையில நாளக்கி ஏதாவது இது மாதிரி நடந்தா கூட குடும்பமாவது தப்பி பிழைச்சுக் கெடக்குங்கிற நம்பிக்கையில இவரு பொறுப்போட அவருக்கு வேணுங்கிறதை பண்ணிட்டுப் போகலாம். அது தன்னைத் தானே சுட்டுக்கிட்டு செத்துப் போறதா இருந்தாலும் கூட. ஆனா, இந்தாளு இவரு குடும்பத்தையுமில்ல கூட அழைச்சுட்டு போயிருக்கார்.
நம்ம எல்லோருக்கும் ஒரு பிரச்சினை இருக்கு - அது அடுத்தவங்களுக்காக நம்ம வாழ்க்கையை வாழ்றது. எப்படின்னா, நம்மோட படிச்ச மோகன் இந்த மாதிரி வேலையில, இது மாதிரியான சம்பளத்தோட, இப்பேர்பட்ட இடத்தில பெண் எடுத்து வாழ்க்கை நடத்திக்கிட்டு, இது மாதிரியான கார் ஓட்டுறான்னா அதுனாலே நமக்கு என்னாகப் போகுதுன்னு நினைக்காம அவனை நினைச்சு பொறாமை பட்டுக்கிட்டு ராத் தூக்கமில்லாம, அவன மாதிரி நானும் இருக்கேன்னு உன்னோட சூழ்நிலை தெரியாம உன் விரலுக்கும் மீறி ஆசைப் பட்டு அந்த வழியில இறங்கி நடந்தா யாரு வாழ்க்கையை இங்கே முழுசா வாழ்றா?
அதுனாலே இந்த peer pressureயை வைச்சு வாழ்க்கையை அமைச்சுக்க விரும்பினாலே குழப்பம்தான் வாழ்கிற முக்காலே மூணு நாழியும். டார்க்கெட் வைச்சி வாழ்க்கையை வாழ்றது ஒரு உந்துதலை கொடுக்குதுங்கிறதுக்காக சிறு, சிறு அதுவும் நம்மோட லிமிட், டி-லிமிட்குள்ளர வைச்சி வாழ்றதில தப்பில்லை, ஆனா அடுத்தவங்க வாழ்க்கையை தன்னோட வாழ்க்கையின் அளவுகோள வைச்சி பின்னாடி சிக்கலில் மாட்டித் தவிச்சிட்டு குடும்பத்தையும் பிடிச்சு உள்ளே தள்ளிவிடுறதில என்ன நியாயமிருக்கு சொல்லுங்க.
இந்த படத்தை அப்படியே தேசங்களை வைச்சி பொருத்திப் பார்த்துக்கோங்க. இப்ப அமெரிக்கா அப்படி செலவு செய்யும் சித்தாந்தத்தை கொண்டு வாழுது, இது போன்ற வாழ்க்கைத் தன்மையோடு வாழுது அது போலவே நாமும் அமைச்சிக்கணுமின்னுட்டு அகலக் கால் வைக்கிறதில என்ன இருக்கு. இப்பொழுது இருக்கும் பொருளாதார கட்டமைப்பே உலகம் தழுவிதான் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது, அப்பொழுது ஒரு தனி தேசத்தின் பேராசை, எப்படி ஒரு தனிமனிதனின் பேராசை இருக்கிறதோ அது போலவே பல காரணிகள் கட்டமைக்கப் பெற்று அதுவே ஒரு இடத்தில் வீங்கி வெடிக்கும் பொழுது அதனையே பாதையாக தேர்வு செய்த ஏனைய குடும்பங்களும், தேசங்களும் வெடித்தலுக்கு உட்புக நேரிடுகிறது.
சோ, வளர்ச்சி என்பது சமச்சீராக பல காலங்களில் பல அடிகளை தாங்கி எஞ்சி நிற்பதாக இருக்க வேண்டும். If the profit is made overnight then it should be prone to lose it in overnight too...
கடைசியா நம்ம ஆட்டுப் பால் ரொம்ப பிடிக்கிற காந்தி தாத்தா சொன்னது, எப்பொழுதும் பொருந்தும் பாருங்க...
The world holds enough to satisfy everyone's need; but not everyone's greed.
P.S: இந்தப் பதிவிற்கு தொடர்பாக இத் துறையில் உள்ள பதிவர் பாரதி அவர்கள் பங்கு வணிகத்தின் ஆழ, அகலங்களை இத் தலைப்பில் அலசியிருக்கார் படிச்சுடுங்க அதனையும். நன்றி பாரதி.
