Tuesday, June 29, 2010

திருட்டுப் போன தெக்கி பதிவு: Plagiarism at Loose

இரண்டு வாரங்களுக்கு முன்பு பரவலாக வாசிக்கப்பெற்ற எனது பதிவான ”அமெரிக்கா எண்ணெய்க் கசிவும் உலகளாவிய உயிர்ப் பேரழிவும்...” என்ற கட்டுரை ஏனைய சில தள நிர்வாகிகளின் பார்வையிலும் பட்டு அவரவர் தளங்களிலும் மறு பிரசுரிப்பு செய்து கொண்டார்கள். எனக்கு அது பரவலாக விசயத்தை கொண்டு சேர்த்தது என்ற முறையில் மிக்க மகிழ்ச்சிதான். இருப்பினும் அந்தக் கட்டுரையின் மூலம் பற்றி எந்தத் தகவலும் காணப்படவில்லை.

இத்தனைக்கும் சில தளங்கள் டாட் கொம்கள். கீழே அத்தளங்களின் ப்ரிண்ட் ஷாட்ஸ் இணைத்துள்ளேன்.

Site -1


Site - 2



Site - 3



Site - 4



பார்த்த உடனேயே அந்தத் தளத்தின் நிர்வாகிகளுக்கு முறையான மின்னஞ்சல் மூலமாக கீழ்கண்டவாறு சிறு ஆலோசனை மாதிரியான கடிதமொன்று அனுப்பி இருந்தேன். வாரம் இரண்டாகிவிட்டது யாரிடமிருந்தும் எந்த விதமான தொடர்பும் இது நாள் வரவில்லை.

...என்னுடைய கட்டுரை ஒன்று உங்கள் தளத்தில் வெளியிட்டு இருப்பது அறிந்தேன் மகிழ்ச்சி http://www.z9world.com/view.php?2bbddnBBddc23QQAA334aaee0EEdd0eeXXO44ccd33mmldR22eeMs866cce00mm
M0044b44ZZBBp00. இருப்பினும் வருத்தப் படும் வாக்கில் அந்த கட்டுரையின் மூலம் எங்கிருந்து வந்தது என்பதனைப் பற்றிய குறிப்போ அல்லது எழுதியவரின் பெயரோ குறிப்பிடப் படமால் போட்டுக் கொண்டால், எனது தளத்தில் படிப்பவர்கள் நான் இங்கிருந்து ’எடுத்து’ பெயர் போடாமல் எனது தளத்தில் போட்டுக் கொண்டதாக எண்ணும் அபாயம் இருக்கிறது.

அந்த அவப்பெயர் எனக்கு வேண்டாம். உங்கள் தளத்தில் உள்ள மற்ற கட்டுரைகளையும் கண்டேன் எங்கும் அது போன்று ஆசிரியர் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. இதனை உணராமல் செய்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். எனவே, கண்டிப்பாக எழுதியவருக்கு க்ரீடிட் கொடுங்க, தவறில்லை. எனது கட்டுரைகளை மேலும் பயன் படுத்திக் கொள்வதிலும் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. நன்றி...

இதில என்ன எனக்குப் புரியல அப்படின்னா, மற்றவரின் சிந்தனை சார்ந்த உழைப்பை அவர்களின் தளங்களில் போட்டுக் கொள்கிறார்கள் என்பதனைப் பற்றி எனக்கு எந்தவிதமான சங்கடமுமில்லை, ஆனால், கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை கொடுப்பதில் அப்படி என்ன அவர்களுக்கு பிரச்சனையாக இருந்துவிடும். இத்தனைக்கும் நான் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து முறைப்படியான தொடர்புமில்லை. இதுகள என்ன செய்றது, மக்களே நீங்களே சொல்லுங்கப்பா........

14 comments:

வால்பையன் said...

இது பாலோ அப்புக்கு!

வால்பையன் said...

நியாயமா கேட்டு பார்த்திங்க, பதிலில்லை.

இனிமே திருட்டு பன்னாட பரதேசி நாய்களான்னு களத்தில் இறங்க வேண்டியது தான், அவர்கள் ஒருவேளை சிவராமன் மாதிரி சொரணை கெட்ட ஆட்களாக இருந்தால் அதற்கும் பயன் இருக்காது!

YUVA said...

Put a sign board saying, copy-protected. Or, tweak the page using script and make it safe.. Srini

மங்களூர் சிவா said...

அதுக்குதான் எங்கள மாதிரி சும்மா இருக்கணும் இல்ல மொக்க போடணும்கிறது

:))

any how வாழ்த்துக்கள் சார்வாள்!

ALHABSHIEST said...

திறமை இல்லாதவங்க அப்டிதாம்ணே செய்வாங்க.விடுங்க.போ(கு)ம்போது எல்லாத்தையும் சேத்து எடுத்துட்டு போவாங்களாயிருக்கும்.களவாணித்தனம் வெளியே தெரியறதுக்கு ஏதாவது மென்பொருள் இருந்தா உபயோக படுத்துங்க.

John Rob said...

மக்கள், அடுத்தவர் ப்ளோக் ஐ உபயோகிக்கும் முன் நிச்சயம் உதத்ரவு பெறவேண்டும்

ஜான் கார்த்திக் ஜெ said...

படைப்பை சுட்டு அவர்கள் தளத்தில் போடும் அக்கறை, அதை எழுதியவர்களுக்கு தர ஏன் தயக்கம்? அது தயக்கம் அல்ல.. பயம் என்பதே எனது கருத்து!

ப.கந்தசாமி said...

ரொம்பவும் கஷ்டமான நிலை. எப்படியோ நம் சிந்தனைகள் பலரைப்போய் அடைகிறது என்று திருப்தி அடைந்தாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமானதுதான்.

- யெஸ்.பாலபாரதி said...

:((((((

தொடரும் அவலம்.. இம்முறை நீங்க!

Thekkikattan|தெகா said...

இங்கு வந்து எனக்கு ஆதரவாகத் தட்டிக் கேட்டு விட்டுப் போன அனைவருக்கும் எனது நன்றிகள், நண்பர்களே!!

mkr said...

உங்கள் ஆதங்கம் நியாய்மானதுதான்..நிச்சயம் அடுத்தவர்கள் பதிவை எஉத்து போடும் போது பெயரை குறிப்பிடுவது தான் முறை

தருமி said...

பெரிய பதிவர் அப்டின்னாலே இப்படித்தான்!

நிச்சயமா சட்டப்படி தடுக்க ஏதாவது இருக்கணுமே... யாராவது சொல்றாங்களான்னு பார்க்கலாம்.

Radhakrishnan said...

உலகமெலாம் இப்படித்தான் நடக்கிறது. அவர்களாகவே திருந்திட வேண்டும். உங்கள் எழுத்து பெற்ற அங்கீகாரம் வாழ்த்துகள்.

பிராது said...

நீங்கள் பாவம்.

http://pirathu.blogspot.com

Related Posts with Thumbnails