Sunday, September 03, 2006

வேட்டை - விளை(யாட்டு):Hollywood Effect...!!!

Image Hosted by ImageShack.us

இந்த படத்தைப் பற்றி நிறைய பேர் இங்க எழுதிட்டாங்க. இருந்தாலும் நேத்துதான் நான் இந்தப் படத்தை இங்க அட்லாண்டாவில பார்த்தேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு, உள்ளே விட்டாங்க.

இரவு பத்து மணி காட்சி, பதினொரு மணிக்கு ஆரம்பிச்சு இரண்டு மணிக்கு முடிஞ்சுச்சு. நான் வீடு வந்து சேரும் பொழுது மூனு மணி, ஒத்த ஆளா ஒரு மணி நேர டிரைவ் வேற.

பெரிய க்யூ வேற, பத்து டாலர்கள் டிக்கெட். இது மாதிரி க்யூவில நின்னு படம் பார்த்தே ரொம்ப வருசங்கள் ஆயிடுச்சு. எனக்கு அதுவே ரொம்ப எதிர்பார்ப்ப கொடுத்துடுச்சு, தியோட்டர்குள்ள போறதுக்கு முன்னாடியே. தனியா வேற போயிருந்தேன். எனவே, குரூப்பா வந்தவங்களுக்கு என்ன பார்த்திருந்த ரொம்ப சீரியஸ் ஆசாமியா தெரிஞ்சுருப்பேன்.

இருந்தாலும் தனியா போறதில ஒரு பயனுண்டு நல்ல ரசிச்சுப் பார்க்கலாம், கவனம் சிதறாம.

படம் எனக்கு எந்த உறுத்தலையும் தரலைங்க உண்மைய சொல்லப் போன. ஆனா, கொஞ்சம் தேவையில்லாத ம்யூசிக் ஆங்காங்கே. அப்புறம் அந்த பாடல்கள் (இல்ல எனக்குத்தான் வயசாகிப்போச்சோ :-). இருந்தாலும் எனக்கு ஃபார்மிலா புரிஞ்சுச்சு. அது கூட பண்ணலேன்னா யாரு படம் பார்க்கிறது, தயாரிப்பாளரும், கமலுமா? அதினாலே அத ரெண்டத்தையும் பிடிக்காதவங்க தள்ளி வைச்சுட்டா, தமிழ் சினிமாவுக்கு இது ஒரு ட்ரென்ட் செட்டர்னு வைச்சுக்கலாம். கண்டிப்பாக.

நிறைய ஆங்கில த்ரில்லர் நாவல்களோ (படிச்சி) அல்லது படங்களோ பார்த்திருந்தவங்களுக்கு படம் நகர்ந்து செல்வதில் எந்த சுணக்கம் இருப்பதையும் உறுத்தலாக நினைந்திருக்க வாய்ப்பில்லையின்னு நினைக்கிறேன்.

எனக்கு அதுவும் அந்த கீரனூர் சீன்கள், திருச்சி டூ புதுகை சாலையில் ஒரு பிணம் தோண்டி எடுக்குமிடமாக இருக்கட்டும், நூ யொர்க் சீன்களாக இருக்கட்டும் எனக்குப் பழக்கமான இடங்கள் என்பதால் அப்படியே நேரடியாக கதையுடன் லகித்து ஒன்றி பார்க்க முடிந்தது.

இருந்தாலும் ஆங்கிலப் படம் பார்ப்பதைப் போன்ற ஒரு ஃபீலிங். இது போன்ற "தொடர் கொலைக்" கதையம்சங்கள் நமது தமிழ் சினிமாக்களிலும், உண்மைச் சம்பவங்களாகவும் கேள்விப் பட்டிருக்க அதிகமாக வாய்ப்பில்லை. இந்த கதை பின்புலம் மேலும் இது போன்ற கதையமைப்புடன் தமிழ் படங்கள் வெளிவர ஒரு முன்னோடியாக அமையலாம். ரெகுலர் ஃபார்மிலாவிலிருந்து உடைத்துக் கொண்டு வெளிவர.