பங்கு சந்தைகளால் பாதிக்கப்படும் மனது
27 comments:
பதிவு கொஞ்சம் பெருசா போச்சு. பொறுத்தருள்க!
நானும் நேத்துச் செய்தியை டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் படிச்சேன் & பார்த்தேன்.
விரலுக்குத் தக்க வீக்கமுன்னு சிம்பிளாச் சொல்லிவச்சுட்டுப் போனதை யாரு கவனிக்கிறாங்க? எப்பவும் அடுத்தவன் பொறாமைப்படும் வாழ்க்கை வாழணுமுன்னா இப்படித்தான். அதுவும் அந்த 'அடுத்தவன்'இன்னொரு இந்தியனா இருக்கவும் வேணும்.
அமெரிக்கச் செய்திமட்டுமில்லைங்க, நியூஸிச் செய்தியும் இப்படித்தான் நம்மூருலே ஒளிபரப்பாகுது. இங்கே (அடிக்கடி )வரும் நிலநடுக்கம் செய்தி பார்த்துட்டுக் கவலைப்படும் உறவினர்கள் 'நாம் தொலைபேசும்போது' மறக்காமக் கவலையோடு என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க.
வாழ்க்கை வெறுக்க வேறுகாரணம் இனியும் வேணுமா? :-))))
தெகா சார்,
:(( 5 கொலை செய்து பின் தற்கொலையும் செய்து கொண்டவர் எப்படி சாதாரண மனிதராக இருக்க முடியும்? மனநோயாளியாகத்தான் இருக்க வேண்டும். இறந்து போனவரை குற்றம் சொல்லக் கூடாது என்றாலும், இவர் செய்தது படுபாதகச் செயலே. இதற்கு பங்கு சந்தையை காரணம் காட்ட முடியாது.
அதே பங்கு சந்தைதான் அவருக்கு ஏகப்பட்ட கோடிகளை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. பேப்பரிலாவது :((
//"வீங்கிறதெல்லாம் வெடிக்குமின்னு" //
சரியான அவதனிப்பு, முழுக்கட்டுரைச் செய்தியையும் பட்டுன்னு ஒரே சொல்லில் போட்டு உடைச்சி இருக்கிங்க.
பேராசை பெருநஷ்டம்னு சும்மாவா சொல்லி வச்சாங்க.
:)
அபாரம்..
நான் இதைப்பத்தி ஒரு பதிவிடணும்னு நினைச்சேன்.
இனி அதற்கு வேலையில்லை!
நீங்கள் அந்தத்தளத்திலேருந்தே எழுதியிருக்கீங்க!
மிகச்சரி!
நம்ம அளவுக்கு நிம்மதியா எவன் இருக்கான்னு, நினைக்க ஆரம்பிச்சாலே போதும்
அடுத்தவங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் நோக்கம் இல்லாம போயிடும்.
என்ன பண்றது இதைத்தானே பல்லாயிரம் ஆண்டுகளா பண்ணிக்கிட்டிருக்கோம்.
திடீர்ன்னு விடச்சொன்னா!? யோசிப்போமுல்ல ! :)
//அதில 530 கோடி சம்பாரிக்கிற அளவிற்கு சூதாட்டமும் கை கொடுத்துருக்கு. //
Dinamalar says...
He made 5.40 crores.
எனக்கு இந்த பாடு தான் நினைவு வருது
வரவு 8டன செலவு 10தன அதிகம் 2டன
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா
வாங்க துள்சிங்க,
//விரலுக்குத் தக்க வீக்கமுன்னு சிம்பிளாச் சொல்லிவச்சுட்டுப் போனதை யாரு கவனிக்கிறாங்க? எப்பவும் அடுத்தவன் பொறாமைப்படும் வாழ்க்கை வாழணுமுன்னா இப்படித்தான். அதுவும் அந்த 'அடுத்தவன்'இன்னொரு இந்தியனா இருக்கவும் வேணும்.//
:)) நீங்க வராமே இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் நிறைவடையறதே இல்லை. நீங்க சொன்னீங்க பத்திங்களா "அதுவும் அந்த அடுத்தவன் இன்னொரு இந்தியன்" எவ்வளவு உண்மைங்கிறீங்க. பார்த்துப் பார்த்து சலிச்சுப் போச்சு. இதுனாலே எவ்வளவு தேவையில்லாத செலவுகள், தன் சக்திக்கு கட்டுப்படாதுன்னு தெரிஞ்சே மாசம் 700$ தவணை கட்டுர மாதிரி கார் வாங்கிக்கிறதென்னா, கப்பல் மாதிரீ தேவையில்லாத சைஸ்ல வீடென்ன பின்னாலே வீட்டுக்குள்ளர அடிச்சிக்கிட்டு சாவதென்ன :-)).
