Monday, July 05, 2010

அட்லாண்டாவில் வான வேடிக்கை: 4th July Fireworks_Photos

என் வீட்டிற்கு பின்புறம் 1996ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிற்கென வடிவமைக்கப்பட்ட சர்வதேச குதிரைகள் பூங்கா ஒன்று உள்ளது. அங்கு வருடா வருடம் ஜுலை 4ம் தேதி அனுசரிக்கப்படும் அமெரிக்கா சுதந்திர தினவிழாவிற்கென வான வேடிக்கை நடைபெறுவது வழக்கம். நான் பல ஆண்டுகள் எனது வீட்டின் கொல்லைப்புறமே நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஒரு முறையேனும் சென்று பார்க்க வேண்டுமென ஆர்வம் கொண்டதில்லை.


முதற்காரணம் கூட்டம். கூட்டமின்னாலும் மக்கள் கூட்டம் மட்டுமில்லை. ஆயிரக் கணக்கில் கார்கள் உள்ளே வந்து வெளியே போக திண்டாடும் கூட்டத்தை நினைத்துதான். இப்பொழுது மக்கள் வீட்டிலும் கொஞ்சம் கூடி விட்டதால் போயித்தான் பார்ப்போமே என்ற நிலை. போனால், உள்ளே போயி வெளியே வரவே இரண்டு மணி நேரங்கள். கார்கள் இஞ்ச் பை இஞ்சாக நகர்ந்து ஊர்ந்தது. அப்பொழுதுதான் நினைத்தேன், இது மாதிரி இன்றைய தின நாளில் அல்லது ஏதோ ஒரு நிகழ்வினையொட்டி நாடெங்கும் இது போல கார்கள் அணி வகுத்து செல்லும் பொழுது ஏன் பெட்ரோலுக்கென திண்டாட்டமும், அதனையொட்டிய மாசுபாடும் களைகட்டிப் போகதுன்னு தோணிச்சு. அதைத் தனியா பேசிக்குவோம்.

இப்போ இந்தாங்க நாங்க கண்டு களித்த அந்த வான வேடிக்கை புகைப் படங்களில் சில நீங்களும் அனுபவிக்க...






























மற்ற புகைப்படங்கள் இங்கே...

4 comments:

சுரேகா.. said...

அட..அற்புதம்! இதே க்வாலிட்டியில் புதுக்கோட்டையிலும் வாணவேடிக்கை நடக்கிறது..! நம்புவீர்களா? ஆனால் உண்மை!

Thekkikattan|தெகா said...

சுரேகா, வான வேடிக்கை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரித்தானே இருக்கும் ;-) ... இங்கே போட்டு நான் பீத்திக்கிறது என்னோட கேமரக் கையைத்தேய்ன்ன்ன்... :D

மரா said...

இங்கிட்டு ஒரு பார்சல் அனுப்புங்க பாஸ்.... பொங்கலுக்கு வெடிக்குவோம் :)

Thekkikattan|தெகா said...

//இங்கிட்டு ஒரு பார்சல் அனுப்புங்க பாஸ்.... பொங்கலுக்கு வெடிக்குவோம் :)//

ராவணா, பார்சல் அனுப்புறதப் பத்தி ஒண்ணித்தியும் பிரச்சினையில்ல, ஆனா, கையெழுத்துப் போட்டு வாங்கும் பொழுது ஏதும் நடந்திட்டா கம்பெனி பொறுப்பேத்துக்காதுன்னு ஒரு ஃபார்ம் ரிலீஸ் பண்ணணுமே ;-) ...

Related Posts with Thumbnails