ரெகுலரான பார்த்துச் சலித்த காதல் கண்ணாமூச்சி விளையாட்டுக்களிலிருந்து ஒரு மாறுதலுக்கென கொடுக்கப் பட்ட படம்தான்... கமலின் "வேட்டையாடு விளையாடு." நல்ல பொழுதுபோக்குக்கு ஒரு படம்.

பி.கு: கமலுக்கிருந்த மற்றொரு ஆசையும் இந்த படத்தின் மூலமாக நிறைவேற்றிக்கொண்டாரோ... வெள்ளைக்கார அலுவலகத்தில் அவர்களுடன் சேர்ந்து துப்புத்துலக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து அதிலும் வெற்றி பெற்றதாக எனக்குப் படுகிறது. :-)

23 comments:

Anonymous said...

அந்த கீரனூர் கருவகாட்டுக்குள்ள பிணம் தோண்டி எடுக்கும்பொழுது ஒரு பெரிய கூட்டம் சூட்டீங் பார்க்க வந்ததது பிரோமிக்குள் வந்திருக்கும் பார்த்தீங்களா??? ;)

Thekkikattan|தெகா said...

கருப்பி அவர்கள் தனது இந்தப் பதிவில் இப்படி கூறியிருந்தார், அதனை படம் பார்க்கும் பொழுது எனக்கு என்ன தோணியது என்பதனை அவருடன் பகிர்ந்து கொண்டதை இங்கு உங்களுக்காகவும்...

//கமல் “அடேய் நீயென்ன ஹோமோ செக்சுவலா” என்று கேட்ட போது திரையரங்கு சிரிப்பால் அதிர்ந்தது அதற்கு உதாரணம். இந்த இடத்தில் கமல் மிகவும் தாழ்ந்து போய்விட்டார்.//

அதையே நானும் இங்கும் அட்லாண்டாவிலும் கவனித்தேன். அரங்கம் அதிர்ந்தது உண்மைதான். ஆனால் அது போன்ற 'ஹோமோ செக்சுவல்' என்பது ஒரு மனம் சம்பந்தபட்ட பிரச்சினையாகத்தானே பார்க்கப் படுகிறது.

இதில் கமல் எவ்வாறு தரம் தாழ்ந்து போகிறார்? முதுகில் தான் கண்ட அடையாளத்தைக் கண்டு அவ்வாறு அவனிடத்தே வினவுவது போலவே காட்சி அமைந்ததாக எனக்குப் பட்டது.

//சின்னச் சின்னப் பிரச்சனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மில் அன்பாய் இருக்கும் உறவுகளை மறந்து பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இது தவறு கொஞ்சம் சிந்தித்தால் வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை ஜோதிகாவின் பாத்திரத்தின் மூலம் காட்டியிருக்கின்றார். ஜோதிக்காவின் பாத்திரம் மூலம் கற்பு, கல்யாணம், தாய்மை என்று அலட்டிக் கொள்ளாமல் பெண்களுக்கு நல்ல ஒரு செய்தியைச் சொல்லிச் சென்றிருக்கின்றார். //

மற்றபடி, ஜோதிகாவின் பாத்திரம் நீங்கள் கூறியது போலவே, அருமையாக விளக்கப்பட்டது. மென்மையாக, ஆனால் ஒரு ஆழமான விசயத்தை.

இலவசக்கொத்தனார் said...

so u sadhichufied!

கோவி.கண்ணன் [GK] said...

படம் ஹாலிவுட் எபெக்ட் !
குறிப்பா வில்லன்கள் இருவரும் நன்றாக செய்திருந்தார்கள் !

முடிவு தமிழ் படம் :)

Thekkikattan|தெகா said...

//அந்த கீரனூர் கருவகாட்டுக்குள்ள பிணம் தோண்டி எடுக்கும்பொழுது ஒரு பெரிய கூட்டம் சூட்டீங் பார்க்க வந்ததது பிரோமிக்குள் வந்திருக்கும் பார்த்தீங்களா??? ;) //

மணி, அந்த சீன்ல வார ஆலமரமெல்லாம் அப்படியே என் மனத்திரையில் வந்துட்டு போனது. ம்யூசிக், நரக வேதனை கமல் காரோடு தடயத்தை குமிஞ்சு நோட் பண்ணும்பொழுதெல்லாம் அவ்ளோ ஆராவார பின்னிசை தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

அப்புறம் நீங்க சொன்ன அந்த மக்களை நானும் கவனிச்சேன். ஏன் அவ்வளவு, அவர் 'டைம் ஸ்கெயரில்' நடந்து செல்லும் அழகை பார்த்து ரசிக்க எங்களூரு வெள்ளைக் காரங்களே அசந்து நின்னு பார்பார்ங்க ;-)))

Santhosh said...