இதெல்லாம் எதுக்குங்க?
இப்படி அகலக்கால் வைத்த பல பேர் இங்கே வட இந்தியாவில் குழந்தைகள் மனைவியை கொன்றுவிட்டு தானும் இறந்ததாக அடிக்கடி செய்தி வருகிறது..எப்படித்தான் இப்படி முடிவெடுக்கமுடியுமோ..அத்தனைக்கு மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..அதான் கொடுமை.
வாங்க Sridhar Narayanan,
//:(( 5 கொலை செய்து பின் தற்கொலையும் செய்து கொண்டவர் எப்படி சாதாரண மனிதராக இருக்க முடியும்? மனநோயாளியாகத்தான் இருக்க வேண்டும். இறந்து போனவரை குற்றம் சொல்லக் கூடாது என்றாலும், இவர் செய்தது படுபாதகச் செயலே. இதற்கு பங்கு சந்தையை காரணம் காட்ட முடியாது.//
மனநோயாளி எப்படி உருவாகுறான்? ஒரு பழக்கத்தை நாள்பட்டு திரும்பத் திரும்ப பண்ணப் போக அதுவே அவன் நினைவிலும், கனவிலும் வாழ்க்கையாகவே மாறப் போக கொஞ்சம் கிரக்காம அதிலயே சிக்குண்டு போயிவிடுகிறான். இது ஒரு மாதிரியான மனநோயாகவே எடுத்துக்கொள்வோம்.
இருந்தாலும், இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நீங்க அந்த ""பேப்பரிலாவது"" graphsல் ஏறு முகத்தைப் பார்த்து எக்சைட் ஆகி வீட்டிலுள்ளவர்களையும் அந்த தொற்று வியாதியில் இணைத்து விடுவதுதான் கொடுமை, வீட்டிலுள்ளவர்களும் இது போன்றவர்களை கரெக்ட் செய்ய முடியாமல் போவதிற்கு காரணமோ? அப்போ இந்த பேராசை பெருமளவிற்கு மிக ஈசியாக எல்லோரிடமும் ஒட்டிக் கொள்கிறது, அதாவது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் அதன் இறுதி விகார முகம் தெரியாமல், அப்படியாகத்தான் என்னால் யோசிக்க முடிகிறது.
சோ, பேராசை = மன வியாதி :-))?!
கோவியாரே,
//சரியான அவதனிப்பு, முழுக்கட்டுரைச் செய்தியையும் பட்டுன்னு ஒரே சொல்லில் போட்டு உடைச்சி இருக்கிங்க.
பேராசை பெருநஷ்டம்னு சும்மாவா சொல்லி வச்சாங்க.
:)//
இதெல்லாம் நாம கண்டுபிடிக்கிறோம். இயற்பியலின் இயல்புங்க அது ;).
அது போலவே "மேலே போறதெல்லாம் கீழே இறங்கித்தான் ஆகணும்."
ஆடத் தெரியாதன்னு ஆரம்பிக்கும் ஒரு தமிழ் பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது.
சும்மா போற போக்குல சேத்தை அள்ளித் தெளிக்கிற மாதிரி பங்குச்சந்தை சூதாட்டம் அது இதுன்னு பேசறது மடத்தனம்.
தற்கொலை செய்துக்கிறவங்களைக் கண்டா எனக்கு வருத்தம் வரது இல்லை. இந்தக் கிறுக்கன் நல்லாப் படிக்கிற பசங்களையும் கொன்னுட்டுப் போனதுதான் அநியாயம்.
எவ்வளவு கடன் இருந்தாலும் ஒரு நோட்டீஸ் குடுத்துட்டு திரும்பி ஆரம்பிக்க முடியும். அதுக்குத் தேவை மனவலிமை. அதை விட்டுட்டு இப்படி எல்லாம் செஞ்சா அதை தப்புன்னு சொல்லாம வேற எதோ காரணம் சொல்லறது எல்லாம் டூ மச்.
