நானாகிய என்னைச் சுற்றி
அந்தி மயங்கிய வானம்
தன் பொறுமையிழந்து
எங்கெங்கும்
விசிறியடிக்கும் கருமை...
அதன் முழுமைக்கும்
அழகு சேர்த்தவாறே
சில பறவைகள் தத்தம் ஒவ்வொரு
சிறகசைத்தலுக்கும் எவ்வி
மேலெழும்புகிறது...
தூரத்து மரக்கிளையொன்று
எதற்கோ வெடித்து சிரிக்கும்
இடைவெளியில் சில கருங்குருவிகள்
மரக்குடுமியின் இடமமர்ந்து
பூமி பார்க்கிறது...
வலைக்குள் எனை தொலைத்து
செங்கலென சிவந்த கண்கள்
நிமிர்ந்து வெளிநோக்குகையில்
எனைக் கண்டு
சுதந்திரம் பல்லிளித்தது!
6 comments:
//வலைக்குள் எனை தொலைத்து
செங்கலென சிவந்த கண்கள்
நிமிர்ந்து வெளிநோக்குகையில்
எனைக் கண்டு
சுதந்திரம் பல்லிளித்தது!//
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
ஹ்ம்ம்..வருத்தமான யதார்த்தம் :(
:)
தொலைத்த வெளியைப்பற்றி .. ’தொலைந்த வெளி’யில் எழுதி இருக்கீங்களோ ? :)
அன்பின் பிரபா
அருமை அருமை - கவிதை அருமை -
வானம் சிதறும் - சிதறி அடிக்கும் கருமை
ஒவ்வொரு சிறகசைப்புக்கும் எவ்வும் பறவை
மரக்குடுமியில் கருங்குருவிகள்
தொலைத்த நம்மைப் பார்த்து பல்லிளிக்கும் சுதந்திரம்
நல்வாழ்த்துகள் பிரபா
நட்புடன் சீனா
படமும்,கவிதையும் அழகு.
* மதுரை சரவணன் -
* குட்டிப்’பையா -
* முத்து -
* சீனா - மற்றும்
கோமதிம்மா ---------- அனைவருக்கும் வணக்கங்களுடன் நன்றி :) !!
Post a Comment