Saturday, July 31, 2010

இவரை நான் சேலஞ்ச் பண்ணிட்டேனாம்...

போன முறை கோடியக்கரை போயிருந்தப்போ, கீழே இருக்கிற தாதாகிட்ட ரொம்ப நெருங்கிப் போயி ஒரு கடவுச் சீட்டளவு புகைப்படம் எடுக்கிறேன்னு கிட்ட போக, என்னய பிடித்து ஒரு மூன்று நிமிடத்திற்கு மேலே நிக்க வைச்சிடுச்சு. எனக்கு தேவைதான். ரொம்ப பேராசை! சரி, நகருவோம்னு அப்படி இப்படி உடம்பை அசைச்சா எக்கச் சக்க மிரட்டல். கடைசியா மக்களை கூப்பிட்டு என்னய இந்தாளுகிட்டயிருந்து மீட்க வேண்டியதாப் போச்சு.

ஃப்ளிக்கர்ல ஏத்தினேன் அப்படியே இங்கயும் காட்டிடுவோமேன்னு.

When I Monkeyed - Bonnet Macaque (Macaca radiata)

10 comments:

cheena (சீனா) said...

அன்பின் தெகா

அது சரி - இவ்ளோ பயமா இது கிட்டே

மீண்டாச்சில்ல

நல்வாழ்த்துகள் அதுக்கும் பிரபாவுக்கும்
நட்புடன் சீனா

வடுவூர் குமார் said...

செம படம்.

வால்பையன் said...

அந்த கண்ணை பாருங்க

தருமி said...

அது கண்ணில நீங்க தெரியுறீங்களான்னு பார்க்கணும் !

மங்கை said...

அது கிட்ட என்ன பிடுங்குனீங்க... அப்படி பாக்குது.... கண்களால என்னமோ கேட்குற மாதிரி பார்வை

மங்கை said...

அது ஏன் அப்படி நடந்துச்சுன்னு காரணம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம்... அதை பத்தி போடுங்க

Thekkikattan|தெகா said...

வாங்க சீனா,

அதென்னா அப்படிக் கேட்டுப்புட்டீங்க ‘அவ்ளோ பயமான்னு’ - தனியா நிக்கிறேன் அது வேற அந்தக் கூட்டத்தின் தலீவரு பின்னே சொல்லவும் வேணுமா...

****************

வடுவூர் குமார் - ரசித்தமைக்கு நன்றி!

**************

வால், அதன் கண்ணில என்னைப் பாருங்க ;)

Thekkikattan|தெகா said...

தருமி said...

அது கண்ணில நீங்க தெரியுறீங்களான்னு பார்க்கணும் !//

வாங்க தருமி, தாதா கண்ணில தெரிஞ்சிருப்பேனே... பீதியோட :)
***********************

மங்கை,

கண்களாலேயே மோதிக் கொண்டோம். வா! மோதிப் பார்ப்போம்னு சவால் விட்டுட்டு இருக்கிற கொலவெறிப் பார்வை அது :))...

//அது ஏன் அப்படி நடந்துச்சுன்னு காரணம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம்... அதை பத்தி போடுங்க//

அப்படி விரிவா எழுதுவோம்னு தான் இத்தனை நாள் இந்தப் படத்தை வெளியிடாம இருந்தேன்... சரி விடுங்க, தனிப் பதிவா போட்டு விலங்குகளில் ஆண் வர்க்கத்தில் ஏன் சவடால் விசயங்கள்னு அலசிடுவோம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது கிட்ட சவடால் விட்டீங்களா? :)அதான்

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Related Posts with Thumbnails