ஒரு தனிமனித பேராசைக்காக ஒட்டு மொத்த பங்குவணிகத்தையும் தவறாகச் சித்தரிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.
நல்லா சொல்லியிருக்கீங்க. எனக்கு என்ன அதிர்ச்சிண்ணா உலக பொருளாதாரங்கள்/ரம் எப்படி இந்த பங்குச் சந்தை என்கிற ஒரு ஸ்திரமற்ற அடிப்படையின்மேல் கட்டி எழுப்பப்பட்டிருக்குதுண்ணுதான்.
வதந்திகள் வந்தாலே மார்கெட் படுக்குதுண்ணா எப்படி இதை நம்புறது? ஒண்ணுமே புரியல.. என் கம்பெனி ஸ்டாக் டிஸ்கவுண்ட்ல தர்றானேன்னு கொஞ்சம் வாங்கி வச்சேன் இப்ப வருமோ எப்ப வருமோண்ணு ஆயிடுச்சு.
//ஒரு தனிமனித பேராசைக்காக ஒட்டு மொத்த பங்குவணிகத்தையும் தவறாகச் சித்தரிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.//
கொத்தனார் .. எனக்கு பிடிபடல பங்குசந்தையை பொருத்த மட்டில் வெறும் ஆசை என்பதற்கும் பேராசை என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்குதா? அங்கே விளையாடுறதுல மெஜாரிட்டி பேராசைக் காரங்க இல்லியா?
விரிவா எழுதுங்க.
கொத்ஸ்,
//ஒரு தனிமனித பேராசைக்காக ஒட்டு மொத்த பங்குவணிகத்தையும் தவறாகச் சித்தரிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.//
இது ஒரு தனிப்பட்ட மனுசனின் பேராசையா ஆரம்பிச்சுத்தான் பெட்ரோலியத்திலிருந்து, தங்கம் வரை சென்று இன்னக்கி சாப்பிடுற பருப்பு மற்றும் இதர தானியம் வரை இந்தச் சூதாட்டம் கலை கட்ட ஆரம்பிச்சிருக்கு.
கண்டிங்க நல்லா கண்டிங்க :-))).
கொத்ஸ், ஒரு சிரிய ரிக்வெஸ்ட் முடிஞ்சா ஒரு தனிப் பதிவா போட்டோ இல்ல இங்கயோ கொஞ்சம் விளக்குங்கா நீங்க சொல்ல வந்ததை, எலோரும் புரிஞ்சுக்க ஏதுவா இருக்கும்.
சுரேகா,
//அபாரம்..
நான் இதைப்பத்தி ஒரு பதிவிடணும்னு நினைச்சேன்.
இனி அதற்கு வேலையில்லை!!
நீங்கள் அந்தத்தளத்திலேருந்தே எழுதியிருக்கீங்க!
மிகச்சரி!//
நீயே இப்படிச் சொல்றேன்னா அதில கொஞ்சம் உண்மையிருக்குமின்னு நானும் எடுத்துக்கிறேன். ஏன்னா, பகுதி நேர வேலையா மற்றவங்களுக்காகவும் இதன் பொருட்டு கன்சல்ட் செய்து கொடுப்பதால்.
//நம்ம அளவுக்கு நிம்மதியா எவன் இருக்கான்னு, நினைக்க ஆரம்பிச்சாலே போதும்
அடுத்தவங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் நோக்கம் இல்லாம போயிடும்.
என்ன பண்றது இதைத்தானே பல்லாயிரம் ஆண்டுகளா பண்ணிக்கிட்டிருக்கோம்.
திடீர்ன்னு விடச்சொன்னா!? யோசிப்போமுல்ல ! :)//
இதேதான் நான் சொல்ல வந்த விசயமும், ஒரு சாமான்யன் பார்வையிலிருந்து, எப்படியாக இந்த பங்கு சந்தை வணிகத்தின் ஏற்றமும் அதனைத் தொடர்ந்த பொருட்களின் விலையின் வீழ்ச்சியும்,எழுச்சியும் அதன் பொருட்டு எனக்கும் மற்றவர்களூக்கும் எழும் கேள்விகள், சங்கடங்கள் இப்படி.
நிதானமா தனக்கு என்ன நியாயமாக ஒட்ட வேண்டுமென்ற ப்ரக்ஞையுணர்வுடன் வாழ்வதே எது போன்ற பெரிய ஏற்ற தாழ்விலும் நிலைத்து நிற்க வைக்கும் உத்தி என்பதே இந்த கட்டுரையின் மூலம் சொல்ல வந்த கருத்து.