ஆகா தேகா,
சொல்லணும் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் போகாதிங்க போகாதிங்கன்னு நான் மதிய காட்சிக்கு போயிட்டு வந்து ரொம்ப பீல் பண்ணேண் ஏண்டா போனோம் அப்படின்னு நீங்க போக மாட்டிங்கன்னு நினைச்சேன் ஆகா மாட்டிகிட்டிங்களே!!!!

Thekkikattan|தெகா said...

ஆமா, சாதிச்சுப்புட்டேன்ல சொன்னமாதிரியே. ஆனா என்ன தனியாள போயி பார்க்க வேண்டியாத போச்சு, இ.கொ

Unknown said...

தெகா நேத்துதான் நான் பாத்தேன் நல்லாவே வந்திருக்கு ஆனா எனக்கென்னமோ ஒரு சில சீன்கள் ஹன்னிபால் லெக்டர் கதைகளை நினைவுபடுத்துச்சி

Thekkikattan|தெகா said...

மகி,

//தெகா நேத்துதான் நான் பாத்தேன் நல்லாவே வந்திருக்கு ஆனா எனக்கென்னமோ ஒரு சில சீன்கள் ஹன்னிபால் லெக்டர் கதைகளை நினைவுபடுத்துச்சி//

அட இதெல்லாம் கண்டுக்கலாமா,லூசில வுடுங்க. 'இது' போன்ற படங்கள் 'அது' போன்ற படங்களின் கலவையே. இதிலென்ன சந்தேகம். ஆங்கிலத்தில இதுபோல serial killing படங்கள் எம்புட்டு இருக்கு, லிஸ்ட் போட்ட போட்டுகிட்டே போகலாம்.

நாம கவனிக்க வேண்டியது தமிழ்ல கொடுத்துருக்காங்ளே அதுவும், இது போன்ற கேமரா, இயல்பான நடிப்பு இத்தியாதிகளை கொண்டும் என்பதனை மட்டுமே.

லாஜிக்கல நிறைய ஓட்டைங்க கூட இருக்குத்தான், அப்புறம் என்னங்க 'ரீல்' விடறதுன்னா? சினிமாவில ஃப்ர்பெக்ஷன் பார்க்க முடியுமா - saving the private ryanஆ இருக்கட்டும் இல்ல titanicஆ இருக்கட்டும் சினிமான்னு வந்துட்ட கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். இதில யார் கொஞ்சம் அதீதமா உழைப்பை போட்டு கிட்ட (ரியாலிட்டி) நெருங்க பார்க்கிறாங்க அப்படிங்கிறதுதான் மேட்டர்.

அது இது போன்ற படங்களில் தெரிகிறது இல்லையா?

Anonymous said...

எனக்கு அதுவும் அந்த கீரனூர் சீன்கள், திருச்சி டூ புதுகை சாலையில் ஒரு பிணம் தோண்டி எடுக்குமிடமாக இருக்கட்டும்,

A personal question.. Are you from Keeranur area or from MCE (engg college)?

Thanks...

Thekkikattan|தெகா said...

//A personal question.. Are you from Keeranur area or from MCE (engg college)?

Thanks...//

Anony, it almost sounds like Kamal interrogating the students, you ask me such a question ;-))

Now I am afraid to answer the question, hope, I am not a suspect :-)))

Anyway, I know Keeranur personally since I did my bacherlors at JMC (Jamal), trichy. Plus Keeranur comes under my own district, i remember walking around the Kulam a couple time looking for birds.

Are u from that area???

Thekkikattan|தெகா said...

கோவியாரே,

//படம் ஹாலிவுட் எபெக்ட் !
குறிப்பா வில்லன்கள் இருவரும் நன்றாக செய்திருந்தார்கள் !
முடிவு தமிழ் படம் :) //

அதுவும் சைக்கோ சீன்கள் ரொம்ப நல்லா உணர்ந்து பண்ணியிருந்தார்கள்.