நன்றி!
Dinamalar says...
He made 5.40 crores.//
Anony,
Those are just numbers it does not have any values in this game ;), just kidding.
I didnt look close enough i guess, anyway corrected the factual error. Thanks for pointing it out.
written by Mrithula said...
எனக்கு இந்த பாடு தான் நினைவு வருது
வரவு 8டன செலவு 10தன அதிகம் 2டன
கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா//
சில பாடல்கள் மற்றும் எழுத்துக்கள் காலத்திற்கும் நிகழும் நிசர்சனங்களை தோலுரித்துக் காட்டிவிடும். அதுதான் வாழ்வியலின் கோட்பாடுகள் போல அமைந்துவிடுகிறது, இல்லையா?
வருகைக்கு நன்றி!
//நல்லா சொல்லியிருக்கீங்க. எனக்கு என்ன அதிர்ச்சிண்ணா உலக பொருளாதாரங்கள்/ரம் எப்படி இந்த பங்குச் சந்தை என்கிற ஒரு ஸ்திரமற்ற அடிப்படையின்மேல் கட்டி எழுப்பப்பட்டிருக்குதுண்ணுதான்.//
அதுதான் scary, Cyril. இது ஒரு baloon effectயை கொடுக்குது பாருங்க ஒட்டு மொத்த உலகத்திற்குமே, என்னமோ இயற்கை பேரழிவு மாதிரி. நமக்கு இங்க காலையிலன்னா, கிழக்கு நாடுகளில் விடிஞ்சு என்னாகுமோன்னு எழுந்துருக்கிறாங்க பங்கு சந்தை புள்ளிகளில். அதத்தான் நீங்களும் "அதிர்ச்சின்னு சொல்றீங்க"" போல.
//வதந்திகள் வந்தாலே மார்கெட் படுக்குதுண்ணா எப்படி இதை நம்புறது? ஒண்ணுமே புரியல.. என் கம்பெனி ஸ்டாக் டிஸ்கவுண்ட்ல தர்றானேன்னு கொஞ்சம் வாங்கி வச்சேன் இப்ப வருமோ எப்ப வருமோண்ணு ஆயிடுச்சு.//
எனக்கு இது மாதிரி ஒரு அனுபவமுண்டு, 2002ல்னு நினைக்கிறேன் மெரில் லிஞ்ச்ல கொஞ்சம் போட்டுறுந்தோம், மாச மாசம் வருகிற ஸ்டேட்மெண்ட்ல graphs பார்க்க கொஞ்ச நாளு நல்லாத்தான் இருந்துச்சு, ஒரு இரண்டு வருடம் கழித்து graph கீழேழழ போக என்னாடா இது முதலுக்கே மோசம் போயிடும் போலவேன்னு, எடுக்கச் சொல்லி சொல்லியாச்சு.
இந்த லட்சனத்தில குவார்டர்லி போர்ட்ஃபோலியோ வேற அத வைச்சி பார்க்கிற ஏஜெண்டுக்கு கமிஷன் 250$. நான் என்னோடத உருவுர சமயத்தில போட்டதிலருந்து ஒரு 25% கூட கைக்கு வரலை. அப்பயோட முடிஞ்சுச்சு அந்த விளையாட்டு. இது நமக்கு ஒத்து வராது, இப்ப உள்ள நிலையில வாயிக்கும் கைக்குமே பர்த்தலை இதில எங்கே நாம அதெல்லாம் யோசிக்கன்னு இருக்கு... ;).
இருந்தாலும் ராப்பகலா இதே நினைவா இதே பொழப்பா இவ்வளவு அழுத்தத்தோட விளையாடுற விளையாட்ட எப்படி சூதாட்டத்தோட தொடர்பு படுத்தி பார்க்காம இருக்க முடியும்?
இருக்கு லாங்டேர்ம்ல போட்டுட்டு அக்கடான்னு மறந்துட்டு இருக்கிறது ஆனா ரிடர்ன் ரொம்ப எதிர்பார்க்காம நியாயமா இருக்கிற மனசை வைச்சிக்கிற மாதிரி இருந்தா.
நன்றி சிறில்!
//
The world holds enough to satisfy everyone's need; but not everyone's greed.
//
சும்மா 'நச்'னு இருக்கு.
//
சுரேகா.. said...
அபாரம்..
நான் இதைப்பத்தி ஒரு பதிவிடணும்னு நினைச்சேன்.
இனி அதற்கு வேலையில்லை!
நீங்கள் அந்தத்தளத்திலேருந்தே எழுதியிருக்கீங்க!
மிகச்சரி!
நம்ம அளவுக்கு நிம்மதியா எவன் இருக்கான்னு, நினைக்க ஆரம்பிச்சாலே போதும்
அடுத்தவங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் நோக்கம் இல்லாம போயிடும்.
என்ன பண்றது இதைத்தானே பல்லாயிரம் ஆண்டுகளா பண்ணிக்கிட்டிருக்கோம்.
திடீர்ன்னு விடச்சொன்னா!? யோசிப்போமுல்ல ! :)
//
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் ......
//இப்படி அகலக்கால் வைத்த பல பேர் இங்கே வட இந்தியாவில் குழந்தைகள் மனைவியை கொன்றுவிட்டு தானும் இறந்ததாக அடிக்கடி செய்தி வருகிறது..எப்படித்தான் இப்படி முடிவெடுக்கமுடியுமோ..அத்தனைக்கு மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..அதான் கொடுமை.//
உள்ளதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டா இப்படியும் ஆகுமோ. "மற்றவங்க என்ன நினைப்பாங்க" அப்படிங்கிறதாலேதான் இந்த முடிவே, கட்டுரைக்குள் கொஞ்சனுண்டு வரும் பாருங்க அந்த peer pressure சார்ந்து, பொறவு இவங்களே நினைச்சிக்கிறது என்னமோ உலகமே இவங்களை மட்டும்தான் பூதக் கண்ணாடி வைச்சி பார்த்துட்டு இருக்கிறதா... என்னமோ போங்க.
ம. சிவா,
//சும்மா 'நச்'னு இருக்கு.//
அந்த "நச்"க்கு உரித்தானவர் நம்ம தாத்தா அவர்கிட்ட கொடுத்துடுறேன்.
அதுக்கு கீழே உள்ள பாட்டு யாருக்கு சுரேகாவிற்காக, பார்ப்போம் தல வந்து என்ன சொல்லுதுன்னு, ஏன் ரொம்ப பொலம்புரானோ :).
//
Thekkikattan|தெகா said...
ம. சிவா,
//சும்மா 'நச்'னு இருக்கு.//
அந்த "நச்"க்கு உரித்தானவர் நம்ம தாத்தா அவர்கிட்ட கொடுத்துடுறேன்.
அதுக்கு கீழே உள்ள பாட்டு யாருக்கு சுரேகாவிற்காக, பார்ப்போம் தல வந்து என்ன சொல்லுதுன்னு, ஏன் ரொம்ப பொலம்புரானோ :).
//
பாட்டு பொதுவா எல்லாருக்குமானதுதான்!!
:))
ரொம்ப அழகா கவர் பண்ணிஇருக்கீங்க -- McChamy
என்னமோ நடக்குது போங்க!!!
தெகா நீங்க சொன்ன செய்தியை நானும் என் கணவர் ஜேவும் பார்த்துட்டு நீங்க சொன்ன மாதிரியே தான் எங்களுக்குள் பேசிக்கிட்டோம். சமச்சீரான பொருளாதார வளர்ச்சி படிப்படியாக பெறும்போது பொதுவாக நமக்கு குடும்ப நிதின்னு சொல்ற, நம்ம குடும்பத்துக்குன்னு தனிப்பட்ட முறையில் ஒரு தொகையை சேமிக்கும் பழக்கம் தானாக ஏற்படும். பேராசை கொண்டு அர்த்த ராத்திரியில் கொள்ளை பணம் சேர்த்தா, மேலும் மேலும் எப்படி பணம் சேர்ப்பது என்பதிலேயே புத்தி போகும். பங்கு வர்த்தகம் முதலீடு என்பது கூடவே கூடாது அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா, பாதுகாப்பா, ஒரு குறுப்பிட்ட சிறுதொகையை வங்கிகளின் மியூச்சுவல் பாண்டு மாதிரி திட்டங்களில் முதலீடு செய்யலாம், அல்லது நேராகவே முதலீடு செய்தாலும், நமது சம்பாத்தியத்தில் ஒரு சிறு தொகையை மட்டும் இந்த மாதிரி சோதனை முயற்சிகளுக்கு பயன்படுத்தினால், இந்த மாதிரி ரத்த மயமான முடிவுகளுக்கு போகாமல் இருக்கலாம் என்பது என் கருத்து.
Post a Comment