முடிவு தமிழ் படமா இல்லென்னா வேற யாருங்க படத்தைப் பார்ப்பா? எத்தனை படங்களோட வில்லன்கள் வின் பண்ணறமாதிரி சூழல் இருந்தாலும் கடைசியா அதர்மத்தை, தர்மம் கொன்னுபோட்டு ஜெயிச்சுடுமே... :-))) சினிமா, சினிமா...

Sivabalan said...

தெகா

படம் பார்திட்டு வந்திடீங்களா.. சூப்பர்...

படம் நல்லா பொழுதுக்கு படமின்னு சொல்லறீங்க..

விமர்சனத்திற்கு நன்றி

Thekkikattan|தெகா said...

சந்தோஷ்,

//சொல்லணும் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன் போகாதிங்க போகாதிங்கன்னு நான் மதிய காட்சிக்கு போயிட்டு வந்து ரொம்ப பீல் பண்ணேண் ஏண்டா போனோம் அப்படின்னு நீங்க போக மாட்டிங்கன்னு நினைச்சேன் ஆகா மாட்டிகிட்டிங்களே!!!!//

இங்க வேற ஏதாவது நமக்கு சாய்ஸ் இருக்கா? நல்ல வேளை நீங்க கூப்பிட்டு சொல்லவில்லை ;-)) (சொல்லி இருந்தாலும் நான் போயிருப்பேன் அது வேற விசயம்).

அட ஒண்ணுமில்லாதற்கு இது பெட்டர் ஓய்!

கொடுத்த காசுக்கு ஒரு பதிவும் போட்டுவிட்டோமில்ல... :-)))

ஜோ/Joe said...

தெக்கிட்டான்,
அரைச்ச மாவையே அரைச்சாலும் கண்டுக்காம இருந்திட்டு ,கொஞ்சம் வித்தியாசமா படமெடுத்தாலும் கமல் படம் என்பதற்காக வேண்டுமென்றே நோண்டி நோண்டி குறை கண்டுபிடிக்கும் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் ,தமிழில் வருகிற வழக்கமான அபத்தங்களுக்கு, குறைகள் இருந்தாலும் இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை என்று நடுநிலையோடு விமரிசித்த உங்களுக்கு ஒரு ஜே!

ஜோ/Joe said...

தெக்கிட்டான்,
அரைச்ச மாவையே அரைச்சாலும் கண்டுக்காம இருந்திட்டு ,கொஞ்சம் வித்தியாசமா படமெடுத்தாலும் கமல் படம் என்பதற்காக வேண்டுமென்றே நோண்டி நோண்டி குறை கண்டுபிடிக்கும் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் ,தமிழில் வருகிற வழக்கமான அபத்தங்களுக்கு, குறைகள் இருந்தாலும் இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை என்று நடுநிலையோடு விமரிசித்த உங்களுக்கு ஒரு ஜே!

கப்பி | Kappi said...

தெகா,
எதிர்பார்த்த அளவுக்கு இல்ல :(..
இடையிடையில் படத்தின் வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போல தொய்வான காட்சிகள்..

தியேட்டர்ல நான் பார்த்த 'படம்' எடுத்தவர் உண்மையான தமிழ் சினிமா ரசிகர்..படம் முடியறதுக்கு முன்னாடியே கிளம்பிட்டார் போல..ஜோதிகாவை தோண்டி எடுத்ததும் படம் முடிஞ்சுடுச்சு...அதுக்கப்புறம் நட்புக்கு போன் போட்டு முடிவை தெரிஞ்சுக்கிட்டேன் ;)

Thekkikattan|தெகா said...

ஹூம், சந்தோஷ் இன்னவொண்ணு கவனிச்சீங்களா, கமல் ஜோதிகாவுடன் சேர்ந்து அமெரிக்காவில படம் பார்க்கும் பொழுது, அமெரிக்கன்ஸ் காம்போ மேயிறதுக்கு வாங்கிக்குவாங்க இல்லையா (பாப்கார்ன், சோடா.

ஆனா, நீங்க குறை சொன்னீங்க இந்த மூளையத்த சினிமாக்காறங்க 'கோக்'க்கு கண்ண மூடிக்கிட்டு காசு வாங்கிட்டு விளம்பரம் பண்றாங்கன்னு கம்பிளைண்ட் பண்ணிங்க இல்லையா? அதினாலே, கமல் கையில கோக் (சோடா) மிஸ்ஸிங். வெறும் பாப்கார்ன் மட்டும் சாப்பிட்டுறக்கார். அதுக்காகவாவது நீங்க ஒரு + போட்டு இருக்கலாம் ;-)))

Thekkikattan|தெகா said...

//அரைச்ச மாவையே அரைச்சாலும் கண்டுக்காம இருந்திட்டு ,கொஞ்சம் வித்தியாசமா படமெடுத்தாலும் கமல் படம் என்பதற்காக வேண்டுமென்றே நோண்டி நோண்டி குறை கண்டுபிடிக்கும் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் //

ஜோ, குறைகள் கண்டுபிடிக்கிறதும் ஒரு திறமைதானே, அதுவும் பார்த்துப் பார்த்து செய்வறங்க வேலையில. அதனை வைச்சுத்தானே வுமக்கும் எனக்கும் உள்ள மூளை சார்ந்த வேறுபாடுகள் என்ன, நான் எவ்ளோ பெரிய ஆள் என்பதனையெல்லாம் தெரியவறுகிறது. இதெல்லாம் வாழ்கையில சகஜமுங்கோ... சும்மா லூசுல வுட்டுடுங்க :-)))

//தமிழில் வருகிற வழக்கமான அபத்தங்களுக்கு, குறைகள் இருந்தாலும் இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை என்று நடுநிலையோடு விமரிசித்த உங்களுக்கு..//

எனக்குப் பிடிச்சுருந்தது, அதோட அந்த 10 டாலர்கள் என்னுடையது ;-)) சும்மாவ கிடந்து வந்தது... ஹி...ஹி...ஹி...

Thekkikattan|தெகா said...

கப்பி பயலே, கப்பி பயலே~~~~
படம் பார்த்தீயா~~~
அப்படிப் பார்க்கும் பொழுது~~~
பாதியிலேயே ஓடிபோயீட்டீய, ஓடிபோயீட்டீய~~~ ;-)))

கொஞ்சம் படத்தோட நீளம் கூட ஜாஸ்திதான்... அதனாலேதான் வுமக்கு படம் தொய்வுற்ற மாதிரி கொஞ்சம் தோணியிருக்க வாய்ப்புண்டு...

ஆமா, தனியாவ போனீய, ஸ்பானியோல் பொண்ணுங்க ஒண்ண கூட்டிட்டு போயி நம்ம புகழ பரப்பிறதெல்லாமில்லையா? என்ன புள்ளையோ போங்க... ;-)))

Anonymous said...

//கமல் “அடேய் நீயென்ன ஹோமோ செக்சுவலா” என்று கேட்ட போது திரையரங்கு சிரிப்பால் அதிர்ந்தது அதற்கு உதாரணம். இந்த இடத்தில் கமல் மிகவும் தாழ்ந்து போய்விட்டார்.//

இந்த விசயத்தில் நான் கமலை கண்டிக்கிறேன். வில்லனை கதாநாயகன் திட்டுகிற போது மக்கள் மகிழ்ந்து கைத்தட்டுவார்கள். இந்த வசனம் வில்லனை திட்டுகிற, ஏளன படுத்துகிற தோரணையில் தான் வருகிறது. இந்த வசனத்தை பண்பட்ட கலைஞனான கமலிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை. ஏன் தமிழ் சினிமா 'SEXUAL MINORITIES' மக்களை எப்போதும் கேலிக்குரிய விசயமாகவே பார்க்கிறது.

aaradhana said...

இந்த படம் பார்க்கும்போது என் நியாபகம் வந்திருக்கணுமே???...
எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. படம் கொஞ்சம் நீளம்.. ஆனால் ஒரு நல்ல படம் பார்த்த சந்தோஷம் கிடைத்தது..

JAYPEE said...

அது எந்த இடம் ?

Related Posts with Thumbnails